நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18/3/13

ராஜம்மாவின் குதிரை


கனவுகள் காணும் மனிதர்கள் அதிகம் நிறைந்திருக்கும் இடங்களில் குதிரைபந்தய மைதானமும் ஒன்று. தான் தேர்ந்தெடுத்த குதிரை ஜெயிக்க, பணம்கட்டியவர்கள், தங்கள் கணிப்புகள் சரியாக இருக்கவேண்டுமென்று புக்கிகள், தன் திறமையை பதிவுசெய்ய துடிக்கும் ஜாக்கிகள், தங்கள் குதிரை முதலில் வரும் கெளரவத்தை பெற குதிரைகளின் உரிமையாளர்கள் என பலரும் தங்கள் ஆசைகளை கனவாக கண்டுகொண்டிருக்கும் இடம் குதிரை பந்தைய மைதானம்.  இவைகளிலிருந்து மாறுபட்டு அங்கே ஒரு பெண  மாறுதலான ஒரு கனவை கண்டுகொண்டிருந்தார். ஒரு ரேஸ் குதிரைக்கு உரிமையளாரக வேண்டும் என்பதே அது.
 10 ஆண்டுகளுக்கு முன்னால் பங்களூரு ரேஸ்கிளப்பில் குதிரை பந்தைய  ”பெட்” டிக்கெட்கள் விற்கும் கவுண்ட்டரில் டிக்கெட் விற்கும் பணியில் சேர்ந்தவர் ராஜம்மா. நிரந்திரமில்லாத அந்த பணியில் வேலை செய்த நாட்களில் நாளனொன்ருக்கு 50 ரூபாய் சம்பளம்.. அதே ரேஸ்கிளப்பில் கால்நடை மருத்துவ பிரிவில் பணியாற்றிய வெங்கடேஷுடன் திருமணம் இரண்டு குழந்தைகள் என வாழ்க்கையுடன் தொடர்ந்து கொண்டிருந்தது இவரது கனவு. குதிரை ரேஸ்களில் சிலர் பெரும்பணம் சம்பாதிப்பதும் பலர் பணம் இழப்பதையும் தினசரி கண்டுவந்த ராஜம்மா கவனித்தஒரு விஷயம். எல்லா ரேஸ்களிலும் எதாவது ஒரு அளவில் பணம் சம்பாதிப்பது குதிரைகளின் சொந்த காரர்கள்மட்டுமே என்பது. இது அவருக்கு ஒரு குதிரையை சொந்தமாக வாங்க வேண்டுமென்ற எண்ணத்தை தூண்டியது ரேஸ்குதிரைகள் என்பது மிக விலையுயர்ந்தது, வாங்குவது அவ்வளவு எளிதல்லை என்பது அவருக்கு தெரியும். ஆனாலும் துணிவுடன் அதைப்பற்றி கனவுகள்  காண ஆரம்பித்தார். ஆசையை கேட்ட பலர்  -குடும்பத்தினர் உள்பட  சொன்னது “பைத்தியகாரி” லட்சாதிபதிகள் கூட யோசிக்க தயங்கும் விஷயம் இது. உனக்கு கனவில் மட்டுமே சாத்தியம் என சொன்னவர்கள் தான் அதிகம். ராஜம்மா மனம் தளரவில்லை தன் லட்சிய கனவை நனவாக்கும் திட்டங்களில் இறங்கினார். குதிரை வாங்க தேவையான பணத்தை சேர்க்க இந்த டிக்கெட் கவுண்ட்டர் வேலை உதவாது எனபதால் ஒரு சொந்த தொழில் செய்ய திட்டமிட்டு தன்னை தயாரித்து கொண்டார்.கிராமபெண்ணான நானும் உழைப்பினால் ஒரு பேஷனான நகர பெண்ணாகி சாதிக்க முடியம் என நம்பினேன். என்று சொல்லும் இவர்  இருந்த சொற்ப சேமிப்பில் ஒராண்டு பியூட்டிஷியன் கோர்ஸ் படித்து பட்டயம் வாங்கிய பின்னர் கடன் வாங்கி ஒரு பார்லரை துவக்கி சம்பாதிக்க ஆரம்பிக்கிறார். கைகள் கஸ்டமரை அழகுபடுத்திகொண்டிருந்தாலும் கண்களில் தன் சொந்த குதிரை ரேஸில் ஒடும் கனவுகாட்சிகள் தான் ஒடிக்கொண்டிருந்தது. ஆறு ஆண்டில் இவர் சேமித்த பணம் 3 லட்சம். ”மிக கட்டுமையான சாவலாக இருந்த விஷயம் இது. பார்லரில் ஒரே மாதரியான நிரந்த வருமானமில்லை சிலமாதங்களில் கடன் தவனையை கட்ட கூட தவறியிருக்கிறேன் ஆனால் லாபமாக கிடைத்த ஒவ்வொரு ரூபாயையும் குதிரை வாங்க சேமித்தேன்” என்று சொல்லும் இவர் இன்னும் எவ்வளவு ஆண்டுகள் ஆகுமோ என எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் சதீஷ் என்ற  குதிரை பயிற்சியாளார் தன் குதிரையின் மதிப்பில் கால் பங்கை விற்க போகும் தகவல்  கிடைத்தது. ரேஸ்குதிரைகள் மிக விலையுள்ளதாக இருப்பதால் அவற்றின் உரிமையை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் வைத்திருப்பார்கள். அவர்கள் தங்கள் பங்கை மட்டும் மற்றவர்களுக்கு விற்கலாம். தனி உரிமையாளர்களும் ஒரு பகுதி பங்கை விற்று  பணமாக்கி கொள்ளாலாம். இது ரேஸ்கிளப்பின் விதி முறைகளுக்கு உட்பட்டது அந்த பயிற்சியாளாரை அறிமுகமில்லாதால் தனக்கு தெரிந்த ஒரு குதிரையின் சொந்த காரரின் உதவியுடன் சதீஷிடம் தனக்கு அந்த பங்கை தனக்கு தரும்படி கேட்டார் ராஜம்மா. யாராவது மற்றொரு ரேஸ்கிளப் மெம்பர் பங்கை விலைக்கு கேட்பதை எதிர்பாத்துகொண்டிருந்த சதிஷ் இந்த சதாரண பெண்ணின் வேண்டுகோளினால் திகைத்துபோனார். முடியாது என மறுத்தும் விட்டார். காரணம் சமூக அந்தஸ்த்து இல்லை. கஷட்டபட்டு சேமித்த தன் முழுசேமிப்பையும்  இந்த பெண் இதில் மூதலீடு செய்து விட்ட பின் குதிரை அதை சம்பாதித்து கொடுக்க முடியாவிட்டால் தன் அத்தனை சேமிப்பை இழக்கும் ஆபத்தான நிலைக்கு தள்ளபட்டுவிடுவார் என்பதால். ஆனால் சொந்த குதிரை கனவால் துரத்தபட்டு கொண்டிருந்த ராஜம்மா நம்பிக்கையுடன் தினசரி சதீஷின் குதிரை லாயத்திற்கு வந்து காத்திருந்து அவரை சந்தித்து கேட்டுகொண்டே இருந்தார். தளராத தன்னமிக்கை மிக்க இந்த பெண்ணின் வேண்டுகோள் அவர் மனதை மாற்றியது. குதிரையின் மதிப்பில் கால்பங்கை செலுத்தி  பணக்காரர்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும் பங்களூர் ரேஸ் கிளப்பின் குதிரைகள் சொந்தகார்கள் பட்டியைலில் இடம் பெற்றறார் ராஜம்மா.  

