11/8/12

உயர்ந்த மனிதன்

உயர்ந்த மனிதன்

இன்று(11/08/12) மதியம் 1.மணிக்கு ஒரு போன் வந்தது. இஸ் மிஸ்டர் ரமணன் தேர்?
என்பதை தொடர்ந்து  “ஐ ஆம் சிங் காலிங் ஃபிரம் யூ எஸ் என சொன்னதை கேட்ட என் மனைவி மீரா  போனை கொடுக்க    “சிங்? ஃபரம் வேர் என ? கேட்டு குழம்பிய நான்  அவர் தன்பெயரைச்சொன்னவுடன் நேற்றிரவு (10/11/12) அனுப்பிய ஈ மெயில்  பளிச்சென்று நினைவுக்கு வர மகிழ்ச்சியில் பதறிப் போனேன்,  பல ஆண்டுகள் ஆராய்ச்சிகளுக்கு பின்னர் பல ஆயிரம் கோடி  செலவில் செவ்வாய் கிரகத்திற்கு   அனுப்பட்ட க்யூராரிஸிட்டி  விண்வெளிகலம் 8 மாத பயணத்திற்கு (57 கோடி கீமீ) பின்னர் பத்திரமா  செவ்வாய் கிரகத்தில் தரையிறங்க ஒரு டிசைனை வடிவமைத்து செய்லாக்கிய ஸ்பேஸ் ஸைண்டிஸ்ட் டாகடர் குருகிருபால் சிங் தான் அவர். 

