25/9/11

பணம் காய்க்கும் மரங்களை வளர்ப்பவர்


லைப் பூஸ்டர் 8             
 ராம் ஸ்ரீராம்

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் போர்ப்ஃஸ் பத்திரிகை ஆண்டு தோறும் முதல் 400 கோடிஸ்வரகளின் பெயர்களை பட்டியிலிடும்.  2005 ஆண்டிலிருந்து இந்த பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்றுவரும்  அமெரிக்கா வாழ் இந்தியர்  ராம்ஸ்ரீராம். அதே பத்திரிகை புதிய தொழில்களில் முதலீடு செய்து பெறும் லாபம் ஈட்டியவர்களின் பெயர்களை மைடாஸ் லிஸ்ட் MIDAS LIST  (மைடாஸ் தொட்டதெல்லாம் தங்கமாகும் மன்னரின் பெயர் ) என்றும் வெளியிடுகிறது. அதில்  இவரது பெயர் கடந்த 6 ஆண்டுகளாக முதல் 5 இடத்துக்குள்ளாகவே இருக்கிறது.   இன்றைய இவரது சொத்து 1.8 பில்லியன் டாலர்களுக்கு மேல். (ரூ9000 கோடிக்கும்மேல்)  இன்று  14 நாடுகளிலிருக்கும் 11 நிறுவனங்களில் டைரக்கடாரக இருக்கிரார். அதில் ஒன்று கூகுள் நிறுவனம்.  இந்த கோடிஸ்வரர் ராம்ஸ்ரீராம் ஒரு  தமிழர்.  சென்னையில் ஒரு சாதாரண மத்தியதர குடும்பத்தில் பிறந்தவர். தாத்தாவீட்டிலிருந்து டான்பாஸ்கோவிலும் பின்னர் லயோலா கல்லூரியிலும் படித்தவர் தாய் ஒரு கல்லூரியில்  ஆங்கில விரிவுரையாளார். எப்படி இவ்வளவு பெரிய செல்வந்தர் ஆனார்.?   “சரியான முடிவுகளை, மிக்சரியான நேரத்தில் எடுத்தது தான் ஒரு முக்கிய காரணம். நல்ல படிப்பின் அவசியத்துடன்,  டிஸிப்பிளினாக வளர்த்த என அம்மா தான் என் ஆதர்ஸம். படிப்புக்கு வெளியே  எல்லா போட்டிகளிலும் பங்கேற்கசெய்து  டென்னிஸ் விளையாட அனுப்பி, என்னை ஒரு துணிவான மனிதாக்கினார். 70களில் எல்லாமத்திய தர குடும்பத்து மாணவன் போல எனக்கு ஐஐடி ஆசை- பாங்க் வேலை போன்ற கனவுகள் இல்லை, தாத்தா அதுபோன்ரவைகளை விரும்பினாலும்  என் விருப்பத்தை  மதித்த அம்மா நான் விரும்பவதையே படிக்க அனுமதித்தார். அமெரிக்கபோய் படிக்க விரும்பியபோதும் இந்த மாதிரி கோடிஸ்வர கனவுகள் எதுவும் இருந்த்த்தில்லை. ஆனால் சொந்தமாக ஒரு கம்பெனி எனற எண்ணம் மட்டும வள்ர்ந்துகொண்டே வந்த்தது. மெக்சிக்கன் பல்கலைகழகத்தில் எம்பிஏ முடித்தவுடன்  ஒரு சிறிய டெலிகாம் கம்பெனியில் வேலைகிடைத்தது. அப்போது வேலைக்கு இன்றுபோல் கஷடங்கள் கிடையாது. சிலநாளில் அந்த கம்பெனியை  பெரிய அமெரிக்க நிறுவனமான பெல் வாங்கிவிட்டது. அதில் எனக்கு இண்டெர்நேஷ்னல் மார்க்கெட்டிங் கற்றுகொள்ள  நல்ல வாய்ப்புகள். உலகின் பல நாடுகளுக்கு நிறைய பயணங்கள் புதிய அறிமுகங்கள் எல்லாம். அமெரிக்காவிலிருக்கும்போது வேலை தொடர்பாக் அடிக்கடி சிலிகான் வேலிக்கு போவேன் அங்குதான் தனித் தொழில் வாய்ப்புகள் அதிகம் எனபதை உணர்ந்தேன். இணைத்தை பயன்படுத்தும் பெளரவுசர்களில் முதலாவதான நெட்ஸ்கேப்  நிறுவந்த்தில் பணிகிடத்தது. அங்கு இண்டர்நெட்டின் வலிமையை புரிந்துகொண்டேன். எனறு சொல்லும் ஸ்ரீராம் தன் 28 வயதில் பார்த்த வேலையைவிட்டுவிட்டுதுவக்கியது ஒரு டெலிகாம் கம்பெனி. அன்றைய அமெரிக்க அதிபர் ரீகன் அறிவித்தபுதிய ஸ்பெட்ரம் லைசென்ஸ் கொள்கையினால் கவரப்பட்டு டெலிகாம் துறையில் புதிய தொழில் துவங்கி  தோற்றிருக்கிறார். அந்த டெக்னாலாஜியை முழுவதும் பயன்படுத்துகூடிய வேகமான கம்ப்யூட்டர்களும், லேப்டாப்களும் வராத காலம் அது.  நிகழும் காலத்திற்கு முன்பாகவே நாம் சிந்திக்கிறோம் எனற தவறை உணர்கிறார். க்டனை அடைக்க மீண்டும் வேலைதேடிபோய் சம்பாதித்திருக்கிறார்.  பின்னர் 1994ல் துவக்கிய  தொழில் இணையதளத்தில் பொருட்கள் விற்கும் ஒரு நிறுவனம், அப்போது அமோஸான் என்ற நிறுவனம் அம்மாதிரி இணைய விற்பனையை பெரிய அளவில் துவக்கியிருந்தது. அவர்கள் ஸ்ரீராமின் நிறுவனத்தை விலைக்கு கேட்க நல்லவிலையில்விற்றவர் அவர்களிட்மே அந்த இணையதளத்தினை நிர்வகிக்கும் பொறுப்பை 1998ல் ஏற்கிறார். கிடைத்த பணத்தை ஸ்டான்போர்ட் கல்லூரியில்தன்னுடன்  படித்த நண்பர்கள் துவங்கும் புதிய  கம்பெனியில் முதலீடு செய்கிறார். அந்த நிறுவனம் கூகுள்.  