24/4/11

இந்தியா ஜெயித்தது.....


இந்தியா ஜெயித்தது.....
ஜெயித்தது கிரிக்கெட்டில் 28 ஆண்டுகளுக்குபின் உலக கோப்பையை மட்டுமில்லை. 43 ஆண்டுகளாக  ஆட்சிகட்டிலில் அமரந்த  அரசுகள் செய்யமல் தட்டி கழித்துகொண்டு வந்த ஒரு விஷயத்தை ஆறே நாட்களில்  எந்த அரசியல் கட்சியின் தயவும் இல்லாமல் “மக்கள் சக்தி” “ யினால் மட்டுமே இந்த அரசை செய்ய வைத்து வெற்றிபெற்றிருகிறார்கள் இந்திய மக்கள். எல்லா கட்சிகளும் தவறாமல் சொல்லிவரும் ஆனால் அதற்காக எதுவும் செய்யாமல் இருக்கும் ஒரு விஷயம் ” “லஞ்ச ஊழல் ஒழிப்பு.” “1968ல் லஞ்சத்தை சட்டபூர்வமாக ஒழிக்க கொண்டுவரபட்ட மசோதா  “லோக்பால்” “ இதன்படி  இது ஒரு தண்டிக்கும் அதிகாரமில்லாத ஆலோசனை வழங்கும் அமைப்பாகயிருக்கும். பிரதமர் உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் மீது மட்டுமே சொல்லப்பட்ட புகார்களை, அவைத் தலைவ்ர் அனுப்பினால் விசாரிக்கும். பொய்புகார் கொடுத்தால் கொடுத்தவர் தண்டிக்க படுவார். இதன் 3 முன்னாள் நிதிபதிகள் கொண்ட உறுப்பினர் குழுவை அரசே  நியமிக்கும்.பிரதமருக்கு எதிராக எழுப்பபடும் புகார் தேசபாதுகாப்பு, வெளிநாட்டு, உள்நாடு பாதுகாப்பு சம்பந்தபட்டதாக இருந்தால் அதைஇந்த  அமைப்பு விசாரிக்கமுடியாது. இப்படி இந்த பல் இல்லாத பாம்பு அமைப்பை கூட சட்டமாக்க தொடர்ந்து  ஆட்சிக்கு வந்த எந்த அரசுக்கும் துணிவில்லை. நடைபெறும் கூட்டதொடரில் நேரமில்லை, எதிர்கட்சிகள் ஒத்துழைக்கவில்லை, சட்ட துறை வல்லுனர்களின் அறிக்கை வரவில்லை என பல நொண்டிசாக்குகள் சொல்ல்லபட்டுவந்தன. ஆனல் இந்த அமைப்பை உருவாக்குவோம் என ஓவொரு தேர்தலிலும் எல்லா கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் முழங்கின.
அன்னாஹஸாரே,  கடந்த ஆண்டு, முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே வழக்கறிஞர் பிராசாந்த் பூஷன்,அரவிந்கெஜிரிவால்(இவர் தகவல் உரிமைக்காக போரடியவர்களில் ஒருவர்) போன்றவர்களின் உதவியுடன் இந்த லோக்பால் மசோதாவை புதிய வடிவில்  ” “ஜன லோக்பால் “ என தயாரித்து பிரதமர் மற்றும் அத்துனை மாநில முதல்வர்களுக்கும் அனுப்பியிருந்தார்.
அந்த வரைவு திட்டத்தின்படி ””” ‘ “லோக்பால்“  சுப்ரீம் கோர்ட், தேர்த்ல் ஆணையம், போல தன்னாட்சி பெற்ற அமைப்பாகஇருக்கவேண்டும். அரசியல் வாதி மட்டுமில்லை, அதிகாரிகள் நிதிபதிகள் எவர்மீது ஊழல் புகார்  இருந்தாலும் விசாரிக்க,புலனாய்வு செய்ய, தண்டனை அளிக்க, ஊழலில் சேர்த்த சொத்துகளை  திருப்பி எடுத்து கொள்ள  என சகல அதிகாரம் கொண்ட ஒரு வலுவான அமைப்பாக இருக்கும். சிபிஐயின் ஊழல் தடுக்கும் பிரிவும் மத்திய கண்காணிப்பு கமிஷனரும் இந்த அமைப்பின் கட்டளைப்படி பணியாற்றுவார்கள்.- என்ற ரதியில் அமைந்திருந்த்து. புதிய மசோதாவை அனுப்பியபின்னர் ”’ பிரதமரிடம் இது குறித்து பேச நேரமும் கேட்டிருந்தனர். இந்த குழுவினர். அரசும் பிரதமர் அலுவலகமும்  இதை பெரிதாக எடுத்துகொள்ளவில்லை.
இந்த நிலையில் பத்திரிகைகளுக்கு அறிக்கைகள், பத்திரிகையாளார் கூட்டம், என்ற  விளமபரம் எதுவுமில்லாமல்  “ஏபரல் 5ல் இதற்காக உண்ணவிரதம் இருக்க போகிறேன், முடிந்தவர்கள் முடிந்த நாட்கள் வரை இணைந்து கொள்ளுங்கள்.உண்ணாவிரத்தோடு  ஊழல் இல்லாத  இந்தியா உருவாக பிராத்தனையும் செய்யுங்கள். பிரதமருக்கு கடிதம் எழுதுங்கள்.அமைதியுடன் போராடுங்கள் அவசியமானால் ஜெயிலுக்கு போகவும் தயாராக இருங்கள். இது நமது இரண்டாவது சுதந்திரபோர். “ என்ற அறிவிப்போடு டெல்லி ஜந்தமந்திர் வளாகத்தில் தன் உண்ணா விரத்தை துவக்கினார் அன்னா ஹஸாரே.
யாருமே எதிர்பாராமல் திடிரென எழுந்த சுனாமியைபோல்   தேசம்முழுவதும் எழுந்தது அன்னாஹாசாரே அலை. முதல் நாள் வெறும் 200 பேருடன் துவங்கிய போரட்டத்திற்கு 3 நாட்களில் டெல்லி மட்டுமிலாமல் நாடு முழுவதும் பல நகரங்களில் உள்ளூர் சமுக ஆர்வலர்கள் உண்ணாவிரத்தை துவங்கிவிட்டனர். போரட்டத்தை வாழ்த்தி தங்கள் ஆதரவை தெரிவிக்க ஊர்வலங்களும், பேரணிகளும் மெழுகுவர்த்திகளுடன் பிராத்தனை கூட்டஙகளும் பல நகரங்களில் எழந்தன. பேஸ்புக் பக்கத்தில் இரண்டுநாளில் 27000 பேருக்குமேல் தங்கள் ஆதரவை பதிவுசெய்தனர். சானல்கள் நேரடி ஓளிபரப்பின. கிரிகெட்டில் உலககோப்பை வெற்றி,  மாநில தேர்தல்கள், எல்லாவற்றையும் ஒதுக்கி தேச்த்தின் எல்லா நாளிதழ்களிலும்  தலைப்பு செய்தியானது இவரது போராட்டம். விஷயம் வேகமாக வீபரிதமான அளவிற்கு வளர்ந்து கொண்டிருக்கிறது எனபதை உணர்ந்த அரசு  உடனடியாக செயலில் இறங்கியது. பிரதமர் அலுவகத்திலிருந்து உண்ணா விரத்தை கைவிட கடிதம் வந்தது. பிரதமர் என்ன எழுதியிருந்தார் எனபது வெளியிட்ப்படவில்லை. ஆனால் அன்னா ஹாஸ்ரேயின் பதிலில் இருந்த வெப்பம் அது என்னவாகயிருந்திருக்கும் என்பதை புரியவைத்தது.  “என்னை வைத்து சதிகாரர்கள் விளையாட நான் என்ன ஒன்றும் தெரியாத குழந்தையாஅப்படியே அது உண்மையானல்லகூட அது ஊழலை ஒழிக்க நீஙக்ள் எந்த முயற்சியையும் எடுக்காமலிருக்க காரணமாகிவிடாது.புதிய வடிவில் இந்த மசோதாவை உருவாக்குவதற்கான் கமிட்டியில்  சமூக ஆர்வலர்கள் அரசியல் வாதிகள் சம அளவில் உறுப்பினார்களாக இருக்க வேண்டும். மசோதா அடுத்த கூட்ட தொடரில் தாக்கல் செய்யபடவேண்டும் அதை நீங்கள் அறிவிக்கும் வரை  நான் உண்ணாவிரத்தை முடிக்க மாட்டேன் என தெளிவாக தெரிவித்தார். சில மணி  நேரங்களில் அமைச்ச்ர் கபில் சிபில் கமிட்டியில் சமபங்களிப்பதில் பிரச்சனையில்லை ஆனால் உண்ணாவிரதபோரட்டம் என்ற பெயரில் கோடிட்ட இடத்தில் அரசங்கம் கையெழுத்திட்ட வேண்டும் என்று கட்டயாப்படுத்துவது நியாமில்லை. லஞ்ச ஊழலை ஒழிக்க அரசு அமைத்திருக்கும் காபினட் அமைச்சர்களின் குழு,  இந்த பிரச்சனையை கவனிக்கும் என்றார். சட்ட அமைச்சர் வீரப்பமொயிலி ” “எங்கள் அலுவலகத்தில் நீங்கள் அனுப்பிய ம்சோதாவை தொலைத்துவிட்டார்கள்“ என்று சொன்னது அன்னாஹஸாரேக்கு மட்டுமில்லை பலருக்கு கோபத்தை உண்டாக்கியது.  “ பல ஆயிரகணக்கான ஏக்கரில் நிலம் வைத்திருக்கும், பெரிய மாபஃபியாகளாக வர்ணிக்கபடுவர்களுடன் தொடர்பிருக்கும், ஐபிஎல், 2ஜி ஊழல்களில் சம்பந்தபட்டவராக சந்தேகபடும் நபர் சரத்பாவர். அவரைப் போன்ற அமைச்சர்களா இந்த ஊழல் ஒழிப்பு மசோதவை தயாரிக்க உதவப்போகிரார்கள் ? என சீறினார் அன்னாஹஸாரே. விளவு மறு நாள் சரத் பாவர்  காபினட் அமைச்சர்களின் குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.  மஹராஷ்டிராவில் நன்கு அறியபட்ட இந்த நேர்மையான மனிதரின்  வார்த்தைகளின் பலம் அவருக்கு தெரியும்.  நமது அரசியல் வாதிகளை நன்றாக அறிந்திருக்கும் இந்த மனிதர்  வாழ்த்து சொல்ல வந்த எந்த அரசியல் வாதியையும் மேடை ஏறவிடவில்லை..ஆதரவை அறிவித்துவிட்டு ஆதரவு தராத கட்சிகளை ஊழலை ஊக்குவிப்பர்கள் என சொல்லி அரசியல் ஆதாயம் தேட முற்படுவார்கள் என்பதால்   முன்னாள் உபி முதலமைச்சர் உமா பாரதி போன்றவர்கள் திருப்பியனபட்டனர். மேதாபட்னாகர், கிரண்பேடி போன்ற அர்சியல் சாயம் இல்லாதவர்க்ளே பேச அனுமதிக்கபட்டனர்.
மறுநாள் காலை சோனியாகாந்தியின் “அன்னாஹஸாரேயின் திட்டஙகளை நான் ஆதரிக்கிறேன். என்ற அறிக்கை அரசின் தரப்பிலிருந்து வந்த முதல் சமாதான அம்பு. இந்த அரசு புதிய ம்சோதாவை உருவாகக  உடனடியாக ஆவன செய்யும் என அறிவித்தார். தொடர்ந்து பரபரவென்று பல சுற்று பேச்சு வார்த்தைகள். சந்திப்புக்கள். இறுதியில் உண்ணாவிரத்தின் 5 வது நாளின் இரவில்  அரசு அவரது அத்தனை கோரிக்கைகளையும் ஏற்று அமைச்சர்கள் பிராணப் முகர்ஜிவீரப்பமொய்லி, அந்தோனி ஆகியோர் அர்சுசார்பில் குழுவில் பங்கேற்பார்கள் என  அதிகார்பூர்வ்மாக் அறிவித்தது. இந்த குழு அன்னாஹஸாரே அறிவிக்கும் மக்கள பிரநிதிகளுடன் இணைந்து ம்சோதா வடிவை ஜுன் மாதத்திற்குள் உருவாக்கி அடுத்தவரும் பாராளுமன்ற கூட்டதொடரில் மசோதாவாக சமர்பிக்கும்.
 பாரளமன்றத்தில் எதிர்கட்சிகளின் சவால்களை, கூட்டணிகட்சிகள் தரும் அழுத்தங்களை, உட்கட்சி பூசல்கலையெல்லாம் சாமர்த்தியமாக சமாளித்த  வல்லமை படைத்த அரசு,  எந்த  அரசியல் கட்சியின் பின்னணியும் இல்லாமல் மக்களை மட்டுமே நம்பி  களத்தில் இறங்கிய ஒரு சத்தியாகிரகியின்  போரட்டத்தில்  தோற்றிருக்கிறது. ஜெயித்த்து  ” “இந்தியா. “சகதிவாயந்தவர்களையும்  வெட்கபடவைக்கும் சக்தி  சத்தியாகிரகதிற்கு உண்டு “(Satyagraha has the power to shame the powerful) என பல ஆண்டுகளுக்கு முன் அண்ணல் காந்தி எழுதியிருப்பது  இன்று   மீ்ண்டும் உண்மையாயிருக்கிறது.

