நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30/6/13

ருத்தர தாண்டவம்


 

“அன்று நல்ல மழை பெய்துகொண்டிருந்தாலும் சாயங்கால பூஜைக்கு நல்ல கூட்டம். பூஜைகளை முடித்துவிட்டு கோவிலையும் மூடியபின் கோவில் வளாகத்திலேயிருக்கும் என் அறையில் இருந்தேன்.  இரவு 8 மணியளவில் வெளியே ஒரே சப்தம். பலர் கத்திய படி ஓடி வந்துகொண்டிருந்தனர்.  எட்டிபார்த்த நான் அப்படியே உறைந்துபோனேன். கோவிலின் பின்னால் உள்ள மலைசரிவில்  மேகங்கள் வெடித்து வானமே பொத்துக் கொண்டதுபோல பெரிய அளவில் வெள்ளம் வந்து கொண்டிருந்தது. வினாடியில் சுதாரித்து கோவிலுக்குள் ஒடுவதற்குள் வெள்ளம் வேகமாக கோவில் கம்பெளண்ட்  சுவரை உடைத்து பாய்ந்தது. கோவிலின் இரண்டுபக்கமும் ஆள் உயரத்திற்கு வெள்ளம்.  குருஆதி சங்கரரின் சமாதி இருந்த கோவில் உடைந்து அதிலிருந்த அவர் பளிங்கு சிலையும் மரகத லிங்கமும் அடித்து செல்வதை  பார்த்தேன். நாம் வாழ்வு இன்னும் சில நிமிடங்கள் தான் அது இந்த தெய்வ சன்னதியில் போகட்டும் என கோவிலிலே இருக்க தீர்மானித்தேன். என்னுடன் 8 பேர். வெளியே பெரிய இரைச்சலோடு வெள்ளம் போய் கொண்டிருந்தாலும் கோவிலின் உள்ளே மெல்லதான் நீர் உயர்ந்து கொண்டிருந்தது. இரவு முழுவதும் நின்று கொண்டே இருந்த நான் காலயில் சற்று மழை விட்டதும் வெளியே வந்து பார்த்தேன். வெள்ளம் வடிந்து கொண்டிருந்தது. ஆனால் கோவில் வாசலில் நிறைய பிணங்கள். ஊர் முழுவமே அழிந்து அடித்து செல்லபட்டிருந்தது. என்ன செய்வது என தெரியாமல் சற்று நடந்து பார்த்ததில் மலையின் மறுபக்தியில் மக்கள் நடமாட்டம் தெரிந்த்து. ஆனால் அங்கே போக  இடையில் ஒரு சின்ன ஓடையை கடக்க வேண்டும். எப்போது பாதம் தொட்டுமட்டுமே நீர் போகும் அதில் ஆள் உயரத்திற்கு தண்ணீர் போய்கொண்டிருந்தது துணிவுடன் மந்திரங்களை ஜபித்து கொண்டே நீந்தி கரைய அடைந்து 24 மணி நேரதவிப்புக்கு பின்னர்  ஹெலிகாப்டரில் வந்து அழைத்துபோனார்கள். 18 வருடமாக இந்த கோவிலில் பணி செய்கிறேன். பரம்பரையாக என் குடும்பத்தாரின் பணி இது. இதுவரை இத்தகைய கோரம் நிகழ்ந்ததாக சரித்திரமில்லை. ஏன் இப்போது சிவபெருமானுக்கு கோபம் வந்து சிவதாண்டவம் ஆடியிருக்கிறோ  தெரியவில்லை.” என்கிறார் கேதார் நாத் கோவிலின் அர்ச்சகர்களில் ஒருவரான ரவி பட். நிகழ்ந்ததை பார்த்து தப்பித்த சிலரில் ஒருவரான இவர்  பிபிசிக்கு அளித்த பேட்டியில் இதை சொல்லுகிறார். இப்போது டேராடுனுக்கு அருகிலிருக்கும் கிராமத்திலிருக்கும் ரவி பட்டின் கவலையெல்லாம் பெருமானுக்கு தினபூஜைகள் நைவேத்தியங்கள்  இல்லாது போய்விட்டதே என்பதுதான்.  