செவ்வாய் கிரக விண்கல செய்திகளை கவனித்து வந்த போது ஒரேஒரு வரியில் இவரது பெயரை பார்த்தேன். இந்தியப் பெயராக இருக்கிறதே இவரைப்பற்றி எழுதலாமே (பத்திரிகையாளன் புத்தி) என விபரங்கள் தேட ஆரம்பித்தேன், கூகுள், யாகூ, ஃபேஸ்புக் எதிலும் சிக்கவில்லை.நாஸா வெப் ஸைட்டிலும் மேய்ந்து பார்த்தேன். ஒன்றும் தேறாததால் நாஸா பிரஸ் யூனிட்டுக்கு ஒரு மெயில் அனுப்பினேன்.. அவர்களும் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. மீண்டும் அலசி நாஸாவின் தலமை விஞ்ஞானிகளிண் டைரக்டரியில் இருந்த் சிங் பெயர்களை வடிகட்டி ஒருவருக்கு  நேற்றிரவு  ஒரு மெயில் அனுப்பினேன். அதற்கு தான் இன்று அவருடைய போன். நான் அனுப்பிய ஈ மெயில் உண்மையானதுதான?- ஸ்பாம் இல்லையே?  எனபதை உறுதி செய்துகொள்வதற்காக போன்செய்ததாக சொன்னவர் மிக அன்புடன் பேசி கொண்டிருந்தார். எப்படி என்னால் அந்த மெயிலில் தொடர்பு கொள்ல முடிந்த்து என ஆச்சரியபட்டார். அவர் பெயர் வந்திருக்கும் பகுதியை இந்துவிலிருந்து  படித்து காட்டியபோது சந்தோஷப்பட்டார். 23 வருடங்கள் நாஸாவில் வேலை செய்வதையும், பெறோர்கள் டெல்லியில் இருப்பதையும் சொன்னார்.  நான் கேட்ட விபரங்களையும் அவர் படத்தையும்  உடனே மெயிலில் அனுப்பியும் வைத்தார். இதன் கிழே அந்த மெயிலையும் பதிவு செய்திருக்கிறேன்.
இவரது படத்தையும், விபரங்களையும் நேரடியாக  முதலில் பெறறிருக்கும்  ஒரே இந்திய் பத்திரிகையாளர் நான்தான். எனபதைவிட  மிக சந்தோஷமான விஷயம்  மிகப்பெரிய பொறுப்பிலிருக்கும்  இந்த மனிதரை,  ஒரு சக இந்தியனின், பத்திரிகையாளானை மதித்து மிக எளிமையாக அன்புடன் பேசி உதவிய ஒரு உயர்ந்த மனிதனை இன்று தெரிந்து  கொண்டது தான்.  
ரம்ணன்
கட்டுரை விரைவில்  
Inboxx
gurkirpal singh brensim@prodigy.net
14:14 (8 hours ago) to me
Dear Ramanan:
I had the pleasure of speaking with you a few minutes ago. Thank you for the very kind words. I am sending the material that you had requested - brief bio, a picture (attached JPEG), and a brief description of my contributions to the Curiosity mission. I am hoping that this will serve your purpose. Let me know if I missed anything. Please note that additional information regarding the mission may be obtained from the Landing Press Kit at http://mars.jpl.nasa.gov/msl/news/newsroom.  I would be grateful if you could acknowledge this e-mail.
Best regards,
Gurkirpal
 Bio
Dr. Gurkirpal Singh is a Principal Scientist at NASA’s Jet Propulsion Laboratory  in Pasadena, California. An Aeronautical Engineering graduate (1982) of Punjab Engineering College, Chandigarh, he received M.S. (1984) and Ph.D. (1988) degrees in Aerospace Engineering from The University of Michigan, Ann Arbor, Michigan, U.S.A. Dr. Singh has been with the Jet Propulsion Laboratory since 1989, where he has designed and developed spacecraft guidance and control algorithms for several highly successful NASA space missions including Galileo, Cassini, Mars Pathfinder, Deep-Space 1, Mars Exploration Rovers, and Mars Science Laboratory/Curiosity missions. Born in Ludhiana, Punjab, he received his primary and secondary education in what is now Uttarakhand. News of successful Mars landings of NASA’s Viking missions in 1976 inspired him from a very early age to pursue a career in aerospace engineering and, in particular, space exploration. It was this motivation that in 1982 brought him to the U.S. to pursue higher education in these disciplines. After having been deeply engaged in the front lines of space exploration at JPL for the last 23 years, he considers himself fortunate to be living his childhood dream. Dr. Singh still has immediate family in India who currently reside in Chandigarh and New Delhi.
 Contribution
On the night of August 5, 2012, NASA’s Mars Science Laboratory (MSL) mission successfully landed the rover Curiosity on the surface of Mars inside Gale Crater. Dr. Gurkirpal Singh designed and developed several key components of the spacecraft’s Entry, Descent, and Landing system. The guidance and control algorithms designed by Dr. Singh were used by MSL during the terminal descent and landing phase of the mission which began after parachute jettison approximately 1 mile above the Martian Surface, and ended approximately 1 minute later with rover touchdown. During this critical, heart-stopping minute Dr. Singh’s guidance system commanded the rocket engines located on the MSL’s Descent Stage to precisely control the spacecraft descent and slow it down from an initial speed of approximately 180 miles per hour to approximately 1.7 miles per hour at touchdown, thus guiding Curiosity to a controlled, soft landing. The images taken by Curiosity after touchdown confirmed that the rover had indeed landed safely, ready to begin the next phase of its mission.
 --- On Sat, 8/11/12, Singh, Gurkirpal (3443) <gurkirpal.singh@jpl.nasa.gov> wrote:
From: Singh, Gurkirpal (3443) <gurkirpal.singh@jpl.nasa.gov>
Subject: FW: Request from Media
To: "Home" <brensim@prodigy.net>
Date: Saturday, August 11, 2012, 1:03 AM






.

7/8/12

பஹஃரைன் போவோமா?


சுவடுகளில்  டாலர் தேசம் விடியோகளுக்கு தனிபக்கம் இருக்கிறது. இது  
ஒரு விடியோபடத்தையே ஒரு பதிவாக போட முடியுமா? என்பதின் சோதனை முயற்சி .
படத்தை  எளிதாக பார்க்க முடிகிறதா எனபதை சொல்லுங்களேன்



 

6/8/12

கடலுக்கு அடியில் கொட்டி கிடக்கும் வெள்ளி கட்டிகள்


(கல்கி12/8/12)

ஆழ் கடலின் அடி மட்டத்தில் என்ன கிடைக்கும்? அரிய கடற் தாவரங்கள், மீன் வகைகள்,  சிப்பி சங்கு, முத்து போன்றவைகள் தானே. ஆனால் சமீபத்தில் கிடைத்திருப்பது  வெள்ளி கட்டிகள் அதுவும் அரசு முத்திரையிடப்பட்ட சுத்த வெள்ளி கட்டிகள். கடலின் கீழே மிக ஆழத்தில் கண்டெடுக்கபட்ட இதுவரை கிடைத்ததில் மிகப்பெரிய  மிக கனமான புதையாலாக வர்ணிக்கபடுகிறது இந்த கண்டுபிடிப்பு.
1941ல் கல்கத்தாதுறைமுகத்திலிருந்து இங்கிலாந்துக்கு இந்த  240  டன் வெள்ளிகட்டிகள் எஸ். எஸ் கரிஸோப்பா என்ற கப்பலில் அனுப்ப பட்டது.

