வன்முறை நிகழ்ந்த இடத்தில் வழிபாடு
10ஆண்டுகளாகிவிட்டது. ஆனாலும் உலகம் மறக்காத கறுப்பு தினங்களில் ஒன்று
செப் 11. சற்றும் எதிர்பார்க்காத தருணத்தில் சிலநிமிஷங்களில் அல் கொய்தா தீவிர வாதிகளின் தாக்குதலால் தரைமட்டமாகிப்
போனது 2001 செப் 11 ல் நியுயார்க் வேர்ல்ட் டிரேட் செண்ட்டர் இரட்டை கோபுரங்கள். அணுகுண்டு
விசி அழிக்கபட்ட இடம் கிரவுண்ட் ஜிரோ (ground Zero) என அழைக்கபடும். அந்த பெயரிடப்பட்ட
இந்த இடத்தில் இப்போது விசாரணையெல்லாம் முடிந்து, அமையப் போகும் புதிய பெரியு
பலமாடி கோபரங்களின் பெயர் சுதந்திர
கோபுரம். டிஸைன்களுக்கு போட்டி வைத்து மக்கள் ஒட்டளித்து தேர்ந்தெடுத்தது. மறைந்தவர்களுக்கு நினைவுசின்னம், மியூசியம், அழிவில்
மிஞ்சிய அடையாள சின்னங்களுடன் பார்க் என மெல்ல எழுந்து கொண்டிருக்கும் கட்டிடத்துடன்
ஒரு பிரச்சனையும் எழுந்துகொண்டிருக்கிறது,
தாக்கபட்ட கட்டிடத்தின் மிக அருகிலிருந்த்த ஒரு தனியார் கட்டிடம் 100மில்லியன்
டாலர் செலவில் ஒரு மசூதியாக புதுபிக்கபட்டுகொண்டிருக்கிறது. திருமதி டெய்ஸிகான் தலமையில் இயங்கும் குழு நன்கொடை
வசூலித்து செய்கிறது. இவர் அப்துல் ராஃப் என்ற இமாமின் மனைவி.ஆனால் அல் கொய்தாவின் மறைமுக உதவி என்பது பரவலாக உலவும்
வதந்தி. இரட்டைகோபரங்கள் தாக்கபட்டதிலிருந்தே
முஸ்லீம்கள் மேல் கோபமாகயிருக்கும் அமெரிக்கர்கள் இதனால் கொதிப்படைந்து போயிருக்கிறார்கள்.
வேறு இடத்தில் அமைக்கவேண்டும், அனுமதியே கூடாது
என கண்டன, கூட்டங்களாக எழுந்த போராட்டம் வலுக்க ஆரம்பித்திருக்கிறது.
அமெரிக்க மக்களுக்கு அதிர்ச்சி தந்த
அடுத்த விஷயம் பல வாரங்களாக அமைதி காத்த அமெரிக்க அதிபர் இந்த மசூதி அமைப்பதற்கு
ஆதரவு தெரிவித்து அறிக்கைவிட்டிருப்பது “அமெரிக்காவில்.எந்த
மதத்தினரும் தங்கள் மத வழிபாட்டு தலங்களை அமைத்துகொள்ள உரிமை உள்ளது. அதை தடை செய்வது அவர்களூக்குக நம்
சட்டம் வழங்கியிருக்கும் சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும்” என்கிறார் ஒபாமா. அல்-கொய்டா
இஸ்லாம் இல்லை. அவர்களது செயலுக்காக ஒட்டுமொத்த முஸ்லீம்களை வெறுப்பது கண்ணியமற்ற செயல்
எனபது அவர் கட்சியின் நிலை.
ஒமமா ஒரு கிருத்துவராகயிருந்தாலும்
இன்னும் பெயரில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனது
தந்தை பெயரான ஹூஸைணை நீக்கவில்லை.எந்த அமெரிக்க அதிபரும் செய்யாத இப்தார் விருந்தை
வெள்ளை மாளிகையில் அளித்திருக்கிறார் அதனால் அவர் முஸ்லீம்களின் செயல்களைகளை நியாப்படுத்துவதில்
ஆச்சரியமில்லை என அதிபருக்கு மதச்சாயம் பூசுகிறார்கள் மசூதிக்கு எதிராக போராடுவோர்.
(கல்கி 120910)
,