23/5/10
16/5/10
“ஹாலிவுட்டை” காப்பாற்றிய ஹீரோ
“ஹாலிவுட்டை”
காப்பாற்றிய ஹீரோ
உலகம் முழுவதும் தனது சாம்ராஜ்ய
எல்லைளை விரித்திற்கும் அமெரிக்கத் திரைப்படதயாரிப்பு
நிறுவனங்கள்,ஸ்டூடியோக்கள், லாப்கள் எல்லாம் நிறந்த ஹாலிவுட் பகுதி லாஸ் எஞ்சல் நகரின் வெளியே மவுண்ட்
லீ என்ற சிறிய மலைப்பகுதியின் பின் புறமிருக்கிறது.
பேசும் சினிமாக்கள் பிரபலமாகத்தொடங்கிய 1923ல் இந்த மலைச்சரிவில் பிரமாண்டமான தனித்தனி எழுத்துகளாகHOLY WOOD
LANDS என்ற போர்டு நிறுவப்பட்டது. சில ஆண்டுகளில் LAND வாசகம் நீக்கப்பட்டது. ஒவொரு எழுத்தும் 45 அடி உயரத்தில்
ஒரு வார்தையாக 450 அடி நீளத்திற்கு நிற்கும் இது லாஸ் ஏஞ்சல் நகரின் அடையாளங்களில்
ஒன்றாகி சுற்றுலாப்யணிகள் பார்க்கவேண்டியவைகளின் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. சுற்றுலாப்ப்யணிகளுக்கு -இதை எங்கிருந்து நன்றாக
பார்க்கலாம்,எந்த இடத்திலிருந்து நீங்கள் குடும்பத்தோடு படமெடுத்துக்கொண்டால் பின்ணணியில்
இது நன்றாகவரும், போன்றவிஷயங்களோடு,இது நிறுவப்பட்ட கதை, அடிக்கடிஉடைந்த எழுத்துகளை
மாற்ற உதவியர்கள், இந்த எழுத்துகள் இடம்பெற்ற
பயங்கர ஹாலிவுட் படங்கள்,H என்ற எழுத்திலிருந்து தற்கொலை செய்துகொண்ட ஒரு நடிகை என்று இதன் நீண்ட சரித்திரத்தை ஒரு சின்ன சினிமாகவே காட்டுகிறார்கள்.
சுற்றுலாவருவர்களிடையே
வளர்ந்துவரும் ஆர்வத்தால் இப்போது இதை சீரமைத்து மின்சாரவேலியிட்டு பாதுகாக்கிறார்கள்.
எழுத்துகள் இருக்கும் மலைப்பகுதி தனியாருக்குச்சொந்தமானது. இத்தனை ஆண்டுகளுக்குபின்
அதை வாங்கிய ஒரு கட்டிட நிறுவனம், அங்கே ஆடம்பர பங்களாக்களை கட்ட போவதாக அறிவித்தது.
இந்த எழுத்துக்களை பராமரித்து நிர்வகித்துவரும் அறக்கட்டளை அந்த பகுதியை மட்டும் வாங்க முயற்சித்தது. விலை12.5 மில்லியன் டாலர்கள்
முழுபணமும் ஏப்ரல் 14க்குள் செலுத்தவேண்டும் என்பது நிபந்தனை. செலுத்தவேண்டிய பணத்திற்காக அறக்கட்டளைவிடுத்த நன்கொடை
வேண்டுகோளையெற்று, அமெரிக்காவின் 50 மாநிலங்களிலிருந்தும்
10 நாடுகளிலிருந்தும் பணம் வந்ததது. ஹாலிவுட் பிரபலங்கள் ஸ்டீவன் பில்பெர்க்,டாம் ஹாங்க்கஸ்,
போன்றவர்கள் உதவினார்கள் இந்த எழுத்துக்களைப்போல பிரம்மாண்ட வாசகங்களை அதே மலையில்
நிறுவி .லாஸ் ஏஞ்சல் நகரில் நுழையும் கார்களில் எல்லாம் தொண்டர்களின் வசூல்,விசேஷ விற்பனை
ஸ்டால்கள் என்று எல்லா வகையிலும் திரட்டியும் பணம் போதவில்லை, 1.5 மில்லியன் டாலர்கள்
குவிந்தது. விற்கும் நிறுவனம் கெடுவை நீட்டிக்க தயாராக இல்லை. 87 வருடமாக புகழ்பெற்றிருந்த
ஒரு அடையாளத்தை லாஸ் ஏஞ்சல் நகர் இழக்கபோகும் நிலை.
எதிர்பாராத ஆச்சரியமாக
கெடுவிற்கு 2நாள் முன்னதாக பிளேபாய் பத்திரிகை அதிபர்
ஹஃ ஹெப்ஃனர் அந்த
பணத்தை தருவதாக அறிவித்தார். “ ஹாலிவுட் “
அழிக்கபடமல் காப்பற்ற பட்டுவிட்ட மகிழ்ச்சியை டிவீட்டர்களிலும்,பிளாக்களிலும் எழுதித்
தள்ளுகிறார்கள் அதன் விசிறிகள்.
தன்சொந்த நன்கொடையைத்தவிர
இதற்கான முயற்சிஎடுத்து கடைசிநேரத்தில் காப்பாற்றியவர் முன்னாள் ஹாலிவுட் ஹீரோவும் இந்நாள் கவர்னமான ஆர்னால்ட்
ஷ்வர்ஸென்ஸ்கர்.
நிஜத்திலும் ஹீரோக்கள் கடைசிநேரத்தில் தான் வருவார்களோ?