நம் நாட்டின் மிக பழமையான சிவன் கோவில்களில் ஒன்று கேதார்நாத். 12 ஜோதிர்லிங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் இந்த கோவில் இமயமலைதொடரில் ஒரு பகுதியில் இருக்கிறது. உத்தர்காண்ட் மாநிலத்தில் ருத்தரபிர்யாக் பகுதியில் அமைந்திருக்கும் கோவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்பரல் முதல் தீபாவளி வரைதான் திறந்திருக்கும். மீதி நாட்களில் பனிகொட்டிகொண்டிருக்கும் காலம் எனபதால் கோவில் மூடபட்டுவிடும்,கேதார் ஊரே காலியாகி மலை அடிவாரத்திற்கு இடம் பெயர்ந்துவிடும். பல லட்சகணகான யாத்திரிகர்கள் வரும் இந்த கோவிலுக்கு நேரடியான போக்குவரத்து வசதிகள் கிடையாது. கெளரி குண்ட் என்ற பகுதிவரை கார் பஸ் போகும் அங்கிருந்து  18 கீமீ மலையில் நடக்க  வேண்டும். குதிரை, பல்லக்கு களிலும் போகலாம்.  இமயமலையின் பல பகுதிகளில்  அருமையான ரோடுகளை போட்டு நிர்வகிக்கும் இந்திய ராணுவத்தின் ஒரு அமைப்பான பார்டர் ரோடு ஆர்க்னேஷேனின் தலமை அலுவலகம் டேராடுனில் இருந்தாலும்  என்ன காரணத்தோலோ இந்த இடத்தில் வாகனம் போகும்வகையில் ரோடுகள் அமைக்க படவில்லை. முழுவதும் நடந்து ஏற  முடியாது போய்விடுமோ என்ற பயத்தில் பலர் குதிரையில்பயணம் செய்வார்கள். 1000க்கும் மேல் குதிரைகள் இருக்கின்றன. ஒவ்வொரு குதிரையுடன் ஒரு  12 வயது பையன் “கைடு” ஆக வருவார். கோவிலை அடைய 4 மனிநேரம் ஆகும். அவர் கார்வாலி மொழியில் பேசிகொண்டே வருவார். பேசுவது நம்முடனா குதிரையுடனா என்பது புரியாது. தரிசனம் முடிந்து திரும்பி வரும்வரை காத்திருந்து சரியாக நம்மை அடையாளம் கண்டு  பாதுகாப்பாக அழைத்து வருவார்கள். இந்த வெள்ளத்தில்  இந்த குதிரைகளும், அந்தகைடுகளும் பெருமளவில் காணமல் போயிருக்கிறார்கள்
கோவில் சிறியது. எந்தவிதமான சாரளமும் இல்லாமல் கற்கள் அடுக்கிகட்டபட்ட கோவில்  அந்த கடும் குளிரிலும் காலை 4 மணிக்கு பூஜை துவங்கும்  உள்ளே சன்னதியில் அம்ர்ந்து நீங்களே அபிஷேகம் ஆராதனை செய்யலாம். உள்ளே இட வசதிகுறைவினால் வெளியில் நடுங்கும் குளிரில் காத்திருக்க வேண்டும், கோவில் ஒரு மலைச்சரிவில்  அமைந்திருக்கிறது.