திரு நாராயணமூர்த்தி
 வருடத்திற்கு 20 அல்லது 25 முறை வெளி நாடுகளுக்கு பயணம் செய்யும் இன்போஸிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி  இவர் உலகின் மிக பெரிய நிறுவனங்களின் தலைவர்களை சந்திப்பவர். “ ” ‘கடந்த சில மாதங்களில் நான் வெளிநாட்டில் சந்திக்கும் பெரிய நிறுவன தலைவர்கள் இந்தியாவில் பெருகி வரும் ஊழலைபற்றிதான் அதிகம் பேசுகிறார்கள். நமது  GDP 10% ஆக 150 பில்லியன் அன்னிய முதலீடு நிச்சியம் தேவை. உலகின் பார்வையில் நமது நாணயத்தையும் நிர்வாக்த்திறமையையும் சந்தேககிக்கும் அளவில் நடைபெறும் பெரிய அளவு ஊழல்களினால் அந்த அன்னிய  மூதலீடுகளின் வருகை குறையும். மற்ற நாடுகளைபோல இந்கு ஊழலை தடுப்பதற்கோ கண்காணீப்பதற்கோ ஒரு  நடுநிலையான அமைப்பு கூட இல்லைஎன்பது வருந்த  வேண்டிய விஷயம்’” “  என்று சொல்லும் திரு நாராயணமூர்த்தி இவரது   போராட்த்தை ஆதரித்து இன்றைய சூழ்நிலைக்கு லோக்பால் மிக அவசியம் என அறிவித்திருகிறார்

திரு வினோத் ராய்“.இப்போது அரசாங்கத்தை சுத்தபடுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது அரசு அதுவாகவே ஊழலை ஒழித்துவிடும் என எதிர்பார்ப்பது தவறு அது தன்  பணியை செய்யமுடியாமல் தோற்றுவிட்டது.. அதை திறமையாக பணி செய்யவைக்க வேண்டியவர்கள் மக்கள். நல்ல கருத்துகளை உருவாக்கும்  நாணயமான தலைவர்களால் மக்களிடம் அதை துணிவுடன் சொல்லி பொது கருத்தை உருவாக்கினால் என் போன்ற அதிகாரிகளினால் செம்மையாக பணியாற்ற முடியும். “ என்று பேசியிருப்பவர் மத்திய தணிக்கை குழு தலைவர் வினோத் ராய். இவர் தான் 2ஜி ஊழலினால் நாட்டுக்கு ஏற்பட்ட நஷடத்தை அறிவித்தவர். முன்னாள் ஐ‌ஏ‌எஸ்  அதிகாரிபேசியது CII யின் ஆண்டு கூட்டதில் என்றாலும் இது அன்னா ஹஸாரேயின் அற்போராட்டத்திற்கான ஆதரவு எனபதை எல்லோரும் எளிதில் புரிந்து கொண்டார்கள்.
 அன்னா ஹஸாரேவின் விருப்பபடி  பிரதமர் உள்ளிட்ட அரசியல்வாதி அதிகாரிகள், நீதிபதிகள் மீது வந்த ஊழல் புகார்களை அல்லது கிடைத்த செய்திகளைவைத்து நேரடியாகவே விசாரிக்க, எஃப்‌ஐ‌ஆர் போட தண்டிக்க, ஊழல்செய்த பணத்தை வசூலிக்க  என்று  சர்வ அதிகாரங்களும் மிகுந்த ஒரு அமைப்பாக ஜன்லோக்பால் அமைப்பை  உருவாக்கினால் அது ஜனநாயக அரசாங்கத்திற்கு இணையான மற்றொரு அரசாங்கமாக கூட இல்லை,-ஒரு சூப்பர் அரசாங்கமாவே உருவாகிவிடும் ஆபத்து இருக்கிறது. இது பராளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது. என்று சிலர் காங்கிரஸார் உள்பட பேச துவங்கியிருகிறார்கள். மேலும் 10 பேர் கொண்ட குழுவில் பாதியாக இடம்பெறப்போகும் மக்கள் பிரதிநிதிகளை எப்படி யார் அடையாளம் காட்டபோகிறார்கள். இன்று போராட்டம் செய்ததினால் குழுவில் அவர்களுடைய இடம் ஏகாபத்திய உரிமையாகிவிடாதே? என்கிறார்கள். அரசியல் அமைப்பில் அரசு இயங்கும் முறை பற்றி அதிக அறியாத, அரசியல்  முதிர்ச்சியில்லாத சிலரால் இன்றைய அரசை மிரட்டுவதற்காக எழுப்பபட்ட விஷயமிது என்ற ஒரு கருத்தும் இணையதளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது

இது பற்றி. இவர்களின் கருத்துகளை கேட்டபோது
மக்கள் உரிமை ஆர்வலுரும் வழக்கறிருமான திருமதி சுதா ராமலிங்கம்
“ எந்த புதிய ஒன்றும் -அதுவும் அதனால் சிலருடைய அதிகாரம் பறிக்கபடும் என்ற அச்சம் வரும்போதெல்லாம் இதுபோல பிரசாரம் செய்யப்படுவதும் அதை  பணம், அதிகார பலம் கொண்ட அந்த அதிகாரஙகளினால் சுய லாபம அடைந்த  குழுக்கள் நியாபடுத்துவதும் வாடிக்கையாக போய்விட்டது. குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் வந்த போது இது நமது குடுமப அமைப்பையே சீர்குலைத்துவிடும் எனறு பேசினார்கள். வரதட்சணை தடுப்பு சட்டதிற்கு ஆட்சேபணை சொல்லவில்லையா.? பல ஆண்டுகாலமாக செய்யமுடியாத காரியத்தை ஒருவர் அல்லது ஒருகுழு செய்யும் போது ஆதரித்து வரவேற்கவேண்டும்.
எந்த ஒருகுழுவும் துவக்க்தில் நியமனம் செய்யபட்டவர்களுடன் தான் துவங்க முடியும். கறைபடாதவர்களாக அறியபட்டிருக்கும் அவர்கள் மீது சந்தேக நிழல் விழுந்தால் ம்க்கள் மாற்றிவிடுவார்கள்.  இது மக்கள் சக்தியால் எழுந்தது என்பதால் பெருமிதத்தோடு வரவேற்கிறேன்.” “
-------------------------------------------------------------------------
இப்படி சர்வ சக்தி வாய்ந்த அமைப்பை உருவாக்க்குவதில் சட்ட ரீதியான சிக்கல் எதாவது இருக்கிறதா ? அமைந்தாலும்  அது வெற்றி பெறுமா?
 சட்ட வல்லுனரும், மூத்த வழக்கறிஞருமான திருவிஜயன்
 “சட்டரீதியான் சிக்கல் எதுவுமில்லை. பராளூமன்ற ஜனநாயகத்தில் காலத்தின் தேவைக்கு ஏற்ப  பல டிரிபூனல்கள்,  CAT போன்ற பல அமைப்புகள் உருவாயிருக்கின்றன. சட்ட பிரச்சனையை விடுங்கள். ஏன் இன்று லோக்பால் உருவாகிறது?.  பராளுமன்ற ஜனநாயகம் என்ற  சித்தாந்தத்தில் பாராளுமன்றம் மிக சக்திவாய்ந்த அமைப்பு. அமைச்சர்கள் அதன் முடிவுக்கும் கட்டளைக்கும்  கட்டுபட்டவர்கள். அமெரிக்க காங்கிரஸில் ஆளும் கட்சியின் உறுப்பினர் தன்னிச்சையாக  எந்த ஒரு பிரச்சனையிலும் வாக்களிக்க முடியும். இங்கு கட்சிகட்டுபாடு என்ற பெயரில் ஆளும்கட்சியின் விருப்பமே செயலாகிறது. மெஜாரிட்டி பலத்தினால்   எதிர்கட்சிகளின் முயற்சிகள் முடக்கபடுகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு சிபிஐ போன்ற அமைப்புகள் இயஙக முடியவிலலை. பாராளுமன்ற சித்தாந்தந்தகள் நடைமுறைப்படுத்த்முடியாமல் தோற்றதின் விளைவுகள் தான் மாற்றாக இம்மாதிரி  வலிமையான அமைப்புகள் உருவாக வேண்டியதின் அவசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காரணங்கள் தான் விளைவுகளை உண்டாக்கும். இது ஒரு விளைவு. இது ஒரு இணை அரசாங்கம் ஆகிவிடும்,ஜனநாயகத்தை அழித்துவிடும் என்று சொல்லுவது  எல்லாம் அயோக்கியதனம். சொல்பவர்களீன் சொந்தநலம் பாதிக்கபடுவிடுமோ எனற பயம். லோக்பால் முடிவுகளை செயல் படுத்த தனிபோலீஸ் படை இருந்தால் கூட தவறில்லை.
இந்த அமைப்பு வெற்றிபெறுமா எனபது அதன் தலமையை பொறுத்தவிஷயம். நல்ல ஹெட்மாஸ்ட்டர் இருந்தால் நல்ல ரிஸல்ட் என்பது போல.  ஆனால் இந்தியாவில் அதிகாரவர்க்கம் எப்போது தன்னை காபாற்றிகொண்டுவிடும் சக்க்திபடைத்தது. ஐஏஸ் அதிகாரிகள்,நீதிபதிகள்,அரசியல் வாதிகள் என வர்க்க ரீதியாக அவர்களை காப்பற்றிக்கொள்ளம்படி  நிர்வாகத்தை வளைத்துவிடுவார்கள். இப்படிபட்ட சூழ்நிலையில் இந்த அமைபபு எப்படி இயங்கபோகிறது எனபதை பொறுத்திருந்து தான்  பார்க்கவேண்டும்.  நம் ஜனநாயகத்தில் கட்சி சாராத மக்கள் மிகவும் பாதிக்கபட்டவர்கள். அவர்கள்  என்றாவது எங்கேயாவது  ஒரு விடிவெள்ளி தோன்ற வேண்டும். என விருபினார்கள். அது இப்போது தோன்றியிருக்கிறது. மக்கள் எழுச்சியுடன் வரவேற்கிறார்கள். அந்தவகையில் நானும் வரவேற்கிறேன்.. இந்த அமைப்பிற்கான சட்ட வடிவு வெளியாகும்போது தான் அது குறித்த என் கருத்துகளையோ அல்லது அதன் பிரிவுகளில் மாற்றஙக்ளுக்கான யோசனைகளையோ  சொல்லமுடியும். “
 --------------------------------------------------------------------------------------------------------------------------
நூலாசிரியரும்,தமிழகஅரசியல்கட்சிகளைப்பற்றி ஆராய்ந்துகொண்டிருப்பவருமான  திரு சுப்பு
 தன்னாட்சி அமைப்பாக இயங்கி ஊழலை கண்காணிக்க வேண்டிய   சிபிஐ. சிவிசி போன்ற  அமைப்புகள் ஆட்சியிலிருப்போரின் ஆணைகளுக்கு இயஙக வேண்டிய  இன்றைய  சுழலில் இம்மாதிரி ஒரு  வலிமையான அமைப்பு ஏற்படுத்த வேண்டிய  அவசியத்தில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் அன்னா ஹஸாரே குழுவின் சில கோரிக்கைகளை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. சட்ட வ்டிவை தயாரிக்கும் குழுவில் அரசு தரப்பு உறுப்பினர்கள் அதிகாரவர்கதிலிருந்து இருக்ககூடாது, மூத்த அமைச்சர்களாக இருக்கவேண்டும், சோனியா பங்கேற்தைகூட வரவேற்கிறோம் என்றார்கள். இந்திய அரசியலில் அதிக சர்ச்சையில் சிக்கிய வர் சோனியா. காலையில் ஊழலை ஒழிக்க அன்னா ஹன்ஸாரேவுக்கு ஆதரவு என அறிவித்துவிட்டு மாலையில் கலைஞருடன் சென்னையில் திமுக அணிக்கு ஓட்டுகேட்டவ்ர்.   மேலும் லோக்பால் குழுவில் நோபல் பரிசு பெற்ற இந்தியர், மாகஸே விருது பெற்றவர்கள இருப்பார்கள் என்கிறார்கள். தன் துறையில் விற்பன்னர்களாக இருப்பதினாலேயே அவர்களுக்கு ஊழல் புகார்களை விசாரித்து தீர்ப்பு சொல்லும் திறன் வந்துவிடுமா?. இப்படி சில நெருடலான விஷயங்களை சட்டம் தயாரிக்கும் குழு ஆராய்ந்து சரி செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் நமது அரசியல்வாதிகள் இதையும் ஹைஜாக் செய்து இயங்காமல் செய்துவிடுவார்கள்.
  ==============================================
Ramanan
10/04/11