             
அதிவேக புயல் (super storm) என்ற அந்த அழகான செம்பழுப்பு வண்ண குதிரை ராஜம்மாவின் ராசியினாலோ என்னவோ பங்கொண்ட முதல் பந்தையத்திலேயே பட்டையை கிளப்பிற்று. மிக ஸ்டைலாக முதலில் வந்து நின்றது. தொடர்ந்து குதிரைரேஸ்களின்மிககெளரமாக கருதப்படும் கவர்னர் கப் ரேஸில் முதலில் வந்துஜெயித்தது. தொடர்ந்து பங்களூர், மைசூர் டெர்பிகளிலும் இரண்டாவது இடத்தில் வென்றது. கடந்த மாதம் மும்பாயில் இந்தியாவில் மிகச்சிறந்த குதிரைகள் மட்டுமே பங்கேற்ற இந்தியா டெர்பி பந்தயத்தில் முதலிடம் பெற்று புதிய சாதனையை படைத்திருக்கிறது. அந்த ரேசினால் கிடைத்த பரிசுப்பணம் 1.8 கோடிரூபாய்கள். பல குதிரைகள் வைத்திருக்கும் விஜய் மல்லையா இந்தியா டெர்பியில் பரிசு பெற 5 ஆண்டுகள் காத்திருக்கவேண்டியிருந்தது.  பலகுதிரை உரிமையாளாருக்கு இது இன்னும் கைகெட்டாத கனவு. ராஜம்மாவின் முதல் குதிரை இதை சாதித்திருக்கிறது.
ஒவ்வோரு ரேசுக்குபின்னரும் தன் குதிரைக்கு திருஷ்டி கழித்து பூஜை செய்யும் ராஜம்மா ”வெற்றி என் தலைக்குள் போய்விடகூடாது என்பதில் கவனமாகயிருக்கிறேன் ரேஸ்வெறியினால் அழிந்த குடுபங்களையும் எனக்கு தெரியும் சில நாட்கள் இடைவெளிக்கு பின்னர் முடிந்தால் இன்னும் ஒரு குதிரையில் முதலீடு செய்வேன். என் குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்கு தேவையான தை சம்மாதித்த பின் விலகிவிடுவேன்” என்கிறார்.
கனவு காண்பவர்களின் ஆசைகள் குதிரைகளானால் எந்த உயரத்திலும் பறக்கலாம் எனபது ஆங்கிலத்தில் பகற்கனவு காண்பவர்களை பற்றி கிண்டலாக சொல்லபடும் வாசகம். ஆனால் இதை உண்மையாகவும் செய்ய முடியம் என்று காட்டியிருப்பவர் ராஜம்மா.







                                                          

10/3/13

ரிவ்யூ ராஜா







இணயதளங்களிலும், வலைப்பூக்களிலும்  தமிழ் சினிமாகளுக்கு விமர்சனம் நிறைய வருகிறது. சில ஜெட் வேகத்தில் வருகிறது. காலை10 மணிக்கு வெளியான படத்திற்கு 1 மணிக்கே விமர்சனம் வெளியாகிறது. (தியட்டரிலேயே எழுதிவிடுவார்களோ?) இப்போது அடுத்தகட்டமாக  விமர்சனங்கள் யூ ட்டுயூபில் படங்களாக வருகிறது, விமர்சகர் படத்தை விமர்சிப்பது விடியோபடமாக்க பட்டு யூ ட்யூபில் வெளியிடபடுகிறது. இதில் இப்போது மிக பாப்புலாராக இருப்பது “ரிவ்யூ ராஜா”. டைட்டில் கார்ட் போடும்போது படத்தின் தீம் மியூசிக்கின்,பின்னணியில் படத்தின் ஹைலைட் காட்சிகளைபோலவே நைண்டியாக ரிவ்யூ ரஜா நடிக்கும் காட்சிகள் என விமர்சனபடம் தொடங்குகிறது

. –(விஸ்வரூபத்தின் விமர்சனம் துவங்கும்முன் கமலைப்போல கதக் நடனம்-துப்பாகி சண்டை) இந்த பாணியில் வாரம் தோறும் ஒரு தமிழ்பட விமர்சனம். விமர்சனம் ஆங்கிலத்தில் . செய்பவர் ஒரு கனடா நாட்டு இளைஞர். ஆம் தமிழ் படங்களுக்கு விமர்சனம் ஒரு வெளிநாட்டுகாரர் ஆங்கிலத்தில் வாரந்தோறும் செய்கிறார். பலர் பார்க்கிறார்கள். இதுவரை இவர் விமர்சன்ங்களை பார்த்தவர்கள் பதினெட்டு லட்சட்சத்திற்கும் மேல். கனடாவின் புகழ்பெற்ற பல்கலைகழகத்தில் நிர்வாகயியல் படித்து ஒரு மென்பொருள் நிருவனத்தில் பணிசெய்பவர்.
விமர்சனத்தில் கதை, கேமிரா, நடிப்பு, மியூசிக் என துறைவாரியாக மார்க் கொடுத்து இறுதியில்முழு படத்துக்கும எவ்வளவு என மார்க் கொடுக்கிறார். விஸ்வரூபத்திற்கு இவர் தந்திருப்பது  7.3 மார்க்குகள். சகுனிக்கு 3.05.
கனடாவிலிருக்கும் தமிழ் தெரியாத இந்த வெள்ளைகாரருக்கு எப்படி தமிழ் சினிமாவின் மீது விமர்சனம் செய்யும் அளவிற்கு காதல்? இவருடைய நல்ல  நண்பர் குஹன். குஹனின் பள்ளித்தோழர் அர்ஜுன் மனோ. கனடா பலகலைகழகத்தின் சினிமா ஸ்கூலில் படிப்பவர்.. ஹாலிவுட்டில் சாதிக்க துடிக்கும் இலங்கை தமிழர்.வார இறுதியில் குஹன் அவர் வீட்டிற்கு சென்று தங்குவது வழக்கம். கடந்த ஆண்டு ஒரு முறை ராஜாவையும்  அழைத்து சென்று தங்கியபோது டிவிடி யில் பார்த்த  ஒரு தமிழ் சினிமாதான் இவரை விமர்சகராகயிருக்கிறது. அது அஜித் நடித்த பில்லா 2. அதன் கம்பீரம், மியூசிக் போட்டோகிராபி எல்லாம் பார்த்து அசந்து போன இவர் “ஹீரோவின் ஒரே அடியில் வில்லன் அறையின் மூலைக்கு பறந்து போய் விழுவது போன்ற காட்சிகள் அமெரிக்க சமூக சினிமாக்களில் இல்லாத படங்களில் புதுமை எனறு வியந்து நிறைய படங்கள் ஆரம்பித்தார்.
அதுவரை அவருக்கு தமிழ் சினிமாவின் வீச்சு, ரசிகர்கள் பற்றி எதுவும் தெரியாது.  விளையாட்டாக ஒரு பட விமர்சனத்தை பதிவு செய்து யூட்யூபில் பதிவேற்ற அதற்கு கிடைத்த செம ரெஸ்பான்ஸ் இவரை தொடர்ந்து அதைச்செய்ய  வைக்கிறது. இன்று நண்பர்களுடன் ஒரு சின்ன ஸ்டூடியோ, ஓளி/ஒலிப்பதிவு வசதிகளுடன் அமைத்து விமர்சனங்களை வழங்கி கொண்டிருக்கிறார். நன்பர் அர்ஜூன் ஒளிபாதிவளார்.  படங்களுக்கு மியூசிக் சென்னையிலிருக்கும் உதய பாரதி. நண்பர் குஹன் எடிட்டர் மற்றும் தமிழ் சொற்களை சரியாக சொல்லிகொடுப்பவர்.  வட அமெரிக்காவிலும்,கனடாவிலும் உள்ளூர் ஆட்களுக்கு அதிகம் தெரியாத இவர் அங்கிருக்கும் தமிழர்களிடையே ஆட்டோகிராப் கேட்கும், சேர்ந்து படமெடுத்து கொள்ளுமளவிற்கு மிக பாப்புலர். தன்பெயர் அச்சடிடிருக்கும் மஞ்சள்  டி ஷர்ட்டையே எப்போதும் அணிகிறார்.
சிவாஜி 3 டி பட ரிலீஸின் போது ரஜினி ஸ்டையில் மாண்டிரியல் நகர வீதிகளில் இவர்  ஒரு கொரிய மொழி பாட்டிற்கு நடனமாடிக்கொண்டுபோன படம் யூட்யூபில் சூப்பர்ஹிட். 4 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.  நிறைய தமிழ் படங்கள் பார்த்தும், தமிழ் நண்பர்களுடன் பேசிபேசியும் மெல்ல தமிழ் கற்று கொள்ளும் இவர் சமீபத்தில் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்திருந்தார். விஸ்வரூபம் படத்தின் முதல் காட்சி பார்த்து ரசிகர்களை தன் யூ ட்யூப் சானலுக்காக பேட்டியும் கண்டார். சந்தித்தவர்களில் இளைய தளபதியும் ஒருவர்.
ஆதிபகவன் படத்திற்காக கனடா வந்திருந்த அமீர் ஜெயம் ரவி டீமை வரவேற்று அவர்களை கனடா டிவியில் அறிமுகபடுத்தியிருக்கிறார் இன்னும் சில மாதங்களில் சென்னை வந்து இன்னும் நன்றாக தமிழ் கற்று கொண்டு தமிழ் சினிமாவில் நிறைய தொடர்புகளை ஏற்படுத்திகொண்டு தமிழ் சினிமாவில் பிசினஸ் செய்யபோவது  என் லட்சியம் . அமெரிக்காவிலும், கனடாவிலிருக்கும் தமிழ் ரசிகர்களையும் தாண்டி தமிழ் சினிமாக்களை உலக மார்க்கெட்டில் அறிமுகபடுத்துவேன் என்கிறார். தன்னை ராஜா என சொல்லிகொள்ளூம் இவர் உண்மைப்பெயர் என்ன?“என்னை ராஜா என்றே அழையுங்கள்” என்கிறார். உடன் வந்திருக்குக்கும் தந்தை ரிச்சர்ட்டும் இவரை ராஜா என்றே அழைக்கிறார். படித்த, படிக்கும், வேலையிலிருக்கும் நமது  இளைஞர்களை கோலிவுட் எனற காந்தம் ஈர்ப்பது நமக்கு தெரியும். அந்த காந்தத்தின் சக்கி இப்போது வலிமையாகி கனடா வரை நீண்டு அங்குள்ள ஒரு இளைஞரையும் ஈர்த்திருப்பது ஒரு ஆச்சரியமான சந்தோஷம்.




