23/5/10
16/5/10
“ஹாலிவுட்டை” காப்பாற்றிய ஹீரோ
“ஹாலிவுட்டை”
காப்பாற்றிய ஹீரோ
உலகம் முழுவதும் தனது சாம்ராஜ்ய
எல்லைளை விரித்திற்கும் அமெரிக்கத் திரைப்படதயாரிப்பு
நிறுவனங்கள்,ஸ்டூடியோக்கள், லாப்கள் எல்லாம் நிறந்த ஹாலிவுட் பகுதி லாஸ் எஞ்சல் நகரின் வெளியே மவுண்ட்
லீ என்ற சிறிய மலைப்பகுதியின் பின் புறமிருக்கிறது.
பேசும் சினிமாக்கள் பிரபலமாகத்தொடங்கிய 1923ல் இந்த மலைச்சரிவில் பிரமாண்டமான தனித்தனி எழுத்துகளாகHOLY WOOD
LANDS என்ற போர்டு நிறுவப்பட்டது. சில ஆண்டுகளில் LAND வாசகம் நீக்கப்பட்டது. ஒவொரு எழுத்தும் 45 அடி உயரத்தில்
ஒரு வார்தையாக 450 அடி நீளத்திற்கு நிற்கும் இது லாஸ் ஏஞ்சல் நகரின் அடையாளங்களில்
ஒன்றாகி சுற்றுலாப்யணிகள் பார்க்கவேண்டியவைகளின் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. சுற்றுலாப்ப்யணிகளுக்கு -இதை எங்கிருந்து நன்றாக
பார்க்கலாம்,எந்த இடத்திலிருந்து நீங்கள் குடும்பத்தோடு படமெடுத்துக்கொண்டால் பின்ணணியில்
இது நன்றாகவரும், போன்றவிஷயங்களோடு,இது நிறுவப்பட்ட கதை, அடிக்கடிஉடைந்த எழுத்துகளை
மாற்ற உதவியர்கள், இந்த எழுத்துகள் இடம்பெற்ற
பயங்கர ஹாலிவுட் படங்கள்,H என்ற எழுத்திலிருந்து தற்கொலை செய்துகொண்ட ஒரு நடிகை என்று இதன் நீண்ட சரித்திரத்தை ஒரு சின்ன சினிமாகவே காட்டுகிறார்கள்.
சுற்றுலாவருவர்களிடையே
வளர்ந்துவரும் ஆர்வத்தால் இப்போது இதை சீரமைத்து மின்சாரவேலியிட்டு பாதுகாக்கிறார்கள்.
எழுத்துகள் இருக்கும் மலைப்பகுதி தனியாருக்குச்சொந்தமானது. இத்தனை ஆண்டுகளுக்குபின்
அதை வாங்கிய ஒரு கட்டிட நிறுவனம், அங்கே ஆடம்பர பங்களாக்களை கட்ட போவதாக அறிவித்தது.
இந்த எழுத்துக்களை பராமரித்து நிர்வகித்துவரும் அறக்கட்டளை அந்த பகுதியை மட்டும் வாங்க முயற்சித்தது. விலை12.5 மில்லியன் டாலர்கள்
முழுபணமும் ஏப்ரல் 14க்குள் செலுத்தவேண்டும் என்பது நிபந்தனை. செலுத்தவேண்டிய பணத்திற்காக அறக்கட்டளைவிடுத்த நன்கொடை
வேண்டுகோளையெற்று, அமெரிக்காவின் 50 மாநிலங்களிலிருந்தும்
10 நாடுகளிலிருந்தும் பணம் வந்ததது. ஹாலிவுட் பிரபலங்கள் ஸ்டீவன் பில்பெர்க்,டாம் ஹாங்க்கஸ்,
போன்றவர்கள் உதவினார்கள் இந்த எழுத்துக்களைப்போல பிரம்மாண்ட வாசகங்களை அதே மலையில்
நிறுவி .லாஸ் ஏஞ்சல் நகரில் நுழையும் கார்களில் எல்லாம் தொண்டர்களின் வசூல்,விசேஷ விற்பனை
ஸ்டால்கள் என்று எல்லா வகையிலும் திரட்டியும் பணம் போதவில்லை, 1.5 மில்லியன் டாலர்கள்
குவிந்தது. விற்கும் நிறுவனம் கெடுவை நீட்டிக்க தயாராக இல்லை. 87 வருடமாக புகழ்பெற்றிருந்த
ஒரு அடையாளத்தை லாஸ் ஏஞ்சல் நகர் இழக்கபோகும் நிலை.