30 லட்சமவாடிக்கையாளார்களுடன் இருந்த அமோஸான்  ராம் ஸ்ரீராமின் நிர்வாக்திரமியினால் 1கோடி வாடிக்கையாளார்கள் உள்ள கம்பெனியாக் உயர்ந்து உலகின் மிகபெரிய இணையதள வியாபார நிறுவனமாகிறது. சேவைக்கான போனஸாக அதன் பங்குகளைப்பெறுகிறார். அதனையும் விற்று கூகுளின் பங்குகளை வாங்கிகிறார். கூகுளின் இயக்குனராக இருந்த போதும் அது முதலீட்டுக்கு நல்ல லாபத்தை ஈட்டிகொண்டிருந்த போதும்.  2005ம்  இவர் வைத்திருந்த கூகுள் பங்குகள் 34 லட்சம் பங்குகள். அதில் பாதியை பணமாக்கி  ஒரு தனி கம்பெனியை நிறுவுகிறார்.  இவரது தன்னுடைய 25 ஆண்டுகால டெலிகாம், இணைய மார்க்கெட்டிங் புதிய கம்பெனிகள் துவக்கிய அனுபவங்களின் அடிப்படையில் அவர் ஆரம்பித்த நிறுவனம்  ஷெர்ப்பாலொ (SHERPALO) என்ற வென்ச்சர் காப்பிட்டல் முதலீட்டு நிறுவனம். வென்சர் காப்பிட்டல் என்பது  வெறும் நிதி நிறுவனம் இல்லை. மிக வேகமாக் வளர்ந்து நல்ல லாபத்தை ஈட்டகூடிய புது முய்றசிகளுடன் தௌவங்கப்ட்டிருக்கும் தொழிலைகளை கண்டறிந்து அவர்களுக்கு உதவுவது.  ” “முயற்சி உங்களுடையது முதல் எங்களுடையது “ “ எனற ரீதியில் முதலீடு செய்து லாபத்தில் பங்குப்பெறுவார்கள்.90களில் அமெரிகாவில் தோன்றிய இது இன்று உல்கெங்கும் பரவியிருக்கிறது.  அதனென்ன பெயர் ஷெர்ப்பாலொ  ” “கடினமான ம்லைஏற்றத்தில் சாதனையாளருடன் கடைசி வரை, உச்சியை அடையும் வரை வந்து உதவி செய்பவர் ஷெர்ப்பா எனற உதவியாளார். சாதனையாளாரின் அத்தனை கஷ்டங்களையும் படுபவர் இவர். அதுபோல நாங்கள் எனறு சொல்லும் இவரது நிறுவனம் இன்று உலகின் பலநாடுகளில்  வெற்றிபாதையை நோக்கிச்செல்லும் புதிய தொழில்களில் செய்திருக்கும் முதலீடுகள்  அதிக  அளவில் லாபத்தை கொட்டிகொண்டிருக்கிறது. .  தொழில்துவங் கிறவர்க்ளுக்கு, நிதி மட்டுமில்லை ஆலோசனை, வழிகாட்டுதல்  மார்கெட்டிங், நிர்வாக் பயிற்சி கூட்டுமுதலிட்டார்களை அறிமுகபடுத்துவது போன்ற பல விஷயஙகளில் உதவுகிறார்கள்.  ” “எந்த வெற்றியையும் தவறுகள் செய்யாமல் அடைய முடியாது. என் முயற்சிகளில் நான் செய்த தவறுகளை “  ராமின் தவறுகள் “ என புத்தகமே எழுதலாம். அவைகளை புதியவர்கள் செய்யகூடாது என்று சொல்லும் இவரது நிறுவனம் இந்தியாவில் நாக்ரி.காம், மைட்ரிப்.காம்,  ஜூம் இன் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது.
இவரது மனைவி விஜயலக்‌ஷ்மியும் தமிழகத்தை சேர்ந்தவர். இரண்டு மகள்களும் ஸ்டான்போர்ட் கல்லூரியில் படிக்கிறார்க்ள். விஜிஸ்ரீராம் என்று அறியபட்டிருக்கும் திருமதி ஸ்ரீராம் தனம் என்ற அறகட்டளையை நிறுவி பள்ளிகல்வியை பாதியில் விட்ட அமெரிக்க மாணவர்களுக்கு கல்வி அளிக்கும்   K  12 பள்ளிகளையும் அதை சார்ந்த சமுக நல அமைப்புகளையும் நிறுவி நடத்திகொண்டிருக்கிறார்.
கூகுள் நிறுவனத்தின் பங்குகள் இந்த உயரதிற்கு போகும் எனபதை எப்படி உங்களால் கணிக்க முடிந்தது? . ” “என்சொந்த கம்பெனியை விற்று கிடைத்த பணம், பத்திரமாகமூதலீடு செய்து ,அதிக லாபத்துடன் திருப்பிப்பெற நான் செய்த ஆராய்ச்சி, நண்பர்க்ள் தேர்ந்த்டுத்திருந்த  டெக்னாலாஜியின் மீது நம்பிக்கை ஆகியவ்றால் கூகுள் இணைய உலகில் ஒரு மிகப்பெரிய அசைக்கமுடியாத சக்தியாகும் என்பதை அது துவங்குமுன்பே கணித்தேன்.  கணிப்பு சரியாகயிருந்தது “ என்கிறார்.  இப்படி ஒரு நிறுவனத்தின் எதிர்கால வெற்றியை கணிக்கும் திறன் இவரிடமிருப்பதால் தானோ என்னவோ இவரது ஷெர்ப்பாலொ  நிறுவனம் உலகெங்கிருந்தும் புதிய எண்ணங்களோடு சாதிக்க துடிக்கும்  இளைஞர்களின் முயற்சிகளை தேடிப்போய் வரவேற்று  மூதலீடு செய்கிறாகள்.  உங்களிடம் எதாவது புது சூப்பர் ஐடியாக்ளும் திட்டங்களுமிருந்தால் தொடர்பு கொள்ளுங்களேன்.  
18/9/11

