13/6/10

புரியவைக்கிறார்கள்



“இனி எந்த ஒரு ஒவியனாலும் இப்படி ஒரு படைப்பை உருவாக்கமுடியாது.அந்த கண்களும் புன்சிரிப்பும் ஆயிரம் கதைகள் பேசுகின்றன.”                                                                    
“எனக்கென்னவோ அந்த சிரிப்பில் ஒரு சோகம் தான் தெரிகிறது.”
மாடல் - படம் எழுதும்போது கஷ்டத்துடன் உட்கார்ந்திருப்பது அந்த இறுகிய முகத்தைப்பார்த்தால் தெரியவில்லை?”
“அந்த கைகளை அப்படி வைத்துக்கொண்டு சிரிப்பவர்கள் எதையோ மறைக்கிறார்கள் என்று அர்த்தம்”
“அவர் சிரிக்கவேஇல்லை முகத்தில் கோபம் தெரிகிறது”
பாரீஸ் நகரின் லூவர்(LOUVRE Palace)------ அரண்மனையின் அருங்காட்சியகத்தில் ஆண்டுக்கு 50 லட்சம்பேருக்குமேல் பார்க்கும் மானோலீஸாவின் படத்தை பார்த்தவர்களில் சிலரின் விமரிசனம் இவை.ஓவியன் லியோனா டார்வென்ஸியின் இறுதிப்படைப்பான இதன் வரலாறு சுவையானது. கடவுள், மதத்தலைவர்,மன்னர் போன்றவர்கள் மட்டுமே படமாக எழுதப்பட்ட காலத்தில்  500 ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்டு இன்று வரைப்பேசப்படும் ஒரு தனி நபரின் ஓவியம் இது ஒன்று தான். தொங்கவிடப்படும் ஆணியிலிருந்து படத்தின் பிரேம்சட்டம் வரை சிறந்த வல்லுனர்களால் அவ்வப்போது புதுப்பிக்கபட்டு பாதுகாக்கபடும் இந்த ஓவியம் உலகின் சிறந்த கலைப்பொக்கிஷமாக பாதுகாக்கபட வேண்டுமென்று அகில உலக ஒவியர் சம்மேளனத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்றைக்கு  குண்டு துளைக்கமுடியாத கண்ணாடி கூண்டு, 24மண நேர cctகாமிரா கண்காணிப்பு, பல மில்லியன் டாலர்களுக்கு இன்ஷ்யரன்ஸ் என்று பாதுகாப்பாக இருக்கும் இந்த ஒவியம்          1911ம்ஆண்டு காணமல் போயிருக்கிறது. திருடியவர் ஒரு இத்தாலி நாட்டு  சாதாரண ஒவியர். படத்தை பிரதி எடுத்து விற்றுக்கொண்டிருந்தார்.  2 ஆண்டு கழித்து மாட்டிக்கொண்டபோது ‘ஓவியனும், மாடலும் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போது இது பிராண்ஸில் இருப்பது தவறு என்பதால் நம் நாட்டிற்கு கொண்டுவந்துவிட்டேன்’ என்று சொன்னதால் அவரின் தேச பக்தியை பாராட்டி விடுதலை செய்துவிட்டார்கள்.!
படத்தின் இந்த சுவாரஸ்யமான கதைகளைவிட, மானோலீஸாவின் மர்ம புன்னகையைப்ற்றி நடந்த ஆராய்ச்சிகளும், தகவல்களும்  தான் மிக சுவாரஸ்சியமானவை.
 2005ஆம் ஆண்டின் இறுதியில் ஆம்ஸ்ட்டர்டாம் பல்கலைகழகம்(நெதெர்லண்ட்) புகைப்படங்களிலிருந்து அதில் இருப்பவரின் உனர்ச்சிகளை புரிந்துகொள்ள ஒரு மென்பொருளைத்தயாரித்திருந்தது. போட்டோக்களில் பயன் படுத்தி வெற்றிபெற்ற அதை இந்த ஒவியத்தில் பயன் படுத்தி பல நாட்கள் ஆராய்ச்சிக்கு பின்னர் அறிவித்த முடிவு. “மோனாலீஸா புன்னகை சந்தோஷமான புன்னகைதான். அந்த முகம், 83% சந்தோஷம்,9%வெறுப்பு,6%பயம்,2%கோபம் என்ற கலவையில் இருக்கிறது. கண்களின் ஒரத்தில் தெரியும் சிறிய சுருக்கம்,உதடுகளின் மெல்லிய வளைவு எல்லாம்  ஒரு சாராசரிப் பெண் சந்தோஷத்தில் இயல்பாக சிரிக்கும்போது எற்படுபவைதான்”