(கல்கி 18.05.10)
2/5/10
ஐ பிஎல்லில் அவுட்டான அமைச்சர்
“ஒரு பாகிஸ்தான் ஆட்டகாரரைக்கூட ஏலத்தின்மூலம் சேர்க்காதது தப்பு” என்ற சர்ச்சையில் துவங்கிய ஐபிஎல் 3 வதுசீசன் ஆர்பாட்டங்களான ஆட்டங்களுடன் தொடர்ந்து புதிய கொச்சி அணி எலத்தில் ஊழல் என்ற மற்றொரு சர்ச்சையோடு முடிந்திருக்கிறது. வீரர்கள் நிகழ்த்தியதைவிட மிகப்பெரிய சாதனை ஐபிலின் தலைவர் லலித் மோடி வீசிய புகார்பந்துகளைபேட்செய்யமுடியா மல் ஒரு மத்திய அமைச்சர் சசி தரூர் அவுட்டானது தான்.
விளையாட்டுத்துறையில் அமைச்சர்களின் தலையீடு, ஊழல் குற்றசாட்டு என்பதெல்லாம் இந்திய அரசியலில் புதிதான விஷயம் இல்லை என்றாலும், இதில் குற்ற சாட்டுகள் புதுமாதிரியானது.எழுந்த புகார்கள்,சம்பந்தப்பட்ட நபர்கள் எல்லாமே புதிதானவை மட்டுமில்லை புரியாத புதிரானவைகளும் கூட. தினமொரு செய்திகளுடனும் திடுக்கிடும்திருப்பங்களுடனும், தொடர்ந்த இந்த விஷயம் கிரிக்கெட் மாட்ச்சுகளைவிட விறுவிறுப்பாகயிருந்தது. ஆனாலும் தெருக்கோடியில் விளையாடும் கிரிகெட் ஆடும் பையன்களிலிருந்து பெரிய அரசியல் வாதிகள் வரை இதில் சமந்தப்பட்ட “கோடிகளைப் ” பற்றி எழுப்பும் கேள்விகள் கிரிகெட் ரசிகனுக்கு மட்டுமில்லாமல் சாதரண மக்களுக்கும் புரியாத மர்மங்களாகத்தான் இருக்கிறது.
மர்மம்1
மற்ற டீம்களைவிட மிகமிக அதிக விலையில் (333மில்லியன் டாலர்கள் கோடி ரூபாய்) ஏலமெடுக்கபட்டது இந்த கொச்சிஅணி. வினாடிகளைக்கூட விணாக்காமல்,விளம்பரங்கலிருந்து கொட்டும் பணமழையினால் உலகம்முழுவதற்கான தொலைகாட்சி ஐபிஎல்லின் உரிமைகள் பெரிய விலைக்கு விற்கபட்டிருக்கிறது. அதனால் ஐபிஎலின் மதிப்பபும் (18000 கோடிரூபாய்!) பங்குகொள்ளும் அணிகளின் மதிப்பும் பல மடங்கு உயர்ந்து விட்டது ஒவ்வொரு ஆட்டதிலும் தொடர்ந்த லாபம் நிச்சியம் என்பதால் இந்த விலை என்று பேசப்பட்டது. ஆனால் ஏலமெடுத்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் யார் யார் என்று தெளிவாக ஏலத்திற்கு மனுச்செய்தவர்களுக்கு கூடத்தெரியாது என்று சொல்லுவது யார் தெரியுமா? ஐபிஎலின் கமிஷனருமும் ஏலத்தை நிகழ்த்திய குழுவின் தலவருமான லலித் மோடி! ஓரு சாதாரண பஞ்ஞாயத்தின் காண்டிராக்டை எடுப்பவர் கூட, காண்டிட்ராக்ட் கிடைத்தால் அந்த பணியை செய்ய தனது பொருளாதார தகுதியை நிருபிக்க சான்றுகள் சமர்பிக்கவேண்டும்.அப்படியிருக் க 300மில்லியன் டாலர் பிசினஸ் எப்படி முகம்தெரியாதவர்களுக்கு வழங்கப்பட்டது?
மர்மம்2
ஏலமெல்லாம் முடிந்து 30 நாள் காத்திருந்து ஏன் திடுமெனலலித்மோடிபுகார்புயலைகி ளப்பியிருக்கிறார்? ஏலமெடுத்த தொகையை விட பல கோடிகள் மேலும் அதிகமாக கொடுத்து அவர் விரும்பிய மற்றொரு நிறுவனத்திற்கு உரிமையை மாற்ற அவர் செய்த முயற்சிகள் பலனளிக்காதால் எழுந்த கோபத்தின் விளைவு இந்த புகார் என்றும் சொல்லபடுகிறது. அப்படியானால் அந்த அணியின் உண்மையான மதிப்புதான் என்ன?
மர்மம் 3
தனியாக ஒருபெண் போராடி தொழில்செய்து முன்னேறுவதில் இவ்வளவு முட்டுகட்டையா?அமைச்சரின் தோழியாக இருப்பதற்கும் தனக்கு இலவசமாக கிடைத்த பங்குகளுக்கும் (மதிப்பு 70 கோடி) எந்த சம்பந்தமுமில்லை. அது தனது உழைப்பிற்கும், தொடரப்போகும் சேவைக்கும் கிடைத்தது என முழங்கிய இதில் சம்பந்தப்பட்ட ஒரேபெண் சுனந்தா புஷ்க்கர் அதிரடியகாக தன் பங்குகளைதிருப்பிக்கொடுப்பானேன் ?. ஓசியாக கொடுத்து அப்படி திரும்பப்பெறபட்ட பங்குகளை அந்த நிறுவனம் என்ன செய்யும்?
மர்மம்4
ஐபில் என்ற அமைப்பு பிசிசிஐ என்ற கிரிகெட் கட்டுபாட்டு வாரியத்தால் நிறுவப்பட்ட ஒரு அமைப்பு. ஆனால் இந்த பிரச்சனைகளில் அந்த அமைப்பு எதுவும் தலையிடவில்லையே ஏன்.? அரசின் நிதித்துறையின் ஆணையால் வருமான வரி அதிகாரிகள் ஐபில் அலுவலகத்தை சோதனையிட்டபோது லலித்மோடி தர்மசாலாவில் தலாய்லாமாவை சந்த்தித்து விட்டு அங்கு நடந்த மாட்ச்சை பார்த்துக்கொண்டிருக்கிறார்.சோ தனையே நாடகமா அல்லது வரி மோசடி எதுமில்லையா?
