27/6/10

செம்மொழியின் காதலர்கள்or
செம்மொழியை உலகறியச்செய்தவர்கள்
ஐரோப்பிய நாடுகளிலிருந்து 17, 18 நூற்றாண்டுகளில் மதத்தொண்டாற்றவந்த
   போதகர்களிலிருந்து இன்றைய வெளிநாட்டு ஆராய்ச்சிமாணவர்கள் வரை
         தொடர்ந்து செம்மொழியின் பெருமையை உலகிற்கு 
அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில சில முன்னோடிகளை
இந்த தருணத்தில்
நன்றியோடு கல்கி நினவுகூறுகிறது

பார்தோலோமீயூஸ் செயான்பலங் (ஜெர்மனி)


செம்மொழியை தம்மொழியாக நேசித்து  அதில் அரும் இலக்கிய பணியாற்றியிருப்பவர்களில் முதலிடம் பெற்றிருப்பவர் ஒரு ஜெர்மானியர் என்ற செய்தி சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் அறியப்பட்டிருக்கிறது. ஜியூ போப்பையும், கால்ட்வெல்ட்யும்,வீராமாமுனிவரையும் அறிந்த தமிழுலகம்  அவர்களுக்கு முன்னதாகவே தமிழகம் வந்த பணியாற்றியிருக்கும்இவரை அறிந்திருக்கவில்லை. காரணம்  இவரது பணி ஜெர்மானியாரலேயே மிக தாமதமாகத்தான் அறியப்பட்டிருக்கிறது. இந்திய மொழியான சமஸ்கிருத்தை ஜெர்மனியர்கள் அறிந்து ஆராயும் 100 ஆண்டுகளுக்குமுன்னமே இவர் தமிழிற்கு அரும்தொண்டாற்றியிருக்கிறார்.
டேனிஷ் ஈஸ்ட் இந்திய கம்பெனி தரங்கபாடி கடல்பகுதியை தஞ்சை மன்னரிடமிருந்து விலைக்கு வாங்கியருந்தது.  பின்னர் அது டென்மார்க் அரசின் பகுதியாக அறிவிக்கபடுகிறது.பின் டென்மார்க மன்னர் அந்த பகுதியில் கிருத்துவ மதத்தை பரப்ப போதர்களை அனுப்ப முடிவு செய்தார். டேனிஷ் நாட்டவரில் யாரும் “மலேரிய பூமியான மலபார் இந்தியாவிற்கு” (அப்போது ஐரோப்பாவில் இந்தியா அப்படித்தான் அறியப்பட்டிருந்தது )தயாரகயில்லை. அண்டை நாடான ஜெர்மனியிலிருந்து  டென்மார்க் மன்னரின் விருப்பதிற்காக செய்தவர். பார்தோலோமீயூஸ் செயான்பலங் Bartholomaeus Ziegenbalg  .போகுமிடத்தில் முதலில் மொழியை நன்கு கற்று கொண்டு பிராசாரம் செய்து மக்களை மதம் மாற்றுங்கள் என்ற கட்டளையுடன் 1706ல் வந்தவர் ,வந்த இடத்தில் கற்ற தமிழ் மொழியின் அழகில் மயங்கி இராண்டாண்டில் அதில் செய்திற்கிற பணி நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. 2000 வார்த்தைகளுடன்  1708ல்தமிழின் முதல் சொல் அகாராதியை 17000 வார்த்தைகளுடன் (ஜெர்மனியில் அச்சிட்டுவந்திருக்கி/றது) உருவாக்கியிருக்கிறார். இது தான் பின் வரும் பல சொல் அகாராதிகளுக்கு முன்னோடியாகயிருந்திருக்கிறது. தொல்காபியம், கொன்றைவேந்தன் நீதிவெண்பா போன்றவைகளை 119 ஒலைச்சவடியிலிருந்து படித்து மொழிபெயர்ததிருக்கிரார். அதை எளிய தமிழ் நடையிலும்  சிறு புத்தனக்கள்கவும் எழுதியிருக்கிரார்.
இலக்கியத்தைதாண்டி இவர் எழுதிய குறிப்புகளில் அன்றைய காலகட்டதிலிருந்த நமது வாழ்க்கைமுறையை ஜெர்மன் மொழியில் பதிவு செய்திருக்கிறார். தினசரி தமது டைரியில் பார்த்தது, பாதித்தது, படித்தது போன்றவற்றை மிகத்தெளிவாக பதிவு செய்திருக்கிறார். நமது திருமண முறைகள்(பல வித தாலி வகைகள் !) செருப்பணிந்து பல்லக்கிலிருக்கும் மனிதனை செருப்பாணியாதவர்கள்  தூக்கிப்போகும் சமுகமுறை, சாதி ஆதிக்கம் திருவிழாக்கள்  சடங்குகள் அதற்காகவே ஆச்சரகோவை புத்தகம் ஒன்றிருப்பது இப்படி பல. தமிழரின்  பண்பாடுகளை காட்டும் கால கண்னாடியாகயிருக்கும் இந்தகுறிப்புகளை அவர் அவ்வப்போது ஜெர்மனிக்கு அனுப்பிவைத்டிருக்கிறார்.அவை  இன்றும்  ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது.
