26/11/12

ஒலியின் வேகத்தில் பயணித்த மனிதன்


                                                   ”கேர்ள் பிரண்டுடன் செட்டிலாகபோகிறேன்

ஒலியின் வேகம் மணிக்கு 1,236 கி.மீவிசேஷமாக வடிவமைக்கப்பட்ட சூப்பர்ஸானிக் போர்விமானங்கள் மட்டுமே பறக்க கூடிய இந்த வேகத்தில், வான்வெளியில்  ஒரு மனிதன் தனியாக பயணிக்க முடியுமா? இந்த வேகத்தில் பறக்க அல்லது மிதக்க வேண்டுமானால் முதலில் அந்த மனிதன்  30 கீமீ உயரத்திலிருந்து குதிக்க வேண்டும். (விமானங்கள் பறக்கும் உயரம் 12 கீமீ) சுவாசிக்க தகுந்த காற்றழுத்தம் இல்லாத அந்த நிலையில் அந்த உயரத்தில் 15 வினாடியில்,முளைசெயலிழந்து, உடலில் உள்ள திரவங்கள் ஆவியாகி மரணம் நிச்சியம் எனபதால் இது எவராலும் முடியாத விஷயம் என்று கருதபட்டது. இதை செய்து காட்டி உலக சாதனை செய்திருப்பவர் பெலிக்ஸ் பாம்கார்ட்னர் என்ற 43 வயது ஆஸ்திரி நாட்டு முன்னாள் பைலட். அமெரிக்காவில் செட்டில் ஆனாவர்.. இவர் அமெரிக்காவின் நியூமெக்சிகோ மாநிலம் ரூஸ்வெல் நகர மைதானத்தில் அக்டோபர் 14 ஆம் தேதி  சுமார் 39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து  வான் வெளியில் பாய்ந்து  மிதந்து  பத்திரமாக தரையிறங்கினார்.
எப்படி இதை செய்தார்?.

19/11/12


இந்தியா வந்த

இரும்பு பட்டாம்பூச்சி

திருமதி ஆங்சான் சூ சி, பர்மா என்று நீண்ட நாள் அறியபட்டிருந்த நம் பக்கத்துவீட்டு மியான்மர் நாட்டின் பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர். மியான்மர் நாட்டினையே உலகில் பலர் தெரிந்துகொள்ள காரணமாகயிருந்தவர். காரணம் தன் நாட்டில் ஜனநாயகத்தை நிலை நிறுத்த போராடியதற்காக 15 ஆண்டுகள்   சிறையிலிருந்தவர். சிறையிலிருக்கும்போதே அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கபட்டு, அதை சென்று வாங்க  ஆட்சியாளார்களால் அனுமதி மறுக்கபட்டவர், உலகில் அரசியல் காரணங்களுக்காக நீண்ட நாள் தண்டனை பெற்ற ஒரே பெண்மணி.  மெலிந்த உடல்,மென்மையானகுரல்,67வயது முதுமையை காட்டாத முகம் கொண்ட இவர் பார்க்க பட்டாம்பூச்சியாக இருந்தாலும் இரும்பு மனுஷி.  சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். 19 ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கபட்ட ஜவர்ஹலால் நேரு அமைதி பரிசை பெற்றுகொள்ள மேற்கொண்ட பயணம்.இம்மாதிரி பரிசுகளை ஏற்கும் உரையில் இந்தியாவை புகழ்ந்து தள்ளுவார்கள்.
”அண்ணல் காந்தியடிகளின் வழியில் நேருவை முன்னூதரணமாக கொண்டு நாங்கள் போராடிய காலங்களில் இந்தியா எங்களை கண்டுகொள்ளவில்லை” என்ற இவரது பேச்சு அதிர்வலைகளை உண்டாக்கின,

