பயணங்களில் பார்த்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணங்களில் பார்த்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3/10/12

வரலாற்று வாசகங்களை சொல்லிய வாசற்படிகள்.


இந்த ஆண்டு விவேகானந்தரின் 150 வதுபிறந்த நாள்

வரலாற்று வாசகங்களை சொல்லிய வாசற்படிகள்.
கல்கி7/10/12



சிக்காகோ நகரிலுள்ள  சிக்காகோ ஆர்ட் இன்ஸ்டியூட் உலகின் மிக பெரிய கலைக்கூடங்களில் ஒன்று. 250 ஆண்டுபாரம்பரியமிக்க இதில் பல அரிய ஓவியங்கள் உள்பட 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் காட்சிபடுத்த பட்டிருக்கும் ஒரு அருங்காட்சியகம். வருடம் முழுவதும் ஓவிய காட்சிகள் நடைபெறும் இதன்  ஆர்ட் காலரியில் ஒரு கண்காட்சி நடத்துவது என்பது பல ஓவியர்களின் கனவு.
இவற்றையெல்லாம்விட இங்கே நாம் பெருமைப்படவேண்டிய ஒரு விஷயமும்  இருக்கிறது.  1893ல் விவேகாந்தர்  “அமெரிக்க சகோதிரிகளே, சகோதர்களே” என்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த சொற்பொழிவை நிகழ்த்திய உலக மதங்களின் பாராளுமன்றம் நடைபெற்றது இந்த இடத்தில் தான்.
விவேகானந்தர் பேசிய இடத்தில் இப்போது என்ன இருக்கிறது என கேட்ட நமக்கு ”அப்போது இந்த இடத்தில் ஒரு சிறிய கட்டிடமும் பெரிய மைதானமும் இருந்திருக்கிறது.பின் நாளில் கட்டிடம் விவாக்கி புதுபிக்க பட்டபோது மிக கவனமாக அந்த இடத்தை  சின்ன ஆடிட்டோரியமாக உருவாக்கியிருக்கிறார்கள்.” என்று சொல்லி கட்டிடத்தின் அன்றைய வரைபடம், இன்றைய வரைபடம் ஒப்பிடும் குறிப்புக்கள் எல்லாம் தந்து, நமக்காக அதை திறந்து காட்டவும் ஏற்பாடுசெய்கிறார். திருமதி மேரிஸ்காட். ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியாரான இவர்  இங்கு வருபவர்களுக்கு உதவும் பணியை செய்யும் ஒரு தன்னார்வலர். வயது 72..    ஹாலின் நுழைவாயிலின் அருகில் விவேகானந்தர் வருகையின்,, சொற்பொழிவின் நினைவுபதிப்பாக ஒரு பட்டையம் பதித்திருக்கிறார்கள்.
இரண்டுதளங்களில் ஓவியங்களும்,கலைச்செல்வங்களும் குவிந்து கிடக்கும் இந்த கலைக்கூடத்தின் நடுவே மாடிக்கு செல்ல   வெண்பளிங்கினால் ஆன பெரிய படிகள். இதை  “கிராண்ட் ஸ்டேர்ஸ்” என அழைக்கிறார்கள்.

 ஜித்திஷ் கல்லட்( Jitish Kallat) ஒரு வித்தியாசமான ஓவியர்.  ஓவியம் எனபது உருவங்களின் வடிவாக மட்டுமிருக்கவேண்டியதில்லை என்ற கருத்தை கொண்டவர்.இவர் ஓவியங்களைத்தவிர புகழ்பெற்ற வாசகங்களையே சம்மந்தபட்ட இடங்களில்  பிரம்மாண்ட  வண்ண ஒவியமாக்கி நிறுத்துவார். ஜவர்ஹாலால் நேருவின் எழுச்சி மிக்க முதல் சுதந்திரதின உரை, முதல் இந்திய பராளுமன்ற உரை போன்றவைகளை பிரமாண்ட எழுத்து ஒவியங்காளாக்கி புகழ் பெற்றவர்.,

