26/7/13

நம்ம ஆளுங்க கலக்கறாங்க !

 

ஓபாமாவை கவர்ந்த ஸ்ரீகாந்த்



 !

அமெரிக்கவாழ் இந்தியர்களின் இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் இப்போது மெல்ல அமெரிக்க  சமூக,அரசியல், கலாசார வாழ்க்கையில் நன்கு பின்னி பிணைந்து கலக்கி கொண்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன் வந்து வாழ்க்கையை துவக்கியவர்களில் பலர் அவர்களின் துறைகளில் உயர்ந்து  தங்கள் அடையாளங்களை பதித்துகொண்டிருக்கிறார்கள். அமெரிக்க இந்தியர்களாக அறியப்படும் இவர்கள்  பெரிய கார்ப்ரேட்களில், அரசியல் கட்சி,  பொறுப்புகளில், மாநில அரசுகளின் உயர்ந்த பதவிகளில், மாநில கவர்னராக கூட இருக்கிறார்கள். இந்த வரிசையில் சமீபத்தில் இடம்பெற்றிருப்பவர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்.அமெரிக்காவின் இரண்டாவது பெரியஉயர் நீதிமன்ற நீதிபதியாக அதிபர் ஒபாமாவால் நியமிக்கபட்டிருக்கிறார். அமெரிக்க நீதிமன்ற முறை நம்முடையதிலிருந்து சற்று மாறுபட்டது.. தேசம் 13 நீதி மண்டலங்கள் அதன் கீழ் பல நீதி மாவட்டங்கள்.என பிரிக்கபட்டிருகின்றன.. இங்குள்ள வழக்குகளை மேல்முறையீடு செய்ய 13 அப்பீல் கோர்ட்டுகள். அமெரிக்க உச்சநீதிமன்றம் ஒர் ஆண்டுக்கு 100 வழக்குகளுக்கு மேல் எடுத்துகொள்வதில்லை என்பதால் இந்த அப்பீல் கோர்ட்டுகள் நமது உயர்நீதி மன்றங்களைவிட வலிமையானது. மாநில. பெடரல் சட்டபிரச்சனைகளைகூடவிசாரிக்கிறது.அத்தகைய கோர்ட்களில் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய கோர்ட். வாஷிங்டனிலிருக்கிறது.  அதில் தான் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன். நீதிபதியாக நியமிக்கபட்டிருக்கிறார். மாவட்ட நீதிமன்றங்கள் இரண்டில்  இந்தியர்கள் நீதிபதிகளாக இருந்தாலும் ஒரு உயர் நீதி மன்றத்தின் நீதிபதியாக அமெரிக்க அதிபரால் நியமிக்க படும் முதல் இந்தியர் மற்றும் ஆசியரும் இவரே.

At a reception in honor of Sri Srinivasan, the first South Asian American judge in the US Court of Appeals for the DC Circuit, at the Embassy Residence, are seen (from left to right): Sri Srinivasan; Mrs. Saroja Srinivasan; Indian Ambassador Mrs. Nirupama Rao; and Srinija Srinivasan. Photo credit: Embassy of India, Washington


சண்டிகரில் பிறந்த ஸ்ரீகாந்த்தின் தந்தை ஸ்ரீனிவாசனும் அம்மாவும்   படிக்க அமெரிக்கா சென்னறவர்கள். பின்னால இருவருக்கும் கன்ஸாஸ் பலகலகழகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததாதால் அங்கேயே தங்கிவிட்டனர். அதனால் உயர்நிலைப் பள்ளிபடிப்பை அமெரிக்காவில் தொடர்ந்து அங்கேயே வளர்ந்தவர். பள்ளியிலும் கல்லூரியிலும் பேஸ்கட்பால் வீரர். இவருடைய லாரன்ஸ் பள்ளி டிம் மேட்கள் இன்று தேசிய சாம்பியன்கள். இன்றும் வாரம் ஒருமுறை பேஸ்பால்  விளையாடுகிறார்.புகழ் பெற்ற ஸ்டன்ஃபோர்ட் பல்கலைகழத்தில் எம்பிஏ வும் சட்டமும் படித்தவர்  சட்டம் முதுகலைப் படிப்பில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர். சில காலம் ஹார்வர்ட் பல்கலகழகத்தில் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.
இவரது ஓரே சகோதரி ஸ்ரீநிஜா யாஹூ நிறுவனம் துவங்கபாடபோது சேர்ந்த முதல் ஐவரில் ஒருவர். 15 ஆண்டுகள் அதனுடன் வளர்ந்து பல உயரங்களைத் தொட்ட பின் இப்போது தனி நிறுவனம் துவக்கியிருக்கிறார். நாட்டின் சிறநத அறிஞர்களை... தேர்ந்தெடுக்கும் வெள்ளை மாளிகையின் குழுவில் ஒருவராக நியமித்திருக்கிறார்


