2G ஸ்பெக்ட்ரம் ஊழலினால் தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம்
ஏற்படுமா?
தேசத்தையே உலுக்கிய நாடுமுழுவதும் எல்லா மீடியாவினாலும்
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஊழலாக வர்ணிக்க்பட்ட 2ஜி அலைவரிசை ஊழலின் தாக்கம்
எந்த அளவு தமிழக தேர்தலில் இருக்கும் ?
ஆட்சி மாற்றம்
ஏற்படுமா ?
எதிரணியின் கனவும் கணிப்பும் அதுவாகயிருந்தாலும் இந்திய
தேர்தல் சரித்திரத்தை சற்று திருப்பிபார்த்தால் அது வேறுசில விஷயங்களையும்
சொல்லுகிறது. ஆரம்ப காலத்திலிருந்தே ஒவொரு தேர்தலின்போதும் ஒரு ஊழல் பிரச்சனை
எழுந்து விவாதிக்கபட்டிருக்கிறது. 1980கலின் இறுதியில் ஃபோபர்ஸ் ஊழல் வெடித்தெழுந்த பின் ௧௯௮௯
தேர்தலில் காங்கிரஸ்கட்சி மிகப்பெரியதோல்வியை சந்த்தித்து ஆட்சியை இழந்தது. அதே
நிலை இன்று தமிழக்தில் திமுக விற்கு நேருமா?
அன்றிருந்த நிலையை இன்றைய சூழ்நிலையுடன் ஒப்பிடமுடியாது. “மிஸ்டர் கீளின் என்ற இமேஜுடன் ஜீன்ஸ் டீ ஷ்ர்ட் அணிந்த துடிப்பான இளைஞரை
முத்லமுறையாக தலைவராக் பார்த்த மக்கள் ஃபோப்ர்ஸ் ஊழலினால் அதிர்ச்சியடைந்தார்கள்.
அந்த காலகட்டத்தில் அது மக்களுக்கு செய்த துரோகமாக எதிர்கட்சிகள் வர்ணிக்க்பட்டதை
மக்கள் எற்றார்கள். இன்று சூழ்நிலை அப்படியில்லை. கடந்த 30 ஆண்டுகளில் ஊழல் இந்திய அரசியலில் ஒரு அங்கம்.
எந்தகட்சியும் ஊழலுக்கு விதிவிலக்கு இல்லை எனபதை மக்கள் உணர்ந்து கொண்டுவிட்டார்கள்.
ஃபோபர்ஸை தொடர்ந்து பல ஊழல்கள்
வெடித்திருக்கின்றன். அதில் பலவற்றை மக்கள் மறந்தே போனார்கள்.அதனால் மத்திய
அர்சில் ஆட்சி மாற்றங்கள் நிகழவில்லை.
இந்திய அரசியலில் எந்த ஊழலும் வெளிவந்த இரண்டாடுகளுக்கு பின் தேர்தல் வந்தால் அது ஆளும் கட்சிக்கு பெரிய அளவில் பாதிப்பை
உண்டாக்கியதில்லை. தேர்தல் நெருங்கிய காலத்தில் ஊழல் வெடித்தால் அது ஆளும் கட்சியை
பாதிக்கும். இந்த தியரியின் படி திமுக இந்த மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்.ஆனால்
இந்திய வாக்காளார்கள் ஊழல்களிலும் எது தேசிய மட்ட ஊழல் எது உள்ளுர் சமாசாரம் எனபதை
ஆராய்ந்து பார்க்க கற்றுகொண்டுவிட்டார்கள்.
மாநில அளவில் சமப்ந்தபட்ட ஊழல் இருந்தால் அது மாநில, தேசிய அளவிலிருந்தால் பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கிறது. அதிமுகவின்
ஆட்சியில் எற்பட்ட டான்சி ஊழல்,சொத்துகுவிப்பு போன்றவை தமிழக தேர்தலில் மாறுதலை ஏற்படுத்தின. ஆனால் தேசிய பொருளாதாரத்தையே பாதித்த யூனிட் ட்ரஸ்ட் பங்குசந்தை, பல்கோடிஹவாலா, எம்பிகள் விலைபேசபட்டது போன்ற ஊழலகள் தொடர்ந்து வந்த தேர்தலகளில் எந்த தாக்கத்தையும்
ஏற்படுத்தவில்லை. 1980லிருந்து இதுவரை 73 பெரிய ஊழல்கள் 3 நாள் தலைப்புசெய்தியாக
இருந்து பின் மறக்கபட்டிருக்கிறது. உபியில்2500கோடி தாஜ்மஹால் வணிகவளாக ஊழல், தொடர்ந்து வந்த தேர்தல்களில் மயாவதியின் ஆட்சியை பாதிக்கவில்லை. ஜார்கண்டின்
முன்னாள் முதல்வர் 4000கோடி ஊழல் அம்பலமாகி கைது வாரண்ட்
வெளியிட்பட்டிருக்கும் நிலையிலும் தனது
நண்பர்களுக்காக தேர்தல் பிராசாரம் செய்து அவர்கள் வெற்றிபெறார்கள். பல கோடிகளில்
பேசப்ட்ட கால்நடைதீவன் ஊழல் லாலுபிராசத்தின் வளர்ச்சியை தடுக்கவில்லை.