கோவிலை சுற்றி  எழுப்ப பட்டிருக்கும் சுவரில் திருநாவுகரசரின் உருவமும் இந்ததலத்தை பற்றிய அவரது பாடல் வரிகள் தமிழிலும், ஹிந்தியிலும் சம்ஸ்கிருத்திலும் பொறிக்க பட்ட கல்வெட்டுகள். தமிழ்நாட்டு நகரத்தார் உபயம்.  சற்று தள்ளி ஆதி சங்கரர் தன் ஒரே சொத்தான தண்டத்தை துறந்து இமயத்தின் உச்சியை நோக்கி நடந்த இடத்தை குறிக்கும் வகையில் ஒரு கைமட்டும் தண்டத்துடன்  எழுப்பட்ட சின்னம். இவையெல்லாம் இருந்த இடம் அடையளாம் தெரியவில்லை. ஆனால் இந்த 8 நூற்ராண்டு கோவில் மட்டும் அப்படியே நிற்பது ஆச்சரியம்  
கோவில் அருகில் பெரிய அளவில் நதி கிடையாது.  (ஒரு காலத்தில் இருந்திருக்கிறது) ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களை இந்த பகுதி சந்திக்கிறது. இதற்கு முன்பும்கூட பலமுறை இமயமலையில் பெரும் மழை கொட்டித் தீர்த்திருக்கிறது அப்படியிருக்கும்போது இந்த கோவிலில் வெள்ளம் எப்படி சூழ்ந்தது ?  1000 ஆண்டுகாலம் இல்லாமல் எப்படி இந்த பயங்கர  விபத்து  இப்போது நிகழந்தது?
மழையும் வெள்ளமும் இயற்கையின் சீற்றமாமக இருக்கலாம் ஆனால் ஆனால் இந்தப் பேரழிவுக்கான பழியை இயற்கை மீதுபோடுவது தவறு. . இது Man Made Disaster க்கு  மனிதர்களின் செயலே காரணம் என்கிறார்  உத்தர்கண்ட் பகுதி சுற்றுச் சூழல் ஆராய்ச்சியாளர் மகராஜ் பண்டிட்.