அமெரிக்கஅரசுக்காகவும்  அதற்குஎதிராக தனியார் நிறுவனங்களுக்காகவும் \ வாதாடியவர் ஸ்ரீநிவாஸ் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் 20 வழக்குகளூக்கு மேல் வென்று புகழ் பெற்றவர்எதிர்கட்சியை சேர்ந்த அதிபர் புஷ் அவர் காலத்தில் அரசின் உதவி ஸொலிட்டராக அமர்த்தபட்டஒருவரை. ஒபாமா நீதிபதியாக அறிவித்தபோது அவரது கட்சியில் சின்ன சலசலப்பு.நான் ஒரு வழக்கறிஞரென்ற முறையில். ஸ்ரீகாந்த்தின் திறமமையை  நன்கு அறிவேன். அவரைப்போன்ற திறமைசாலிகள் அமெரிக்க நீதித்துறையில் இருப்பது நாட்டுக்கு கெளரவம்  என சொல்லியிருக்கிறார். 43 வயதாகும் ஸ்ரீகாந்த்துக்கு இது ஆயூட்கால பதவி. எட்டே நீதிபதிகள் கொண்ட அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வருங்காலத்தில் அமரக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.
“ஸ்ரீ“ என நண்பர்களால் அழைக்கபடும் ஸ்ரீகாந்த் சட்டபடிப்பு முடிந்தபின் அமெரிக்க முறைப்படி ஒரு வழக்கறிஞர்கள் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றி அந்த நிறுவனத்தின் பங்குதாரராகவும் பினஅதன் தலைவருமாக வளர்ந்தவர்