24/7/12

2012 ஓலிம்பிக்ஸில் பங்கேற்கும் ஒரு சினிமா

 

இங்கிலாநில் 150 திரையரங்குகளில்   திரையிடபட்டிருக்கும்  ஒரு படத்திற்கான இரண்டு மாதத்திற்கான காட்சிகள் ஹவுஸ்புல். படம்  எந்த புதிய ஹாலிவுட் படமுமில்லை. ஒரு 31 வருட பழைய படம்  நம் கர்ணனைப் போல  டிஜிட்டல் டெக்னாலஜியில் புதுபிக்கபட்டிருக்கும். ஒரு படம். தொழில் நுணுக்கத்துடன் தயாரிக்கபட்டிருக்கும் படத்தின் பூளுரே டிவிடியும் விற்று தள்ளி கொண்டிருக்கிறது.

17/7/12

(இன்-ஸைட்    புத்தக அறிமுகம்


வலிமையான பாரதத்தைப் படைக்க ஓளி படைத்த கண்ணினாய் வா வா என்றான் பாரதி. வெளிநாடுகளில் கண்மருத்துவத்தில் பட்டங்களும் பயிற்சிகளும் பெற்ற ஒரு இளைஞன் படிப்பை முடித்தவுடனேயே, பொதுமக்களின் நன்கொடையில் ஒரு மிகப்பெரிய கண்மருத்துவ மனையை துவக்கி எழைகளுக்கு தன் படிப்பால் சேவை செய்ய வேண்டும் எனற உறுதியான நெஞ்சத்தோடு தமிழ் நாட்டுக்கு திரும்பி, போராடி வென்ற ஒரு இளைஞனின் கதையைச்சொல்லுகிறது இந்த புத்தகம்.

11/7/12

 கடவுளை கண்டார்களா?

இந்த உலகம் பிறந்தது எனக்காக  என மகிழும்  நம்மில் சிலருக்கு தொடந்து எழுந்துகொண்டிருக்கும்  ஒரு கேள்வி- இந்த உலகம் எப்படி பிறந்தது? யார் படைத்தது?  
 வர் தான்  கடவுள் என உலகின் பல மதங்கள் சொல்லுகின்றன . ஆனால்

கருந்தேள் கண்ணாயிரம்

ஏதோ காமிக் புத்தக தலைப்பு மாதிரி இருக்கும் இது ஒரு  வலைப்பூ காமிக்குகளுக்கும் இதற்கும் ஒரு  சம்பந்தமும் கிடையாது. லார்ட் ஆப் ரிங்ஸ் படம் நினைவிருக்கிறதா? பன்னிரெண்டு ஆண்டுகள் உழைப்பில் ஒரு புதிய உலகையும் ஏராளமான  கிராஃபிக்ஸில் பல அசாத்தியங்களை காட்டிய முதல் படம்..

நெல்லையிலிருந்து வீனஸுக்கு..

கடந்த ஜுன் 6ம்தேதி விண்வெளிமண்டலத்தில்  105 ஆண்டுகளுக்கு பின்  நடந்த  ஒரு அரிய நிகழ்வு  ” “டிரான்ஸ்சிட் ஆப் வீனஸ்” “. அன்று காலை 5.30 மணிக்கு வெள்ளி கிரகம் (வீனஸ்) சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் ஒரே நேர் கோட்டில் சஞ்சரித்தது. தகிக்கும் சூரிய கிரகத்தின் முன்னே மெல்ல மறு புறம் நோக்கி நகர்ந்த வெள்ளி கிரகத்தை ஒரு சின்ன கருப்பு புள்ளியாக நகர்வதை


கனவை மறந்த குடியரசு தலைவர்.