கடந்த ஆண்டு ஜித்திஷ் இங்கு நடத்திய  ஒரு மாறுதலான ஓவிய  கண்காட்சி பற்றி நாடு முழுவதும் பேசபட்டது. அது விவேகானந்தர்  இந்த இடத்தில் ஆற்றிய உரையின் வார்த்தைகளை  வானவில்லின் வண்ணங்களில் இந்த மாடிப்படிகளில்  வரிசையாக பதித்து  ஒரு ஓவியமாக்கியிருந்தார். முதல் படியில்துவங்கும் முதல் வரியின் வார்த்தைகளை படித்து  கொண்டே ஏறும் நாம் இரண்டாம் தளம் அடையும் போது முழு உரையையும் படித்து முடிக்கிறோம். ” பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்!” என்ற இறுதிப்பகுதி வாசகங்களையும் அந்த சொற்பொழிவு நிகழந்தநாள் செப் 11 என்பதையும் படித்த போது 118 ஆண்டுகளுக்குபின்னர் அதே செப் 11ம் நாளில் அமெரிக்கமண்ணில் நிகழ்ந்த வன்முறை  ஒரு துரதிர்ஷடமான விசித்திரம்தான். என தோன்றியது.
இந்த உரையை விவேகானந்தரின் குரலிலேயே கேட்காலாம் என சில இணையதளங்கள் அறிவிக்கின்றன. ஆனால் அதன் நம்பகத்தன்மையை கடந்த 10 ஆண்டுகளாக பல நிலைகளில் ஆராய்ந்து கல்கதாவிலுள்ள ராமகிருஷ்ண மடம்  சமீபத்தில் அறிவித்திருப்பது அது விவேகானந்தர் குரல் இல்லை. என்பதைத்தான்.  முடிவிற்கு வர முக்கியமான காரணம் 1893 ல் டேப்பில் பதிவு செய்யும் வசதிகள் இல்லை என்பது தான்.
அவரின் உரையை, அவர்பேசிய இடத்தை, பாதுகாத்து, நினைவுபதிவு பட்டையம் இட்டு, உரைவாசகங்களை புதுமையானகண்காட்சியாக்க அனுமதித்து பல வகையில் இந்த கலைக்கூடம் விவேகானந்தரை சிறப்பாகத்தான் கெளரவிக்கிறது என்ற எண்ணத்துடன் வெளியே வந்து சாலையை கடக்க நிற்கும் நம் எண்ணத்தை இன்னும் வலுப்படுத்துவது கண்ணில் படும் இவர்கள் நிறுவியிருக்கும் அவர் பெயரைச்சொல்லும் எதிர் தெருவின் பெயர் பலகை.




11/9/12


 இன்று செப்டம்பர் 11 

கோபுரங்களும் சாய்வதுண்டு.

உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்த செப் 11 2001 அன்று இதை நாங்கள் மறக்க மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம்என்று கோபத்துடன் அன்றைய அமெரிக்க அதிபர் தன் உரையில் சொன்னதை சொன்னதை உலகமே  பார்த்தது.. 10 ஆண்டுகள் ஆனபின்னரும், அதிரடி ஆப்ரேஷனில் பின்லேடனை பிடித்து கொன்ற பின்னரும் இன்றும்  அந்த கறுப்பு தினத்தை அமெரிக்கர்களால் மறக்கமுடியவில்லைநியூயார்க் நகரின் அத்தனை வானாளவிய கட்டிடங்களுக்கிடையே   துல்லியமாக தகர்க்க பட்ட அந்த இரட்டை கோபுரங்கள்  இருந்த இடத்தில் ஒரு நினைவு சின்னம் எழுந்த்திருக்கிறது. நிகழ்ந்த அந்த விபத்தில் உலக புகழபெற்ற அந்த டவர்களில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள், வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்கள்ஷாப்பிங் செய்துகொண்டிருந்தவர்கள், உணவகங்களில் இருந்தவர்கள், அதே நாளில் மற்றொரு விமானவ்பத்திலும் பெண்டகன் அலுவலகத்தில் பலியானோர்,  மீட்புபணியில் பலியானாவர்கள் என்று மறைந்த போன 3000பேர்களுக்கும்  இப்போது ஒரு நினவு சின்னம்  அங்கே எழுப்பபட்டிருக்கிறது.. 10 ஆண்டுகாலமாக கிரவுண்ட் ஸீரோ  என அழைக்கப்பட்டு வந்த அந்த இடம் இனி 9/11 தேசிய நினைவகம் என அழைக்கபடும், 63 நாடுகளிலிருந்து,பெறபட்ட 5200 டிசைன்களிலிருந்து தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறது


