12/8/13

"பேசும்” பொன்னியின் செல்வன்


 ஒரு நல்ல புத்தகத்தை வாசிப்பது என்பது ஒரு சுகமான அனுபவம், அதைவிட சுகமானது அதை யாராவது உணர்ச்சி பொங்க படிக்க, ரசித்து கேட்பது.  கல்கியின் அமர காவியமான பொன்னியின் செல்வனின் அத்தனை கதாபாத்திரங்களும் அவர் எழுதிய வார்த்தைகளை அப்படியே பேசுகின்றன. கதாசிரியரின் வர்ணனைகள் சொல்ல படும்போது அந்த காட்சிகள் கண்முன்னே விரிகிறது ஸ்ரீகாந்த் சீனிவாசா  தயாரித்திருக்கும் ஆடியோ புத்தகத்தில்.  கடந்த சில ஆண்டுகளாக ஆங்கில புத்தகங்களைபோலநல்ல தமிழ் புத்தகங்களும் ஆடியோ புத்தகமாக  சி. டி வடிவில் வெளிவருகின்றன. ஆனால் ஸ்ரீகாந்த் தயாரிப்பு இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யக்கூடிய ஆடியோ புக் வகையைசேர்ந்தது.  
ஸ்ரீகாந்த் அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் சான்பிரான்ஸிஸ் நகரில் கடந்த 20 ஆண்டுகளாக வசிப்பவர். மென்பொருள் நிறுவனத்தில் அதிகாரியாக பணி. பாரதியின் கவிதைகள் நாடகம், தமிழசை போன்ற பலவற்றில் ஆர்வம்கொண்டவர். பாரதி தமிழ் மன்ற தலைவர்.  ”ஸ்ரீ” என்று  பாப்புலராக அறியபட்டிருக்கும் இவரது முகம் மட்டுமில்லை குரலும் அங்கிருக்கும் தமிழர்கள் அனைவருக்கும் பரிச்சியமானது., காரணம்.  நகரிலுள்ள ஸ்டான்போர்ட் பல்கலை கழகம் நடத்தும் பண்பலை ரேடியோ நிலையத்தின் தமிழ் சேவைக்காக ஒவ்வொரு புதன் கிழமையும் 3 மணி நிகழ்ச்சியை தயாரித்து, தொகுத்துவழங்குபவர் இவர்தான். அதில் பாடல். நேர்காணல். நாடகம், தமிழகத்திலிருந்துவரும் பிரமுகர்களின் பேட்டி எல்லாம் உண்டு. கடந்த 11 ஆண்டுகளாக இதை செய்து வருகிறார்.
ஆடியோ புத்தக ஐடியா எப்படி வந்தது? வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் அடுத்த தலைமுறை தமிழை முறையாக கற்பதில்லை. பல குடும்பங்களில்  நன்றாக புரிந்தாலும் கூட தமிழில் பேசுவது கூட குறைந்து வருகிறது.. அவர்களை கவர, படிக்க முடியாத நிலையில் இருக்கும் முதியோரின் வசதிக்காக இதைச்செய்தால் என்ன என்ற எண்ணம் எழுந்தது. தமிழ் மேடை நாடகங்களில் நடித்த அனுபவம், ஆர்வம் நம்பிக்கையை தந்தது. என்று சொல்லுகிறார். ஆடியோ புத்தகம் எனறால் செய்தி வாசிப்பது போலிருக்கும் என்ற  எண்ணத்தை மாற்றுகிறது இவரது படைப்பு.. நாவலின் நடையில், காட்சி விவரிப்புக்கு ஒரு குரலையும், கதாபாத்திரங்கள் பேசுவதற்கு பல வகையான குரல்களையும் பயன்படுத்தி. கல்கியின், "பொன்னியின் செல்வன்' நூலில் வரும், பெண்பாத்திரங்கள் உள்பட  40க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை, இவர் மட்டுமே பேசி அசத்தியுள்ளார். பேசியிருப்பவர் ஒரே நபர் என்பது சொன்னால் தான் தெரியும் அந்த அளவிற்கு பாத்திரங்களுக்கேற்ற கச்சிதமான குரல் மாடுலேஷன்.   நாவல் முழுவதும் பாத்திரங்கள் தொடர்ந்து அதே குரலில் பேசுகிறார்கள்.   75 மணி நேரம் ஓடும் இந்த ஆடியோ புத்தகம் 5 பகுதிகளானது.  இதைப்போல பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம்  ஆடியோ புத்தகங்களையும் தயாரித்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.. நிறைய மனழுத்தம் கொடுக்ககூடிய பரப்பரபான பணியுடனும் பயணங்களுக்குமிடையே  ஸ்ரீகாந்த்தால் இதை எப்படி செய்ய முடிந்த்தது? ஆர்வம், சாதிக்கவேண்டும் என்றவெறி, அன்பு மனைவி ஜானகியின் ஒத்துழைப்பு என்கிறார், வீட்டிலேயே ஒரு சின்ன ஆடியோ ஸ்டுடியோ அமைத்துகொண்டு இரண்டு வருடங்கள் நீண்ட இரவுகளிலும்,அத்தனை விடுமுறைநாட்களிலும் உழைத்திருக்கிறார்.



