10 நூற்றாண்டுகளைக் கடந்தும் தமிழனின் திறன்மிகு கட்டிட கலைக்குச் சான்றாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோவில் அந்நியர் படையெடுப்பு, இயற்கை பேரிடர்கள், அண்மைகால அரசியல் வாதிகளின் “அரசியல்”, போன்ற பிரச்னைகளைச் சந்தித்திருக்கிறது. காலத்தின் சாட்சியாகக் கம்பீரமாக நிற்கும் இந்தத் தஞ்சை பெரிய கோவில் அண்மையில் சந்திருக்கும் ஆச்சரியம் அங்கிருந்து மாயமாக மறைந்த மன்னர் ராஜராஜன், மற்றும் அரயின் ஐம்பொன் சிலைகள் பத்திரமாக மீட்கப்பட்டு மீண்டும் நிறுவபட இருப்பது தான்.
பல தமிழக கோவில்களில் அது உருவாகக் காரணமான மன்னர் பரம்பரையினர், எழுப்பிய சிற்பிகள் போன்ற விபரங்களைப் பார்க்க முடியாது. மாறாகத் தஞ்சைப் பெரிய கோவிலில் அதைத் திட்டமிட்ட பொறியாளார். தலமைச் சிற்பி, பலதுறைகளில் உதவியவர்களின் பெயர்கள் கல்வெட்டுகளாகக் கோவிலிலேயே இருக்கிறது.
உள்ள உலகப் புகழ் பெற்ற பெரிய கோயில் எனப்படும் பெருவுடையார் கோயிலில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அக்கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில், அந்தக் கோயில் அதிகாரியாக இருந்த தென்னவன் மூவேந்த வேளாண் என்பவரால், ராஜராஜன் சோழன் மற்றும் அவரது பட்டத்தரசி உலகமாதேவியார் ஆகியோருக்கு அவர்கள் உயிருடன் இருக்கும்போதே ஐம்பொன் சிலைகள் உருவாக்கப்பட்டு, கோயிலில் வைக்கப்பட்டு இருந்தன.ராஜராஜன் இறந்த பிறகு அவற்றோடு குத்துவிளக்கு, விபூதி மடல் இவைகளையும் செய்து வைத்தார்அதிகாரி. இந்தக் தகவல்களை அனைத்தையும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயி லின் மேற்கு திருச்சுற்றில் உள்ள கல்வெட்டு சொல்லுகிறது.
எப்போது இந்தச் சிலைகள் காணமல் போனது தெரிந்தது.?
ராஜராஜன் லோகமா தேவி சிலைகள் 1900 வரை பிரகதீஸ்வரர் கோயிலில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன்பிறகு அங்கிருந்து கடத்தப்பட்டு புதிய சிலை ஒன்றை செய்து, அதன் பீடத்தில் ‘பெரிய கோயில் ராசா ராசேந்திர சோள ராசா’ என்று பெயர்வெட்டி வைத்து விட்டார்கள். கடத்தப்பட்டது ராஜ ராஜன் சிலை கூட என்பது தெரியாமல் ராஜேந்திர சோழன் பெயரை வெட்டி இருக்கிறார்கள்.
.எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தஞ்சை பெரிய கோயிலில் இப்போதுள்ள ராஜராஜன் சிலைக்குக் காஞ்சி மடம் வைரக் கிரீடம் வழங்கியது. அதை அணிவிப்பதற்காகப் பிரதமர் இந்திரா காந்தியை தஞ்சைக்கு அழைத்து வந்தார் எம்.ஜி.ஆர். அதுசமயம், தஞ்சை கோயிலில் இருப்பது ஒரிஜினல் ராஜராஜன் சிலையே இல்லை என்று ஆதாரத்துடன் சர்ச்சையைக் கிளப்பினார் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத் தின் வெளியீட்டு மேலாளராக இருந்த தொல்லியல் ஆர்வலர் குடவாயில் பாலசுப்பிரமணியன். அப்ப்போது தெரிந்த விஷயம் தான் ஒரிஜனல் ராஜராஜனும் ராணியும் காணாமல் போய்விட்டார்கள் என்ற விஷயம். இப்போது கிடைத்திருக்கும் ஆவணங்களின் படி இந்த ஐம்பொன் சிலைகள் தான் 50 ஆண்டுகளிக்கு முன்னரே காணமல் போயிருக்கிறது
அரசனும் அரசியும் எங்கே போனார்கள்?