10/4/11

கலியுக கர்ணன்


கலியுக கர்ணன்


வாரன்பஃபெட் 2008ல் உலக கோடீஸ்வர்களில் முதல் இடத்திலிருந்தவர். பில்கேட்டினால் பின் தள்ளபட்டு இன்று 3 வது இடத்திலிருக்கிறார். அமெரிகாவிலுள்ள ஒம்கா நரில் 1930ல்  சாதரணகுடும்பத்தில் பிறந்த பஃபெட் தன் வயது சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த போது வியாபாரம் செய்து 11வயதிலியே பங்கு சந்தைக்கு அறிமுகமாகி 17 வயதில் 5 ஆயிரம் டாலர் சம்பதித்தவர்.பென்கிராம் என்ற பங்குசந்தை நிபுணரை குருவாக ஏற்ற ஏகலைவன். 1965ல் பெர்க்‌ஷ்யர் ஹாத்வே என்ற டெக்ஸ்டையில் கம்பெனியை வாங்கி அதன் தலையெழுத்தோடு அமெரிக்க பங்கு சந்தையின் பிமப்த்தையும்  மாற்றியவர்.அவரது நிறுவனம் பல துறையில் முதலீடு செய்யது அள்ள அள்ள பணம் என்ற ரீதியில் சம்பாதிக்க துவங்கி 2008ல் உலகின் முதல் பணக்காரானவர். இவரது நிறுவனத்தின் பங்குகளின் விலை ஏற்ற இறக்கம் அமெரிக்க பங்குசந்தையின் குறியீட்டு எண்ணைவிட ஒவ்வொரு நிமிடமும் கவனிக்கபடுமளவிற்கு பிரபலமானது. இவர் தன் நிறுவன முதலீட்டாளாருக்கு எழுதும் கடிதத்தினால்  அமெரிக்க பங்குச் சந்தையின் போக்கு மாறுவதால் உலகமே உற்று கவனிக்கும் இந்த மனிதர் கடந்த வாரம் இந்தியாவிற்கு வந்திருந்தார். அதிபர் ஒபாமாவின் வருகையை காட்டிலும் அதிக ஆர்வத்தை உண்டாக்கியிருந்தது இந்த 80 வயது இளைஞரின் முதல் இந்திய வருகை.
வருகையின் காரணம் பங்களூரில் அவரது  நிறுவன முதலீட்டில் டேக்டெக் என்ற நிறுவனத்தின் துவக்க விழா என்று சொல்லபட்டாலும் இப்போது இந்தியாவில் சூடுபிடித்துவரும் இன்ஷ்யூரன்ஸ்  தொழிலில் அனுமதிக்கபட்ட அன்னிய முதலீடான 26% த்தை 50 % ஆக அரசை உயர்த்த செய்து அதில் நுழைந்துவிடவேண்டுமென்பத்தான்.. கர்நாடக அரசின் விருந்தினராக் கவுரவிக்கபட்ட பஃபெட் பங்களூரில் சிறப்பு அழைப்பாளாக அழைக்கபட்டவர்களின் கூட்டத்தில், நெற்றியில் பளீரென்ற குங்குமப்பொட்டுடன் போட்ட ஒற்றை சர மல்லிகை மாலையை கழட்டாமல்  பேசியதில் கேட்டவை.
Ø  இந்தியாவிற்கு மிக தமாதமாக வந்ததிருப்பதை உணர்கிறேன். வரும் ஆண்டுமுதல் ஆண்டு தோறும் எனது நிறுவனம் இந்தியாவில் பெருமளவில் மூதலீடு செய்யும்.
Ø  ஷேர் மார்கெட்டில் அடுத்தவர்கள் பேராசைப்படும்போது நீங்கள் பயப்படுங்கள். மற்றவர்கள் பயப்படும்போது நீங்கள் பேராசைப்படுங்கள்.
Ø  உங்கள் ஷேர்களின் மதிப்பு  50% விழுந்தால்  பீதி யடையபவரா நீங்கள்? அப்படியானால்  நீங்கள் ஸ்டாக்மார்கெட்டிலிருக்க லாயக்கில்லாதவர்.
Ø  உங்களால் புரிந்துகொள்ள முடியாத பிஸினஸில் முதலீடு செய்யாதீர்கள்
Ø  நானும் இப்போது இந்தியாவிலிருக்கும் நணபர் பில்கேட்டும் இந்திய கோடீஸ்ரர்களை சந்தித்து சம்பாதித்ததில் பெரும்பஙகை சமுதாயத்திற்கே திருப்பி கொடுக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தபோகிறோம்.
Ø  என் சொத்தில்(50பில்லியன் டாலர்கள்- )  99%த்தை என் வாழ்நாளுக்குள் நனகொடைகளாக வழங்க தீர்மானிருக்கிறேன். மீதி என குடுபத்தினருக்கு போதும். அவர்களின் தேவைக்குமேல் விட்டு செல்வது அவர்களுக்கு தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும்.  நான் இவவளவு பணத்தை அறககட்டளைக்கு கொடுத்தாலும் என் சந்தோஷமான வாழ்க்கையையோ எனக்கு பிடிததவவைகளையோ ,என் விடுமுறையையோ  இழக்க போவதில்லை. எனக்கு அதிகமாகயிருக்கும் இந்த பணம் பலருக்கு அவசியமாயிருக்கிறது.
Ø  நணபர் பில்கேட் இதை ஏறகனவே துவக்கி உலகளவில் 25 பில்லியன் டாலர்கள்  கல்வி, மருத்துவம் போன்றவற்றிருக்கு செலவிட்டிற்கிறார்.. நானும் அந்த வழியில் செல்ல விரும்புகிறேன்.
1985-ல்  ஹாத்வே நிறுவனத்தில் சேர்ந்த அஜித் ஜெயின் என்ற இந்தியர். இன்று இவரது நம்பிக்கைக்கு பாத்திரமான இவருக்கு அடுத்த நிலை அதிகாரி.  அஜித்தின் கடின உழைப்பால், திறமையான நிர்வாகத்தால்  பஃபெட்டின் ஹாத்வே நிறுவனக்கு பல மடங்கு பணம் மழையாக் கொட்டியது.பஃபெட்டின் வாரிசாக போகிறவர் என்பது அமெரிக்க பங்குசந்தையின் கணிப்பு. அவரைப்பற்றி பேசும்போது
Ø  அஜித் என்னைவிட மிகததிறமைசாலி. ஹாத்வேக்கு  என்னைவிட அதிகம் சம்பாதித்து கொடுத்தவர். கடுமையான திறமையான, நாணயமான உழைப்பாளி. அவரை எனக்கு தந்ததற்கு இந்தியாவிற்கு நன்றி சொல்லுகிறேன். அவரைபோல இன்னும் ஒருவர் இருந்தால் உடனே என்னிடம் அனுப்புங்கள்.

  

புத்தக அறிமுகம்


நூல் அறிமுகம்

திராவிட மாயை-ஒரு பார்வை                               ஆசிரியர்  சுப்பு.

இருப்பதை மறைப்பது மாயை. இல்லாதை இருப்பதுபோல் காட்டுவதும் மாயயே. முன்னது மெய்மேல் போர்த்திய பொய். பின்னது பொய்யையே மெய்யென காட்டுவது.  இன்று தமிழக அரசியலில் அழியாத இடம்பிடித்து விட்ட,  திமுக விற்கு பிறகு பிறந்த கட்சிகள் விட்டு விடமுடியாத அடைமொழியான “திராவிடம்” “ எனபது ஒரு” பொய்- ஒரு தோற்றுவிக்கபட்ட மாயை அதை திராவிட இயக்கங்கள் விடாப்பிடியாக நிர்வகித்துவருகின்றன எனபதை தனது நீண்ட ஆராய்சிக்கு பின்னர்  இந்த புத்தகத்தில் ஆசிரியர் சான்றாவணங்களோடும், மேற்கோள்களுடனும் விளக்குகிறார். நீதிகட்சி,சுயமரியாதை இயக்கம்,திராவிடர்கழகம், திராவிடமுன்னேற்ற கழகம் குறித்து நேர்மையாக விமர்சனம் செய்யமுடியாத இன்றைய சுழலில், 1917 முதல் 1944 வரையிலான காலகட்டத்தில் தமிழக அரசியலில் ஏற்பட்ட மாறுதல்களின் வாயிலாக “ திராவிட” “ எனற மாயை தோற்றுவிக்கபட்ட வரலாற்றை விவரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.
`திராவிடம் எனபது தமிழ்நாடு மட்டுமில்லை. அது தமிழ்ச்சொல்லுமில்லை. விந்திய மலைக்குதென்புறம் உள்ள நிலப்பகுதியே திராவிடம் என அழைக்கப்பட்டது.1856ல் அதுவரை நிலப்பரப்பை குறிக்கும் சொல்லாக இருந்த  “திராவிட” “என்ற சொல்  கிருத்துவ பாதிரியார் கால்வெல்ட்னிலால் தங்கள் மதத்தை பரப்ப ஒரு  ஆயுதமாக, திராவிட இனத்தை குறிக்கும் சொல்லாக,  மாற்றியமைக்கபட்டிருக்கிறது.  எப்படி அரசியல் லாபங்களுக்காக அந்த  திராவிட இனவாதத்தை ஒரு  அரசியல் கொள்கையாவே அறிவித்து  திராவிட கழகத்தை நிறுவி ஈ.வெ.ரா வளர்த்தார், தொடர்ந்து வந்த அவரது சீடர்கள் எப்படி அந்த மாயயை தொடர்ந்து போற்றினார்கள் எனபதை   பல கட்டுரைகள் விவரிக்கின்றன.
19ம்-மற்றும் 20 ம்நூற்றாண்டு தொடக்க்த்தின் முக்கிய நிகழ்வுகள், தாழ்த்தபட்டோரை திராவிட இயக்கதினர் நடத்திய விதம்,வைக்கம்போராட்டம் பற்றிய உண்மைகள், ஊடகங்களால் உருவாக்க பட்ட மாயை, மகாத்மா காந்தியின் தமிழக விஜயம், இடஒதுக்கீடு வந்த வழி, த்மிழறிஞராக போற்றபடும் கிருத்தவ பாதிரியார் கால்வெல்ட் செய்த ஜாதி அரசியல்,தமிழக் வேளாண்மை பொருளாதாரசூழல், வெகுசன இலக்கியங்கள் ஈவெராவின் பிரமாண எதிர்ப்பு, இரட்டைவேடம் அந்த காலகட்டதில் தேசிய இதழ்களின் போக்கு இப்படி பல விஷயங்களைப்பேசுகிறது இவரது 42 கட்டுரைகள்
தொடர்ந்து வந்த தலைமுறையினர்மீது திணிக்கபட்ட பிராசார பொய்களை அகற்றுவதற்கும் அதை பரப்பிவருவோரின் மூகமூடிகளை களைய முயற்சிப்பதற்கும மிக அசாத்தியமான் துணிவும், உணர்ச்சிவசப்படாமல் அறிவு பூர்வமாக அணுகும் மனப்பான்மையும் ஆதரங்களை அடுக்கும் திறமையும், எவரையும் புண்படுத்தாமல் எழுதும் நாகரிகமும தேவை. அனைத்தையும் இந்த தொகுப்பின் ஆசிரியர் சுப்புவின் எழுத்தில் காணமுடிகிறது. கட்டுரையில் சொல்லப்படும் எந்த விஷயமும் அந்தந்த காலகட்டதில் வந்த பத்திரிகைகளின் தேதி வாரியான செய்திகள் ,பின்னால் அதுபற்றி வெளி வந்த புத்தகங்களளின் பக்கங்கள் வார பத்திரிகைகளின் கட்டுரைகள் போன்ற ஆதாரஙகளுடன்  சொல்லபட்டிருக்கின்றன. இப்படி ஆதாரபூர்வமாக, ஆராய்ச்சிசெய்து எழுதுவதற்காக தன் பணியிலிருந்து 5 ஆண்டுகள் தன்னை விடுவித்துக்கொண்டவர் இவர்.
இந்தியர்கள் எவரும் ஆரியர்களும் இல்லை, திராவிடர்களும் இல்லை என்று மரபணு ஆய்வில் உறுதி செய்யபட்டுவிட்டாலும்,ஆரியம் ஒரு இனம், திராவிடம் ஒரு இனம் எனபதை மானுடவியல் அறிஞ்ர்கள் எவரும் ஏற்றுகொள்ளவிதில்லை என்றாலும்,அம்பேதகாரிலிருந்து சோ வரை  எழுதியிருந்தாலும் பிராசார வலிமை, அரியணை தந்த வசதி, மக்களின் பரவலான அறியாமை, படித்தவர்களின் மெத்தனம், அறிவுள்ளோரின் துணிவின்மை ஆகியவற்றால் திராவிடம் என்ற மாயை வளர்க்கபட்டிருப்பதை புரிய வைக்கிறார்.