எதிர்பாராத ஆச்சரியமாக
கெடுவிற்கு 2நாள் முன்னதாக பிளேபாய் பத்திரிகை அதிபர்
ஹஃ ஹெப்ஃனர் அந்த
பணத்தை தருவதாக அறிவித்தார். “ ஹாலிவுட் “
அழிக்கபடமல் காப்பற்ற பட்டுவிட்ட மகிழ்ச்சியை டிவீட்டர்களிலும்,பிளாக்களிலும் எழுதித்
தள்ளுகிறார்கள் அதன் விசிறிகள்.
தன்சொந்த நன்கொடையைத்தவிர
இதற்கான முயற்சிஎடுத்து கடைசிநேரத்தில் காப்பாற்றியவர் முன்னாள் ஹாலிவுட் ஹீரோவும் இந்நாள் கவர்னமான ஆர்னால்ட்
ஷ்வர்ஸென்ஸ்கர்.
நிஜத்திலும் ஹீரோக்கள் கடைசிநேரத்தில் தான் வருவார்களோ?
(கல்கி 18.05.10)
2/5/10
ஐ பிஎல்லில் அவுட்டான அமைச்சர்
“ஒரு பாகிஸ்தான் ஆட்டகாரரைக்கூட ஏலத்தின்மூலம் சேர்க்காதது தப்பு” என்ற சர்ச்சையில் துவங்கிய ஐபிஎல் 3 வதுசீசன் ஆர்பாட்டங்களான ஆட்டங்களுடன் தொடர்ந்து புதிய கொச்சி அணி எலத்தில் ஊழல் என்ற மற்றொரு சர்ச்சையோடு முடிந்திருக்கிறது. வீரர்கள் நிகழ்த்தியதைவிட மிகப்பெரிய சாதனை ஐபிலின் தலைவர் லலித் மோடி வீசிய புகார்பந்துகளைபேட்செய்யமுடியா மல் ஒரு மத்திய அமைச்சர் சசி தரூர் அவுட்டானது தான்.
விளையாட்டுத்துறையில் அமைச்சர்களின் தலையீடு, ஊழல் குற்றசாட்டு என்பதெல்லாம் இந்திய அரசியலில் புதிதான விஷயம் இல்லை என்றாலும், இதில் குற்ற சாட்டுகள் புதுமாதிரியானது.எழுந்த புகார்கள்,சம்பந்தப்பட்ட நபர்கள் எல்லாமே புதிதானவை மட்டுமில்லை புரியாத புதிரானவைகளும் கூட. தினமொரு செய்திகளுடனும் திடுக்கிடும்திருப்பங்களுடனும், தொடர்ந்த இந்த விஷயம் கிரிக்கெட் மாட்ச்சுகளைவிட விறுவிறுப்பாகயிருந்தது. ஆனாலும் தெருக்கோடியில் விளையாடும் கிரிகெட் ஆடும் பையன்களிலிருந்து பெரிய அரசியல் வாதிகள் வரை இதில் சமந்தப்பட்ட “கோடிகளைப் ” பற்றி எழுப்பும் கேள்விகள் கிரிகெட் ரசிகனுக்கு மட்டுமில்லாமல் சாதரண மக்களுக்கும் புரியாத மர்மங்களாகத்தான் இருக்கிறது.