அறிவிக்கப்பட்ட முடிவு ஒவிய கலைஞர்களிடமும், கலைவிமர்சகர்களிடம் சர்ச்சயை அதிகரிகச்செய்ததே தவிர  இறுதி விடையாக எற்றுகொள்ளபடவில்லை. கடந்த ஆண்டு(2009) அக்டோபர் மாதம் ஸ்பெயின் நாட்டின் நரம்புமண்டல ஆராயச்சியாளார்களின் பயிற்சிக்கூடம் தங்களது ஆராய்ச்சியின்  பல கட்ட சோதனைகளின் முடிவில் மோனாலீஸாவின் புன்னகையின் மர்மத்தைக்கண்டு பிடித்துவிட்டோம். என அறிவித்தது.  “மோனலீஸா புன்னகைக்கிறாரா,இல்லையா என்பது பார்ப்பவரின் கண்களிலுள்ள ரெட்டினா செல்களில் பதியும் பிம்பத்தையும்,அது மூளையைச் சென்று அடையும் பாதயையும் பொறுத்தது.சில சமயங்களில் ஒரு பாதைவழியாகச் செல்லும்போது சிரிப்பதுபோலவும் மற்றொரு சமயம் வேறு பாதைவழியாக பிம்பம் மூளையை அடையும்போது சிரிக்காத மாதிரியும் தெரிகிறது.ஒருவினாடியில் 100ல் ஒரு பங்கு நேரத்தில் இது நடைபெறுகிறது. ஓவ்வொரு மனிதனுக்கும் இது,மாறும்- சில சமயம் ஒரே மனிதருக்கே கூட இரண்டு பாதைகளும் மாறி வேலை செய்யும். அதன் விளவு தான் இந்த தோற்றம்’ என்று சொல்லுகிறார் இந்த ஆராய்சிக்கு தலமையேற்ற லூயிஸ் மார்டின்ஸ் ஓட்டீரோ என்ற நரம்பியல் விஞ்ஞானி. மோனாலீஸாவின் படத்தை பல மாறுபட்ட பெரிய சிறிய வடிவங்களில் வெவ்வேறு தூரங்களிலிருந்து பங்கேற்பவர்களைப் பார்க்கச்செய்து இதை நிருபிக்கிறார்  “ஒரு படத்தின் மிகச்சரியான நடுப்புள்ளியிலஇருந்துதான் பிம்பம் ரெட்டினாவில் பதிய ஆரம்பிக்கிறது.மின்னலைவிட வேகமாக நமது மூளையில் பதிவதற்குள் பாதை மாறினாலோ அல்லது ரெட்டினா சற்றே நகர்ந்தாலோ படத்தின் நடுப்புள்ளி நம்  மூளையில் பதியாது. ஓவியத்தின் சரியான நடுப்புள்ளியில் புன்னகையை எழுதியிருப்பது தான் ஒவியனின் திறமை” என்கிறார். இவர்.
லியானோடார்வென்ஸீ திட்டமிட்டு இதைச் செய்திருப்பாரா? வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் இந்த ஒவியனைப்பற்றி ஆராய்ந்தவர்கள். “ஓவியம்,கட்டிக்டகலை,பொறியில்துறை, வானசாஸ்த்திரம், பூவியல் இப்படி பல துறைகளில் பிறவி மேதையாக, நிபுணராகயிருந்தவருக்கு இது ஒரு பெரிய விஷயமாகயிருந்திருக்காது., இன்றைய முப்பரிமாண(3 –D) படங்கள் பற்றிய அவரது கையெழுத்தில்  எழுதிய குறிப்புகள் கூட  சமீபத்தில் கிடைத்திருக்கிறது”



 
இந்த முடிவிற்கு ஒவிய உலக ஜாம்பவான்கள் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. இந்த விஷயங்களை அறிந்த பின்  மீண்டும் மோனாலீஸா ஒவியத்தைப் பார்க்கும்போது “ஏன் இந்த ஆராய்ச்சியெல்லாம்?” என்ற தொனியில் அவர்  சிரிப்பது போலத்தானிருக்கிறத
(கல்கி13.06.10)
Ka(க்

