காதலின்
வெற்றிக்காக மகுடம் துறந்த மன்னர்களை சரித்திரம் நமக்கு சொல்லியிருக்கிறது. காதலில்
தோற்றதால் மன்னராகும் வாய்ப்பு பெற்றவர் இப்போது தேர்ந்தெடுக்கபட்டபட்டிருக்கும் புதிய போப்.. உலகின் 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான
இவர் உலக நாடுகளால் வாடிகன்
நாட்டின் மன்னராக மதிக்கபடுபவர். போப் என்பவர் உலகம் எல்லாம் பரவிக் கிடக்கும் கத்தோலிக்கத் திருச்சபைகள், அதன் சொத்துக்கள், அதிகாரங்கள் மற்றும் மக்கள் அனைவரையும் ஒரே குடைக்குள் வைத்திருக்கும் மாபெரும் பதவியிலிருப்பவர். இந்த
பதவியிலிருந்த போ பெனிடிக்ட் XVI தன் உடல் நிலையை காரணம் காட்டி பதவி விலகபோவதாக
அறிவித்தார். உலகின் மிகப் பெரிய மதப் பிரிவான கத்தோலிக்கர்களின் சக்தி வாய்ந்த தலைமைப் பதவியிலிருந்து. கடந்த 600 ஆண்டுகளில் இவ்வாறு எவரும் பதவி விலகியதில்லை. அந்த
பதவிக்கு திருச்சபை மரபுப்படி, உலகம்
முழுவதும்
உள்ள
நாடுகளைச்
சேர்ந்த,
115 கார்டினல்கள்
பங்கேற்ற
கூட்டத்தில் தென்
அமெரிக்க
நாடான,
அர்ஜென்டினாவை
சேர்ந்த,
ஜார்ஜ்
மரியோ
பெர்காக்லியோ,
(வயது76,)
புதிய
போப்பாக
தேர்வு
செய்யப்பட்டார். இவர்
தன் 16 வயதில் பக்கத்துவீட்டு பெண்னை காதலித்தார், உன்னை
மணக்க
ஆசைப்படுகிறேன்.
நீ
சரி
என்றால்
மணப்பேன்.
இல்லையெனில்,
பாதிரியாராகி,
மத
சேவையில்
ஈடுபடுவேன்
என, கடிதம் எழுதியிருந்தார். காதலை அந்த பெண் ஏற்ககாதால் சொன்னபடியே பாதிரியார் ஆகி நாட்டின் தலமை ஆர்ச்
பிஷப் வரை வளர்ந்து கார்டினலாக உயர்ந்து இன்று போப்பாகியிருக்கிறார்.
போப் பெனிடிக்டின் பதவி விலகலுக்கு காரணம் அவரது உடல் நிலையில்லை வேறு பல காரணங்கள் இருக்கிறது என்கிறது இப்போது கசியும் வாட்டிகன்
அரண்மனை ரகசியங்கள்.
வத்திகான் லீக்சின் எதிரொலி: போப் பதினாறாம் பெனிடிக்ட் தமது பதவியை
ராஜினாமா செய்யபோவதாக செய்த அறிவிப்பு இதகத்தோலிக்க மதகுருமார் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
உலகின் பல கத்தோலிக்கத் திருச்சபைகளில் இலை மறை காயாக நிகழ்ந்து வந்த பாலியல் குற்றங்கள் பலவும் அண்மையக் காலமாக வெளி வரத் தொடங்கி விட்டன. அத்துடன் வத்திகானின் சொத்துக்களைக் கைப்பற்றுவதில், அதிகாரங்களைத் தக்க வைப்பதில் வத்திகானுக்குள் நிகழும் அதிகாரப் போட்டிகள், அரசியல் விளையாட்டுக்கள் போன்றவற்றை தொகுத்து
''வத்திகான் லீக்ஸ்'' என்ற தொகுப்பு கடந்த ஆண்டு வெளி வந்தது. தொடர்ந்து கத்தோலிக்கத் திருச்சபையின் பல்வேறு பணங்களையும் ரகசியமாகப் பல மதக்குருமார்கள் தமது ரகசிய வங்கி கணக்கில் மாற்றிக் கொண்டனர் எனவும், பல இளம் வயதினர் மீது பாலியல் துன்புறுத்தல்களை பல மதக்குருக்கள்
செய்கிறார்கள் பல வத்திகான் மதக்குருமார்கள் ஓரின
சேர்க்கை பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபடுகிறார்கள்
என்றும் பாதிக்க பட்டவர்கள்,சொல்லகூடாது என மிரட்டபடுகிறார்கள்
என்று செய்தியை பத்திரிக்கையாளர் கார்லோ அப்பாதே வெளியிட்டபோது உலகம் திடுக்கிட்டது. இதைத்தொடர்ந்து போப்
வாட்டிகனின் தலமை ஆட்சி குழுவான கீயூரியா(curia)
என்ற சபையில் விஷயம் பல நாட்கள் விவாதிக்கபட்டிருக்கிறது. இதன்
உறுப்பினர்கள் 80 வயதை கடந்த சீனியர் கார்டினல்கள். போப்பையே ஆட்டிவைக்கு வலிமை
வாய்ந்தவர்கள் இந்த கூட்ட முடிவுகள்
ரகசியமானவை. குறிப்புகள் பலவும் போப்பினால் எழுதப்பட்டவை, திருச்சபையின் முக்கிய அங்கத்தனர்களால் பரிமாறிகொள்ளப்பட்டவை.
