காசி நகரம் இந்த பிரபஞ்சத்துக்கே ஒரு பக்தியை,,பக்தி அதிர்வுகளை உருவாக்கிற, மனிதர்களில் ஆன்மீக நாட்டம் கொண்டவர்களுக்கு மனதுக்கு நெருக்கமான ஒரு புனித ஸ்தலம். சிவபெருமானே தான் வாழ வடிவமைத்துகொண்ட நகரம். இங்கு ஆம்கார் ஈஸ்வர், விஸ்வநாதர், கேதர் ஈஸ்வர் மிக முக்கியமான கோவில்கள்.. இதனுடன் ஐம்பத்தாறு விநாயகர் கோவில்கள், எட்டு திசைகளில் ஏழு அடுக்குகளில் அமைந்துள்ளன. இவை மட்டுமின்றி, அறுபத்துநான்கு யோகினி கோவில்கள், நவதுர்கா கோயில்கள், பத்து சண்டி கோவில்கள் மற்றும் பன்னிரெண்டு ஆதித்ய கோவில்கள் சேர்ந்து நானூற்றி அறுபத்தெட்டு கோவில்கள் இங்கு உள்ளன. இந்த பன்னிரெண்டு ஆதித்ய கோவில்கள் சூரியன் தக்ஷிணாயத்திலிருந்து உத்தராயணத்திற்கு பயணமாகும் பாதையை ஒத்து அமைந்துள்ளது. இதைத் தவிர் 12 ஜோதிலிங்கங்களும் ஒருசேர அமைந்த ராமேஸ்வரம் கோவில். இந்தியாவில் மட்டுமில்லை, உலகின் எந்த நகரத்திலும் இவ்வுளவு கோவில்களோ வழிபாட்டுதலுங்களோ கிடையாது. எல்லா கோவில்களிலும் சரியான நேரங்களில் தரிசனம் செய்ய வேண்டுமானால் நாம் காசியில் குறைந்தது ஒரு மாதம் தங்க வேண்டும். அப்படி செய்பவர்களும் சிலர் இருக்கிறார்கள். ஆனால் நமது குறுகிய கால பயணத்தில் முக்கியமாக நாம் பார்த்து தரிசிக்க வேண்டிய கோவில்களை சத்குருவின் வழிகாட்டுதலின் படி குழு தலவர்கள் அழைத்து செல்லுகிறார்கள்


வெண்சலவைக்கல் விரிந்திருக்கும் ஓரு பறந்த முற்றத்தின் நடுவே நான்கு புறமும் வாயில்கள் கொண்டஒரு மண்டபம்.அதுதான் சன்னதி. நடுவே தரையின் ஒருபுறத்தில் தரையிலேயே மூர்த்தீ. சுற்றி நான்குபுறமும் பூஜைசெய்யும் அர்ச்சர்கள்.அவர்கள்தங்கள் உடலாலும்,பூஜைப்பொருட்களாலும் நுழைவாயிலை மறைத்துக்கொண்டிருப்பதாலும் அதற்கு வெளியே மக்கள் நெருக்கியடித்துக்கொண்டு நிற்பதாலும் நமக்கு சன்னதி ஸ்வாமி எதுவும் தெரியவில்லை. அனேகமாக இந்தியாவின் எல்லா மாநில முகங்களை பார்க்கமுடிந்த அந்த கூட்டத்தில் அதில் தெரிந்த எமாற்றத்தையும் உணரமுடிந்தது. நன்றாக பார்ப்பதற்கு எதாவது எற்பாடு செய்யதிருக்கலாமே என்று ஆதங்கப்பட்டு அவரவர் மொழிகளில் முணு முணுப்பது புரிகிறது, ஆனால் மந்திரங்களுடனும் வேதகோஷத்துடனும் காட்டப்படும் ஆரத்தியின் உச்சகட்டத்தில் எழும் கோஷத்தில் எல்லாம் கரைந்துபோகிறது அபிஷேகம் ஆர்த்திமுடிந்தபின் சந்நதியின் ஒரு வாயில் வழியே நம்மை அனுமதிக்கிறார்கள். அருகில் சென்று பார்க்கிறோம். வெள்ளியிலான நாக கவசம் அணிவிக்கப்பட்டு, பளீரென்று சிவப்பு மஞ்சள் மலர்களில் அலங்கரிக்கப்பட்டிருக்கிறார் விஸ்வநாதர். சில நிமிடங்களில் மலர் அலங்காரங்கள் களையப்படுகிறது , நாம் பூஜிக்க அனுமதிக்கபடுகிறோம்
. தரையோடு தரையாக இருக்கும் அந்த மூலவரை மண்டியிட்டு வணங்கி பேப்பர் டம்பளரில் அவ்வளவு நேரம் பத்திரமாக வைத்திருந்த பாலை ஊற்றி அபிஷகம் செய்கிறோம். அந்த மூர்த்தியை தொட அனுமதிக்கிறார்கள். அந்த ஒரு வினாடி ஸ்பரிசம் மனதில் தீயாக பரவுகிறது. நமக்கு மெய்சிலிர்க்கிறது. தரிசனத்திற்குபின்னர் வெளியே வந்த நாம் ஒரு மகத்தான காரியம் செய்து விட்டதைபோல உணர்கிறோம் இம்மாதிரி தான் பெற்ற அனுபவத்தை எழுதியிருக்கும் மரபின் முத்தையா வின் கவிதை நினைவில் வந்து போயிற்று.