எப்படியோஅரசியல் கிரிகெட் மாட்ச் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சசிதரூர்ரைத்டொடர்ந்து வேறுயாரும் அவுட் ஆவார்களா? அல்லது தப்பாக பெளலிங் செய்ததற்காக லலித்மோடியே ஆட்டதிலிருந்து மட்டுமில்லமால் இனி விளையாடும் தகுதியையே இழக்குமளவிற்கு தண்டிக்கபடப்போகிறாரா? டிவி அம்ப்பையர் மன்மோகன்சிங் பார்த்து சொல்லபோவதை கேட்க இந்தியா காத்திருக்கிறது.
18/4/10
ஸரஸ்வதியின் ஆசிபெற்ற சச்சின்..
“கல்யாணமான புதிதில் கணவரோடு பம்பாயில் குடித்தனம் செய்யப்போனபோது வீடு
இருந்த அந்தத்தெருவில்பையன்கள்எப்போதும்கிரிக்கெட்விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டேயிருப்பேன்.
கிராமத்திலிருந்து வந்திருந்த எனக்கு அந்த விளையாட்டு புரியவேஇல்லை. கணவரிடம் கேட்டபோது
மிக பொறுமையாக, எளிதில் புரியும்படி சொல்லிக்கொடுத்தார். தொடர்ந்து ரேடியோ கேட்டுக்கேட்டு
நிறைய புரிந்து கொள்ளவைத்தார். டிவி வந்ததற்கு அப்புறம் நன்றாக இன்னும் நன்றாக புரிந்துகொண்டேன்.
என் கணவரைப்போலவே என் 2 பிள்ளைகளும் கிரிக்கெட் ஆட்டக்காரகளாக இருந்ததால் வீட்டில்
எல்லோருக்கும் கிரிக்கெட் நன்றாக புரியும். அனேகமாக எல்லா சர்வ தேச மாட்ச்களையும் விடாமல்
பார்த்திருக்கிறேன்” என்று சொல்லும் சரஸ்வதி வைத்தியநாதன் சச்சின் தண்டுல்கரின் அதி தீவிர ரசிகை.சச்சின் விளையாட ஆரம்பித்த நாளிலிருந்து
இன்று வரை அவரது சாதனைகள பற்றிய எந்த கேள்விக்கும் அனாசியாமாக பதில் தரும் இவரின் வயது
அதிகமில்லை. 87 தான்! இப்போது சென்னயில் மகனோடு
வசிக்கும் இந்த“ கிரிக்கெட் பாட்டியை” சந்திக்கிறோம். படுக்கை அறையில் சச்சின்
போஸ்டர். அருகில் சச்சின் பற்றிய புத்தகம்.தெளிவான ஆங்கிலம் அவ்வப்போது ஹிந்தி.
“முதலில் கவாஸ்கரின் ரசிகையாகத்தான் இருந்தேன். “ஞபகமிருக்கிறதா 1993 ஹிரோ
கப் மாட்ச் தெனாப்பிரிக்காவோடு மோதியபோது கடைசி ஒவர்-வெற்றிக்கு 6 ரன் தேவை என்ற நிலையில்
தய்ங்கிய அசாருதின் கையிலிருந்து பந்தை வாங்கி இந்த குட்டிபையன் செய்த பெளலிங்கில்
பேட்ஸ்மென் ரன் அவுட்டாக 3 ரன்னில் நாம் ஜெயித்தோமே-
அன்றிலிருந்து சச்சின்தான் என்னுடைய பேவரிட்.” என்று எதோ போன வாரம் பார்த்த மேட்ச்சைப்பற்றி
பேசுவது போல பேசுகிறார். அது மட்டுமில்லை தொடர்ந்து சாதனைகள் படைத்தாலும் மிக சிம்பிளாக,
தெய்வபக்தியுடன், சமுக சேவை செய்வதால் சச்சினை
நான் என் பேரனைப்போல மிக மிக நேசிக்கிறேன் என்று சொல்லும் இந்த பாட்டி கிரிக்கெட்க்கு
அப்பால் சச்சினைபற்றி பல விஷயங்கள்- அவர் பந்தராவில் பள்ளிக்கூடம் நடத்துவது,எழைகளுக்கு
படிக்க உதவது போன்ற பல தகவல்கள் தெரிந்திருக்கிறது. கிரிகெட்டைத் தவிர பிடித்தது டென்னிஸ்
.ரோஜரர் ஃபெடர்ர், பீட்டர் சாம்ராஸ் போன்ற ஜாம்பவான்களின் ஆட்டங்கள் பற்றி பேசும் இவர்
கிரிக்கெட் ஒரு விளையாட்டில் தான் பலவிதமான காட்ச்.,பேட்டிங் ஸ்டைல் என வெரைட்டி இருப்பதால்
அது தான் பெஸ்ட் கேம் என்கிறார். இரவு 1 மணியானாலும் சச்சின் விளையாடினால் கண் முழித்து
(வீட்டில் மற்றவர்கள் தூங்கினாலும்) பார்த்து கையிருக்கும் சிறுபேப்பரில் ஸ்கோர் விபரங்களை
குறித்து வைத்துகொண்டு அதை மறு நாள் நோட்டில் எழுதிவைக்கிறார். ஒரு முறை எழுதிய பின்னர்
அதை அவர் அந்த விபரங்களை மறப்பதில்லை..இந்த
வயதிலும் இந்த நினைவாற்றல் எப்படி சாத்தியாமகிறது? “விசேஷ பயிற்சி எதுவும் கிடையாது-
பகவான் அருள்’ என்னும் இவர் குடும்பத்தில் அனைவரது பிறந்த நாள், நேரம் சரியாக சொல்லுகிறார்.-
4வது பேரன் சச்சின் உள்பட. இரண்டு வயதில் அம்மாவின் பின்னால் மாடி படியேறி போய் கடைசிப்படியிலிருந்து
விழுந்ததும், முச்சுநின்றிருந்ததால் இறந்துவிட்டதாக எண்ணி எல்லோரும் அழுததும்,பின்
நினைவுவந்ததும் இன்றும் நினைவிருக்கிறது என்று சொல்லி ஆச்சரியப்படுத்தும் இவர் அதற்கு
பிறகு சச்சின் விஷயங்கள் தான் அந்த மாதிரி நினைவில் நிற்கிறது என்கிறார்.
