தான் விரும்பும் பணியைச் செய்யும் வாய்ப்பு கிடைக்காமல், கிடைத்த வேலையை பொருளாதரா அழுத்தங்களினால் தொடர்பவர்கள் பலர். ஆனால் கோவையைச் சேர்ந்த சரத்குமார் இவர்களிலிருந்து மாறுபட்ட இளைஞர். பட்டபடிப்பு முடித்த இவருக்கு கிடைத்த வேலை ஒருதொழில் நிறுவனத்தின் விற்பனை அதிகாரி. காடுகளையும் யானைகளையும் நேசிக்கும் சரத்குமாருக்கு அந்த வேலையில அவ்வளவு பிடிப்பில்லை. தனது மாவட்ட எல்லையில் ஒரு நாள் யானை ஒன்று புகுந்து அட்டகாசகம் செய்து கொண்டிருந்தது. அதை விரட்ட வனத்துறை அதிகாரிகள் செய்து கொண்டிருந்ததைப் பார்த்த சரத் குமாருக்கு தெரிந்த ஒரு விஷயம் வனத்துறையில் யானைகளை தந்தங்களுக்க கொல்வதை தடுப்பதற்கும், மனிதர்கள் வாழும் பகுதியில் வரும்யானைகளை விரட்டித் திரும்ப காட்டுக்குள் அனுப்ப தனியாக ஒரு ஸ்குவாட் இருப்பது. உடனேயே பார்த்துக்கொண்டிருந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு வனத்துறையில் அந்தப் பணியில் சேர்ந்தார். சம்பளம் குறைவுதான். ஆனால் அவர் நேசிக்கும் யானைகளை தினசரி பார்க்கலாம் என்ற நிறைவு.
கடந்த மாதம் இவர் செய்த ஒரு துணிவான செயலால் இன்று இவர் இந்தியா முழுவதும் மட்டுமில்லாமல் உலகெங்கும் இருக்கும் வனவிலங்குகளின் நல ஆர்வலார்களால் பாராட்டப்படுகிறார்.
பாவனி ஆற்றில் நீர் அருந்த வந்த பெரிய யானை ஒன்று நதிக்கரையிலிருக்கும் கிராமமான சமயபுரத்தின் உள்ளே புகுந்து இரண்டு மோட்டர் சைக்கிள்களையும் கடைகளையும் உடைத்து நொறுக்கி துவம்சம் செய்து கொண்டிருக்கிறதாக செய்தி வந்தவுடன் சரத்குமார் தன் குழுவுடன் அங்கு விரைந்தார்.
பணியில் 5 ஆண்டு அனுபவம் பெற்றிருக்கும் சரத்குமாருக்கு பலயானைகளையும் அதன் குணங்களையும் பற்றி நன்கு தெரியம். வந்திருப்பது வயதான ஒரு பெண்யானை. 3 மணி நேரம் போராடி அதைக்காட்டுக்குள் விரட்டி அனுப்பி வைத்தனர் குழுவினர். ஆனால் அரைமனிக்குள் திரும்பவும் வந்து கண்ணில் பட்டதையெல்லாம் மிதித்து நொறுக்க ஆரம்பித்தவிட்டது அந்த யானை. அப்போது சரத்குமார் கவனித்த விஷயம் அந்த யானை ஏதோ ஒரு கோபத்திலிருக்கிறது என்பதைத்தான். மறுபடியும் அதை விரட்டிவிட்டு அதன் கோபத்துக்கு காரணம் என்னவாயிருக்கும் என யோசித்துக்கொண்டே நடந்த போது அவர் பார்த்தது.
காட்டில் உபரிநீர் வழிந்தோட அமைக்கப்பட்ட கால்வாயில் சிலாப் திறாந்து கிடந்த்தையும் அதன் உள்ளே பள்ளத்தில் விழுந்திருந்த சின்ன சிறு யானைக்குட்டியையும். . பிங்க் வண்ண துதிக்கையுடன் சின்னஞ்சிறு பிறந்து 10 அல்லது 15 நாளே இருக்கும் அந்த யானைக்குட்டி. சரியாக நிற்க, நடக்க்க் கூட தெரியாத அந்த குட்டி பள்ளத்தில் விழுந்துவிட்டிருக்கிறது. வெளியில் வரத்தெரியவில்லை. தாய் யானை பள்ளத்தின் ஒருபுறம் அது வெளிவர மண்னைத்தள்ளி மேடாக்கி முயற்சித்திருக்கிறது. ஆனாலும் அதற்கு வெளியே வரத்தெரிய வில்லை. தன் அருமைக்குழந்தையை மீட்க முடியாமல் தவித்த தாயின் கோபம் தான் தாக்குதலுக்கு காரணம்.
பள்ளத்தில் தவிக்கும் குட்டியைப் பார்த்தவுடன் விஷயத்தைப் புரிந்த கொண்ட சரத் குமார் குழுவினர் பள்ளத்தினுள்ளே இறங்கி பயந்து மிரண்டு போயிருந்த அந்தக்குட்டியை வெளியே கொண்டுவந்தனர். தாயின் பாலைத்தவிர வேறு எதுவும் சாப்பிட முடியாத அந்த பச்சைக்குழந்தையை காட்டுக்குள் விரட்டமுடியாது. அதன் தாய்வரும் வரை காத்திருக்கவும் முடியாது. மேலும் மனிதர்களுடன் குட்டியைப் பார்த்தால் அவர்கள் செய்யும் உதவியைப்புரிந்து கொள்ளாமல் பயங்கரமாகத்தாக்கும் அபாயாமும் உண்டு
.
அப்போது அவர் செய்ததுதான் வீடியோவில் வைரலாகப் பரவி உலகை ஆச்சரியபடுத்திக்கொண்டிருகிறது
அந்த குட்டி யானையை தன் தோள்களில்., பாகுபலி கனமான லிங்கத்தை தூக்கியதைப் போல 50 மீட்டர் தூரத்திலிருக்கும் ஜீப்புக்கு ஒட்டமும் நடையுமாக வேகமாக கொண்டுசென்றார். உள்ளூர் போட்டோகிராபர் எடுத்த அந்த வீடியோவை பிபிசி செய்தியில் காட்டியது
100 கிலோ கனமிருக்கும் அதை எப்படி ஒருவராகத்தூக்கினீர்கள்? என்ற கேள்விக்கு சரத் சொன்னபதில். “எனக்கே தெரிய வில்லை. அந்த வினாடியில் அதை உடனடியாக ஜீப்புக்குகொண்டு போய்விடவேண்டும் என்ற எண்ணம் தான் மனதிலிருந்தது”. மேலும், இரண்டு மூன்றுபேர் ஒரு குட்டியைத்தூக்குவது என்பதும் அதற்கு பாதுகாப்பு இல்லை என்று எனக்குத்தெரியும்
காட்டுக்குள் 12 யானைகள் கூட்டமாக இருக்கும் ஒரு குழுவில் அதன் தாய் யானையை அடையாளம் கண்டு அதனருகில் குட்டியைவிட்டு பாதுகாப்பான தூரத்தில் காத்திருந்தோம். அப்போது காலை 3 மணி என்பதால் தாய்யானை அதை அழைத்துசென்றதைப்பார்க்க முடியவில்லை. ஆனால் அப்போது காடே அதிரும்படியான அதன் சந்தோஷப் பிளிரலில் எனக்கு செய்தி கிடைத்துவிட்டது என்கிறார் சரத்குமார்கல்கி 28/01/18ல் எழுதியது
https://youtu.be/XufMeIFn4A8