இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் பங்களுரில் ஒரு இரண்டு பெட் ரூம் வாடகை பிளாட்டில் துவக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் பங்குகள் கடந்த வாரம்1,600 கோடி அமெரிக்க டாலர் (சுமார் 1,07,600 கோடி இந்திய ரூபாய்) விலையில் விற்கபட்டிருப்பதை உங்களால் நம்ப முடிகிறதா?
உலகளவில் வர்த்தகத்திலிடுபட்டிருக்கும் பெரிய நிறுவனங்கள் கூட இந்தச் செய்தியைக் கேட்டு ஆச்சரியத்தில் அதிர்ந்தன.
விற்கபட்ட நிறுவனம் இந்திய இணைய தளமார்க்கெட்டிங் கம்பெனி பிளிப் கார்ட். வாங்கியிருப்பது உலகில் விற்பனையின் அடிப்படையில் இரண்டாவது இடத்திலிருக்கும் பெரிய அமெரிக்க வணிக நிறுவனமான வால்மார்ட்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், உலகின் பல நாடுகளிலும் தன் வர்த்தகத்தைசெய்கிறது. இவர்கள் எந்தப்பொருளையும் உற்பத்தி செய்வதில்லை. உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மிகக்குறைந்த விலைக்குப் பொருட்களை வாங்கி அதைத் தங்கள் இணையதளத்தின் மூலம், வெளி மார்க்கெட்டில் விற்பதைவிட குறைந்தை விலைக்கு விற்பனை செய்யும் ஒரு நிறுவனம். இந்தியாவில் இவர்கள் காலடிவைத்ததும் துவக்கபட்ட பங்களுரு அலுவலகத்தில் பணிக்குச்சேர்ந்தவர்கள் சச்சின் பன்சால், பின்னி. என்ற இரண்டு 22 வயது இளைஞர்கள். இருவரும் டெல்லி ஐ ஐ டியில் படித்தவர்கள். நல்ல சம்பளம் என்பதால் அமேசானில் வேலைக்குச்சேர்ந்தார்கள்.
ஓராண்டு பணிக்குப் பின்னர் இவர்களுக்கு எழுந்த எண்ணம் இந்தக்கம்பெனி செய்வதை நாம் ஏன் தனியாக ஒரு கம்பெனியை உருவாக்கிச் செய்யக் கூடாது? என்பது தான். உடனே வேலையை ராஜினாமாச் செய்து விட்டுச் செயலில்இறங்கினார்கள். ஒரு சிறிய இரண்டு பெட் ரூம் வாடகை பிளாட்டில் 4 கம்யூட்டர்களுடன் துவங்கப்பட்டது பிளிப் கார்ட். . புத்தக் விற்பனையில் துவங்கி அமேசான் செய்யும் அத்தனையும் செய்வது என்ற முடிவோடு களமிறங்கிய இவர்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை உலகில் எந்த நிறுவனமும் இதுவரை கண்டதில்லை
.2007ல் துவக்கபட்ட இந்த நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 20.8 கோடி டாலர்கள் (இது டாடா ஸ்டில் நிறுவனத்தின் மதிப்பைவிட இருமடங்கு). என உலகின் முன்னணி மதிப்பிட்டு நிருவனம் மதிப்பிட்டிருக்கிறது. துவக்க நிலை (Startup) வெற்றிபெற்ற நிறுவனங்களில் உலகின் 15 வது இடத்திலிருக்கிறது பிளிப் கார்ட்
.
இந்தப் பிளிப் கார்ட்டின் 77% பங்குகளை 1,600 கோடி அமெரிக்க டாலர் (சுமார் 1,07,600 கோடி இந்திய ரூபாய்) கொடுத்து வாங்கியிருக்கிறது. இதன் மூலம் இதில் மூதலீடு செய்தவர்கள், நிறுவன ஷேர்களை பரிசாகப் பெற்ற ஊழியர்கள் பெரும் லாபம் அடைவார்கள். மொத்த 10ஆயிரம் ஊழியர்களில் 3000 பேர் ஒரே இரவில் டாலர்களில் லட்சாதிபதிகளாகிவிட்டார்கள் இந்தக் கம்பெனியின் நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சால் அவரது 6% பங்குகளுகாக 6700 கோடிகள் பெற்றுகொண்டு வெளியேறுகிறார். மற்றொரு நிறுவனர் புதிய நிறுவனத்தில் தொடர்கிறார்.
இந்த நிலையை எப்படி இந்த நிறுவனம் அடைந்தது?.
உலக இணைய சந்தை ஆய்வு நிறுவனமான ஃபாரஸ்டர் கடந்த ஆண்டு இந்தியாவில் இணையதள விற்பனையின் மதிப்பு சுமார் 2,100 கோடி அமெரிக்க டாலராக (சுமார் 1,41,250 கோடி இந்திய ரூபாய்) இருந்தது. என்கிறது. இது சராசரியாகக் கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு 10 முதல் 15 % வரை உயர்ந்து வந்ததின் விளைவு. இணையதளம் மூலம் பொருட்கள் வாங்கும் பழக்கம் இந்தியர்களிடையே அதிகரித்து வருவதால் இதைல் மிகப்பெரிய வர்த்தக வாய்ப்பு இருப்பதை அமேசானில் வேலை செய்யும் போதே கணித்து களத்தில் இறங்கியவர்கள் இந்த இளைஞர்கள்.