இந்த டிசைன். 8 ஏக்கர் பரப்பில்,பறந்துவிரிந்திருக்கும் பசும் புல்வெளியில்  அணிவகுத்து நிற்கும் 400 ஓக் மரங்களுடன் நியூயார்க நகர கான்கீர்ட் காட்டிற்கு நடுவே ஒரு பசுஞ்சோலையாக இதை உருவாக்கியிருகிறார்கள்மிகச்சரியாக இரட்டை கோபுரங்கள் இருந்த  அதே இடங்களில் இப்போது தொடர்ந்து நீர்வழிந்துகொண்டே இருக்கும் இரண்டு பெரிய தடாகங்கள். அதன் சுற்று சுவர்களின்மேலே  சற்றே சாய்வாக அமைக்கபட்டிருக்கும்  கரும்பளிங்கு பலகைகளில் விபத்தில்  உயிர் நீத்த அனைவரின் பெயர்களும் தங்க எழுத்தில் மின்னுகிறது.

அதில் சில தமிழ் பெயர்களைக்கூட பார்க்கமுடிகிறது. இரண்டு நீர்தடாகங்களுக்குகிடையே ஒரு மியூசியம். பூமிக்கடியில்  உருவாகிகொண்டிருக்கிறது. பணி இன்னம் முடியவில்லை. அதன் முகப்பு ஒரு கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து சாய்ந்து விழுந்த நிலையில் வடிவமைக்கபட்டிருக்கிறது.  பின்னணியில் பிரமாண்டமாக எழுந்துகொண்டிருக்கும் புதிய ஒற்றை கோபுரம்.
 மியூசியம் எப்படி இருக்கும் என்பதை புரிந்துகொள்ள அங்கு காட்சியில் வைக்கபடப்போகும் பொருட்கள் சிலவற்றின்  மாதிரிகளுடன்  ஒரு பிரிவியூ செண்டர் அமைத்திருகிறார்கள். மறைந்தவர்களின் உடமைகள், போராடி மடிந்த தீயணைப்பு படையினரின் சீருடைகள், பெயர் பேட்ஜ்கள், மறைந்தவர்களின் குடும்பத்தினர் அளித்த  பரிசு பொருட்கள் இப்படி பல. இரட்டை கோபுரங்களில் ஒன்றின் வடிவில் அமைக்கபட்ட எக்ஸாஸ்ட் பைப்புடன் ஒரு ஒரு மோட்டார் சைக்கிள் பார்ப்பவர்களை கவருகிறது.
கடந்த ஆண்டு செப் 11 பத்தாவது நினைவு நாளான்று அதிபர் ஒபாமா நாட்டுக்கு அர்ப்பணித்த விழாவில் நாள்முழுவதும் கல்வெட்டில் இடம் பெற்றிருக்கும் அத்தனை பேரின் பெயரும் படிக்க பட்டது.. இன்னமும் பணி தொடர்ந்து கொண்டிருக்கும் அந்த சதுக்கத்தில் பலத்த பாதுகாப்பு. முன்னமே ஆன்லனைல் பதிவு செய்துகொண்டவர்கள் மட்டுமே  விமான நிலையங்களைப் போல தீவீர சோதனைக்கு பின்னர் பார்க்க அனுமதிக்கபடுகின்றனர்..
மறந்து தொலைக்க வேண்டிய  ஒரு சோகத்தை ஏன் இப்படி நிரந்திரமாக்கி  பார்பபவர்களின்  மனதை கஷ்ட படுத்துகிறார்கள் என்று கோபமாக அரசை திட்டும் அமெரிக்கர்களும் இருக்கிறார்கள். சரிதானே.. என நமக்கும் தோன்றினாலும்  நீண்ட தூரத்திலிருந்து வந்து  மகனின் பெயரை தேடிபார்த்து தடவி அழும் தாயையும்நண்பனின் பெயரை பார்த்தவுடன் இங்கிருந்தே  அவரது உறவினருக்கு போன் செய்பவர்களையும், தினசரி யாராவது வைத்துதிருக்கும்  பூங்கொத்துக்ளையும்  பார்க்கும்போது, திட்டமிட்ட ஒரு தீவிரவாதத்தையும்  அதன்  உச்சகட்டத்தின் வீபரீதத்தையும் வரும் தலமுறை  உணர்ந்துகொள்ள இப்படி ஒரு நினைவுச் சின்னம் அவசியம்தானே என்ற எண்ணம் எழுகிறது.

