ஆழம் ஜூலை இதழலில் எழுதியது
பதவி
ஏற்றதும் பஜக அரசு செய்த முதல் காரியம். வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கிய கருப்பு
பணத்தை கண்டுபிடித்து வெளிகொண்டுவர ஒரு தனி சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது தான். கட்சியின்
தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட இந்த விஷயத்திற்காக முந்திய அரசில் எதிர்கட்சியாக
இருந்தபோது பஜக வலுவாக போராடிக்கொண்டிருந்தது.
இந்த அறிவிப்பு பரவலாக வரவேற்க பட்டாலும் இந்த சவாலான விஷயத்தை சாதிக்க புதிய அமைப்புகளும் அறிவிப்புகளும் மட்டும் போதாது.
மோடியின் அரசுக்கு ஒரு அரசியல் துணிவு
(POLITICAL WILL) இருந்தால் மட்டுமே இதைச்சாதிக்க முடியும். மக்கள் செல்வாக்கும், பாராளுமன்றத்தில் மிகப்பெரிய மெஜாரிட்டியும் இருக்கும் இந்த அரசுக்கு
அத்தகைய அரசியல் துணிவு இருக்குமா? இருந்தாலும் அதை கட்சி அரசியல் எல்லைகளை தாண்டி
நாட்டின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்துமா? இந்திய அரசியல் கட்சிகளின் தலைவிதியை நிர்ணயக்கும்
கார்பேர்ட்களும், மிகசக்திவாய்ந்த செல்வந்தர்களும் சமப்ந்த பட்ட இந்த விஷயத்தை ”கார்ப்ரேட் பிரண்டிங்” என கருதப்படும் மோடியின் ஆட்சி எவ்வளவு கடுமையாக கையாளும்? என்ற கேள்விகளுக்கான விடையை
பொறுத்து தான் இந்த விஷயத்தில் வெற்றி அமையும்.
சிறப்பு
புலானய்வு குழு அமைக்க பட்டதை பிஜெபியின் சாதனையாக சொல்ல முடியாது. காரணம் இந்த குழு
உச்சநீதிமன்ற ஆணைக்கேற்ப அமைக்கபட்ட ஒரு குழு. 2009ல் வழக்கறிஞர் ஜெத்மலானி, கோபால் சர்மா,பேராசிரியர்
தத்தா,கேபிஎஸ் கில் திருமதி வைத்த்யா ஆகியோர் இணைந்து கறுப்பு பண விவகாரத்தில் யூபிஏ
அரசு மிக மெத்தனமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. அதைச்செய்ய கட்டளை இடவேண்டுமென்று
ஒரு வழக்கை உச்ச நீதி மன்றத்தில் தொடர்ந்திருந்தனர்.
உச்ச
நீதி மன்றகண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு என்பது
சிலகாலம் முன்பு உச்சநீதி மன்றம் கண்டுபிடித்திருக்கும் ஒரு புதிய விஷயம். இப்படி
அமைக்க சட்டபிரிவுகள் இல்லை. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தின் கிழ் ஏற்படுத்த
படும் ஒரு நிர்வாக அமைப்பு. அந்தமாதிரியான ஒரு புலானாய்வை கோரியது ஜெத்மலானி குழு. யூபிஏ அரசு சட்டபுத்தகத்தின் ஒட்டைகளை யெல்லாம்
ஆராய்ந்து அப்படி ஒரு குழு அமைப்பதை தவிர்த்து அல்லது தாமத படுத்திகொண்டிருந்தது. இறுதி
தீர்ப்பில் அப்படி ஒரு குழு அமைக்கபடவேண்டும் என ஆணையிட்டதை எதிர்த்து அப்பீல் செய்திருந்தது.