இவர்கள் இந்த இணைய தள வியாபாரத்தில் இந்தியர்களின் உளவியலைப்புரிந்து கொண்டு தங்கள் பிளிப்கார்ட்டில் அறிமுகப்படுத்தினார்கள். ஆன்லைன் வர்த்தகத்தின் முக்கிய தேவை கிரிடிட், அல்லது டெபிட்கார்ட். அது அதிகம் பிரபலமாகத காலகட்டத்தில் இவர்கள் உங்கள் வீட்டுக்குப் பொருள் கொண்டுவந்து தருபவரிடமே பணம் தரலாம் என்ற புதிய முறையை உருவாக்கினார்கள். அதைத்தொடர்ந்து ஆர்டர் செய்த பொருளைச் சரிபார்த்த பின்னர் டெலிவரி செய்பவரிடமே பணம்தரலாம் சரியில்லை என்றால் பொருளைத் திருப்பிக்கொடுக்கலாம். என்ற அதரடி அறிவிப்புகளினால் நிறுவனத்தின் நன்மதிப்பும் விற்பனையும் பெருகியது.
10 கோடி வாடிக்கையாளார்களுக்கு கடந்த ஆண்டுமட்டும் இரண்டு கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் பொருட்களை ஆன் லைலனில் விற்றிருக்கிறார்கள்
தொடர்ந்த விரிவாக்கத்துக்கு அதிக மூதலீடுகள் வேண்டுமே அதை எப்படி சமாளித்தார்கள்.?
புதிதாகத் துவக்கபட்டு கடின உழைப்பாலும் சமயோசிதமான திட்டமிடலாலும் வளர்ந்து கொண்டுவரும் ஸ்டார்ட்அப் கம்பெனிகளைக் கண்ணில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கின்றன சில பன்னாட்டு வென்ச்ச்ர் கேப்பிட்டலிஸ்ட் என்றா முதலீட்டு நிறுவனங்கள். இவர்கள் இம்மாதிரி கம்பெனிகளைப் பற்றி அறிந்து தங்கள் செலவில் அதன் எதிர்காலத்தை ஆராய்ந்து கணித்து முதலீடு செய்வார்கள். வாய்ப்புகள் வரும்போது தங்கள் முதலீட்டைபோலப் பல மடங்கை லாபமாகப் பெறுவார்கள். இவர்கள் தொழிலே இப்படி முதலீடு செய்வது மட்டும் தான். நஷ்டம் வந்தாலும் அவர்களுக்குத்தான். இப்படி பட்ட சில கம்பெனிகள் இந்தப் பிளப் கார்ட்டை கவனித்து தொடர்ந்து தங்கள் முதலீட்டைச் செய்து வந்தார்கள். இன்று இப்படி முதலீடு செய்த நிறுவனங்களுக்கு இந்த நிறுவனத்தை வால்மார்ட் வாங்குவதால் நல்ல லாபம் கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டு இதில் 2.5 பில்லியன் டாலர் முதலீடு செய்த நிருவனங்களில் ஒன்று ஜப்பானைச் சேர்ந்த சாப்ட் பேங்க். இன்று அவர்களின் பங்குகளுக்கு 4 பில்லியன் டாலர் பெறுகிறார்கள் அதாவது ஒரே ஆண்டில் 75% லாபம்.
வால் மார்ட் ஏன் இவ்வளவு விலை கொடுத்து இதை வாங்குகிறது?
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் போட்டியைத்தவிர்க்க அமேசான் நிறுவனமே பிளிப் கார்ட்டை வாங்கப்போவதாக மார்க்கெட்டில் பேசப்பட்டுவந்தது. ஆனால் உறுதியானதகவல்கள் இல்லை
.
வால் மார்ட். அமெரிக்காவில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நிறுவனம். பல நாடுகளிலும் பரந்துள்ளது சில்லறை வணிகத்தில் புதிய சாதனைகளையும் சரித்தரங்களை படைத்தவர்கள்.
மோடி அரசின் புதிய வணிகக்கொள்கைகளின் படி இந்தியாவிலும் பெரிய திட்டங்களுடன் சில்லறை வணிகத்தில் காலடி வைத்தவர்கள், சங்கலித்தொடராக 21 கடைகளைத் திறந்தார்கள். ஆனால் சந்தித்த எதிர்ப்புகளினாலும் அரசியலினாலும் சற்று மெதுவான வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தார்கள். பிளிப்கார்ட்டை வாங்கி இந்திய சில்லறை வர்த்தகத்தில் குறுக்கு வழியில் புகுந்துவிடலாம் என்ற அவர்களின் திட்டத்தின் விளைவே இந்த இந்திய மூதலீடு
.
இன்று வெற்றிகரமான் டீலினால் உலகத்தையே தங்களைப்பார்க்க வைத்த சச்சின் பன்ஸாலும், பின்னியும், துணிவுடனும் புதிய சிந்தனைகளுடன் ஸ்டார்ட் அப்களுடன் களமிறங்க காத்திருக்கும் இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார்கள்