உத்தர்கண்ட் மாநிலம் உருவான காலத்திலிருந்தே அவர்கள் சந்தித்த மிகபெரிய பிர்ச்சனை மின்பற்றாகுறை. ஜீவ நதியான அலக்நந்தா (கங்கை) இருந்தும் மாநிலத்தின் மின் தேவைக்கு அண்டைமாநிலங்களை நாட்வேண்டியிருந்தது. மாறிவந்த அரசுகள் தொடர்ந்து  சிரு சிறு அளவில் மலைப்பகுதிகளில் மின் உற்பத்தி நிலையங்களை  அமைக்க துவங்கின. இன்னும் 90நிலையங்களுக்கு திட்டமிடபட்டிருக்கிறது. இந்த மின் நிலையங்களின்  தேவைக்கு ஏற்ற பல இடங்களில் நதிகளின் போக்குகள் திருப்பிவிடபட்டன. கங்கையின் மற்ற முக்கிய துணையாறுகளான பாகீரதி 80 சதவீதமும், அலக்நந்தா 65 சதவீதமும் பாதை மாற்றப்பட்டுள்ளன, மின் திட்டங்கள் மற்றும் அணைக்கட்டுகளுக்காக. மற்ற சிறிய ஆறுகள் 90 சதவீதம் அதன் போக்கிலிருந்து திருப்பிவிடப்பட்டுள்ளன..

 அவற்றில் ஒன்று கேதார் கோவிலுக்கு அருகில் சென்ற மந்தாகினியின் பிரிவு, 10 ஆண்டுகளுக்கு முன்னரே இது செய்யபட்டுவிட்டது கேதார்நாத் மூன்று மலைகளுக்கிடையே இருக்கும் சிறு பள்ளதாக்கு, ஒன்றின் உச்சிக்கு பெயர் ”கேதார் டோம்”. இது ஒரு பனிச்சிகரம். இந்த சிகரம்தான் உடைந்து அதன் கீழே உள்ள சர்பால் ஏரியில் விழுந்தது. இது கோவிலுக்கு 6 கீமீ தொலைவில் இருக்கிறது, அன்று ஏற்கனவே பேய் மழை பெய்து கொண்டிருந்தாதால் ஏரி நிரம்பிக்கொண்டிருந்தது. பல ஆயிர கன அடி தண்ணீராக  பனிசிகரம் கேதார் டோம் இந்தஏரியில் விழுந்தவுடன் ஏறி உடைந்தது. வெளியேறிய நீர் ஒரு இமாலய சுனாமியை உருவாக்கியதால், மந்தாகினி ஆறு தனது பழைய பாதையைதே தேடி பெரும் வேகத்தில் வழியிலிருந்து மனிதர்கள், கட்டடங்கள், வாகனங்கள் அத்தனையையும் வாரிசு சுருட்டி வீசிவிட்டு ஓடியது. அதன் விளைவாக  மலையின் கீழ்பகுதியாக இருக்கும் ரிஷிகேஷில் கங்கை கரையில் இருக்கும்  14 அடி உயர சிவன் சிலை முழுகும் அளவிற்கு தன்சீற்றத்தை காட்டியது
கரையின் இருபுறமும் வெள்ளம் அழித்த கட்டிடங்களில் 90%க்கு மேல் அனுமதி பெறாதவை, அரசியல் வாதிகளுக்கு சொந்தமானவை. ரோடு அருகில் ஒருசின்ன இடத்தை வாங்கி அதையொட்டி இருக்கும் மலைச்சரிவிலும் ஆற்று படுகைகளிலும் ராட்சத கான்கீரிட் தூண்களை எழுப்பி அதன் மீது விரிந்த பரப்பில் உருவாக்கிய கட்டிடங்கள்.  இந்த பேரழிவில் சிக்கிய யாத்திரிகர்களையும் அவர்களை மாநில அரசுகள் மீட்டதைபற்றியும் மீடியாக்கள்  எழுதிதள்ளுகின்றன.  ஆனால் மிக அதிக அளவில் பாதிக்கபட்டிருபது அந்த மலைச்சரிவின் 200கிராமங்களின் மக்கள்.. அவர்களில் பலருக்கு வாழ்வாதரம் இந்த கோவில்தான். மாநில மக்கள் தொகை ஒரு கோடி, வரும் டூரிஸ்ட்கள் 2.5 கோடி. பலருக்கு 6 மாதசீஸன் வருமானத்தில் ஒராண்டு வாழக்கை. அடுத்த 3 ஆண்டுகளுக்கு இவர்களுக்கு வாழ வேறு வழியில்லை.
இயற்கையின் சீற்றம் ஒவ்வொருமுறையும் நமக்கு  ஒரு பாடம் சொல்லிதரும். இம்முறை நதிகள் சொல்லியிருப்பது காடுகளை அழித்து, எங்கள் போக்கை மாற்றினால் ஒரு நாள்-  பெரும் அழிவிற்கு பின்  நாங்களே  அதை சரிசெய்து கொள்வோம்.  \