மர்மம்1
மற்ற டீம்களைவிட மிகமிக அதிக விலையில் (333மில்லியன் டாலர்கள் கோடி ரூபாய்) ஏலமெடுக்கபட்டது இந்த கொச்சிஅணி. வினாடிகளைக்கூட விணாக்காமல்,விளம்பரங்கலிருந்து கொட்டும் பணமழையினால் உலகம்முழுவதற்கான தொலைகாட்சி ஐபிஎல்லின் உரிமைகள் பெரிய விலைக்கு விற்கபட்டிருக்கிறது. அதனால் ஐபிஎலின் மதிப்பபும் (18000 கோடிரூபாய்!) பங்குகொள்ளும் அணிகளின் மதிப்பும் பல மடங்கு உயர்ந்து விட்டது ஒவ்வொரு ஆட்டதிலும் தொடர்ந்த லாபம் நிச்சியம் என்பதால் இந்த விலை என்று பேசப்பட்டது. ஆனால் ஏலமெடுத்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் யார் யார் என்று தெளிவாக ஏலத்திற்கு மனுச்செய்தவர்களுக்கு கூடத்தெரியாது என்று சொல்லுவது யார் தெரியுமா? ஐபிஎலின் கமிஷனருமும் ஏலத்தை நிகழ்த்திய குழுவின் தலவருமான லலித் மோடி! ஓரு சாதாரண பஞ்ஞாயத்தின் காண்டிராக்டை எடுப்பவர் கூட, காண்டிட்ராக்ட் கிடைத்தால் அந்த பணியை செய்ய தனது பொருளாதார தகுதியை நிருபிக்க சான்றுகள் சமர்பிக்கவேண்டும்.அப்படியிருக் க 300மில்லியன் டாலர் பிசினஸ் எப்படி முகம்தெரியாதவர்களுக்கு வழங்கப்பட்டது?
மர்மம்2
ஏலமெல்லாம் முடிந்து 30 நாள் காத்திருந்து ஏன் திடுமெனலலித்மோடிபுகார்புயலைகி ளப்பியிருக்கிறார்? ஏலமெடுத்த தொகையை விட பல கோடிகள் மேலும் அதிகமாக கொடுத்து அவர் விரும்பிய மற்றொரு நிறுவனத்திற்கு உரிமையை மாற்ற அவர் செய்த முயற்சிகள் பலனளிக்காதால் எழுந்த கோபத்தின் விளைவு இந்த புகார் என்றும் சொல்லபடுகிறது. அப்படியானால் அந்த அணியின் உண்மையான மதிப்புதான் என்ன?
மர்மம் 3
தனியாக ஒருபெண் போராடி தொழில்செய்து முன்னேறுவதில் இவ்வளவு முட்டுகட்டையா?அமைச்சரின் தோழியாக இருப்பதற்கும் தனக்கு இலவசமாக கிடைத்த பங்குகளுக்கும் (மதிப்பு 70 கோடி) எந்த சம்பந்தமுமில்லை. அது தனது உழைப்பிற்கும், தொடரப்போகும் சேவைக்கும் கிடைத்தது என முழங்கிய இதில் சம்பந்தப்பட்ட ஒரேபெண் சுனந்தா புஷ்க்கர் அதிரடியகாக தன் பங்குகளைதிருப்பிக்கொடுப்பானேன் ?. ஓசியாக கொடுத்து அப்படி திரும்பப்பெறபட்ட பங்குகளை அந்த நிறுவனம் என்ன செய்யும்?
மர்மம்4
ஐபில் என்ற அமைப்பு பிசிசிஐ என்ற கிரிகெட் கட்டுபாட்டு வாரியத்தால் நிறுவப்பட்ட ஒரு அமைப்பு. ஆனால் இந்த பிரச்சனைகளில் அந்த அமைப்பு எதுவும் தலையிடவில்லையே ஏன்.? அரசின் நிதித்துறையின் ஆணையால் வருமான வரி அதிகாரிகள் ஐபில் அலுவலகத்தை சோதனையிட்டபோது லலித்மோடி தர்மசாலாவில் தலாய்லாமாவை சந்த்தித்து விட்டு அங்கு நடந்த மாட்ச்சை பார்த்துக்கொண்டிருக்கிறார்.சோ தனையே நாடகமா அல்லது வரி மோசடி எதுமில்லையா?