6/6/10

வரப்போகும் லாமாவிற்காக காத்திருக்கும் பறக்கும் தொப்பி



மாநிலத் தலைநகரின் பிராதான சலையான அது மிகப்பெரியதாக இல்லாவிட்டாலும் பளிச்சென்று படுசுத்தமாக இருக்கிறது அந்த சாலையில் எந்த வாகனத்திற்கும்  அனுமதியில்லாதால்ஹாரன் ஒலியே இல்லை.நடைபாதையில் செல்பவர்களும் மெல்லப்பேசிக்கொள்வதினாலும் எதோ வெளிநாட்டின் நகர் ஒன்றிலிருக்கும்  உணர்வைத்தோற்றுவிக்கிறது அந்த இந்திய நகரம். அந்த சாலையில் துப்பவோ, சுத்தமான சூழ்நிலையை பாதிக்கும் வகையில் எதாவது செய்தாலோ தண்டனை என அறிவிக்கப்பட்டநம் நாட்டின் முதல் தூய்மைப்பிரேதேசம் காண்டாக் நகரம்.
8000மீட்டர் உயரத்தில் இமயத்தின் மடியிலிருக்கும் மாநிலம் சிக்கிம்.மூன்று அயல் நாடுகளின் எல்லையை மாநில எல்லையாக கொண்டிருக்கும் இந்த  குட்டி மாநிலத்தின்(மாநில பரப்பளவே7000 சதுர கீமிதான்)  குட்டி தலைநகர் காண்டாக்.  தலைநகரை இணைக்கும் ரயில் பாதையோ, விமானநிலயமோ கிடையாது.  மாநிலத்தின் பிற பகுதிகளை இணைக்கும் சாலையும்,பஸ் நிலையமும் நகருக்கு வெளியே தான். நகருக்குள் மாருதி வேன்கள் தான் டாக்ஸிகளாக அனுமதிக்கபட்டிருக்கின்றன
பளிங்குவெள்ளையாய் பனி மூடிய  கஞ்சன் ஜிங்கா சிகரத்தின் பின்னணியில்  பரவிக்கிடக்கும் பசுமையை ரசித்தபடி அந்த  மலைநகரத்தில் இதமான குளிரில் நடப்பது சுகமாகயிருக்கிறது வெள்ளை மாளிகையென அழைக்கப்படும் சட்டமன்ற கட்டிடத்தை தவிர சில.சின்ன சின்ன சத்தமில்லாத அரசாங்க கட்டிடங்கள்,ஆடம்பரமில்லாத கடைகள் மலைச்சரிவின் நடுவே ஒருபெரிய கட்டிடத்தினுள்ளே அமைந்திருக்கும்  அழகான ஆர்கிட் வகை பூக்களுக்காகவே (பலநாட்கள் வாடமிலிருக்கும் வகை) நிறுவப்பட்டிருக்கும் தோட்டம், அருகிலேயே நகரைப்பெருமைப்படுத்திய ஒரு நேப்பாள கவிஞரின் சிலையுடன் அழகிய பூங்காமக்கள் மாலைப்பொழுதை  நகர போலீஸ் பேண்டின் இசையுடன் அனுபவிக்க காலரிகள் அமைக்கபட்ட பெரிய சதுக்கம். இப்படி எல்லாவற்றையும்  நடந்தே  4 மணி நேரத்தில் சுற்றிப்பார்த்த பின் நாளை என்ன செய்யலாம் என்பதை பற்றி  அந்த புத்தக கடையில் சுற்றிக் கொண்டிருந்தபோது  பேசிக்கொண்டிருக்கிறோம். அதைக் கேட்ட அந்த  கடையின்(100ஆண்டுகளுக்கும்மேலாக தொடர்ந்து இயங்கி வருகிறது] இன்றைய தலைமுறை உரிமையாளர்   ரூம்டெக் என்ற வரலாற்று சிறப்புமிக்க மிகப் பெரிய புத்த மாடத்தையும் அங்கு நடைபெறும் திருவிழாவையும் பற்றிச் சொல்லி மறுநாள் அதைபார்க்க ஏற்பாடு செய்துகொடுக்கிறார்.
மறு நாள் அழைத்து செல்ல வந்த டாக்ஸிக்கரார் திபெத்தியர்.அந்த மாருதி வேனில் பெரிய அளவில் தலைலாமா படம்,பிரார்த்தனை வாசகங்கள். இங்கு அனேகமாக எல்லா கடைகளிலுமே தலைலாமாவின் படங்கள் அவரை கடவுளாகவே மதித்து வழிபடுகிறார்கள்.திபேத் ஒருநாள் சுதந்திர நாடகிவிடும் என்ற நம்பிக்கயை கைவிடாதிருக்கிறார்கள். அதேபோல சீன கலாசாரத்தின் சாயல் பல இடங்களில் தெரிகிறது.டிரைவர் தனக்கு  உள்ளுர் மொழி தவிர நேபாளிமட்டும் தான் தெரியும் என்பதால் நமக்கு உதவ ஆங்கிலம் தெரிந்த உதவியாளரை அழைத்துவந்திருந்தார்.
நகருக்கு 23கிமீவெளியேஒரு மலைச்சரிவிலில் வனப்பகுதியில்அமைந்திருக்கும் உயிரியல் பூங்காவின் அருகிலிருக்கும் அந்த புத்தமடத்திற்கு சென்ற மோசமான பாதை  நாம் இருப்பது இந்தியா தான், பார்க்கபோவது ஒரு இந்திய கிராமத்தைதான் என்பதை உறுதிப்படுத்தியது.போகும் வழியெல்லாம் பல வண்ணங்களில் கொடிகள். அவைகட்சிக்கொடிகள் இல்லை,அத்துனையும் பிராத்தனைகளுக்காக என்பதையும்,திருமணம், செல்வம் கல்வி உடல்நலம் போன்ற ஒவ்வொன்றிருக்கும் ஒரு வண்ணக்கொடி நடுவார்கள் என்பதையும் கைடு மூலம் அறிகிறோம்