25/4/13

கதை எழுதி கடன்களை அடைத்த எழுத்தாளார்.


உலகில் மிக அதிகமாக விற்பனையாகும் கிரைம் நாவல் ஆசிரியர்களின் பட்டியலில் முக்கிய இடத்திலிருப்பவர் ஜெஃப்ரி ஆர்ச்சர். இங்கிலாந்துகாரார். வயது 73. கடந்த 30 ஆண்டுகளில் எழுதியிருப்பது 31 புத்தகங்கள். 97 நாடுகளில் 33 மொழிகளில் வெளியிடபடும் இவரது புத்தகங்கள் இதுவரை விற்றிருப்பது 25 கோடிபிரதிகளுக்கும் மேல்.. 1975ல் வெளியான இவரது முதல் புத்தகம்  இதுவரை 2 கோடி பிரதிகளுக்கு மேல் விற்றிருக்கிறது.
சமீபத்தில் தனது 31வது புத்தகமான ”பெஸ்ட் கெப்ட் சீகரட்ஸ்” யை  இந்தியாவில் 4 நகரங்களில் அறிமுகபடுத்துவதற்காக வந்திருந்த பயணத்தில் சென்னைக்கு வந்திருந்தார். தனக்காக காத்திருந்த இளைஞர் பட்டாளத்தை பார்த்து பிரமித்துபோனார். ”அத்தனை இளம் பெண்களும் என்னை பார்த்த உற்சாகத்தில் குரல் எழுப்பயதில் என்னை ஒரு ராக்ஸ்டார்போல உணர்ந்தேன். தெரிந்திருந்தால் கிதாரை கொண்டுவந்திருப்பேன்” என்று சொல்லும் ஜெஃப்ரி இங்கிலாந்தில் தான் இளைஞர்களிடம் இவ்வளவு பாப்புலர் இல்லை என்பதையும் இந்திய இளைஞர்கள் நிறைய ஆங்கில புத்தகங்கள் படிக்கிறார்கள் என்பது புரிகிறது என்றும் சொன்னார்.. இவரது முந்தய புத்தகம் வெளியானபோது இந்தியாவிற்கு வந்ததிருந்தபோது அதற்கு  கிடைத்த  அமோக வரவேற்பை பார்த்து இந்த புத்தக வெளியிட்டை இந்தியாவில் செய்ய விரும்பியிருக்கிறார். (இம்மாதிரி ”புக் டூர்” களை பதிபக்கதினர் செய்வதும் அதற்காக இவர் கட்டணம் வசூலிப்பதும் வேறு விஷயம்)
இவரது கிரைம் நாவல்களை விட சுவாரஸ்யமான திருப்பங்கள் கொண்டது இவரது வாழ்க்கை. ஆக்ஸ்போர்ட்டில் கல்வியை முடித்தபின்னர் ஆர்வத்துடன் இறங்கியது அரசியலில். லண்டன் நகர்மன்ற உறுப்பினாராக துவங்கிய அரசியல் வாழ்க்கை 29 வயதிலே இங்கிலாந்து நாடாளுமன்ற
உறுப்பினராகும் அளவிற்கு  உயர்ந்தது, பிரகாசமான எதிர்காலம் அரசியலில் உருவாகியிருந்து கொண்டிருந்த காலகட்டத்தில். ஜெஃப்ரி மூதலீடு செய்து இயக்குனராக இருந்த கம்பெனி திவாலாகியாதால் தன் எம்பி பதவியை இழக்க நேர்ந்தது. தனது கன்ஸ்ர்வேட்டிவ் கட்சியில் செல்வாக்கையும், சொத்துகளையும் இழந்து 4 லட்சம் பவுண்ட்கள் கடனுடன் திவாலான நேரத்தில்  முடிவு  ஒரு எழுத்தாளாராவது என்பது. 34 வயதில் எழுதிய முதல் புத்தகம் “ஒரு பைசா அதிகமோ, ஒரு பைசா குறைவோ இல்லை”(
Not a Penny More, Not a Penny Less. )  என்ற நாவல்   லண்டனில் வெளியான உடனேயே சூப்பர் ஹிட்டான இந்த புத்தகம் சில வாரங்களிலேயே  17 நாடுகளில் வெளியாகி பணத்தை கொட்டியது. கடன்களை அடைத்த சந்தோஷத்தில் எழுதி தள்ளினார் ஜெஃப்ரி. . உலகம் அறிந்த எழுத்தாளாரகிய உயர்ந்தபின்னரும்  அரசியல் ஆர்வம் குறைய வில்லை. கட்சியில் செல்வாக்கு உயர்ந்து தேசிய அளவில் உபதலைவராக இருந்தபோது லண்டன் நகர் மேயராக விரும்பி உள்கட்சி தேர்தலில் பெரிய அளவில் வெற்றியும் பெற்று கட்சியின் வேட்பாளாராக 1999ல் அறிவிக்கபட்டிருந்தார். ல் தேர்தலுக்கு முன், 10 ஆணடுகளாக நடந்துகொண்டிருந்த வழக்கில் இவருக்கு பொய் சாட்சி அளித்தற்காக 4 ஆண்டு தண்டனை அளிக்கபட்டது., அரசியல் வாழ்வு அஸ்தமனம் ஆகியது. ஆனால் ஜெயிலில் இருந்த இரண்டு ஆண்டுகளில் ஜெப்ரி எழுதியது ”கைதியின் டைரி” என்ற புத்தகத்தின் மூன்று தொகுப்புகள்.
ஒராண்டு முழுவதும் ஆராய்ச்சி செய்து தகவல்கள் திரட்டியபின் 6 வாரங்களில் ஒரு நாவலின் முதல் டிராப்ட்டை எழுதும் இவர், அது மறந்துபோகுமளவிற்கு வேறு விஷயங்களில் அடுத்த 4 வாரங்கள் கவனம் செலுத்துவார். பின்னர் டிராப்ட்டை திருத்த ஆரம்பித்து பல முறை திருத்தங்கள் செய்து- ”கடைசி புத்தகத்தை 14 முறை செய்தேன்” ஒரு நாவலை உருவாக்குகிறார். நாவல்கள் எழுதும் காலங்களை எதாவது ஒரு வெளிநாட்டில் கழிக்கிறார்.
இந்தியாவில் நிறைய ஆங்கிலபுத்தகங்கள் வருவதை அறிவேன். ஆனால் நான் படிக்க என் எஜெண்ட்கள் எதையும் அனுப்பவில்லை. என்று சொல்லும் ஜெஃப்ரிக்கு எழுத்துக்கு அடுத்தபடியாக பிடித்த விஷயம் கிரிக்கெட். நமது வீர்ர்களில் டோனி.
 தனது புத்தகங்களில் மிக சிக்கலான நுணுக்கமான டெக்னலாஜி சமாசாரங்களைக்கூட  தெளிவாக சொல்லும் இவர் தன் புத்தகங்களை மைநிரப்பிய பேனாவின்மூலம், கையால்தான் எழுதுகிறார். சொன்ன காரணம்  “எனக்கு கம்ப்யூட்டர் டெக்னாலாஜி தெரியாது.“