13/7/13

மோடியின் எதிர்கால கனவுகளும், என்கவுண்ட்டர்களும்


அதிகாரபூர்வமாக அறிவிக்கபடாவிட்டாலும் பிஜேபியின் பிரதமர் வேட்பாளாரக அறியபட்டிருக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு  கட்சியில் முறைத்து கொள்ளும் மூத்த தலைவர்கள், உதறிவிட்டுபோகும் கூட்டணிகட்சிகள் போன்ற பிரச்சனைகளுடன் இப்போது சேர்ந்திருக்கும் புதிய தலைவலி 9 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு என்கவுண்ட்டர்.
2004ஆம் ஆண்டு ஜூன் 15ந் தேதி அகமதாபாத்-காந்திநகர் நெடுஞ்சாலையில் நடந்த இந்த என்கவுண்ட்டர் சம்பவம் குஜராத்தை மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.  இளம்பெண் இஷ்ரத் ஜகானுடன் பிரனேஷ் பிள்ளை என்கிற ஜாவத் குலாம் ஷேக், அம்ஜத் அலி ரோனா, ஜீஷன் ஜோகர் ஆகிய நான்கு முஸ்லிம்கள் என்கவுண்ட்டர் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.இதில் இஷ்ரத் ஜகான் 19 வயது கல்லூரி மாணவி. பீகாரை சேர்ந்தவர்.இவர் மும்பையில் உள்ள குருஞானக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார் இவருக்கு தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு என்றும், குஜராத் முதல்வரான நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் இளைஞர்கள் மூவருடன் இஷ்ரத் இணைந்து செயல்பட்டார் என்றும் இவர்கள் தங்கள் இயக்கத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோது போலீசாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர் என்றும் குஜராத் காவல்துறை தெரிவித்தது. இந்த என்கவுண்ட்டரை நடத்தியது டி.ஐஜி வன்சார என்பவர், இவர் பல என்கவுண்ட்டர்களை நடத்தியிருக்கும் ஒரு என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட். கொல்லபட்ட நால்வரும் ல்ஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர் என்றும் முதல்வரை கொல்ல சதி செய்தற்கான ஆதாரங்களும் இருப்பதாக சொல்லியிருந்தார். ஆனால், இஷரத் ஜகான் குடும்பத்தினரும், பிர்னேஷ் பிள்ளையின் தந்தையும் இது என்கவுண்ட்டரே அல்ல. திட்டமிட்ட படுகொலைஎன்றனர். மனித உரிமை அமைப்பினரும் குஜராத் எதிர்க்கட்சியினரும்,பத்திரிகைகளும் இதே குற்றச்சாட்டை எழுப்பின.
 5 ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு 2009ல், “இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட நால்வரும் என்கவுண்ட்டரில் கொல்லப்படவில்லை. போலீஸ் திட்டமிட்டு செயல்பட்டுள்ளதுன்றார் அகமதாபாத் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்டிரேட். அவர் தனது நீண்ட 243 பக்க அறிக்கையில்  பதவி உயர்வுக்கும், மெடல்களுக்கும், பாதுகாப்பாற்ற நிலையிலிருக்கும் முதல் அமைச்சரை காப்பாற்றியதைபோல நல்ல பெயரை வாங்கவும் இந்த படுகொலையை போலீஸ் அதிகாரிகள் செய்திருக்கிறார்கள் என்று  தீர்ப்பளித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத குஜராத் அரசு  தீர்ப்பை எதிர்த்து  உயர்நீதிமன்றத்தில்.  அப்பீல் செய்தது. கொலை, திட்டத்தை நிறைவேற்ற வந்திருக்கும் தீவீரவாதிகளைப்பற்றிய  தகவலை தந்தது மத்திய உளவுத்துறையினர்தான். என்றும் அதை போலீஸ் செயலாக்கியிருக்கிறது.  என்றும் மனுவில் சொல்ல பட்டது.
உண்மை நிலையை அறிய உயர் நீதிமன்றம் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது..  குழுவும் விசாரணை தொடர்ந்தது. குஜராத் உயர்நீதிமன்றத்தில், 2011ஆம் ஆண்டு சிறப்பு புலனாய்வுக் குழு தாக்கல் செய்த மனுவில், “இது முறைப்படி நடந்த என்கவுண்ட்டரே அல்ல. என்கவுண்ட்டர் நடந்ததாகச் சொல்லப்படும் தேதிக்கு முன்பாகவே இஷ்ரத் ஜகான் உள்பட நால்வரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்என்று தெரிவித்தது. அதாவது, நால்வரும் போலீசாரால் ஏற்கனவே பிடிக்கப்பட்டு, போலீசின் கஸ்டடியிலேயே கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை.இதனை ஏற்றுக்கொண்ட குஜராத் ஐகோர்ட்டு இந்த போலி என்கவுண்ட்டர் பற்றி உரிய விசாரணை நடத்த சி.பி.ஐ. போலீசாருக்கு உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணை தகவல்களை கோர்ட்டுக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும் என்று கூறியதோடு சி.பி.ஐ. விசாரணையையும் கோர்ட்டு நேரடியாக கண்காணித்து வந்தது.  கடந்த மார்ச் மாதம் வழக்கு விசாரணையில்  எந்த முன்னேற்றமும் இல்லாதை கண்டித்து  இரண்டு வாரத்திற்குள் குற்றபத்திரிகை தாக்கல்செய்யபடவேண்டும் என  சிபிஐக்கு கட்டளையிட்டது. இந்த  நால்வர் கொலை செய்யப்பட்ட என்கவுண்ட்டரிலும் சம்பந்தபட்டிருந்த டிஐஜி வன்சாரா சிறையிலிருக்கிறார். காரணம் 2005ஆம் ஆண்டு ஷொராபுதீன் ஷேக் என்பவர் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர் என்றும், அவரும் மோடியை கொல்லத் திட்டமிட்டார் என்று என்கவுண்ட்டர்பாணியில் குஜராத் போலீஸ்  தீர்த்துக் கட்டியிருந்தது. இந்த என்கவுண்ட்டரை முன்னின்று நடத்தியவரும் டி.