நீங்கள் பார்க்கப்போவது  புத்தமத்தினரின் மிகமுக்கியமானஇடம். புண்ணியம் செய்த புத்தமத்தினருக்கே கிடைக்கும் அறிய வாய்ப்பு.பல நூறு ஆண்டுகளுக்கு முன் கடுந்தவம் செய்து அந்த மடத்தலைவர் தேவதைகளின் ஆசியுடன் பெற்ற இறகு தொப்பி அங்கேயிருக்கிறது. அணிந்துகொண்டவர் எந்த இடத்திற்கும் பறக்கும் சக்தியைப் பெறுவார். மன்னரைவிட உயர்ந்த மடத்தலைவரான லாமா மட்டுமே அதை அணிய முடியும்.  இந்த மடத்தின்  இன்றைய  தலவர் திபெத்திலிருக்கிறார்.அவரோ அல்லது அவரது அடுத்த வாரிசோ வந்து அணிந்துகொள்வார்கள்.”  அங்குள்ள தர்மசக்கரா புத்தமாடத்தில் தேர்ந்தெடுக்கபட்டவர்கள் கடும் பயிற்சிக்கு பின்னர் தான் பிட்சுக்களாக அறிவிக்கபடுவார்கள்.என்ற  அந்த உதவியாளாரின் பில்டப் நம் ஆர்வத்தை அதிகப்படுத்துகிறது.ஓரு மலைப்பதையின் அருகே இறக்கிவிட்ட அவர் இங்கிருந்து நடந்து செல்லுங்கள் நான் புத்த மடங்களுக்குள் வருவதில்லை என்கிறார். மெல்ல நடக்கும் நாம் 10 நிமிடத்தில்  மடத்தின் நுழைவாயிலைப்பார்க்கிறோம். கேரள கோவில்கலின் முகப்பை நினைவுபடுத்தும் பக்கங்களலில் நீண்ட இரண்டு திண்னைகளுக்கு நடுவே உயர்ந்து  சீனப்பாணி வண்ண ஒவியங்களுடன்  நிற்கும் திறந்த மரக்கதவுகள்.நுழைந்தவுடன் நான்குபுறமும் மரக்கூறையுடனும் திண்ணையுடனும் தாழ்வாரம் நடுவில் மிகப்பெரிய முற்றம். முற்றத்தின் நடுவே உச்சியில் விளக்குடன்  உயர்ந்து நிற்கும்  ஒருகல் தூண். மறுகோடியில்   திபெத்திய கட்டிடகலையில் எழுப்பபட்ட நான்கு  அடுக்கு மண்டபம். அடிக்கும் ஆரஞ்சு சிவப்பு, மஞ்சள் வண்ணத்துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.. தாழ்வாரத்தில் காத்திருக்கும் கூட்டத்தில் பல வெளிநாட்டவர்கள்.சில டூரிஸ்ட்கள்,உள்ளுர் மக்கள்.பூஜை துவங்க காத்திருக்கிறார்கள். நடிகர் விஜய் படத்தின்  குருப் நடனகாட்சிக்கு போட்ட செட் மாதிரி இருக்கும் இந்த திறந்த வெளியில் என்ன பூஜை  எப்போது செய்யப்போகிறார்களோ என்று நாம் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட அருகிலிருந்த வெளிநாட்டுகாரார் அப்படியெல்லாம் கமெண்ட் அடிக்காதீர்கள்.இது உலகத்தை தூர் தேவதிகளிடமிருந்து காப்பற்ற அவர்கள் செய்யும் மிக முக்கிய பூஜை.குருவின் அனுமதிக்காக காத்திருக்கிறார்கள். கிடைத்தவுடன் துவக்குவார்கள் என்கிறார். உங்களுக்கு எப்படித்தெரியும் என்ற தொனிதெரிந்த நம் பார்வையை புரிந்துகொண்டு நான் இரண்டு வருடங்களாக ஆராய்சி செய்துகொண்டிருப்பது இவர்களைப் பற்றிதான் என்று அடக்கத்துடன் சொன்ன அந்த அமெரிக்கரை கண்டு ஆச்சரியப்பட்டு. மரியாதையுடன் அறிமுகப்படுத்திகொண்டு  அவர்அருகில் அமர்ந்துகொள்கிறோம். அமெரிக்காவில் அயவோ பல்கலைகழக பேராசிரியாரான எரிக் ரிச்சர்ட் புத்த மதத்தின் பிரிவுகளைப் பற்றி ஆராய்ந்து எழுத வந்திருப்பவர் என அறிந்துகொள்கிறோம்
புத்தர் நிர்வாணம் அடைந்த பின் 100 ஆண்டுகளில் அவரது சித்தாந்த விளக்கங்களில் எற்பட்ட மாறுபட்ட கருத்துக்களினால் புத்தமத்தில் 20க்கு மேற்பட்ட பிரிவுகள் தோன்றின. அவற்றில் 10க்கும்மேல் திபெத்தில் பிறந்தவை. அவைகளில் அழிந்ததுபோக இருக்கும் சிலவற்றில் ஒரு முக்கிய பிரிவு  கார்க்யூப்பா பிரிவு புத்தமதம். மாந்திரிகம், தந்திரம் எந்திரம் போன்றவற்றை போற்றுபவர்கள்.உலகில் எதையும் மந்திரத்தால் சாதிக்கலாம் என நம்புவர்கள்.  தலமைப்பீடம் திபெத்திலிருக்கிறது. சீன ராணுவம் அதை அழித்துவிடக்கூடும் என கருதி அங்கிருந்து கொண்டுவந்திருக்கும் பல பூஜை, தந்திர ரகசியங்களுடன் தலமைப்பீடத்தின் அச்அசலான மாதிரியில் அன்றைய சிக்கிம் அரசரின் ஆசியுடன் இந்த மடத்தை  இங்கு நிறுவியிருக்கிறார்கள்.இது வெறும் மடம் மட்டுமில்லை.புத்தமதத்தின் தத்துவங்களை கற்பிக்கும் கல்விக்கூடம். குருகுல பாணியைப் பின்பற்றி 11ம் நூற்றாண்டிலிருருந்து பாடங்களை வாய்மொழியாகவே கற்பிக்கிறார்கள்.அவசியமானபோது  மடத்தின்  தலைவர் லாமா வருவார்.என பல தவகல்களை பேராசிரியர்  எரிக் தந்தபோது  சந்தோஷமாகவும் வெட்கமாகவும் இருந்தது. சந்தோஷம் தெரிந்துகொண்ட பல விபரங்களுக்காக வெட்கம் புத்தமதத்தை உலகிற்கு தந்தவர்கள் நாம், ஆனால் அதன்  பல விபரங்களை ஒரு அமெரிக்கர் மூலம் அறிந்து கொள்ள நேர்ந்தற்காக.