இந்திய அரசியலில் சிலர் நிரந்தரமாக இரண்டாம் இடம் இடத்திலிருக்கும் பெருமையை பெற்றவர்கள்.  என்றாவது ஒரு நாள் பிரதமராவோம் எனற  கனவில்  தொடர்ந்து எல்லா பிரமதர்களுக்கும் அடுத்த இடத்திலிருந்து வந்த பிராணப்

20/5/12

அரண்மனையில்வாழும் புத்தகங்கள்




ஒரு கிரேக்க கோட்டையை போல் கம்பீரமாக நிற்கும்  அந்த கட்டடித்தின் முகப்பில் திமிறிப்பாயும் குதிரையை அடக்கும் வீரன்நெப்ட்யூன் தேவதை   சிலைகளில் மீது பீறீட்டு பாயும் நீர் ஊற்றுக்கள். கட்டிடத்தின் இருபுறமும் முதல் மாடிக்கு இட்டுச்செல்லும் வளைந்த படிகள். ஏறி சென்ற நம்மை பிரம்ப்பில் ஆழத்துவது  பளிங்கு தூண்கள் பரவி நிற்கும் பிரமாண்டமான கூடம்.  உலகின் மிகப் பெரிய நூலகம் என்று சொன்னார்களே தவறுதலாக எதாவது அரண்மனைக்குள் வந்துவிட்டோமோ என எண்ணிக்கொண்டிருந்த்போது  “வெல்கம் டூ அமெரிககன் லைபரரி ஆப் காங்கிரஸ் “ என சொல்லி தன்னை அறிமுகபடுத்திக்கொளகிறார் நமக்கு நூலகத்தை காட்டபோகும் கைட்.
உலகின் மிகப்பெரியமிக அதிகமான புத்தகங்களை கொண்ட இந்த லைப்பரி ஆப் காங்கிரஸ் வாஷிங்டன் நகரில் அமெரிக்க நாடளுமன்றத்திற்கு அருகிலிருக்கிறது. 210 ஆண்டுகளுக்கு முன் துவக்கபட்ட இதில்  இன்று வரை புதிய புத்தங்கள் சேர்க்கபட்டு பிரமாதமாக நிர்வகிக்கபடுகிறது.   புத்தகங்கள் நிறைய  கண்னாடி அலமாரிகள் மேசைகளில் பரவிகிடக்கும் புத்தங்கங்கள்,பத்திரிகைகள்  என்றே நூலகங்களைப்பார்த்து பழகிய நமக்கு இந்த ஆடம்பரமான அரண்மணை சூழ்நிலை ஆச்சரியமாகயிருக்கிறது. 75 அடி உயரத்தில் வண்ண சித்திரங்கள் நிறைந்த  வட்டவடிவ கண்ணாடி விதானம்,  அதே போல் படங்களுடன் கண்ணாடி சாரளங்கள் அமைக்கபட்டிருக்கும் அந்த கூடம் தான் ரீடிங் ரூம்.  வட்ட வடிவில் தனித்தனி சிறு டெஸ்க்கள் அதில் மேசை விளக்கு.  புத்தங்கள் எல்லாம்  அருகிலிருக்கும் தனித்தனி அறைகளில்துறைக்கு ஒரு அறை சிலதுறைகளுக்கு பல அறைகள்.  அறைகளிலிருக்கும் புத்தகங்கள்  வெளியிலிருந்து பார்த்தால்  தெரியாதவண்ணம் அமைக்கபட்ட அலமாரிகளில். விரும்பித்தேர்ந்தெடுத்த புத்த்கத்தை நாம் இருக்கும் இடதில் கொண்டுவந்து தந்து விட்டு படித்துபின் உடனே கொண்டுபோய் அல்மாரியில் வைத்துவிடுகிறார்கள் இங்குள்ள பணியாளார்கள். அதனால் காலியாகயிருக்கும் மேசையில் புத்தகங்கள் இருக்காது.
நூலகத்தின் சுவர்களிலும்,மாடிப்படி வளைவுகளிலும் அழகான ஒவியங்கள் கலைபொருட்கள் நிரம்பியிருக்கிறது. நடைபாதைகளின் மேற்கூரை முழுவதும் கண்னைபரிக்கும் வண்ணத்தில் சித்திரங்கள்  அமெரிக்க சுதந்திர போரின் காட்சிகள்நாட்டின்  அரசியல் சாஸனத்தின் கையெழுத்துபிரதிசட்டவடிவின் முதல் அச்சுபிரதிகொடிகள் சின்னங்கள்  சிலைகள் என ஒரு அருங்காட்சியகமாகவே அமைத்திருக்கிறார்கள்.