அப்பீல்லிலும் உச்சநீதி மன்றம் குழு அமைப்பதை
உறுதி செய்து, அதை அறிவிக்கும்படி அரசுக்கு ஆணையிட்டிருந்தது. பொறுப்பேற்ற புதிய அரசு அந்த ஆணையின் அடைப்படையில்
தான் இந்த சிறப்பு புலானய்வு குழுவை அமைத்திருக்கிறது. அதாவது பிஜேபி தனிப்பெருபான்மையுடன்
ஆட்சிக்கு வராவிட்டாலும் அல்லது யார் ஆட்சிக்கு வந்திருந்தாலும் இந்த குழு அமைக்க பட்டிருக்கும்.
எவ்வளவு
கறுப்பு பணம் இருக்கிறது?
ஒரு
விடை தெரியாத கேள்வி இது. முதலில் இதை சரியாக கணக்கிட்டு உறுதி செய்ய வேண்டும். 2012 மே மாதம் நாடாளுமன்ற கூட்ட தொடரின் கடைசி நாளன்று
அன்றைய நிதி அமைச்சர் பிராணப் முகர்ஜி கறுப்பு பண நிலை குறித்து ஒரு 100 பக்க வெள்ளை
அறிக்கையை அதிரடியாக தாக்கல் செய்தார், அரசு
எடுத்த பலமுனை நடவடிக்கை 5 அம்ச திட்டம் என பல விஷயங்களை பேசிய அந்த அறிக்கையின் முன்னுரையில்
சொல்லப்பட்ட விஷயம். இது. ”நாட்டின் மூன்று முக்கிய உளவு நிறுவனங்கள் எவ்வளவு முயன்றும்
உதேசமாக எவ்வளவு கறுப்ப பணம் இருக்கிறது என்பதை கணுபிடிக்க முடியவில்லை.”
இதற்கிடையே, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் ரூ.25 லட்சம் கோடிக்கு மேல் கருப்பு பணம் பதுக்கி இருப்பதாக, சிபிஐ இயக்குனர் ஏ.பி.சிங் 2011 பிப்ரவரி மாதம்
தகவல் வெளியிட்டிருந்தார். இதனால் பெரும் பரபரப்பு
ஏற்பட்டது. ஆனால், ரூ.25 லட்சம் கோடியை
இந்தியர்கள் பதுக்கி உள்ளனர் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று இந்தியாவில் உள்ள
சுவிட்சர்லாந்து தூதரகம் மறுப்பு தெரிவித்தது. அதன்பிறகு இந்த விவகாரம் கிடப்பில்
போடபட்டது
தொடர்ந்து ஒரு ஜெர்மானிய .வங்கி தங்களிடம் பெரிய அளவில்
கணக்கு இருக்கும் இந்தியர்களின் பெயர் பட்டியலை அரசுக்கு தந்திருக்கும் செய்தி
கசிந்திருந்ததால் அதை பாராளுமன்றத்தில் வெளியிட வேண்டும் என்று அன்றைய
எதிர்கட்சியான பிஜெபி குரல் எழுப்பி கொண்டிருந்தது. ஆனால் வெள்ளை அறிக்கையில்
இதுபற்றி அரசு எதுவும் சொல்லவில்லை.
எவ்வளவு இந்திய பணம் கறுப்பு பணமாக வெளிநாட்டில் பதுக்க பட்டிருக்கும் என்பதை ஆய்வாளர்கள் பலவகைகளில் கணிக்க
முயற்சிதிருக்கிறார்கள். சட்டத்திற்கு புறம்பாக
தங்கள் நாட்டைவிட்டு வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி வைப்பது என்பது
இந்தியாவிற்கு மட்டும் உரிய விஷயமில்லை. உலகமயமான இந்த விஷயத்தை 1999லிருந்து
2007 வரை 162 நாடுகள் இப்படி
செய்திருக்கின்றன என்கிறது உலகவங்கியின்
ஒரு அறிக்கை. நாட்டின் மொத்த GDP யில் 20 முதல் 34 % வரை இது இருக்கிறது.