ஐ.ஜி வன்சராதான். ஷொராபுதீன் என்கவுண்ட்டர் நடந்த இரண்டாவது நாளில் அவரது மனைவி கவுசர்பீ, டி.ஐ.ஜி.வன்சராவின் சொந்த கிராமத்திற்கு அருகே கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார் .இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்குட்பட்டு, சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. அப்போது, கவுசர்பீ கொலைதான் செய்யப்பட்டார் என்பதை குஜராத் அரசின் வழக்கறிஞரே சுப்ரீம் கோர்ட்டில் ஒப்புக்கொண்டார். ஷொராபுதீன் என்கவுண்ட்டரும் போலியானதே என்பது தெரிய வந்தது. இதனால் இந்த வழக்கில் டி.ஐ.ஜி வன்சரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம்  கோர்ட் அனுமதியுடன் ஜெயிலில் விசாரணை நடத்தியபின் சிபிஐ குற்றபத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறது. சாம்பல் தாடியும் கறுப்பு தாடியும் இந்த என்கவுண்ட்டருக்குஒப்புதல் கொடுத்த பிறகுதான் எங்கள் பிடியில் இருந்த அந்த 4 பேரையும் தீர்த்துக் கட்டினோம்என்று சிபிஐயிடம் சொல்லியிருக்கிறார் டி.ஐ.ஜி. வன்சரா. என்பது சிபிஐ தரப்பிலிருந்து கசியும் செய்தி.  இந்த அடையாளாங்கள்  குஜராத் முதல்வரையும், உள் துறை அமைச்சராகயிருந்த அமித் ஷாவையும் குறிப்பிடுகிறது அத்துடன், இந்த என்கவுண்ட்டர் படுகொலைக்கு முன்பாக இரண்டு முறை அமித் ஷாவிடம் வன்சரா பேசியிருப்பதாகவும் சி.பி.ஐ. தெரிவிக்கிறது.பதிவு செய்யபட்டிருக்கும் இந்த வாக்குமூலம் கோர்ட்டில் உறுதி செய்யபட்டால் மோடிக்கும், அமித்ஷாவிற்கும் பிரச்சனை ஏற்படும்.
 ஆனால் பல போலீஸ் அதிகாரிகளை குற்றபத்திரிகையில் பட்டியிலிட்டிருக்கும் சிபிஐ அமைச்சர்களை சேர்க்கவில்லை. தொடர்ந்து சமர்பிக்கபடும் கூடுதல் குற்றபத்திரிகைகளில் அமித் ஷாவின் பெயர் சேர்க்கபடும் வாய்ப்பு இருக்கிறது. இது மோடிக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
மேலும் குற்றபத்திரிகையில் சிபிஐ வெடிகுண்டாக  ஒரு  டேப்பை இணைத்திருக்கிறது, அதில் மாநில கல்வி, சட்ட, உள்துறை அமைச்சர், முதல்வரின் செயலாளர் பங்குபெற்ற ஒரு கூட்டத்தில் அதில் குஜராத் அட்வகேட் ஜெனரல் திரிவேதி   “சிறப்பு புலனாய்வுக் குழு தன்னுடைய அறிக்கையில், இஷ்ரத் ஜகான் கொல்லப்பட்டது போலி என்கவுண்ட்டரில்தான் என்று சொன்னால், நாம் அரசுக்கோ அதிகாரிக்கோ எந்த சிக்கலும் இல்லாமல் முறியடிக்கவேண்டும் அதுதான் முக்கியம்என்று சொல்லியிருக்கிறார். . தடய அறிவியல் துறையால் பரிசோதிக்கபட்டிருக்கும் இந்த டேப்பை ரகசியமாக பதிவு செய்தவர் அந்த கூட்டத்தில் பங்குகொண்ட ஒரு போலீஸ் அதிகாரி.
மற்றொரு அதிர்ச்சியான தகவல் மத்திய உளவுத்துறையினர் இதில் சம்பந்தபட்டிருப்பது. ஐபி  என்பது மத்திய உள்துறைஅமைச்சகத்தின் ஒரு அமைப்பு. இவர்களுக்கு சட்டரீதியான எந்த அங்கீகாரமும் கிடையாது. ஆனால் மிக வலிமையான அமைப்பு. ஒவ்வொரு மாநிலத்திலும்   மத்திய அரசின் மூத்த போலீஸ் அதிகாரியின் கீழ் ஒரு சின்னபிரிவு இயங்கும். மாநில போலீஸுக்கு முக்கிய ரகசியங்களையும்   அவர்களைப்பற்றி மத்திய அரசுக்கு தகவல்களையும்  தருவது இவர்கள் பணியில் ஒன்று. குஜராத்தில் அப்படி இருந்த மூத்த ஐபி அதிகாரி ராஜேந்திர குமார். இவர் மோடியுடன் மிக நெருக்கமாகயிருந்த அதிகாரி. இவர் தந்த தவறான தகவலினால்தான் இந்த என்கவுண்ட்டர் என்பதை இப்போது சிபிஐ கண்டுபிடித்திருக்கிறது. இவரை கைது செய்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ முயற்சிக்கிறது. அதற்கான அனுமதியை அரசிடம் கோரியிருக்கிறது.  இப்படி மத்திய உளவுதுறையின் மீது வழக்கபோட முயற்சிப்பது இதுதான் முதல் முறை.  எந்த சட்டபிரிவின் கீழும் வராத அந்த அமைப்பின் மீதுவழக்குபோடமுடியுமா என்பதே சந்தேகத்திற்கு உரிய கேள்வியாகயிருந்தாலும், அரசு இயந்திரத்தின் இரு அமைப்புகள் இப்படி மோதிக்கொள்ள மத்திய அரசு அனுமதிக்குமா? என்பது தான் இப்போது எழும் முதல் கேள்வி.   உளவுத்துறையின் கண்ணியத்தை காப்பாற்ற மேல் நடவடிக்கைகள்  எதுவும் எடுக்காமல் விடப்பட்டால்  பலன் பெறப்போவது மோடிதான். என்பதை உணர்ந்திற்கும் காங்கிரஸ் அரசு இதை எப்படி கையாளாளப்போகிறது என்பதை சிபிஐ, ஐபி இரண்டு அமைப்புகளின் அதிகாரிகளும்  கூர்ந்து கவனித்துகொண்டிருக்கின்றனர்.
சிபிஐக்கு வெற்றி வாய்ப்புள்ள, குஜராத் அரசுக்கு எதிரான  இந்த போலிஎன்கவுண்ட்டர் வழக்கு மோடியின் பிரதமர் கனவு பலிப்பதை பாதிக்குமா?
நிச்சியமாக இல்லை என்று சொல்லமுடியாவிட்டாலும் இமேஜ் சரிகிறது என்பது நிஜம்.   அவர் இமேஜை பாதிக்கும் விஷயங்களாக பட்டியலிடபட்டிருக்கும், கேப்டலிஸ்ட்,தீவிரமதவாதி,சிறுபான்மையினருக்கு எதிரானவர், போன்றவகைளோடு   போலீஸையும் உளவுத்துறையையும் சுயநலத்திற்காக கையாளுபவர் என்ற லேபிலும் சேர்வதை தவிர்க்கமுடியாது

