31/1/13

சோதனைகளை சாதனைகளாக்கிய தொழில் சக்ரவர்த்தி


சவாலே சமாளி  1


“நீ  உன் ஐபிஎம் வேலையை ராஜினாமா செய்துவிட்டு உடனே இங்கே வா. நமது கம்பெனிகளில் நீ செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது” என்று மாமாவிடமிருந்து வந்த அந்த தந்தியை பார்த்து திகைத்து நின்றான் அந்த இளைஞன். படிப்பின், உழைப்பின் அருமை தெரிந்த ஒரு பணக்கார இந்திய குடும்பத்திலிருந்து வந்து அமெரிக்காவில்  கட்டிடகலை படித்த உடனேயே ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல  வேலையும் கிடைத்திருந்த அந்த இளைஞனின் ஆச்சரியத்திற்கு காரணம் அவனை அமெரிக்காவிற்கு படிக்க அனுப்பியதே அவனுடைய மாமா தான். திரும்பிபோக தயங்கியதற்கு மற்றொரு காரணம் கல்லூரி இறுதியாண்டில் அரும்பிய காதல் அபோதுதான் மலர்ந்திருந்தது. காதலி  இந்தியா வரத்தயாராகயில்லை. குடும்பத்தொழிலா? காதலா? என்ற நிலையில்  அந்த இளைஞன் எடுத்த முடிவு காதலை துறந்து மாமாவின் விருப்படி நாடு திரும்புவது. காரணம் சிறுவயதில் தாயும் தந்தையும் பிரிந்ததால் பாட்டியால் வளர்க்க பட்ட அவனுக்கு மாமா ஜே ஆர் டி டாட்டா தான் எல்லாம். அவர் வார்த்தைகள் அவனுக்கு வேதம். அந்த இளைஞன் தான் இன்று 98 கம்பெனிகளுடனும் 3,95,000 ஊழியர்களுடனும் உலகெங்கும் பரந்துவிரிந்து கொண்டிருக்கும் டாட்டா சாம்ராஜ்யத்தின் தலைவர் ரத்தன்டாட்டா. கடந்த 10 ஆண்டில் டாட்டா நிறுவனத்தின் வளர்ச்சியை 12 மடங்கு உயர்த்தி பல ஆயிரம் கோடி கம்பெனியாக்கியிருப்பது (கடந்த ஆண்டு வருமானம் 67 பில்லியன் டாலர்கள்-ஒருபிக்கியன் 100கோடி) இவரது சாதனை. அந்த சாதனைகளுக்கு பின்னால்  இவர் சந்தித்த சோதனைகளும்  நெருக்கடிகளும் சவால்களும் பிரச்சனைகளும் ஏராளம்.
1962ல் இந்தியா திரும்பிய உடன்கொடுக்கபட்ட வேலை ஜாம்ஷெட்பூர் உருக்கு ஆலையில் தொழிலாளர் பணி. சுண்ணாம்பு கற்களை கொதிகலனில் இடுவதிலிருந்து எல்லா வேலையும்.  டாடா நிறுவனத்தில் உயர் பதவிக்கு போகபோவருக்கு  அவர் நிறுவனரின் குடுமபத்திலிருந்து வந்தவரானாலும் எல்லாம் சரியாக தெரிந்திருக்கவேண்டும் என்று அவருக்கு சொல்லபட்டது நீண்ட பயிற்சிகளுக்கு பின் அதே ஆலையில் மேலாளாராக இருந்தவரை நிறுவன தலைவர் ஏற்க சொன்னது டாட்டாவின் ரேடியோ மற்றும் மின்பொருள் தயாரிக்கும் நெல்கோ நிறுவனத்தை, நஷ்டத்தில் 2 சதவீத மார்கெட் ஷேருடன் இயங்கிகொண்டிருந்த அதை 25 %மாக உயர்த்தி லாபம் ஈட்டும்கம்பெனியாக்கி காட்டியவருக்கு அதை மேலும் உயர்த்தமுடியாமல்  நெருக்கடி நிலை பிரகடனம் என்ற அரசியல் சூழ்நிலை குறுக்கிட்டது. தொடர்ந்து வந்த தொழிற்சங்கபிரச்னைகளினால் டாடா நிர்வாகம் அந்த நிறுவனத்தை மூட முடிவுசெய்துவிட்டது.  அதற்காக வருந்தினாலும்  மனமுடைந்துபோகாமல்  ரத்தன் கேட்ட கேள்வி எனது அடுத்த சவால் என்ன? பாம்பாயில் ஒரு நலிந்துகொண்டிருந்த துணிஆலையின் பொறுப்பு அவருக்கு கொடுக்க பட்டது. ஊழியர்களை குறைத்து, இயந்திரங்களை நவீனபடுத்தி உற்பத்தியை பெருக்கும் அவரது யோசனைகளை நிர்வாகம் ஏற்கவில்லை.. இறுதியில் அந்த ஆலை மூடபட்டது. “ அன்று எனக்கு ஒரு 55 லட்சம் தரப்பட்டிருந்தால் அது இன்று நாட்டின் சிறந்த துணி ஆலையாகியிருக்கும் என எழுதுகிறார் ரத்தன். தொடர்ந்த போராட்டங்கள், தோல்விகளிலிருந்து ரத்தன் டாட்டா புரிந்துகொண்ட விஷயம் இந்த நிறுவனம் புதுமைகளை ஏற்க தயங்கிறது. ஆனாலும் அடுத்த சவாலாக அவர் ஏற்றது அவர்களின் மோட்டார் தயாரிப்பு நிறுவனம், அந்த கால கட்டத்தில்1991ல் நிறுவன சேர்மன் ஜேஆர்டி டாட்டா தனக்கு அடுத்த சேர்மனை தேர்ந்தெடுக்கபோவதாக அறிவித்திருந்தார்.. நீண்ட நாள் டாட்டாவில் பணியிலிருந்த ருஸிமோடி, பல்கிவாலா, அஜித்கேல்கர் போன்றவர்களிலிருந்து யாரவது அறிவிக்கபடுவார் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் அவர் தேர்ந்தெடுதெடுத்தது ரத்தனை. இதை எதிர்பார்க்காத அவர்கள் ரத்தன் டாட்டாவிற்கு நல்ல ஒத்துழைப்பு கொடுக்காமல்  “ஒன்றும் தெரியாத  அந்த சின்னபையனை தங்கள் பிடியில் வைத்துகொள்ள“ முற்சித்தனர். ரத்தன் டாட்டா சந்தித்த மிகப்பெரிய சோதனையிது. டாட்ட நிறுவனத்தில் எவரும் நீக்கபடுவதில்லை. ராஜினாமாதான் செய்வார்கள். நிறுவனத்துடன் வளர்ந்தவர்களை, அதை வளர்த்தவர்களை தான் மதிப்பவர்களை  காலத்தின் கட்டாயத்தை புரிந்துகொளாததால் அவர்களை அதை செய்யவைத்தார். குழுமத்தில் லாபத்தில் இயங்காத பல கம்பெனிகளை மூடினார். எல்லா கம்பெனிகளுக்கும் திறமையான இளம் நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து அமர்த்தினார். இந்த அதிரடி மாற்றங்கள் இந்திய தொழிற்துறையையே ஆச்சரியத்தில் ஆழத்தியது. மெல்ல எல்லா நிறுவனங்களும் லாபம் ஈட்டின. கம்ப்யூட்டர் நிருவனமான டிசிஸ்  உலக அளவில் புதிய உயரங்களை தொட்டது.