இவைகளை போப்பின் முதன்மை பணியாளராக இருந்த பாலோ காப்பிரியல் என்பவர் திருடி வெளியிட்டு விட்டார் என்று
கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு 18 மாதம் சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டது. இந்த
கைதும் தண்டனையும் வெளீயான செய்திகளில்
உண்மையில்லாமல் இல்லை என்பதை உணர்த்தியது. இத் தகவல்கள் வெளியாவதின் பின்னணியில் பல முக்கியக் கத்தோலிக்க மதக் குருக்களும் இருக்கிறார்கள்
என்பது பரவலான நம்பிக்கை.
. தொடர்ந்து எழுந்த அலை வாத்திகன்
பாங்க் சம்பந்தபட்டது. வாத்திகனுள்ளே மட்டும் இயங்கும் இந்த வங்கியின் செயல்பாடுகள் வெளிப்படையாக
இருந்ததில்லை. ஐரோப்பிய யூனியனின்
கூட்டமைப்பின் தலமை வங்கி இந்த வங்கி
மூலம் நடைபெற்று கொண்டிருக்கும் சர்வ தேச பரிமாற்றஙகளின் விபரத்தை கேட்டபோது தர மறுத்து விட்டது. இப்போது விபரங்கள் சொல்லபடாவிட்டால்
ஐரோப்பாவின் வங்கிகள் அனைத்தும் உங்களுடன் உறவுகள் வைத்துகொள்ள
கூடாது என ஆணையிடுவோம் என்று காலகெடு தந்து மிரட்டி கொண்டிருக்கிறார்கள்.
இண்டிபெண்டெண்ட் என்ற பிரபல தினசரி வாத்திகன் பற்றிய தொடர் கட்டுரையை வெளியிட
துவங்கியிருக்கிறது. முதல் பகுதியில் வந்த செய்தி அதிர்ச்சியானது. ஐரோப்பவின் மிக
பெரிய ஆடம்பரமான ஓரினசேர்க்கை விரும்பிகளின் கிளப் இருக்கும் வளாகத்தில் வாத்திகன் 23 மில்லியன்
டாலர்களுக்கு பங்குகள் வாங்கியிருக்கிறது.
வாத்திகனால் நியமிக்கபட்ட மத பிராசகர்கள்
கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர்
கார்டினல் இவான் டைஸ். இவர்
மும்பாயின் முன்னாள் ஆர்ச் பிஷப். இவருக்கு சர்ச்களின் இளவரசர் என்ற பட்டமும்
உண்டு. இவருக்கு 12 அறைகள் கொண்ட ஒரு ஆடம்பர
பிளாட் அந்த கட்டிடத்தில் இருக்கிறது இவர் வீட்டிலிருந்து கிளப்பிற்கு வழியும்
இருக்கிறது. இவர் மட்டுமில்லை இவர் போல் 18 பாதிரியார்களுக்கு அந்த கட்டிடத்தில்
பிளாட்கள் இருக்கின்றன. என்கிறது அந்த கட்டுரை.
டைஸ் “ நான் அவர்களை போதனைகள் மூலம் மனம் மாற்றி திருத்த முயற்சிக்கிறேன்”
என்று சொல்லுவதை யாரும் காதில் போட்டுகொள்ள வில்லை.
இந்த சூழ்நிலயில் முன்னாள் போப் பெனடிக் 80 வயதுக்கு மேற்பட்ட 3 கார்டினல்கள்
கொண்ட ஒரு கமிட்டியை அமைத்தார். அவர்கள்
தந்த ரிப்போர்ட் ”சொல்லபடுவதில் பல உண்மையானவை தகுந்த நடவடிக்கை எடுத்து திருச்சபைக்கு
ஏற்பட்டிருக்கும் களங்கத்தை நீக்க வேண்டும்..”ஆனால் எந்த நடவடிக்கையும் கூடாது என
அழுத்தம் தந்தது வலிமை வாய்ந்த கீயூரியா. பொறுத்து பார்த்து வெறுத்துபோய் ராஜினிமா
செய்ய முடிவெடுத்தார். இதற்கு முக்கிய காரணம் அவ்ரது ராஜினாமாவால் கீயூரியா உறுப்பினர்களும் ;பதவியிழப்பார்கள்.