இந்தியாவில் 20 முதல்-23 % வரை இருக்கலாம் என்கிறது இந்த அறிக்கை.(நமக்கு அண்ணன்
கள் இருக்கிறார்கள்). முந்திய அரசின் வெள்ளை அறிக்கை இந்த புள்ளிவிபரங்களை மறுக்க
வில்லை. இந்த மதிப்பீட்டின் படி பார்த்தால்
குறைந்த பட்சம் 40 ஆயிரம்
கோடிக்கும் மேல் கருப்பு பணம் இருக்கிறது.
இதன் சொந்தகார்கள் அடையாளம் காணப்பட்டு, பணத்திற்கான வரியை வசூல் செய்தபின்
அவர்கள் தண்டிக்கபட வேண்டும்.
வெளி நாட்டில் மற்ற
இடங்களை விட சுவிஸ் நாட்டில் தான் அதிக வெளிநாட்டினர் பணம் வைத்திருக்கின்றனர்.
அந்த நாட்டின் வங்கி விதிகளும், ரகசியம் காக்கபட வேண்டியகடுமையான சட்டங்களும் ஒரு
காரணம். சமீபத்திய சர்வ தேச நெருக்கடிகளுக்கு பின்னர் சுவிஸ் தேசிய வங்கி நிர்வாகம்
ஆண்டு தோறும் நாடுகள் வாரியாக தங்கள் நாட்டு வங்கிகளில் இருக்கும் கணக்குகளின் மொத்த தொகையை அறிவிக்கிறது.
இந்த மாதம் 2013ம் ஆண்டுக்கான கணக்கு
விபரங்களை அறிவித்திருக்கிறது. இந்தியர்கள் வைத்திருக்கும் பணம் 14000 கோடி..
ஆச்சரியம் என்னவென்றால் இது கடந்த ஆண்டைவிட 40% அதிகம். 2010-11 ஆண்டுகளில்
கறுப்பு பணம் பற்றி அரசாங்க அறிவிப்புகள், பாராளுமன்றவிவாதங்கள் இருந்த காலத்தில்
கணிசமாக குறைந்திருந்த தொகை இது. கடந்த ஆண்டு மெல்ல இது அதிகரித்திருக்கிறது,
கறுப்பு பணத்தை ஒழிக்க
இதுவரை எடுக்கபட்ட முயற்சிகள்
1947லிருந்து இன்றுவரை
40க்கும்மேற்பட்ட கமிஷன்கள் அமைக்கபட்டு,
இந்த 65 ஆண்டுகளில் பல் கோணங்களில் அலசி ஆராயபட்ட விஷயம் இது. கறுப்பு
பணத்தின் பிறப்பு, பரிமாற்றம், பதுக்கல் என பல்வேறு பரிமாணங்களில்
ஆராயபட்டிருக்கும் இந்த விஷயத்தில் பல ஆயிரகணக்கான ஆலோசனைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
மிக முக்கியமானது வாஞ்ச்சு கமிட்டியின் அறிக்கை. அருமையான யோசனைகள் சொல்லபட்ட இந்த
அறிக்கை முழுமையாக ஏற்க படவில்லை. சில நல்ல யோசனைகள் ஏற்க பட்டன. ஆனால் காலபோக்கில்
அவைகள் நீர்த்துபோயின. இப்படி யோசனைகள் பல இருந்தும் அரசாங்கங்கள் செயல் படுத்த
முடியாமல் போனதின் காரணம் அந்தந்த அரசுகளுக்கு தேவையான அரசியல் துணிவு இல்லாதது
தான். சம்பந்த பட்டவர்களினால் ஆட்சிக்கும் கட்சிக்கும் வரும் ஆபத்துக்களை விட இந்த
கறுப்பு பணம் பிரச்சனை இருந்து தொலையட்டும் போன்ற உணர்கள் தான்
இந்த புலானாய்வு குழு
எவ்வலவு வலிமையானது,?
