ஜெயித்தது கிரிக்கெட்டில் 28 ஆண்டுகளுக்குபின் உலக கோப்பையை
மட்டுமில்லை. 43 ஆண்டுகளாக ஆட்சிகட்டிலில்
அமரந்த அரசுகள் செய்யமல் தட்டி கழித்துகொண்டு
வந்த ஒரு விஷயத்தை ஆறே நாட்களில் எந்த
அரசியல் கட்சியின் தயவும் இல்லாமல் “மக்கள் சக்தி” “ யினால்
மட்டுமே இந்த அரசை செய்ய வைத்து வெற்றிபெற்றிருகிறார்கள் இந்திய மக்கள். எல்லா
கட்சிகளும் தவறாமல் சொல்லிவரும் ஆனால் அதற்காக எதுவும் செய்யாமல் இருக்கும் ஒரு
விஷயம் ” “லஞ்ச ஊழல் ஒழிப்பு.” “1968ல்
லஞ்சத்தை சட்டபூர்வமாக ஒழிக்க கொண்டுவரபட்ட மசோதா
“லோக்பால்” “ இதன்படி இது ஒரு
தண்டிக்கும் அதிகாரமில்லாத ஆலோசனை வழங்கும் அமைப்பாகயிருக்கும். பிரதமர் உட்பட
அமைச்சர்கள், பாராளுமன்ற
உறுப்பினர்களின் மீது மட்டுமே சொல்லப்பட்ட புகார்களை, அவைத் தலைவ்ர் அனுப்பினால் விசாரிக்கும். பொய்புகார்
கொடுத்தால் கொடுத்தவர் தண்டிக்க படுவார். இதன் 3 முன்னாள் நிதிபதிகள் கொண்ட
உறுப்பினர் குழுவை அரசே
நியமிக்கும்.பிரதமருக்கு எதிராக எழுப்பபடும் புகார் தேசபாதுகாப்பு, வெளிநாட்டு, உள்நாடு
பாதுகாப்பு சம்பந்தபட்டதாக இருந்தால் அதைஇந்த
அமைப்பு விசாரிக்கமுடியாது. இப்படி இந்த பல் இல்லாத பாம்பு அமைப்பை கூட
சட்டமாக்க தொடர்ந்து ஆட்சிக்கு வந்த எந்த
அரசுக்கும் துணிவில்லை. நடைபெறும் கூட்டதொடரில் நேரமில்லை, எதிர்கட்சிகள் ஒத்துழைக்கவில்லை, சட்ட துறை வல்லுனர்களின் அறிக்கை வரவில்லை என பல
நொண்டிசாக்குகள் சொல்ல்லபட்டுவந்தன. ஆனல் இந்த அமைப்பை உருவாக்குவோம் என ஓவொரு
தேர்தலிலும் எல்லா கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் முழங்கின.
அன்னாஹஸாரே, கடந்த ஆண்டு, முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே வழக்கறிஞர் பிராசாந்த்
பூஷன்,அரவிந்கெஜிரிவால்(இவர் தகவல் உரிமைக்காக போரடியவர்களில்
ஒருவர்) போன்றவர்களின் உதவியுடன் இந்த லோக்பால் மசோதாவை புதிய வடிவில் ” “ஜன லோக்பால் “ என தயாரித்து பிரதமர் மற்றும்
அத்துனை மாநில முதல்வர்களுக்கும் அனுப்பியிருந்தார்.