4/3/13

சத்திய சோதனையை சந்தித்தவர்.


“என் வாழ்க்கையில் நான் சந்தித்த மிகப்பெரிய சவால்: என் நேர்மைக்கும் நான் நேசிக்கும் என் தொழிலுக்கும் களங்கம் விளைவித்த ஆபத்தான சவாலான அதை “சத்தியம் ஒரு நாள் நிச்சியம் ஜெயிக்கும் என்ற என நம்பிகையினாலும் தெய்வத்தின் அருளாலும் ஜெயித்தேன் “ என்கிறார் நம்பி நாராயணன்.
 எதிர்பாராத நேரத்தில் சவால்கள் எழுவதும் அதை எதிர்கொண்டு வெற்றிகொள்வது என்பதும் பெரிய நிருவனங்களில், அல்லது துணிவுடன் எதிர்நீச்சல் போட்டவர்களின் வாழ்க்கையில் மட்டுமில்லை. ஒரு தனிமனிதன் வாழ்க்கையிலும் நிகழக்கூடியது என்ற நிதர்சனமான உண்மையை புரிய வைக்கிறது இந்த விஞ்ஞானியின் வாழ்க்கை.
நம்பி நாராயணன் ஒரு விண்வெளியியல்விஞ்ஞானி. ஏரோநாட்டிகல் எஞ்ஞினியரிங்கும், ராக்கெட் சையின்ஸும்படித்த பின் இந்திய விண்வெளித்துறையில் (ISRO)அப்துல் கலாம் சதிஷ் தாவன் போன்றவர்களுடன் 1970களில் பணியாற்றியவர். திரவ எரிபொருளின் சக்தியில் இயங்கும் ராக்கெட்மோட்டர்களை. எந்த வெளிநாட்டின் உதவியுமில்லாமல் 1970லேயே உருவாக்கியவர். மிக பெரிய வல்லரசுநாடுகள் மட்டுமே அறிந்தந்திருந்த அதிவேக ராகெட்களை செலுத்த தேவையான கிரையோஜினிக் என்ற திரவ எரிபொருளை உள் நாட்டிலியே தயாரிக்க ரஷ்ய பிரெஞ்ச் அரசு நிறுவனங்களுடன் 20 ஆண்டுகளுக்கு மேல் கடுமையாக உழைத்து அதை கற்றவர்.செய்யும் தொழிலையே தெய்வமாக நினைக்கும் இந்த மனிதருக்கு தன் தொழிலைத்தவிர வேறுஎதுவும் தெரியாது.
1994லில் ஒரு நாள் திருவனந்தபுரத்தில் இவர் வீட்டுக்கு வந்த போலீஸ் படைஇவரை கைது செய்கிறது. மறுநாள் தலைப்பு செய்திகள் சொன்ன தகவல் இவர் ராக்கெட் ரகசியங்களையும் ராணுவ ரகசியங்களையும்  பாக்கிஸ்தானுக்கு விற்கிறார். என்பது.இன்று போல் செய்திகளை துரத்தும் டிவி சேனல்கள் அன்று இல்லை. ஆனால் மாநில மற்றும் தேசிய நாளிதழ்களில்  தொடர்ந்து ஊகங்களின் அடிப்படையில் எழுந்த பல செய்திகள் விஸ்வரூபம் எடுத்து நம்பி நாராயணணையும், அவரது சகா சிகுமாரையும் தேசதுரோகிகளாக வர்ணித்தன. மலையாளத்திலும் தமிழிலும் பல வாரபத்திரிகைகள் தொடர்களில் உண்மை”கதைகளை” வெளியிட்டன. ஒவ்வொருமுறையும் கோர்ட்டுக்கு அழைத்துசெல்லும்போது துரோகி என முகத்தில் குத்தி காரி உமிழ்ந்தனர் சிலர்... சிறையில் ”உன்னை சரியாக நடத்தாத மேலதிகாரியை மாட்டிவிடு” என்று கொடுத்த அட்வைஸை ஏற்காததால் நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்யபட்டார்.. இரண்டாண்டு நீண்ட பலவிசாரணைக்கு பின் சிபிஐ 1996ல்அறிவித்த முடிவு  ”இது பொய்யாக புனையபட்ட ஒரு வழக்கு. வழக்கை தொடர்ந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கையும், அவர்களுக்கு கோர்ட்மூலம்தகுந்த  தண்டனையும் தரபடவேண்டும்”
இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் 1998ல் இவர் குற்றமற்றவர் என அறிவிக்கபட்டார். ஆனாலும் மாநிலபோலீஸ் கேரள உயர்நீதிமன்றத்திற்கு போனது. அங்கும் வழக்குதள்ளுபடி செய்யபட்ட நிலையில் நம்பி நாராயணன் சந்தித்த அடுத்த சோதனை மாநில அரசு முழுவழக்கையும் மீண்டும் மாநிலபோலீஸ் மறுவிசாரண செய்ய இட்ட உத்தரவு.
ஏன் இவருக்கு இது நேர்ந்தது.? போலீஸ் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் செல்வாக்குள்ள பணக்கார்களும் வில்லனின் கூட்டாளியாக கூட்டு சேர்ந்து அப்பாவி கதாநாயகனை பலிகடாவாக்கி தங்கள் பிரச்னைகளை தீர்த்துகொள்ள முயலும் தமிழ் கிரைம் திரில்லர் சினிமா திரைக்கதையின் உண்மைவடிவம்தான் இவரது கதை. தனது உயர் அதிகாரியை பழிவாங்க ராணுவ ரகசியம் கடத்தல் என ஒர் கற்பனை செய்தியை கசிய விட்ட போலீஸ் அதிகாரி, ஒரு பெரிய பத்திரிகை குடுமபத்தில் எழுந்த வாரிசு போரட்டத்தில் தனக்கு உதவாத அதே உயர் போலீஸ் அதிகாரியை வஞ்சம் தீர்க்க காத்திருந்த செல்வாக்குள்ள ஒருதினபத்திரிகையின் அதிபர், பொறியாக இருந்த இந்த பிரச்சனையை பெருந்தீயாக வளர்த்து, ”தேசத்ரோகிகளை காப்பற்ற முயல்கிறார் இந்த முதல்வர்” என சொல்லி அரசியல் பிரச்னையாக்கி. முதல் அமைச்சரையே பதவியிழக்க செய்த  அரசியல்வாதிகள் என சேர்ந்த ஒரு கூட்டணியின் வெற்றி இந்த மனிதரின் வாழக்கையை பகடைகாயாக்கி ஆடியதில் பெற்றது..
வழக்கு நடைபெற்ற காலங்களில் நாரயணன் அடைந்த துயரங்களின் உச்சம் மன அழுத்தினால் அவர் மனைவி தன் செயல் திறன்களை இழந்து நின்றது. ”என்னால் கோவிலுக்கு கூட போகமுடியவில்லை. நான் தேசதுரோகி என என் காதுபடவே பேசுவார்கள்” என்கிறார் நாராயணன். நிரபராதி என அறிவிக்கபட்ட பின்னரும் அரசின் மறு விசாரணை அறிவிப்பினால் வெகுண்ட நம்பி சுப்ரீம் கோர்ட்டுக்கு போனார். அங்கும் கேரள அரசின் அணுகுமுறையை மிக கடுமையான வார்த்தைகளினால் விமர்சித்து கடிந்துகொண்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்திரவிட்டது. உச்சநீதிமன்றம். அரசு பதவி திரும்ப கிடைத்தாலும் கெளரவங்களை இழந்தார். மூத்த விஞ்ஞானியான இவருக்குஅதிகாரமில்லாத நிர்வாக பணிகளே தரபட்டது. மனிதனை சந்திரனுக்கு அனுப்ப இன்று திட்டமிடுகிறது இந்திய விண்வெளிதுறை. அதற்கான அடிப்படை வசதிகளை உருவாக்க ,உழைத்த , விருதுகள் வழங்கபட்டிருக்கவேண்டிய இந்த விஞ்ஞானி, எந்த கெளரவவும் இல்லாமல் 2001ல் பதவி ஓய்வு பெற்றார்.பொய் வழக்கு போட்டதற்காக குற்றம் சாட்டபட்டபட்டிருந்த வழக்கு நிலுவையில் இருந்தபோதும், அந்த போலீஸ் அதிகாரிகள் பதவிஉயர்வு பெற்றார்கள். அதில் ஒரு மூத்த அதிகாரி ஓய்வுக்கு பின்னரும் பெரிய அரசு பதவி அளிக்கபட்டு கெளரவிக்கபட்டிருக்கிறார், கிளைமாக்ஸாக சிபிஐயின் பரிந்துறையின் பேரில் இந்த பொய்வழக்கை போட்ட போலிஸ் அதிகாரிகளின் மீது தொடர்ந்த வழக்கை அரசு கைவிட்டது. சொன்ன காரணம்  “பலர் ஓய்வு பெற்றுவிட்டார்கள். நீண்ட காலமாகிவிட்டது.”
தவறாக குற்றம்சாட்டபட்டு பொய்வழக்குகள் போடபட்டு தாமதமாக கிடைத்த நீதியினால் தன் வாழ்க்கையின் வசந்தத்தை இழந்து போன நம்பி மனித உரிமை ஆணையத்தில்  தொடர்ந்த வழக்கில் அது கேரள அரசுக்கு இட்ட ஆணை நஷ்ட ஈடாக 1 கோடி ரூபாய். கொடுக்க வேண்டும் என்பது. ஆணை இடபட்டது 2001ல். 2012 வரை கேரள அரசு அசையவில்லை.. வேறு எந்த மனிதனும் வீபரிதமான முடிவுகளை கூட எடுத்திருக்க கூடும் என்ற நிலையில் நம்பி நம்பிக்கையுடன் உயர் நீதிமன்றத்தை அணுகியதில் ”உடனடியாக 10 லட்சம் கொடுங்கள். பிரச்னைகளை பிறகு பேசுங்கள் என மாநில அரசை. எச்சரித்திருக்கிறது. ஆனால் இன்னமும் (இந்த கட்டுரைஎழுதும்வரை) அந்த பணமும் தரப்படவில்லை.
”எனது பிரச்னை பணமில்லை. என் நேர்மையும் அநீதியை எதிர்த்ததில் நான் சந்தித்த சத்திய சோதனைகளும் பதிவு செய்யபடவே போராடுகிறேன்” என்கிறார் நாராயணன்.
”பத்திரிகைகளும், காவல்துறையும் அரசியல்வாதிகள் செய்த பொய்பிரசாரத்திற்கு அப்பாவி கேரளமக்கள் பலியாகிவிட்டனர். உங்களிடம் கேரள மக்கள் சார்பில்மன்னிப்பு கேட்கிறேன், கேரள எழுத்தாளர்கள், அறிவிஜிவிகள் சார்பாக மன்னிப்புகேட்கிறேன் பத்திரிகைகள் சார்பில் மன்னிப்புகேட்கிறேன் “எங்களை மன்னித்துவிடுங்கள் நம்பி சார்” என்று மிகசிறந்த கேரள இலக்கிய வாதிகளில் ஒருவரான பால்சக்காரியா கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் திருவனந்தபுரத்தில் ஓரு பத்திரிகையாளார் கூட்டதில் பேசியபோது அங்கிருந்தவர்களும், அதை மறுநாள் செய்திதாட்களில் படித்தவர்களும் அதை தாங்கள் கேட்ட மன்னிப்பாகவே உணர்ந்து நெஞ்சம் நெகிழந்தது நிஜம்.
’9கல்கி 3/3/13)