உழைப்பில் விளைந்த வெற்றிகனிகள்


லைப் பூஸ்டர் 7              

பழமுதிர் நிலையம் சின்னசாமி


தமிழகத்தின் 8 நகரங்களில் 30 கிளைகளுடன் ஆயிரத்துக்குமேற்பட்ட ஊழியர்களோடு இயங்கும் இந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு மொத்த வியாபாரம் 120 கோடிக்கும் மேல். வெளி நாட்டு பழவகைகளை பெரிய அளவில் நேரடியாக இறக்குமதி செய்யும்  இந்த நிறுவனம் பிறந்தது கோவை நகரில் ஒரு ஒழுக்கமான உழைப்பாளியாக தள்ளு வண்டியில்  பழம் விற்றுகொண்டிருந்த இளைஞனின  மனத்தில் தோன்றிய சிறு பொறியிலிருந்து..  “நல்ல பழங்களாக தருகிறாய் ஆனால் எனக்கு வசதியான நேரத்திற்கு வரமாட்டேன்கிறாயயே, ஒரு கடை போட்டால் நானாவது வந்து வாங்குவேன் “ என்ற ஒரு இல்லத்தரசியின் வார்த்தைகள் அசீரீயாக ஒலித்தது சின்னச்சாமிக்கு.  பள்ளிக்கூடமே இல்லாத குக்கிராமத்தில் பிறந்த சின்னச்சாமிக்கு  நடந்து பககத்து ஊர் பள்ளிக்கூடம் போய் படிக்கமுடியாத குடும்ப சூழ்நிலை.   12 வயதிலிருந்து கிடைத்த வேலயை செய்து குடுபத்துக்கு உதவிய அந்த சிறுவனை உறவினர் கோவை அருகே உள்ள அன்னூரில்  ஒரு முஸ்லீம் பழக்காரரிடம் வேலை பழக ஒப்படைத்தார்.  அன்று முதல் பழங்கள் தான் அவன் உலகம். பஸ்நிலையத்திலிருந்த அந்த கடை காலை முதல் பஸ் 5மணிக்கு கிளம்பும் முன் திறக்கபடும் இரவு 10 மணிக்கு கடைசி பஸ்  கிளம்பியபின் மூடப்படும்.  எந்த விடுமுறையும் கிடையாது.பழங்களை பார்த்து பார்த்து துடைத்து அடுக்கி வைத்திருந்த முறை வருபவர்களை கவர்ந்து வியாபாரம் பெருகியது. எந்த நேரத்திலும் பொய் சொல்ல கூடாது யாரையும் ஏமாற்றகூடாது என்ற பாடத்துடன் பழ வியாபரத்தையும் முதலாளியிடம் கற்றபடி மூன்றாண்டுகள் ஒடின, பஸ்நிலைய கடைகள் எலத்தில் எதோ அரசியல். முதலாளி கடையை மூடிவிட்டார். என்ன செய்வது எனறு தெரியாத  சின்னசாமி பஸ் ஏறிசென்ற இடம் ஊட்டி. அங்கு ஒரு பலசரக்குகடையில் உதவியாளார் வேலை அதுவே தங்குமிடதானால் நாள் முழுதும் வேலை. 18 வயது ஆவதற்காக காத்திருந்து
கோவையில் ஒரு மில்லில் கூலியாக வேலைக்குசேர்ந்த சின்னசாமிக்கு சந்தோஷத்திவிட சங்கடம் தான் அதிகமாகயிருந்தது. காரணம் ஒரு நாளில் 18 மணி நேரம் உழைத்தவருக்கு 8 மணி நேர ஷிப்ட் கஷ்டமாகியிருந்தது , மில் ஷிப்ட் நேரம் போக மீதி நேரத்தில் ஆப்பிள் சாத்துக்குடி மலைப்பழம் வாங்கலியோ என குரல் எழுப்பி கோவை முழுவதும்  சுற்றி வந்த  நேரம்  மிக சந்தோஷமாந்தாயிருந்திருக்கிறது..  எல்லா தெருக்களுக்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு போகமுடியாததில் எழுந்த வாடிக்கையாளரின் கேள்வியின் விடை தான்  அவருடைய முதல் கடை.  போட்டிக்கு அருகில பளீர் விளக்குகளுடன் வந்த புதிய காய்கறிகடையை பார்த்தவுடன் தான் இந்த வியாபாரத்திற்கு அதுவும் அவசியம் எனப்து புரிந்தது.  விரித்த நீயூஸ் பேப்பரில் பழங்களும்  குண்டு பல்புமாகயிருந்த நாஙகளூம் மாறினோம். கோவையின் பல ஏரியாக்களில் அறிமுகமாகியிருந்த்தால்  கிளைகள் பிறந்தன. தம்பிக்கும் வயது 18 ஆகி மில்லில் வேலை கிடைத்ததால் நான் தைரியமாக முழு நேரவியாபாரியானேன்.   கடைக்கு பெயர் வைக்கவேண்டும் என்ற எண்ணம்கூட என்னுடையதில்லை. பழம் வாங்க வரும் ஒரு பள்ளி தமிழ் ஆசிரியர் தான், இருக்கும் அதிகபழவகைகளை பார்த்து இந்த பெயர் வைத்தார். அவரே போர்டும் தயாரித்து அனுப்பினார்.