அந்த வரைவு திட்டத்தின்படி ””” ‘ “லோக்பால்“
சுப்ரீம் கோர்ட், தேர்த்ல் ஆணையம், போல தன்னாட்சி
பெற்ற அமைப்பாகஇருக்கவேண்டும். அரசியல் வாதி மட்டுமில்லை, அதிகாரிகள் நிதிபதிகள் எவர்மீது ஊழல் புகார் இருந்தாலும் விசாரிக்க,புலனாய்வு செய்ய, தண்டனை அளிக்க, ஊழலில் சேர்த்த சொத்துகளை
திருப்பி எடுத்து கொள்ள என சகல
அதிகாரம் கொண்ட ஒரு வலுவான அமைப்பாக இருக்கும். சிபிஐயின் ஊழல் தடுக்கும் பிரிவும்
மத்திய கண்காணிப்பு கமிஷனரும் இந்த அமைப்பின் கட்டளைப்படி பணியாற்றுவார்கள்.- என்ற
ரதியில் அமைந்திருந்த்து. புதிய மசோதாவை அனுப்பியபின்னர் ”’ பிரதமரிடம் இது குறித்து
பேச நேரமும் கேட்டிருந்தனர். இந்த குழுவினர். அரசும் பிரதமர் அலுவலகமும் இதை பெரிதாக எடுத்துகொள்ளவில்லை.
இந்த நிலையில் பத்திரிகைகளுக்கு அறிக்கைகள், பத்திரிகையாளார் கூட்டம், என்ற விளமபரம் எதுவுமில்லாமல் “ஏபரல் 5ல் இதற்காக உண்ணவிரதம் இருக்க போகிறேன், முடிந்தவர்கள் முடிந்த நாட்கள் வரை இணைந்து
கொள்ளுங்கள்.உண்ணாவிரத்தோடு ஊழல்
இல்லாத இந்தியா உருவாக பிராத்தனையும் செய்யுங்கள்.
பிரதமருக்கு கடிதம் எழுதுங்கள்.அமைதியுடன் போராடுங்கள் அவசியமானால் ஜெயிலுக்கு
போகவும் தயாராக இருங்கள். இது நமது இரண்டாவது சுதந்திரபோர். “ என்ற அறிவிப்போடு
டெல்லி ஜந்தமந்திர் வளாகத்தில் தன் உண்ணா விரத்தை துவக்கினார் அன்னா ஹஸாரே.
யாருமே எதிர்பாராமல் திடிரென எழுந்த சுனாமியைபோல் தேசம்முழுவதும் எழுந்தது அன்னாஹாசாரே அலை. முதல் நாள் வெறும்
200 பேருடன் துவங்கிய போரட்டத்திற்கு 3 நாட்களில் டெல்லி மட்டுமிலாமல் நாடு
முழுவதும் பல நகரங்களில் உள்ளூர் சமுக ஆர்வலர்கள் உண்ணாவிரத்தை துவங்கிவிட்டனர்.
போரட்டத்தை வாழ்த்தி தங்கள் ஆதரவை தெரிவிக்க ஊர்வலங்களும், பேரணிகளும் மெழுகுவர்த்திகளுடன் பிராத்தனை கூட்டஙகளும் பல
நகரங்களில் எழந்தன. பேஸ்புக் பக்கத்தில் இரண்டுநாளில் 27000 பேருக்குமேல் தங்கள்
ஆதரவை பதிவுசெய்தனர். சானல்கள் நேரடி ஓளிபரப்பின. கிரிகெட்டில் உலககோப்பை
வெற்றி, மாநில தேர்தல்கள், எல்லாவற்றையும் ஒதுக்கி
தேச்த்தின் எல்லா நாளிதழ்களிலும் தலைப்பு
செய்தியானது இவரது போராட்டம். விஷயம் வேகமாக வீபரிதமான அளவிற்கு வளர்ந்து
கொண்டிருக்கிறது எனபதை உணர்ந்த அரசு
உடனடியாக செயலில் இறங்கியது. பிரதமர் அலுவகத்திலிருந்து உண்ணா விரத்தை
கைவிட கடிதம் வந்தது. பிரதமர் என்ன எழுதியிருந்தார் எனபது வெளியிட்ப்படவில்லை.