7/8/12

பஹஃரைன் போவோமா?


சுவடுகளில்  டாலர் தேசம் விடியோகளுக்கு தனிபக்கம் இருக்கிறது. இது  
ஒரு விடியோபடத்தையே ஒரு பதிவாக போட முடியுமா? என்பதின் சோதனை முயற்சி .
படத்தை  எளிதாக பார்க்க முடிகிறதா எனபதை சொல்லுங்களேன்



 

20/5/12

அரண்மனையில்வாழும் புத்தகங்கள்




ஒரு கிரேக்க கோட்டையை போல் கம்பீரமாக நிற்கும்  அந்த கட்டடித்தின் முகப்பில் திமிறிப்பாயும் குதிரையை அடக்கும் வீரன்நெப்ட்யூன் தேவதை   சிலைகளில் மீது பீறீட்டு பாயும் நீர் ஊற்றுக்கள். கட்டிடத்தின் இருபுறமும் முதல் மாடிக்கு இட்டுச்செல்லும் வளைந்த படிகள். ஏறி சென்ற நம்மை பிரம்ப்பில் ஆழத்துவது  பளிங்கு தூண்கள் பரவி நிற்கும் பிரமாண்டமான கூடம்.  உலகின் மிகப் பெரிய நூலகம் என்று சொன்னார்களே தவறுதலாக எதாவது அரண்மனைக்குள் வந்துவிட்டோமோ என எண்ணிக்கொண்டிருந்த்போது  “வெல்கம் டூ அமெரிககன் லைபரரி ஆப் காங்கிரஸ் “ என சொல்லி தன்னை அறிமுகபடுத்திக்கொளகிறார் நமக்கு நூலகத்தை காட்டபோகும் கைட்.
உலகின் மிகப்பெரியமிக அதிகமான புத்தகங்களை கொண்ட இந்த லைப்பரி ஆப் காங்கிரஸ் வாஷிங்டன் நகரில் அமெரிக்க நாடளுமன்றத்திற்கு அருகிலிருக்கிறது. 210 ஆண்டுகளுக்கு முன் துவக்கபட்ட இதில்  இன்று வரை புதிய புத்தங்கள் சேர்க்கபட்டு பிரமாதமாக நிர்வகிக்கபடுகிறது.   புத்தகங்கள் நிறைய  கண்னாடி அலமாரிகள் மேசைகளில் பரவிகிடக்கும் புத்தங்கங்கள்,பத்திரிகைகள்  என்றே நூலகங்களைப்பார்த்து பழகிய நமக்கு இந்த ஆடம்பரமான அரண்மணை சூழ்நிலை ஆச்சரியமாகயிருக்கிறது. 75 அடி உயரத்தில் வண்ண சித்திரங்கள் நிறைந்த  வட்டவடிவ கண்ணாடி விதானம்,  அதே போல் படங்களுடன் கண்ணாடி சாரளங்கள் அமைக்கபட்டிருக்கும் அந்த கூடம் தான் ரீடிங் ரூம்.  வட்ட வடிவில் தனித்தனி சிறு டெஸ்க்கள் அதில் மேசை விளக்கு.  புத்தங்கள் எல்லாம்  அருகிலிருக்கும் தனித்தனி அறைகளில்துறைக்கு ஒரு அறை சிலதுறைகளுக்கு பல அறைகள்.  அறைகளிலிருக்கும் புத்தகங்கள்  வெளியிலிருந்து பார்த்தால்  தெரியாதவண்ணம் அமைக்கபட்ட அலமாரிகளில். விரும்பித்தேர்ந்தெடுத்த புத்த்கத்தை நாம் இருக்கும் இடதில் கொண்டுவந்து தந்து விட்டு படித்துபின் உடனே கொண்டுபோய் அல்மாரியில் வைத்துவிடுகிறார்கள் இங்குள்ள பணியாளார்கள். அதனால் காலியாகயிருக்கும் மேசையில் புத்தகங்கள் இருக்காது.
நூலகத்தின் சுவர்களிலும்,மாடிப்படி வளைவுகளிலும் அழகான ஒவியங்கள் கலைபொருட்கள் நிரம்பியிருக்கிறது. நடைபாதைகளின் மேற்கூரை முழுவதும் கண்னைபரிக்கும் வண்ணத்தில் சித்திரங்கள்  அமெரிக்க சுதந்திர போரின் காட்சிகள்நாட்டின்  அரசியல் சாஸனத்தின் கையெழுத்துபிரதிசட்டவடிவின் முதல் அச்சுபிரதிகொடிகள் சின்னங்கள்  சிலைகள் என ஒரு அருங்காட்சியகமாகவே அமைத்திருக்கிறார்கள்.