28/3/13

புதிய போப்பின் முன்னே நிற்கும் ”பழைய” பாவங்கள்


காதலின் வெற்றிக்காக மகுடம் துறந்த மன்னர்களை சரித்திரம் நமக்கு சொல்லியிருக்கிறது. காதலில் தோற்றதால் மன்னராகும் வாய்ப்பு பெற்றவர் இப்போது தேர்ந்தெடுக்கபட்டபட்டிருக்கும் புதிய போப்.. உலகின் 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான இவர் உலக நாடுகளால் வாடிகன் நாட்டின்  மன்னராக மதிக்கபடுபவர்.  போப் என்பவர் உலகம் எல்லாம் பரவிக் கிடக்கும் கத்தோலிக்கத் திருச்சபைகள், அதன் சொத்துக்கள், அதிகாரங்கள் மற்றும் மக்கள் அனைவரையும் ஒரே குடைக்குள் வைத்திருக்கும் மாபெரும் பதவியிலிருப்பவர். இந்த பதவியிலிருந்த போ பெனிடிக்ட் XVI தன் உடல் நிலையை காரணம் காட்டி பதவி விலகபோவதாக அறிவித்தார். உலகின் மிகப் பெரிய மதப் பிரிவான கத்தோலிக்கர்களின் சக்தி வாய்ந்த தலைமைப் பதவியிலிருந்து. கடந்த 600 ஆண்டுகளில் இவ்வாறு எவரும் பதவி விலகியதில்லை.  அந்த பதவிக்கு திருச்சபை மரபுப்படி, உலகம் முழுவதும் உள்ள நாடுகளைச் சேர்ந்த, 115 கார்டினல்கள் பங்கேற்ற கூட்டத்தில் தென் அமெரிக்க நாடான, அர்ஜென்டினாவை சேர்ந்த, ஜார்ஜ் மரியோ பெர்காக்லியோ, (வயது76,) புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டார். இவர் தன் 16 வயதில் பக்கத்துவீட்டு பெண்னை காதலித்தார், உன்னை மணக்க ஆசைப்படுகிறேன். நீ சரி என்றால் மணப்பேன். இல்லையெனில், பாதிரியாராகி, மத சேவையில் ஈடுபடுவேன் எனகடிதம் எழுதியிருந்தார். காதலை அந்த பெண் ஏற்ககாதால் சொன்னபடியே பாதிரியார் ஆகி நாட்டின் தலமை ஆர்ச் பிஷப் வரை வளர்ந்து கார்டினலாக உயர்ந்து இன்று போப்பாகியிருக்கிறார்.

போப் பெனிடிக்டின் பதவி விலகலுக்கு  காரணம் அவரது உடல் நிலையில்லை வேறு பல காரணங்கள்  இருக்கிறது என்கிறது இப்போது கசியும் வாட்டிகன் அரண்மனை ரகசியங்கள்.