-ஆதித்யா 
கல்கி  21/07/13 இதழலில்

11/7/13

கஜ்னியின் 17 முறை படையெடுப்பு என்பது சரியில்லையாமே?

 4
குஜராத் பயணம் 4 

கஜ்னியின் 17 முறை படையெடுப்பு என்பது சரியில்லையாமே?

ஸோம்நாத் என்று உலகம் முழுவதும் அறியபட்டடிருக்கும் அந்த ஊரின் பெயர் வெராவெல். ஒரு கடற்கறை கிராமம். இந்த கோவிலை தவிர வேறு முக்கிய இடங்கள் எதுவும் கிடையாது. மிக சிறிய வயதிலிருந்தே இதை பார்க்க வேண்டும் என்ற  எண்ணம்  இப்போதுதான்  நிறைவேறியது, Thanks to Meera  துவராகை கிருஷ்னனை பார்க்க இந்த சிவனின் அருளும் வேண்டும். ஸோம்நாத கோவிலை பற்றி சொன்னாலே கஜினியின் 17 முறை படையெடுப்பு நினைவிற்கு வருமே? எங்களுக்கும் வந்தது. இங்குபார்த்த  குறிப்புகளில் எங்குமே 17 தடவைகள் என சொல்லபடவே இல்லை.  கி.பி.1300 –ம் ஆண்டு அலாவுதீன் கில்ஜியாலும் தாக்கப் பட்ட இந்த  ஆலயம் ஜுனாகட் மன்னனால் கட்டப் பட்டது. மீண்டும், மீண்டும் முந்நூறு ஆண்டுகளில் நான்கு முறை ஆலயம் திரும்பத் திரும்ப இடிக்கப் பட்டது. முசபர்ஷா, மகமது பெக்டா, இரண்டாம் முசபர் ஷா, கடைசியில் 1701-ம் ஆண்டில் ஒளரங்கசீப் ஆகியோராலும் ஆலயம் இடிக்கப் பட்டிருக்கிறது. . பின்னர் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் இந்தோர் ராணி அகல்யா பாய் என்பவள் காசியில் உள்ள விஸ்வநாதர் ஆலயத்தைத் திரும்பக் கட்டும்போது, இந்தப் பழைய சோமநாதர் ஆலயத்துக்கு எதிரே ஒரு புது சோமநாதர் ஆலயம் கட்டினாள். ஆனால் பின்னர் ஜுனாகத்  ஆட்சி நிர்வாகம் முகலாயர்களின் கைக்கு வரவே அப்போது உள்ள நவாபோ, அல்லது ஆங்கிலேய அதிகாரிகளோ கி.பி. 1820-ம் ஆண்டில் இருந்து 1947-ம் ஆண்டு வரை எந்தவிதப் புனர் நிர்மாணத்துக்கு அனுமதிக்கவில்லை.  இந்திய சுதந்திரத்தின் போது இந்த பகுதி ஜுனாகத் நவாப் பாகிஸ்தானோடு இணையப் போவதாய் ஒப்பந்தமும் போட்டுக் கொண்டார். கத்தியவார் மக்கள் எதிர்க்க ஆரம்பித்ததோடு அல்லாமல், அர்சி ஹுக்குமத் அல்லது ஜுனாகத் தாற்காலிக அரசு என்ற அமைப்பைக் கொண்ட மக்கள் சபை அமைக்கப் பட்டது. நவாபுக்கு எதிர்ப்பு வலுக்கவே அவர் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டார். பின்னர் படேல் அவர்களால் ஜுனாகத் இந்தியாவோடு இணைக்கப் பட்டது. நாடு விடுதலை அடைந்த 1947-ம் ஆண்டு தீபாவளி தினத்தன்று இந்தியாவின் துணைப் பிரதமராய் அப்போது இருந்த சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் சோமநாதர் ஆலயத்துக்கு விஜயம் செய்து இந்திய அரசே ஆலயத்தை மீண்டும் கட்டும் என அறிவித்தார்.
சோமநாதருக்கென புதிய ஆலயம் உருவாக்கப் பட்டது. பழைய கோயிலின் மாதிரிகள் மிகவும் கஷ்டத்துடன் சேகரிக்கப் பட்டது. இதில் முனைந்து பணியாற்றியவர் திரு கே.எம். முன்ஷி அவர்களும், சர்தார் படேலுமே ஆவார்கள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே எங்கே ஆலயம் நின்றதோ அதே இடத்தில் கட்டப் பட்டு அதே கருவறையில் அதே பீடத்தில் சோமநாத ஜ்யோதிர்லிங்கம்  அப்போதைய ஜனாதிபதி பாபு ராஜேந்திர பிரசாத் அவர்களால் பிரதிஷ்டை செய்யப் பட்டது. சோமநாத ஆலயத்தின் புனருத்தாரண சிற்பிகளில் முதன்மையானவர் ஆன படேல் ஆலயத்தின் திறப்பு விழாவைக் காணாமலேயே 1950-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி காலமானார்
எனினும் திறப்பு விழா கோலாகலமாய் நடந்தது. சுதந்திரம் கிடைத்து மூன்று மாதங்களிலேயே சர்தார் படேல் இந்தக் கோயிலை மீண்டும் கட்டித் தருவதாய் அறிவித்தார். நாலே வருஷங்களில் சோமநாதர் அப்போதைய குடியரசுத் தலைவரால் பிரதிஷ்டை செய்யப் பட்டார். அதன் பின்னர் கிட்டத் தட்ட 14 ஆண்டுகள் முயன்று இந்தக் கோயில் கட்டப் பட்டது. மஹாத்மா காந்தி அரசு செலவு செய்யக் கூடாது என்று சொன்னதை மதித்து இந்தக் கோயில் முழுக்க முழுக்க நன்கொடைகளாலேயே கட்டப் பட்டது. அரசிடமிருந்து எந்தவிதமான நிதி உதவியும் பெற வில்லை. 1965-ம் வருஷம் மே மாதம் 13-ம் நாள் 21 துப்பாக்கிகள் வணக்கம் செய்ய சோமநாதர் கோயிலின் 155 அடி உயரக் கோபுரத்தில் துவஜஸ்தம்பமும், அதன் மேல் காவிக் கொடியும் பட்டொளி வீசிப் பறந்தது. இந்தியாவிலேயே கடந்த 800 ஆண்டுகளில் இத்தகையதொரு கோயில் இன்று வரையிலும் கட்டவில்லை என்று சொல்லபபட்டது. . 
அப்போதைய கணக்குப் படி இந்தக் கோயிலுக்கு ஆன மொத்தச் செலவு, 24, 92,000 ரூபாய்கள். கோயிலினுள்ளே சோதனைகளுக்குப் பின்னர் நுழைந்தால் முதலில் வருவது பெரிய சபா மண்டபம்.  நுழையும் போதே பெரிய எல்சிடியில் சனனதியி அபிஷெகம் தெரிகிறது/ ஏராளமான சிற்பங்களைக் கொண்ட அந்த சபா மண்டபத்தில் ஆங்காங்கே பக்தர்கள் அமர்ந்து யாகங்கள், ஹோமங்கள், யக்ஞங்கள் என்று நடத்திக் கொள்ளுகின்றார்கள்.  ஒரு காலத்தில் தங்க தூண்காலாக இருந்த இடத்தில் இன்று பளபள்க்கும் கோல்டு பெயிண்ட். அந்தச் சபா மண்டபத்தைத் தாண்டினால், திறந்த கருவறையில் பெரிய அளவிலால் ஆன சோமநாத லிங்கம் காணப் படுகின்றது அலங்காரம் ஜொலிக்கிறது. 
அபிஷகத்திற்கு பக்கதர்கl கொடுக்கும் பாலும் நீரும் சன்னதி முன்னால் ஒரு துவாரத்தில்  விட்டால் அது லிங்கத்தின் மீது 24 மனி நேரமும்  நீர் சொட்ட தொங்கும்   குடத்தில் டூயூப் வழியாக சேரும்படி   ஒரு  அமைப்பு. 
 பிரஹாரத்தைச் சுற்றி வலம் வரும்போது பழைய இடிந்த கோயிலின் இடிபாடுகளின் மிச்சம் காண முடிகின்றது. படங்கள் எடுக்க முடியாது. இது ஒருவேளை அப்போதைய பார்வதி கோயிலாக இருக்கலாம் என அனுமானம் செய்கின்றனர். கோயிலின் வெளியே நிலாமாடங்கள் போன்ற முற்றங்கள் ஆங்காங்கே பயணிகளின் வசதிக்காகக் கட்டப் பட்டிருக்கின்றது.