மிக சீரியஸான இந்த கட்டுரை தொகுப்பில் சில சுவாரஸியமான, ஆச்சரிய தகவல்களும் சிதறி கிடக்கின்றன. சாம்பிளுக்கு ஒன்று. பக்188
 “இப்பத்திரிகையை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ ஸவாமிகள் போன்ற பெரியார் கிடைத்த்து அஃதெயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகள் அருளாலும் பத்திரிகை  என்றும் நிலைபெற்று மற்ற பத்திரிகைகளிடமுள்ள குறை யாதுமின்றிச் செவ்வனே நடைபெறவேண்டுமாய் ஆசிர்வதிக்குபடி சுவாமிகளை வேண்டுகிறேன் “ கேட்டுகொண்டவர் ஈவெரா. துவக்க விழா நடைபெற்ற பத்திரிகை - குடிஅரசு” – அழைக்கபட்டிருந்தவர் சிவ சண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள் என்ற பெயருடைய ஞானியரடிகள்
குடிஅரசின் மேலட்டையில் “ சாதிகள் இல்லையடி பாப்பா” “ என்ற பாரதியாரின் வரிகள் அச்சிடபட்டிருந்தன.ஆனால் அதற்கு அருகிலேயே ஆசிரியர் பெயர் இருந்தது.ஆசிரியர்கள் இருவர் ஈ.வெ.ராமசாமிநாயக்கர் மற்றும் வ. மு தங்கபெருமாள் பிள்ளை. இராண்டாண்டுகள் பத்திரிகை இப்படி சாதிப்பெயருடன் தான் வந்திருக்கிறது.
தமிழக அரசியலிலிருந்து ” “திராவிட“ என்ற பெயரை அகற்றுவது அவ்வளவு எளிதல்ல.ஆனாலும் உண்மை வரலாற்றை ஆழ்ந்த ஆராய்சிக்கும், கடினஉழைப்புக்கும் பின் வரும் தலைமுறையினருக்காக பதிவு செய்திருக்கும் ஆசிரியரின் பணி பாராட்டுக்குரியது.
R

தேர்தல் 2012


2G ஸ்பெக்ட்ரம் ஊழலினால் தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா?

தேசத்தையே உலுக்கிய நாடுமுழுவதும் எல்லா மீடியாவினாலும் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஊழலாக வர்ணிக்க்பட்ட 2ஜி அலைவரிசை ஊழலின் தாக்கம் எந்த அளவு தமிழக தேர்தலில் இருக்கும் ? ஆட்சி மாற்றம் ஏற்படுமா ?
எதிரணியின் கனவும் கணிப்பும் அதுவாகயிருந்தாலும் இந்திய தேர்தல் சரித்திரத்தை சற்று திருப்பிபார்த்தால் அது வேறுசில விஷயங்களையும் சொல்லுகிறது. ஆரம்ப காலத்திலிருந்தே ஒவொரு தேர்தலின்போதும் ஒரு ஊழல் பிரச்சனை எழுந்து விவாதிக்கபட்டிருக்கிறது. 1980கலின் இறுதியில்  ஃபோபர்ஸ் ஊழல் வெடித்தெழுந்த பின் ௧௯௮௯ தேர்தலில் காங்கிரஸ்கட்சி மிகப்பெரியதோல்வியை சந்த்தித்து ஆட்சியை இழந்தது. அதே நிலை இன்று தமிழக்தில் திமுக விற்கு நேருமா?
அன்றிருந்த நிலையை இன்றைய சூழ்நிலையுடன் ஒப்பிடமுடியாது.  “மிஸ்டர் கீளின் என்ற இமேஜுடன்  ஜீன்ஸ் டீ ஷ்ர்ட் அணிந்த துடிப்பான இளைஞரை முத்லமுறையாக தலைவராக் பார்த்த மக்கள் ஃபோப்ர்ஸ் ஊழலினால் அதிர்ச்சியடைந்தார்கள். அந்த காலகட்டத்தில் அது மக்களுக்கு செய்த துரோகமாக எதிர்கட்சிகள் வர்ணிக்க்பட்டதை மக்கள் எற்றார்கள். இன்று சூழ்நிலை அப்படியில்லை. கடந்த 30 ஆண்டுகளில்  ஊழல் இந்திய அரசியலில் ஒரு அங்கம். எந்தகட்சியும் ஊழலுக்கு விதிவிலக்கு இல்லை எனபதை மக்கள் உணர்ந்து கொண்டுவிட்டார்கள். ஃபோபர்ஸை  தொடர்ந்து பல ஊழல்கள் வெடித்திருக்கின்றன். அதில் பலவற்றை மக்கள் மறந்தே போனார்கள்.அதனால் மத்திய அர்சில் ஆட்சி மாற்றங்கள் நிகழவில்லை.
இந்திய அரசியலில் எந்த ஊழலும் வெளிவந்த  இரண்டாடுகளுக்கு பின் தேர்தல் வந்தால்  அது ஆளும் கட்சிக்கு பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கியதில்லை. தேர்தல் நெருங்கிய காலத்தில் ஊழல் வெடித்தால் அது ஆளும் கட்சியை பாதிக்கும். இந்த தியரியின் படி திமுக இந்த மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்.ஆனால் இந்திய வாக்காளார்கள் ஊழல்களிலும் எது தேசிய மட்ட ஊழல் எது உள்ளுர் சமாசாரம் எனபதை ஆராய்ந்து பார்க்க கற்றுகொண்டுவிட்டார்கள்.  மாநில அளவில் சமப்ந்தபட்ட ஊழல் இருந்தால் அது மாநில, தேசிய அளவிலிருந்தால் பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கிறது. அதிமுகவின் ஆட்சியில் எற்பட்ட டான்சி ஊழல்,சொத்துகுவிப்பு போன்றவை தமிழக தேர்தலில் மாறுதலை ஏற்படுத்தின. ஆனால்  தேசிய பொருளாதாரத்தையே பாதித்த  யூனிட் ட்ரஸ்ட்  பங்குசந்தை, பல்கோடிஹவாலா, எம்பிகள் விலைபேசபட்டது போன்ற ஊழலகள் தொடர்ந்து வந்த தேர்தலகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 1980லிருந்து இதுவரை 73 பெரிய ஊழல்கள் 3 நாள் தலைப்புசெய்தியாக இருந்து பின் மறக்கபட்டிருக்கிறது. உபியில்2500கோடி தாஜ்மஹால் வணிகவளாக ஊழல், தொடர்ந்து வந்த தேர்தல்களில் மயாவதியின் ஆட்சியை பாதிக்கவில்லை. ஜார்கண்டின் முன்னாள் முதல்வர் 4000கோடி ஊழல் அம்பலமாகி கைது வாரண்ட் வெளியிட்பட்டிருக்கும்  நிலையிலும் தனது நண்பர்களுக்காக தேர்தல் பிராசாரம் செய்து அவர்கள் வெற்றிபெறார்கள். பல கோடிகளில் பேசப்ட்ட கால்நடைதீவன் ஊழல் லாலுபிராசத்தின் வளர்ச்சியை தடுக்கவில்லை.
” “ஐந்தாண்டுகளில் அறிவித்த இலவசங்கள், கவர்ச்சி திட்டங்கள் விள்மப்ரங்களுக்கு பின்னும் திமுக இன்று மகககளிடையே 2ஜி ஊழலினால் நம்பிக்கையை இழந்து விட்டது “ என்கிறார்  திருச்சியிலுள்ள தேர்தல் கணிபாளார், மயிவாகனன் தஙகளது கவர்ச்சிகரமான திட்டங்களின் வெற்றிகளினால் ஒட்டுநிச்சயம் என்ற நிலையில் 2ஜி விவகாரம் பின்னைடவை எற்படுத்தியிருக்கிறது என்பதை திமுக உணர்ந்தே இருக்கிறது. அதிமுக விற்கு சாதகமாக அடிக்கும்  இந்த காற்றை, ஜெயலலிதா எப்படி ஊழல் ராணியாக உயர்ந்து சொத்துகுவித்தார் என்ற பழைய கதையைச் சொல்ல ஆர்ம்பித்து திசைதிருப்ப துவங்கியிருக்கிறது. ராஜா தலித் எனப்தால் பழிவாங்கப்ட்டுவிட்டார், அவ்ர் செய்த காரியத்தினால்தான் செல்போனில் 30 பைசாவிற்கு பேசமுடிகிறது எனற ரீதியில் பிரசாரம் துவங்கியிருக்கிறது.
திரு.எம்.ஜி தேவசகாயம் என்ற முன்னாள் ஐஏஸ் அதிகாரி” “நேர்மையான தேர்தல்களுக்கான் அமைப்பில்”””“ அங்கம் வகிப்பவர்.தமிழகம் முழுவதும் பயணம் செய்து நேர்மையான் தேர்தல் குறித்த விழுப்புணர்வை ஏற்படுத்தும் பணியை செய்பவர். அவர் “ 2 ஜி ஊழல் கிராம மக்களுக்கு புரியவில்லை. மீடயாக்கள் சொல்லும் அரசுக்கு எற்பட்டிருக்கும் நஷ்டம், மதிப்பீடுட்டு நஷடம் எனப்தெல்லாம் அவர்களுக்கு புரியவில்லை. கிராமமக்கள் கேட்கும்கேள்வி எபபடி அவ்வளவு பெரிய அளவில்பணத்தை சுருட்டமுடியும்? அவர்கள் பெரிய அளவில் எல்லாம் ஊழல் செய்துவிடமுடியாது என்று நினைக்கிறார்கள். நகர்புற ம்ககளுக்கு நன்றாக விஷயம் புரிந்திருக்கிறது. ஆனால் இந்த படித்த விஷயம் தெரிந்த நகர்புற மக்களில் எத்தனைபேர் தேர்தல் நாளில் ஒட்டுசாவடிக்கு வந்து தங்கள் கடமையை செய்யபோகிறார்கள்? என்கிறார்.
கிராம மக்களை அவ்வளவு எளிதாக மதிப்பிட்டுவிடமுடியாது. ரமாநாதபுரத்திலும், கும்பகோணத்திளும் 2ஜி ஊழலைகாட்டும் கோலபோட்டி,கட்டுரைபோட்டியில் கிராம பெணகளும் மானவர்களும் பெரிய அளவில் பங்குபெற்று அந்த விஷயதை எந்த அளவிற்கு  புரிந்துகொண்டிருக்கிறார்கள் எனபதை காடிட்டினார்கள் எனகிறார் திரு ஆர்  உதய்குமார்.  இவர்  அதிமுக மாநில மாணவர் அணிசெயலாளார்.
2ஜி பிரச்ச்னையில்லாமலேயே, இந்த தேர்தலில் கடுமையான விலைவாசி உயர்வு, பலதுறைகளின்  ஒரு குடும்பத்தினரின்ஆதிக்கம், ஆளுவோருக்கு எதிராக எழும்போக்கு போன்றவைகளினால் திமுகவின் வெற்றி வாய்ப்பு குறைவே. ஆனால்  தமிழக தேர்தலில் எபோதுமே  சில கூட்டல் கணக்குகள் முடிவை நிர்ணயித்திருக்கின்றன. கடந்த தேர்தலின் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் இன்று இருக்கும் அணிகளின் நிலையை கணித்தால் அதிமுக அணிக்கு 43 %மும் திமுக அணிக்கு 47% வ்ருகிறது.  (AIADMK+DMDK+MDMK+LEFT=43.1%,    DMK+CONGRESS+PMK+IUML=47.10)  2 ஜி ஊழலின் பாதிப்பால் குறைந்த பட்சம் இந்த 4% வாக்கார்கள்  மாறுதல் வேண்டி மாற்றி ஓட்டளித்தால் கூட ஆட்சிமாறும் வாய்ப்பு தான் அதிகம்.   
 ரமணன்