ஆனால் அன்னா ஹாஸ்ரேயின் பதிலில் இருந்த வெப்பம் அது என்னவாகயிருந்திருக்கும்
என்பதை புரியவைத்தது. “என்னை வைத்து
சதிகாரர்கள் விளையாட நான் என்ன ஒன்றும் தெரியாத குழந்தையா? அப்படியே அது உண்மையானல்லகூட
அது ஊழலை ஒழிக்க நீஙக்ள் எந்த முயற்சியையும் எடுக்காமலிருக்க காரணமாகிவிடாது.புதிய
வடிவில் இந்த மசோதாவை உருவாக்குவதற்கான் கமிட்டியில் சமூக ஆர்வலர்கள் அரசியல் வாதிகள் சம அளவில்
உறுப்பினார்களாக இருக்க வேண்டும். மசோதா அடுத்த கூட்ட தொடரில் தாக்கல்
செய்யபடவேண்டும் அதை நீங்கள் அறிவிக்கும் வரை நான் உண்ணாவிரத்தை முடிக்க மாட்டேன் என தெளிவாக
தெரிவித்தார். சில மணி நேரங்களில் அமைச்ச்ர்
கபில் சிபில் கமிட்டியில் சமபங்களிப்பதில் பிரச்சனையில்லை ஆனால் உண்ணாவிரதபோரட்டம்
என்ற பெயரில் கோடிட்ட இடத்தில் அரசங்கம் கையெழுத்திட்ட வேண்டும் என்று கட்டயாப்படுத்துவது
நியாமில்லை. லஞ்ச ஊழலை ஒழிக்க அரசு அமைத்திருக்கும் காபினட் அமைச்சர்களின் குழு, இந்த பிரச்சனையை கவனிக்கும் என்றார்.
சட்ட அமைச்சர் வீரப்பமொயிலி ” “எங்கள் அலுவலகத்தில் நீங்கள் அனுப்பிய ம்சோதாவை தொலைத்துவிட்டார்கள்“ என்று
சொன்னது அன்னாஹஸாரேக்கு மட்டுமில்லை பலருக்கு கோபத்தை உண்டாக்கியது. “ பல ஆயிரகணக்கான ஏக்கரில் நிலம்
வைத்திருக்கும், பெரிய மாபஃபியாகளாக
வர்ணிக்கபடுவர்களுடன் தொடர்பிருக்கும்,
ஐபிஎல், 2ஜி ஊழல்களில் சம்பந்தபட்டவராக சந்தேகபடும் நபர் சரத்பாவர். அவரைப் போன்ற
அமைச்சர்களா இந்த ஊழல் ஒழிப்பு மசோதவை தயாரிக்க உதவப்போகிரார்கள் ? என சீறினார் அன்னாஹஸாரே. விளவு மறு நாள் சரத் பாவர் காபினட் அமைச்சர்களின் குழுவிலிருந்து
விலகுவதாக அறிவித்தார். மஹராஷ்டிராவில்
நன்கு அறியபட்ட இந்த நேர்மையான மனிதரின்
வார்த்தைகளின் பலம் அவருக்கு தெரியும். நமது அரசியல் வாதிகளை நன்றாக அறிந்திருக்கும்
இந்த மனிதர் வாழ்த்து சொல்ல வந்த எந்த
அரசியல் வாதியையும் மேடை ஏறவிடவில்லை..ஆதரவை அறிவித்துவிட்டு ஆதரவு தராத கட்சிகளை
ஊழலை ஊக்குவிப்பர்கள் என சொல்லி அரசியல் ஆதாயம் தேட முற்படுவார்கள் என்பதால் முன்னாள் உபி முதலமைச்சர் உமா பாரதி போன்றவர்கள்
திருப்பியனபட்டனர். மேதாபட்னாகர், கிரண்பேடி போன்ற அர்சியல்
சாயம் இல்லாதவர்க்ளே பேச அனுமதிக்கபட்டனர்.