 அதில் ஒரு மாடத்தின் அருகே, வேலைப்பாடுள்ள ஒரு தூண் காணப்படும். அந்தத் தூண் சோமநாத லிங்கத்தின் வலப்பக்கமாய் அமைந்திருக்கிறது. சோமநாதர் சந்நதியின் அந்த வலப்பக்க ஜன்னலில் இருந்து சோமநாதரின் அருட்பார்வை தடைகள் ஏதுமின்றி தென் துருவம் வரையிலும் ஒரே நேர்கோடாய்ப் பயணிக்கின்றது என்று சொல்கின்றார்கள். இதை ஒளிப்பாதை என்றும் சொல்லுகின்றனர். 
சர்தார் படேலுக்கு ஒரு அழகான சிலை நிறுவப் பட்டிருக்கின்றது. செக்யூரிட்டி தெய்வங்கள் படம் எடுக்க போட்டடிருக்கும் கோட்டிருக்குள் அவர் இருப்பதால் அங்கிருந்து அவரையும் கோவிலையும் படம் எடுக்க கூடாது என்கிறார்கள்.  தொல்பொருள் இலாகாவின் புகைப்படங்கள், பழைய சோம்நாத் கோயிலின் மாதிரிப் படங்கள் கொண்ட ஒரு கண்காட்சியும்இருக்கிறது.  புதிய கோயில் கட்டும்போது உலகின் பல நாடுகளில் இருந்தும் நீர் கொண்டு வரப் பட்டு, கோயில் வேலைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டதாக கண்காட்சியில் ஒரு தகவல் சொல்லுகின்றது. பல கண்ணாடிப் புட்டிகளும் நீர் நிறைந்து காணப் படுகின்றன. அகல்யா தேவி கட்டிய சோமநாதர் கோயிலும் அருகே உள்ளது. அதற்குத் தனியாய் வழிபாடுகள் நடக்கின்றது. 
இரவு ஒரு ஓலிஓளிகாட்சி. ஹிந்தியில் கதை. ஒம்பூரியின் வாய்ஸ் ஆனால் சகிக்காத மியூஸிக். கதை புரியாதால் கோபுர மாடத்தில் இருக்கும் அத்தனை புறாக்களும் எப்படிஅதன் மீது இந்த வெளிச்ச வெள்ளத்தில் பயப்படாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறது என்றுஆராய்ச்சி செய்துகொண்டிருந்தேன்.