” “ஐந்தாண்டுகளில் அறிவித்த
இலவசங்கள், கவர்ச்சி திட்டங்கள்
விள்மப்ரங்களுக்கு பின்னும் திமுக இன்று மகககளிடையே 2ஜி ஊழலினால் நம்பிக்கையை
இழந்து விட்டது “ என்கிறார்
திருச்சியிலுள்ள தேர்தல் கணிபாளார், மயிவாகனன் தஙகளது
கவர்ச்சிகரமான திட்டங்களின் வெற்றிகளினால் ஒட்டுநிச்சயம் என்ற நிலையில் 2ஜி விவகாரம்
பின்னைடவை எற்படுத்தியிருக்கிறது என்பதை திமுக உணர்ந்தே இருக்கிறது. அதிமுக விற்கு
சாதகமாக அடிக்கும் இந்த காற்றை, ஜெயலலிதா எப்படி ஊழல் ராணியாக உயர்ந்து சொத்துகுவித்தார் என்ற பழைய கதையைச்
சொல்ல ஆர்ம்பித்து திசைதிருப்ப துவங்கியிருக்கிறது. ராஜா தலித் எனப்தால்
பழிவாங்கப்ட்டுவிட்டார், அவ்ர் செய்த
காரியத்தினால்தான் செல்போனில் 30 பைசாவிற்கு பேசமுடிகிறது எனற ரீதியில் பிரசாரம்
துவங்கியிருக்கிறது.
திரு.எம்.ஜி தேவசகாயம் என்ற முன்னாள் ஐஏஸ் அதிகாரி” “நேர்மையான
தேர்தல்களுக்கான் அமைப்பில்”””“ அங்கம் வகிப்பவர்.தமிழகம் முழுவதும் பயணம் செய்து
நேர்மையான் தேர்தல் குறித்த விழுப்புணர்வை ஏற்படுத்தும் பணியை செய்பவர். அவர் “ 2
ஜி ஊழல் கிராம மக்களுக்கு புரியவில்லை. மீடயாக்கள் சொல்லும் அரசுக்கு எற்பட்டிருக்கும்
நஷ்டம், மதிப்பீடுட்டு நஷடம் எனப்தெல்லாம் அவர்களுக்கு புரியவில்லை.
கிராமமக்கள் கேட்கும்கேள்வி எபபடி அவ்வளவு பெரிய அளவில்பணத்தை சுருட்டமுடியும்? அவர்கள் பெரிய அளவில் எல்லாம் ஊழல் செய்துவிடமுடியாது என்று
நினைக்கிறார்கள். நகர்புற ம்ககளுக்கு நன்றாக விஷயம் புரிந்திருக்கிறது. ஆனால் இந்த
படித்த விஷயம் தெரிந்த நகர்புற மக்களில் எத்தனைபேர் தேர்தல் நாளில் ஒட்டுசாவடிக்கு
வந்து தங்கள் கடமையை செய்யபோகிறார்கள்? என்கிறார்.
கிராம மக்களை அவ்வளவு எளிதாக
மதிப்பிட்டுவிடமுடியாது. ரமாநாதபுரத்திலும், கும்பகோணத்திளும்
2ஜி ஊழலைகாட்டும் கோலபோட்டி,கட்டுரைபோட்டியில்
கிராம பெணகளும் மானவர்களும் பெரிய அளவில் பங்குபெற்று அந்த விஷயதை எந்த அளவிற்கு புரிந்துகொண்டிருக்கிறார்கள் எனபதை
காடிட்டினார்கள் எனகிறார் திரு ஆர் உதய்குமார். இவர்
அதிமுக மாநில மாணவர் அணிசெயலாளார்.
2ஜி பிரச்ச்னையில்லாமலேயே, இந்த தேர்தலில் கடுமையான விலைவாசி உயர்வு, பலதுறைகளின் ஒரு குடும்பத்தினரின்ஆதிக்கம், ஆளுவோருக்கு எதிராக எழும்போக்கு போன்றவைகளினால் திமுகவின் வெற்றி வாய்ப்பு குறைவே. ஆனால் தமிழக தேர்தலில் எபோதுமே சில கூட்டல் கணக்குகள் முடிவை நிர்ணயித்திருக்கின்றன. கடந்த தேர்தலின் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் இன்று இருக்கும் அணிகளின் நிலையை கணித்தால் அதிமுக அணிக்கு 43 %மும் திமுக அணிக்கு 47% வ்ருகிறது. (AIADMK+DMDK+MDMK+LEFT=43.1%, DMK+CONGRESS+PMK+IUML=47.10) 2 ஜி ஊழலின் பாதிப்பால்
குறைந்த பட்சம் இந்த 4% வாக்கார்கள் மாறுதல் வேண்டி மாற்றி ஓட்டளித்தால் கூட ஆட்சிமாறும் வாய்ப்பு தான் அதிகம்.
ரமணன்