2ஜி வழக்கில் ஒரு குழு
சிறப்பாக செயலாற்றியதால் இப்போது உச்ச நீதிமன்றம் இது போன்ற குழுக்களை நியமிக்கிறது. ஆனால் கோல்கேட் விஷயத்தை
அவர்கள் கையாண்டைதை பார்த்த போது எல்லா குழுக்களும் ஒரே தரத்தில் இருக்க போவதில்லை
என்பது புரிந்தது. கறுப்பு பண விவகாரத்திற்கு அமைக்க பட்ட குழுவில் தலவர்
உட்பட 13 பேர்கள் உறுப்பினர்கள். நீதிபதி எம். பி ஷா தலமையைலான இந்த
குழுவில் உபதலைவர் தவிர, மற்றவர்கள் அனைவரும். துறைஅதிகாரிகள். ரிசர்வ்
வங்கி, அமுலாக்க பிரிவு, உளவுத்துறை
வருமானவரித்துறை, போதைமருந்து கடத்தல் தடுப்பு, பொருளாதரா குற்ற தடுப்பு துறை
போன்றவற்றின் செயலர்கள். இவர்கள் எப்போது வேண்டுமானலும் பதவி உயர்வு, மாற்றம் என்ற
நிலையிலிருப்பவர்கள்.. இப்படி இந்த
குழுவின் அமைப்பை பார்க்கும் போதே உடனடி செயல்படக்கூடியது என்ற எண்ணம் எழவில்லை.
பிரதமர் அறிவித்தவுடன் சம்பிரதாயமாக
முதல் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
இந்த அதிகாரிகள்
அனைவரும் ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனையில் தீவீரமாக இருந்து அரசு துணிவுடன்
செயல்படதாதை கண்டு அல்லது நிர்பந்தம் காரணமாக ஒதுங்கியிருப்பவர்கள். விஷயத்தின் முழு கனத்தையும் அதன் பின்னால் உள்ள
அரசியலையும் நன்கு அறிந்தவர்கள். ஆனால் பல்துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு என்பது
இந்திய அதிகார வர்கத்தினரிடையே தோற்று போன ஒரு விஷயம். மேலும் இந்த குழுவின் செயல் திட்டம் அறிவிக்க படவில்லை. அவை வெளிப்படையாக
அறிவிக்க படுமா என்றும் தெரியவில்லை. இவர்களுக்கு அளிக்கபட்டிருக்கும் பொறுப்புகள்(terms of Reference) பற்றியும்
தெளிவாக பேசப்படவில்லை. உதாரணமாக ஜெர்மன் அரசு அளித்த பட்டியலில் உள்ள 26
பேர்களில் விசாராணை நடத்தி அதில் 8 பேர்களுக்கு போதிய ஆவணங்களும் ஆதாரங்களும்
இல்லாதாதால் கைவிடபட்டு மற்றவர்களிம் மீது
விசாராணை தொடர்ந்து கொண்டிருப்பதாக முந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
அந்த பெயர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கிழ் விண்ணபித்தவருக்கு
மறுக்கபட்டது. உச்ச நீதி மன்றத்தில்
இரண்டு சீலிட்ட கவர்களில் தனித்தனியாக
அந்த பெயர்களை கொடுத்த அரசு மனுதாரருக்கு மறுத்துவிட்டது. மனுதாரருக்கு வழங்க ஆணையிட்டபோதும்
இது தகவல் உரிமைக்கு அப்பாற்பட்டது என சொல்லி அப்பீல் செய்திருக்கிறது. இந்த
நிலையில் இந்த புதிய குழுவிற்கு தனியாக ஆணை
இடப்படாவிட்டால் தவிர அந்த 8 பெயர்களை ஆராய முடியாது. வழக்குகள் அவசியமில்லை என கைவிடபட்ட பெயர்களில்
ரிலயன்ஸ் குழும இயக்குனர்கள் பெயர்கள் இருப்பதாக, இந்த செய்தி பரபரப்பாக இருந்த
காலத்தில் மீடியாவில் பேசபட்டிருக்கிறது.