ஒரே ஸ்கூட்டரில் 4 பேர் பயணம் செய்யும் காட்சியை அடிக்கடி கண்டபோது இந்தமட்டத்திலிருப்பவர்களுக்கான ஒரு சின்ன காரை லட்சரூபாயில் நனோ என்ற பெயரில்  இவர் அறிவித்தபோது அது எப்படி சாத்தியமாகாது என்று சொன்னவர்கள்தான் அதிகம். மேற்கு வங்காளத்திலிருந்த கம்யூனிசஅரசு வேலை வாய்ப்பை அதிகரிக்க கேட்டுகொண்டதின் பேரில் அங்கு அதற்காக துவக்கப்படவிருந்த தொழிற்சாலையை தொடர்ந்து வந்த ஆட்சிமாற்றத்தால், அரசியல் மாச்சரியங்களினால் நிறுத்த வேண்டிய நிலை எழுந்த்ததுதான் இவருக்கு வந்த அடுத்த சோதனை. அசரவில்லை ரத்தன் உடனடியாக முழுதொழிற்சாலயையும் குஜராத்தில் நிறுவி தந்து கனவு காரான நானோவை 2008ல் மார்கெட்டுக்கு கொண்டுவந்தார்.  டிமாண்ட் அதிகம் இருக்கும் கார்களுக்கு பதிவு செய்யும்போது முன்பணம் செலுத்துவது வழக்கம். நானோவிற்கு முழுபணமும் கடன் வாங்கி செலுத்தி குலுக்கல் முறையில் பெற்று கொள்ள மக்கள் தயாராகிருந்தனர். அறிவிப்பு வந்தவுடன் அப்படி புக் செய்தவர்கள் 2 லட்சத்திற்கும் மேல். நிருவனம் பெற்ற பணம் 2500 கோடிகள். சந்தேக பட்டவர்கள், சவால்விட்டவர்கள்  எல்லாம் சத்தமில்லாம்ல் அடங்கிபோனார்கள்.  உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்த நிதி தரம் வழங்கும்  உலக நிறுவனங்கள் டாடா நிறுவனத்தின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை புரிந்துகொண்டது. நிறுவனத்தின் 100 ஆண்டு பராம்பரியம், மக்களின் நமபிக்கை அரசின்  “உலகமயமாதல்” கொள்கையினால் எழுந்த வாய்ப்புகளை பயன்படுத்த இது உதவியது. டாட்டா சாம்ராஜ்யத்தின் எல்லைகள் உலகின் பலநாடுகளுக்கு விரிவடைந்தது, சிறிதும் பெரிதுமாக பலநாடுகளில் நிறுவனங்கள் வாங்கபட்டன.  இன்று 80 நாடுகளில் இயங்குகிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்த மிகப்பெரிய, ஏகபோக இரும்புத் தொழிற்சாலை நிறுவனமான கோரஸை’’யும், உலகப் புகழ் பெற்ற ஜாகுவர் மற்றும் லேண்ட் ரோவர் என்ற கார்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையையும் பலத்த போட்டிக் கிடையே பெரும் விலை கொடுத்து   வாங்கியது. உலகின் பெரிய வங்கிகள் கடன் உதவி செய்தது. இதன் மூலம் டாடா உலகின் 5வது பெரிய இரும்பாலைக்கு சொந்தமானது.
தொடர்ந்து பிரச்னைகளை வெற்றிகரமாக சமாளித்த ரத்தன்டாட்டா வை தேடி வந்த அடுத்த சோதனை இது., இலாபத்துடன் இயங்கி வந்த இந்த நிறுவனங்களை டாட்டா வாங்கியபொழுது, அடுத்த ஒரே ஆண்டில் உலகப் பொருளாதாரமே அதல பாதாளத்தில் விழுந்துவிடும் எனக் கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். 2008-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கார் விற்பனை படுத்துப்போனதால், ஜாகுவர் லேண்ட் ரோவர் கார் தொழிற்சாலையை இழுத்து மூடிவிட வேண்டிய அபாயம் ஏற்பட்டது. சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு கடன் செலுத்த முடியவில்லை. இந்த சோதனையை ரத்தன் வென்றமுறை உலகத்தையே திரும்பி பார்க்கவைத்தது. ”இது உங்கள் நாட்டிலிருக்கும் இருக்கும் தொழிற்சாலை. பல ஆயிரகணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்காமல் காப்பாற்ற  நீண்ட கால கடன் உதவிசெய்யுங்கள்” என  தொழிளார்கள் யூனியன்களுடன் இணைந்து  இங்கிலாந்து அரசிடம் வேண்டினார். முதலில் மறுத்த அரசு  பின்னர் உதவியது,
ஒரு நிறுவனத்திற்கு பிர்ச்னைகள் எங்கிருந்தும் வரலாம், பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள் மும்பை தாஜ்ம்ஹால் ஹோட்லை 2008 தாக்கி எரித்த விபத்தில் டாடாவிற்கு நேர்ந்த்து வெறும் பொருளாதார இழப்பு  மட்டுமில்லை. பாதுகாப்பு இல்லாத ஹோட்டலென்ற அவப்பெயரை எற்படுத்திவிடக்கூடிய அபாயமும்கூட. சுற்றுலா பயணிகளின் நம்பிக்கையை தொடர்ந்து பெற வேண்டியது சவால். தாக்கபட்ட 8மாதங்களில் புதுபிக்கபட்ட ஹோட்டலில் அடுத்த ஆண்டு வந்து தங்கியவர் அமெரிக்க அதிபர் ஒமாமா. இதற்கான பப்ளிக் ரிலேஷன் முயற்சிகளை முன்னின்று செய்தவர் ரத்தன்.
எந்த பிரச்னைகளையும் எதிர் கொண்டு அயராது உழைத்து வெற்றிகண்ட ரத்தன் டாடா கடந்த மாதம்  தன் 75 வது வயதில் ஒய்வு பெற்று விட்டார். ஓய்வை எப்படி கழிக்க போகிறார்? “ அதுதான் நான் இப்போது சிந்தித்துகொண்டிருக்கும் அடுத்த பிரச்னை” என்கிறார்.