எப்படியோஅரசியல் கிரிகெட் மாட்ச் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சசிதரூர்ரைத்டொடர்ந்து வேறுயாரும் அவுட் ஆவார்களா? அல்லது தப்பாக பெளலிங் செய்ததற்காக லலித்மோடியே ஆட்டதிலிருந்து மட்டுமில்லமால் இனி விளையாடும் தகுதியையே இழக்குமளவிற்கு தண்டிக்கபடப்போகிறாரா? டிவி அம்ப்பையர் மன்மோகன்சிங் பார்த்து சொல்லபோவதை கேட்க இந்தியா காத்திருக்கிறது.
18/4/10
ஸரஸ்வதியின் ஆசிபெற்ற சச்சின்..
“கல்யாணமான புதிதில் கணவரோடு பம்பாயில் குடித்தனம் செய்யப்போனபோது வீடு
இருந்த அந்தத்தெருவில்பையன்கள்எப்போதும்கிரிக்கெட்விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டேயிருப்பேன்.
கிராமத்திலிருந்து வந்திருந்த எனக்கு அந்த விளையாட்டு புரியவேஇல்லை. கணவரிடம் கேட்டபோது
மிக பொறுமையாக, எளிதில் புரியும்படி சொல்லிக்கொடுத்தார். தொடர்ந்து ரேடியோ கேட்டுக்கேட்டு
நிறைய புரிந்து கொள்ளவைத்தார். டிவி வந்ததற்கு அப்புறம் நன்றாக இன்னும் நன்றாக புரிந்துகொண்டேன்.
என் கணவரைப்போலவே என் 2 பிள்ளைகளும் கிரிக்கெட் ஆட்டக்காரகளாக இருந்ததால் வீட்டில்
எல்லோருக்கும் கிரிக்கெட் நன்றாக புரியும். அனேகமாக எல்லா சர்வ தேச மாட்ச்களையும் விடாமல்
பார்த்திருக்கிறேன்” என்று சொல்லும் சரஸ்வதி வைத்தியநாதன் சச்சின் தண்டுல்கரின் அதி தீவிர ரசிகை.சச்சின் விளையாட ஆரம்பித்த நாளிலிருந்து
இன்று வரை அவரது சாதனைகள பற்றிய எந்த கேள்விக்கும் அனாசியாமாக பதில் தரும் இவரின் வயது
அதிகமில்லை. 87 தான்! இப்போது சென்னயில் மகனோடு
வசிக்கும் இந்த“ கிரிக்கெட் பாட்டியை” சந்திக்கிறோம். படுக்கை அறையில் சச்சின்
போஸ்டர். அருகில் சச்சின் பற்றிய புத்தகம்.தெளிவான ஆங்கிலம் அவ்வப்போது ஹிந்தி.