“தமிழர்களின் கலாச்சாரம் மிகபாரம்பரியமானது, அவர்களின் மிகதொன்மையான மொழியில் பல அறிய இலக்கியங்கள் படைக்கபட்டிருக்கின்றன. இந்த மொழி நமது பல்கலைகழகங்களில் போதிக்க்ப்படவேண்டும்,இது மலேரிய தேசமில்லை.மூடத்தடமான சில்ச் மதச்சடங்க்குகளை பின்பற்றினாலும் வானசாஸ்திரம் கட்டிடக்கலை வரை பலவிஷயங்கள் அறிந்தவர்கள் தமிழர்கள். இதை ஐரோப்பியர்களுக்கு தெரியபடுத்துங்கள்” என தன்னை இந்த பணிக்கு அனுப்பிய பேராசிரியருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உங்கள் பணியை மட்டும் செய்யுங்கள் என்று சொல்லி அந்த கடித்தை வெளியிடவேஇல்லை.
இவருடன் கூடவே இருந்து உதவிய  தமிழ் இளைஞர் தமிழர் மாலிய்ப்பன். மதம் மாறி பீட்டர் மாலியப்பன் ஆகிறார். அவர் இவரைவிட கில்லாடியாக்யிருந்திருக்கிறார் என்பது இவர் குறிப்பிலிருந்து தெரிகிறது. சிலநாளிலியே ஜெர்மன் மொழியையை கற்று கொண்ட அவர்,  பணிக்காலம் முடிந்து  திரும்பிய பார்தோலோமீயூஸுடன் டென்மார்க் போய்  அங்கு மன்னரின் அவையில் ஜெர்மன் மொழியில்  தமிழின் சிறப்புபற்றி உரையாறியிருக்கிரார். “அருமயாக பேசினார்” என்று  தனது குறிப்பில் எழதியிருக்கிறார் பார்தோலோமீயூ.  செம்மொழிக்கு ஜெர்மானியர்கள் ஆற்றிய பனிகள் குறித்து 2லட்சத்திற்குமேலான ஆவணங்கள் ஜெர்மன் ஹாலே நகரில் பிரங்களின் பவுண்டேஷன் Francken's Foundation Archives in Halle, ஆவணக்காப்பகத்திலிருக்கிறது.  இவற்றில் பல இதுவரை தொடப்படாடதவை. தமிழின்,தமிழரின் பெருமையை சொல்ல காலம் காலமாக ஆராய்சியாளார்களின் கண்னில்பட  காத்திருக்கின்றன.
படம்:


கமில்வெய்த் செல்லிபல்

செக்கோஸ்லோவிக்கியா (இப்போது செக்)வில் செம்மொழி ஆராயப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதைவிட  அதற்கு வித்திட்டவர்  செய்திருக்கும் தமிழ்ப்பணி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. செக் பலகலை கழகத்தில் 1952ல் இந்திய மொழிகளில் ஒன்றான  சமஸ்கிருதம் படிக்க துவங்கிய அந்த இளைஞனை மிக கவர்ந்தது துணைப்பாடங்களில் ஒன்றான தமிழால் ஈர்க்கபட்டு, அதையே முழுவதுமாக கற்றிந்த இவர் 1959ல் அதில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். பல இந்திய மொழிகளையும் ஆர்வத்துடன் கற்றிருக்கிறார்.திராவிட மொழிகளின் ஒற்றுமையை, தமிழ் பல பகுதிகளில்ம மாறுபட்டு பேசப்படுவது,பிற மொழிச்சொற்களின் கலப்பு பற்றியெல்லாம் ஆரய்ந்திருக்கிறார். கமில்வெய்த் செல்லிபல்(Kamil Veith ZVELEBIL)
தமிழக காட்டுபகுதிகளில் பயணம்செய்து அவர்கள் பேசும்தமிழ்,வரிவடிவம் இல்லாது வழக்கிலிருக்கும் தமிழ். போன்றவகளை ஆராய்ந்து இவர் எழுதிய கட்டுரைகளில் மிக முக்கியமானது. நீலகரி மலைப்பகுதி இருளர்கள் பேசும் மொழி தனியான ஒரு மொழி அது தமிழல்ல என்பது. இத்தகைய ஆராய்சிகளுக்காக இவர் செலவிட்டது 5 ஆண்டுகள். செக்கொஸ்லோகியாவில் 1968ல் உள் நாட்டுப்போர் துவங்கி ரஷ்ய படைகள் நுழைந்து   அறிவுஜீவிகளுக்கு ஆபத்து என்ற நிலை உருவானபோது அமெரிக்கா போன இவர் அங்கும் சிக்ககோ பலகலகழகத்தின் தமிழ்துறையில் பணியாற்றியிருக்கிறார். தொடர்ந்து பிரான்ஸ் நாட்டு பல்கலைகழகங்களில் பணியாற்றியபோது ஜெர்மன் பல்கலை கழகங்களில் விஸிட்டிங் பேராசிரியாராக தமிழ் கற்பித்திருக்கிறார். போர்நிலவரம் சரியானபின் தாய் நாட்டில் மீண்டும் தன் தமிழ் பணியைத் தொடர்ந்திருக்கிறார்
1970களில் தமிழ் பற்றிய இவரது  கட்டுரைகள் செக்மொழி மட்டுமில்லாமல் போலிஷ் மொழியிலும் வெளியாகி தமிழ்மொழிக்கும், தமிழர்களுக்கும் ஒரு பெருமையான அடையாளாத்தை அளித்திருக்கிருக்கிறது.  சமகால இலக்கியங்கள்.சிறுகதைகள்,கவிதைகள் என பல மொழிபெயர்ப்புகளை செக்க் மொழியில் அளித்திருக்கிறார். தமிழ் சார்ந்த 500க்கும் மேற்பட்ட படைப்புகளை படைத்திருந்தும், தமிழ்கூறும் நல்லுகில் அதிகம் அறியப்படாத இவரை செக் அரசும், பலகலைகழகங்களும் பராட்டி பட்டங்களும் பதக்கங்களும் தந்து கெளரவித்திருக்கின்றன.