இந்தியா சுதந்திரபோராட்டத்தை தொடர்ந்து விடுதலை வேட்கை  வேகமாக பரவிய நாடுகளில் அன்றைய பர்மாவும் ஒன்று. அதன் அரசியல் தலைவர்களில் ஒருவர் ஆங் சான். நாட்டை அன்னியர்களிடமிருந்து காக்க வலிமையான  ஒரு ராணுவத்தை உருவாக்க முயன்றுகொண்டிருந்தவர்.ஒரு நாள் படுகொலை செய்யபட்டார். அவருடைய ஒரே மகள்தான்  சூ சி. தாயினால் வளர்க்கபட்ட இவர் வளரும்போதே போராட்டங்கள் பல வற்றை சந்தித்தவர். டெல்லியில் 

14/11/12

நம்பிக்கை ஜெயித்திருக்கிறது


.மக்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள்  ஒபாமா ஜெயிப்பது சந்தேகம், ரோம்னி  மிகக்குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயிக்கபோகிறார்” என்ற கருத்து கணிப்புகளையும் மீடியாக்களின் அரசியல் ஆருடங்களையும் பொய்யாக்கி விட்டார்கள் அமெரிக்க மக்கள். அதிபர் ஒபாமா அடுத்த 4 வருடங்களுக்கு வெள்ளை மாளிகையை காலிசெய்ய வேண்டிய அவசியமில்லாமல் செய்திருக்கிறார்கள். வெற்றி பெறுவதற்கு 270 பிரதிநிதிகளின் ஓட்டு தேவை என்ற நிலையில் ஒபாமா பெற்றது 303 ஓட்டுக்கள். அமோக வெற்றி.
<

12/11/12

வாழ்க வளமுடன்


வாழ்க வளமுடன்

11 11 12 காலை 7 மணி. ஹிந்துவை குடித்துகொண்டு,காபியை பார்த்துகொண்டிருந்தபோது,சிணிங்கிய செல் சொன்னது “வாழ்க வளமுடன் உங்கள் பிளாக்கின் முதலாண்டு நாள் நல்வாழ்த்துக்கள்” சொன்னவர் திரு குருமூர்த்தி. என் உறவினர்.(அத்தையின் மகன்). என் தந்தையின் அன்புக்கு பாத்திரமானவர். குடும்பத்தின் இரண்டுதலைமுறையினரையும் அறிந்தவர் மாலனுடைய, என்னுடைய எழுத்துக்களை கவனித்து படிப்பவர்.

முன்னாள் சைனிக் பள்ளி தலமையாசிரியரான இவர், இன்று காலத்தின் கட்டாயமாகிவிட்ட இண்ட்ர்நெட்டை கையாளுவதை தனது இளைய தலைமுறையினரிடம் மாணவராகி கற்று கொண்டு தமிழ் பிளாக் களைப்படிக்கிறார். நண்பர்களுக்கும் அறிமுகபடுத்துகிறார். இந்த 70+ இளைஞர்.
இவரைப்போல இன்னும் சில நண்பர்கள் வாழ்த்தியதோடு, ஆழம் பத்திரிகையில் எழுதுவது போல் சீரியஸான விஷ்யங்கள் நிறைய  எழுதுங்கள் என்றனர்.
படித்தவர் சொல்ல கேட்பதுதான் எழுதுபவனின் சந்தோஷம். அதை தந்த நண்பர்களுக்கு நன்றி


10/11/12

பிஹாரிலிருந்து ஒரு பெண் பிரதமர்.

வேர்களைத் தேடி...

(என் சகோதரர் ராஜன் இது பற்றி எழுதலாமே என்று ஒரு பெரிய்ய்ய்ய்ய ஆஞ்னேயரின் படத்தை மெயிலில் அனுப்பியிருந்தார். அது பற்றி செய்த ஆராய்ச்சியில் கிடைத்தது இது)

டிரினிடாட்டூபகோ  (Trinidad and Tobago) ஆப்பிரிக்க கண்டத்தின் வட கோடியில் இருக்கும் சின்னஞ்சிறு  இரண்டு தீவுகள் இணைந்த ஒரு குட்டி நாடு. கர்பீனிய தீவு கூட்டங்களிடையே இருக்கும் இந்த  இயற்கை எழில் கொஞ்சும் தீவுகளின் அழகான கடற்கறையின் இதமான சூழலில்