23/2/13

சீனப் பெண் எழுதிய முதல் தமிழ்புத்தகம்



சீனா ரேடியோ இண்டெர்நேஷனல் (CRI) என்பது சீன அரசு வெளிநாட்டினருக்காக பல நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் வானொலிநிலையம். 70 ஆண்டுகளாக இயங்கி கொண்டிருக்கும் இந்த நிலையம் இப்போது 60  நாடுகளுக்கு அந்தந்த நாட்டு மொழிகளில் நிகழச்சிகளை வழங்குகிறது. இந்திய மொழிகளில் கடந்த 49 ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை வழங்கும். இதன் தமிழ் ஒலிபரப்பு மிகவும் பாப்புலர். 22000க்கும்மேல் பதிவு செய்து கொண்ட நேயர்கள் இருக்கிறார்கள். 150 நேயர் மன்றங்களும் செயல்பட்டுவருகின்றன. இந்த தமிழ் ஒலிபரப்பின் தலமைப்பொறுப்பில்லிருப்பவர் திருமதி ஸ்ஹோ ஜியாங். இவர் 

”சீனாவில் இன்ப உலா” என்று ஒரு தமிழ் புத்தகமெழுதியிருக்கிறார். கலைமகள் என்ற தன் தமிழ் பெயரில் எழுதுகிறார்.  ’சீனர் எழுதிய முதல் தமிழ் புத்தகம்’ என்ற பெருமையைப் பெற்றிருக்கும் இந்த  புத்தகத்தை கெளதம் பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில்  இந்த புத்தகம் விற்பனையிலிருந்தது.
சீனாவில் இன்ப உலா என்ற இந்த புத்தகம் சீன கலாசாரம் மற்றும் சீன நகரங்களான பெயிஜிங்,ஷாங்காய் தோன்றிய வரலாறு, திபெத்திய நாகரிகம் போன்றவைகளைப் பேசுகிறது. மாறிவரும் சீன நாகரிகங்கள் வாழ்க்கைமுறை படு வேகமாக இயங்கும் புதிய மெட்ரோ ரயில், ”798” என்ற பெயரில் இயங்கும் கலைகூடங்கள் நிறைந்த பகுதி போன்றவைகளை விளக்கி இதிலிருக்கும் 26 கட்டுரைகள் சொல்லுகிறது சுருக்கமாக சொன்னால் மாறிவரும் சீனாவை பார்க்க விரும்புபவர்களுக்கு  ஒரு. தமிழ் கைடு.
 ”எங்கள் நிலயத்தின் 61 மொழி ஒலிபரப்புகளுக்கு உலகெங்குமிருந்து ஆண்டுக்கு 5 லட்சம் கடிதங்கள் வருகின்றன. அதில் மிக அதிகம் வருவது தமிழ் கடிதங்கள் தான்.அவைகளில் பல சீனாவில் பயணம் செய்வதையும் இடங்களையும் பற்றிய கேள்விகள். இதுதான் என்னை இந்த புத்தகத்தை எழுத தூண்டியது” என்கிறார் இவர்.