இன்றைக்கு  இவர்களுடைய அத்தனை கிளைகளிலும் சேர்த்து ஒரு நாள் வரும் வாடிக்கையாளார்கள் 40000 க்கும் மேல் இருப்பதின் காரணம் பழங்க்ளுடன் காய்கறிகளும், பழங்களில் நல்ல வெளிநாட்டு வகைகளும்விற்பது தான்.  முதலில் இதையெல்லாம் நம் மக்கள் எல்லோரும் வாங்குவார்களா என்ற பயம் இருந்தது. இன்று நகரங்களில் உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சியும் பழங்களும் அவசியம் எனபதை நிறையவே உணர்ந்திருகிறார்கள்.  நல்ல பழங்களை பாதுகாக்க ஏர்கண்டிஷன் அவசியமாயிற்று அதையே கஸ்டமர்களுக்கு செய்யும்போது பெரிய இடங்கள் அவசியமாயிற்று என்பதை தனது கடைகள் பரந்த பரப்பிலிருப்பதற்கு காரணமாக சொல்லுகிறார் இவர்.  விலை அதிகமாகிவிடுமே என்ற நம் கேள்வியை  தவறு என்கிறார். பல காலமாக கோவையில் ப்ழங்களின் விலையை பேப்பரில் அறிவிப்பவர்கள் நாங்கள்.  எங்கள் போட்டியாளார்கள் இதை வரவேற்கவில்லை எனற போதிலும் நாங்கள் செய்கிறோம். காரணம் தரமான பழங்களின் மார்கெட் விலயை மக்கள் அறிவதற்காகத் தான்.  விலை அதிகம் வைத்தால் மக்கள் எங்களை ஒதுக்கிவிடுவார்கள் எனகிறார். இவர்களின் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளினாலும் முதல் கிளையை  திறந்தவர்கள் இப்போது பலநகரங்களில் பரவியிருக்கிறார்கள் தமிழகம் முழுவதும் பரவது லட்சியம் என்று சொல்லும் இவரது மகன் செல்வம் இப்படி காய்கனி வியாபாரத்தில் செயின் ஸ்டோரை தெனிந்தியாவில் அறிமுகபடுத்தியது தங்கள் நிருவனம் தான் என்கிறார்.  சாப்ட்வேர்கள் தயாரிக்க படித்து பயிற்சி பெற்ற இவர் தயாரித்த  ஒரு மென்பொருளால்  வியாபார நிர்வாக்த்தில் பல விஷயங்கள் எளிதாக்கப்பட்டிருக்கிறது.  இதை பல வியாபர நிறுவனங்கள் விரும்பி கேட்டதால் அதை தயாரிப்பதற்காகவே ஒரு தனி நிறுவனத்தை துவக்கியிருகிருப்பதாக சொல்லும் செந்தில் தந்தையின் காய்கனி வியாபாரம் தான் முதனமையானதும் முக்கியமானதும்  எனகிறார்.
தங்கள் கடைவாசலில் வ்ரும் வடிக்கையாளர்களுக்காக பழஜூஸ் விற்க ஆரம்பித்தில் தெரிந்த விஷயம் அதை வாடிக்கையாளார்கள்  பெரிதும் விருபுகிறார்கள். எனபது. அதை  நன்கு ஆராய்ந்தபின் அதற்காகவே தனி கடைகளை நல்ல வசதிகளுடன் பல இடங்களில் ஆரம்பித்துவிட்டார்கள்.  ஒரு நாளைக்கு 20000 கப்புகள் ஆரோக்கியமான பழ ஜுசை மக்கள் அருந்திக்கொண்டிருக்கிறார்கள். முதலில் வெளிநாட்டு பழங்களை இடைத்தரகர்கள் மூலம்  இறக்குமதி செய்துகொண்டிருந்தவர்கள் இப்போது உலக புகழ பெற்ற நிறுவனங்களிலிருந்து நேரடியாகவே இறக்குமதி செய்கிறார்கள். இது நல்ல தரத்தை குறைந்த விலையில்  தரமுடிகிறது என்று சொல்லும் இவர்கள்  அண்டை நாடுகளுக்கு நமது பழங்களை ஏற்றுமதி செய்யவும ஆரம்பித்திருக்கிறாகள்.  வாழக்கையில் நான் எதையும்  எதிர்கால எதிர்பார்ப்பு திட்டங்களுடன்  ஆரம்பிக்கவில்லை. கிடைத்த வாய்ப்பை ந்மபிக்கையுடனும் நன்பர்கள் உதவியுடனும் உழைப்பினால் செயல் படுத்தினேன்.  இபோது அடுத்த தலைமுறை அதை சிறப்பாக வளர்க்க முயற்சிக்கிராரகள் அதைத்த்விர ஒன்றும் வெற்றி ரக்சியம் இல்லை என்று அடக்கதுடன் சொல்லும் சின்னசாமி இன்றும் பல நாட்களில் விடியற்காலை நேரங்களில் விற்பனை செய்பவைகளை கொள்முதல் செய்ய மார்கெட்டுக்கு  தனது குடும்பத்து இளைய தலைமுறையினரையும் அழைத்துகொண்டு போகிறார். 