அகமதாபாத்தில் உள்ள கவுதம் சாராபாய் ஃபவுண்டே ஷனுக்குச் சொந்தமான ‘காலிக்கோ’ மியூசியத்தில் வைக்கப்ட்டிருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட சோழர்கால செப்புச் சிலைகளில் இந்த ராஜராஜன் - லோகமாதேவி சிலைகள் இருக்கிறது என்ற செய்தி கசிந்தது. அது உண்மையானதுதானா என்ற விவாதமும் எழுந்தது. அந்த நிலையில் டெல்லி நேஷனல் மியூசியத் தின் டைரக்டர் ஜெனரலாக இருந்த சி.சிவமூர்த்தி 1963-ல், அவர் எழுதிய தென் இந்திய செப்புச் சிலைகள்குறித்த ஒரு நூலில் சாராபாய் மியூசியத்தில் இருப்பது ராஜராஜன் சிலைதான் என்பதை தெளிவுபடுத்தினார். 1983-ல் டெல்லியில், அணிசேரா நாடுகள் கூட்டம் நடந்தபோது, டெல்லி நேஷனல் மியூசியம் இந்தியாவின் அரிய செப்புச் சிலைகள்பற்றி, ‘The Great Tradition India Bronze Master Pieces' என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டது. அதில், ‘காலிக்கோ மியூசியத்தில் உள்ளது ராஜராஜன் - லோகமாதா சிலைகள்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார் முனைவர் தொல்ப்ருள் அறிஞர் நாகஸ்வாமி
மீட்கும் முயற்சிகள்
இருக்குமிடம் தெரிந்து விட்டதால் ராஜராஜனை மீட்டுவர அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் பிரதமர் இந்திரா மூலம் முயற்சி எடுத்தார். ஆனாலும் சொல்லதக்க முன்னேற்றம் எதுவுமில்லை
.
தொடர்ந்து இந்தச் சிலைகளை மீட்க திமுக ஆட்சிக் காலத்தில் சுற்றுலாத்துறை செயலர் இறையன்பு, தொல்லியல் துறை இயக்குநர் டாக்டர் நாகசாமி, தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன், அப்போதைய அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அவர்கள் அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் முதல்வர் இருந்த நரேந்திர மோடியும் ராஜராஜன் சிலையைத் தமிழகத் துக்கு மீட்டுக் கொடுப்பதில் ஆர்வமாக இருந்தார். குஜராத் அரசுச் செயலாளராக இருந்த வெ.இறையன்புவின் சகோதரர் திருவாசகம் மற்றும் அங்கிருந்த தமிழகத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அத்தனை பேரும் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டினர். ஆனாலும், ராஜராஜனை தமிழகம் கொண்டுவரமுடிய வில்லை. அருங்காட்சியம் அசைய வில்லை. பல்வேறு காரணங்களைக் கூறி தர மறுத்துவிட்டது.
ஆச்ரியப்படுத்திய ஒர் ஆவணம்
.