ஆஸ்திரேலியாவிலிருக்கு பேரனை போய்பார்ப்பதைவிட சச்சினை நேரில் பார்த்தால் சந்தோஷப்படுவேன் என்று சொன்ன இவரது பேட்டியை ஹிந்து நாளிதழில் பார்த்த
சச்சின் IPL மேட்ச்சுக்காக சென்னை வந்தபோது அழைத்து சந்தித்தார். வரும் எப்பரல் 24ல்
பிறந்த நாள் கொண்டாடும் சச்சினுக்கு “இண்டெர்நேஷனல் கிரிக்கெட்டில் 100 செஞ்சுரி அடிக்க
இன்னும் 7 பாக்கியிருக்கிறது, சீக்கிரம் அதைச் செய்ய ஆசிகள்” என்று சொல்லி ஒரு சிறு வெள்ளிப்பிள்ளையாரை கொடுத்தபோது இவரின் காலைதொட்டு வணங்கி அதைப்பெற்றிருக்கிறார்
பிளாஸ்டர் மாஸ்டர். சச்சினை நேசிக்கு இவர் அவர் விளையாடும்போதெல்லாம் அவரது வெற்றிக்கு
பிரார்த்திப்பதில் ஆச்சரியம் இல்லை- இவர் இதுவரை ஒரு கிரிக்கெட் மாட்சைக்கூட ஸ்டேடியத்தில்
பார்த்ததில்லை என்பதுதான் ஆச்சரியம்.
சந்திப்பு- ரமணன்
கல்கி18.04.2010
11/4/10
இரண்டு நாட்கள்....70 படங்கள்...இரண்டு நாட்கள்....70 படங்கள்.
இரண்டு நாட்கள்....70 படங்கள்...இரண்டு நாட்கள்....70 படங்கள்...
சென்னை எழும்பூர்
ஆல்பர்ட் தியட்டர். ஜீன்ஸ் குர்த்தா,, கார்கோ
பேண்ட் டிஷர்ட்,சால்வார் கம்மீஸ் என இளைஞர் கூட்டம் படிக்கட்டுகளில் டிக்கட்கள் வாங்கக் காத்திருக்கிறது.படம் “தலை”யோடதோ
இல்லை,சூரியாவோடதோ இல்லை. இரண்டு நாள் சர்வதேச
குறும்பட விழாவில் காட்டப்போகும் குறும்படங்களுக்குதான்.29 நாடுகளிலிருந்து,வந்த
419 படங்களில் தெர்ந்தெடுக்கப்பட்ட 70 படங்களைத்தேர்ந்தெடுத்து திரையிட்டார்கள். திரைப்படவிழாவை
தமிழக செய்திதுறையினருடன் இணைந்து தீபீகா
DBICA (DANBASCO INSTITUTE OF COOMUNICATION ARTS) நடத்தினர். நகரின் கல்லூரிகளின்
மீடியா மாணவர்கள் அதிகம் பங்கேற்ற இந்த திரைப்பட விழாவில் 2 வெளிநாட்டு தயாரிப்பாளர் உள்பட 20 படங்களின் இயக்குநர்களும்
பங்கேற்று தங்கள் படைப்புகள் பற்றி பேசினர்.
“பல வாரங்கள் தொடர்ந்து
படங்கள் பார்த்த ஜூரிகள் பரிசுபடங்களை மட்டுமில்லை,திரையிடசிறந்ததைத் தேர்வுசெய்யக்க்கூட
திணறித்தான் போனார்கள். வெறும் 50 படங்களுடன் 3ஆண்டுகளுக்கு முன் துவங்கிய முதல் விழாவைதொடர்ந்து
இன்று இந்த விழா இன்று உலகளவில் பாபுலராகயிருப்பதும் ஆண்டு தோறும் படங்களின் எண்ணிக்கை
கூடுவதும் மகிழ்ச்சியளிக்கும் விஷயம். உலகின் பல பகுதிகளின் குறும்பட அமைப்புகளுடன்
இணைந்து செயல் படுவதால்,அடுத்த ஆண்டு 1000 படங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்”
என்கிறார் ரெவரண்ட் பாதர் ஹாரிஸ். இவர் டீபிகா வின் இயக்குநர். டான்பாஸ்கோ கல்விநிறுவனத்தின் ஒர் அங்கமான
டிபிகா பல மீடியா கோர்ஸ்களை நடத்துவதோடு இதுபோன்ற
சர்வ தேசகுறும்பட விழாக்கள்,பயிலரங்கங்கள் கூட்டங்கள் நடத்துகினறனர். சமூக விழிப்புணர்வு
படங்களையும் தயாரிக்கின்றனர். அரசியலுக்கு அப்பாற்பட்ட பார்வையில் இவர்கள் தயாரித்த
இலங்கை தமிழரின் நிலையை சித்தரிக்கும் படத்தை துவக்கநாள்விழாவில் அமைச்சர் பரிதி இளம்வழுதி
வெளியிட்டார். இயக்குனர் லெனின்,,ஆர்வி உதயகுமார் உள்ளிட்ட 7பேர் கொண்ட ஜூரி குழு வந்திருந்த
29 நாடுகளிலிருந்து வந்திருந்த 419படங்களில் ஒரு ஸ்பானிஷ் படத்தை முதலிடத்திற்கும்,கனாடவிலிருந்து
வந்த படத்தை பரிசுக்கும் தேர்ந்தெடுத்திருந்தது. இந்திய படங்களின் பிரிவில் ஆந்திர
மாநில பொன் சுதா தயாரித்திருந்த “ நடந்த கதையும்” மஹாரஷ்டிர மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ்
ராமின் “சர்க்கிள்” படங்கள் பரிசுகளை வென்றது. பல பிரிவுகளில் நிறைய பரிசுகள். திரையிடப்பட்டதில்
வெளிநாட்டுபடங்களைவிட இந்தியபடங்கள் சிறப்பாக
இருப்பதை உணர முடிந்தது.70 படங்களையும் இரண்டு
நாள் தொடர்ந்து ஆர்வத்துடன் பார்த்த சினிமாவை
நேசிக்கும் அந்த இளைஞர் பட்டளாத்தைப் பார்த்தபோது,குத்துப்பாட்டு, ஃபைட்கள்.வெளிநாட்டுசூழலில்
பாடும் காதலர்கள் என்ற நமது படங்களின் பார்மூலாவை மாற்ற அடுத்த தலைமுறை இயக்குனர்கள் உருவாகிக்கொண்டிருப்பது புரிந்தது.