மறுநாள் காலை சோனியாகாந்தியின் “அன்னாஹஸாரேயின் திட்டஙகளை
நான் ஆதரிக்கிறேன். என்ற அறிக்கை அரசின் தரப்பிலிருந்து வந்த முதல் சமாதான அம்பு.
இந்த அரசு புதிய ம்சோதாவை உருவாகக உடனடியாக
ஆவன செய்யும் என அறிவித்தார். தொடர்ந்து பரபரவென்று பல சுற்று பேச்சு வார்த்தைகள்.
சந்திப்புக்கள். இறுதியில் உண்ணாவிரத்தின் 5 வது நாளின் இரவில் அரசு அவரது அத்தனை கோரிக்கைகளையும் ஏற்று அமைச்சர்கள்
பிராணப் முகர்ஜி, வீரப்பமொய்லி, அந்தோனி ஆகியோர்
அர்சுசார்பில் குழுவில் பங்கேற்பார்கள் என அதிகார்பூர்வ்மாக் அறிவித்தது. இந்த குழு அன்னாஹஸாரே
அறிவிக்கும் மக்கள பிரநிதிகளுடன் இணைந்து ம்சோதா வடிவை ஜுன் மாதத்திற்குள்
உருவாக்கி அடுத்தவரும் பாராளுமன்ற கூட்டதொடரில் மசோதாவாக சமர்பிக்கும்.
பாரளமன்றத்தில்
எதிர்கட்சிகளின் சவால்களை, கூட்டணிகட்சிகள் தரும்
அழுத்தங்களை, உட்கட்சி பூசல்கலையெல்லாம்
சாமர்த்தியமாக சமாளித்த வல்லமை படைத்த
அரசு, எந்த
அரசியல் கட்சியின் பின்னணியும் இல்லாமல் மக்களை மட்டுமே நம்பி களத்தில் இறங்கிய ஒரு சத்தியாகிரகியின் போரட்டத்தில்
தோற்றிருக்கிறது. ஜெயித்த்து ” “இந்தியா. “சகதிவாயந்தவர்களையும் வெட்கபடவைக்கும் சக்தி சத்தியாகிரகதிற்கு உண்டு “(Satyagraha has the power to shame the powerful) என பல ஆண்டுகளுக்கு முன்
அண்ணல் காந்தி எழுதியிருப்பது இன்று மீ்ண்டும் உண்மையாயிருக்கிறது.
திரு நாராயணமூர்த்தி
வருடத்திற்கு 20 அல்லது 25 முறை வெளி
நாடுகளுக்கு பயணம் செய்யும் இன்போஸிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி இவர் உலகின் மிக பெரிய நிறுவனங்களின்
தலைவர்களை சந்திப்பவர். “ ” ‘கடந்த சில மாதங்களில் நான் வெளிநாட்டில் சந்திக்கும் பெரிய நிறுவன தலைவர்கள்
இந்தியாவில் பெருகி வரும் ஊழலைபற்றிதான் அதிகம் பேசுகிறார்கள். நமது GDP 10% ஆக 150 பில்லியன் அன்னிய முதலீடு நிச்சியம் தேவை. உலகின் பார்வையில்
நமது நாணயத்தையும் நிர்வாக்த்திறமையையும் சந்தேககிக்கும்
அளவில் நடைபெறும் பெரிய அளவு ஊழல்களினால் அந்த அன்னிய மூதலீடுகளின் வருகை குறையும். மற்ற
நாடுகளைபோல இந்கு ஊழலை தடுப்பதற்கோ கண்காணீப்பதற்கோ ஒரு நடுநிலையான அமைப்பு கூட இல்லைஎன்பது
வருந்த வேண்டிய விஷயம்’” “ என்று சொல்லும் திரு நாராயணமூர்த்தி இவரது போராட்த்தை ஆதரித்து இன்றைய சூழ்நிலைக்கு
லோக்பால் மிக அவசியம் என அறிவித்திருகிறார்
|
திரு வினோத் ராய்“.இப்போது