உலகின்  தமிழ் சம்மந்தப்பட்ட பல அமைப்புகளின் பணிகளுக்கு உதவியிருக்கும்  இவர் அந்த காலகட்டதில் சென்னையிலிருந்த தமிழ் மொழி ஆரய்ச்சி அமைப்பிலும்,தமிழ் கலாச்சார மையத்தின் பணிகளிக்கும் பங்களித்திருக்கிறார்.
சென்புத்தமதத்தத்வதில் தீவிர நாட்டம்கொண்டு பிரான்ஸ் நாட்டில் தங்கி அதுபற்றிய ஆராய்சியிலிடுபட்டிருந்த கே.வி செல்லிபெல் K. V.ZVELEBIL  கடந்தாண்டில்(2009ல்) காலமானார். உலகமறிந்த ஒரு சிறந்த மொழியில் அறிஞரை இழந்து விட்டோம். இது பேரிழப்பு என செக்நாட்டின் கல்வி அமைச்சகம் அறிவித்தது. இழப்பு  அவர்களுக்கு மட்டுமில்லை தமிழுக்கும் தான்.
படம்:


டாக்டர் பிரான்கோஸ் கோர்ஸ் (பிரான்ஸ்)  Dr. Francois Gros
 பிரான்ஸ் நாட்டின் லாயன்ஸ் பல்கலை கழகத்தில் பிரென்ச்.,சமஸ்கிருதம்,லத்தின் கீரிக் மொழிகள் கற்று MA பட்டம் பெற்ற பின் பாரீசுக்கு வந்து தமிழ் கற்றவர் பிரான்கோஸ்.தமிழையையும்.தமிழ்கலாசாரத்தையும் தன்க்கு அறிமுகபடுத்திய  தன் பேராசிரியரை இன்றும் நினைவுகூறும் இவருக்கு வயது 75. பாண்டிச்சேரியில் பிரென்ச் இன்ஸ்ட்டிடுய்டில் ஆராய்ச்சி பணியை தொடர்ந்த இவர் சிலப்பதிகாரம்,பரிபாடல்,பத்துபாட்டு பற்றி ஆராய்ந்திருக்கிறார், சமகால தமிழ் இலக்கியங்கள் பற்றி- தலித் இலக்கியங்கள் உள்பட பலவற்றை நன்கு அறிந்திருக்கும் இவர் பரிபாடலை பிரெஞ்ச் சில் மொழிபெயர்த்திருக்கிறார். 8 ஆன்டுகள் செலவிட்டு செய்த அந்த பணி பிரெஞ்ச் மொழியின் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான பரிசைப்பெற்றிருக்கிறது. திருக்குறள். காரைகால் அம்மயார் சரிதம் சைவசித்தாந்தகள் போன்ற் பலவற்றை பிரஞ்ச் மொழியில் மொழிப்யர்த்திருக்கிறார்.  சமகால இலக்கியத்திலிருந்து நிறைய  தமிழ் சிறு கதைகளை கண்னன் என்ற ஆராய்சியாளரின் உதவியோடு மொழிமாற்றம் செய்து அதை புத்தகமாக வெளியிட்டு தனக்கு  முதலில் தமிழ் சொல்லித்தந்த ஆசிரியர்  முனிசாமிநாயிடுவிற்கு அர்பணித்திருக்கிறார். திருவண்ணாமலை,உத்திரமேருர் கல்வெட்டுகளை ஆராய்ந்து பிரெஞ்ச் மொழியில் எழுதியிருக்கிறார். தலித் தமிழிலக்கியம் பற்றி நிறைய ஆய்வு செய்திருக்கிறார். டாக்டர் பிரான்கோஸ் கோர்ஸ் (  Dr. Francois Gros)

தமிழ்தாத்தா உ. வே சாமிநாதர்களின் சீடர்களான கிவாஜ, ஆர்வி சுப்பிரமணிஅய்யர் போன்றவர்களை நன்கு அறிந்து அவர்களுடன் தொடர்பிலிருந்த இவர், தமிழாராய்சியாளாராக இல்லாத அவர்களைப் போன்றவர்கள் தமிழுக்குசெய்திருக்கும்  பணியை வியந்து போற்றுகிறார்
தமிழைச் செம்மொழியாக்கி கெளரவித்தால் மட்டும் போதாது. பெரிய அளவில் வெளிநாட்டு பல்கலை கழகங்களில் தமிழ் கற்பிக்கப்பட வேண்டும், அதற்கு நிறையஆராய்ச்சி,   வெளிநாட்டவருக்கு  தமிழ் கற்பிக்கும் முறை, எளிய வகயில் கற்க வசதியான புத்தகங்கள் இப்படி பல விஷயங்கள்  செய்யப்படவேண்டும் எனசொல்லும் டாக்டர் பிரான்கோஸ் கோர்ஸ்  1974ல் இலங்கையில் நடந்த மாநாட்டை தவிர இதுவரை நடந்த எல்லா தமிழ் மாநாடுகளிலும் கலந்துகொண்டிருக்கிறார். தமிழைகற்பிப்பவர்கள் மொழி மட்டுமில்லாமல் தமிழ் கலாசாரம்,சரித்திரம் பற்றியெல்லாம்  கற்பிக்கவேண்டுமென்கிறார். தான் கிரேக்க மொழி கற்றபோது அகழ்வாராய்ச்சி செய்ய்மிடத்திற்கே சென்று அறிந்ததை நினைவு கூறுகிறார். இப்போது  ஓய்வு பெற்றுவிட்டாலும் தமிழையும், தமிழ்கலாசாரத்தையும் நேசிக்கும் இவர் ஆண்டு தோறும் ஜனவரி முதல் மார்ச் வரையும் தொடர்ந்து ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையும் பாண்டிச்சேரியில் தங்கி ஆராய்ச்சியை தொடர்கிறார்.