அமெரிக்க காங்கிரஸ் (பாராளுமன்றம்) உறுப்பினர்களின் தேவைக்காக நிறுவபட்ட இதை மிகப்பெரிய நூலகமாக்க கனவுகண்டவர்அன்றைய அதிபர் ஜெபர்ஸன்தன்னுடைய சொந்த நூலகத்தை தந்து உதவியிருக்கிறார். இன்று  அமெரிக்க அரசின் அதிகாரபூர்வமான தேசிய நூலகமாகவும் ஆராய்ச்சி நிலையமாகவும்  அங்கிகரிக்கப்ட்டிருக்கும் இந்த நூலகத்தின் தலமை நூலகர் அமெரிக்க அதிபரால் நியமிக்க படுகிறார். நூலகரின் பதவிக்காலம் வாழ்நாள் முழுவதும். அமெரிக்க அதிபர்துணை அதிபர்சென்னட்டர்கள்சுப்ப்ரீம்கோர்ட் நீதிபதிகள் மட்டும்தான் இந்கிருந்து புத்தகத்தை இரவல் பெற்று எடுத்துசெல்ல முடியும் ம்ற்றவர்களுக்கு இஙுகு படிக்க மட்டுமே கொடுக்கபடும். காங்கிரஸின் கூட்ட தொடரின் போது எதேனும் தகவல் கேட்கபட்டு அந்த சமயத்தில் தேவையான புத்தகம் நூலகத்தில் இல்லாது போகும் வாய்ப்பை தவிர்க்கவே இந்தமுறை.
3 கோடி புத்தங்கள் கேட்லாக் செய்யபட்டிருக்கும் இந்த நூலகத்தில் 400க்கு மேற்பட்ட மொழிகளில் புத்தகங்கள் இருக்கின்றன. தமிழில்  தொல்காப்பிய பதிப்பையும்1822ல் எதிர்புறத்தில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் லண்டனில அச்சிடபட்ட பார்மார்த்த குருகதையும் இருக்கிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் உள்பட அனைத்து புத்தகங்களையும் பார்க்க முடிந்தது சந்தோஷமான ஆச்சரியம்.  கைகொடுக்கும் தொழில்நுட்பத்தின் உதவியோடு இன்று பலவற்றை டிஜிட்டல் செய்துவைத்திருக்கிறார்க்ள். பல புத்தங்களை கப்யூட்டர் திரையிலே படிக்கலாம்.அதற்கான டச் ஸ்கிரீன்களைகூட கலைநயத்துடன் சூழ்நிலைக்கேற்ப வடிவமைதிருக்கிறார்கள். இவைகளைத்தவிர 60 லட்சம் கையெழுத்து பிரதிகள், 3000ஆண்டுகளின் செய்திதாட்கள், பத்திரிகைகள் லட்சகணக்கில். உலகின் முதல்  அச்சிட்ட பைபிளிலிருந்து இந்த மாதம் வந்த ஹாரிபாட்டர் வரை எல்லாம் இருக்கிறது. இதைத்தவிர போட்டோக்கள்மேப்கள்இசை தட்டுக்கள் வேறு. நூலகம் 5 மைல் நீளத்திற்கு 4 கட்டிடங்களில் பரவிகிடக்கிறது. அவைகள் சுரங்க பாதையால் இணைக்கபட்டிருகிறது.  நீங்கள் டீவிட்டரில் தனிப்பட்ட முறையில் இல்லாமல் பப்ளிக் என்ற வகையில் டிவிட் செய்பவராஅமெரிக்க அரசு அல்லது வேறு செய்திகள் பற்றி நீங்கள் டீவிட் செய்தால் அதன் பிரதியும் இஙகு சேமிப்ப்படுகிறது. இதற்காக டீவிட்டர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருகிறர்கள்.
காங்கிரஸ் உறுப்பினர்கள் இதை பயன்ப்டுத்துகிறார்களா?  “நிறையபல செனட்டர்கள் இங்கு வருவார்கள் ஹிலாரி கிளிண்ட்டன் போன்றவர்கள் அடிக்கடி வருவதோடு எதாவது தகவல்களை கேட்டுகொண்டேயிருபார்கள்  சிலருக்கு எந்த புத்தகம் எங்கே எனப்து கூட அத்துபடி”“. என்கிறார் ஒரு உதவியாளார்.
உல்கின் மிக பெரிய நூலகத்தை பார்த்ததே  ஒரு நல்ல புத்தகத்தகத்தை படித்த உணர்வை தந்தது. அதோடு வெளியே வருகிறோம். நாலு கட்டடங்களையும் நீண்ட சுரங்கபாதைகள் வழியே கடந்துவிட்டதால்   வெளியே வரும்போது வேறு ஒரு தெருவில் இருக்கிறோம்
---------------------------------------------------