3/4/11

தேர்தல் 2012


திமுக ஆட்சியில் தொழில்வளர்ச்சி, வேலைவாய்ப்பு பெருகியிருக்கிறதா?

 நிச்சியமாக இல்லை என்று எதிரணியும். ” “சொன்னதை செய்திருக்கிறோம் “ என்று திமுகவும் சவால்விட்டுகொண்டிருகிறது. உண்மை நிலை என்ன- ஒரு அலசல்.
ஒரு மாநிலத்தின் தொழில் வளர்ச்சி என்பது ஒரிரு ஆண்டுகளில் நிகழந்துவிடக்கூடிய மாயம் இல்லை. தொலைநோக்குடன் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியை  திட்டமிட்டு  செய்யும்  பணிகள் தான் உண்மையான  தொழில் வளர்ச்சிக்கு உதவும். அந்த வகையில் பார்த்தால் முந்தைய அரசுகளைவிட திமுக ஆட்சியில் பல  தொழில்களின் வளர்ச்சிக்கான திட்டங்கள் துவங்கபட்டிருக்கின்றன.
சென்னை இன்று உலகளவில் அறியப்பட்டிருக்கும் ஒரு கார் தயாரிப்பு நகரமாக அறியப்பட்டிருக்கிறது. ஆண்டுக்கு 15 லட்சம் கார்கள் தயாரிக்கப்டுகின்றன. அமெரிக்க மாநில நகரங்களில்கூட இந்த அளவிற்கு வசதி கிடையாது.இந்தியாவில் ஓடும் கார்களில் 30%  வீதமும் அதன் உதிரி பாகங்களில் 35% வீதமும் சென்னையில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகின் முண்ணணி கார் தயாரிப்பு நிறுவனங்களான பிஎம்டபிள்யூ ஹூண்டாய்,போர்டு.நிஸான் மிட்சுபிஷி போன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் வேறுன்னற இந்த அரசும் ஒரு காரணம். இம்மாதிரி பெரிய நிறுவனங்கள் துவக்கதில் சிறிய அளவில் தொழிலை துவங்கி ஒரு காலகட்டம் வரை அரசின் உதவி, இதர சூழ்நிலைகளை பரிசோதித்த பின்னர்தான் நிரந்தரமாக பெரிய அளவில் முதலீடு செய்து வளர்வார்கள். ஆண்டுக்கு 60 ஆயிரம் கார்களை சென்னயில் தயாரிக்கும் போர்ட் நிறுவனம் இன்று 2200 கோடியில் தஙகளது தொழிற்சாலையை விரிவக்க திட்டமிட்டிருக்கிறார்கள். போர்ட் மட்டுமில்லாமல்  ஹூண்டாய், ஜெனரல் மோட்டார்ஸ், பிம்டபிள்யூ போன்ற நிறுவன்ஙள் கடந்த ஆண்டு தங்கள் புதிய மாடல்கார்களை சென்னையில் தயாரித்து உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு அவர்களது உற்பத்திவசதிகள் பெருக்கபட்டிருக்கின்றன. ஆட்டோமொபையில் தொழில்துறை தமிழகத்தில் மிக சிறப்பாக வளர்ந்திருப்பதற்கு அரசின் அணுகுமுறையும், தொழிற்துறை அதிகாரிகளின் திறமையான செயல்பாடுகளும்தான் எனபதை மறுப்பதிற்கில்லை எனபது துறை சார்ந்த வல்லுன்னர்களின் கருத்து. சரி மற்ற துறைகள் ? ஆஙகாங்கே சிறிய அளவில் தொழில்கள் துவங்கபட்டாலும் பெரிய அரசுத்துறை சார்ந்த தொழிற்சாலைகள் துவக்கபடவில்லை. நலிந்து கொண்டிருக்கும்  தொழிற்சாலைகளையும் மேம்படுத்த வழி செய்யப்படவில்லை.மதுரை,திருச்சி,நெல்லை போன்ற துணை நகரங்களில் துவங்க போதாக அறிவிக்கபட்ட மென்பொருள் பூங்காக்கள் இன்னும் துவக்ககட்டதில்தானிருக்கின்றன..  மறைந்த அமைச்சர் மாறனின் கனவு திட்டமான நாங்குநேனேரி பகுதியில் ஒரு சிறப்பு பொருளாதாரமண்டலத்தின் ஆரமப கட்டபணிகள் கூட இன்னும் துவஙகவில்லை.பன்னாட்டு அல்லது பெரிய நிறுவனங்களை வரவேற்பதில் ஆர்வமாகயிருக்கும் தமிழக அரசு, நேரிடையாக அரசின் சார்பில் பெரிய அள்வில் தொழிலகளை துவங்கவில்லை எனபது தான் உண்மை நிலை
வேலைவாய்ப்புகள் பெருகியிருக்கின்றனவா?  அடிக்கடி தொலைகாட்சிகளில் வெளிநாட்டவருடன் கையெழுத்தான ஒப்பந்தங்களை மாற்றிக்கொண்டு கைகுலுக்கும் காட்சிகளைபார்க்கும்போது  கேட்கும் செய்தி “ இதனால் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு “ என்பது.இது எந்த அளவிற்கு உணமை?
அரசின் தொழில் துறையிலிருந்து இதுவரை இம்மாதிரி பெரும் அன்னிய முதலீட்டில் தவ்ங்கபட்ட திட்டங்களினால் வேலைவாய்ப்பை பெற்றவர்களின் விபரங்கள்  தெளிவாக அறிவிக்கபடவில்லை.   “ஆட்டோமொபையில், ரசாயான துறையில் பெரும் வாய்ப்புகள் உருவாகி பல ஆயிரக்கணகானவர்களுக்கு வேலை கிடைத்திருக்கிறது. ஆனால் இம்மாதிரி பன்னாட்டு நிறுவனங்கள் தகுதி/ திறமையின் அடிப்படையில் மட்டுமே வேலைகளை வழங்குவதால் அந்த பகுதி – மக்களுக்கு, தமிழ் நாட்டினருக்க் மட்டும் வேலை வாய்ப்பு என்பது சாத்தியமில்லை” “ என்கிறார் இம்மாதிரி நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டிற்கு ஆலோசனைகள் வழங்கும்  ஒரு வல்லுனர்.
  இருக்கும் அரசின் துறைகளில் வேலை வாய்ப்பு எந்த அளவிற்கு அதிகமாகியிருக்கிறது ?
முந்திய ஆட்சிகாலத்தில் போடப்பட்ட பணிநியமன சட்டம் நீக்கபட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஆன்லைன் பதிவு வசதி அறிமுகபடுத்தபடிருக்கிறது.
போக்குவரத்துதுறையில் டிரைவர் நடத்துனர் பணிகளுக்கு 45000பேர்,, மின்துறையில் 5000 பேர் புதிதாகவும், நிரந்தரமாக்கபட்ட 21000 ஒப்பந்த தொழிலாளர்கள்,. பல நிலைகளில் நியமனம் செய்யபட்ட ஆசிரியர்கள்  இப்படி பல வகைகளில் சுமார் 5 லட்சம் பேர் பணி நியமனம் செய்யபட்டிருக்கின்றனர். இது கடந்தகால ஆட்சியைவிட மிக  அதிகம். ஆனால் தலமைசெயலகம் உள்ளிட்ட பல அரசுத்துறையில் பல ஆயிரக்கணகான பணியிடங்கள் காலியாக உள்ளன.பதிவு செய்த 70 ல்ட்சம் இளைஞ்ர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர்.
 தொழில் வளர்ச்சி,வேலைவாய்ப்பு துறைகளில் திமுக அரசு கணிசமான அளவில் முன்னேறியிருந்தாலும்  பெரும்பகுதியான தொழிலாளார்கள்  நீண்ட காத்திருப்புக்குபின் பெற்ற பணிஆணை,பணிசுமை,நீண்ட நாட்களுக்குபின் நிரந்தரம், பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற்சஙக உரிமைகள் மறுக்கபடுவது, அந்த நிறுவனங்கள் அரசின் ஆதரவோடு செயல்படுவது போன்றவற்றால் நல்ல மனநிலையில் இல்லை என்பதை தொழிற்சங்கத்தினருடன் பேசும்போது உணர முடிகிறது. மொத்த்தில் இந்த் துறைகளில் திமுக அரசு பாஸ் மார்க்கு சற்று மேலாக  பெறுகிறது. ஆனால் ’ “தேர்வில்”’’””“ தேர்ச்சிபெற எல்லா பாடங்களிலும் பாஸாகவேண்டுமே.?