கல்கி03/02/13

29/1/13

புத்தரின் மகள் !


நாங்கள் வசிக்கும் கீரின் ஏக்கர்ஸில் ஒவ்வொரு வருடமும் GARDEN (green acres residents dinner and entertainment night) கொண்டாவோம். ஒரு பொரபஷனல் கலைஞரின் நிகழ்ச்சியும் ஒரு இன் ஹவுஸ் நிகழ்ச்சியும் இருக்கும். இம் முறை கார்த்திக் என்ற இளைஞனின் தீமாட்டிக் கான்ஸ்ர்ட். .
கர்னாடிக், வெஸ்ட்டர்ன் கிளாசிக், சினிமா என வயலினிலும் வாய்பாட்டிலும் கலக்கிட்டார் கார்திக். சாப்ட்வேர் எஞினியர்  கம்ப்யூட்டர் ப்ரொகிமர் வேலையை விட இந்த மியூசிக் ப்ரொகிராம்கள் படித்திருப்பதால் வேலையைவிட்டுவிட்டு வயலின் வாசிக்கிறார்.
அதே இரவில் எங்கள் ஜிஏ மகிளிர் ஒருஹிந்தி  நாட்டிய நாடகம் நடத்தினார்கள். மன்னன்  சித்தார்த் மனம் மாறி துறவறம் பூண்ட ”மஹாராத்திரி”. அதில் சித்தார்த்தின் மகன் ராகுலாக நடிக்க பார்கவியை அழைத்தார் அதன் டைரக்டர். ஒரு சில நிமிடங்கள் மட்டுமே  வர வேண்டிய காட்சி வெறும்அபிநயம் மட்டும் என்பதால் அவளுக்கு ரிகர்ஸல் கிடையாது. மேடையேறும் முன் ஒரு சின்ன பிரிபிங் போதும் என்றார்.  (பார்கவியின் திறமையில் டைரக்டர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை)   தான் செய்ய வேண்டியதை  அவர்கள் சொன்ன போது கவனமாக கேட்ட பார்கவி சொன்னது  “ நான் பிரின்ஸ்ஸ் ஆகதான் வருவேன் என்னிடம் ராணி டிரஸ் இருக்கிறது. பாய்ஸ் டிரஸ் வேண்டாம்” என்றாள்.  அவள் மனதை மாற்ற முயன்று தோற்ற டைரக்டருக்கு இவளை விடவும் மனமில்லை.  அவர் சரி நீ ராணீதான் உன் டிரஸையே போட்டுக்கோ என்றார். ராகுலை எப்படி இவர் இளவரசியாக மாற்றுவார் என்று நினைத்துகொண்டிருந்தேன்.
”அப்பா ஏன் விசனமாகயிருக்கிறார்?” என்ற ராகுலின் கேள்விக்கு அவன் அன்னை தரும் பதிலை நம்பாமல் நீ பொய் சொல்லுகிறாய் என கோவித்துகொண்டு அன்னை தள்ளிவிடுவது காட்சி. அதை பார்கவி செய்தபோது எல்லோரும் ரசித்து கைதட்டினார்கள்.