அரசாங்கத்தை சுத்தபடுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது அரசு அதுவாகவே ஊழலை
ஒழித்துவிடும் என எதிர்பார்ப்பது தவறு அது தன் பணியை செய்யமுடியாமல் தோற்றுவிட்டது.. அதை
திறமையாக பணி செய்யவைக்க வேண்டியவர்கள் மக்கள். நல்ல கருத்துகளை உருவாக்கும் நாணயமான தலைவர்களால் மக்களிடம் அதை துணிவுடன் சொல்லி
பொது கருத்தை உருவாக்கினால் என் போன்ற அதிகாரிகளினால் செம்மையாக பணியாற்ற
முடியும். “ என்று பேசியிருப்பவர் மத்திய தணிக்கை குழு தலைவர் வினோத் ராய். இவர்
தான் 2ஜி ஊழலினால் நாட்டுக்கு ஏற்பட்ட நஷடத்தை அறிவித்தவர். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி, பேசியது CII யின் ஆண்டு கூட்டதில்
என்றாலும் இது அன்னா ஹஸாரேயின் அற்போராட்டத்திற்கான ஆதரவு எனபதை
எல்லோரும் எளிதில் புரிந்து கொண்டார்கள்.
அன்னா ஹஸாரேவின் விருப்பபடி பிரதமர் உள்ளிட்ட அரசியல்வாதி அதிகாரிகள், நீதிபதிகள் மீது வந்த ஊழல் புகார்களை அல்லது கிடைத்த
செய்திகளைவைத்து நேரடியாகவே விசாரிக்க, எஃப்ஐஆர் போட
தண்டிக்க, ஊழல்செய்த பணத்தை வசூலிக்க என்று
சர்வ அதிகாரங்களும் மிகுந்த ஒரு அமைப்பாக ஜன்லோக்பால் அமைப்பை உருவாக்கினால் அது ஜனநாயக அரசாங்கத்திற்கு
இணையான மற்றொரு அரசாங்கமாக கூட இல்லை,-ஒரு சூப்பர்
அரசாங்கமாவே உருவாகிவிடும் ஆபத்து இருக்கிறது. இது பராளுமன்ற ஜனநாயகத்திற்கு
எதிரானது. என்று சிலர் காங்கிரஸார் உள்பட பேச துவங்கியிருகிறார்கள். மேலும் 10
பேர் கொண்ட குழுவில் பாதியாக இடம்பெறப்போகும் மக்கள் பிரதிநிதிகளை எப்படி யார்
அடையாளம் காட்டபோகிறார்கள். இன்று போராட்டம் செய்ததினால் குழுவில் அவர்களுடைய
இடம் ஏகாபத்திய உரிமையாகிவிடாதே? என்கிறார்கள்.
அரசியல் அமைப்பில் அரசு இயங்கும் முறை பற்றி அதிக அறியாத, அரசியல்
முதிர்ச்சியில்லாத சிலரால் இன்றைய அரசை மிரட்டுவதற்காக எழுப்பபட்ட
விஷயமிது என்ற ஒரு கருத்தும் இணையதளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது
|
இது பற்றி. இவர்களின் கருத்துகளை
கேட்டபோது
மக்கள் உரிமை
ஆர்வலுரும் வழக்கறிருமான திருமதி சுதா ராமலிங்கம்
“ எந்த புதிய ஒன்றும் -அதுவும் அதனால்
சிலருடைய அதிகாரம் பறிக்கபடும் என்ற அச்சம் வரும்போதெல்லாம் இதுபோல பிரசாரம் செய்யப்படுவதும்
அதை பணம், அதிகார பலம் கொண்ட
அந்த அதிகாரஙகளினால் சுய லாபம அடைந்த
குழுக்கள் நியாபடுத்துவதும் வாடிக்கையாக போய்விட்டது. குடும்ப வன்முறை தடுப்பு
சட்டம் வந்த போது இது நமது குடுமப அமைப்பையே சீர்குலைத்துவிடும் எனறு பேசினார்கள்.
