கனவு
காட்சியானதைச்சொல்லுகிறது
இந்த பாறை
அமெரிக்க அரசியல் சரித்திரத்தில் அழிக்கமுடியாத இடத்தைபெற்றிருப்பவர் மார்ட்டின் லூதர்கிங். ஆப்ரஹாம் லிங்கன் “அறிவித்திருந்த நிற,இனபேதமில்லாத அமெரிக்கா” 100 ஆண்டுகளுக்குமேலாக கனவாகவே இருப்பதை கண்டித்து அதைச் சட்டபூர்வமாக செயலாக்க 60களில் அண்ணல் காந்தியின் வழியில் அறப்போர் செய்து வெற்றிகண்டவர். நீதிகேட்டு
வெள்ளை மாளிகை நோக்கி அவர் குழுவுடன் செய்த நீண்டபயணமும் இறுதியில் 2லட்சம்பேர் பங்கு கொண்ட பேரணியும் அமெரிக்க சரித்திரத்தில் ஒருமுக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது. ”கனவொன்று கண்டேன்” என அந்த பேரணியின் இறுதியில் லிங்கலின் நினைவுசின்னத்தின் படிகளிலிருந்து அவர் நிகழ்த்திய உரை இன்றளவும் உலகின் மிக சிறந்த உரைகளில் ஒன்றாக வர்ணிக்கப்படுகிறது..” நான்
கண்ட கனவு இது “எனது
நான்கு சிறு
குழந்தைகளும் ஒரு நாள்
அவர்களின்
தோலின் நிறத்தால்
இல்லாமல்
அவர்களது பண்பினாலும்
ஆளுமையினாலும்
மதிக்கபடும் அமெரிக்காவில்
வாழ்வார்கள் “ என்று சொன்ன மார்ட்டின்லூதரின் இன்று கனவு பலித்திருக்கிறது. கறுப்பினத்தவர் பலர் இன்று அரசியலில்,.சமூகஅமைப்புகள், கல்வி, கலை, இலக்கியம் என பலதுறைகளிலும்,
அரசு பணிகளிலும் உயர்ந்த இடத்திலிருக்கிறார்கள். இது சட்டம் மட்டும் செய்த விஷயமில்லை. மக்கள் மனதார ஏற்றுகொண்ட ஒருசமூக புரட்சி. 1964லில் நோபல் பரிசு பெற்ற மார்டின் 1968ல் சுட்டுகொல்லபட்டது சரித்திரத்தின் கருப்பு பக்கம்
கடந்த ஆண்டு அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் மார்டின் லூதர் கிங்க்கு ஒரு நினைவுசின்னம் பிரமாண்டமான
சிலையுடன் எழுப்பபட்டிருக்கிறது. முன்னாள் அதிபர்களான ஆப்ராஹாம்லிங்கனுக்கும், ஜெபர்ஸனுக்கும் மட்டுமே (ஜார்ஜ் வாஷிங்டனுக்கு கூட சிலை கிடையாது) அளிக்கபட்டிருக்கும் மிகப்
பெரிய கெளரவம். இது. அவர்களது நினைவுசின்னங்களுக்கு அருகில் நகரின் முக்கியமான இடத்தில் பொட்டாமாக் நதிகரையில் நிறுவப்பட்டிருக்கும் இதை, அமைதிபேரணியின் 48ம் ஆண்டு
நினைவு நாளான்று
அதிபர் ஒபாமாவால் நாட்டுக்கு அர்பணிக்கபட்டது. இந்த பிரமாண்ட சிலை அவரது வரலாற்றுசிறப்புமிக்க பேரணி உரையில் சொல்லபட்ட சில வாசகங்களின்
அடிப்படையில் வடிவமைக்க பட்டிருகிறது.
“இந்த பேரணி
நம்பிக்கையின்மை
என்ற கடினமான மலைபாறையிலிருந்து யிலிருந்து
வெட்டி எடுக்கபட்ட கல்லாக நம்பிகையளிக்கிறது.” ( "Out of the Mountain of Despair, a Stone of
Hope"— for Justice,) “"
என்ற அந்த வாசகங்களுக்கு ஏற்ப ஒரு பெரிய வெண்சலவைகள் மலையிலிருந்து வெட்டி எடுக்க்பட்ட பாறையில் நிற்கும் நிலையில் சிலை வடிக்கபட்டிருகிறது. பிளவுபட்ட ஒரு மலையின் வழியாக சென்று பார்க்கும்படியாக அமைக்கபட்டிருக்கும் 30 அடி உயரசிலை. வளாகத்தின் சுற்று கருங்கல் சுவர்களில் அவரது புகழ் பெற்ற வாசகங்கள்.. 140 மில்லியன் டாலர்களில் ஆறு ஆண்டு திட்டமாக நிறைவேற்றபட்டிருக்கும் இந்த சிலையை வடித்தவர் புகழ்பெற்ற சீன சிற்பி லீ யெக்ஸின்(Lei Yixin,) பீகிங் நகர செஞ்சதுக்கதிலிருக்கும் பிரமாண்ட(100அடி) மாசேதுங் சிலையை வடித்தவர். அழியா சின்னங்களான சிலைகளைப்டைக்கும் சிற்பிகள் ஒவியர்களைப்போல தங்கள் படைப்புகளில் கையெழுத்திட மாட்டார்கள். ஆனால் இவர் செய்திருகிறார். சிலையின் பீடத்தில் இவரது கையெழுத்தும் கல்வெட்டாக இடம்பெற்றிருப்பது இந்த கலைஞனுக்கும் அளிக்கபட்டிருக்கும் காலத்தையும்கடந்து நிற்கும் கெளரவம்..