8/4/12

கோபுரங்களும் சாய்வதுண்டு.


உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்த செப் 11 2001 அன்று இதை நாங்கள் மறக்க மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம்என்று கோபத்துடன் அன்றைய அமெரிக்க அதிபர் தன் உரையில் சொன்னதை சொன்னதை உலகமே  பார்த்தது.. 10 ஆண்டுகள் ஆனபின்னரும், அதிரடி ஆப்ரேஷனில் பின்லேடனை பிடித்து கொன்ற பின்னரும் இன்றும்  அந்த கறுப்பு தினத்தை அமெரிக்கர்களால் மறக்கமுடியவில்லைநியூயார்க் நகரின் அத்தனை வானாளவிய கட்டிடங்களுக்கிடையே   துல்லியமாக தகர்க்க பட்ட அந்த இரட்டை கோபுரங்கள்  இருந்த இடத்தில் ஒரு நினைவு சின்னம் எழுந்த்திருக்கிறது. நிகழ்ந்த அந்த விபத்தில் உலக புகழபெற்ற அந்த டவர்களில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள், வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்கள்ஷாப்பிங் செய்துகொண்டிருந்தவர்கள், உணவகங்களில் இருந்தவர்கள், அதே நாளில் மற்றொரு விமானவ்பத்திலும் பெண்டகன் அலுவலகத்தில் பலியானோர்,  மீட்புபணியில் பலியானாவர்கள் என்று மறைந்த போன 3000பேர்களுக்கும்  இப்போது ஒரு நினவு சின்னம்  அங்கே எழுப்பபட்டிருக்கிறது.. 10 ஆண்டுகாலமாக கிரவுண்ட் ஸீரோ  என அழைக்கப்பட்டு வந்த அந்த இடம் இனி 9/11 தேசிய நினைவகம் என அழைக்கபடும், 63 நாடுகளிலிருந்து,பெறபட்ட 5200 டிசைன்களிலிருந்து தேர்ந்தெடுக்க்பட்டிருக்கிறது இந்த டிசைன். 8 ஏக்கர் பரப்பில்,பறந்துவிரிந்திருக்கும் பசும் புல்வெளியில்  அணிவகுத்து நிற்கும் 400 ஓக் மரங்களுடன் நியூயார்க நகர கான்கீர்ட் காட்டிற்கு நடுவே ஒரு பசுஞ்சோலையாக இதை உருவாக்கியிருகிறார்கள்