 
நாட்டிய நாடகமாதலாலும் பார்கவிக்கு வசனமில்லாதலும்  அவள் ராகுல் என  அம்மாவால் அழைக்கபட்டபோது கூட  அந்த ராஜகுமாரன் தான் என்பது அவளுக்கு புரியவில்லை.
பிரின்ஸெஸ் ஆக நடித்துவிட்டோம் என பார்கவியும் காட்சி நன்றாக போனது என டைரக்டரும் சந்தோஷபட்டு கொண்டார்கள்.
இறுதியில் ”இளவரசனாக வந்த இளவரசிக்கு” என பரிசு கொடுத்தபோது அதன் அர்த்தம் எத்தனைபேருக்கு புரிந்ததோ.?
கார்திக்கின் இசையின் ஒரு பகுதியை யை இந்த லிங்க்கில் கேட்கலாம்

20/1/13

புத்தகத்தினால் பெற்ற புதிய அனுபவம்சென்னை புத்தக கண்காட்சி இம்முறை மிக பிரம்மாணடானதாக  560 
ஸ்டால்களுடன் சென்னையிலியே பெரிய கிரவுண்டான YMCA கிரவுண்டில் நடைபெறுகிறது. நேற்று 19/01/13 நல்ல கூட்டம் லட்சம் பேர் !
கார்பார்க் நிரம்பி வழிந்தது. பார்க்கிங்க்கு வசூலித்த பணத்திற்கு இறங்கி 1 கீமி நடக்கும் பயிற்சியியையும் இலவசமாக தருகிறார்கள். 1975ல் முதல் கண்காட்சி செயிண்ட் அப்பாஸ் பள்ளிகூடத்திலும் பின் மவுண்ட்ரோடு 
ஆர்ட்ஸ் காலேஜிலும் மாலன், சுபரம்ணிய ராஜுவுடன் பார்த்த நினைவுகள் வந்தது. நேற்று வந்தவர்களில் 25% பேர் ஆளுக்கு இரண்டு புத்தகம் 
வாங்கியிருந்தால் கூட விற்பனை ஸுப்பர் ஹிட் படத்தின் முதல் நாள்  கலெக்கஷனைத் தாண்டியிருக்கும்.
கடந்த ஆண்டு வெளியான் என்னுடைய எப்படி ஜெயித்தார்கள்? இரண்டு பதிப்புகளை தாண்டியிருக்கிறது. இந்த கண்காட்சியில் புதிய
 தலைமுறை ஸ்டாலில் அவர்கள் வெளியிட்ட புத்தக ஆசிரியர்களை நாளொன்றுக்கு ஒருவராக அழைத்து வாசகர்களை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தார்கள். மாலன், பிரபஞ்சன் இறையன்புவரிசையில் என்னையும்அழைத்து கெளரவித்திருந்தார்கள். புத்தக ஆசிரியராக ஸ்டாலில் அமர்ந்து வாசகர்களை சந்தித்தது புதிய  இனிய அனுபவம். ”வாங்காதவர்கள் புஸ்தகத்தோடு நம்மையும் சேர்த்து வேடிக்கை பார்ப்பார்கள்” என்று சுஜாதா சொன்னது நினைவிற்கு வந்தது.
புத்தகம் வாங்கி கையெழுத்து வாங்கியவர்களில் பலர் இந்த தொடரை படிக்காதவர்கள். விமர்சனங்களையும் விளம்பரங்களையும் பார்த்து வாங்கியவர்கள் வங்கி நண்பர்கள், பேராசியர், டாக்டர் என பலவிதமானவர்களை சந்தித்தேன்.. கடந்த வாரம் துவங்கியிருக்கும் தொடர் பற்றி ஒரு பெண்மணி பேசியது ஆச்சரியம்  இந்த வாய்ப்புக்கும் கெளரவத்திற்கும் புதிய தலைமுறைக்கு நன்றி.
ஸ்டாலில் மிக சுறுசுறுப்பாக ”ஒரு புதிய தலைமுறையே” இயங்கி கொண்டிருக்கிறது. திருமதி கீதா விருந்தினர்களை இன்முகத்தோடு வரவேற்று இயல்பாக உரையாடுகிறார்.”கல்வி”யின் இணைஆசிரியர் பொன். தனசேகரணை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. கல்வியின் பழைய இதழ்களை கேட்டு வாங்கிப் போகிறார்கள். ஸேல்ஸ் டீம் விற்பனையோடு நிற்காமல்  கேட்பவர்களுக்கு விபரங்களையும் பொறுமையாக தருகிறார்கள். புதிய தலைமுறையின் வெற்றியில் இந்த இளைஞர் பட்டாளத்திற்கும் ஒரு பங்கு இருப்பது புரிந்தது. நண்பர் ஹரிபிராஸாத் மாலையில் எடுத்து இரவே அனுப்பிய படங்களில் சில இவை.
தாங்க்யூ வெரிமச் ஹரி 
posters/ads

17/1/13

ஒரே ஒரு அடியில் திரும்பி வந்த உயிர்.


கல்கத்தாவிலிருந்து சென்னை வந்த கொண்டிருந்த அந்த விமானத்தில் கிளம்பிய அரை மணிக்குள் ஒரு பயணி மயங்கி விழுந்து நினைவிழந்தார். நாடிதுடிப்பு நின்று உடல் சில்லிட்டு போய்கொண்டிருந்தது.   அந்த பயணியின் கைநாடியில் மட்டுமில்லை கழுத்துபகுதியில் கூட துடிப்பு இல்லை. அவரது மனைவி அழத்தொடங்கிவிட்டார்.