படம

13/6/10

புரியவைக்கிறார்கள்“இனி எந்த ஒரு ஒவியனாலும் இப்படி ஒரு படைப்பை உருவாக்கமுடியாது.அந்த கண்களும் புன்சிரிப்பும் ஆயிரம் கதைகள் பேசுகின்றன.”                                                                    
“எனக்கென்னவோ அந்த சிரிப்பில் ஒரு சோகம் தான் தெரிகிறது.”
மாடல் - படம் எழுதும்போது கஷ்டத்துடன் உட்கார்ந்திருப்பது அந்த இறுகிய முகத்தைப்பார்த்தால் தெரியவில்லை?”
“அந்த கைகளை அப்படி வைத்துக்கொண்டு சிரிப்பவர்கள் எதையோ மறைக்கிறார்கள் என்று அர்த்தம்”
“அவர் சிரிக்கவேஇல்லை முகத்தில் கோபம் தெரிகிறது”
பாரீஸ் நகரின் லூவர்(LOUVRE Palace)------ அரண்மனையின் அருங்காட்சியகத்தில் ஆண்டுக்கு 50 லட்சம்பேருக்குமேல் பார்க்கும் மானோலீஸாவின் படத்தை பார்த்தவர்களில் சிலரின் விமரிசனம் இவை.ஓவியன் லியோனா டார்வென்ஸியின் இறுதிப்படைப்பான இதன் வரலாறு சுவையானது. கடவுள், மதத்தலைவர்,மன்னர் போன்றவர்கள் மட்டுமே படமாக எழுதப்பட்ட காலத்தில்  500 ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்டு இன்று வரைப்பேசப்படும் ஒரு தனி நபரின் ஓவியம் இது ஒன்று தான். தொங்கவிடப்படும் ஆணியிலிருந்து படத்தின் பிரேம்சட்டம் வரை சிறந்த வல்லுனர்களால் அவ்வப்போது புதுப்பிக்கபட்டு பாதுகாக்கபடும் இந்த ஓவியம் உலகின் சிறந்த கலைப்பொக்கிஷமாக பாதுகாக்கபட வேண்டுமென்று அகில உலக ஒவியர் சம்மேளனத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்றைக்கு  குண்டு துளைக்கமுடியாத கண்ணாடி கூண்டு, 24மண நேர cctகாமிரா கண்காணிப்பு, பல மில்லியன் டாலர்களுக்கு இன்ஷ்யரன்ஸ் என்று பாதுகாப்பாக இருக்கும் இந்த ஒவியம்          1911ம்ஆண்டு காணமல் போயிருக்கிறது. திருடியவர் ஒரு இத்தாலி நாட்டு  சாதாரண ஒவியர். படத்தை பிரதி எடுத்து விற்றுக்கொண்டிருந்தார்.  2 ஆண்டு கழித்து மாட்டிக்கொண்டபோது ‘ஓவியனும், மாடலும் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போது இது பிராண்ஸில் இருப்பது தவறு என்பதால் நம் நாட்டிற்கு கொண்டுவந்துவிட்டேன்’ என்று சொன்னதால் அவரின் தேச பக்தியை பாராட்டி விடுதலை செய்துவிட்டார்கள்.!
படத்தின் இந்த சுவாரஸ்யமான கதைகளைவிட, மானோலீஸாவின் மர்ம புன்னகையைப்ற்றி நடந்த ஆராய்ச்சிகளும், தகவல்களும்  தான் மிக சுவாரஸ்சியமானவை.
