5/3/14

கடைசிக்கோடு பற்றி....



சென்ற வார ஒரு முற்பகலில் ஒரு போன்.  "நான் மிஸஸ் மாலதி  பார்த்தசாரதி" என்ற  றிமுகத்துடன் பேசியவர்  என்னுடைய  கடைசிக்கோடு புத்தகத்தை பற்றி ஒரு நண்பர் மூலம் அறிந்து படித்ததாகவும், மிக  நல்ல புத்தகம், மிக நன்றாக, சுவையாக விஷயம் சொல்லபட்டிருக்கிறது என்று
 மிகவும் பராட்டினார். அவர் மட்டுமின்றி, விஞ்ஞானியாகயிருந்து ஒய்வு பெற்றிருந்தாலும் பேராசியராக பணியாற்றும் அவரது கணவரும், அவரது மற்ற குடும்பத்தினரும்  வாசிப்பதை நேசிப்பவர்கள் என்றும் தொடர்ந்து புத்தகங்கள் படித்துகொண்டிருப்பவர்கள் எனவும் சொன்னார். வெளியிட்டிருக்கும் கவிதா பதிப்பகத்தை தொடர்பு கொண்டுஎன் நம்பரை வாங்கி பேசிய இவர்  சொன்ன விஷயம் சிந்திக்க வைக்கிறது., தானும் தன் வெளிநாட்டிலிருந்தாலும் தங்கள் வாரிசுகளூம் தமிழ் படிப்பைதைப் போல, தன் பேரக்குழந்தைகள்  தமிழே தெரியாத காரணத்தால் இதுபோன்றவைகளை படிக்க முடியவில்லை.  நீங்கள் ஏன் இதைபோன்றவைகளை  அவர்கள் நலனுக்காக ஆங்கிலத்திலும் எழுதக்கூடாது ?
எதையும் எளிய தமிழில் சொல்ல முடியும் என்ற நம்பும் எனக்கு  நமது அடுத்த தலைமுறைக்கு சொல்லவேண்டியதை தமிழில் மட்டும்  சொன்னால் போய்ச்சேராதோ? என்ற என்ணத்தை இது எழுப்பியிருக்கிறது. ஒரு தலைமுறையே தமிழ் படிக்க முடியாத கல்விசூழல் ஏற்பட்டதற்கு யார் காரணம் என்று இப்போது  ஆராய்வதில் பயன் இல்லை. எளிதாக ஆங்கிலம் மூலம் தமிழை  விஞ்ஞான முறைப்படி சொல்லிக்கொடுக்கும் வழிவகைகளை கண்டுபிடிக்க வேண்டிய கட்டயாத்தில் இருக்கிறோம்.  இதை எப்படி,செய்யலாம்? என்பதற்கான ஆலோசனைகளை பட்டியலிட்டுகொண்டிருக்கிறேன். உங்கள் யோசனைகளையும் எழுதுங்களேன்.
மூத்த எழுத்தாளார் சுப்ர. பாலன்  கடைசிக்கோடு புத்தகத்திற்கு கல்கியில் எழுதிய விமர்சனம் இது


பொறாமைப்படவைக்கும் ஒரு புத்தகம்!



                              சுப்ர. பாலன்



       நில அளவைத்துறை  என்கிறார்கள் இன்றைக்கு. சங்கிலி பிடித்து நூறு நூறு அடியாக இந்த தேசம் முழுவதையும் அளந்து வரைபடமாகத் தயாரித்தவர்கள் அந்த சர்வேத்துறையில் பிள்ளையார்சுழியிட்ட இரண்டு வௌ;ளைக்கார அதிகாரிகள். 1802 ஆம் ஆண்டில் சென்னை நகரத்து மெரீனாக் கடற்கரையில் கேப்டன் வில்லியம் லாம்ப்டன் என்பவர் முதல் அளவைக் கோட்டை வரைந்து தொடங்கிய இந்தப் பணியை, டேராடூனில் கடைசிக்கோட்டை வரைந்து முடித்துவைத்தவர் மூன்றாவது சர்வேயர் ஜெனரலாகப் பணியாற்றிய கர்னல் ஜார்ஜ் எவரெஸ்ட்.  இடைப்பட்ட காலம் அறுபது ஆண்டுகள்!

        இந்தப் பணியின்போதுதான் அதுவரை பெயர் சொல்லிக் குறிப்பிடாமலிருந்த இமாலயத்தின் மணிமுடியான ஒரு மலைச்சிகரத்தையும் கண்டு அதன் உயரத்தை 29002 அடி என்று கணக்கிட்டார்கள். ஜார்ஜ் எவரெஸ்ட் காலமானபிறகு இந்தப் பணியில் அடியெடுத்துக் கொடுத்த அந்த உயர் அதிகாரியின் பெயரையே அந்தச் சிகரத்துக்துச் சூட்டித் தங்கள் நன்றியைப் பதிவுசெய்திருக்கிறார்கள். நல்ல காலம்! முன்பே கண்டுபிடித்துஎவரெஸ்ட்என்று அதற்குப் பொருத்தமாக நாமகரணம் செய்துவிட்டார்கள்.