அதிர்ஷ்ட வசமாக அந்த விமானத்தில் கல்கத்தாவில் ஒரு மருத்துவ  மாநாட்டில் பங்கேற்ற பின் சில டாக்டர்கள் சென்னை திரும்பிகொண்டிருந்தனர். அவர்களில் சென்னை லைப்லைன் மருத்துமனை சேர்மன் டாக்டர் ராஜ்குமாரும்  ஒருவர். மரணம் என்றே முடிவு செய்யபட்ட நிலையில் அந்தபயணியின்  நெஞ்சுகூட்டில்  இதயமிருக்கும் பகுதியில் மிக வேகமாக ஒரு அடி போட்டார் டாக்டர். ராஜ்குமார்.  மயங்கிய நிலையிலிருந்த அந்த பயணி துள்ளி எழுந்து உட்கார்ந்தார்நாடித்துடிப்பும் ரத்த அழுத்தமும் நார்மலுக்கு வந்துவிட்டது. தனக்கு நடந்தது பற்றி எதுவும் தெரியாததால்  அருகில் நின்ற டாக்டர்களை பார்த்து திகைத்து போனார். டாக்டர் ராஜ்குமார் கொடுத்த   அந்த பலமான அடி ஒரு அவசர முதலுதவி பயிற்சிடாக்டர்கள் பாஷையில்பெரிகார்டியல் தம்ப்” என்று சொல்லுப்படும் இதை சரியாக சரியான நேரத்தில் சரியாக கொடுக்க தெரிந்திருக்க வேண்டும். மிகமிக அரிதாக இயங்காமல் இதயம் ஒய்வெடுக்க ஆரம்பிக்கும் நிமிடங்களில் அதை எழுப்பி விடும் இந்த அடி முறையை ஆப்ரேஷன் தியட்டர்களில்  மின் இணைப்பிலிருக்கும் அதற்கான கருவிகள் மூலம் செய்வது உண்டு.
”மறு நாள் தான் பயணம் செய்திருக்க வேண்டிய நான் கடைசி நேரத்தில் பயணதிட்டம் மாறி அன்று கடைசி பயணியாக அந்த விமானத்திலேறினேன். ஏறியவுடனேயே ஒரு வயதான பெண்பயணியின் உடல்நிலை பயணத்திற்கு ஏற்றதாக இருக்கிறதா என சோதித்து சொல்லும்படி பைலட் கேட்டுகொண்டார். அவசியமனால் அவரை இறக்கிவிடுப்போவதாகவும் சொன்னார். அந்தபெண்மணியை சோதித்து பயமில்லை பிரயாணம் செய்யலாம்  என்று சொல்லிவிட்டு சீட்டில்  போய் அமர்ந்த அரைமணியில் இது நிகழ்ந்தது.
விமானத்தில் பயணம் செய்வர்கள் இப்ப்பொது ஆண்டுதோறும் அதிகரித்துகொண்டிருக்கின்றனர். அதில் பலர் இதய நோய்களுக்கான அறிகுறிகள் உள்ளவர்கள். அதனால் நமது விமான பணிப்பெண்களுக்கும்,பைலட்டுகளுக்கும் ஹாட்ட்டாக் முதலுதவி பயிற்சிகளும், அந்த கருவிகளை இயக்கும் பயிற்சிகளும் தரப்பட்டு அந்த கருவிகளும் விமானத்தில் வைக்கபடவேண்டும்” என்கிறார் டாக்டர் ராஜ்குமார். இதற்கு அதிகம் ஒன்றும் செலவகாது.
 30000 அடி உயரத்தில் பறக்கும் போது மரணத்தை சந்தித்து  அங்கேயே மறுவாழ்வும்  பெற்ற அந்த பயணியின் தொடர்ந்த சிகிச்சைக்காக  வழியில் புவனேஸ்வரில் விமானத்தை தரை இறக்க தயாராகயிருந்த பைலட்டிடம் டாக்டர்கள் அவசியமில்லை என்று சொல்லும் அளவிற்கு நார்மலாகிவிட்டார் அந்த பயணி.  ஆனாலும் அருகில் டாக்டர்கள் அமர்ந்து இதய துடிப்பை கண்காணித்து கொண்டே வந்தனர். விமானம் சென்னையை அடைந்ததும் அவர் விஜயா மருத்துவ மனைக்கு கொண்டு செல்லபட்டார்.  அவர் அங்கு பணியிலிருக்கும் ஒரு டாக்டர்.
மரண அடி என்று சொல்லக்கேட்டிருக்கிறோம். மரணத்திலிருந்து மீளவும் ஒரு அடி இருக்கிறது என்பது இப்போது தெரிகிறது.  

14/1/13

தர்ம யுத்தத்தில் ஜெயித்தவர்கள்


            இனிய பொங்கல் வாழ்த்துகளுடன்

தர்ம யுத்தத்தில் ஜெயித்தவர்கள்ஹைடெஸிபலில் ஒரு டைட்டில்சாங், ஆடம்பர வீடுகள் ,ரிச் காஸ்டியூம், அழுகை, மருமகள் மாமியார் சண்டை, குரோதம், பழிவாங்கல், கடத்தல் சாமியார், ஆவி, பேய்கள் போன்றவைகள் தான் தமிழ் டிவிசீரியல்களின் இலக்கணம் என்றிருக்கும் நிலையில் தர்மயுத்தம் மூலம் ஒரு மெகா தொடரின் ரசனையை புதியதொரு பரிமாணத்திற்கு விஜய் டிவி எடுத்துச்சென்றிருக்கிறது. முழுக்க முழுக்க வழக்கறிஞர்கள் பாத்திரங்கள் மூலமே சமூக பிரச்னைகளையும் அதைகையாளும் அவர்களுக்கிடையே யான ஈகோ மற்றும் குடும்பபிரச்சனைகளை பேசும் இதில் மெல்லிய இழையாக காதலும்,ஏமாற்றமும் உறவுகளின் கனமும் சொல்லப்படுகிறது. மாறுதலான இந்த டிவி தொடரின் தயாரிப்பாளர் அரவிந்கிருஷ்ணாவையும்அவரது டீமையும் சந்தித்தபோது…