ஜனனம்
ஓரு சின்னஞ்சிறிய கேரள கிராம குடிசைவீடு.வாசலலில்
தாய் தன் குழந்தையை குளிப்பாட்டிக்கொண்டிருக்கிறார். ஜட்டியில்லாமல் குளிக்கும் அது ஆண் குழந்தை என புரிகிறது.ஏன் இங்கே ஜூம் என்ற
கேள்வி பின்னால் புரிகிறது.அவசரபடுத்தும் கணவனைச்சாமளித்து மகன் உன்னியை ஊக்குவித்து பள்ளியில் சேர்க்க நல்ல உடையுடன் அனுப்புகிறார். காடு கழனிகளை கடந்து
கிராமத்தை அடைந்து தயக்கத்துடன் தலமையாசிரியரியரை அணுகி தன் பையனை சேர்க்கவேண்டுகிறார்.
பர்த் சர்டிபிகேட்டை பார்த்து எழுதிகொண்டே வரும் ஆசிரியர் அதில் உன்னி பெண்குழந்தையாக குறிப்பிட்டருப்பதை காட்டுகிறார். பஞ்ஞாயத்து ஆபிஸில்
போய் திருத்தி மாலைக்குள் கொண்டுவரச்சொல்லுகிறார். பஞ்சாயத்து அலுவலகத்தில் இது தங்கள்
வேலையில்லை என சொல்லி ஆஸ்பத்திரிக்கு போகச்சொல்லிவிரட்டுகிறார்கள். ஆஸ்பத்திரியில்
7 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்த தவறை திருத்த மாவட்ட மருத்தவ அதிகாரிக்குதான் அதிகாரம் அதற்கு
பஞ்சாயத்திலிருந்து கடிதம் வேண்டும் என அனுப்பிவிடுகிறார்கள்.அங்கே மறுபடியும் மறுத்து
நகரத்துக்குச்சென்று கலெகக்டரை சந்திக்க சொல்லுகிறார்கள். வருத்துடன் அலைந்து தேடி
கலைக்டர் அலுவலகம் சென்று அவரைச்சந்தித்து வேண்டுகிறார் தந்தை. விஷயத்தை கேட்ட கலெக்டர்
கிராம பஞ்ஞாயத்து வழியகாக மனு அனுப்பச்சொல்லுகிறார். மனுமீது விசாரிக்க ஆணையிடவதாக
சொல்லுகிறார். வெறுத்துபோய் அழும் தந்தையிடம்
என்னை பெண் என தவறாக சொன்னதற்காக அழாதீர்கள்.
நான் நல்ல பையன் என்கிறான் உன்னி. கலைக்டர் அலுவத்தில் தேசியக்கொடியின் கீழ் செய்வதுஅறியாது வருத்துடன் உட்கார்ந்திருக்கும் அவரிடம் “நாங்கள்
மின்னல் சானலிருந்து வருகிறோம் உலகம்முழுவதும் பார்க்கப்படும் இந்த சானலில் உங்கள்
முகம் தெரியப்போகிறது. உங்களுக்கு பிடித்த ஒரு பாட்டை கேளுங்கள்.ஓளிபரப்பபடுவதோடு பரிசாக சிங்கப்பூர் செல்லும் வாய்ப்பும் காத்திருக்கிறது”
என மைக்கோடும் காமிராமேனுடனும் ஒரு இளம் பெண் வருகிறார். என் மகனைப் பள்ளிக்கூடத்தில்
சேர்க்க விரும்பியது தவறா? இவன் பெண்அல்ல பையன். என அழுகை, ஆத்திரம், கோபத்துடன் உன்னியின்
டிராயிரை அவிழ்த்து இதை உலகுக்கு காட்டுங்கள் என கதறுவதுடன் படம் முடிகிறது.
போட்டியில் பங்கேற்காத, சென்ற ஆண்டு விருது பெற்ற இந்தப்படம் விழாவை துவக்கி வைக்க அமைச்சர் வரும் முன்னால் காத்திருந்தவர்களுக்காக
காட்டப்பட்ட இந்தப்படம் எல்லோரையும் சற்று
பாதித்தது.