27/3/11

தேர்தல் 2011


அரசியல் கட்சி சாமிகளும்.. தேர்தல் ஆணைய  பூசாரிகளும்...


எந்த பொதுதேர்தலிலும் எல்லா கட்சிகளும் மறக்காமல் தங்கள் தேர்தல் அறிக்கையில்  குறிப்பிடும் ஒரு விஷயம ஆட்சிக்குபின் அவர்கள் ஆட்சி தரபோகும் தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள். ஆனால தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே சுவர் எழுத்து ஓவியர்கள், போஸ்ட்டர் பிரிண்டிங், டிஜிட்டல் பிளக்ஸ் பேனர், ஸ்டிக்கர் கொடிதோரணங்கள் தயாரிப்பு போன்ற சில துறைகளில் பிரமாதமாக வேலைவாய்ப்புகள் உருவாகும் இரவுபகல் கடினமாக உழைக்க வேண்டியிருந்தாலும்  குறுகிய காலத்தில் கணிசமாக காசு பார்க்கலாம் எனபதால்  ஆட்சியில் அம்ரத்துடிக்குக்ம் எதிர்கட்சிகளைவிட இந்த்துறையினர் தேர்தலில் ஆவலாகயிருப்பார்கள். ஆனால் இந்த தேர்தலில் இவர்கள் மிகவும் எமாற்றத்துடனும் வருத்தத்துடனும் இருக்கிறார்கள். அதிக நாட்கள் இல்லாமல் அவசரமாக அறிவிக்கபட்ட தேர்தல் அட்டவணையினால் மட்ட்மில்லாமல் தேர்தல் கமிஷனின் அதிரடியான புதிய கட்டுபாடுகளினால் இந்த துறையினர் ஆடிபோயிருக்கின்றனர்.
மிக லாகவாமாக 1 மணிநேரத்தில் எந்த தமிழக அரசியல் தலைவரையும் கட்வுட் செய்ய வ்சதியாக அழ்காக வரைந்து கொடுக்கககூடியவ்ர் லக்‌ஷமணன். ஓவியத்தை முறையாக பயிலாவிட்டலும் இவரது மற்றும் இவர் சீடர்களின் படத்துக்கும் கட்சிகளிடையே மிகுந்த வரவேற்பு. மாநாடு, கூட்டங்களைவிட தேர்தல்காலங்களில் அதிகம்பேர் வேலைசெய்யும் இவரது ஸ்டூடியோ இன்று காலியாக் கிடக்கிறது. காரணம்- இந்த தேர்தலில் கட் வுட்களுக்கு அனுமதியில்லை. இவரைப்போல் தமிழகம் முழுவதும் வேலையிழந்த ஓவியர்கள் பல ஆயிரத்துக்குமேல் என்கிறார். ”  “ பிளக்க்ஸ் பேனர்கள் வந்த்தலிருந்தே எங்கள் வேலை வாய்ப்பு குறைந்துகொண்டே வந்ததது. இப்போது சுத்தமாக அழிந்துவிட்டது.  சுவரில் எழுதுவத்ற்கும் தடை விதிக்கபட்டிருப்பதால் லெட்டர்ரைட்டிங் ஆர்டிஸ்ட்களுக்கும் வேலையில்லை. உடனடியகாக கிடைப்பதால் சுவரில் ஓட்டக்கூடிய பெரிய சைஸ் வினையல் ஸ்டிக்கர்களையும் ஃபிளக்ஸ் பேனர்களையும் இபோது கட்சிகளும் ஆதரிக்க துவங்கியிருக்கிறார்கள். இந்த தேர்தலில் அவ்ர்களுக்கு தான் நல்ல காலம் “ என்கிறார் அரசியல் கட்சி ஓவியங்களில் 20 ஆண்டு அனுபவம் உள்ள இந்த ஒவியர்.
 “ ஓவிய நணபர் உண்மை நிலமை தெரியாமல் சொல்லியிருக்க்லாம். இந்த தேர்தலில் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் நஷ்டத்தையும் சந்தித்துக்கொண்டிருப்பது  பிளக்க்ஸ் டிஜிடல் ப்ரிண்டிங் துறைதான்.நேரடியாகவும், மறைமுகமாகவும் இன்று தமிழகமுழுவதும் 6 ல்ட்சம் பேர்,  சென்னையில் மட்டும் 10 ஆயிரம்பேர் ஈடுபட்டிருக்கும் இந்த துறையினர் தேர்தல் வேலைகளை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள். தேர்தல் கமிஷனின் கெடிபிகளினால் ஆர்டர் ஏதுவும் வராமல் தவிக்கின்றனர். “ என்கிறார் திரு. எம். ஸ் பஷீர் அஹமது. சில ஆண்டுகளுக்கு முன் மலிவான ரேட்டுகளில் டிஜிட்டல் பிளக்க்ஸ் பேனர்களை தமிழகத்தில் பிரபலமடையச் செய்ததில் இவரது மெகா டிஜிட்டல் நிறுவனத்திற்கு கணிசமான பங்கு உண்டு எல்லா கட்சிகளுக்கும் டிசைன் செய்து ஆல்பமாகவே வைத்திருக்கிறார்கள். தேர்வு செய்தால் மாற்றங்களுடன் உடன்டியாக பேனர்கள் ரெடி..சென்ன நகரில் பல கிளைகளுடன் இயங்கும் இவர்கள் நிறுவனத்திற்கு முந்திய தேர்தலில்களில் கட்சிகளின் தலமையிடத்திலிருந்து பலஆயிரக்கணகான பேனர்கள் த்யாரித்து நேரிடையாக அனுப்ப ஆர்டர்கள் கிடைக்குமாம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை எந்த கட்சியும் அணுகவில்லை.வேட்பாளார் அறிவிப்புக்குபின் அந்தந்த பகுதிகளிலிருக்கும் நிறுவனங்களுக்கு வாய்ப்புகிடைக்கலாம் என்று சொல்லும் பஷீர் அஹமது தமிழக டிஜிட்டல் பேனர் தயாரிப்பு நிறுவனங்களின் சங்கத்தின் மாநில் தலைவர்.  “ எதிர்பாரத கெடுபிடிகள். 12X8 என்பது சதாரணமாக தேர்தல் காலங்களில் த்யாரிக்கபடும் ஸைஸ். இது இபோது தடை செய்யபட்டிருக்கிறது. கலெக்டரிடம் வைக்கும் இடம் அனுமதி பெற்றபின் 10X8 தயாரித்து வைக்கலாம். எவ்வளவு இடம் எப்பொது அனுமதிப்பார்கள்,  இது எந்த அளவிற்கு நடைமுறையில் முடியும் என்று தெரியவில்லை. திமுக போன்ற பெரிய கட்சிகள் தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே தலமை அலுவகத்திலுருந்து கட்சி கூட்டணி தலைவர்கள் பட்த்துடன் பொதுவாக ஆதரவு கோரி பேனர்கள் தயாரிப்பார்கள் இந்த முறை தேர்தல் அறிவித்த நாளிலிருந்தே விதிமுறைகள் அமுல்படுத்த பட்டதாலும்,, பொது இடங்களில் தேர்த்ல் விள்ம்பரம் தடைசெய்யபட்டிருப்பதலூம் அந்த ஆர்டர்களும் இல்லை. டிஸைனர்களுக்கும், மிஷின்களுக்கும் வேலைகொடுக்கவேண்டுமே என்பதால் ஆட்டோவில் ஒட்டும் சிறிய சினிமா போஸ்டர் ஸ்டிக்கர்களும், ரசிகமன்ற வேலைகளை செய்துகொண்டிருகிறோம்.  சதாரணமாக கிடைக்கும் திறப்புவிழா, கட்சி காரர்களின் இல்ல திருமண விழா ஆர்டர்கள் கூட தேர்தல் காலத்தினால் கிடைப்பதில்லை. அதில் தலைவர்கள் படமிருந்தால் தேர்தல்விதிகளின் படி தவறாகிவிடும் என பயப்படுகிறார்கள்” “ என்கிறார் இவர்.
பிள்கஸ்பேனர் த்யாரிப்பவர்கள் நிலை இது என்றால், காலங்காலமாக பயன் படுத்தும் மீடியமான போஸ்ட்டர்கள்  அச்சிடும் பிரிண்ட்டர்களின் நிலை இன்னும் மோசமானதாயிருக்கிறது.  “ தேர்தல் நேரம் என்பது ஆப்செட் பிரஸ்கார்களுக்கு அதிக பிஸினஸ் தரும் நேரம். ஆனால் இந்த ஆண்டு  8 பகுதிகளாக தயாரிக்கும் பெரிய போஸ்ட்டர்களுக்கு தடை.  அதில்8ல் ஒரு பகுதியான அளவில் சிறிய அளவு போஸ்ட்டர்க்ளுக்கே அனும்தி அதுவும் மீட்டிங் நடக்கும் இடதிலிருந்து 200 மீட்டர் தூரத்திற்குள்ளாக போலீஸ் அதிகாரிகளீடம் ஒரு நாள் முன்  அனுமதி பெற்ற பின்னரே என்கிறது விதி. இந்த நிலையில் பெரிய ஆர்டர்களை எப்படி எதிர்பார்க்கமுடியும். ஒரு சின்ன பிட் நோட்டிஸாக யிருந்தாலும் அதில் அச்சிட்ட பிரஸ்ஸின் போன் நம்பர் இடவேண்டும். மேலும் கட்சிகாரர்கள் சொன்னாலும் நீங்கள் செய்யக்கூடாது என நேரிடையாகவே போலீஸ் உதவி கமிஷனர் எங்களை அழைத்து விதிமுறைகளை சொல்லியிருகிறார்.” “ என்கிறார். டைமண்ட்லித்தோ பிரஸ் நிருவன அதிபர் திரு மோகன் சுந்தர். 18 ஆண்டுகள் அச்சுதொழிலில் இருக்கும் இந்த நிறுவனம் நிறைய தேர்தல்களுக்கு போஸ்ட்டர் தயாரித்து கொடுத்தவர்கள். இந்த ஆண்டும்நிறைய டிஸைன்களுடன் காத்திருந்தவ்ர்கள். ” “போஸ்டர் தொழிலில் தேர்தல் முடிந்தவுடனும் நன்றி அறிவிப்பு போஸ்டர் வேலைகள் வரும். இந்த முறை 1 மாதம் கழித்து ரிஸல்ட் வரப்போதால் எந்த அளவிற்கு அந்த வேலைகள் அச்சகங்களுக்கு கிடைக்கும் என தெரியவில்லை இந்த தேர்தலில்  போஸ்ட்டர் அச்சகங்கள் கடந்த முறைகள் போல பெரும் பொருளீட்ட வாய்ப்பில்லை” “ என்கிறார்.
பிரச்சனைகளில் வாய்ப்பை கண்டுபிடிப்பவன் புத்திசாலி எனறு சொல்லப்படுவது உண்டு. சாமி வரங்கொடுத்தாலும் பூசாரி கொடுக்காத கதையாக பணத்தை வாரியிறைக்க கட்சிகள் தயாராகயிருந்தாலும் தடுக்கும் தேர்தல் ஆணையத்தை குறைசொல்லி புலம்பும் இவர்கள் மததியில்  சிவகாசியில் ஒரு சில் அச்சகங்கள் ஓசைப்படாமல் நமது அரசியல் தலிவர்களின் முகங்களை முகமூடியாக் லட்சகணக்கில் தயாரித்து தள்ளிக் கொண்டிருக்கிறது.மேல் நாடுகளில் தேர்தலில் கட்சிகளின் ஆதரவளார்கள் பயன் படுத்தும் முறையிது.தேர்தல் கமிஷன் முகமூடி பற்றி எதுவும் சொல்லாதால் தமிழகத்தில் தயாரிப்பை துவக்கிவிட்டார்கள். இந்திய அரசியல் கட்சிகள் முழுமைக்கும் சிவகாசி இதன் தயாரிப்புகளமானலும் ஆச்சரியமில்லை. இதைபோல திருப்பூரில் ஒரு பிரபலமான கட்சிக்காக் முன்புறம் அதன் த்லைவர் படம்   கட்சியின் சின்னம் பின்னால் கொண்ட காலர் இல்லாத பனியன் டீ சர்ட்டும்களும், சின்னத்துடன் தொப்பிகளும் லட்சககணக்கில் தயாராகிக்கொண்டிருக்கின்றன். தேர்தல் நேரம் நல்ல கோடை காலம் எனப்தால் தொப்பி அணிவதை தடுக்க் முடியாது. மேலும் விதிகளில் தனிநபர் உடைகளுக்கு தடை  ஏதுமில்லையே என்கிறார் அந்த கட்சியின் விளம்பர பொருப்பாளார்.
உடலிலயே பெயிண்ட்டால் சின்னம் எழுதிக்கொண்டு சட்டையில்லமல் நடக்கலாம் என திட்ட்மிட்டிருக்கும் அதிமுக விசுவாசிகள் சிலர் அதை அதன் தலமையலுவலகத்திற்கு அருகில் சமீபத்தில் செய்தும் காட்டினர்.
சாலைசந்திப்புகளில் பிரமாண்ட கட்வுட்கள்,  பத்து அடிக்கு ஒன்றாக பளபளக்கும் டிஜிட்டல் பேனர்கள். தெருமுழுவதும் கட்சிகொடிகள், செவிப்பறையை கிழிக்கும் பிரச்சாரஙகள் இல்லாத ஒரு தேர்தலை தமிழகம் சந்திக்க போகிறதா இல்லை க்டைசிநேரதில் கட்சிகள் விதிகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு நமக்கு பழக்கமான காட்சிகளையே காட்டபோகிறார்களா?
பொறுத்திருந்து பார்ப்போம்