வத்திகான் லீக்சின் எதிரொலி:  போப் பதினாறாம் பெனிடிக்ட் தமது பதவியை ராஜினாமா செய்யபோவதாக செய்த அறிவிப்பு இதகத்தோலிக்க மதகுருமார் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
உலகின் பல  கத்தோலிக்கத் திருச்சபைகளில் இலை மறை காயாக நிகழ்ந்து வந்த பாலியல் குற்றங்கள் பலவும் அண்மையக் காலமாக வெளி வரத் தொடங்கி விட்டன. அத்துடன் வத்திகானின் சொத்துக்களைக் கைப்பற்றுவதில், அதிகாரங்களைத் தக்க வைப்பதில் வத்திகானுக்குள் நிகழும் அதிகாரப் போட்டிகள், அரசியல் விளையாட்டுக்கள் போன்றவற்றை  தொகுத்து ''வத்திகான் லீக்ஸ்'' என்ற தொகுப்பு கடந்த ஆண்டு வெளி வந்ததுதொடர்ந்து கத்தோலிக்கத் திருச்சபையின் பல்வேறு பணங்களையும் ரகசியமாகப் பல மதக்குருமார்கள் தமது ரகசிய வங்கி கணக்கில் மாற்றிக் கொண்டனர் எனவும், பல இளம் வயதினர் மீது பாலியல் துன்புறுத்தல்களை பல மதக்குருக்கள் செய்கிறார்கள்  பல வத்திகான் மதக்குருமார்கள் ஓரின சேர்க்கை பாலியல் வன்புணர்வுகளில் ஈடுபடுகிறார்கள் என்றும் பாதிக்க பட்டவர்கள்,சொல்லகூடாது என  மிரட்டபடுகிறார்கள் என்று  செய்தியை பத்திரிக்கையாளர் கார்லோ அப்பாதே  வெளியிட்டபோது உலகம் திடுக்கிட்டது. இதைத்தொடர்ந்து போப் வாட்டிகனின் தலமை ஆட்சி குழுவான கீயூரியா(curia)  என்ற சபையில் விஷயம் பல நாட்கள் விவாதிக்கபட்டிருக்கிறது. இதன் உறுப்பினர்கள் 80 வயதை கடந்த சீனியர் கார்டினல்கள். போப்பையே ஆட்டிவைக்கு வலிமை வாய்ந்தவர்கள்  இந்த கூட்ட முடிவுகள் ரகசியமானவை. குறிப்புகள் பலவும் போப்பினால் எழுதப்பட்டவை, திருச்சபையின் முக்கிய அங்கத்தனர்களால் பரிமாறிகொள்ளப்பட்டவை. இவைகளை போப்பின் முதன்மை பணியாளராக இருந்த பாலோ காப்பிரியல் என்பவர் திருடி வெளியிட்டு விட்டார் என்று  கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு 18 மாதம் சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டது.  இந்த கைதும் தண்டனையும்  வெளீயான செய்திகளில் உண்மையில்லாமல் இல்லை என்பதை உணர்த்தியது. இத் தகவல்கள் வெளியாவதின் பின்னணியில் பல முக்கியக் கத்தோலிக்க மதக் குருக்களும் இருக்கிறார்கள் என்பது பரவலான நம்பிக்கை.


. தொடர்ந்து எழுந்த அலை வாத்திகன் பாங்க் சம்பந்தபட்டது. வாத்திகனுள்ளே மட்டும் இயங்கும்  இந்த வங்கியின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருந்ததில்லை.  ஐரோப்பிய யூனியனின் கூட்டமைப்பின்  தலமை வங்கி இந்த வங்கி மூலம் நடைபெற்று கொண்டிருக்கும் சர்வ தேச பரிமாற்றஙகளின் விபரத்தை கேட்டபோது  தர மறுத்து விட்டது.  இப்போது விபரங்கள் சொல்லபடாவிட்டால் ஐரோப்பாவின்  வங்கிகள்  அனைத்தும் உங்களுடன் உறவுகள் வைத்துகொள்ள கூடாது என ஆணையிடுவோம் என்று காலகெடு தந்து மிரட்டி கொண்டிருக்கிறார்கள்.
 இண்டிபெண்டெண்ட் என்ற பிரபல தினசரி  வாத்திகன் பற்றிய தொடர் கட்டுரையை வெளியிட துவங்கியிருக்கிறது. முதல் பகுதியில் வந்த செய்தி அதிர்ச்சியானது. ஐரோப்பவின் மிக பெரிய ஆடம்பரமான ஓரினசேர்க்கை விரும்பிகளின் கிளப் இருக்கும்  வளாகத்தில் வாத்திகன் 23 மில்லியன் டாலர்களுக்கு பங்குகள் வாங்கியிருக்கிறது.  வாத்திகனால் நியமிக்கபட்ட மத பிராசகர்கள்  கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர்  கார்டினல் இவான் டைஸ்.  இவர் மும்பாயின் முன்னாள் ஆர்ச் பிஷப். இவருக்கு சர்ச்களின் இளவரசர் என்ற பட்டமும் உண்டு.  இவருக்கு 12 அறைகள் கொண்ட ஒரு ஆடம்பர பிளாட் அந்த கட்டிடத்தில் இருக்கிறது இவர் வீட்டிலிருந்து கிளப்பிற்கு வழியும் இருக்கிறது. இவர் மட்டுமில்லை இவர் போல் 18 பாதிரியார்களுக்கு அந்த கட்டிடத்தில் பிளாட்கள் இருக்கின்றன. என்கிறது அந்த கட்டுரை.  டைஸ் “ நான் அவர்களை போதனைகள் மூலம் மனம் மாற்றி திருத்த முயற்சிக்கிறேன்” என்று சொல்லுவதை யாரும் காதில் போட்டுகொள்ள வில்லை.
இந்த சூழ்நிலயில் முன்னாள் போப்  பெனடிக் 80 வயதுக்கு மேற்பட்ட 3 கார்டினல்கள் கொண்ட  ஒரு கமிட்டியை அமைத்தார். அவர்கள் தந்த ரிப்போர்ட் ”சொல்லபடுவதில் பல உண்மையானவை தகுந்த நடவடிக்கை எடுத்து திருச்சபைக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தை நீக்க வேண்டும்..”ஆனால் எந்த நடவடிக்கையும் கூடாது என அழுத்தம் தந்தது வலிமை வாய்ந்த கீயூரியா. பொறுத்து பார்த்து வெறுத்துபோய் ராஜினிமா செய்ய முடிவெடுத்தார். இதற்கு முக்கிய காரணம் அவ்ரது ராஜினாமாவால்  கீயூரியா உறுப்பினர்களும் ;பதவியிழப்பார்கள். புதிய போப்   கீயூரியா சபையின் உறுப்பினர்கள் புதிதாக நியமிப்பார்.  கீயூரியா உறுப்பினர்களை தன் ராஜினாமாவால் இப்படி தண்டித்த அவர்  சிறைக்கு நேரில் சென்று  தண்டனை அனுபவித்து கொண்டிருந்த  தன் உதவியாளர் பாலோ காப்பிரியல் லை  மன்னித்து ஆசிகூறி விடுதலை செய்துவிட்டார்.

புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர் மக்களின் போப்பாக பார்க்கப்படுகிறார் .இவர் சாதாரண மக்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்  மிகவும் எளிமையானவர் என்று 
அர்ஜென்டினாவில் இவரை அனைவரும் வெகுவாக புகழ்கின்றனர். நகரப் பேருந்தில் ஏறிதான் பல இடங்களுக்கும் இவர் போவார் என்றும்
ஆர்ச்பிஷப்பாக இருக்கும் இவர் பெரிய மாளிகையில் வசிக்காமல் மிகவும் சாதாரண வீட்டில்தான் வசித்து வருகிறார் என்றும் சொல்லபடுகிறது. போப்பாக தேர்ந்த்டுக்கபட்டவுடன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பில்கொடுத்துவிட்டு பஸ்ஸில் மற்ற கார்டினல்களுடன் போப்பின் அரண்மனைக்கு போயிருக்கிறார்.
புதிய போப்பாண்டவர் தனது பெயராக பிரான்சிஸ் என்பதைத் தேர்வு செய்துள்ளார். இதுவரை இருந்த போப்புகளுக்குப் பின்னால் ஒரு எண் இருக்கும். அதாவது 2ம் போப் ஜான் பால், 16ம் பெனடிக்ட் என்று. ஆனால் தற்போது தேர்வாகியுள்ள ஜார்ஜ் தேர்வு செய்துள்ள பெயர் பிரான்சிஸ்.
இவர்தான் முதல் பிரான்சிஸ் என்பதால் இவரது பெயருக்குப் பின்னால் எண் எதுவும் இருக்காது. இப்படி எண் இல்லாமல் ஒரு போப் வருவது இதுவே முதல் முறையாகும். பிரான்சிஸ் என்ற பெயரை தேர்ந்த்டுத்தற்கு இவர்  சொன்ன காரணம். யேசுவின் சீடரான பிரான்சிஸ் ஒரு ஏழை, எளிமையாக வாழ்ந்து ஏழைகளுக்கு உதவியவர்.  நமது சர்ச்கள்  அதை நினைவில் கொள்ள வேண்டும் என்பது.
தவறை உணர்ந்து வருந்தி கேட்பவர்களுக்கு பாவ மன்னிப்பு வழங்கும் அதிகாரம் திருச்சபைகளுக்கு உண்டு. இந்த போப் அதைசெய்யபோகிறாரா? அல்லது தனக்கு முந்தியவர் முடிக்காமல் போன நிர்வாக பணியான தவ று செய்தவர்களுக்கு தண்டனைகளை அளிக்கபோகிறார? உலகம் பார்த்துகொண்டிருக்கிறது.



  • *
  •