நடந்த கதை
அந்த சின்னஞ்சிறு குழந்தை கீ கீ என்று ஓலி எழுப்பும் தனது புது ஷுவுடன்
சுற்றிச் சுற்றி ஒடி ஈசி சேரிலிருக்கும் தாத்தாவிற்கு காட்டுகிறது. மகிழ்ந்து போகிறார்
தாத்தா --குழந்தயின் சந்தோஷத்தினால் மட்டுமில்லை-- தன் தந்தையால் தனக்கு தர முடியாத போன விஷயத்தை தன் மகன் அவனது
மகனுக்கு செய்யமுடிந்தனால். நினைவலையில் விரியும் தனது கதையைச் சொல்லுகிறார் “ நடந்த
கதை” குறும்படத்தில். அந்த கிராமத்தில் கீழத்தெருவிலிருக்கும் சாதியினர் செருப்பு அணியக்கூடாது
என்பது சமுக கட்டுபாடு. அந்த சிறுவனுக்கு அது ஏன்? என்றகேள்வி எழுந்துகொண்டேயிருக்கிறது.கனவில்கூட
செருப்புதான் வருகிறது.ஓரு நாள் செருப்பு அணிந்து மேலத்தெருவிற்குபோகும்அவன் அங்குள்ளவர்களால் அடிக்கப்படுகிறான்.அழுதுகொண்டு வரும் அவனுக்கு அவனது
பெற்றோர் ஆறுதல் சொல்லாமல் தவறு அவனுடையது என்கிறார்கள்.தினசரி தன் தாய் தனக்கு காலில்
முள் எடுப்பதும், தந்தை தனது பாதத்தில் காய்ச்சுபோனதோல் பகுதியை வெட்டி கழித்துப்போடுவதையும்
பார்த்து ஊரின் செருப்பு தைப்பவரான தனது சித்தப்பாவிடம்” நாம் செருப்பு போடக்கூடாது
என்று யார் சொன்னது?”என்று கேட்கும் அந்த சிறுவனுக்கு “சாமிதான்” என்றும், நமக்கு செருப்புசெய்யத்தான்
உரிமை போட இல்லை என்ற பதில் அதிர்ச்சியாக இருக்கிறது.
இந்த வலியோடு வளரும் இளைஞன்,ஒரு நாள் கிராமத்தில் மிடுக்கோடு நடக்கும் ராணுவ வீரனை
பார்க்க நேரிடுகிறது.ஓசையெழுப்பும் கனத்த அந்த காலணிகள் அவனை மிக கவர்கிறது.அவருடன்
பேசி தெரிந்தவிபரங்கள் மூலம் ராணுவத்தில் சேர்ந்து வீரனாகிறான். விடுமுறையில் கிராமத்திற்கு
வந்து தனக்கு செருப்புடன் நடக்க அனுமதி மறுக்கப்பட்ட
மேலத்தெருவில் மிடுக்குடன் ராணுவ நடைபோடுகிறான் அந்த இளைஞன்.இப்போதும் அங்குள்ள சிலர் அவனை மிரட்டி காலணியைகழட்டி மன்னிப்புகேட்டுவிட்டு
அதை கையில் எடுத்துச்செல்ல சொல்லுகின்றனர். “ நான் இந்திய ராணுவ வீரன் விடுமுறையிலும்
பயிற்சி செய்துகொண்டிருக்கிறேன்.என்னை அவமதித்தால் உங்களைப்பற்றி போலீசில் புகார் செய்வேன்”
என கம்பீரமாக சொல்வதைகேட்ட அந்த பிரமுகர்கள்
ஆடிப்போகின்றனர். அதே தெருவில் நடையை தொடர்கிறான்
வீரன். கீழத்தெருவைகடக்கும்போது செருப்பே இல்லாத அந்த தெருவில் ஒவ்வொருவீட்டின் முன்னும்
ராணுவ வீரனின் காலடிபட்டவுடன் செருப்பு ஜோடிகள்
தோன்றுவதுடன் படம் முடிகிறது.நடிக்கவே தெரியாத இயல்பாக உணர்ச்சிகளை காட்டும் மனிதர்கள்,
நிஜமான கிராமம் யதார்த்தமான படபிடிப்பு, மிகையில்லாத இசை.ஆந்திராவிலிருந்து பொன், சந்திரா தயாரித்த இந்த குறும்படம் இந்திய படைப்புகளில் முதல்
பரிசு பெற்றது.
*******
தொப்பி
தேசப்பிரிவினை அறிவிக்கப்பட்டிருக்கிறது.. கலவரம். அடித்துவிரட்டப்பட்ட மக்கள் சிதறி காத்திருக்கும் ரயில் ஏற ஒடிக்கொண்டிருக்கிறார்கள்.
தாயிடமிருந்து பிரிந்த ஒரு சிறுவன் போராட்டகாரர்களிடம் மாட்டிக்கொள்கிறான். அடிபடத்துங்கும்
அவனை சட்டென்று பாய்ந்து, தனது தலையிலிருக்கும் தொப்பியை அவனுக்கு மாட்டி நமது பையன்
அடிக்காதீர்கள் என்று சொல்லி காப்பாற்றுகிறார் தாடி வைத்து லுங்கியிலிருக்கும் அந்த
கிழவர். நகரத் தொடங்கிய ரயிலில் எற்றிவிடுகிறார். உள்ளேபோன சிறுவன் பதறிக்கொண்டிருக்கும்
அம்மாவை கண்டதும் கட்டிக்கொள்கிறான். ஜன்னல் வழியே தனக்கு உதவிய தாத்தாவிற்கு தொப்பியை
எடுத்து அசைத்து விடைபெறுகிறான். படத்தின்
பெயர் “தொப்பி”. அனிமேஷன் படமான இதில் இந்தியா,பாகிஸ்தான், முஸ்லீம் என்ற வார்த்தைகள்
மட்டுமில்லை எந்த வார்த்தைகளுமே பேசப்படதா
இந்தப்படத்தில் பின்ணணி இசையும் ரீரிகார்டிங் ஓசைகளும்தான் கதையைச்சொல்லுகிறது. அர்ஜுன்ரெய்கா என்ற அமெரிக்க வாழ் இந்தியர் தயாரித்த
இந்த படத்திற்கு சிறந்த அனிமெஸ்ஷன் படத்திற்கான
பரிசு கிடைத்தது.