தங்கியிருந்த ஹோட்டல் ஒரு கிராமத்தின் ஹைவேயில். பெரிய புல்வெளி. நல்ல ரூம். காட்டேஜ்கள் வித்தியாசமாக பிரமிட் வடிவத்தில்.
பயணபடங்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்

















<

3/7/13

கொடிகட்டி பறக்கும் பிரார்த்தனைகள்

குஜராத் பயணம் 3
3


கொடி என்பது ஒரு நாட்டின்,அரசின், அல்லது இயக்கத்தின் தனித்துவத்தை  கம்பீரமாக வெளிப்படுத்தும் சின்னம். தனிச்சிறப்புகளைச்சொல்லும் அதன் வண்ணங்களும், அதில் உள்ள சின்னங்களும் உன்னதமானவைகளாக போற்றப்படுபவை.நம் தேசம் முழுவதும் எல்லா மதத்தினரின் கோவில்களிலும்வழிபட்டுதலங்களிலும் கொடி என்பது விழாக்காலங்களின் அடையாளமாக அறியபட்டவை.

ஆனால் குஜராத் மாநிலத்தில் மேற்கு கோடியில் கடலோரமாக இருக்கும் புகழ் பெற்ற துவாரகா நகரிலிருக்கும் கண்ணன் கோவிலில் தினசரி கொடிகள் தனிநபர்களின் பிரார்த்தனையின்வெளிப்பாடாக ஏற்றப்படுகிறது. மதுராவிலிருந்து இங்கு வந்த கண்ணன் கடல் அரசனிடம் கேட்டு அவன் ஒதுங்கி வழி விட்ட இடத்தில் துவாரகா நகரை நிர்மாணித்து ஆட்சி செய்த தேசம் இது, இந்த கோவில் அவரது அரண்மனை என்கிறது இதிகாசம், 16ம் நூற்றாண்டில் சாளுக்கிய பாணியில் கட்டபட்ட கோவில் என்று யூனஸ்கோ இதை பாதுகாக்கபடவேண்டிய உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவித்திருக்கிறது. போல பளபளக்கும் பல வண்ணங்களில் உடலைபிடிக்கும் மன்னர்களின் உடைகளைபோல் பட்டு சட்டை அணிந்த பண்டிட்களும் கண்ணனும் எப்ப்போதும் பிசியாக இருக்கும் இந்த கோவிலுக்கு சதாரண நாட்களில் 5000 பேர் வருகிறார்கள். சன்னதியில்  பளபளக்கும் கறுப்பு பளிங்கில் கோவர்த்தனாக கண்ணன் காட்சி தரும் இந்த கோவிலின் கோபுரத்தில் கொடி  தினசரி 4 முறைகளும் வியாழன் அன்று 5 முறைகளும் வெவ்வேறு வண்ணங்களில் ஏற்றபடுகிறது. 170 அடிகள் உயரமான கோபுரத்தின் உச்சியில் பறக்கும் இந்த கொடி மிக பிரமாண்டமானது. நகரின் எந்த பகுதியிலிருந்து பார்த்தாலும் பளிச்சென்று தெரிகிறது. 52கஜ நீளத்தில் நீண்ட முக்கோண வடிவத்தில் பட்டு துணியில் விசேஷமாக தயாரிக்கபடும் இந்த கொடிகள் பக்தர்கள் பிராத்தனை செய்து விரும்பவதை வேண்டிக்கொண்டு ஏற்றபடுவது. 52 சிறிய கொடிகளாக தயாரிக்க பட்டு நீண்ட கொடியாக இணைக்க படுகிறது. அதென்ன 52 கஜம் என்ற கணக்கு? .. 27 நக்ஷத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரஹங்கள், 4 திக்குகள் என்ற வற்றைக் கூட்டினால் வரும் எண்ணிக்கையின்படி 52 கஜம் நீளமுள்ள கொடி இது என்கிறார் திரு வேளுக்குடி கிருஷ்ணன். கொடிகள் கோவிலால் அனுமதிக்க பட்டவர்களால் மட்டுமே தயாரிக்கபடுகிறது.
சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம் வெள்ளை காவி, வானவில்லின் அத்தனை வண்ணங்களும் இணைந்தவை போன்ற பலவண்ணங்களில் கொடிகள்.எந்த வண்ணமாக இருந்தாலும் அதில் சூரியன் சந்திரன் சின்னங்கள். திருமணம், தொழில்வெற்றி, நீண்டஆயுள், செல்வம் மேன்மை போன்றவைகளை அடைய அவைகளை குறிப்பவைகளாக அறியபட்ட வண்ணகொடியை பிரார்த்தனையாக ஏற்ற பக்தர்கள் முன்பதிவு செய்தது காத்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டு முழுவதற்கும் இப்போதே முன்பதிவு செய்யபட்டுவிட்டது. 25000ரூபாய் பணம் கட்டி புக் செய்திருப்பவர்களின் குடும்பத்தினர் அவர்களுக்காக ஒதுக்கபட்ட நாளில் ஒரு பெரிய பந்தாக சுருட்டபட்டிருக்கும் அந்த கொடியை மலர்களுடன்