வரதட்சணை தடுப்பு சட்டதிற்கு ஆட்சேபணை சொல்லவில்லையா.? பல ஆண்டுகாலமாக செய்யமுடியாத காரியத்தை ஒருவர் அல்லது
ஒருகுழு செய்யும் போது ஆதரித்து வரவேற்கவேண்டும்.
எந்த ஒருகுழுவும் துவக்க்தில் நியமனம்
செய்யபட்டவர்களுடன் தான் துவங்க முடியும். கறைபடாதவர்களாக அறியபட்டிருக்கும்
அவர்கள் மீது சந்தேக நிழல் விழுந்தால் ம்க்கள் மாற்றிவிடுவார்கள். இது மக்கள் சக்தியால் எழுந்தது என்பதால் பெருமிதத்தோடு
வரவேற்கிறேன்.” “
-------------------------------------------------------------------------
இப்படி சர்வ சக்தி வாய்ந்த அமைப்பை
உருவாக்க்குவதில் சட்ட ரீதியான சிக்கல் எதாவது இருக்கிறதா ? அமைந்தாலும் அது
வெற்றி பெறுமா?
சட்ட
வல்லுனரும், மூத்த
வழக்கறிஞருமான திருவிஜயன்
“சட்டரீதியான் சிக்கல் எதுவுமில்லை. பராளூமன்ற
ஜனநாயகத்தில் காலத்தின் தேவைக்கு ஏற்ப பல
டிரிபூனல்கள், CAT போன்ற பல
அமைப்புகள் உருவாயிருக்கின்றன. சட்ட பிரச்சனையை விடுங்கள். ஏன் இன்று லோக்பால்
உருவாகிறது?. பராளுமன்ற ஜனநாயகம்
என்ற சித்தாந்தத்தில் பாராளுமன்றம் மிக
சக்திவாய்ந்த அமைப்பு. அமைச்சர்கள் அதன் முடிவுக்கும் கட்டளைக்கும் கட்டுபட்டவர்கள். அமெரிக்க காங்கிரஸில் ஆளும்
கட்சியின் உறுப்பினர் தன்னிச்சையாக எந்த
ஒரு பிரச்சனையிலும் வாக்களிக்க முடியும். இங்கு கட்சிகட்டுபாடு என்ற பெயரில்
ஆளும்கட்சியின் விருப்பமே செயலாகிறது. மெஜாரிட்டி பலத்தினால் எதிர்கட்சிகளின் முயற்சிகள் முடக்கபடுகிறது. அரசியலுக்கு
அப்பாற்பட்டு சிபிஐ போன்ற அமைப்புகள் இயஙக முடியவிலலை. பாராளுமன்ற சித்தாந்தந்தகள்
நடைமுறைப்படுத்த்முடியாமல் தோற்றதின் விளைவுகள் தான் மாற்றாக இம்மாதிரி வலிமையான அமைப்புகள்
உருவாக வேண்டியதின் அவசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காரணங்கள் தான் விளைவுகளை
உண்டாக்கும். இது ஒரு விளைவு. இது ஒரு இணை அரசாங்கம் ஆகிவிடும்,ஜனநாயகத்தை அழித்துவிடும் என்று சொல்லுவது எல்லாம் அயோக்கியதனம். சொல்பவர்களீன் சொந்தநலம்
பாதிக்கபடுவிடுமோ எனற பயம். லோக்பால் முடிவுகளை செயல் படுத்த தனிபோலீஸ் படை இருந்தால்
கூட தவறில்லை.