திருமதி ஸ்ஹோ ஜியாங் . 15 ஆண்டுகளுக்கு முன் சீன பல்கலைகழகத்தில் தமிழ் படித்தவர் சீனாவில் தமிழ் கற்பிக்க படும் ஒரே இடமான கம்னியூகேஷன் யூனிவர்ஸிட்டி யில் பட்டபடிப்பு முடித்தவர்.  “.புரிந்துகொள்ளவே முடியாத தமிழ் எழுத்துகளுடன் போராடி கற்று கொண்டேன்” என்று சொல்லும் இவர் இன்று சரளமாக இலங்கைத்தமிழ் வாசனையுடன் தமிழ் பேசுகிறார். 2003. 2004 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சீன வானொலி தமிழ் நேயர்மன்ற கூட்டங்களில் பங்கேற்க பயணங்கள் செய்திருக்கிறார். 13 ஆண்டுகளாக நிலையத்தில் பணியாற்றும் இவர் இப்போது அந்த நிறுவனத்தின் துணைத்தலைவராக பதவி உயர்ந்திருக்கிறார்.
அடுத்த ஆண்டு மொழி தொடர்பாக ஒரு களப்பணி செய்ய தமிழ்நாட்டில் தங்கபோவதாக சொல்லும் இவர் தன் அடுத்த புத்தகத்தை சீன மொழியில் தென் இந்தியாவைப்பற்றி எழுதப்போகிறார். ”இந்தியாவை பார்க்கவரும் சீனர்கள் புது டெல்லி வந்து பார்த்த பின் அங்கிருந்து வட இந்தியாவிலுள்ள சில புத்தர் கோவில்களுக்கு  மட்டும் சென்று திரும்புகின்றனர். அவர்களுக்கு தென் இந்தியாவை அறிமுகபடுத்த விரும்புகிறேன்.  இப்போது சீனாவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் லைப் ஆப் பை படத்தினால் சீனர்களுக்கு தெனிந்தியாவின் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது”  என்கிறார்.




29/1/13

புத்தரின் மகள் !


நாங்கள் வசிக்கும் கீரின் ஏக்கர்ஸில் ஒவ்வொரு வருடமும் GARDEN (green acres residents dinner and entertainment night) கொண்டாவோம். ஒரு பொரபஷனல் கலைஞரின் நிகழ்ச்சியும் ஒரு இன் ஹவுஸ் நிகழ்ச்சியும் இருக்கும். இம் முறை கார்த்திக் என்ற இளைஞனின் தீமாட்டிக் கான்ஸ்ர்ட். .
கர்னாடிக், வெஸ்ட்டர்ன் கிளாசிக், சினிமா என வயலினிலும் வாய்பாட்டிலும் கலக்கிட்டார் கார்திக். சாப்ட்வேர் எஞினியர்  கம்ப்யூட்டர் ப்ரொகிமர் வேலையை விட இந்த மியூசிக் ப்ரொகிராம்கள் படித்திருப்பதால் வேலையைவிட்டுவிட்டு வயலின் வாசிக்கிறார்.
அதே இரவில் எங்கள் ஜிஏ மகிளிர் ஒருஹிந்தி  நாட்டிய நாடகம் நடத்தினார்கள். மன்னன்  சித்தார்த் மனம் மாறி துறவறம் பூண்ட ”மஹாராத்திரி”. அதில் சித்தார்த்தின் மகன் ராகுலாக நடிக்க பார்கவியை அழைத்தார் அதன் டைரக்டர். ஒரு சில நிமிடங்கள் மட்டுமே  வர வேண்டிய காட்சி வெறும்அபிநயம் மட்டும் என்பதால் அவளுக்கு ரிகர்ஸல் கிடையாது. மேடையேறும் முன் ஒரு சின்ன பிரிபிங் போதும் என்றார்.  (பார்கவியின் திறமையில் டைரக்டர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை)   தான் செய்ய வேண்டியதை  அவர்கள் சொன்ன போது கவனமாக கேட்ட பார்கவி சொன்னது  “ நான் பிரின்ஸ்ஸ் ஆகதான் வருவேன் என்னிடம் ராணி டிரஸ் இருக்கிறது. பாய்ஸ் டிரஸ் வேண்டாம்” என்றாள்.  அவள் மனதை மாற்ற முயன்று தோற்ற டைரக்டருக்கு இவளை விடவும் மனமில்லை.  அவர் சரி நீ ராணீதான் உன் டிரஸையே போட்டுக்கோ என்றார். ராகுலை எப்படி இவர் இளவரசியாக மாற்றுவார் என்று நினைத்துகொண்டிருந்தேன்.
”அப்பா ஏன் விசனமாகயிருக்கிறார்?” என்ற ராகுலின் கேள்விக்கு அவன் அன்னை தரும் பதிலை நம்பாமல் நீ பொய் சொல்லுகிறாய் என கோவித்துகொண்டு அன்னை தள்ளிவிடுவது காட்சி. அதை பார்கவி செய்தபோது எல்லோரும் ரசித்து கைதட்டினார்கள்.

 
நாட்டிய நாடகமாதலாலும் பார்கவிக்கு வசனமில்லாதலும்  அவள் ராகுல் என  அம்மாவால் அழைக்கபட்டபோது கூட  அந்த ராஜகுமாரன் தான் என்பது அவளுக்கு புரியவில்லை.
பிரின்ஸெஸ் ஆக நடித்துவிட்டோம் என பார்கவியும் காட்சி நன்றாக போனது என டைரக்டரும் சந்தோஷபட்டு கொண்டார்கள்.
இறுதியில் ”இளவரசனாக வந்த இளவரசிக்கு” என பரிசு கொடுத்தபோது அதன் அர்த்தம் எத்தனைபேருக்கு புரிந்ததோ.?
கார்திக்கின் இசையின் ஒரு பகுதியை யை இந்த லிங்க்கில் கேட்கலாம்

20/1/13

புத்தகத்தினால் பெற்ற புதிய அனுபவம்



சென்னை புத்தக கண்காட்சி இம்முறை மிக பிரம்மாணடானதாக  560 
ஸ்டால்களுடன் சென்னையிலியே பெரிய கிரவுண்டான YMCA கிரவுண்டில் நடைபெறுகிறது. நேற்று 19/01/13 நல்ல கூட்டம் லட்சம் பேர் !
கார்பார்க் நிரம்பி வழிந்தது. பார்க்கிங்க்கு வசூலித்த பணத்திற்கு இறங்கி 1 கீமி நடக்கும் பயிற்சியியையும் இலவசமாக தருகிறார்கள். 1975ல் முதல் கண்காட்சி செயிண்ட் அப்பாஸ் பள்ளிகூடத்திலும் பின் மவுண்ட்ரோடு 
ஆர்ட்ஸ் காலேஜிலும் மாலன், சுபரம்ணிய ராஜுவுடன் பார்த்த நினைவுகள் வந்தது. நேற்று வந்தவர்களில் 25% பேர் ஆளுக்கு இரண்டு புத்தகம் 
வாங்கியிருந்தால் கூட விற்பனை ஸுப்பர் ஹிட் படத்தின் முதல் நாள்  கலெக்கஷனைத் தாண்டியிருக்கும்.
கடந்த ஆண்டு வெளியான் என்னுடைய எப்படி ஜெயித்தார்கள்? இரண்டு பதிப்புகளை தாண்டியிருக்கிறது. இந்த கண்காட்சியில் புதிய
 தலைமுறை ஸ்டாலில் அவர்கள் வெளியிட்ட புத்தக ஆசிரியர்களை நாளொன்றுக்கு ஒருவராக அழைத்து வாசகர்களை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தார்கள். மாலன், பிரபஞ்சன் இறையன்புவரிசையில் என்னையும்அழைத்து கெளரவித்திருந்தார்கள். புத்தக ஆசிரியராக ஸ்டாலில் அமர்ந்து வாசகர்களை சந்தித்தது புதிய  இனிய அனுபவம். ”வாங்காதவர்கள் புஸ்தகத்தோடு நம்மையும் சேர்த்து வேடிக்கை பார்ப்பார்கள்” என்று சுஜாதா சொன்னது நினைவிற்கு வந்தது.
புத்தகம் வாங்கி கையெழுத்து வாங்கியவர்களில் பலர் இந்த தொடரை படிக்காதவர்கள். விமர்சனங்களையும் விளம்பரங்களையும் பார்த்து வாங்கியவர்கள் வங்கி நண்பர்கள், பேராசியர், டாக்டர் என பலவிதமானவர்களை சந்தித்தேன்.. கடந்த வாரம் துவங்கியிருக்கும் தொடர் பற்றி ஒரு பெண்மணி பேசியது ஆச்சரியம்  இந்த வாய்ப்புக்கும் கெளரவத்திற்கும் புதிய தலைமுறைக்கு நன்றி.
ஸ்டாலில் மிக சுறுசுறுப்பாக ”ஒரு புதிய தலைமுறையே” இயங்கி கொண்டிருக்கிறது. திருமதி கீதா விருந்தினர்களை இன்முகத்தோடு வரவேற்று இயல்பாக உரையாடுகிறார்.”கல்வி”யின் இணைஆசிரியர் பொன். தனசேகரணை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. கல்வியின் பழைய இதழ்களை கேட்டு வாங்கிப் போகிறார்கள். ஸேல்ஸ் டீம் விற்பனையோடு நிற்காமல்  கேட்பவர்களுக்கு விபரங்களையும் பொறுமையாக தருகிறார்கள். புதிய தலைமுறையின் வெற்றியில் இந்த இளைஞர் பட்டாளத்திற்கும் ஒரு பங்கு இருப்பது புரிந்தது. நண்பர் ஹரிபிராஸாத் மாலையில் எடுத்து இரவே அனுப்பிய படங்களில் சில இவை.
தாங்க்யூ வெரிமச் ஹரி 
posters/ads