அரவிந்த் கிருஷ்ணா பி.ஸி.ஸ்ரீரமுடன் இணைந்து பணியாற்றிய ஒளிப்பதிவாளார். பள்ளியில் படிக்கும்போதே சினிமாவில் போட்டோகிராபராக சாதிக்க துடித்து அப்போதே பி,ஸி யிடம்போய்  வேலைகேட்டிருக்கிறார். ”தம்பி படிச்சுட்டு அப்புறம் வா” என்று சொன்னவரிடம் லயோலா கல்லூரியில் விஸ்காம் முடித்தவுடன் போய் சேர்ந்தவர். விரைவில் ஒரு ஹாலிவுட் படத்தில் பணி செய்யபோகிறார். இந்த ஓளிப்பாதிவளார் ஏன் தயாரிப்பாளரானர்?  ”அது ஒரு இனிய விபத்து. விஜய் டிவிக்கு வேறு ஒரு விஷயமாக போனபோது  டிவி சீரியல்களின் தரம் பற்றி பேச்செழுந்தது.  நான் உணர்ந்ததைசொன்னபோது மாறுதலாக நீங்கள் செய்யமுடியமா? என கேட்டார்கள். தமிழ் சின்ன திரையில் தொடர்சீரியல்களை தூர்தர்ஷனில் அறிமுக படுத்தியவர் என் தந்தையார் கிருஷ்ணஸாமி. நான் விரும்பவதை படிக்க அனுமதித்து சினிமாத்துறைக்கு போகவிரும்பியதை ஆதரித்த அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக நானும்  சின்னதிரையில் சில முதல் முயற்சிகளை செய்யவது பற்றி சிந்திக்கொண்டிருந்தவன் நான். கேட்டவர்களிடம்  தர்மயுத்தத்தின் ஒன்லைனை சொன்னவுடன்   உடனே ஆரம்பியுங்கள் என ஒப்புதலும், ஊக்கமும் தந்தவர்கள் ஸ்ரீராம், ,பிரதீப்,.
ரமணன். இந்த மூவர்தான் விஜய் டிவியின் பல வெற்றிகளுக்கு பின்னாலிருக்கும் பார்வையாளர்கள் அறியாத முகங்கள். இவர்களுக்குதான் இந்த வெற்றியின் பெருமை சேரவேண்டும் “ என்கிறார்.
 எல்லா நடிகர்களும் கச்சிதமாக அவர்களின் பாத்திரங்களுக்கு பொருந்துகிறார்கள். இந்த காஸ்டிங் தேர்வை எப்படி செய்தார்கள். “அரவிந்த் கிருஷ்ணாவின் நண்பர்கள் வட்டம் பெரிது. அவர்களிடம் நிறைய பேசி ஆராய்ந்து செய்தோம். ரவி ராகவேந்தரை தவிர அனைவரும் டிவி சீரியலுக்கு புதியவர்கள், கிட்டி போன்ற சீனியர்களுடன் இளைஞர் அணியையும் முகம் அறிந்த ஆனால் டிவியில் இதுவரை பார்க்காத முகங்களை காட்ட விரும்பினோம்.” என்கிறார்.தொடரின் இயக்குநர் அபிநந்தரன். இவர் புகழ்பெற்ற ஒவியர் ஆதிமூலத்தின் மகன் ,  (இந்த வித்தியாசமான பெயர் ரவிந்திரநாத் தாகூரின் சகோதரான பிரபல ஒவியருடையது)  பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்தபின் ராஜீவ் மேனன் படங்களில் அஸோசியட்டாக பணியாற்றியவர்.  “நமது சீரியல்கள் பெண்களை பலவினமானவர்களாகவே காட்டுகிறது. அவர்களுடைய பொரபஷனல் டைமென்ஷன்களை சொல்லுவதில்லை,.இதில் அதை சொல்ல முயன்றிருக்கிறோம் இதுவரை சீரியல்களில் நடிக்காத கிட்டி சினிமாவில் சாக்லேட் பாயாக மட்டுமே அறியபட்டிருந்த அப்பாஸ், 
நாடகத்துறை படித்திருந்தாலும் பாடகியாக பிசியாக இருக்கும் ஸ்ரீலேகா அவரது கணவர்ஸ்ரீராம் எல்லோரும் கான்செப்ட்டை கேட்டவுடன் யெஸ் சொன்னார்கள்.” என்கிறார்
இந்த சீரியலில் நடிப்பவர்களில் பலருக்கு  டிவி கலைஞர்கள் என்பதற்கு அப்பாலும் ஒருமுகம் இருக்கிறது. கிட்டி ஒருமேனேஜ்மெண்ட் ஆலோசகர், ரவிராகவேந்திரா ஒரு வங்கியில் மூத்த அதிகாரி, கார்திக் குமார் ஆங்கில நாடகங்கள், கார்ப்ரேட்நிகழ்ச்சிகள் தயாரிக்கும் நிருவனத்தின் இயக்குனர். லக்ஷ்மிபிரியா மனிதவள அதிகாரி ஸ்ரீலேகாவும் ஸ்ரீராமும் பின்னணி பாடகர்கள். இவர்களின் சொந்த அனுபங்களும் இந்த தொடரில் அவர்களின் நடிப்பை எளிதாகியிருக்கிறது.

  “என்னை நடிக்க அழைத்த போது நான் இன்னும் சினிமாவிலிருக்கிறேனே ஏன் டிவி சிரியல்? என்றேன். கதையையும் அதைச்செய்யபோகும் டீமியையும் கேட்ட பின்னர், தியட்டரையும் நடிப்பதையும் நேசிக்கும் எனக்கு இது நல்ல வாய்ப்பு எனபட்டது மறுக்க முடியவில்லை” என்கிறார் கார்திக் குமார். வானம் வசப்படும் என்ற தன் முதல் படத்தில் ஒரு அட்வகேட் கேரக்டருக்காக பெற்ற பயிற்சி இப்போது உதவியது என்கிறார் அர்ஜுனாக சிறப்பாக நடிக்கும் இந்த பொறியியல் பட்டதாரி.