அவர்கள் சொன்ன காரணங்களில் முக்கியமானது ஒரு முக்கியமான காரணம் இது ராஜராஜனின் சிலை என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்பது தான். அதற்கு அவர்களிடமிருக்கும் வலுவான சாட்சியம். அந்த அருங்காட்சியகத்திலிருக்கும் சிலைகளுக்கென்று அவற்றின் வரலாற்றைச் சொல்லும் கேட்லாக். அதில் அது ராஜாராஜின் சிலை இல்லை என்று பதிவு செய்யபட்டிருந்தது.தான். ஒரு தனியார் கேட்லாக்கில் சொல்லபட்டிருப்பதால் ஏற்றுகொள்ள வேண்டிய அவசியம் என்ன? இங்குதான் எழுந்தது ஒர் அதிர்சியான ஆச்சரியம். ஒரு சர்வ தேச் கூட்டத்தில் வாசித்தளித்த ஒரு பேப்பரில் அந்தச் சிலை ராஜராஜன் தான் என்று சொன்ன திரு நாகஸ்வாமி தான் அந்தக் கேட்லாக்கை தயாரித்தவர். ஏன் இப்படி எழுதியிருக்கிறார்? என்பது இன்றுவரை புரியா மர்மங்களில் ஒன்று. தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிலையை மீட்டுவர சென்றிருந்த தமிழக குழுவினரிடம் காலிக்கோ மியூசியத்தின் தலைவரான கிரா சாராபாய், ‘இது ராஜராஜன் சிலைதான் என்றுநிருபிக்கபட்டால் மட்டுமே சிலையைத் தர முடியும் என்று சொல்லிவிட்டனர். ஏமாற்றத்துடன் திரும்பியது குழு
.
கால வெள்ளத்தில் மக்களும் அரசும் மறந்துபோன் பல விஷயங்களில் இதுவும் ஒன்றாகக் கரைந்து போயிற்று. மன்னர் ராஜராஜன் தன் மனைவியுடன் அந்த ஆருங்காட்சியகதிடின் கண்ணாடிச் சிறைக்குள்ளேயே காலத்தைக் கழித்துகொண்டிருந்தார்.
கைகொடுக்காத தீர்ப்பு
இந்த நிலையில் தான்,தமிழக இந்து சமய அற நிலையத்துறை முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில்ஒரு பொதுநல வழக்கைத் தொடர்ந்தார். அன்றைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன். மனுவை விசாரித்தனர். இறுதியில் நீதிபதிகள், ‘‘விலை மதிக்க முடியாத பழங்கால சிலைகள் வெளி மாநிலத்தில் இருந்தால், அவற்றை மீட்டு கொண்டு வருவது தமிழக அரசின் கடமை நீதிமன்றம் நேரடியாக அருங்காட்சியகத்துக்கு உத்திரவிட முடியாது.மனுதாரர் தமிழக அரசை மீண்டும் அணுகி இந்தக் கோரிக்கையை முன் வைக்க வேண்டும். என்று மனுவைப் பொதுநல வழக்காகக் கருத முடியாது’’ எனக்கூறி தள்ளுபடி செய்தனர்.
.தமிழக அரசு நீதிமன்ற ஆணைப்படி காணமல்போனாதாக்ச்சொல்லப்படும் சிலைகளைக் கண்டுபிடிக்க தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு உத்திரவிட்ட்து., அவர் அப்பிரிவின் டிஎஸ்பி வெங்கட்ராமனை முதல் கட்ட விசாரணை நடத்த நியமித்தார். அதன்படி, டிஎஸ்பி வெங்கட்ராமன் தலைமையிலான குழுவினர், அண்மையில் பெரிய கோயிலில் நடத்திய ரகசிய விசாரணையில், இரண்டு சிலைகளும் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், மாமன்னன் ராஜராஜ சோழனால், பெரிய கோயிலுக்கு வழங்கப்பட்டதாகக் கோயில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள 68 சிலைகள் பெரும்பாலானவை இங்கு இல்லாமல் போனதும், பல முறைகேடுகள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்ததும் தெரியவந்தது. இந்தச்சிலைகளை கோயிலில் பணிபுரிந்த அதிகாரிகள் சிலர், தஞ்சையில் உள்ள சறுக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ் பகதூர் சீனிவாச கோபாலாச்சாரி மூலமாகச் சென்னைக்குக் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், கௌதம் சாராபாய் என்பவருக்குக் கோடிக்கணக்கான ரூபாய்க்கு இரு சிலைகளையும் விற்கப்பட்டது தெரியவந்தது.