. தரையோடு தரையாக இருக்கும் அந்த மூலவரை மண்டியிட்டு வணங்கி பேப்பர் டம்பளரில் அவ்வளவு நேரம் பத்திரமாக வைத்திருந்த பாலை ஊற்றி அபிஷகம் செய்கிறோம். அந்த மூர்த்தியை தொட அனுமதிக்கிறார்கள். அந்த ஒரு வினாடி ஸ்பரிசம் மனதில் தீயாக பரவுகிறது. நமக்கு மெய்சிலிர்க்கிறது. தரிசனத்திற்குபின்னர் வெளியே வந்த நாம் ஒரு மகத்தான காரியம் செய்து விட்டதைபோல உணர்கிறோம் இம்மாதிரி தான் பெற்ற அனுபவத்தை எழுதியிருக்கும் மரபின் முத்தையா வின் கவிதை நினைவில் வந்து போயிற்று.
வினாடி நேரம் விரல் பிடித்த விஸ்வநாதம்
என் வினைகளெல்லாம் அவன் மடியில் விழுந்த நேரம்
கனாவில் அவன் முகம் குழாவுவும் தினம் தினம்
வினா மலர்ந்த நேரம் அவன் விடைகள் சாஸ்வதம்
அந்த பிரம்ம மூஹூர்த்த நேரத்தில் சன்னதிக்கு வெளியே மண்டபத்தில் அமர்ந்து குழுவினர் தியானிக்கின்றனர். இந்த கோவிலின் வளாகத்தில் தேவிக்கு சன்னதி இல்லை. சற்று அருகில் உலகிற்கே உணவிடும் அன்னபூர்ணியின் தனிக் கோவில் இருக்கிறது. இங்கு தினசரி தேவிக்கு நைவேத்தியம் முடிந்த பின் 100 ஏழைக்களுக்கு உணவு வழங்கும் அறகட்டளை நிறுவி கடந்த 100 ஆண்டுகளாக நடத்திகொண்டிருப்பவர்கள் தமிழ் நாட்டு நகரத்தார் சமூகத்தினர். நுழைவாயிலில் இந்த விவரத்தை தமிழ் எழுத்துகளில் சொல்லும் கல்வெட்டு நம்மை சந்தோஷபடுத்துகிறது.
கோவிலை விட்டு வெளியே வந்து மெல்ல விழிக்க துவங்கியிருக்கும் காசிநகர வீதியில் சூடான சுவையான டீ சிறிய மண் கப்புகளில்
தருகிறார்கள். ஆஹா! பிளாஸ்டிக், பேப்பர் குப்பையில்லை என நினைத்துகொண்டிருக்குபோதே டி குடித்தவர்கள் அந்த கப்பை தரையில் எறிந்து உடைத்துபோட்டிருக்கும் குட்டி மலை கண்னை உறுத்துகிறது. நடந்து பஸ்களுக்கு செல்லுகிறோம், குழுக்கள் பிரிந்து போகாதிருக்க ஒவ்வொரு பஸ் குழுவிற்கு ஒரு வண்ண கொடி. அந்த குழுவின் தலைவர் கொடியோடு முன்னே நடக்க நாம் பின் தொடர வேண்டும்.