17/1/13

ஒரே ஒரு அடியில் திரும்பி வந்த உயிர்.


கல்கத்தாவிலிருந்து சென்னை வந்த கொண்டிருந்த அந்த விமானத்தில் கிளம்பிய அரை மணிக்குள் ஒரு பயணி மயங்கி விழுந்து நினைவிழந்தார். நாடிதுடிப்பு நின்று உடல் சில்லிட்டு போய்கொண்டிருந்தது.   அந்த பயணியின் கைநாடியில் மட்டுமில்லை கழுத்துபகுதியில் கூட துடிப்பு இல்லை. அவரது மனைவி அழத்தொடங்கிவிட்டார்.

அதிர்ஷ்ட வசமாக அந்த விமானத்தில் கல்கத்தாவில் ஒரு மருத்துவ  மாநாட்டில் பங்கேற்ற பின் சில டாக்டர்கள் சென்னை திரும்பிகொண்டிருந்தனர். அவர்களில் சென்னை லைப்லைன் மருத்துமனை சேர்மன் டாக்டர் ராஜ்குமாரும்  ஒருவர். மரணம் என்றே முடிவு செய்யபட்ட நிலையில் அந்தபயணியின்  நெஞ்சுகூட்டில்  இதயமிருக்கும் பகுதியில் மிக வேகமாக ஒரு அடி போட்டார் டாக்டர். ராஜ்குமார்.  மயங்கிய நிலையிலிருந்த அந்த பயணி துள்ளி எழுந்து உட்கார்ந்தார்நாடித்துடிப்பும் ரத்த அழுத்தமும் நார்மலுக்கு வந்துவிட்டது. தனக்கு நடந்தது பற்றி எதுவும் தெரியாததால்  அருகில் நின்ற டாக்டர்களை பார்த்து திகைத்து போனார். டாக்டர் ராஜ்குமார் கொடுத்த   அந்த பலமான அடி ஒரு அவசர முதலுதவி பயிற்சிடாக்டர்கள் பாஷையில்பெரிகார்டியல் தம்ப்” என்று சொல்லுப்படும் இதை சரியாக சரியான நேரத்தில் சரியாக கொடுக்க தெரிந்திருக்க வேண்டும். மிகமிக அரிதாக இயங்காமல் இதயம் ஒய்வெடுக்க ஆரம்பிக்கும் நிமிடங்களில் அதை எழுப்பி விடும் இந்த அடி முறையை ஆப்ரேஷன் தியட்டர்களில்  மின் இணைப்பிலிருக்கும் அதற்கான கருவிகள் மூலம் செய்வது உண்டு.
”மறு நாள் தான் பயணம் செய்திருக்க வேண்டிய நான் கடைசி நேரத்தில் பயணதிட்டம் மாறி அன்று கடைசி பயணியாக அந்த விமானத்திலேறினேன். ஏறியவுடனேயே ஒரு வயதான பெண்பயணியின் உடல்நிலை பயணத்திற்கு ஏற்றதாக இருக்கிறதா என சோதித்து சொல்லும்படி பைலட் கேட்டுகொண்டார். அவசியமனால் அவரை இறக்கிவிடுப்போவதாகவும் சொன்னார். அந்தபெண்மணியை சோதித்து பயமில்லை பிரயாணம் செய்யலாம்  என்று சொல்லிவிட்டு சீட்டில்  போய் அமர்ந்த அரைமணியில் இது நிகழ்ந்தது.
விமானத்தில் பயணம் செய்வர்கள் இப்ப்பொது ஆண்டுதோறும் அதிகரித்துகொண்டிருக்கின்றனர். அதில் பலர் இதய நோய்களுக்கான அறிகுறிகள் உள்ளவர்கள். அதனால் நமது விமான பணிப்பெண்களுக்கும்,பைலட்டுகளுக்கும் ஹாட்ட்டாக் முதலுதவி பயிற்சிகளும், அந்த கருவிகளை இயக்கும் பயிற்சிகளும் தரப்பட்டு அந்த கருவிகளும் விமானத்தில் வைக்கபடவேண்டும்” என்கிறார் டாக்டர் ராஜ்குமார். இதற்கு அதிகம் ஒன்றும் செலவகாது.
 30000 அடி உயரத்தில் பறக்கும் போது மரணத்தை சந்தித்து  அங்கேயே மறுவாழ்வும்  பெற்ற அந்த பயணியின் தொடர்ந்த சிகிச்சைக்காக  வழியில் புவனேஸ்வரில் விமானத்தை தரை இறக்க தயாராகயிருந்த பைலட்டிடம் டாக்டர்கள் அவசியமில்லை என்று சொல்லும் அளவிற்கு நார்மலாகிவிட்டார் அந்த பயணி.  ஆனாலும் அருகில் டாக்டர்கள் அமர்ந்து இதய துடிப்பை கண்காணித்து கொண்டே வந்தனர். விமானம் சென்னையை அடைந்ததும் அவர் விஜயா மருத்துவ மனைக்கு கொண்டு செல்லபட்டார்.  அவர் அங்கு பணியிலிருக்கும் ஒரு டாக்டர்.
மரண அடி என்று சொல்லக்கேட்டிருக்கிறோம். மரணத்திலிருந்து மீளவும் ஒரு அடி இருக்கிறது என்பது இப்போது தெரிகிறது.  

9/1/13

தெருகூத்தில் ஷேக்ஸ்பியரின் மாக்பெத்.


ஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால்  கடந்த மாதம் அவரின் உலகப்புகழ் பெற்ற மாக்பெத் நாடகம் அந்த அரங்கில் ”தெரு கூத்தாக” போடபட்டது தான் ஆச்சரியம்.
மேடை நாடக்கலையை முறையாக சொல்லிகொடுத்து அதை வளர்ப்பதற்காக  1975ல் உருவானது டெல்லியில்உள்ள தேசிய நாடகபள்ளி. இங்கு மூன்றாண்டு நாடக்கலையை பட்ட படிப்பாக கற்பிக்கிறார்கள். நாட்டின் பல மாநிலங்களின் மரபுகலை நாடக பாணிகளையை அறிவதும், பயிற்சிபெறுவதும் இதில் ஒரு அங்கம், இந்த ஆண்டு இதன் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கபட்டது தமிழ்நாட்டின் பாரம்பரிய நாடக வடிவான  தெருகூத்து. இந்த கலையின் மிக முக்கிய அம்சம் கூத்து கலைஞர்களுக்கு பாடவும் வசனம் பேசும்பொழுதே நடனமாடியேபடி இடம் மாறிக்கொள்வதும். உடல், மனம், குரல் இவைகளை தெருகூத்து அடவுகளுடன் ஒருங்கிணைக்கும் பயிற்சியை இவர்களுக்கு அளித்தவர் புரிசை சம்பந்த தம்பிரான். தமிழக கூத்துகலையின் முன்னோடிகளின் ஐந்தாவது தலைமுறையான இவர் கூத்துபட்டறையில் பயிற்சிபெற்று தெருகூத்து பாணியை செம்மைபடுத்தியிருப்பவர். புராண இதிகாச கதைகள் மட்டுமே நடந்து கொண்டிருந்த கூத்தில் நவீன பாணிநாடகங்களை தெருகூத்தின் மரபுகளை மீறாமல் நிகழ்த்தி புகழ்பெற்றவர். இந்தியாவின் பல இடங்களிலும் பலவெளிநாடுகளிலும் தனது குழுவுடன் நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார். 
இந்த ஆண்டு சங்கீத நாடக அகடமியின் விருது பெறுகிறார். கடந்த ஆண்டு கொலாம்பிய நாட்டில் நடைபெற்ற சர்வதேச பாரம்பரிய நாடகவிழாவில் அவர்கள் நாட்டு புகழ்பெற்ற நாவலாசிரியர் எழுதிய  “மிகபெரிய சிறகுகள் கொண்ட தொண்டுகிழவன்”“என்ற நாடகத்தை தன் தமிழ்நாட்டு மாணவர்களுடன் தமிழில்  நடத்தியிருக்கும் சம்பந்த தம்பிரானிடம் ஸ்பானிஷ் மொழிபேசுபவர்களுக்கு தமிழ் எப்படி புரிந்தது என்று கேட்டபோது கதை தெரிந்தவர்களுக்கு கூத்தின் பாத்திரங்கள் உணர்ச்சிகள் எளிதாக புரியும் அதுதான் கூத்தின் சிறப்பு என்றார்.