சட்டம் படித்த நான் கோர்ட்டுக்கு போகமலிருந்தாலும்,  இந்த சீரியலில் ஒரு சீனியர் அட்வகேட் நம்பி பாத்திரத்தின் அழுத்தையும், சொல்லுப்படும் விஷயத்தை தெளிவாக சொல்லவும் அது உதவுகிறது என்கிறார் ரவிராகவேந்திரா. மேடை நாடகம்,சின்னதிரை,சினிமாஎன்று நீண்ட அனுவமுள்ள இவர் என்றும் இளைஞராகவே காட்சியளிக்கும் மார்க்கண்டேயர். இந்த கூட்டணியின் வெற்றி டிவி சீரியல்களில் ஒரு புதிய டிரெண்ட்டை உருவாக்கும் வாய்ப்புக்கள் அதிகம். உடனே இல்லாவிட்டாலும் நிச்சியம் இருக்கிறது என்கிறார்.
சமூக அக்கரையுள்ள இரண்டு அல்லது மூன்று வழக்குகளை  தொடர்ந்து வரும்படி திரைக்கதை அமைந்திருக்கும் இந்த தொடரில் அதற்கான ஆலோசனைகளையும் சட்ட பிரச்சனைகளில் சிக்காமலிருக்கவும் நகரின் முன்னணி வழக்கறிஞர்களின் நிருவனம் வழங்கியிருக்கிறது. நமது கோர்ட்களில் வக்கீல்கள் உணர்ச்சிவசப்படாமல் பேசுவதை நடிகர்க்ளுக்கு காட்டியிருக்கிரார்கள்.  தயாரிப்பாளர் அரவிந்த் கிருஷ்ணா நவீன டிஜிட்டல்  ஓளிப்பதிவில் விசேஷ பயிற்சிபெற்றவராக இருப்பதால், டெக்னிக்கல் விஷயங்களில் சில புதிய பாதைகளை துவக்கியிருக்கிறது இந்த தொடர். வீடியோவும்  எடுக்கும் வசதி உள்ள கேனன் 5d என்ற ஸ்டில் கேமிராவில் எடுக்கபட்டிருக்கிறது

இது போட்டோபத்திரிகையாளர்களுக்காக விசேஷமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இதைபயன் படுத்தி எடுக்கபட்டு பின்னர் சின்னதிரைக்கு ஏற்ப மாற்றபடுகிறது. கேனன் நிறுவனமே பிரமித்த விஷயம் இது. ஒரே இடத்தில்காட்சிகளின் களமான  அட்வகேட்களின் அலுவகங்கள் கோர்ட், காபிஷாப் எல்லாம் அடுத்தடுத்து  ஒரேசெட்டில் போடபட்டிருப்பதால் காட்சிகளை தொடர்ந்து எடுக்கமுடிகிறது. எல்லா காட்சிகளிலும் ஒளிஅமைப்பு சீராக செய்யமுடிகிறது. வேலை சீக்கரம் முடிகிறது. இப்படிஒரு சீரியல் எடுக்கபடுவது இந்தியாவில் இது முதல் முறை என்கிறார் அர்விந்த் கிருஷ்ணா. படபிடிப்பை பிலிம் இன்ஸ்ட்யூட் மாணவர்கள் வந்து பார்த்து குறிப்புகள் எடுப்ப்தை பெருமையாக கருதும் இவர் சினிமா துறையினர் யாரும் இதுவரை இந்த புதிய முயற்சியை பாராட்டவில்லை என வருந்துகிறார்.

. இது சீரியல் என்பதை விட சீரியஸான தொடர் என்றே சொல்லணும். காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரைக்கும் கூட சூட்டிங் போனாலும் சோர்வே தெரியாது அந்த அளவுக்கு வேகமாக போகும். அதனால்தான் எங்கள் டீம் இதனை சீரியஸ் என்று சொல்லுவோம்.என்கிறார் அழகான வக்கிலாக வரும் அனுஜா ஐயர்.  உன்னைபோல் ஒருவன் படத்தில் டிவி நிருபராக ஒரு கையில் சிகரெட்டும், மைக்குமாக மிரட்டிய பெண்ணை நினைவிருக்கிறதா? அவரேதான். வீண்மீன்கள் படத்திற்கு பின் இந்த தொடரில் நடிக்கும் இவர் டெல்லியில் மாஸ்கம்யூனிகேஷன் படித்தவர். கருப்புகோட்டை அணிந்தாலே ஒரு கம்பீரம் வருகிறதுஎன்கிறார்.
தன் இயல்பான நடிப்பால் பார்ப்பவர்களின் மனதில் சராதாவை நிறுத்தியிருக்கும்   ல‌ஷ்மிபிரியா மனித வளத்துறையில் பட்டம் பெற்றிருப்பவர்.  கே.பாலச்சந்தர் பட்டறையில் உருவானவர். அவர் மேடை நாடகங்களுக்கு புத்துயிர் கொடுக்க முயன்றபோது தேர்ந்தெடுக்கபட்டு பயிற்சிஅளிக்கபட்டவர். இந்த சிரியலை தொடர்ந்து  திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகயிருக்கிறார். இவரைப்போலவே  அஸ்வின், மணி, பாத்திரங்களில் நடிக்கும் பாலாஜி ராஜசேகருக்கும் பிரவீனுக்கும், பட வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன.
தொடரில் சீனியர் சுந்திரம் எப்போது டில்லியிலிருந்து திரும்பிவருவார்?, அர்ஜனுக்கும் ராம்மோஹனுக்கும் நடக்கும் ஈகோ யுத்தில் யார் ஜெயிக்க போகிறார்கள்? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் நிச்சியமாக  இதில ஜெயித்திருப்பவர்கள் சின்ன திரை சீரியல்களுக்கு புதிய பார்மெட்டையும் இயல்பாக நடிக்கும் ஒரு குழுவையும் அறிமுகபடுத்தியிருக்கும் விஜய் டிவி தான்.
கல்கி 20/01/13

9/1/13

தெருகூத்தில் ஷேக்ஸ்பியரின் மாக்பெத்.


ஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால்  கடந்த மாதம் அவரின் உலகப்புகழ் பெற்ற மாக்பெத் நாடகம் அந்த அரங்கில் ”தெரு கூத்தாக” போடபட்டது தான் ஆச்சரியம்.
மேடை நாடக்கலையை முறையாக சொல்லிகொடுத்து அதை வளர்ப்பதற்காக  1975ல் உருவானது டெல்லியில்உள்ள தேசிய நாடகபள்ளி. இங்கு மூன்றாண்டு நாடக்கலையை பட்ட படிப்பாக கற்பிக்கிறார்கள். நாட்டின் பல மாநிலங்களின் மரபுகலை நாடக பாணிகளையை அறிவதும், பயிற்சிபெறுவதும் இதில் ஒரு அங்கம், இந்த ஆண்டு இதன் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கபட்டது தமிழ்நாட்டின் பாரம்பரிய நாடக வடிவான  தெருகூத்து. இந்த கலையின் மிக முக்கிய அம்சம் கூத்து கலைஞர்களுக்கு பாடவும் வசனம் பேசும்பொழுதே நடனமாடியேபடி இடம் மாறிக்கொள்வதும். உடல், மனம், குரல் இவைகளை தெருகூத்து அடவுகளுடன் ஒருங்கிணைக்கும் பயிற்சியை இவர்களுக்கு அளித்தவர் புரிசை சம்பந்த தம்பிரான். தமிழக கூத்துகலையின் முன்னோடிகளின் ஐந்தாவது தலைமுறையான இவர் கூத்துபட்டறையில் பயிற்சிபெற்று தெருகூத்து பாணியை செம்மைபடுத்தியிருப்பவர். புராண இதிகாச கதைகள் மட்டுமே நடந்து கொண்டிருந்த கூத்தில் நவீன பாணிநாடகங்களை தெருகூத்தின் மரபுகளை மீறாமல் நிகழ்த்தி புகழ்பெற்றவர். இந்தியாவின் பல இடங்களிலும் பலவெளிநாடுகளிலும் தனது குழுவுடன் நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார். 
இந்த ஆண்டு சங்கீத நாடக அகடமியின் விருது பெறுகிறார். கடந்த ஆண்டு கொலாம்பிய நாட்டில் நடைபெற்ற சர்வதேச பாரம்பரிய நாடகவிழாவில் அவர்கள் நாட்டு புகழ்பெற்ற நாவலாசிரியர் எழுதிய  “மிகபெரிய சிறகுகள் கொண்ட தொண்டுகிழவன்”“என்ற நாடகத்தை தன் தமிழ்நாட்டு மாணவர்களுடன் தமிழில்  நடத்தியிருக்கும் சம்பந்த தம்பிரானிடம் ஸ்பானிஷ் மொழிபேசுபவர்களுக்கு தமிழ் எப்படி புரிந்தது என்று கேட்டபோது கதை தெரிந்தவர்களுக்கு கூத்தின் பாத்திரங்கள் உணர்ச்சிகள் எளிதாக புரியும் அதுதான் கூத்தின் சிறப்பு என்றார்.

இவர் தந்த 40 நாள் பயிலரங்க பயிற்சியில் கூத்துபாணியை கற்று தேசிய நாடகபள்ளி மாணவர்கள் நடத்தியது தான் மாக்பெத்.
டன்கன் என்ற அரசனின் தளபதிகளில் ஒருவன் மாக்பெத். போரில் வெற்றிபெற்ற அவனது வீரத்திற்காக மன்னரால் பாரட்டபட்டபடுகிறான்., அரசனை கொன்று விட்டு ஆட்சியை கைபெற்ற அவனை தூண்டுகிறாள் அவனது பேராசைக்காரியான மனைவி. முதலில் தயங்கிய மாக்பெத் கொலைக்குபின் மன்னனாகிறான். பதவியை தக்க மேலும் ஒரு கொலை என நல்ல திருப்பங்களும் விறுவிறுப்பும் கொண்ட இந்த கதையை ஷேக்ஸ்பியர் மனித மனத்தின் பல்வேறு கூறுகளை, மனவியல் கோணங்களை காட்டி நாடகமாக்கியிருக்கிறார். .
 இதை கூத்துபாணியில் நாடகமாக்குவது எளிதல்ல. அதை மிக திறமையாக நிர்வகித்து நடத்தியவர் தமிழ் நாடக மைய இயக்குனர் சண்முக ராஜவும், பயிலரங்க இயக்குனர் ராஜேந்திரனும். ஒரு புகழ்பெற்ற ஆங்கில நாடகத்தை, கருநீலதிறையின் பின்னணியில் இருவர் மறைத்து பிடித்திருக்கும் துணியின் மறைவில் பாத்திரங்கள் நிற்க கட்டியகாரன் சொல்லும் அறிமுகத்துடனும் தமிழ் பாரம்பரிய இசையுடனும் பார்ப்பது புதிய அனுபவம். மாக்பெத்க்கு கிரிடம் சூட்டும் காட்சியில் கெட்டிமேளம் ஒலித்தது.
.அன்று  நடந்த மாக்பெத் நாடகம் ஹிந்தி மொழியில் என்று அறிவிப்புகளில் சொல்லப்படாதால் தமிழ் நாடகம் என நினைத்து வந்தவர்களில் பலருக்கு  பாத்திரங்கள் பேசியது புரியாத போதும்  அமைதியாக ரசித்துகொண்டிருந்ததைபார்த்த போது சம்பந்த தம்பிரான் சொன்ன கூத்தின் மொழி    புரிந்தது
கல்கி 13/01/13

7/1/13
புதிய தலைமுறை க்கு ஆண்டு சந்த 499/
அனுப்ப வேண்டிய முகவரி
po box 3209
சென்னை 6000032

1/1/13

தீபாவளி மலர்கள்

தீபாவளி மலர்கள்2007லிருந்து கல்கி, அமுதசுரபி தீபாவளி மலர்களில் வெளியான என்னுடைய
கட்டுரைகளை இங்கே பார்க்கலாம். இது ஒரு e book. மலரை பார்ப்பதைபோல
பக்கங்களை புரட்டி அவசியமானால் பெரிதாக்கியும் படிக்கலாம்