திடுமென  உரத்து சங்கு ஒலிக்கிறது.  மஞ்சள் ஆடை அணிந்த ஓரு மூத்த பிட்சு கையில் கொண்டுவந்திருக்கும் நீரை முற்றம் முழுவதும்  மந்திர உச்சாடனங்களுடன் இரைக்கிறார். நடுவில் நிறுவப்பட்டிருக்கும் மேடைக்கு மாலை அணிவிக்கிறார். சில வினாடிகளில் பிராதான மண்டபத்திலிருந்து  முற்றத்திற்கு நீல பட்டாடை அணிந்த குழு ஒடி வந்து நடனத்தை துவக்குகிறது. இவர்கள் புத்த பிட்சுக்கள் இது அவர்கள் வழிபாட்டுமுறை. இந்த இசையும் நடனமும் அவர்களுக்கு கற்பிக்கபடுகிறது.என்று விளக்குகிறார் எரிக். குழுவில் சிலர் விதவிதமான முகமூடிகள் அணிந்திருக்கின்றனர்.அவை துர்தேவதைகளாம். இசையின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அவர்களின் நடனம் உக்கிரமாகிறது. மண்டபத்திலுருந்து வினோதமான வடிவில் தங்க வண்ண தொப்பியும் சிவப்பு ஆடையும் அணிந்த பிட்சுக்கள் கைகளில் பலவிதமான சரவிளக்குகளுடனும், சாம்பிராணி புகை கக்கும் குப்பிகளுடனும் அவர்களில் சிலர் ஷனாய் போன்ற கருவியை இசைத்தவண்ணம் ஊர்வலமாக வருகிறார்கள். அவர்களுக்கு காவலாக பெரிய தடிகளுடன் புத்தபிட்சுக்கள்! ருத்திர தாண்டவம் ஆடும் துர்தேவதைகளின் முன் கூடிநிண்று மந்திர உச்சாடனம் செய்து பின் அவை ஒவ்வொன்றாக மயங்கி விழுகிறது.இசையின் வேகம் குறைகிறது. பிராத்தனைக்குபின்னர் புத்தபிட்சுக்கள் மண்டபத்தின் உள்ளே செல்லுகிறார்கள். இசை நிற்கிறது,முதலில் வந்த பிட்சு மீண்டும் வந்து நீர் தெளிக்கிறார்.பூஜைமுடிகிறது, தூண் உச்சியில் எறிந்துகொண்டிருந்த விளக்கு, கிழே ஒரு கவணிலிருந்து இருந்து லாகவகமாக வீசப்படும் கவண் கல்லால் அணைக்கப்படுகிறது.
பிராதான மண்டபத்தினுள் நுழைந்ததும் நம்மை கவர்வது அழகான டிசைன்களுடன் தொங்கும் கண்ணைப் பறிக்கும் பல பட்டு திரைச்சீலைகள் தான். அந்த மடத்தின் கடந்த தலைமுறை மடத்தலைவர்களின் ஒவியங்கள் வண்ண கண்ணாடி விளக்குகள் எனஆடம்பரமாக இருக்கிறது. 1001 குட்டி தங்க புத்தர்கள். நடுவில் பிரம்மாண்டமாக புத்தரின் சன்னதி. அருகில் பிராத்தனை சக்கரங்களை உருட்டிக்கொண்டு பிட்சுகள், இளம் மாணவர்கள்.சுவர்களில் திபெத்திய எழுத்துக்கள். பறக்கும் தொப்பி பற்றி விசாரிக்கிறோம்.அடுத்தஅறையை காட்டுகிறார் ஒரு துறவி. உள்ளே, பட்டு துணியால் மூடப்படிருக்கும் ஒரு அழகான மரபெட்டி.' “தொப்பியை பார்க்கமுடியாதா?” என்ற நமது கேள்விக்கு எடுத்தவுடன் தலைவர் அணிந்துகொள்ள வேண்டிய அதை அவர் இல்லாதபோது எடுத்தால் பறந்துபோய் விடும் என்பதால் திறப்பதில்லை என்ற அந்த இளம் துறவியின் பதிலை கேட்டு நமக்கு சிரிப்பு எழுகிறது.தெய்வ சன்னிதானமாக் போற்றப்படும் அந்த இடத்தின் சூழ்நிலை நம்மைக்கட்டுப்படுத்துகிறது.
மெல்ல இரவு பரவும் அந்த பொழுதில் காண்டக் நகருக்கு திரும்புகிறோம்.  பறக்கும்தொப்பியை பார்க்கமுடியாததைப்பற்றி அந்த கைடு இடம் சொன்னபோது .  தொப்பி இருக்கும் விபரத்தைதான் சொன்னே தவிர  பார்க்க முடியம் என்று    சொல்லவில்லையே   என்ற அசத்தலான பதிலைச்சொன்னவர்  கவலைப் படாதீர்கள் இன்று இரவு கனவில் அதைப் பார்ப்பீர்கள் என்றார்.
நம்புங்கள் அன்று கனவில் அந்த தொப்பி வந்தது.
(கல்கி 06.062010)