அமெரிக்க காங்கிரஸ் (பாராளுமன்றம்) உறுப்பினர்களின் தேவைக்காக நிறுவபட்ட இதை மிகப்பெரிய நூலகமாக்க கனவுகண்டவர்அன்றைய அதிபர் ஜெபர்ஸன்தன்னுடைய சொந்த நூலகத்தை தந்து உதவியிருக்கிறார். இன்று  அமெரிக்க அரசின் அதிகாரபூர்வமான தேசிய நூலகமாகவும் ஆராய்ச்சி நிலையமாகவும்  அங்கிகரிக்கப்ட்டிருக்கும் இந்த நூலகத்தின் தலமை நூலகர் அமெரிக்க அதிபரால் நியமிக்க படுகிறார். நூலகரின் பதவிக்காலம் வாழ்நாள் முழுவதும். அமெரிக்க அதிபர்துணை அதிபர்சென்னட்டர்கள்சுப்ப்ரீம்கோர்ட் நீதிபதிகள் மட்டும்தான் இந்கிருந்து புத்தகத்தை இரவல் பெற்று எடுத்துசெல்ல முடியும் ம்ற்றவர்களுக்கு இஙுகு படிக்க மட்டுமே கொடுக்கபடும். காங்கிரஸின் கூட்ட தொடரின் போது எதேனும் தகவல் கேட்கபட்டு அந்த சமயத்தில் தேவையான புத்தகம் நூலகத்தில் இல்லாது போகும் வாய்ப்பை தவிர்க்கவே இந்தமுறை.
3 கோடி புத்தங்கள் கேட்லாக் செய்யபட்டிருக்கும் இந்த நூலகத்தில் 400க்கு மேற்பட்ட மொழிகளில் புத்தகங்கள் இருக்கின்றன. தமிழில்  தொல்காப்பிய பதிப்பையும்1822ல் எதிர்புறத்தில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் லண்டனில அச்சிடபட்ட பார்மார்த்த குருகதையும் இருக்கிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் உள்பட அனைத்து புத்தகங்களையும் பார்க்க முடிந்தது சந்தோஷமான ஆச்சரியம்.  கைகொடுக்கும் தொழில்நுட்பத்தின் உதவியோடு இன்று பலவற்றை டிஜிட்டல் செய்துவைத்திருக்கிறார்க்ள். பல புத்தங்களை கப்யூட்டர் திரையிலே படிக்கலாம்.அதற்கான டச் ஸ்கிரீன்களைகூட கலைநயத்துடன் சூழ்நிலைக்கேற்ப வடிவமைதிருக்கிறார்கள். இவைகளைத்தவிர 60 லட்சம் கையெழுத்து பிரதிகள், 3000ஆண்டுகளின் செய்திதாட்கள், பத்திரிகைகள் லட்சகணக்கில். உலகின் முதல்  அச்சிட்ட பைபிளிலிருந்து இந்த மாதம் வந்த ஹாரிபாட்டர் வரை எல்லாம் இருக்கிறது. இதைத்தவிர போட்டோக்கள்மேப்கள்இசை தட்டுக்கள் வேறு. நூலகம் 5 மைல் நீளத்திற்கு 4 கட்டிடங்களில் பரவிகிடக்கிறது. அவைகள் சுரங்க பாதையால் இணைக்கபட்டிருகிறது.  நீங்கள் டீவிட்டரில் தனிப்பட்ட முறையில் இல்லாமல் பப்ளிக் என்ற வகையில் டிவிட் செய்பவராஅமெரிக்க அரசு அல்லது வேறு செய்திகள் பற்றி நீங்கள் டீவிட் செய்தால் அதன் பிரதியும் இஙகு சேமிப்ப்படுகிறது. இதற்காக டீவிட்டர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருகிறர்கள்.
காங்கிரஸ் உறுப்பினர்கள் இதை பயன்ப்டுத்துகிறார்களா?  “நிறையபல செனட்டர்கள் இங்கு வருவார்கள் ஹிலாரி கிளிண்ட்டன் போன்றவர்கள் அடிக்கடி வருவதோடு எதாவது தகவல்களை கேட்டுகொண்டேயிருபார்கள்  சிலருக்கு எந்த புத்தகம் எங்கே எனப்து கூட அத்துபடி”“. என்கிறார் ஒரு உதவியாளார்.
உல்கின் மிக பெரிய நூலகத்தை பார்த்ததே  ஒரு நல்ல புத்தகத்தகத்தை படித்த உணர்வை தந்தது. அதோடு வெளியே வருகிறோம். நாலு கட்டடங்களையும் நீண்ட சுரங்கபாதைகள் வழியே கடந்துவிட்டதால்   வெளியே வரும்போது வேறு ஒரு தெருவில் இருக்கிறோம்
---------------------------------------------------