இவர் தந்த 40 நாள் பயிலரங்க பயிற்சியில் கூத்துபாணியை கற்று தேசிய நாடகபள்ளி மாணவர்கள் நடத்தியது தான் மாக்பெத்.
டன்கன் என்ற அரசனின் தளபதிகளில் ஒருவன் மாக்பெத். போரில் வெற்றிபெற்ற அவனது வீரத்திற்காக மன்னரால் பாரட்டபட்டபடுகிறான்., அரசனை கொன்று விட்டு ஆட்சியை கைபெற்ற அவனை தூண்டுகிறாள் அவனது பேராசைக்காரியான மனைவி. முதலில் தயங்கிய மாக்பெத் கொலைக்குபின் மன்னனாகிறான். பதவியை தக்க மேலும் ஒரு கொலை என நல்ல திருப்பங்களும் விறுவிறுப்பும் கொண்ட இந்த கதையை ஷேக்ஸ்பியர் மனித மனத்தின் பல்வேறு கூறுகளை, மனவியல் கோணங்களை காட்டி நாடகமாக்கியிருக்கிறார். .
 இதை கூத்துபாணியில் நாடகமாக்குவது எளிதல்ல. அதை மிக திறமையாக நிர்வகித்து நடத்தியவர் தமிழ் நாடக மைய இயக்குனர் சண்முக ராஜவும், பயிலரங்க இயக்குனர் ராஜேந்திரனும். ஒரு புகழ்பெற்ற ஆங்கில நாடகத்தை, கருநீலதிறையின் பின்னணியில் இருவர் மறைத்து பிடித்திருக்கும் துணியின் மறைவில் பாத்திரங்கள் நிற்க கட்டியகாரன் சொல்லும் அறிமுகத்துடனும் தமிழ் பாரம்பரிய இசையுடனும் பார்ப்பது புதிய அனுபவம். மாக்பெத்க்கு கிரிடம் சூட்டும் காட்சியில் கெட்டிமேளம் ஒலித்தது.
.அன்று  நடந்த மாக்பெத் நாடகம் ஹிந்தி மொழியில் என்று அறிவிப்புகளில் சொல்லப்படாதால் தமிழ் நாடகம் என நினைத்து வந்தவர்களில் பலருக்கு  பாத்திரங்கள் பேசியது புரியாத போதும்  அமைதியாக ரசித்துகொண்டிருந்ததைபார்த்த போது சம்பந்த தம்பிரான் சொன்ன கூத்தின் மொழி    புரிந்தது
கல்கி 13/01/13

22/12/12

கிருஸ்மஸ்காக கடவுள் விட்டுவைத்த மரம்


கிருஸ்மஸ்காக கடவுள் விட்டுவைத்த மரம்

நியூயார்க் நகரின் மன்ஹாட்ன் பகுதியின் நடுவில் இருக்கிறது ராக்பெஃல்லர் பிளாசா என்ற சதுக்கம். 20 நெருக்கமான வானாளாவிய உயர்ந்த கட்டிடங்களின் மத்தியில் இருக்கும் இந்த சதுக்கமும் அதன் அருகிலிருக்கும் ராக்பெஃல்லர் சென்டரும் நகரின் முக்கியமான டூரிஸ்ட் ஸ்பாட்கள். ஐக்கிய நாடுகள்சபை அங்கதினர் நாடுகளின், அமெரிக்க மாநிலங்களின் பலவண்ண கொடிகள்  அணிவகுத்து பறக்கும் கம்பங்களின் கிழே மெல்லிய ஒசையுடன் விழும் அருவியின் பின்னிணியில்  தங்கமாக மின்னும் கிரேக்க கடவுளின் சிலை

இந்த இடத்தின் ஹைலைட்.  சிலையின் முன்னேஇருக்கும் ஐஸ் ஸ்கேடிங் மைதானமும் சுற்றியுள்ள  ஷாப்பிங் செண்டர்களும், ரெஸ்டோரண்ட்களும் டூரிஸ்ட்களின் பர்ஸை பாதிக்கும் ஸைடு லைட்.

19/11/12


இந்தியா வந்த

இரும்பு பட்டாம்பூச்சி

திருமதி ஆங்சான் சூ சி, பர்மா என்று நீண்ட நாள் அறியபட்டிருந்த நம் பக்கத்துவீட்டு மியான்மர் நாட்டின் பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர். மியான்மர் நாட்டினையே உலகில் பலர் தெரிந்துகொள்ள காரணமாகயிருந்தவர். காரணம் தன் நாட்டில் ஜனநாயகத்தை நிலை நிறுத்த போராடியதற்காக 15 ஆண்டுகள்   சிறையிலிருந்தவர். சிறையிலிருக்கும்போதே அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கபட்டு, அதை சென்று வாங்க  ஆட்சியாளார்களால் அனுமதி மறுக்கபட்டவர், உலகில் அரசியல் காரணங்களுக்காக நீண்ட நாள் தண்டனை பெற்ற ஒரே பெண்மணி.  மெலிந்த உடல்,மென்மையானகுரல்,67வயது முதுமையை காட்டாத முகம் கொண்ட இவர் பார்க்க பட்டாம்பூச்சியாக இருந்தாலும் இரும்பு மனுஷி.  சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். 19 ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கபட்ட ஜவர்ஹலால் நேரு அமைதி பரிசை பெற்றுகொள்ள மேற்கொண்ட பயணம்.இம்மாதிரி பரிசுகளை ஏற்கும் உரையில் இந்தியாவை புகழ்ந்து தள்ளுவார்கள்.
”அண்ணல் காந்தியடிகளின் வழியில் நேருவை முன்னூதரணமாக கொண்டு நாங்கள் போராடிய காலங்களில் இந்தியா எங்களை கண்டுகொள்ளவில்லை” என்ற இவரது பேச்சு அதிர்வலைகளை உண்டாக்கின,

இந்தியா சுதந்திரபோராட்டத்தை தொடர்ந்து விடுதலை வேட்கை  வேகமாக பரவிய நாடுகளில் அன்றைய பர்மாவும் ஒன்று. அதன் அரசியல் தலைவர்களில் ஒருவர் ஆங் சான். நாட்டை அன்னியர்களிடமிருந்து காக்க வலிமையான  ஒரு ராணுவத்தை உருவாக்க முயன்றுகொண்டிருந்தவர்.ஒரு நாள் படுகொலை செய்யபட்டார். அவருடைய ஒரே மகள்தான்  சூ சி. தாயினால் வளர்க்கபட்ட இவர் வளரும்போதே போராட்டங்கள் பல வற்றை சந்தித்தவர். டெல்லியில் 

10/11/12

பிஹாரிலிருந்து ஒரு பெண் பிரதமர்.

வேர்களைத் தேடி...