புதிய போப் கீயூரியா சபையின் உறுப்பினர்கள் புதிதாக
நியமிப்பார். கீயூரியா உறுப்பினர்களை தன்
ராஜினாமாவால் இப்படி தண்டித்த அவர்
சிறைக்கு நேரில் சென்று தண்டனை
அனுபவித்து கொண்டிருந்த தன் உதவியாளர் பாலோ காப்பிரியல் லை மன்னித்து ஆசிகூறி விடுதலை
செய்துவிட்டார்.
புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் மக்களின் போப்பாக பார்க்கப்படுகிறார் .இவர் சாதாரண மக்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் மிகவும் எளிமையானவர் என்று
அர்ஜென்டினாவில் இவரை அனைவரும் வெகுவாக புகழ்கின்றனர். நகரப் பேருந்தில் ஏறிதான் பல இடங்களுக்கும் இவர் போவார் என்றும்
ஆர்ச்பிஷப்பாக இருக்கும் இவர் பெரிய மாளிகையில் வசிக்காமல் மிகவும் சாதாரண வீட்டில்தான் வசித்து வருகிறார் என்றும் சொல்லபடுகிறது. போப்பாக தேர்ந்த்டுக்கபட்டவுடன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பில்கொடுத்துவிட்டு பஸ்ஸில் மற்ற கார்டினல்களுடன் போப்பின் அரண்மனைக்கு போயிருக்கிறார்.
அர்ஜென்டினாவில் இவரை அனைவரும் வெகுவாக புகழ்கின்றனர். நகரப் பேருந்தில் ஏறிதான் பல இடங்களுக்கும் இவர் போவார் என்றும்
ஆர்ச்பிஷப்பாக இருக்கும் இவர் பெரிய மாளிகையில் வசிக்காமல் மிகவும் சாதாரண வீட்டில்தான் வசித்து வருகிறார் என்றும் சொல்லபடுகிறது. போப்பாக தேர்ந்த்டுக்கபட்டவுடன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பில்கொடுத்துவிட்டு பஸ்ஸில் மற்ற கார்டினல்களுடன் போப்பின் அரண்மனைக்கு போயிருக்கிறார்.
புதிய போப்பாண்டவர் தனது பெயராக பிரான்சிஸ் என்பதைத் தேர்வு செய்துள்ளார். இதுவரை இருந்த போப்புகளுக்குப் பின்னால் ஒரு எண் இருக்கும். அதாவது 2ம் போப் ஜான் பால், 16ம் பெனடிக்ட் என்று. ஆனால் தற்போது தேர்வாகியுள்ள ஜார்ஜ் தேர்வு செய்துள்ள பெயர் பிரான்சிஸ்.
இவர்தான் முதல் பிரான்சிஸ் என்பதால் இவரது பெயருக்குப் பின்னால் எண் எதுவும் இருக்காது. இப்படி எண் இல்லாமல் ஒரு போப் வருவது இதுவே முதல் முறையாகும். பிரான்சிஸ் என்ற பெயரை தேர்ந்த்டுத்தற்கு இவர் சொன்ன காரணம். யேசுவின் சீடரான பிரான்சிஸ் ஒரு ஏழை, எளிமையாக வாழ்ந்து ஏழைகளுக்கு உதவியவர். நமது சர்ச்கள் அதை நினைவில் கொள்ள வேண்டும் என்பது.
இவர்தான் முதல் பிரான்சிஸ் என்பதால் இவரது பெயருக்குப் பின்னால் எண் எதுவும் இருக்காது. இப்படி எண் இல்லாமல் ஒரு போப் வருவது இதுவே முதல் முறையாகும். பிரான்சிஸ் என்ற பெயரை தேர்ந்த்டுத்தற்கு இவர் சொன்ன காரணம். யேசுவின் சீடரான பிரான்சிஸ் ஒரு ஏழை, எளிமையாக வாழ்ந்து ஏழைகளுக்கு உதவியவர். நமது சர்ச்கள் அதை நினைவில் கொள்ள வேண்டும் என்பது.
தவறை உணர்ந்து வருந்தி
கேட்பவர்களுக்கு பாவ மன்னிப்பு வழங்கும் அதிகாரம் திருச்சபைகளுக்கு உண்டு. இந்த போப்
அதைசெய்யபோகிறாரா? அல்லது தனக்கு முந்தியவர் முடிக்காமல் போன நிர்வாக பணியான தவ று
செய்தவர்களுக்கு தண்டனைகளை அளிக்கபோகிறார? உலகம் பார்த்துகொண்டிருக்கிறது.