ரம்ணன்.

கொடிகள் கட்டும் “கம்பெனிகள்” “
குடும்பத்தினரை மறந்து கைகாசுபோட்டு டீ யும் பன்னும் சாப்பிட்டு கட்சி கொடிகளை தெருவெல்லாம் கட்டி தொண்டர்கள் தேர்தல் வேலை செய்வதெல்லாம் மெல்ல இப்போது மாறிவருகிறது. இந்த ப்ணிகளை இப்பொது கட்சிகாரகளின் மேற்பார்வையில் பணத்திற்காக  தொழில் ரீதியாக செய்துகொடுக்க எஜென்சிகள் வந்துவிட்டன.
சென்னையின் புறநகர் பகுதியான கேளம்பாக்கத்தில் இப்படிபட்ட பணிகளை செய்யும் நிறுவனத்தினரிடம் பேசினோம்.  மறுப்புக்கும் நீண்ட தயக்கதிற்கும் பின்னர் பெயர், படம் கூடாது எனற நிபந்தைனகளுடன் பேசினார் அதன் நிருவனர்.
” “இன்று கட்சிகள் அவ்ர்கள் தொண்டர்களைவிட இந்த வேலைகளை நாங்கள் செய்வதையே விரும்புகிறார்கள். குறித்த நேரத்திற்குள் போலீஸ் அனுமதி வாங்குவதிலிருந்து அப்புறபடுத்துவது வரை எல்லாம் நாங்கள் பொரபஷனாலாக செய்வது தான் காரணம் “ என்று சொல்லும் இவரிடம் 4 லாரிகள், ஒரு குட்டி டிராக்டர் 5 ஆயிரத்துக்குமேல் ஸ்டீல் பைப்புகள் இருக்கின்றன்..  ஒரு கோடவுன் ஒரு ஆபிஸ் என்று கார்ப்ரேட் ரேஞ்சில் இருக்கிறது. எல்லா கட்சிகளுக்கும் வேலை செய்யும் இவர்களை போன்றாவ்ர்கள்  சென்னையையும் அதன் சுற்றுபுறத்தையும் பகுதி பிரித்துகொண்டிருகிறார்கள். ஒருவர் ஏரியாவில் மற்றவர் வேலை செய்வதில்லை.ஒவ்வொரு கட்சிகளிலும் குறிப்பிட்ட சிலர்தான் இவர்களை தொடர்பு கொள்ளமுடியும். தலைவர்கள் பிறந்த நாள், பொதுகூட்டங்கள் பேரணிகள் என ஆண்டு முழுவத்ற்கும்  இவர்களுக்கு வேலையிருக்கிறது ” “முன்போல் மூங்கில் சவுக்குகட்டை எல்லாம் கொடிகளுக்கு பயன் படுத்துவதில்லை. எல்லாமே ஜிஅய்(GI) பைபுகள் தான். நடுவது எடுப்பது எளிது ரோடுகள் பழாவதில்ல. (!) தேவையான் இடங்களுக்கு லாரிகளில் பைப்புகள் இறக்கப்படும். பின்னாலேயே வரும் இளைஞர்கள் டீம் சிலமணிகளில் தரையில் துளையிட்டு பைப்புகளில் கொடிகளை பொறுத்தி நடுவார்கள். வேகமாக் வேலைகளைச் செய்ய டிரில்லர் போன்ற சாதனங்களும் எல்லா கட்சி கொடிகளும் எங்களிடமிருக்கிறது.” “ என்று சொல்லும் இவரது வருத்தம்  தேர்தல் கமிஷனின் விதிகட்டுபாடுகளினால் இன்னும் சில நூறு பேர்களுக்கு வேலை வழங்கும் வாய்ப்பு இல்லாது போய்விட்டதே எனபதுதான்.