தருகிறார்கள். ஆஹா! பிளாஸ்டிக், பேப்பர் குப்பையில்லை என நினைத்துகொண்டிருக்குபோதே டி குடித்தவர்கள் அந்த கப்பை தரையில் எறிந்து உடைத்துபோட்டிருக்கும் குட்டி மலை கண்னை உறுத்துகிறது. நடந்து பஸ்களுக்கு செல்லுகிறோம், குழுக்கள் பிரிந்து போகாதிருக்க ஒவ்வொரு பஸ் குழுவிற்கு ஒரு வண்ண கொடி. அந்த குழுவின் தலைவர் கொடியோடு முன்னே நடக்க நாம் பின் தொடர வேண்டும்.
ஆரஞ்சு. சிவப்பு பச்சை நீல, என பல வண்ணங்களில் கொடிகள் ஏந்தி காலை நேரத்தில் அனிவகுக்கும் இவர்கள் எந்த கூட்டணி? தேர்தல் இன்னும் வரவில்லையே என்று பார்ப்பவர்கள் நினைத்திருக்கலாம். அந்த அளவிற்கு அழகான ஊர்வலம். இன்று காலை உணவிற்கு பின் மாலை வரை நீங்கள் காசிநகரில் விரும்புவதை பார்க்கலாம் என்று அறிவித்திருப்பதால் எதைப்போய் பார்க்கலாம் என யோசித்து கொண்டே பஸ்ஸில் ஏறுகிறோம்.


மேலும், “காசியில் மொத்தம் 26,000 கோயில்கள், ஆனால் அதில் இப்போது 3000 கோயில்கள் மட்டுமே உள்ளன. மற்றவை முகலாயர்களின் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டுவிட்டது. இந்த சக்தி வட்டத்தின் மையத்தில் காசி விஷ்வநாதர்.காசி விஷ்வநாதர் தான் இந்த அமைப்பின் உச்சபட்ச சக்திநிலையை கொண்டுள்ளார். (Kashi Viswanathar temple is the core of this geometry). இதை எடுத்துவிட்டால் காசி அழிந்துவிடும் என்று எண்ணி முகலாய படையெடுப்பின்போது காசி விஷ்வநாதரை மட்டும் அங்கிருக்கும் இடத்திலிருந்து அகற்றி கிணற்றிற்குள் தூக்கி எறிந்து விட்டனர். பின்பு பல வருடங்களுக்கு பிறகு அந்த கிணற்றிலிருந்து லிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்கே பொருத்தப்பட்டு விட்டது. அந்த கிணற்றை நீங்கள் இப்போதும் பார்க்கலாம்அப்போது முழு வடிவம் கிடைக்காதால் கிடைத்தை வைத்து பூஜை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் அதனால் தான் ”காசிக்க கங்கர் சிவசங்கர்” என்று சொல்லுகிறார்கள். அப்படின்னா இங்க இருக்கிற ஒரு கல்லு கூட சிவன் தான் என்று அர்த்தம். எப்போ இந்த நகரத்தையே ஒரு சக்திஸ்தலமாக படைத்துவிட்டானோ இங்கே இருக்கிற ஒவ்வொரு கல்லுக்கும் அந்த தன்மை வந்துவிடுகிறது. நீங்கள் இருப்பது அப்படி ஒரு சக்தியான சூழ்நிலை என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்
காசி விஷ்வநாதர் கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது உண்மையாகவும் இருக்கலாம். உண்மை இல்லாமலும் இருக்கலாம். ஆனால் காசியின் சக்திநிலை பெருமளவு அழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் முழுமையாக அழிக்கப்படவில்லை. நீங்கள் காண்பது அதன் மிச்சம்தான். அதனால் அந்த கோவில் இருக்கும் இடத்தின் சக்தியை அது அங்கு நிறுவபட்டிருப்பதை நீங்கள் உனர வேண்டும். லிங்க உருவம் ஒரு அடையாளம் தான். பூஜைகள் முடிந்ததும் நீங்கள் அங்கு சில நிமிடங்கள் உட்கார்ந்து பாருங்கள் புரியம்.