
இனிய பொங்கல் வாழ்த்துகளுடன்
தர்ம யுத்தத்தில் ஜெயித்தவர்கள்
ஹைடெஸிபலில்
ஒரு டைட்டில்சாங், ஆடம்பர வீடுகள் ,ரிச் காஸ்டியூம், அழுகை, மருமகள் மாமியார் சண்டை, குரோதம், பழிவாங்கல், கடத்தல்
சாமியார், ஆவி, பேய்கள் போன்றவைகள் தான் தமிழ் டிவிசீரியல்களின் இலக்கணம் என்றிருக்கும்
நிலையில் தர்மயுத்தம் மூலம் ஒரு மெகா தொடரின் ரசனையை புதியதொரு
பரிமாணத்திற்கு விஜய் டிவி எடுத்துச்சென்றிருக்கிறது. முழுக்க முழுக்க வழக்கறிஞர்கள் பாத்திரங்கள்
மூலமே சமூக பிரச்னைகளையும் அதைகையாளும் அவர்களுக்கிடையே யான ஈகோ மற்றும் குடும்பபிரச்சனைகளை
பேசும் இதில் மெல்லிய இழையாக காதலும்,ஏமாற்றமும் உறவுகளின் கனமும் சொல்லப்படுகிறது.
மாறுதலான இந்த டிவி தொடரின்
தயாரிப்பாளர் அரவிந்கிருஷ்ணாவையும்அவரது டீமையும் சந்தித்தபோது…
அரவிந்த் கிருஷ்ணா பி.ஸி.ஸ்ரீரமுடன் இணைந்து பணியாற்றிய
ஒளிப்பதிவாளார். பள்ளியில் படிக்கும்போதே சினிமாவில் போட்டோகிராபராக சாதிக்க துடித்து
அப்போதே பி,ஸி யிடம்போய் வேலைகேட்டிருக்கிறார்.
”தம்பி படிச்சுட்டு அப்புறம் வா” என்று சொன்னவரிடம் லயோலா கல்லூரியில் விஸ்காம் முடித்தவுடன்
போய் சேர்ந்தவர். விரைவில் ஒரு ஹாலிவுட் படத்தில் பணி செய்யபோகிறார். இந்த ஓளிப்பாதிவளார்
ஏன் தயாரிப்பாளரானர்? ”அது ஒரு இனிய விபத்து.
விஜய் டிவிக்கு வேறு ஒரு விஷயமாக போனபோது
டிவி சீரியல்களின் தரம் பற்றி பேச்செழுந்தது.
நான் உணர்ந்ததைசொன்னபோது மாறுதலாக நீங்கள்
செய்யமுடியமா? என கேட்டார்கள். தமிழ் சின்ன திரையில் தொடர்சீரியல்களை தூர்தர்ஷனில்
அறிமுக படுத்தியவர் என் தந்தையார்
கிருஷ்ணஸாமி. நான் விரும்பவதை படிக்க அனுமதித்து சினிமாத்துறைக்கு போகவிரும்பியதை
ஆதரித்த அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக நானும் சின்னதிரையில் சில முதல் முயற்சிகளை செய்யவது பற்றி
சிந்திக்கொண்டிருந்தவன் நான். கேட்டவர்களிடம் தர்மயுத்தத்தின் ஒன்லைனை சொன்னவுடன் உடனே ஆரம்பியுங்கள் என ஒப்புதலும், ஊக்கமும் தந்தவர்கள்
ஸ்ரீராம், ,பிரதீப்,.
ரமணன். இந்த மூவர்தான் விஜய் டிவியின் பல வெற்றிகளுக்கு பின்னாலிருக்கும்
பார்வையாளர்கள் அறியாத முகங்கள். இவர்களுக்குதான் இந்த வெற்றியின் பெருமை சேரவேண்டும்
“ என்கிறார்.
எல்லா நடிகர்களும் கச்சிதமாக அவர்களின் பாத்திரங்களுக்கு
பொருந்துகிறார்கள். இந்த காஸ்டிங் தேர்வை எப்படி செய்தார்கள். “அரவிந்த் கிருஷ்ணாவின்
நண்பர்கள் வட்டம் பெரிது. அவர்களிடம் நிறைய பேசி ஆராய்ந்து செய்தோம். ரவி ராகவேந்தரை தவிர அனைவரும் டிவி சீரியலுக்கு புதியவர்கள், கிட்டி போன்ற சீனியர்களுடன் இளைஞர் அணியையும்
முகம் அறிந்த ஆனால் டிவியில் இதுவரை பார்க்காத முகங்களை காட்ட விரும்பினோம்.” என்கிறார்.தொடரின்
இயக்குநர் அபிநந்தரன். இவர் புகழ்பெற்ற ஒவியர் ஆதிமூலத்தின் மகன் , (இந்த வித்தியாசமான பெயர் ரவிந்திரநாத் தாகூரின்
சகோதரான பிரபல ஒவியருடையது) பிலிம் இன்ஸ்டியூட்டில்
படித்தபின் ராஜீவ் மேனன் படங்களில் அஸோசியட்டாக பணியாற்றியவர். “நமது சீரியல்கள் பெண்களை பலவினமானவர்களாகவே காட்டுகிறது.