பார்த்ததை படங்களுடன் பகிர்ந்து கொள்பவர்
                                                     ரமணன்



                                                                     


                                                                      

23/5/10

சூட் அணிந்த பிசாசுகளை அறிமுகபடுத்துகிறார் இவர்.


சூட் அணிந்த பிசாசுகளை அறிமுகபடுத்துகிறார் இவர்.

ஆங்கில இலக்கிய உலகத்தில் அருந்ததி ராய், விக்ரம்சேத் போன்ற இந்திய படைப்பாளிகள் உலக சாதனைகள் படைத்து வருவதைத்தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக  ஆங்கில புத்தகங்களைநேசிக்கும் இந்திய வாசகர்களுக்காகவே புத்தகங்கள் நிறைய வரத்தொடங்கின. அவைகளின் ஆசிரியர்களில்அதிகம் பேசப்படுபவர் ரவி சுப்பரமணியன். இரண்டாண்டுகளுக்கு முன் இவரின் முதல் புத்தகம் “கடவுள் ஒரு பாங்க்ராக இருந்திருந்தால்..”(if God was a Banker) ஒரு லட்சத்திற்குமேல் விற்பனையாகியிருக்கிறது. ‘தங்க இறகு’ பரிசையும் பெற்றிருக்கிறது. இரண்டு துடிப்பான இளைஞர்கள் ஒரேநாளில் இந்தியாவிலிருக்கும் வெளிநாட்டு வங்கியில் பணியில்சேருகிறார்கள்.எப்படியாவது,எதையாவது செய்து உயரங்களைத்தொட்டுவிடவேண்டும் என்று ஒருவரும், தன் திறமையை மட்டுமே நம்பி தொடர்ந்து  அயராது உழைக்கும் மற்றொருவரும் எப்படி உயருகிறார்கள். இறுதி நிலையில் ஒருவர் மட்டும் எப்படி ஜெயிக்கிறார் என்பது கதை. இதில் கதையைவிட சொல்லப்பட்ட விதம் விவரிக்கபடும் காட்சிகள், இந்தியாவில் செயலாற்றும் அந்நிய வங்கிகளில் நடைபெறும் பலவிதமான விஷயங்களைத் தோலுரித்து காட்டுகிறது.அடுத்த எழுதிய  “நான் வாங்கிய துறவியின் ஃபெராரி”(கார்)  புத்தகம் நல்ல விற்பனையிலிருப்பதைதொடர்ந்து இந்த ஆண்டு தனது மூன்றாவது புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார் ரவி. பெயர் “டெவில் இன் பின்ஸ்ட்ரைப்ஸ்”” (பின்ஸ்டிரைப் என்பது  பெரும்பாலும் பாங்கர்கள் அணியும் மெல்லிய கோடுகளுடன் கூடிய சூட்) சூட் அணிந்த பிசாசுகள்’ என்று சொன்னால் எளிதில் புத்தக தலைப்பு புரியம்.  இந்த புத்தகம் விற்பனையில் முதல் புத்தகத்தை தாண்டிவிடும் என்கிறார்கள்


இந்த புத்தகமும் வெளிநாட்டு வங்கியின் ‘உள் நாட்டு அரசியலை’ அப்பட்டமாக படம்பிடித்துகாட்டுகிறது. உங்கள்புத்தகங்கள் எல்லாமே ஏன் பாங்க் சூழலலிலயே அமைகிறது என்ற கேள்விக்கு இவர் தரும் பதில்.  இன்று இந்தியாவில் வங்கிகள் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு தரும்  ஒரு துறை. மேலும் இன்றைய வங்கிகள்   வாய்ப்புகள், எமாற்றங்கள், ஆச்சரியங்கள், சாதனைகள், சவால்கள் மற்றவர்களின் தொழில் பணம்பற்றிய விபரங்கள்.  திறமைமிக்க அதிகாரிகள் நிறைந்த ,மிகப்பெரிய தொழிலதிபர்களிலிருந்து சாதாரண மனிதர்கள் வரை தவிர்க்க முடியாத  ஒரு இடமாகிவிட்டது. கதைசொல்ல அது  நல்ல களம்.அதைவிட முக்கியமானது அந்த களம் எனக்கு மிகவும் பழக்கமானது. கதைக்கான களத்துக்காகா அதிக ஆராய்சிகள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என சொல்லும் இவர்  ஒரு வெளிநாட்டு வங்கியில் பணியாற்றும் ஒரு அதிகாரி.. “அப்படியானால் எழுதுதில் எந்த அளவு சொந்த அனுபவம்?”




“எழுதியவையெல்லாம் நிகழந்தவையில்லை.  - தங்கள் வாழ்க்கையில் சந்திக்க நேர்ந்த சில நிகழ்ச்சிகளின் நீட்சிகள்தானே எவர் எழுதும் கதைக்குக்கும் கருவாக அமைகிறது. அதுபோல்தான் இதுவும் “ என்று சொல்லும் இவர் IIM பங்களூரில் நிர்வாகயில்  பயின்ற பட்டதாரி. இந்தியாவிலிருக்கும் பல வெளிநாட்டு வங்கிகளில் பல இடங்களில்பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.பயோடெக்னாலாஜி படித்திருக்கும் இவரது மனைவி தரணியும் பணியாற்றுவது வெளிநாட்டுவங்கியில்தான்.இவர்களது ஒரே மகள் அனுஷாவுடன் இப்போது வசிப்பது மும்பையில்.  துவக்கியிருக்கும் அடுத்த நாவளின் பெயர்  “முழுவதும்சரியில்லாத கடவுள்(imperfect God)” “இதுவும் பாங்க்களிலிருக்கும் அரசியல் பற்றிதான். ஆனால் எல்லோரும் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளகூடிய எல்லா நிறுவனங்கலிலுமிருக்கும் கார்பெரேட் பாலிடிக்ஸ் தான்” என்று சொல்லும் ரவி ஆங்கில பத்திரிகைகளிலும் கட்டுரைகள் எழுதுகிறார். “நாவல்கள் எழுதவதைவிட கடினமான,நான் சாதிக்கவிரும்புபம்  ஒரு விஷயத்திற்காக இப்பொது  பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன்” என்று  இவர் சொல்லும் அந்த  ஒரு விஷயம்-  நல்ல சிறுகதைகள் எழுதுவது.
சந்திப்பும் படங்களும்  ரமணன்

kகல்கி 23.05.10



என்ன செய்ய வேண்டும்?