ஒரு மூங்கில் கூடையில் தலையில் சுமந்து வீதிகளிலும் கோவிலின் பிராகாரத்திலும்  வாத்தியங்களும் பாடல்களும் ஒலிக்க நடனமாடி(சூப்பர் குதாட்டம்!) வலம் வந்து கிருஷ்ணரின் சன்னதியில் பாதத்தில் வைத்து பூஜை செய்து 52 படிகள் ஏறி கோபுரத்தின் முதல் தளத்திற்கு எடுத்துசெல்லுகிறார்கள். அதற்கு மேல் இந்த கொடியை கோபுரஉச்சிக்கு எடுத்து சென்று ஏற்றும் உரிமை பெற்றவர்கள் ஒரு சில யாதவ குடும்பத்தினர் மட்டுமே. பின்குடுமி வைத்திருக்கும் இவர்கள் ஜீன்சும் சட்டையும் அணிந்திருக்கிறார்கள், கோபுரத்தின் உச்சியில் கலசத்திற்கு அருகில் ஒரு சிறியமர மேடை. அது புடவை போன்ற  நீண்ட இரண்டு துணிகளினால் கலசத்துடன் இணைக்கபட்டிருக்கிறது. மேலே ஏற எந்த வசதிகளும் இல்லாத அந்த கோபுரத்தின் உச்சியில்  அந்த துணியைபிடித்து மேடையில் ஏறுகிறார்கள் இந்த ஜோடியினர். ஒருவர்  மேடையின்மீது நிற்கும் 25 அடி உயர கொடிகம்பத்தை அதன் இடத்திலிருந்து எடுத்து  கொடியைமட்டும் உருவி  எடுத்துகொண்டபின் கம்பத்தை மட்டும் மற்றொருவரிடம் கொடுகிகிறார். அவர் அதில் புதிய கொடியை நுழைத்து திருப்பிக் கொடுக்க புதுக்கொடி மேடையில் நிறுத்தபடுகிறது. பாதங்களின் விரல்கள் வினாடி தவறினால் விபரீதம்
என்ற நிலையில் எந்த பாதுகாப்பு வசதிகளும் இல்லாத அந்த உயரத்தில் இரண்டுபேர் மிக அனாசியமாக 10-15 நிமிடங்களில் அவ்வளவு பிரமாண்டமான கொடியை மாற்றிவிட்டு பணம் கட்டியவர்களுக்காக தலையால் மரத்தை தொட்டு பிராத்தனை செய்துவிட்டு இறங்கி விடுகிறார்கள் கொடி ஏற்றும்போது இவர்கள் பத்திரத்திற்காவும் நாம் பிரார்த்திக்கிறோம்.(கீழே இருக்கும் வீடியோவை பாருங்கள்).
அடுத்து என்ன வண்ணத்தில், எதைகுறித்தபிராத்தனைக்காக கொடி ஏற்றபடும் என்பதுமுன்பே தெரியாதால், மாறும் இந்த கொடிகளின் வண்ணங்கள் ஒரு சகுனமாக மற்றபக்கதர்களால் பார்க்கபடுகிறது. தரிசனத்திற்கு வரும் பத்தர்கள் தங்கள் வேண்டுதல் இந்த கொடியின் வண்ணத்தில் பிரதிபலித்தால் அதை ஒரு நல்ல சகுனமாகவும் கிருஷ்ணனின் அனுமதியாகவும் எடுத்துகொள்கின்றனர்.
ஐஸ்வர்யா, அபிஷேக் திருமணத்திற்கு முன் அவர்கள் குடும்பத்தின் சார்பில் இங்கு பிராத்தனை செய்து கொடிஏற்றபட்டிருக்கிறது.