 2005ஆம் ஆண்டின் இறுதியில் ஆம்ஸ்ட்டர்டாம் பல்கலைகழகம்(நெதெர்லண்ட்) புகைப்படங்களிலிருந்து அதில் இருப்பவரின் உனர்ச்சிகளை புரிந்துகொள்ள ஒரு மென்பொருளைத்தயாரித்திருந்தது. போட்டோக்களில் பயன் படுத்தி வெற்றிபெற்ற அதை இந்த ஒவியத்தில் பயன் படுத்தி பல நாட்கள் ஆராய்ச்சிக்கு பின்னர் அறிவித்த முடிவு. “மோனாலீஸா புன்னகை சந்தோஷமான புன்னகைதான். அந்த முகம், 83% சந்தோஷம்,9%வெறுப்பு,6%பயம்,2%கோபம் என்ற கலவையில் இருக்கிறது. கண்களின் ஒரத்தில் தெரியும் சிறிய சுருக்கம்,உதடுகளின் மெல்லிய வளைவு எல்லாம்  ஒரு சாராசரிப் பெண் சந்தோஷத்தில் இயல்பாக சிரிக்கும்போது எற்படுபவைதான்”

அறிவிக்கப்பட்ட முடிவு ஒவிய கலைஞர்களிடமும், கலைவிமர்சகர்களிடம் சர்ச்சயை அதிகரிகச்செய்ததே தவிர  இறுதி விடையாக எற்றுகொள்ளபடவில்லை. கடந்த ஆண்டு(2009) அக்டோபர் மாதம் ஸ்பெயின் நாட்டின் நரம்புமண்டல ஆராயச்சியாளார்களின் பயிற்சிக்கூடம் தங்களது ஆராய்ச்சியின்  பல கட்ட சோதனைகளின் முடிவில் மோனாலீஸாவின் புன்னகையின் மர்மத்தைக்கண்டு பிடித்துவிட்டோம். என அறிவித்தது.  “மோனலீஸா புன்னகைக்கிறாரா,இல்லையா என்பது பார்ப்பவரின் கண்களிலுள்ள ரெட்டினா செல்களில் பதியும் பிம்பத்தையும்,அது மூளையைச் சென்று அடையும் பாதயையும் பொறுத்தது.சில சமயங்களில் ஒரு பாதைவழியாகச் செல்லும்போது சிரிப்பதுபோலவும் மற்றொரு சமயம் வேறு பாதைவழியாக பிம்பம் மூளையை அடையும்போது சிரிக்காத மாதிரியும் தெரிகிறது.ஒருவினாடியில் 100ல் ஒரு பங்கு நேரத்தில் இது நடைபெறுகிறது. ஓவ்வொரு மனிதனுக்கும் இது,மாறும்- சில சமயம் ஒரே மனிதருக்கே கூட இரண்டு பாதைகளும் மாறி வேலை செய்யும். அதன் விளவு தான் இந்த தோற்றம்’ என்று சொல்லுகிறார் இந்த ஆராய்சிக்கு தலமையேற்ற லூயிஸ் மார்டின்ஸ் ஓட்டீரோ என்ற நரம்பியல் விஞ்ஞானி. மோனாலீஸாவின் படத்தை பல மாறுபட்ட பெரிய சிறிய வடிவங்களில் வெவ்வேறு தூரங்களிலிருந்து பங்கேற்பவர்களைப் பார்க்கச்செய்து இதை நிருபிக்கிறார்  “ஒரு படத்தின் மிகச்சரியான நடுப்புள்ளியிலஇருந்துதான் பிம்பம் ரெட்டினாவில் பதிய ஆரம்பிக்கிறது.மின்னலைவிட வேகமாக நமது மூளையில் பதிவதற்குள் பாதை மாறினாலோ அல்லது ரெட்டினா சற்றே நகர்ந்தாலோ படத்தின் நடுப்புள்ளி நம்  மூளையில் பதியாது. ஓவியத்தின் சரியான நடுப்புள்ளியில் புன்னகையை எழுதியிருப்பது தான் ஒவியனின் திறமை” என்கிறார். இவர்.
லியானோடார்வென்ஸீ திட்டமிட்டு இதைச் செய்திருப்பாரா? வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் இந்த ஒவியனைப்பற்றி ஆராய்ந்தவர்கள். “ஓவியம்,கட்டிக்டகலை,பொறியில்துறை, வானசாஸ்த்திரம், பூவியல் இப்படி பல துறைகளில் பிறவி மேதையாக, நிபுணராகயிருந்தவருக்கு இது ஒரு பெரிய விஷயமாகயிருந்திருக்காது., இன்றைய முப்பரிமாண(3 –D) படங்கள் பற்றிய அவரது கையெழுத்தில்  எழுதிய குறிப்புகள் கூட  சமீபத்தில் கிடைத்திருக்கிறது” 
இந்த முடிவிற்கு ஒவிய உலக ஜாம்பவான்கள் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. இந்த விஷயங்களை அறிந்த பின்  மீண்டும் மோனாலீஸா ஒவியத்தைப் பார்க்கும்போது “ஏன் இந்த ஆராய்ச்சியெல்லாம்?” என்ற தொனியில் அவர்  சிரிப்பது போலத்தானிருக்கிறத
(கல்கி13.06.10)
Ka(க்

6/6/10

வரப்போகும் லாமாவிற்காக காத்திருக்கும் பறக்கும் தொப்பிமாநிலத் தலைநகரின் பிராதான சலையான அது மிகப்பெரியதாக இல்லாவிட்டாலும் பளிச்சென்று படுசுத்தமாக இருக்கிறது அந்த சாலையில் எந்த வாகனத்திற்கும்  அனுமதியில்லாதால்ஹாரன் ஒலியே இல்லை.நடைபாதையில் செல்பவர்களும் மெல்லப்பேசிக்கொள்வதினாலும் எதோ வெளிநாட்டின் நகர் ஒன்றிலிருக்கும்  உணர்வைத்தோற்றுவிக்கிறது அந்த இந்திய நகரம். அந்த சாலையில் துப்பவோ, சுத்தமான சூழ்நிலையை பாதிக்கும் வகையில் எதாவது செய்தாலோ தண்டனை என அறிவிக்கப்பட்டநம் நாட்டின் முதல் தூய்மைப்பிரேதேசம் காண்டாக் நகரம்.