   ஐ போன், ஐபேட், டேபிளட் என எதில் வேண்டுமானாலும் டவுன்லோட் செய்து கொள்ளகூடிய வசதியுள்ளது.. கட்டணம்? மிக மிக குறைவு, 120 ரூபாய் ஆன்லைனைல் செலுத்தினால்  போதும் ஒரு புத்தகத்தை டௌன்லோட் செய்துகொள்ளாலாம். (www.tamilaudiobooks.com)விற்பனை எப்படியிருக்கிறது? உலகின் பல மூலைகளிலிருக்கும் தமிழர்கள்  வாங்குகிறார்கள். விற்பனையைவிட  “என் தந்தைக்கு அவரது இளமை காலத்தை திருப்பி கொடுத்திருக்கிறீர்கள்”  ஆடியோ புத்தகத்தை கேட்ட  என் அம்மா அழுதுவிட்டார்” போன்ற  வார்த்தைகள் தான் மிகுந்த சந்தோஷத்தை தருகிறது என்கிறார். “ஸ்ரீ” இவரது அடுத்த பிராஜெக்ட் தமிழ் தாத்தாவின் “ என் சரித்திரம்”
கல்கியின் அமர காவியங்களுக்கு தனது குரலால் உயிருட்டி உலகமெங்கும் ஒலிக்க செய்திருக்கும் இந்த மனிதரின்  பணி மகத்தானது.

-ஆதித்தியா (ரமணன்)

8/8/13

“கீதையின் மீது ஆணையாக…..”


60 களின் இறுதியில் அண்ணாமலை பல்கலை கழகத்தில் படித்து மேற்படிப்புகாக டெக்ஸாஸ் பல்கலைகழகத்திற்கு வந்தவர் சொக்கலிஙம் கண்ணப்பன்.நாட்டரசன் கோட்டைகாரர். மேற்படிப்பு  முடித்தபின் அதே மாநிலத்தில் வேலைகிடைத்து பல நிருவனங்களில் பணியாற்றி  இன்று ஒரு பன்னாட்டு பொறியில் நிறுவனத்தில் டிசைன் வல்லூனராக பெரிய பதவியில் இருக்கும் இவர் ” “ஸாம்”“ எனறு மாநில முழுவதும்  பாபுலராக அறிய பட்ட  ஒரு பொறியாளார்.
பல பெரிய நிறுவனங்களுக்கும், நாஸா போன்ற அரசு அமைப்புகளுக்கும் ஆலோசனை வழங்கிவருபவர். உயர் அழுத்ததிலும் பாதுகாப்பாக இயங்க கூடிய குழாய்களை அமைப்பதில் வல்லூரான, அத்துறையில் இவர் எழுதியிருக்கும் புத்தகங்கள் பல்கலை கழங்களில் பாடபுத்தகமாகியிருக்கிறது. செயல்பாட்டுக்காக ஒரு மென்பொருளையும் வடிவமைத்திருக்கிறார்.
டெக்ஸாஸ் அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலம்.  இங்கு பொறியாளார்களாக பணிபுரிய  தகுதி தேர்வு எழுதி லைஸ்சன்ஸ் வாங்க வேண்டும்.இப்போது இதுபோல் அனுமதி பெற்ரிருப்பவர்கள் 57 ஆயிரம்பேர். இந்த தேர்வுகளையும், அனுமதி வழங்குவதையும் செய்வது மாநில அரசின்  (டெக்ஸாஸ் பிரொபஷனல் என்ஞ்னியரிங் போர்ட் (TexasProfessional Engineers Board)  அரசு அமைப்பான இதன் நிர்வாக குழுவின் உறுப்பினாராக சொக்கலிங்கம் கண்ணப்பன் கடந்த ஆண்டு  நியமிக்கபட்டிருக்கிறார். அமெரிக்க பொறியாளார்களிடையே மிக கெளரமான பதவி இது. மாநில கவர்னர் இவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். பொதுவாக இத்தகைய நிகழச்சியில் பைபிளில்மீது கைவைத்தோ அல்லது  நெஞ்சில் கை வைத்தோ தான் பிராமணம் எடுப்பது வழக்கம். மாறாக தன் மனைவி திருமதி மீனாட்சி பகவத் கீதையை நீட்ட அதில் கைவைத்த பின்னர்   கவர்னர்  எட் எமெட் சொன்னதை திருப்பிச்சொல்லி பிரமாணம் எடுத்தார் இவர். இந்திய துணை தூதர், ஜெர்மானிய துணை தூதர், நகர மேயர், நாஸா உயர் அதிகரிகள் பங்கு கொண்ட  இந்த விழாவில் கீதைபற்றி அறியாதவருக்கும் அது பற்றி சொல்லபட்டது. விரைவில் இந்த அமைப்பின் தேசீய குழுவிற்கு செயலாளாராகவிருக்கிறார்.