96     
11/9/11

6வேலைத்தேடி தரும் வேலை


              

நாடு முழுவதிலிருந்தும் பல லட்சங்களில் தேர்வு எழுதி அதில்முன்னணி ம்திப்பெண்கள் பெறும் சூப்பர் புதிசாலிகளில் சிறந்த்வர்களை மட்டும்  சலித்து தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கும்  கல்வி நிறுவனம் இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மெனேஜமெண்ட்.. இன்று உலகதரத்திலிருக்கும் இதில் படித்தவர்களை  பட்டம் பெற்றும்முன்னே போட்டிபோட்டு பெரிய நிறுவனங்கள் பணியில் அமர்த்திக்கொள்ளும். இந்த நிர்வாகயியல் பயிற்சி நிறுவங்களில் முதலிடத்திலிருப்பது  அஹமதாபாத் ஐஐஎம்.  அதில் பயின்ற மத்தியதர குடும்பத்திலிருந்து வந்த ஒரு மாணவர்.    படிக்கும்போதே பெரிய வேலை என லட்சியமில்லை நான் ஒரு புதிய தொழில் துவங்கி வெற்றிகரமாக நடத்துவேன் என்ற் சொல்லிக்கொண்டிருந்தபோது  அவருடையா பேராசியர் உள்பட புருவம் உயர்த்தியவர்கள் பலர். அவர் சஞ்ஜீவ் பிக்சந்தானி. தனது  கன்வுகளுடன் துவக்கிய லட்சிய பயணத்தில் 10 ஆண்டு பயணத்திற்கு பின்னர்  வெற்றி கண்டவர்.  இன்று இந்தியாவின் மிகப்பெரிய இணையத்தின் மூலம் வேலைதேடித்தரும் நிறுவனமாகியிருக்கும் நாக்ரி.காம் நிறுவனத்தை உருவாக்கியவர்.  இன்று இந்த நிறுவனத்தின் மதிப்பு 200கோடி இதுவரை பதிவுசெய்திருப்பவர்கள் 10 ல்ட்சத்திற்கும் மேல். பலருக்கு  வேலை கிடைக்க உதவியிருக்கிறது. Naukri.com  இணையதளம். தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் வேலை வாய்ப்பு தேடல் இயந்திரம். (Job Search Engine). இத்தளத்தில் நீங்கள் வேலை தேடுவது, விண்ணப்பிப்பது மட்டுமல்லாது, பல்வேறு முன்னணி நிறுவனங்களில் இருக்கும் தேவை பற்றிய அறிவிப்புகளை, அந்த நிறுவனங்களின் Career இணைப்பிலிருந்து பெறலாம். இது மட்டுமல்லாது உங்கள் தகுதிக்கேற்ற வேலைகளை உங்கள் மின்னஞ்சல், அலைபேசியில் பெறுவதோடு SMS மூலமும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
ஐஐஎம்ல் படிப்பு முடிந்த வந்தவுடன் எதாவது தொழில் ஆரம்பிப்பது பற்றி தீவரமாக சிந்தித்து கொண்டிருந்தவரை ” “தீர்மானம் செய்யும்வரை ஒரு வேலையில் சேர்ந்து கொஞ்சம் பணமும் சேர்த்துக்கொள்” “ என்று சொன்னவர் உடன் படித்த தோழியும் பின்னாளில் மனைவீயுமான சுரபி. அவருக்கு நெஸ்லே நிருவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்திருந்தது.  ஆலோசனையை ஏற்று ஹார்லீக்ஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். நல்ல சம்பளம், வசதிகள் இருந்தாலும்  உள்ளத்தில் “சொந்தபிஸினஸ்” “ என்ற கனல் கனிந்த்து கொண்டேயிருந்தது.  திருமணமான புதிதில் ஒரு நாள் வேலையை வீசியெறிந்துவிட்டு, மனைவியிடம் நமது நிருவனம் பிறந்து  வளர்ந்து ஒருநிலையை அடையும் வரை நீ குடும்ப செலவுகளை சமாளிக்க வேண்டும் எனறு சொல்லிவிட்டு தன் தந்தையையின் வீட்டின் பின்னே இருந்த வேலையாட்களத்ங்கும் இரண்டு அறை வீட்டில்  நணபரை பார்டனராரக சேர்த்துகொண்டு நிறுவனத்தை துவக்குகிறார். பெயர் இன்போ எட்ஜ் திட்டமிட்டிருந்த பிஸினஸ்டேட்டா பிராஸிங், ஆலோசனைகள் வழங்குவது. அப்போது இந்தியாவில் அதிகமான அளவில் நிறுவனங்கள் கம்பூட்டர்களை பயன்படுத்தவில்லை, தகுதியான் ஆட்களும் இல்லை. என்வே இது நல்ல தொழிலாக வளரும் என்பது சஞ்ஜீவின் கணிப்பு,. ஆனால் எதிர்பார்த்த அளவில் வரவேற்பில்லை.. வருமானம் இல்லாமல் செலவுகள் கூடின.அதை சமாளிக்க ஒரு மானேஜ்மெண்ட்ட் கல்லூரியில் லெக்சரர் வேலைஇரண்டாவது குழந்தையை எதிர்பார்த்திருந்த சுரபியும் வேலையை விட்டிருந்தார். அதானால்  ஒரு நாளிதழலில் வேலை வாய்ப்பு பக்கஙகளை கவனிக்கும் சிலமணி நேர பகுதி நேர இரண்டாவது வேலை. சஞ்ஜீவ் வாய்ப்புகளை அணுகி போகுமிடங்களில் எல்லாம் பலர் பிசினஸ் டூடே என்ற பத்திரிகையை எல்லோரும் கடைசி பக்கத்திலிருந்து படித்து கொண்டிருப்பதை பார்த்தார்.   