வாழ்க்கை
அது ஒரு HIVயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் காப்பகம். கம்பிகதவில் கைகளை
நீட்டிக்கொண்டு ஒரு பெண் குழந்தை. தினசரி அருகிலிருக்கும்
பஸ் ஸ்டாப்பில் இறங்கும் அந்த மனிதரைப்பார்த்து சிரிக்கும். குழந்தையின் கைகள் தன்மீது
பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அந்த காப்பகத்தின் முகப்பைப் கடக்கும்போது மட்டும் நடைபாதையை
விட்டு இறங்கி சாலையில் நடக்கிறார். சிரிக்கும் குழந்தையை கண்டுகொள்வதேயில்லை. ஒரு
நாள் பணிமுடிந்து இரவு கடைசி பஸ்ஸில் திரும்பும் அவர் பழக்கத்தினால் அப்போதும் நடைபாதையைவிட்டு
சாலையில் இறங்கி நடக்கும்போது, வேகமாகாக வந்த காரினால் தாக்கப்பட்டு விபத்துக்குள்ளாகிறார்.
தன் கட்டிலில் தூங்காமல் உட்கார்ந்திருக்கும் சிறுமி சப்தம்கேட்டு ஓடி வந்து பார்த்து,
பூட்டியிருக்கும் கேட்டை ஏறி க்குதித்து அவரை காப்பற்றுகிறாள். சிலநாட்கள் கழித்து
மனைவியுடன் வந்த அவர் தன்னைக்காப்பாற்றியது அந்த சிறுமி என அறிந்து நன்றி சொல்லி பக்கத்துகடையில்
ஒரு சாக்லேட்டை வாங்கித்தருகிறார் .. . .
சாக்லெட்டைப்பெற்ற அந்த குழந்தையை காப்பகத்தின் வாச்மென் ஒரே சாக்லெட்டாக
இருப்பதால் உள்ளே எடுத்துச்சென்று மற்ற குழந்தைகளுக்கு காட்டாமல் அங்கேயே சாப்பிடச்சொல்லுகிறார்..
ஆனால் சிறுமி கட்டிடத்தின் பின்னால் போய் ஒளிந்து ஜன்னல் வழியாக நண்பர்களை கூப்பிடுகிறது.ஓன்றின்
பின் ஒன்றாக வந்த குழந்தைகள் சூழ்ந்துநிற்க அந்த சிறுமி கையிலிருக்கும் சாக்லெட்டினை
பேப்பரைப்ப்பிரித்து தூக்கி வெயிலில் காட்டி கொண்டிருக்கிறது. உருகி வழிந்தோடும் சாக்லெட்
கூழை எல்லாகுழந்தைகளும் விரலில் தொட்டு நக்கி சாப்பிடுவதை, குழந்தைகளைத்தேடி வந்த டாக்டரும்
வாச்மேனும் ஆச்சரியதோடு பார்க்கிறார்கள். “வாழ்க்கை-அன்பு- நம்பிக்கை” என்ற இந்த குறுபடத்தினை
தயாரித்திருப்பவர். கலைஞர் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையினாரான கிருத்திகா உதய
நிதி .
கல்கி11.04.10
28/3/10
உடல் நலத்திற்காக ஒரு கப் காஃபி
உடல் நலத்திற்காக ஒரு கப் காஃபி
சிக்காகோ நகரின்
யூனியன் ஸ்டேஷனில் புறப்படத்தயாராகயிருக்கும்
அந்த மின்சார ரயிலை பிடிக்க ஒடிக்கொண்டிருக்கும் ஒரு பெண் அந்த அவசரத்திலும்
அந்த கடையின் ‘ரஷ்’ கவுண்ட்டரில் கார்டைக்காட்டி
ஒரு கப்
காபி வாங்குகிக்கொண்டு ஓடுகிறார். நியூயார்க் நகருக்கு வெளியே செல்லும் அந்த
நீண்ட ஹைவேயில் சென்றுகொண்டிருக்கும் கார்
வலது புறம் தெரியும் அந்த போர்டை பார்த்தவுடன் வேகம் குறைந்து அந்த ட்ரைவின் கவுண்ட்டர்
அருகே செல்லுகிறது.ஒட்டுவரின் கரம் நீண்டு காரின் சீட் அருகே பொருத்திக்கொள்ளும் வசதியுள்ள
கப்பில் ஒரு காபி வாங்கிக்கொண்டு பறக்கிறது.
ஸான்ஸ்பிரான்ஸிஸ்கோ நகரின் பரபரப்பின் சந்தடி எதுவும் கேட்காத அந்த பாரிஸ்டாவில் தனது
லாப்டாபில் முழ்கி கிடக்கும் அந்த இளைஞைன் அருகில் ஒரு பெரிய கோப்பை காபி. இப்படி அமெரிக்க
தேசமே இந்த ஸ்டார்பக் நிறுவனத்தின் காஃபிக்கு அடிமையாகி கொண்டிருக்கிறது.