ஆடம்பரஹோட்டல்களும்,ரிசார்ட்களும் இருப்பதால் பணக்காரர்கள் விரும்பிச்செல்லும் ஒரு சுற்றுலாத் தலம். உலகின் பணக்கார தேசங்களின் பட்டியலில் 40 வது இடத்திலிருக்கும்   இந்த  குட்டி தேசம் நீண்ட காலம் பிரிட்டிஷ் காலனியாக இருந்து சுதந்திரம் அடைந்த்து. சமீபத்தில்  தங்களுடைய 50 வது சுதந்திர  தினத்தை பிரமாதமாக கொண்டாடியது.
  இருநூறு ஆண்டுகளுக்கு முன் இங்கு குடியேற்றப்பட்ட தொழிலாளர்களில் பலர் இந்தியர்கள் அதில் அதிகமானவர்கள் தமிழர்கள்.   இங்கு இந்திய வம்சாவழியில் வந்தவர்கள் பலருக்கு இன்னமும் இந்தியப்பெயர்கள் தொடர்கின்றனநாட்டின் இன்றைய  பிரதமர் தான், அந்த நாட்டின் முதல் பெண்பிரதமர். இந்திய வம்சாவளியில் வந்தவர். பெயர் கமலா. பிரசாத். இவருடைய மூதாதயைர்கள் பிஹார் மாநிலத்தவர்கள். தோட்ட தொழிலாளிகளாக குடியேறியவர்கள்டிரினிடாட்டில் பிறந்து வளர்ந்து லண்டனில் மேற்படிப்புபடித்து  வழக்கறிஞராக வாழக்கையைத் துவக்கி நாட்டின் அட்வேகேட் ஜெனரலாக உயர்ந்தபின்னர் அரசியலுக்கு வந்தவர். எதிர்கட்சி தலைவராக இருந்தவர் 2010ல் நடந்த தேர்தலில் நாட்டின் பிரதமரானார். கணவர்  கிரிகாரிபிஸ்ஸிஸ்ர் (Gregory Bissessar)  பிரபல டாக்டர்.
டிரினிடாட்டில் பல இந்திய வம்சாவளியினர் வாழ்வதால் நிறைய இந்து கோவில்கள் இருக்கின்றன.  தலைநகர் போர்ட் ஆப் ஸ்பெயின் நகருக்கு அருகில்  சாகுணாஸ்(Chaguanes) எனற  நகரின் நடுவில் நிற்கும்  85 அடி ஆஞ்நேயர் மிகவும் பிரபலம்.  இதை வெளிநாட்டு டூரிஸ்ட்களை தவறாமல் அழைத்துவந்து காட்டுகிறது நாட்டின் சுற்றலாதுறை. நாட்டின் 50 வது சுதந்திர நாளான்று எல்லாவழிபாட்டு தலங்களிலும் பிரார்த்தனை செய்யப்பட்டது.  இந்த ஆஞ்நேயர் 2003ல் நிறுவபட்டபோது செய்யபட்டதைப்போல   நாட்டின் 50வது சுதந்திர நாளன்றும் பிரதமர் முன்னிலையில் ஹெலிகாப்டரிலிருந்து பாலாபிஷேகம் செய்திருக்கிறார்கள். இந்த ஆஞ்நேயர் அங்குள்ள பெரிய காரியசித்தி ஆஞ்நேயர் கோவில் முன்னால் கடலை பார்த்த வண்ணம் நிறுவபட்டு  மைசூர் கணபதி சச்சிதினாந்தா ஸ்வாமிகளினால்  முதலில் பூஜிக்கபட்டு அர்ப்பணம் செய்யபட்டிருக்கிறது. கடந்த ஆண்டு நிகழந்த அனுமந்த ஜெயந்தி பூஜைகளில் பிரதமர்  கமலா பங்கேற்றியிருக்கிறார்.