ஏன் என கவனித்து போது அது  நிறுவனங்களில் மேல்மட்ட வேலைவாய்பு விளம்பரஙகள் தெரிந்த்தது. இதை  மற்ற சதாரண வேலைவாய்ப்களுடன் நாமே தொகுத்து தரலாம் என்ற எண்ணத்தில் தினசரி பேப்பர்களில்  வந்திருக்கும் வாய்ப்பை தொகுத்து ஒரு டேட்டா பேஸை உருவாக்க தனது அலுவலக  ஊழியர்களை பணித்தார். (அவர்களுக்கு வேறு வேலையுமில்லை எனபதும் ஒரு விஷயம்.).. இவ்வளவு கஷ்டங்களுக்கிடையேயும் தனது நிறுவனத்தை நடத்தி வந்ததிருக்கும் இவரது அசைக்கமுடியாத தன்னம்பிக்கை நம்மை ஆச்சரியபடவைக்கிறது.  ஒரு நாள் மாலையில் பிரமாத விள்மபரபடுத்தபட்ட பொருட்காட்சியில் தனக்கு வாய்ப்பாக எதேனும் ஒரு நிறுவந்த்தின் தொடர்பு கிடைக்குமா என போனவரின் கண்ணில் பட்டது  WWW  என்ற பெயரில் ஒரு ஸ்டால். என்னவென்று விசாரித்த்தில் அது தான் இண்டர்நெட் என்றும் அதில் மெயில்அனுப்பிக்கொள்ளலாம் என்றும் தனியாக ஒரு தளம் வைத்துகொண்டு தங்கள் தொழில் பற்றி சொல்லாம் எனறும் தெரிந்து கொண்டார். உடனே இதன்மூலம் நாம் ஏன் பிஸினஸ் செய்யகூடாது எனற எண்ணம் எழுந்தது. கவனியங்கள். இன்று இண்டர்நெட் மூலம் பணம் கொட்டிக்கொண்டிருக்கும் பிஸினசை நடத்திகொண்டிருக்கும் சஞ்ஜீவிக்கு அன்று இண்டர்நெட் என்றால் என்னவென்ன்று கூட தெரிந்திருக்கவில்லை.   “எனக்கு இண்டர்நெட் எனபது தெரிந்திரிக்கவில்லை. ஆனால் சில வினாடிகளில் அதில் இருக்கும் வியாபார வாய்ப்பை புரிந்துகொண்டேன்” “ என்கிறார் சஞ்ஜீவ்.  தொடர்பு கொண்டு விபரஙகள் அறிந்த போது இணையத்தில் ஒரு தளமாக இணைய  சர்வர் இருக்கும் நிறுவந்த்தின் உதவி அவசியம் அது அமெரிக்காவில் இருக்கிறது, கட்டணம்  மாதம் 25 டாலர் செலுத்த வேண்டும் எனபதை அறிந்தார். அமெரிகாவிலிருக்கும் சகோதரை  தொடர்பு கொண்டு  இண்டர்நெட் எனறால் தெரியுமா? உதவமுடியுமா? எனகேட்டார். அவர் சிரித்து கொண்டே இங்கு எல்லோரும் பயன் படுத்துவதாக சொல்லி உதவ உறுதியளித்தார். அவர் உதவும் பணத்திற்கு தந்து நிறுவனத்தில் 5% பங்குகள் தருவதாக சொன்ன தம்பியின் நம்பிக்கையை பராட்டியவருக்கு அப்போது தெரியாது அந்த பங்குகள் ஒரே  இரவில் அவரை கோடிஸ்வரனக்கபோகிறது எனபது.
தனது தொழில் இதுதான் என முடிவுசெய்துவிட்ட சஞ்ஜீவ் முழு முச்சாக அதில் இறங்கினார். இரண்டு முழு இரவுபகல்கள் உழைத்து ஒரு திட்ட அறிக்கயை உருவாக்கினார். எதை எப்படி ஏன் செய்ய வேண்டும் என்ற கச்சிதமான் திட்டம். வெப் சைட்டை வடிவமைக்கவும் நிர்வகிக்கவும் டெக்கினிகல் விஷயஙகள் அறிந்தவர்கள்  தேவை எனபதால் ஐஐஎம்லில் கூட படித்த  நணபர் லாலை  அழைத்தார்.  சம்பளம் கிடையாது  நிறுவனத்தின் பங்குகளில் 9 % எனபது ஒப்பந்தம். கம்ப்யூட்டர் ப்ரோகிராமில் கில்லாடியான அவர் எனக்கு இண்டர்நெட் பற்றி எதுவும்  தெரியாது எனறவரிடம் உனனால் முடியும் என்று ஊக்கபடுத்தியதில் ஒரே வாரத்தில் நான் தயார் என்றார். சேமித்து வைத்த வேலை வாய்ப்புகள் டேட்டாகள் உதவின. 1000 வேலைவாய்ப்பு விபரங்களுடன் நாக்ரி. காம் 1997ல் பிறந்தது. சொந்தத்தில் ஒரு கம்ப்யூட்டர்கூட இல்லாதால் நணபர் லாலின் கம்ப்யூட்டர் மூலம் இயங்கியது. முதலாண்டு 18லட்சம்இரண்டாம் ஆண்டு 36 லட்சம் என பிஸினஸ் வளர்ந்தது. கூடவே புதியபோட்டியாளார்களும் களத்தில் இறங்க தனது நிறுவனம் அவர்களைவிட பிரமாண்டமாக்யிருக்க வேண்டியதை உணர்ந்த சஞ்ஜீவிவ் செய்தத  துணிவான முடிவு. 2005ல் நிறுவன முதலுக்கு பங்குசந்தையை நாடியதுதான். நம்பமுடியாத ஆச்சரியமாக பங்குகள் வேண்டி விண்ணப்பத்தவர்கள் லட்சகணக்கில். தேவைக்குமேல் 55 மடங்கு. 320ருபாய் ஷேர்  600ருபாய்களுக்கு விற்றது. சஞ்ஜீவ் குடும்பத்தினர் தஙக்ள் பங்ககளில் சிலவற்றை விற்று கோடிஸ்ரர்கள் ஆனார்கள். அந்த ஆண்டு நாக்கிரி.காமின் வருமானம்  84 கோடி லாஉஅப் 13 கோடிகள். அன்றிலிருந்து இந்த நிறுவனம்  வேலை தேடுவதை பல புதிய பரிமாணங்களோடு அறிமுகபடுத்தி வளர்ந்துகொண்டிருக்கிறது.   “சொந்த தொழில் செய்யவிரும்புகிறீகளா? திட்டத்தில் அசாத்திய நம்பிக்கை வைத்து உழையுங்கள். வெற்றி நிச்சியம் வரும் த்மாதமாகத்தான் வரும்  அதுவரை காத்திருக்க கற்றுகொள்ளுங்கள் “ எனகிறார் சஞ்ஜீவ்