அதிரடி மீட்பு
உடனே செயலில் இறங்கினார் பொன்மாணிக்கவேல். கிராமங்களுக்குத் தானே நேரில் சென்று இந்தச்சிலைகளை நேரில் பார்த்தவர்களை தேடினார். இரண்டு 80 பிளஸ் பெரியவர்கள் கோவிலில் சிலைகளைப் பார்த்தவர். அவர்களில் ஒருவர் கோவில் பணியா
ற்றியவர். கல்வெட்டுகளில பழந்தமிழர் கணக்குமுறையில் சொல்லப்ட்ட உயர, பீடங்களின் அளவுகளை இன்றைய சென்டிமீட்டரில் கணக்கிட்டபோது அது சிலைகளின் அளவோடு பொருந்திப் போயிருந்தது.
கோவிலில் இருந்தது, திருடபட்டது, விற்கபட்டது, கல்வெட்டு சொல்லும் விபரங்களுடனும் தன் டீமுடனும் அஹமதாபாத் பறந்த ஐஜி அருங்காட்சிய அதிகாரிகளிடம் இந்த விபரங்களுக்குபின்னர்சிலை திருப்பித் தரப்படவிட்டால் தமிழக அரசுக்குச் சொந்தமான அவற்றை பறிமுதல் செய்வேன் என்றார். அதிர்ந்துபோன அருங்காட்சியகத்தினர் சிலைகளை கொடுக்கச் சம்மதித்தினர். உடனே அவைகளை
தம்முடன் ரயிலில் பலத்த பாதுகாப்புடன் கும்பகோணம் கொண்டு வந்தார். இவர் ரயில் பாதுகாப்பு ஐஜியாகவும் இருந்த்தால் வழக்கமான தாமதங்கள் அனைத்தும் தவிர்க்கப் பட்டன. தமிழகத்துக்கு கொண்டுவந்துவிட்டார். சென்னையில் மேள்தாளத்துடன் வரவேற்கபட்டசோழ மன்னரைச் சிதம்பரம் கோவிலில் பூஜித்தபின்னர் கும்பகோணம் கொண்டு வந்து கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டன. இந்த 2 சிலைகளையும் தஞ்சை பெரிய கோயிலில் வைக்க நீதிமன்றம்உத்தரவிட்டிருக்கிறது, நீதிமன்றத்தின் இந்த உத்தரவினை பக்தர்கள் வரவேற்றுள்ளனர். பெருவுடையார் இனி தஞ்சை மாவட்டத்திலே பஞ்சம் நீக்கி அருள்பாலிப்பார் என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சொல்வது “இனி காவிரியில் தண்ணீர் வந்துவிடும்”
இந்தச் சிலைகள் மீட்பை உலகின் பல பகுதிகளிலிருக்கு தமிழ் ஆர்வல்களும் தொல்பொருள் ஆய்வாளர்களும் பாராட்டிக்கொண்டிருக்கின்றனர்.
துணிவுடன் அதிரடி முடிவுகளை எடுத்து அதை செம்மையாகச் செயலபடுத்தும் பொன்மாணிக்கம் போன்ற அதிகாரிகளைத் தமிழகம் பெற்றிருப்பதற்காகப் பெருமயை அடைந்தாலும், தாங்கள் பதுகாக்கவேண்டிய அரிய செல்வங்களை காசுக்காக விற்ற அதிகாரிகளை நினைத்து வருத்தமும் வேதனையும் எழுவதைத் தவிர்க்க இயலவில்ல.