மிக நேர்த்தியாக உள் அலங்காரங்கள் செய்யப்பட்ட அழகானபெரிய அந்த ஹாலில் ரமேஷயையும் சேர்த்து 7 பேர் காத்திருக்கின்றனர்ஒரு புகழ்பெற்ற கார் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவின் அதிகாரிகளுக்கான நேர்முக தேர்வுமுதல் இரண்டு கட்டங்களைத்தாண்டி இறுதித்தேர்வுஅடுத்துவரப்போகும் தன் முறைக்காக காத்திருக்கும் ரமேஷக்கு,புதிய உடையின் கசகசப்பு பழக்கமில்லாத புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் டையின் இருக்கம் எல்லாம்சேர்ந்து அந்த சற்று பதட்டமாக எர்கண்டிஷன் அறையிலும் வேர்ப்பதுபோலிருந்தத்துஅடுத்து நீங்கள் போகலாம் எண்று  ஹாலின் ஒரு கோடியிலிருந்த பெண்மணி  சொன்னதைத்தொடர்ந்து நேர்முகம் நடக்கும் அறையை நோக்கி போகிறார்ரமேஷ்மூடிய கதவுகளிடையே சற்றே இடைவெளி அதன் வழியாக சற்று தயக்கத்துடண்பார்த்து   நின்ற பின்னர் கதவை திறந்துகொண்டு உள்ளே செல்லுகிறார்நேர்முக குழுவின் 3 உறுப்பினர்களும் இவரைபார்த்துக்கொண்டே இருக்கிறார்கள் உட்காரசொல்லவில்லை.நின்றுக்கொண்டேயிருந்த ரமேஷ் தனியே இருக்கும் அந்த் நாற்காலியின் நுனியில் உட்காருகிறார்அரைநிமிடம் நேர்முககுழு எதுவும் கேட்டகவில்லை.. ரமேஷும் எதுவும் பேசவில்லைஒரு கனத்த மெளனத்திற்கு பின்னர் குழுவிலிருந்த ஒருவர் “வெளியே காத்திருக்கும் போது எக்னாமிக்ஸ் டைம்ஸ் பார்த்க்கொண்டிருந்தீர்களே அதில் நீங்கள் படித்த  எதாவது செய்தி பற்றி சொல்ல முடியுமா”? என்றார்தன்னைப்பற்றிஅந்தநிறுவனத்தைபற்றி,இன்றைய கார் மார்கெட் பற்றி எல்லாம் தயாரித்திருந்த ரமேஷ் இந்த கேள்வியினால் ஆடிப்போனார்ரமேஷ் அந்த பேப்பரில் எதுவும் படிக்கவில்லை.சொல்லப்போனால் எக்கானாமிஸ் டைமை முதல் தடவையாக அன்று தான் பார்க்கிறார்.அதனால் பதில் ஏதும்சொல்லாமல் மேஜையில் வைத்த தன் பைலின் மீது   வைத்திருந்த கைவிரல்களை   கோர்த்து கைககளைப்பிசைந்துகொண்டிருந்தார்இவர் பதில் தராததைபற்றி எந்த ரியாக்கஷனும் காட்டாமல் குழுவில் மற்றொருவர் அடுத்த கேள்வியைக் கேட்டார்முதல் கேள்விக்கு தன்னால்  சரியாக பதிலளிக்கமுடியவில்லையே என்ற அழுத்தில் தொடர்ந்த கேள்விகளுக்கும் சரியாக பதில் சொல்ல முடிவில்லைஇள நிலை முதல் வகுப்பு பட்டதாரியாகயிருந்தும்மார்க்கெடிங் பட்டயம் இருந்தும் இந்த நேர்முகத்தினால் முடிவு என்னவாயிருக்கும் என்பதைச்சொல்வேண்டியதில்லை.
இது போன்ற நிகழ்வு நாம் நேர்முகத்தேர்விற்கு போகும்போது நடக்காமலிருக்க என்னசெய்யவேண்டும்என்பதற்கு பதிலாக ரமேஷ் என்ன செய்திருக்கவேண்டும் என்பதைப்பார்ப்போம்.
1.நேர்முகத்தேர்விற்கு புதிய ஆடை அணிந்துசெல்லக்கூடாது.ஏனெனில் நமது கவனம் அதிலிருந்துகொண்டேயிருக்க வாய்ப்பு அதிகம்.  தேர்வு இல்லாத நாளில்டை.ஷு அணிந்து நடந்து பழகிகொள்ளவேண்டும்.
நேர்முகத்தேர்வின் அறையின் நுழையும்முன்கதவு திறந்தேஇருந்தாலும் மெல்ல-(கவனியுங்கள்-மெல்லவிரல்களின் மேல்புறத்தால் தட்டிமை  கமின்?” என்று கேட்டக வேண்டும்அவர்கள் அழைத்துதான் வந்திருந்தாலும் இது ஒரு எதிர்பார்க்கபடும் சம்பிரதாயம்நுழைந்த 10வினாடிக்குள் தேர்வுக்குழு உட்காரச்சொல்லவில்லையாலால்மே  சிட் என்று கேட்டு நன்றாக ஆனால் ஆணவம் தொனிக்காத கம்பீரத்துடன் உட்கார்ந்து கொள்ளவேண்டும்.
3. யார் பேச்சைத்துவக்குவதுநாமாக பேச வேண்டுமானால் என்னபேசவேண்டும்எவருக்கும் எழும் இயல்பான கேள்விகள்தான்இந்த நிறுவனம் தேர்விற்கு வந்தவர் முதலில் பேச வேண்டும் என்பதை தங்களது மெளனத்தின் மூலம் தெரிவித்துவிட்டபின்.”உங்கள் நிறுவனம் இரண்டு கட்டங்களுக்கு பின் என்னை நேர்முகத்திற்கு அழைத்தையே நான் கெளவரவமாக கருதிகிறேன்இந்த தேர்வையும் வெற்றிகரமாக கடந்து நிறுவந்த்தில் சேர காத்திருக்கிறேன்” என்ற ரீதியில் ரமேஷ் பேச்சைத்துவக்கியிருக்கவேஎண்டும்.
அடுத்தது-எக்னாமிக்டைம்ஸ் விஷயம்அந்த நிறுவனத்தின் தேர்வுகுழு  தேர்விற்கு காத்திருப்பவர்களை கூட கவனமாக பார்த்துகொண்டிருந்திருக்கிறது என்பது புரிகிறதுஅப்படியானால் தேர்வு அங்கேயே துவங்கிவிட்டிருக்கிறதுநாம் பேசுவதுசெய்வதுஎல்லாம் மதிப்பிடப்படுகிறது. “ நான் அந்த பேப்பரில் எதுவும்  ஆழ்ந்து படிக்கவில்லைஅருகில் இருந்ததால் எடுத்துப்பார்தேன் அரசியல்,பரபரப்பு செய்திகல்  இல்லாமல் நிறைய மார்க்கெட் செய்திகள் இருப்பதுப்போல் தோன்றுகிறது இனி தொடர்ந்து படிக்கலாம் எனநினக்கிறன்” என்ற உண்மையான பதிலை ரமேஷ் சொல்லியிருக்கவேண்டும்
4. முதல் கேள்வி என்றில்லைஎந்த கேள்விக்குமே பதில் சொல்லமுடியாவிட்டால் அதனால் பாதிக்கப்பட்டுவிடக்கூடாதுஎந்த நேர்முகத்திலும் யாரும் எல்லா கேள்விகளுக்கும் சரியான பதிலைச் சொல்லிவிடமுடியாதுஅதுமட்டுமில்லை தேர்வுகுழுவினரும் ஒரு அல்லது சில கேள்விகளினால்  மட்டுமே முடிவு செய்ய மாட்டார்கள்இங்கே ரமேஷ் பதில் சொல்லாதாதோடு தான் குழப்பமாகிவிட்டதை தனது உடல் மொழியின்( body languge) மூலம் காட்டிவிட்டார்,