4/9/11

அழகான அழைப்பிதழ்கள் அழைக்கின்றன


லைப் பூஸ்டர் 5 4               

மேனகா கார்ட்ஸ் சங்கரலிங்கம்சொர்கத்தில் நிச்சியக்கப்பட்டாலும்  இணையத்தில் நிச்சியிக்கப்பட்டாலும்,  அழைப்பிதழ்கள் அச்சிடபட்டு வழங்கபட்ட பின்னர்தான் தான் திருமணங்கள் நடைபெறுகின்றன. திருமண அழைப்பிதழ் எனபது அச்சகங்களின்  ஒரு  அச்சு பணி என்ற நிலையை மாற்றி அவைகள் அழகான வடிவத்தில் அமைக்கபட்டு  முதன் முதலில் தமிழகத்தில் திருமண அழைப்புகளுக்கே ஒரு  தனிகெளரவம்  சேர்த்தவர்கள்   மேனகா கார்ட்ஸ்.  இன்று இந்த  துறையில் முதலிடம் பெற்று நாடெங்கும் க்ஷ்க்ஷ்க்ஷ் கிளகளுடனும் க்ஷ்க்ஷ்க்ஷ் போன்ற வெளிநாடுகளிலும் கிளைகளுடன் இயங்கும் இந்த நிறுவனத்தின்  துவக்கம் ஆச்சரியமானது.  இதை துவக்கியது அச்சு தொழிலை செய்துகொண்டிருந்த ஒரு குடும்பத்திலிருந்து அல்லது பெரிய வியாபரா பிண்னணியுள்ள  குடும்பத்திலிருந்து வந்தவராலால் இல்லை.  மிகமிக  எளிய குடுமபத்தில் பிறந்து  படிப்பின் அருமையை உணர்ந்த ஆனால் படிக்க முடியாத  வாழ்க்கைச் சூழ்நிலைகளின்யின் மேடு பள்ளங்களை கடந்துவந்தவர்.. இன்று வெற்றியின் வாயிலில் இருக்கும் இவர் வந்த பாதை புதியபாதை மட்டுமில்லை கடினமானதும் கூட.
 தென்  தமிழகத்திலிருக்கும் வானத்தை நம்பியிருக்கும் பல  வறண்ட கிராமங்களில் ஒன்று சாத்தான்குளம். திருநெல்வேலியிலிருந்து 50 கீமி  தூரத்திலிருக்கும் இந்த கிராமத்தில் விவசாயிகளும் பனை மரங்களும் தான் அதிகம்.   ஆனால் விவசாய தொழிலுக்கு  வாய்ப்பில்லாததால் சாரயாங்காய்ச்சுவதுதான் பலருக்கு வேலை.  ஒரு பகுதி கூலியாக கிடைத்தை குடித்துமகிழ்ந்தவர்கள். அந்த கிராமத்தில் உழைப்பின், படிப்பின் அவசியத்தையை உணர்ந்த்டிருந்திருந்த ஒரு தந்தை, தன் மகனை பக்கத்துஊர் பள்ளிக்கூடத்திற்கு  கைபிடித்து நடத்தி கூட்டிபோய் படிக்கவைத்தவர். அப்படி ஆரமப கல்வியைப் படித்த பையன் சங்கரலிங்கம்.  நாங்குநேரி அரசின் விடுதியில் தங்கி உயர்நிலைபள்ளிப் படிப்பை   தொடர்ந்தபோது அடிக்கடி பார்த்தது அருகிலுள்ள டிவிஎஸ் அதிகாரிகள் காரில் வருவதைத்தான்.  இந்த நிலையை அடைக்க தான் ”நன்றாக படிக்க வேண்டியதின்  அவசியத்தை யாரும் சொல்லாமலே உணர்ந்தான் அந்த மாணவன்.  தந்தையின் விருப்பபடி அக்ரிகல்சரல் ஆபிஸாரகும் ஆவலில் கோவைகல்லூரிக்கு மனுச்செய்து நேர்முகத்திற்கு  அழைப்பு வந்தவுடன்  எதோ வெளிநாட்டுக்கு போகும் ஆவலுடன்  கோவை சென்ற சஙகரலிஙக்த்திற்கு ஏமாற்றம. அட்மிட்ஷன் கிடைக்கவில்லை. மனமொடிந்து ஊருக்கு திரும்பியவர் அடுத்த் ஆண்டு  மீண்டும் முயற்சிக்கும் வரை  பக்கத்து ஊரான திசையன்விளை  வரை  சைக்கிளில் போய்  டைப்ரைட்டிங் படிக்க ஆரம்பித்தவர்  ஊர்கார்களுக்கு உதவ விறகு வாங்கி  தந்ததையையே ஒரு  தொழிலாக ஆரம்பிதார்.. அடிக்கடி சைக்கிள் பஞ்சரானாதால் பஞ்சர் ஒட்ட கற்று  கொண்டதிருந்ததினால், சாத்தன் குளத்தில் முதல்முதலாக ஒரு பஞ்ஞ்ர் ஒட்டும்கடை போர்டுடன் பிறந்தது. கடை வைத்திருந்தால் கூட அக்ரி படிப்பின்மீது  ஆசை போகவில்லை. அடுத்த ஆண்டு மனுச்செய்தபோதும்  அட்மிஷன் கிடைக்கவில்லை. மனம் வெறுத்துபோன சங்கரலிங்கத்தை கடையை கவனத்துடன் கவனித்து பெரிது படுத்தும் யோசனையைச்சொல்லி ஆறுதல் படுத்தினார்.தந்தை.   ஆனாலும் அந்த இளைஞனின் மனதில்  சாதிக்க வேண்டும் என்று கனிந்து கொண்டிருந்த கனல் மெல்ல அனாலாகி,  உயரஙகளைத்தொட வேண்டிய நமக்கு வேண்டியது இந்த கிராமத்தில் இல்லை  என்ற முடிவோடு கையில் 300 ரூபாய்களுடன் கோவைக்கு பயணமானான்.