8000மீட்டர் உயரத்தில் இமயத்தின் மடியிலிருக்கும் மாநிலம் சிக்கிம்.மூன்று அயல் நாடுகளின் எல்லையை மாநில எல்லையாக கொண்டிருக்கும் இந்த  குட்டி மாநிலத்தின்(மாநில பரப்பளவே7000 சதுர கீமிதான்)  குட்டி தலைநகர் காண்டாக்.  தலைநகரை இணைக்கும் ரயில் பாதையோ, விமானநிலயமோ கிடையாது.  மாநிலத்தின் பிற பகுதிகளை இணைக்கும் சாலையும்,பஸ் நிலையமும் நகருக்கு வெளியே தான். நகருக்குள் மாருதி வேன்கள் தான் டாக்ஸிகளாக அனுமதிக்கபட்டிருக்கின்றன
பளிங்குவெள்ளையாய் பனி மூடிய  கஞ்சன் ஜிங்கா சிகரத்தின் பின்னணியில்  பரவிக்கிடக்கும் பசுமையை ரசித்தபடி அந்த  மலைநகரத்தில் இதமான குளிரில் நடப்பது சுகமாகயிருக்கிறது வெள்ளை மாளிகையென அழைக்கப்படும் சட்டமன்ற கட்டிடத்தை தவிர சில.சின்ன சின்ன சத்தமில்லாத அரசாங்க கட்டிடங்கள்,ஆடம்பரமில்லாத கடைகள் மலைச்சரிவின் நடுவே ஒருபெரிய கட்டிடத்தினுள்ளே அமைந்திருக்கும்  அழகான ஆர்கிட் வகை பூக்களுக்காகவே (பலநாட்கள் வாடமிலிருக்கும் வகை) நிறுவப்பட்டிருக்கும் தோட்டம், அருகிலேயே நகரைப்பெருமைப்படுத்திய ஒரு நேப்பாள கவிஞரின் சிலையுடன் அழகிய பூங்காமக்கள் மாலைப்பொழுதை  நகர போலீஸ் பேண்டின் இசையுடன் அனுபவிக்க காலரிகள் அமைக்கபட்ட பெரிய சதுக்கம். இப்படி எல்லாவற்றையும்  நடந்தே  4 மணி நேரத்தில் சுற்றிப்பார்த்த பின் நாளை என்ன செய்யலாம் என்பதை பற்றி  அந்த புத்தக கடையில் சுற்றிக் கொண்டிருந்தபோது  பேசிக்கொண்டிருக்கிறோம். அதைக் கேட்ட அந்த  கடையின்(100ஆண்டுகளுக்கும்மேலாக தொடர்ந்து இயங்கி வருகிறது] இன்றைய தலைமுறை உரிமையாளர்   ரூம்டெக் என்ற வரலாற்று சிறப்புமிக்க மிகப் பெரிய புத்த மாடத்தையும் அங்கு நடைபெறும் திருவிழாவையும் பற்றிச் சொல்லி மறுநாள் அதைபார்க்க ஏற்பாடு செய்துகொடுக்கிறார்.
மறு நாள் அழைத்து செல்ல வந்த டாக்ஸிக்கரார் திபெத்தியர்.அந்த மாருதி வேனில் பெரிய அளவில் தலைலாமா படம்,பிரார்த்தனை வாசகங்கள். இங்கு அனேகமாக எல்லா கடைகளிலுமே தலைலாமாவின் படங்கள் அவரை கடவுளாகவே மதித்து வழிபடுகிறார்கள்.திபேத் ஒருநாள் சுதந்திர நாடகிவிடும் என்ற நம்பிக்கயை கைவிடாதிருக்கிறார்கள். அதேபோல சீன கலாசாரத்தின் சாயல் பல இடங்களில் தெரிகிறது.டிரைவர் தனக்கு  உள்ளுர் மொழி தவிர நேபாளிமட்டும் தான் தெரியும் என்பதால் நமக்கு உதவ ஆங்கிலம் தெரிந்த உதவியாளரை அழைத்துவந்திருந்தார்.
நகருக்கு 23கிமீவெளியேஒரு மலைச்சரிவிலில் வனப்பகுதியில்அமைந்திருக்கும் உயிரியல் பூங்காவின் அருகிலிருக்கும் அந்த புத்தமடத்திற்கு சென்ற மோசமான பாதை  நாம் இருப்பது இந்தியா தான், பார்க்கபோவது ஒரு இந்திய கிராமத்தைதான் என்பதை உறுதிப்படுத்தியது.போகும் வழியெல்லாம் பல வண்ணங்களில் கொடிகள். அவைகட்சிக்கொடிகள் இல்லை,அத்துனையும் பிராத்தனைகளுக்காக என்பதையும்,திருமணம், செல்வம் கல்வி உடல்நலம் போன்ற ஒவ்வொன்றிருக்கும் ஒரு வண்ணக்கொடி நடுவார்கள் என்பதையும் கைடு மூலம் அறிகிறோம்

நீங்கள் பார்க்கப்போவது  புத்தமத்தினரின் மிகமுக்கியமானஇடம். புண்ணியம் செய்த புத்தமத்தினருக்கே கிடைக்கும் அறிய வாய்ப்பு.பல நூறு ஆண்டுகளுக்கு முன் கடுந்தவம் செய்து அந்த மடத்தலைவர் தேவதைகளின் ஆசியுடன் பெற்ற இறகு தொப்பி அங்கேயிருக்கிறது. அணிந்துகொண்டவர் எந்த இடத்திற்கும் பறக்கும் சக்தியைப் பெறுவார். மன்னரைவிட உயர்ந்த மடத்தலைவரான லாமா மட்டுமே அதை அணிய முடியும்.  இந்த மடத்தின்  இன்றைய  தலவர் திபெத்திலிருக்கிறார்.அவரோ அல்லது அவரது அடுத்த வாரிசோ வந்து அணிந்துகொள்வார்கள்.”  