எந்த நேர்முகமும் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லமுடியாதுநிறுவனம்,பணியின் தன்மை,தேர்வுகுழுவின் அமைப்பு போன்றவகளினால் மாறுபடக்கூடியது.ஆனால் அழைக்கப்ட்ட நிறுவனத்தின் அமைப்பு  தேர்வானால் செய்ய வேண்டிய பணி பற்றி அறிந்திருந்த ரமேஷ் தன்னை  உடைஅணுகு முறை போன்றவற்றில் தன்னை தயார் படுத்திக்கொண்டிருந்தால் எளிதாக சமாளித்திருப்பார்..மார்க்கெட்டிங் அதிகாரியாக வரப்போகிறவர் தானே முன்வந்து முனைபவராக (proactive) இருப்பதையும்,எளிதாக பேசும் இயல்பு உள்லவராகவும் இருக்கவேண்டும் என அந்த் நிறுவனம் எத்ரி பார்ப்பதில் தவறல்லியேஇப்போது இதற்கு நிறைய புத்தகங்கள்பயிற்சிக்கூடங்கள் வந்துவிட்டனமிக எளிதாக வீட்டிலேயே நண்பர்கள் சகோதரர்கள் முலம் ஒரு மாடல் தேர்வு   கூட நடத்திப்பார்க்கலாம்நண்பர்கள் தெரிந்தவர்கள் எல்லோருடனும் நிறைய பேசி பேசி பழகவேண்டும்இது தன்நம்பிக்கையை வளர்க்கும்.நிறைய படிக்கவேண்டும் அதை நினைவிலும் வைத்துக்கொள்ளவேண்டும்அது தேர்வுகளிலும்  சமயோசிதமாக பதில் சொல்ல கைகொடுக்கும்.
சமீபத்தில் ஒரு வங்கியில் முதல் அதிகாரி நிலையிலிருந்து கிளை மேலாளர் நிலைக்குநேர்முகம். “இதுவரை தனியாக ஒரு கிளையை நிர்வகித்த அனுபமில்லாத நீங்கள் தேர்ந்தெடுக்கபட்டபின் ஒரு கிளைக்கு நிர்வாகியாக அனுப்பட்டால் எப்படி சமாளிப்பீர்கள்?” என்ற கேள்விக்கு தேர்விற்கு வந்தவர் தந்த பதில் “இருபது ஆண்டுகளுக்கு முன்  அதிகாரிநிலையிருந்து தெர்வுபெற்று நீங்கள் ஒரு கிளைப்பொறுப்பேற்று 5மடங்கு அதிகம் பிஸினஸ் செய்துகாட்டியதுபோல நம்பிக்கையுடன் முயற்சிப்பேன்” தேர்வுகுழுவிலுர்ந்து கேள்வியைகேட்ட பொதுமேலாளரிம் முகத்தில் புன்னகைகடந்த ஆண்டு அவர் போதுமேலாளராக தேர்வுசெய்யப்பட்டபோது அந்த வங்கியின் ஊழியர்களுக்கான மாதந்திர மடலில் படத்துடன் வெளியான வாழ்க்கைகுறிப்பிலிருந்த அந்த விஷயத்தை சரியான இடத்தில் சரியானமுறையில் பயன் படுத்திகொண்ட அவர் தெர்வுசெய்யப்போகும் அதிகாரி பற்றிய விபரங்களை சேகரிக்கும் திறன்,  வங்கியின்வெளியீடுகளை படிக்கும் பழக்கும்தனது நினைவாற்றல் போன்ற பல விஷயங்களை ஒரே பதிலில் உணர்த்திய  அவரின் தேர்வுமுடிவு என்னவாகயிருந்திருக்கும் என புரிந்திருக்குமே.
(புதிய தலைமுறை)