இவைகளையெல்லாம்
பார்க்கும் போது மோடி அரசு உச்சநீதிமன்ற ஆணையை பயன்படுத்திகொண்டு முந்திய அரசைப்போல தாமதபடுத்தி அவபெயரை பெற விரும்பாமல் மக்களின் செல்வாக்கை பெற அவசர கதியில் இப்படி
ஒரு வலுவில்லாத குழுவை தெளிவில்லாத
கட்டளைகளுடன் அமைத்துவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.
கருப்பு பணத்தில்தான்
எத்தனை வண்ணம்?
வருமான, அல்லது மற்ற வரிகளை செலுத்த விரும்பாமல்
நடக்கும் எந்த ஒரு செயல் பாட்டிலும்
கருப்பு பணம் பிறக்கிறது. இது சிறிதும்
பெரிதுமாக எல்லா மட்டங்களிலும் நுழைந்திருக்கிறது. காலப்போக்கில் இது பலராலும்
ஏற்றுகொள்ளபட்ட ஒரு விஷயமாகி வளர்ந்து கொண்டே யிருக்கிறது.. கடந்த 50 ஆண்டுகளில்
வரிகள் மிக்குறைக்க பட்டிருக்கின்றன. வரிச்சலுகைகள் மிக அதிகமாகியிருக்கின்றன.
ஆனாலும் இந்த பழக்கமும் அதிகமாகி கொண்டுதான் இருக்கிறது. சுமூகம் அங்கீகரித்தவிட்ட
செயலை அழிக்க சட்டங்களால் மட்டும் முடியாது.
வரிஏய்ப்புக்கு
கடுமையான சட்டங்கள் இங்கே இல்லை. நீண்டகால
சட்ட போராட்டங்களுக்கு பின்னர் வழங்கும் தண்டனைகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாதால்
பிரச்சனை தொடர்கதையாகிறது. இன்றுள்ள சட்டங்களின் படி கணக்கு சொல்ல முடியாத பணம்
கைபற்ற பட்டால் வரி மற்றும் அபராதம் செலுத்தினால் (இது மூன்றில் ஒரு பங்கு
அளவிற்குதான் வரும்) மீதிப் பணம் வெள்ளை பணமாகிவிடும்.
வரி ஏய்ப்பை தவிர ஏற்றுமதியில் வர வேண்டிய
வருமானத்தை குறைவாக மதிப்பீட்டு
இந்தியாவில் பெற்று கொண்டு மீதியை அந்த வெளிநாட்டிலேயே நிறுத்திகொள்வதும்
அதே போல் இறக்குமதிக்கு செலுத்தவேண்டிய அன்னிய செலாவாணியை அதிகம் செலுத்தி பணத்தை
வெளிநாட்டில் சேமிப்பது போன்ற பல வழிகளில்
கருப்பு பணம் உருவெடுக்கிறது. இந்த
வழிமுறைகள் அனைத்தும் நமது அரசு அதிகாரிகளுக்கு நனறாக தெரியும் என்பதும் அவர்களில்
பலர் இவைகளை தடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்பதும் தான் உண்மை.
90களுக்கு பின்
இந்தியாவின் புதிய பொருளாதார கொள்கைகளின் மூலம் கதவுகள் திறக்க பட்டவுடன்
வெளிநாட்டில் பதுக்கபடும் கருப்பு பணத்தின் அளவு பலமடங்கு அதிகரித்துவிட்டது.
இன்று நம்ப முடியாத அளவில் வளர்ந்து
பெருகி நிற்கிறது.