        முதலில் அளந்த தொலைவு மெரீனா கடற்கih அருகே இருந்த சிறு குன்றில் தொடங்கி  பறங்கிமலை வரையிலான ஏழரை மைல் (12 கி.மீ). இந்தத் தொலைவை அளந்து பதிவுசெய்ய 57 நாட்களாகியிருக்கின்றன. நரற்பது சிறிய இரும்புச்சங்கிலிகள் கொண்ட 100 அடி நீள அளவுசங்கிலியை 400 முறைகள் பயன்படுத்தவேண்டியிருந்ததாம்.


        புகழ்பெற்ற தஞ்சை பிரகதீசுவரர் கோயில் கோபுரத்தின் வட்டக்கல்லில் ஏறி நின்று பல டன் எடைகொண்ட கருவியை வைத்து அளவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டது லாம்ப்டனுக்கு. வழக்கம்போல் ஆலய சம்பிரதாயத்தடைகள். எப்படியோ சமாளித்து வேலையைத் தொடங்கியபோது அறுபது அடி உயரத்திலிருந்து அந்தக் கருவி கீழே விழுந்து உடைந்தது. அப்போது அந்தப் பொறுப்புள்ள அதிகாரி கர்னல் லாம்ப்டன்                                                   …2…

தம்முடைய மேலதிகாரிகளுக்கு அனுப்பிய அறிக்கை பொதுப்பணியில்  இன்றைக்குப் பொறுப்பைத் தட்டிக்கழிக்க முயலும் பலருக்கும் பாடமாக அமையவேண்டிய ஒன்று.

      ‘…நடந்த தவறுக்கு நான் பொறுப்பேற்கிறேன்.  அதன் விலையான 650 பவுண்டை என் செலவாக ஏற்கிறேன்..எனது சம்பளத்தில் பிடித்தம் செய்துகொள்ளுங்கள்..’ இந்த விலை மதிக்கமுடியாத கர்னலின் குறிப்பு இன்றைக்கு டேராடூனிலுள்ள அருங்காட்சியகத்தில், அந்த உடைந்து பழுதான தியோடலைட் கருவியோடு வைத்துப் பாதுகாக்கப்படுகிறதாம்.

      பல்சக்கரங்கள் உடைந்து பழுதான அந்தக் கருவியின் பாகங்களை உள்ளுர் ஆட்களை வைத்தே புதிதாக உருவாக்குகிறார். திருச்சி அருகே உள்ள தங்கம்பட்டி கிராமத்தின் தொழிலாளர்களை வைத்து அந்த வேலையைச் செய்துமுடித்தாராம். அந்த கிராமம்தான் பின்நாளில்கோல்டன் ராக்என்று பெயர் மாறியது. இடிந்துவிழுந்த கோபுரப்பகுதியை எடுத்துக்கட்டியபோது அதில் அந்த வௌ;ளைக்காரர் உருவத்தையும் வடித்து வைத்திருக்கிறார்கள். தஞ்சை கோபுரத்தில் இடம்பிடித்துள்ள வௌ;ளைக்காரர் உருவம் இந்த கர்னல் லாம்ப்டனுடையதுதான் என்றுகூட ஒரு குறிப்பு உள்ளது என்கிறார் இந்த அருமையான நூலை எழுதியுள்ள ரமணன்.

      இந்த நூலை எழுதுவதற்குச் செலவிட்ட உழைப்பில் ஒரு நாவல் எழுதிவிடலாம். அது பெயரையும் பொருளையும்கூடக் கொண்டுவந்துகொடுக்கும். ஆனால் புதுமையை விரும்புகிற ரமணனின் மனம் அதைச் செய்யாது  என்று மாலன் முன்னுரையில் பாராட்டுகிறார். சத்தியமான வார்த்தைகள். இப்படி ஓர் அருமையான பாடுபொருளை எடுத்துக்கொண்டு அருமையான பயனுள்ள நூலைத் தமிழில் தருவதற்கு ரமணன்தானே முன்வந்திருக்கிறார்!



கடைசிக்கோடு..இந்தியாவின் வரைபடம் பிறந்த கதைரமணன்-

கவிதா வெளியீடு, 8, மாசிலாமணி தெரு,சென்னை 600 017 தொ.பே. 044 - 2436 4243… ரூ.80-



                       ..        - சுப்ர. பாலன்





4 கருத்துகள் :

  1. பாரதி தாசன் IOB DELHI5 மார்ச், 2014 அன்று PM 6:53

    இது தொடராக வந்திருந்தால் பலரை அடைந்திருக்குமே என நான் எண்ணியதுண்டு. இப்போது புத்தகமாகவே நல்ல ரீச் இருப்பது மகிழ்ச்சியான விஷயம். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ஒரு மொழியை வேறொரு மொழியால் கற்று கொள்வதா ? இது முடியாத (கூடாத ) காரியம். கற்று கொள்ளப்படவேண்டிய மொழியின் நற்பண்புகள் தெரியாமலேயே போய்விடும் அபாயம் இருக்கிறது . நம் குழந்தைகளுக்கு நம் தாய் மொழியை நாம் தான் ( குறிப்பாக அயலகம் வாழ் தமிழர்கள்) கற்றுக்கொடுக்கவேண்டும் . புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களின் வழியை நாம் பின்பற்றலாமே

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்