மிகச்சரியாக இரட்டை கோபுரங்கள் இருந்த  அதே இடங்களில் இப்போது தொடர்ந்து நீர்வழிந்துகொண்டே இருக்கும் இரண்டு பெரிய தடாகங்கள். அதன் சுற்று சுவர்களின்மேலே  சற்றே சாய்வாக அமைக்கபட்டிருக்கும்  கரும்பளிங்கு பலகைகளில் விபத்தில்  உயிர் நீத்த அனைவரின் பெயர்களும் தங்க எழுத்தில் மின்னுகிறது.  அதில் சில தமிழ் பெயர்களைக்கூட பார்க்கமுடிகிறது.


இரண்டு நீர்தடாகங்களுக்குகிடையே ஒரு மியூசியம். பூமிக்கடியில்  உருவாகிகொண்டிருக்கிறது. பணி இன்னம் முடியவில்லை. அதன் முகப்பு ஒரு கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து சாய்ந்து விழுந்த நிலையில் வடிவமைக்கபட்டிருக்கிறது.  பின்னணியில் பிரமாண்டமாக எழுந்துகொண்டிருக்கும் புதிய ஒற்றை கோபுரம்.
 மியூசியம் எப்படி இருக்கும் என்பதை புரிந்துகொள்ள அங்கு காட்சியில் வைக்கபடப்போகும் பொருட்கள் சிலவற்றின்  மாதிரிகளுடன்  ஒரு பிரிவியூ செண்டர் அமைத்திருகிறார்கள். மறைந்தவர்களின் உடமைகள், போராடி மடிந்த தீயணைப்பு படையினரின் சீருடைகள், பெயர் பேட்ஜ்கள், மறைந்தவர்களின் குடும்பத்தினர் அளித்த  பரிசு பொருட்கள் இப்படி பல. இரட்டை கோபுரங்களில் ஒன்றின் வடிவில் அமைக்கபட்ட எக்ஸாஸ்ட் பைப்புடன் ஒரு ஒரு மோட்டார் சைக்கிள் பார்ப்பவர்களை கவருகிறது.
கடந்த ஆண்டு செப் 11 பத்தாவது நினைவு நாளான்று அதிபர் ஒபாமா நாட்டுக்கு அர்ப்பணித்த விழாவில் நாள்முழுவதும் கல்வெட்டில் இடம் பெற்றிருக்கும் அத்தனை பேரின் பெயரும் படிக்க பட்டது.. இன்னமும் பணி தொடர்ந்து கொண்டிருக்கும் அந்த சதுக்கத்தில் பலத்த பாதுகாப்பு. முன்னமே ஆன்லனைல் பதிவு செய்துகொண்டவர்கள் மட்டுமே  விமான நிலையங்களைப் போல தீவீர சோதனைக்கு பின்னர் பார்க்க அனுமதிக்கபடுகின்றனர்..
மறந்து தொலைக்க வேண்டிய  ஒரு சோகத்தை ஏன் இப்படி நிரந்திரமாக்கி  பார்பபவர்களின்  மனதை கஷ்ட படுத்துகிறார்கள் என்று கோபமாக அரசை திட்டும் அமெரிக்கர்களும் இருக்கிறார்கள். சரிதானே.. என நமக்கும் தோன்றினாலும்  நீண்ட தூரத்திலிருந்து வந்து  மகனின் பெயரை தேடிபார்த்து தடவி அழும் தாயையும்நண்பனின் பெயரை பார்த்தவுடன் இங்கிருந்தே  அவரது உறவினருக்கு போன் செய்பவர்களையும், தினசரி யாராவது வைத்துதிருக்கும்  பூங்கொத்துக்ளையும்  பார்க்கும்போது, திட்டமிட்ட ஒரு தீவிரவாதத்தையும்  அதன்  உச்சகட்டத்தின் வீபரீதத்தையும் வரும் தலமுறை  உணர்ந்துகொள்ள இப்படி ஒரு நினைவுச் சின்னம் அவசியம்தானே என்ற எண்ணம் எழுகிறது.