அங்குள்ள தர்மசக்கரா புத்தமாடத்தில் தேர்ந்தெடுக்கபட்டவர்கள் கடும் பயிற்சிக்கு பின்னர் தான் பிட்சுக்களாக அறிவிக்கபடுவார்கள்.என்ற  அந்த உதவியாளாரின் பில்டப் நம் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது.ஓரு மலைப்பதையின் அருகே இறக்கிவிட்ட அவர் இங்கிருந்து நடந்து செல்லுங்கள் நான் புத்த மடங்களுக்குள் வருவதில்லை என்கிறார். மெல்ல நடக்கும் நாம் 10 நிமிடத்தில்  மடத்தின் நுழைவாயிலைப்பார்க்கிறோம். கேரள கோவில்கலின் முகப்பை நினைவுபடுத்தும் பக்கங்களலில் நீண்ட இரண்டு திண்னைகளுக்கு நடுவே உயர்ந்து  சீனப்பாணி வண்ண ஒவியங்களுடன்  நிற்கும் திறந்த மரக்கதவுகள்.நுழைந்தவுடன் நான்குபுறமும் மரக்கூறையுடனும் திண்ணையுடனும் தாழ்வாரம் நடுவில் மிகப்பெரிய முற்றம். முற்றத்தின் நடுவே உச்சியில் விளக்குடன்  உயர்ந்து நிற்கும்  ஒருகல் தூண். மறுகோடியில்   திபெத்திய கட்டிடகலையில் எழுப்பபட்ட நான்கு  அடுக்கு மண்டபம். அடிக்கும் ஆரஞ்சு சிவப்பு, மஞ்சள் வண்ணத்துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.. தாழ்வாரத்தில் காத்திருக்கும் கூட்டத்தில் பல வெளிநாட்டவர்கள்.சில டூரிஸ்ட்கள்,உள்ளுர் மக்கள்.பூஜை துவங்க காத்திருக்கிறார்கள். நடிகர் விஜய் படத்தின்  குருப் நடனகாட்சிக்கு போட்ட செட் மாதிரி இருக்கும் இந்த திறந்த வெளியில் என்ன பூஜை  எப்போது செய்யப்போகிறார்களோ என்று நாம் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட அருகிலிருந்த வெளிநாட்டுகாரார் அப்படியெல்லாம் கமெண்ட் அடிக்காதீர்கள்.இது உலகத்தை தூர் தேவதிகளிடமிருந்து காப்பற்ற அவர்கள் செய்யும் மிக முக்கிய பூஜை.குருவின் அனுமதிக்காக காத்திருக்கிறார்கள். கிடைத்தவுடன் துவக்குவார்கள் என்கிறார். உங்களுக்கு எப்படித்தெரியும் என்ற தொனிதெரிந்த நம் பார்வையை புரிந்துகொண்டு நான் இரண்டு வருடங்களாக ஆராய்சி செய்துகொண்டிருப்பது இவர்களைப் பற்றிதான் என்று அடக்கத்துடன் சொன்ன அந்த அமெரிக்கரை கண்டு ஆச்சரியப்பட்டு. மரியாதையுடன் அறிமுகப்படுத்திகொண்டு  அவர்அருகில் அமர்ந்துகொள்கிறோம். அமெரிக்காவில் அயவோ பல்கலைகழக பேராசிரியாரான எரிக் ரிச்சர்ட் புத்த மதத்தின் பிரிவுகளைப் பற்றி ஆராய்ந்து எழுத வந்திருப்பவர் என அறிந்துகொள்கிறோம்
புத்தர் நிர்வாணம் அடைந்த பின் 100 ஆண்டுகளில் அவரது சித்தாந்த விளக்கங்களில் எற்பட்ட மாறுபட்ட கருத்துக்களினால் புத்தமத்தில் 20க்கு மேற்பட்ட பிரிவுகள் தோன்றின. அவற்றில் 10க்கும்மேல் திபெத்தில் பிறந்தவை. அவைகளில் அழிந்ததுபோக இருக்கும் சிலவற்றில் ஒரு முக்கிய பிரிவு  கார்க்யூப்பா பிரிவு புத்தமதம். மாந்திரிகம், தந்திரம் எந்திரம் போன்றவற்றை போற்றுபவர்கள்.உலகில் எதையும் மந்திரத்தால் சாதிக்கலாம் என நம்புவர்கள்.  தலமைப்பீடம் திபெத்திலிருக்கிறது. சீன ராணுவம் அதை அழித்துவிடக்கூடும் என கருதி அங்கிருந்து கொண்டுவந்திருக்கும் பல பூஜை, தந்திர ரகசியங்களுடன் தலமைப்பீடத்தின் அச்அசலான மாதிரியில் அன்றைய சிக்கிம் அரசரின் ஆசியுடன் இந்த மடத்தை  இங்கு நிறுவியிருக்கிறார்கள்.இது வெறும் மடம் மட்டுமில்லை.புத்தமதத்தின் தத்துவங்களை கற்பிக்கும் கல்விக்கூடம். குருகுல பாணியைப் பின்பற்றி 11ம் நூற்றாண்டிலிருருந்து பாடங்களை வாய்மொழியாகவே கற்பிக்கிறார்கள்.அவசியமானபோது  மடத்தின்  தலைவர் லாமா வருவார்.என பல தவகல்களை பேராசிரியர்  எரிக் தந்தபோது  சந்தோஷமாகவும் வெட்கமாகவும் இருந்தது. சந்தோஷம் தெரிந்துகொண்ட பல விபரங்களுக்காக வெட்கம் புத்தமதத்தை உலகிற்கு தந்தவர்கள் நாம், ஆனால் அதன்  பல விபரங்களை ஒரு அமெரிக்கர் மூலம் அறிந்து கொள்ள நேர்ந்தற்காக.