அவர்களுடைய பொரபஷனல் டைமென்ஷன்களை சொல்லுவதில்லை,.இதில் அதை சொல்ல முயன்றிருக்கிறோம்
இதுவரை சீரியல்களில் நடிக்காத கிட்டி சினிமாவில் சாக்லேட் பாயாக மட்டுமே அறியபட்டிருந்த
அப்பாஸ்,
நாடகத்துறை படித்திருந்தாலும் பாடகியாக பிசியாக இருக்கும் ஸ்ரீலேகா அவரது
கணவர்ஸ்ரீராம் எல்லோரும் கான்செப்ட்டை கேட்டவுடன் யெஸ் சொன்னார்கள்.” என்கிறார்
இந்த
சீரியலில் நடிப்பவர்களில் பலருக்கு டிவி கலைஞர்கள்
என்பதற்கு அப்பாலும் ஒருமுகம் இருக்கிறது. கிட்டி ஒருமேனேஜ்மெண்ட் ஆலோசகர், ரவிராகவேந்திரா
ஒரு வங்கியில் மூத்த அதிகாரி, கார்திக் குமார் ஆங்கில நாடகங்கள், கார்ப்ரேட்நிகழ்ச்சிகள்
தயாரிக்கும் நிருவனத்தின் இயக்குனர். லக்ஷ்மிபிரியா மனிதவள அதிகாரி ஸ்ரீலேகாவும் ஸ்ரீராமும்
பின்னணி பாடகர்கள். இவர்களின் சொந்த அனுபங்களும் இந்த தொடரில் அவர்களின் நடிப்பை எளிதாகியிருக்கிறது.
“என்னை நடிக்க
அழைத்த போது நான் இன்னும் சினிமாவிலிருக்கிறேனே ஏன் டிவி சிரியல்? என்றேன். கதையையும்
அதைச்செய்யபோகும் டீமியையும் கேட்ட பின்னர், தியட்டரையும் நடிப்பதையும் நேசிக்கும்
எனக்கு இது நல்ல வாய்ப்பு எனபட்டது மறுக்க முடியவில்லை” என்கிறார் கார்திக் குமார். வானம் வசப்படும் என்ற தன் முதல்
படத்தில் ஒரு அட்வகேட் கேரக்டருக்காக பெற்ற பயிற்சி இப்போது உதவியது என்கிறார் அர்ஜுனாக
சிறப்பாக நடிக்கும் இந்த பொறியியல் பட்டதாரி.
சட்டம்
படித்த நான் கோர்ட்டுக்கு போகமலிருந்தாலும்,
இந்த சீரியலில் ஒரு சீனியர் அட்வகேட் நம்பி பாத்திரத்தின் அழுத்தையும், சொல்லுப்படும்
விஷயத்தை தெளிவாக சொல்லவும் அது உதவுகிறது என்கிறார் ரவிராகவேந்திரா. மேடை நாடகம்,சின்னதிரை,சினிமாஎன்று
நீண்ட அனுவமுள்ள இவர் என்றும் இளைஞராகவே காட்சியளிக்கும் மார்க்கண்டேயர். இந்த கூட்டணியின்
வெற்றி டிவி சீரியல்களில் ஒரு புதிய டிரெண்ட்டை உருவாக்கும் வாய்ப்புக்கள் அதிகம்.
உடனே இல்லாவிட்டாலும் நிச்சியம் இருக்கிறது
என்கிறார்.
சமூக
அக்கரையுள்ள இரண்டு அல்லது மூன்று வழக்குகளை
தொடர்ந்து வரும்படி திரைக்கதை அமைந்திருக்கும் இந்த தொடரில் அதற்கான ஆலோசனைகளையும்
சட்ட பிரச்சனைகளில் சிக்காமலிருக்கவும் நகரின் முன்னணி வழக்கறிஞர்களின் நிருவனம் வழங்கியிருக்கிறது.
நமது கோர்ட்களில் வக்கீல்கள் உணர்ச்சிவசப்படாமல் பேசுவதை நடிகர்க்ளுக்கு காட்டியிருக்கிரார்கள்.