காஃபி பயிரே விளயாத
தேசமான அமெரிக்கா தான் உலகில் அதிகம்பேர் காஃபி
அருந்தும் நாடு . கடந்த 10 ஆண்டுகளில் காஃபி குடிக்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கையை உயர்த்தியதில் (87% மக்கள்) ஸ்டார் பக் நிறுவனத்திற்கும் ஒரு கணிசமான பங்கு உண்டு. தேர்ந்தெடுத்த காப்பிக்கொட்டையை
வறுத்து அரைத்து கொடுக்க, டீ மற்றும் வாசனைத்திரவியங்கள்
விற்கும் கடையாக துவங்கிய நிறுவனம் இது. வாடிக்கையாளருக்கு ருசி காட்ட அதன் வாசலில் ஒரு சின்ன காபி கடை திறக்கலாம் மகன்கள்
சொன்ன யோசனையை நிராகரித்து, “காஃபி என்பது
வீட்டில் தயாரிக்க வேண்டியது. அப்படி எதாவது ஆரம்பித்தால், நமது முக்கிய வியாபாரம்
பாதிக்கும்” என்று சொன்னவர் இதன் நிறுவனர். ஆனால் அடுத்த தலைமுறையினர் துவக்கிய இந்த
காஃபி கடை தொழில் இன்று மிக பிரமாண்டமாக வளர்ந்த. அமெரிக்கா முழுவதும் 11200 கடைகளும்
உலகின் 43 நாடுகளில் பல கிளைகளுடன்
ஒரு தனி சாம்ராஜ்யமாகியிருக்கிறது
“சூட ஒரு கப் காஃபி கொண்டுவாங்க” என்று இவர்கள் கடையில்
ஆர்டர் செய்ய முடியாது. 20வகையான காபியை 160 வித முறைகளில் தயாரிக்கிறார்கள். அமெரிக்க
தேசத்தின் பல பகுதி மக்களின் ருசிக்கேற்ப பல
காஃபி வகைகளை பட்டியலிட்ருக்கிறார்கள்.அந்த மெனுவிலிருந்து தேர்ந்தெடுப்பதை
உடனடியாக தயாரித்துக் கொடுக்கிறார்கள், இதற்ககாக
இந்த நிறுவனத்தின் கல்லூரியில் பயிற்சிபெற்று ‘காஃபி மாஸ்டர்’ பட்டம் பெற்றவர்கள் பணியிலமர்த்தப்ப்ட்டிருக்கிறார்கள்.
கடைகள் நகரின் முக்கியமான இடங்களில், எர்கண்டிஷன்,
எளிதான(வயர்லெஸ்)இண்டர்நெட்வசதி,வசதியான இருக்கைகள், இனியஇசை போன்ற வசதிகளுடன் இருப்பதால்
கடைகளில் எப்போதும் கூட்டம். அதிக காஃபி உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் என்பதை மறுக்கும்
இவர்கள் தங்கள் தாயரிப்பில் எந்த வகையில் எந்தமாதிரிப் பாலில் எவ்வளவு கொழுப்பு,எவ்வளவு
சக்கரை, எவ்வளவு கார்போஹைரேட் என்பதை பட்டியிலிட்டு தேவையானதை மட்டும் தேர்ந்தெடுத்து
ஆர்டர் செய்யுங்கள் என்று வாடிக்கயாளருக்கு அறிவுறுத்துகிறார்கள். “60லிருந்து110 வரையிலான கலோரியில் ,11கிராம் கொழுப்புசத்துடன்,திக்காக சக்கரை போடாமல் ஆனால் திதிப்புடன்,கொஞ்சம் விட்டமின்
D சேர்க்கப்பட்ட ஆர்கானிக் பாலில் ஒரு சின்ன கப் காஃபி தாருங்கள்” என்று கூட ஆர்டர்
செய்யலாம். இதற்காக இவர்கள் விற்கும் காஃபிகளில்
இருக்கும் கலோரி,கொழுப்பு,சோடியம், சக்கரை,
கால்சியம், இரும்பு, காஃபைய்ன் போன்றவைகளின் அளவுகளை குறிப்பிட்டு டைட்டியிஷயன் தருவது போல சார்ட் தருகிறார்கள். இதை ஆராய்ச்சி
செய்து மண்டையை உடைத்துக்கொள்ளும் கஸ்டமர்களுக்கு உதவி செய்ய தனி பணியாளார்களுமிருக்கிறார்கள். இதைத்தவிர சட்டென்று
தேர்ந்தெடுக்க 200 கலோரிகளுக்கு குறைவான 20சுவை யான தேர்வுகள் என்ற குட்டி லிஸ்ட்டும்
தருகிறார்கள்.
வேலைசெய்ய சிறந்த
பணியிடம் என ஃபார்ச்சூன்100 நிறுவனத்தால் தெர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்த நிறுவனத்தில்
வேலை செய்வோர் 1 லட்சத்திற்கும் மேல். கடந்த ஆண்டின் வர்த்தகம் 10,000பில்லியன் டாலர்களுக்கும்
மேல். இந்த நிறுவனம் பற்றியும்,இதில் பணி புரிவர்களுக்கு தரப்படும் சிறந்த பயிற்சி பற்றி யும் பல புத்தங்கள்
வெளிவந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் வெற்றியைப் பற்றிய கேஸ் ஸ்டெடியை உலகெங்கும் MBA மாணவர்கள் படிக்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு வேலை நேரத்தை நீடித்து தொழிலாளர்களை
சுரண்டுகிறார்கள், லாபபணத்தை இஸ்ரேல் ராணுவத்திற்கு
போருக்காக உதவ அனுப்புகிறார்கள் போன்ற சர்ச்சையில் சிக்குண்டு சற்று ஆட்டம் கண்ட இந்த
நிறுவனம் அதை மறுத்து தங்கள தரப்பு நிலையை
விளக்க ,’வதங்திகளும்,உண்மைகளும்’ என்ற இணையதளத்தை துவக்கி நிலமையை பிரமாதமாக சாமாளித்தது..
இதை விட பிரபலமனாது திருமதி ஓஸாமா அணியும் உடையிலிருந்து,குளோபல் வார்மிங்
வரை அலசப்படும் ஸ்டார்பக் காஃபி ரசிகர்களின் ‘காஸிப்” என்ற இணையதளம்தான்.
ஸ்டார்பக் நிறுவனத்திற்கு சம்பந்தமில்லாமல் தனித்து இயங்கும் இதில் வெளியாகும் விஷயங்கள்
மக்கள் கருத்தின் பிரதிபலிப்பாக இருப்பதால் இதை பலர் கூர்ந்து கவனிக்கிறார்கள்.
மானேஜ்மெண்ட் குரு பீட்டர் டெரெக்கர் “ஒரு வியாபார
நிறுனத்தின்குறிக்கோள் வாடிக்கியாளர்களை உருவாக்கி
அவர்களை தக்க வைத்துக்கொள்வது தான்” என்கிறார். ஸ்டார்பக் நிறுவனம் அதை வெற்றிகரமாக
செய்து கொண்டிருக்கிறது.
V
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)