“முதலில் கவாஸ்கரின் ரசிகையாகத்தான் இருந்தேன். “ஞபகமிருக்கிறதா 1993 ஹிரோ
கப் மாட்ச் தெனாப்பிரிக்காவோடு மோதியபோது கடைசி ஒவர்-வெற்றிக்கு 6 ரன் தேவை என்ற நிலையில்
தய்ங்கிய அசாருதின் கையிலிருந்து பந்தை வாங்கி இந்த குட்டிபையன் செய்த பெளலிங்கில்
பேட்ஸ்மென் ரன் அவுட்டாக 3 ரன்னில் நாம் ஜெயித்தோமே-
அன்றிலிருந்து சச்சின்தான் என்னுடைய பேவரிட்.” என்று எதோ போன வாரம் பார்த்த மேட்ச்சைப்பற்றி
பேசுவது போல பேசுகிறார். அது மட்டுமில்லை தொடர்ந்து சாதனைகள் படைத்தாலும் மிக சிம்பிளாக,
தெய்வபக்தியுடன், சமுக சேவை செய்வதால் சச்சினை
நான் என் பேரனைப்போல மிக மிக நேசிக்கிறேன் என்று சொல்லும் இந்த பாட்டி கிரிக்கெட்க்கு
அப்பால் சச்சினைபற்றி பல விஷயங்கள்- அவர் பந்தராவில் பள்ளிக்கூடம் நடத்துவது,எழைகளுக்கு
படிக்க உதவது போன்ற பல தகவல்கள் தெரிந்திருக்கிறது. கிரிகெட்டைத் தவிர பிடித்தது டென்னிஸ்
.ரோஜரர் ஃபெடர்ர், பீட்டர் சாம்ராஸ் போன்ற ஜாம்பவான்களின் ஆட்டங்கள் பற்றி பேசும் இவர்
கிரிக்கெட் ஒரு விளையாட்டில் தான் பலவிதமான காட்ச்.,பேட்டிங் ஸ்டைல் என வெரைட்டி இருப்பதால்
அது தான் பெஸ்ட் கேம் என்கிறார். இரவு 1 மணியானாலும் சச்சின் விளையாடினால் கண் முழித்து
(வீட்டில் மற்றவர்கள் தூங்கினாலும்) பார்த்து கையிருக்கும் சிறுபேப்பரில் ஸ்கோர் விபரங்களை
குறித்து வைத்துகொண்டு அதை மறு நாள் நோட்டில் எழுதிவைக்கிறார். ஒரு முறை எழுதிய பின்னர்
அதை அவர் அந்த விபரங்களை மறப்பதில்லை..இந்த
வயதிலும் இந்த நினைவாற்றல் எப்படி சாத்தியாமகிறது? “விசேஷ பயிற்சி எதுவும் கிடையாது-
பகவான் அருள்’ என்னும் இவர் குடும்பத்தில் அனைவரது பிறந்த நாள், நேரம் சரியாக சொல்லுகிறார்.-
4வது பேரன் சச்சின் உள்பட. இரண்டு வயதில் அம்மாவின் பின்னால் மாடி படியேறி போய் கடைசிப்படியிலிருந்து
விழுந்ததும், முச்சுநின்றிருந்ததால் இறந்துவிட்டதாக எண்ணி எல்லோரும் அழுததும்,பின்
நினைவுவந்ததும் இன்றும் நினைவிருக்கிறது என்று சொல்லி ஆச்சரியப்படுத்தும் இவர் அதற்கு
பிறகு சச்சின் விஷயங்கள் தான் அந்த மாதிரி நினைவில் நிற்கிறது என்கிறார்.
ஆஸ்திரேலியாவிலிருக்கு பேரனை போய்பார்ப்பதைவிட சச்சினை நேரில் பார்த்தால் சந்தோஷப்படுவேன் என்று சொன்ன இவரது பேட்டியை ஹிந்து நாளிதழில் பார்த்த
சச்சின் IPL மேட்ச்சுக்காக சென்னை வந்தபோது அழைத்து சந்தித்தார். வரும் எப்பரல் 24ல்
பிறந்த நாள் கொண்டாடும் சச்சினுக்கு “இண்டெர்நேஷனல் கிரிக்கெட்டில் 100 செஞ்சுரி அடிக்க
இன்னும் 7 பாக்கியிருக்கிறது, சீக்கிரம் அதைச் செய்ய ஆசிகள்” என்று சொல்லி ஒரு சிறு வெள்ளிப்பிள்ளையாரை கொடுத்தபோது இவரின் காலைதொட்டு வணங்கி அதைப்பெற்றிருக்கிறார்
பிளாஸ்டர் மாஸ்டர். சச்சினை நேசிக்கு இவர் அவர் விளையாடும்போதெல்லாம் அவரது வெற்றிக்கு
பிரார்த்திப்பதில் ஆச்சரியம் இல்லை- இவர் இதுவரை ஒரு கிரிக்கெட் மாட்சைக்கூட ஸ்டேடியத்தில்
பார்த்ததில்லை என்பதுதான் ஆச்சரியம்.
சந்திப்பு- ரமணன்
கல்கி18.04.2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)