தூங்கிக்கொண்டிருக்கும் சில அரசுத்துறைகள் தலமை அதிகாரிகளின் மாற்றத்தால் சட்டென்று விழித்துக்கொண்டு பபரபுடனும் சுறு சுறுப்புடனும் இயங்கும். அப்படியான ஒன்றுதான் தமிழகப்போலீசின் சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் நடந்துகொண்டிருக்கிறது. வேறுபல மாநிலங்களில் இல்லாத இந்தப் பிரிவின் தலமைப் பதவி ஆளுவோரால் ஓரங்கட்டபட்ட அதிகாரிகளுக்காக ஒதுக்கபட்டது. திரு பொன்மாணிக்க வேல் தன் திறமையான, கண்டிப்பான அதிகாரியாகப் பெயர் எடுத்தவர், படிப்படியாக உயர்ந்து ஐஜியாகப் பதவி உயர்வு பெற்ற இவருக்குத் தரப்பட்ட போஸ்டிங் சிலகடத்தல் தடுப்பு பிரிவின் தலமை
.
செய்யும் தொழிலைத் தெய்வமாக நேசித்துச் செய்யும் பொன் மாணிக்க வேல் பதவி ஏற்றுக்கொண்டவுடனேயே தூசி படிந்து தூங்கிக்கொண்டிருந்த பைல்களை தேடி ஆராய ஆரம்பித்தார். . இவர் தலைமையிலான டீம், தமிழகக் கோயில்களில் திருடப்பட்ட 155 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை மீட்டது. சுமார் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கடத்தப்படுவதையும் தடுத்திருக்கிறது. சிலைக்கடத்தல் பிரிவில் 33 வழக்குகளும் தமிழகம் முழுவதும் 455 வழக்குகளும் பதிவாகின. இதுவரை இந்தத்துறை இவ்வளவு வேகமாக இயங்கியதில்லை
.
சென்னையில் தீனதயாளன் என்ற முதியவர் சர்வ தேச கடத்தல் மன்னன் கபூருக்கு உதவியர் என்பதை கண்டுபிடித்து அவரைக் கைது செய்தார். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து தமிழக போலீஸ் பொன்.மாணிக்கவேலை ரயில்வே ஐ.ஜி-யாக மாற்றியது தமிழக அரசு. சிலைக்கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘சிலைக்கடத்தல் தொடர்பான 19 வழக்குகளைப் பொன்.மாணிக்கவேல் விசாரிப்பார். பிற வழக்குகளைச் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு விசாரிக்கும்’ என்று டிஜிபி உத்திரவிட்டிருப்பதாகச் சொன்னவுடன் நீதிபதி மிக் கோபமாக
நீதி மன்றம் 531 வழக்குகளைப் பொன்.மாணிக்கவேல் விசாரிக்க உத்தரவிடப்பட்ட நிலையில், எதன் அடிப்படையில் 19 வழக்குகளை மட்டும் அவர் விசாரிப்பதற்கு டி.ஜி.பி உத்தரவு பிறப்பித்தார்? என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் ஐ.ஜி-யாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கபட்டார்
.
இது இவர்மீது நீதி மன்றம் வைத்துள்ள நம்பிக்கையையும் நன்மதிப்பையும் காட்டுகிறது. அண்மையில் இவர் வெளிக்கொண்டுவந்த பழனி ஆண்டவர் கோவில் ஐம்பொன் சிலை மோசடியில் கைது செய்யபட்ட அரசியல் பின்புலம் கொண்ட ஒரு முன்னாள் அறநிலைத்துறை துணை ஆணயர் ஜாமின் மனு வழக்கில் தானே நேரில் ஆஜாராகி ஏன் ஜாமீன் வழங்கக் கூடாது? என்று நீதிபதியிடம் விளக்கினார்.
(புதிய தலைமுறையில் எழுதியது)

_______
தெய்வங்களைக் காக்க நீதி மன்றம் நியமித்த காவலர்