தயாரிப்பாளர் அரவிந்த் கிருஷ்ணா நவீன டிஜிட்டல் ஓளிப்பதிவில் விசேஷ பயிற்சிபெற்றவராக இருப்பதால்,
டெக்னிக்கல் விஷயங்களில் சில புதிய பாதைகளை துவக்கியிருக்கிறது இந்த தொடர். வீடியோவும் எடுக்கும் வசதி உள்ள கேனன் 5d என்ற ஸ்டில் கேமிராவில்
எடுக்கபட்டிருக்கிறது
இது போட்டோபத்திரிகையாளர்களுக்காக விசேஷமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்
இதைபயன் படுத்தி எடுக்கபட்டு பின்னர் சின்னதிரைக்கு ஏற்ப மாற்றபடுகிறது. கேனன் நிறுவனமே
பிரமித்த விஷயம் இது. ஒரே இடத்தில்காட்சிகளின் களமான அட்வகேட்களின் அலுவகங்கள் கோர்ட், காபிஷாப் எல்லாம்
அடுத்தடுத்து ஒரேசெட்டில் போடபட்டிருப்பதால்
காட்சிகளை தொடர்ந்து எடுக்கமுடிகிறது. எல்லா காட்சிகளிலும் ஒளிஅமைப்பு சீராக செய்யமுடிகிறது.
வேலை சீக்கரம் முடிகிறது. இப்படிஒரு சீரியல் எடுக்கபடுவது இந்தியாவில் இது முதல் முறை
என்கிறார் அர்விந்த் கிருஷ்ணா. படபிடிப்பை பிலிம் இன்ஸ்ட்யூட் மாணவர்கள் வந்து பார்த்து
குறிப்புகள் எடுப்ப்தை பெருமையாக கருதும் இவர் சினிமா துறையினர் யாரும் இதுவரை இந்த
புதிய முயற்சியை பாராட்டவில்லை என வருந்துகிறார்.
. இது சீரியல் என்பதை விட சீரியஸான தொடர் என்றே சொல்லணும். காலை 9 மணிக்கு தொடங்கி
இரவு 9 மணி வரைக்கும் கூட
சூட்டிங் போனாலும் சோர்வே தெரியாது அந்த அளவுக்கு வேகமாக போகும். அதனால்தான்
எங்கள் டீம் இதனை சீரியஸ் என்று சொல்லுவோம்.என்கிறார் அழகான
வக்கிலாக வரும் அனுஜா ஐயர். உன்னைபோல் ஒருவன்
படத்தில் டிவி நிருபராக ஒரு கையில் சிகரெட்டும், மைக்குமாக மிரட்டிய பெண்ணை நினைவிருக்கிறதா?
அவரேதான். வீண்மீன்கள் படத்திற்கு பின் இந்த தொடரில் நடிக்கும் இவர் டெல்லியில் மாஸ்கம்யூனிகேஷன்
படித்தவர். கருப்புகோட்டை அணிந்தாலே ஒரு கம்பீரம் வருகிறதுஎன்கிறார்.
தன் இயல்பான நடிப்பால் பார்ப்பவர்களின் மனதில் சராதாவை நிறுத்தியிருக்கும் லஷ்மிபிரியா மனித வளத்துறையில் பட்டம் பெற்றிருப்பவர். கே.பாலச்சந்தர் பட்டறையில் உருவானவர். அவர் மேடை
நாடகங்களுக்கு புத்துயிர் கொடுக்க முயன்றபோது தேர்ந்தெடுக்கபட்டு பயிற்சிஅளிக்கபட்டவர்.
இந்த சிரியலை தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க
ஒப்பந்தமாகயிருக்கிறார். இவரைப்போலவே அஸ்வின்,
மணி, பாத்திரங்களில் நடிக்கும் பாலாஜி ராஜசேகருக்கும் பிரவீனுக்கும், பட வாய்ப்புகள்
கிடைத்திருக்கின்றன.
தொடரில் சீனியர் சுந்திரம் எப்போது டில்லியிலிருந்து திரும்பிவருவார்?,
அர்ஜனுக்கும் ராம்மோஹனுக்கும் நடக்கும் ஈகோ யுத்தில் யார் ஜெயிக்க போகிறார்கள்? என்பதை
பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் நிச்சியமாக இதில ஜெயித்திருப்பவர்கள் சின்ன திரை சீரியல்களுக்கு
புதிய பார்மெட்டையும் இயல்பாக நடிக்கும் ஒரு குழுவையும் அறிமுகபடுத்தியிருக்கும் விஜய்
டிவி தான்.
கல்கி 20/01/13
கல்கி 20/01/13
கட்டுரையும், டிவி சீரியலைப் போல சுவாரஸ்யமாக உள்ளது. கட்டுரையில் புதிய விஷயங்கள் நிறைய கிடைத்தன . வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குgood
பதிலளிநீக்கு