(என் சகோதரர் ராஜன் இது பற்றி எழுதலாமே என்று ஒரு பெரிய்ய்ய்ய்ய ஆஞ்னேயரின் படத்தை மெயிலில் அனுப்பியிருந்தார். அது பற்றி செய்த ஆராய்ச்சியில் கிடைத்தது இது)

டிரினிடாட்டூபகோ  (Trinidad and Tobago) ஆப்பிரிக்க கண்டத்தின் வட கோடியில் இருக்கும் சின்னஞ்சிறு  இரண்டு தீவுகள் இணைந்த ஒரு குட்டி நாடு. கர்பீனிய தீவு கூட்டங்களிடையே இருக்கும் இந்த  இயற்கை எழில் கொஞ்சும் தீவுகளின் அழகான கடற்கறையின் இதமான சூழலில்


ஆடம்பரஹோட்டல்களும்,ரிசார்ட்களும் இருப்பதால் பணக்காரர்கள் விரும்பிச்செல்லும் ஒரு சுற்றுலாத் தலம். உலகின் பணக்கார தேசங்களின் பட்டியலில் 40 வது இடத்திலிருக்கும்   இந்த  குட்டி தேசம் நீண்ட காலம் பிரிட்டிஷ் காலனியாக இருந்து சுதந்திரம் அடைந்த்து. சமீபத்தில்  தங்களுடைய 50 வது சுதந்திர  தினத்தை பிரமாதமாக கொண்டாடியது.
  இருநூறு ஆண்டுகளுக்கு முன் இங்கு குடியேற்றப்பட்ட தொழிலாளர்களில் பலர் இந்தியர்கள் அதில் அதிகமானவர்கள் தமிழர்கள்.   இங்கு இந்திய வம்சாவழியில் வந்தவர்கள் பலருக்கு இன்னமும் இந்தியப்பெயர்கள் தொடர்கின்றனநாட்டின் இன்றைய  பிரதமர் தான், அந்த நாட்டின் முதல் பெண்பிரதமர். இந்திய வம்சாவளியில் வந்தவர். பெயர் கமலா. பிரசாத். இவருடைய மூதாதயைர்கள் பிஹார் மாநிலத்தவர்கள். தோட்ட தொழிலாளிகளாக குடியேறியவர்கள்டிரினிடாட்டில் பிறந்து வளர்ந்து லண்டனில் மேற்படிப்புபடித்து  வழக்கறிஞராக வாழக்கையைத் துவக்கி நாட்டின் அட்வேகேட் ஜெனரலாக உயர்ந்தபின்னர் அரசியலுக்கு வந்தவர். எதிர்கட்சி தலைவராக இருந்தவர் 2010ல் நடந்த தேர்தலில் நாட்டின் பிரதமரானார். கணவர்  கிரிகாரிபிஸ்ஸிஸ்ர் (Gregory Bissessar)  பிரபல டாக்டர்.
டிரினிடாட்டில் பல இந்திய வம்சாவளியினர் வாழ்வதால் நிறைய இந்து கோவில்கள் இருக்கின்றன.  தலைநகர் போர்ட் ஆப் ஸ்பெயின் நகருக்கு அருகில்  சாகுணாஸ்(Chaguanes) எனற  நகரின் நடுவில் நிற்கும்  85 அடி ஆஞ்நேயர் மிகவும் பிரபலம்.  இதை வெளிநாட்டு டூரிஸ்ட்களை தவறாமல் அழைத்துவந்து காட்டுகிறது நாட்டின் சுற்றலாதுறை. நாட்டின் 50 வது சுதந்திர நாளான்று எல்லாவழிபாட்டு தலங்களிலும் பிரார்த்தனை செய்யப்பட்டது.  இந்த ஆஞ்நேயர் 2003ல் நிறுவபட்டபோது செய்யபட்டதைப்போல   நாட்டின் 50வது சுதந்திர நாளன்றும் பிரதமர் முன்னிலையில் ஹெலிகாப்டரிலிருந்து பாலாபிஷேகம் செய்திருக்கிறார்கள். இந்த ஆஞ்நேயர் அங்குள்ள பெரிய காரியசித்தி ஆஞ்நேயர் கோவில் முன்னால் கடலை பார்த்த வண்ணம் நிறுவபட்டு  மைசூர் கணபதி சச்சிதினாந்தா ஸ்வாமிகளினால்  முதலில் பூஜிக்கபட்டு அர்ப்பணம் செய்யபட்டிருக்கிறது. கடந்த ஆண்டு நிகழந்த அனுமந்த ஜெயந்தி பூஜைகளில் பிரதமர்  கமலா பங்கேற்றியிருக்கிறார்.

 திருமதி கமலா பிரசாத் இந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவிற்கு தனது வேர்களை தேடி வந்தார். பாட்னா அருகிலிருக்கும்  122 வீடுகளுடன் 900 பேர்களே வசிக்கும்  பேஹல்பூர் என்ற மிக சின்னஞ்சிறிய கிராமம் தான் தன் மூதாதையர்களுடைய ஊர் எனபதை அறிந்து அங்கு தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் சென்றார். சிவப்பு பட்டுச் சேலையும் நெற்றியில் பொட்டுமாக ஹெலிகாப்படரில் வந்து இறங்கிய இவரை முதலில் அந்த கிராம மக்கள் டெல்லியிலிருந்து வரும்ஏதோ ஒரு  அரசியல் வாதி எனறு  எண்ணிவிட்டனர். கிராம தலைவர் சாங்கோபாங்கமாக  இவரது கொள்ளுதாத்தா ராம் லக்கன் மிஸ்ரா  நம்மூர்காரர், 1889ல் கல்கத்தா போய்  கப்பலில் தீவு சீமைக்கு போனதையும் உள்ளூர் உறவையும்,  இப்போது அவர் வகிக்கும் ஒரு நாட்டின் பிரதம்ர் பதவியையும்பற்றி சொன்ன பின்னர்  மக்களுக்கு சந்தோஷம் தாங்கவில்லை, அவரது முன்னோர்வழிஉறவான சின்ன மாமா தாத்தாவின் வீட்டை அடையாளம் காட்டினார்கள்.   கல்பாவிய சின்ன சந்தில் நடந்து அந்த வீட்டுக்கு போனபின் தன் உறவினர்களை அடையாளம் கண்டபோது கண்ணீர் மல்க சொன்னதுஇது என் வாழ்வின் சந்தோஷமான நாள். உலகில் நான் எங்கு இருந்தாலும் என் உடலில் ஓடுவது பிஹாரியின் ரத்தம் எனபதை நான் மறக்க வில்லை.”  பிரதமர் கமலாவிற்கு ஹிந்தி  தெரியாது. ஆங்கிலத்தில்  எழுதி வந்த நமஸ்த்தேபாயி அவுர் பஹனோ, தன்யவாத் போன்றவார்த்தைகளுடன் அவர் ஆங்கிலத்தில் பேசியதை பீஹார் அரசு அதிகாரி மொழிபெயர்த்தார்.  ”என்னுடைய மூதாதையர்கள் இந்த மண்ணிலிருந்து வந்த போது தங்கம்,வெள்ளி பணம் எதுவும் கொண்டுவரவில்லை. தங்கள் உழைப்பை நம்பிய அவர்கள் கொண்டுவந்தது, ரமாயாணம், பகவத்கீதை புத்தகங்கள் தான். அதன் மூலம் எங்களுக்கு இந்த தேசத்தின் மாண்பும் பண்புகளும்  படிப்பின் அவசியத்தோடு கற்பிக்கபட்டது. நீங்களும் உங்கள் குழந்தைகளை நன்றாக படிக்கவையுங்கள். என் பெறோர்கள் எங்களை படிக்கவைத்ததினால் தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன்,” என்ற அவரது  உணர்ச்சி மிகுந்த  பேச்சை கேட்டு நெகிழ்ந்து போன மக்கள்  நீண்ட நேரம் கைதட்டியதோடு ஊர் மக்கள் அனைவரும்   ஹெலிகாப்டர் வரை வந்து வழியினுப்பியிருக்கிறார்கள்.

தனது பரம்பரையின் வேர்களை தேடி இந்தியாவந்து  சுற்றதிடம் தன் நேசத்தை காட்டியிருக்கும் இந்த பெண்மணி  நம் மனதில் அவர்கள் ஊர் ஆஞ்நேயரை விட மிக உயர்ந்தவராக பதிகிறார்