
(கல்கி12/8/12)
ஆழ் கடலின் அடி மட்டத்தில் என்ன கிடைக்கும்? அரிய கடற் தாவரங்கள், மீன் வகைகள், சிப்பி சங்கு, முத்து போன்றவைகள் தானே. ஆனால் சமீபத்தில் கிடைத்திருப்பது வெள்ளி கட்டிகள் அதுவும் அரசு முத்திரையிடப்பட்ட சுத்த வெள்ளி கட்டிகள். கடலின் கீழே மிக ஆழத்தில் கண்டெடுக்கபட்ட இதுவரை கிடைத்ததில் மிகப்பெரிய மிக கனமான புதையாலாக வர்ணிக்கபடுகிறது இந்த கண்டுபிடிப்பு.
1941ல் கல்கத்தாதுறைமுகத்திலிருந்து இங்கிலாந்துக்கு இந்த 240 டன் வெள்ளிகட்டிகள் எஸ். எஸ் கரிஸோப்பா என்ற கப்பலில் அனுப்ப பட்டது.