இரண்டு கார்கள்
கார் 1
80 கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி, 10 ஆயிரம் ஆபரணகற்கள்
பயன் படுத்தி 15 பேரின் உழைப்பில் ஒரு தங்க நானோ காரை டாடா குழுமம
உருவாக்கியிருக்கிறது. இந்தியாவின்
அனைத்து மாநிலங்களின் பாரம்பரிய பாணிநகைவடிவங்களுடன் இடம்பெற்றிருக்கும் இந்த கார்
முகப்பில் தோகை விரித்தாடும் வண்ண மயிலுடன் ஜொலிக்கிறது. காரின் வெளியே
மட்டுமில்லாது உள் கைப்பிடிகள் ஸ்டீரியங், கியர், டாஷ்போர்ட் எல்லாம்
தங்கம். வந்த 20 டிசைன்களில் 3 தேர்ந்தெடுக்கபட்டு அதை மக்களிடம் ஓட்டுக்குவிட்டு
இறுதியில் தேர்வான இதை வடிவமைத்த 5வர் குழுவில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். டாடா
குழுமத்தின் ஒரு அங்கமான கோல்ட் பிளஸ் என்ற தங்க நகைப்பிரிவிற்காக
தயாரிக்கபட்டிருக்கும் இதன் மதிப்பு 22 கோடிருபாய்கள். இந்தியாவின் மிக குறைந்த விலை கார் நானோ.அந்த 2
லட்சரூபாய் காரை விலையுர்ந்த காராக்கி விற்பனைக்கு அல்ல விளமபரத்திற்கு மட்டும்
என்றும் யாரும் பயன்படுத்தபோதில்லை எனறும் அறிவித்திருக்கிறார்கள்.
கார் 2
ஒரே ஒருவரின் பயன்பாட்டிற்காக ஒரு புதிய கார் பலகோடி மதிப்பில் வாங்கபட்டிருக்கிறது. முன்னாள் மன்னர்கள்
பாரம்பரியப்படி 4 குதிரைகள் இழுக்கும் சாராட்டில் இன்றும் முக்கிய விழா நாட்களில்
வரும் இந்திய குடியரசு தலைவர்கள் நீண்ட நாட்களாக ப்யன்படுத்திவந்தது தேசிய காரான
அம்பாஸிடர். 8 ஆண்டுகளுக்கு முன் அது வெளிநாட்டு காராயிற்று. அது இப்போது
மாற்றபடுகிறது.
உலகின் மிகபாதுகாப்பான காராக கருதப்படும்
மெர்சிடீஸ் பென்ஸ் கார் S600L ஜெர்மனியிலிருந்து நமது குடியரசுதலைவரின் பயன்பாட்டிற்காக
இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. துப்பாக்கி
குண்டுகள் துளைக்க முடியாத டயர்கள் வெடித்தாலும் நிற்காமல் ஓடக்கூடிய, விஷவாயு பரவினால் உடனே ஆக்சிஜன் நிரம்ப இப்படி பல
வசதிகள். கார் தேர்ந்தெடுத்தபின் ஒராண்டாக
பாதுகாப்பு அதிகாரிகளினால் பலகட்டங்களில் பாதுகாப்பு அமைப்புகள் சோதித்து பொருத்தபட்ட
இந்த காரை குடியரசு தலைவர் மட்டுமே
உபயோகிக்க முடியும். விலையைம் மொத்த செலவையும்
ராணுவம் செய்திருப்பதால் தகவல் அறியும் சட்டத்தில் கூட அதை அறிய முடியாது.
6 கோடியிலிருந்து 8 கோடிக்குள் இருக்கும் என வல்லுனர்கள் மதிப்பிடுகிறார்கள். உள்ளே குடியரசுதலைவர் உடன் வரும் விருந்தினருடன்
முகம் பார்த்து பேச வசதியாக சீட்டுகளை திருப்பிகொள்ளும் வசதிகளுடனும், வீடியோகான்பிரன்ஸிங்
வசதியுடனும் அமைக்கபட்டிருக்கும் இந்த
காரில் வெளியே இருப்பவைகளை பார்கக தனி வீடியோ வசதிகள். பேசப்படுவது ஓட்டுபவருக்கு கேட்க முடியாத வசதிகள் எல்லாம்.
கார்கள் உற்பத்தியிலும் ஏற்றுமதியில் முதலிடத்திலிருந்தாலும் நாட்டின் தலவருக்காக கார் இறக்குமதி செய்யும்,
விளமபரத்திற்காக மட்டுமே ஆடம்பரமாக தஙகத்தில் கார்
தயாரிக்கும் நாடு இந்தியாவாகதானிருக்கும்.
இந்த நாட்டில் தான் , கடனில் கார்
வாங்கிய சாமனியன் தொடர்ந்து உயரும்
பெட்ரோல்விலை, பராமரிப்புசெலவு, வங்கிகடனின்வட்டிவீதம் போன்றவைகளை
சமாளிக்க திணறிக்கொண்டிருக்கிறான்.