 திருமதி கமலா பிரசாத் இந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவிற்கு தனது வேர்களை தேடி வந்தார். பாட்னா அருகிலிருக்கும்  122 வீடுகளுடன் 900 பேர்களே வசிக்கும்  பேஹல்பூர் என்ற மிக சின்னஞ்சிறிய கிராமம் தான் தன் மூதாதையர்களுடைய ஊர் எனபதை அறிந்து அங்கு தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் சென்றார். சிவப்பு பட்டுச் சேலையும் நெற்றியில் பொட்டுமாக ஹெலிகாப்படரில் வந்து இறங்கிய இவரை முதலில் அந்த கிராம மக்கள் டெல்லியிலிருந்து வரும்ஏதோ ஒரு  அரசியல் வாதி எனறு  எண்ணிவிட்டனர். கிராம தலைவர் சாங்கோபாங்கமாக  இவரது கொள்ளுதாத்தா ராம் லக்கன் மிஸ்ரா  நம்மூர்காரர், 1889ல் கல்கத்தா போய்  கப்பலில் தீவு சீமைக்கு போனதையும் உள்ளூர் உறவையும்,  இப்போது அவர் வகிக்கும் ஒரு நாட்டின் பிரதம்ர் பதவியையும்பற்றி சொன்ன பின்னர்  மக்களுக்கு சந்தோஷம் தாங்கவில்லை, அவரது முன்னோர்வழிஉறவான சின்ன மாமா தாத்தாவின் வீட்டை அடையாளம் காட்டினார்கள்.   கல்பாவிய சின்ன சந்தில் நடந்து அந்த வீட்டுக்கு போனபின் தன் உறவினர்களை அடையாளம் கண்டபோது கண்ணீர் மல்க சொன்னதுஇது என் வாழ்வின் சந்தோஷமான நாள். உலகில் நான் எங்கு இருந்தாலும் என் உடலில் ஓடுவது பிஹாரியின் ரத்தம் எனபதை நான் மறக்க வில்லை.”  பிரதமர் கமலாவிற்கு ஹிந்தி  தெரியாது. ஆங்கிலத்தில்  எழுதி வந்த நமஸ்த்தேபாயி அவுர் பஹனோ, தன்யவாத் போன்றவார்த்தைகளுடன் அவர் ஆங்கிலத்தில் பேசியதை பீஹார் அரசு அதிகாரி மொழிபெயர்த்தார்.  ”என்னுடைய மூதாதையர்கள் இந்த மண்ணிலிருந்து வந்த போது தங்கம்,வெள்ளி பணம் எதுவும் கொண்டுவரவில்லை. தங்கள் உழைப்பை நம்பிய அவர்கள் கொண்டுவந்தது, ரமாயாணம், பகவத்கீதை புத்தகங்கள் தான். அதன் மூலம் எங்களுக்கு இந்த தேசத்தின் மாண்பும் பண்புகளும்  படிப்பின் அவசியத்தோடு கற்பிக்கபட்டது. நீங்களும் உங்கள் குழந்தைகளை நன்றாக படிக்கவையுங்கள். என் பெறோர்கள் எங்களை படிக்கவைத்ததினால் தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன்,” என்ற அவரது  உணர்ச்சி மிகுந்த  பேச்சை கேட்டு நெகிழ்ந்து போன மக்கள்  நீண்ட நேரம் கைதட்டியதோடு ஊர் மக்கள் அனைவரும்   ஹெலிகாப்டர் வரை வந்து வழியினுப்பியிருக்கிறார்கள்.

தனது பரம்பரையின் வேர்களை தேடி இந்தியாவந்து  சுற்றதிடம் தன் நேசத்தை காட்டியிருக்கும் இந்த பெண்மணி  நம் மனதில் அவர்கள் ஊர் ஆஞ்நேயரை விட மிக உயர்ந்தவராக பதிகிறார்