திடுமென  உரத்து சங்கு ஒலிக்கிறது.  மஞ்சள் ஆடை அணிந்த ஓரு மூத்த பிட்சு கையில் கொண்டுவந்திருக்கும் நீரை முற்றம் முழுவதும்  மந்திர உச்சாடனங்களுடன் இரைக்கிறார். நடுவில் நிறுவப்பட்டிருக்கும் மேடைக்கு மாலை அணிவிக்கிறார். சில வினாடிகளில் பிராதான மண்டபத்திலிருந்து  முற்றத்திற்கு நீல பட்டாடை அணிந்த குழு ஒடி வந்து நடனத்தை துவக்குகிறது. இவர்கள் புத்த பிட்சுக்கள் இது அவர்கள் வழிபாட்டுமுறை. இந்த இசையும் நடனமும் அவர்களுக்கு கற்பிக்கபடுகிறது.என்று விளக்குகிறார் எரிக். குழுவில் சிலர் விதவிதமான முகமூடிகள் அணிந்திருக்கின்றனர்.அவை துர்தேவதைகளாம். இசையின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் நடனம் உக்கிரமாகிறது. மண்டபத்திலுருந்து வினோதமான வடிவில் தங்க வண்ண தொப்பியும் சிவப்பு ஆடையும் அணிந்த பிட்சுக்கள் கைகளில் பலவிதமான சரவிளக்குகளுடனும், சாம்பிராணி புகை கக்கும் குப்பிகளுடனும் அவர்களில் சிலர் ஷனாய் போன்ற கருவியை இசைத்தவண்ணம் ஊர்வலமாக வருகிறார்கள். அவர்களுக்கு காவலாக பெரிய தடிகளுடன் புத்தபிட்சுக்கள்! ருத்திர தாண்டவம் ஆடும் துர்தேவதைகளின் முன் கூடிநிண்று மந்திர உச்சாடனம் செய்து பின் அவை ஒவ்வொன்றாக மயங்கி விழுகிறது.இசையின் வேகம் குறைகிறது. பிராத்தனைக்குபின்னர் புத்தபிட்சுக்கள் மண்டபத்தின் உள்ளே செல்லுகிறார்கள். இசை நிற்கிறது,முதலில் வந்த பிட்சு மீண்டும் வந்து நீர் தெளிக்கிறார்.பூஜைமுடிகிறது, தூண் உச்சியில் எறிந்துகொண்டிருந்த விளக்கு, கிழே ஒரு கவணிலிருந்து இருந்து லாகவகமாக வீசப்படும் கவண் கல்லால் அணைக்கப்படுகிறது.
பிராதான மண்டபத்தினுள் நுழைந்ததும் நம்மை கவர்வது அழகான டிசைன்களுடன் தொங்கும் கண்ணைப் பறிக்கும் பல பட்டு திரைச்சீலைகள் தான். அந்த மடத்தின் கடந்த தலைமுறை மடத்தலைவர்களின் ஒவியங்கள் வண்ண கண்ணாடி விளக்குகள் எனஆடம்பரமாக இருக்கிறது. 1001 குட்டி தங்க புத்தர்கள். நடுவில் பிரம்மாண்டமாக புத்தரின் சன்னதி. அருகில் பிராத்தனை சக்கரங்களை உருட்டிக்கொண்டு பிட்சுகள், இளம் மாணவர்கள்.சுவர்களில் திபெத்திய எழுத்துக்கள். பறக்கும் தொப்பி பற்றி விசாரிக்கிறோம்.அடுத்தஅறையை காட்டுகிறார் ஒரு துறவி. உள்ளே, பட்டு துணியால் மூடப்படிருக்கும் ஒரு அழகான மரபெட்டி.' “தொப்பியை பார்க்கமுடியாதா?” என்ற நமது கேள்விக்கு எடுத்தவுடன் தலைவர் அணிந்துகொள்ள வேண்டிய அதை அவர் இல்லாதபோது எடுத்தால் பறந்துபோய் விடும் என்பதால் திறப்பதில்லை என்ற அந்த இளம் துறவியின் பதிலை கேட்டு நமக்கு சிரிப்பு எழுகிறது.தெய்வ சன்னிதானமாக் போற்றப்படும் அந்த இடத்தின் சூழ்நிலை நம்மைக்கட்டுப்படுத்துகிறது.
மெல்ல இரவு பரவும் அந்த பொழுதில் காண்டக் நகருக்கு திரும்புகிறோம்.  பறக்கும்தொப்பியை பார்க்கமுடியாததைப்பற்றி அந்த கைடு இடம் சொன்னபோது .  தொப்பி இருக்கும் விபரத்தைதான் சொன்னே தவிர  பார்க்க முடியம் என்று    சொல்லவில்லையே   என்ற அசத்தலான பதிலைச்சொன்னவர்  கவலைப் படாதீர்கள் இன்று இரவு கனவில் அதைப் பார்ப்பீர்கள் என்றார்.
நம்புங்கள் அன்று கனவில் அந்த தொப்பி வந்தது.
(கல்கி 06.062010)

பார்த்ததை படங்களுடன் பகிர்ந்து கொள்பவர்
                                                     ரமணன்