FDI என்ற நேரிடையான அன்னிய முதலீடு திட்டம் பிறக்கும் போதே இந்த கருப்பு
பணம் உருவாதற்கான் வழியுடன் பிறந்த ஒரு திட்டம். இது தற்செயலா, திட்டமிடபட்ட
தந்திரமா என்பது ஒரு புரியாத புதிர், நமக்கு
வந்த அன்னிய முதலீடுகளில் 50%க்கு மேல்
எந்த வரிகளும் இல்லாத சில குட்டி நாடுகளிலிருந்துதான். இந்த நாடுகளின்
பொருளாதார சட்டங்களும் நிதி வங்கி அமைப்புகளும் விசித்திரமானவை. இங்கு அதிக
கஷ்டங்கள் இல்லாமல் கணக்குகள் திறக்கலாம். அதிலிருந்து எங்கு வேண்டுமானலும்
எவ்வளவு வேண்டுமானலும் பணத்தை மாற்றலாம். இந்த வசதிகளினால் இந்தியாவிற்கு இந்த நாடுகளிலிருந்து மூதலீடுகள் கொட்டியது. இன்னும் கொட்டிகொண்டிருக்கிறது. இவற்றி
பெரும்பாலானவை இந்தியர்களின் பணம்- கணக்கில் வராத கருப்பு பணம்- உலகின் பல
மூலைகளிலிருந்து இந்த குட்டி தேசங்களுக்கு அனுப்ப பட்டு அங்கிருந்து மூதலீடாக வடிவம்
எடுத்து ஒரு லெட்டர் பேட் கம்பெனி மூலம் இங்கே அனுப்ப பட்டவை. இதில் முக்கியமான
விஷயம் முதலீடு செய்பவர்கள் நேரிடையாக செய்யாமல் அங்கைகரிக்க பட்ட ஏஜெண்ட்கள் மூலம்
செய்யாலாம். அதனால் உண்மையில்பணம்
அனுப்பியது யார் என்ற தெரிய வாய்ப்பில்லை. பணம் அனுப்ப பட்டு முடிந்தவுடன் அனுப்பிய
அந்த நிறுவனம் மூடபட்டதாக பதிவாகிவிடும்.
நம் நாட்டின் அரசியல்
வாதிகள் தொடரும் முதலீடுகளின் புள்ளி
விபரங்களை காட்டி மக்களை மகிழ்விக்கிறார்கள். கருப்பு பணத்தின் சொந்த கார்கள்
தங்கள் பணம் பத்திரமாக தாய் நாட்டில் பாதுகாப்பாக புது வடிவம் பெற்றதை கண்டு
மகிழ்கிறார்கள். எல்லாம் சரி? எப்படி வெளிநாட்டுக்கு இந்த கருப்பு பணத்தை அனுப்பு
முடிகிறது என்கிறீர்களா? உலகிலேயே இதற்காக மிக பாதுகாப்பான ”ஹவாலா” முறையை
கண்டுபிடித்து சிறப்பாக செயல் படுத்தும் சமார்த்தியசாலிகள் இந்தியர்கள் தான்.
கொடுக்கபடும் உள் நாட்டு பணத்திற்கு ஈடாக வெளிநாட்டு பணம் உங்கள் வெளிநாட்டு
கணக்கில் வரவு வைக்க மிக பெரிய அளவில் சில நிறுவனங்கள், அன்னிய நாட்டு
வங்கிகிளைகளுடன் இயங்கிகொண்டிருக்கின்றன. இவர்கள் கையாண்ட பணத்தின் அளவு
பிரமிக்கவைப்பவை. சில நடவடிக்கைகள கண்டு
பிடிக்கபட்டபின்னரும் ( காண்க HSBC வங்கி- ஆழம் ஜனவரி இதழ்) இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க படாத விஷயம்
இது.
இம்மாதிரி பணபதுக்கலில்
நேரிடையாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக கட்சி
பேதமின்றி எல்லா அரசியல் கட்சியினருக்கும் தொடர்பு இருப்பதால் எந்த அரசு வந்தாலும்
இது முழுவதுமாக ஒழிக்கபட வழியில்லை என்று ஒரு கருத்தும் இருக்கிறது.