எந்த அறிமுகமும் இல்லாத ஒரு இளைஞனுக்கு தெரியாத ஊரில் வேலை கிடைப்பதைவிட கஷ்டமான காரியம் வேறுஏதுவுமில்லை என்பதை உணர்ந்த சங்கலிங்கம் ஏற்றது ஒரு ஹோட்டலில் சர்வர் வேலை. சாப்பாடும், தங்குமிடமும் நிச்சியமாகயிருந்ததாலும் தொடர்ந்து வேலை தேடுவதை நிறுத்த வில்லை. கோவையிலிருந்து அப்போது  வெளியாகிகொண்டிருந்த கலைகதிர் பத்திரிகையின் துணை ஆசிரியர் முருகானந்தம் அவருடைய பைண்டிங் தொழிலை நிர்வகிக்கும் வேலையை தந்தார். இந்த மனிதரை சந்தித்தது  தன் வாழ்வில்  அதிர்ஷ்டம் என்கிறார். சஙகரலிஙகம். இவரது படிக்கும் ஆர்வத்தை பாராட்டி மாலைக்கல்லூரியில் பி.காம் படிக்க வைத்திருக்கிறார். அச்சக தொழிலில் நாளெல்லாம் இருந்ததினால் அதை முறையாக சிறப்பாக அறிய பிரிண்டிங் டெக்னாலாஜி படிக்க விரும்பிய போது  அதற்கும் உதவி செய்து துணை நின்றிருக்கிரார் முருகானாந்தம் எனற  அந்த நல்ல மனிதர். தொடர்ந்து அச்சக கல்லூரியின் முன்னாள் முதல்வர் நடத்திய அச்சகத்திலேயே பணிக்கு சேர்ந்து  திறமையை வளர்த்து கொண்டிருந்தவரின் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பம். டைரக்டர் மகேந்திரனின உதிரிபூக்கள் படத்தில் ஒரு சின்ன வேடதில் நடிக்க கிடைத்த வாய்ப்பு  “கனவுத் தொழிற்சாலயில்”’“ ஆர்வத்தை தூண்டியது. சில வாய்ப்புகள் பல ஏமாற்றங்கள் என  நான்காண்டு போராட்டதிற்கு பின்னர் அண்டன் கனவு கலைந்தபின்  இவர் புரிந்துகொண்டது.” “ முயற்சித்தும் ஒரு விஷயம் முடியவிலையென்றால், முடியும் விஷயத்தை நாம் முயற்சிக்க வில்லை “ என்பதுதான்.  இந்த நிலையில் ஊரில் குடும்பத்தினர்  இவருக்கு திருமணம் பேசி முடிவு செய்திருக்கிறார்கள். அச்சுக்கலையை நன்கு அறிந்த இவர் தன் திருமண பத்திரிகையை  தானே அழகாக வடிவமைத்து  அச்சகத்தில் கொடுத்த போது  எல்லா அச்சகங்களும் சொன்னபதில் “ இதை உடனடியாகச் செய்ய முடியாது “  மிக சதாரண முறையிலேயே தன் திருமண அழைப்பை அச்சிட நேர்ந்த இவருக்கு தோன்றிய யோசனை  “ஏன் இதற்காகவே ஒரு அச்சகத்தை ஏற்படுத்தகூடாது? “ என்பது தான்.  எண்ணம் எழுச்சி பெற்று 1900 ஆம் ஆண்டு செயல்வடிவம் பெற்றது. தரமாக தயாரிக்க பட்ட ரெடிமேட் கார்டுகளில் 24 மணி நேரத்தில் அழைப்பிதழ அச்சிட்டு தரப்பட்டது அந்த கால கட்டதில் ஆச்சரியமான விஷயம். இந்து மத பிரிவுகள் தவிர மற்ற மதத்தினருக்கும் ஏற்ப வடிவமைக்கப்ட்ட  கார்டுகளும், தயாரித்து வைக்கபட்டிருந்த பத்திரிகைகளின் வாசகஙகளும் பெரும் வரவேற்பை பெற்றது.  இன்று 1000க்கு மேற்பட்ட டிசைன்களடன் எந்த மதப்பிரிவினரின் திருமணத்திற்கும் கார்டுகளுடன் காத்திருக்கும் இவர்கள் தொடர்ந்து புதிய டிசைன்களையும் உருவாக்கிகொண்டிருக்கின்றனர். முதலில் திருமணத்திற்குமட்டும்  என டிசைன் கார்டுகளை துவங்கிய இவர்கள் இப்போது பிறந்த குழந்தையை தொட்டிலிடுவதிலிருந்து,  சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷகம் வரை  எல்லா சுப நிகழ்வுகளுக்கும் பல டிசைன்களில் கார்டுகளை தயாரிக்கிறார்கள்.
 ஒரு கார்டு  5 ருபாயிலிருந்து  5000 ரூபாய்வரை என விலைகளில்  பல வகைகள் வைத்திருக்கும் இவர்களின் கார்டுகளை ஆன்லைனில் பார்த்து  தேர்ந்தெடுக்கும் வசதியையும் அறிமுகபடுத்தியிருகிறார்கள்.   தொழில் நுட்ப வளர்ச்சியுடன் நாம் இணைந்து வளர வேண்டியது  காலத்தின் கட்டாயம் என்று சொல்லும் நிறுவனர்  “ இண்ட்டர்னெட்ட்டைப்பயன்படுத்தி நேரிலே வராமல் தேந்தெடுத்த கார்டில் அழைப்பிதழை தயாரித்து பெற்றுக்கொள்பவர்களும் உண்டு. எங்களிடம் வந்து இருக்கும் டிசைன்களைய்ல்லாம் பார்த்துவிட்டு  மாறுதல்களை சொல்லி புதிதாக உருவாக்குசொல்பவர்ககளும் உண்டு”. எதுவாகயிருந்தாலும் சிறப்பாக செய்யவேண்டும். ஏனெனில் அடுத்த கஸ்டமர்களை அறிமுகபடுத்தபோகிறவ்ர்கள் அவர்கள் தான் “.  என்கிறார். சென்னையில். பெரிய நகரங்களில் விற்பனை செய்தாலும்  கார்டுகள் தயாரிக்கும் தொழிற்சலையை தன்  சொந்த கிராமமான் சாத்தன்குளத்தில்  நிறுவி  கிராமத்து இளைஞகள் பலருக்கு வேலை வாய்ப்பை தந்திருக்கிறார்.   தொழில் துவஙக விரும்பும் இளைஞர்களுக்கு இவர் சொல்லவிரும்புவது  “பிஸிஸில் நேர்மையாக இருக்க முடியாது-ஏமாற்றினால்தான் நிறைய சம்பாதிக முடியம் “ என்று சொல்லுவதை நம்பாதீர்கள். ஏற்காதீர்கள். முடியும் என்பதற்கு என்  வாழ்க்கையே  உதாரணம் “