இந்த அமைப்பு வெற்றிபெறுமா எனபது அதன்
தலமையை பொறுத்தவிஷயம். நல்ல ஹெட்மாஸ்ட்டர் இருந்தால் நல்ல ரிஸல்ட் என்பது போல. ஆனால் இந்தியாவில் அதிகாரவர்க்கம் எப்போது தன்னை
காபாற்றிகொண்டுவிடும் சக்க்திபடைத்தது. ஐஏஸ் அதிகாரிகள்,நீதிபதிகள்,அரசியல் வாதிகள்
என வர்க்க ரீதியாக அவர்களை காப்பற்றிக்கொள்ளம்படி
நிர்வாகத்தை வளைத்துவிடுவார்கள். இப்படிபட்ட சூழ்நிலையில் இந்த அமைபபு எப்படி
இயங்கபோகிறது எனபதை பொறுத்திருந்து தான்
பார்க்கவேண்டும். நம் ஜனநாயகத்தில்
கட்சி சாராத மக்கள் மிகவும் பாதிக்கபட்டவர்கள். அவர்கள் என்றாவது எங்கேயாவது ஒரு விடிவெள்ளி தோன்ற வேண்டும். என
விருபினார்கள். அது இப்போது தோன்றியிருக்கிறது. மக்கள் எழுச்சியுடன் வரவேற்கிறார்கள்.
அந்தவகையில் நானும் வரவேற்கிறேன்.. இந்த அமைப்பிற்கான சட்ட வடிவு வெளியாகும்போது தான்
அது குறித்த என் கருத்துகளையோ அல்லது அதன் பிரிவுகளில் மாற்றஙக்ளுக்கான
யோசனைகளையோ சொல்லமுடியும். “
--------------------------------------------------------------------------------------------------------------------------
நூலாசிரியரும்,தமிழகஅரசியல்கட்சிகளைப்பற்றி ஆராய்ந்துகொண்டிருப்பவருமான திரு சுப்பு
தன்னாட்சி அமைப்பாக இயங்கி ஊழலை கண்காணிக்க
வேண்டிய சிபிஐ. சிவிசி போன்ற அமைப்புகள் ஆட்சியிலிருப்போரின் ஆணைகளுக்கு
இயஙக வேண்டிய இன்றைய சுழலில் இம்மாதிரி ஒரு வலிமையான அமைப்பு ஏற்படுத்த வேண்டிய அவசியத்தில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க
முடியாது. ஆனால் அன்னா ஹஸாரே குழுவின் சில கோரிக்கைகளை நம்மால் புரிந்துகொள்ள
முடியவில்லை. சட்ட வ்டிவை தயாரிக்கும் குழுவில் அரசு தரப்பு உறுப்பினர்கள் அதிகாரவர்கதிலிருந்து
இருக்ககூடாது, மூத்த அமைச்சர்களாக
இருக்கவேண்டும், சோனியா
பங்கேற்தைகூட வரவேற்கிறோம் என்றார்கள். இந்திய அரசியலில் அதிக சர்ச்சையில் சிக்கிய
வர் சோனியா. காலையில் ஊழலை ஒழிக்க அன்னா ஹன்ஸாரேவுக்கு ஆதரவு என அறிவித்துவிட்டு
மாலையில் கலைஞருடன் சென்னையில் திமுக அணிக்கு ஓட்டுகேட்டவ்ர். மேலும்
லோக்பால் குழுவில் நோபல் பரிசு பெற்ற இந்தியர், மாகஸே விருது
பெற்றவர்கள இருப்பார்கள் என்கிறார்கள். தன் துறையில் விற்பன்னர்களாக
இருப்பதினாலேயே அவர்களுக்கு ஊழல் புகார்களை விசாரித்து தீர்ப்பு சொல்லும் திறன்
வந்துவிடுமா?. இப்படி சில நெருடலான
விஷயங்களை சட்டம் தயாரிக்கும் குழு ஆராய்ந்து சரி செய்ய வேண்டும்.இல்லாவிட்டால்
நமது அரசியல்வாதிகள் இதையும் ஹைஜாக் செய்து இயங்காமல் செய்துவிடுவார்கள்.
==============================================