தன் துறையில் விற்பன்னராகயிருக்கும், ஸாம்  பல இந்திய, தமிழ் அமைப்புகளின் பொறுப்பிலிருந்து அவை வளர உதவியிருக்கிறார். ஹூஸ்டனிலுள்ள  மிகப்பெரிய மீனாட்சி கோவிலை நிறுவியவர்களில் இவரும் ஒருவர்.  அமெரிக்க நகரங்களில் இந்தியர்கள் கோவில்களையோ கலாசாரமையங்களையையோ நிறுவ விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார். இன்று அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் மூன்றாம் தலைமுறையை தொட்டுக்கொண்டிருக்கும் நிலையில் அங்கு வாழம் இந்துகளின் இறுதிசடங்குகள் செய்ய உதவும் குறிப்பேடும் தயாரித்திருக்கிறார்.

தன் தொடர்புகளால் பெரிய அளவில் நிதி திரட்டுவதில்  மன்னரான இவர்  தமிழ் அமைப்புகளுக்கு மட்டுமில்லாமல்  அமெரிக்காவை காத்தீரினா புயல் தாக்கியபோது  நிவாராண திரட்டிகொடுத்து உதவி தாய்நாட்டைப்போல,  வாழும் நாட்டையும் நேசிப்பவர்.



3/8/13

மொட்டை “ பாஸ்”

ஆதித்தியா
 அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்புஷ் இப்போது  டெக்ஸாஸ் மாநிலத்தில் ஹூயூஸ்டன் நகருக்கு அருகே வசிக்கிறார்.   முன்னாள் அதிபர்களுக்கான உரிமைகளில் ஒன்று  முழுநேர செக்யூரிட்டி.. அதற்காக ஒரு சிறிய ரகசிய உளவுப் படைப்பிரிவு இயங்குகிறது, அந்த குழுவில் ஒருவரின் மகன் பாட்ரிக்.   வயது இரண்டு. சமீபத்தில் அந்த குழந்தை லுக்கேமியா என்ற ரத்த புற்றுநோயால் தாக்கபட்டிருப்பது கண்டறியபட்டது.  அதன் சிகிச்சையின் தீவிரத்தால் அந்த குழந்தையின் தலை முடி முழுவதும்  கொட்டி மொட்டையாகியிருக்கிறது. அந்த குழந்தைக்கு அது வினோதமாக தெரியக்கூடாது என்பதற்காக  ஒரே காலனியில் வசிக்கும் பாட்ரிக்கின் தந்தை ஜோனின் குழுவினர் அனைவரும் மொட்டை அடித்துகொண்டனர். அந்த குழந்தையின் மருத்துவ செலவிற்கு நிதிதிரட்ட பாட்ரிக் பிரண்ட்ஸ் என்ற பெயரில் ஒரு  வெப் சைட்டையும் துவக்கி நன்கொடைகள் கேட்டிருக்கின்றனர்.
திடுமென ஒருநாள் தன் அத்தனை பாதுகாவலர்களும் மொட்டைதலையர்களாக இருந்ததைப்பார்த்து விசாரித்து விஷயம் அறிந்த புஷ் உடனே பெரிய அளவில் நிதிஉதவி செய்தததோடு அந்த குழுவில் தானும் இருப்பதை அறிவிக்கும் வகையில்  மொட்டை அடித்து கொண்டார்.  அவர்களோடு  ஒரு குருப் போட்டோ எடுத்து அதை அவர்களின் வெப் ஸைட்டில் வெளியிடச்செய்தார்.
நன்கொடை வசூலிப்பதற்காக நகரில் ஒரு மோட்டார் சைக்கிள் பந்தையத்தைதானே முன்னின்று நடத்தியிருக்கிறார். அதோடு நிற்காமல் அந்த சிறுவனோடு ஒரு படம் எடுத்துகொண்டார் அதை திருமதி புஷ் தேசிய நாளிதழ்களுக்கு அனுப்பி அந்த சிறுவனின் மருத்துவ செலவிற்கு உதவ வேண்டியிருக்கிறார்.



கையில் மோட்டார்  பொம்மைகளுடன் யார் மடியில் இருக்கிறோம் என்பது கூட புரியாமல் உட்கார்ந்திருக்கும் அந்த மொட்டை சிறுவனும் மொட்டைதலையுடன்  முன்னாள் அதிபர் புஷ்ஷும் இருக்கும் அந்த படம் பலரை பாட்ரிக் நண்பர்கள் குழுவிற்கு நன்கொடை அனுப்ப செய்திருக்கிறது.
அதிபர் புஷ்ஷுக்கு இபோது வயது 89, பெர்க்கின்ஸ் நோய் தாக்கியிருப்பதால் சக்ர நாற்காலியிலிருக்கிறார்.

கல்கி11/08/13

26/7/13

நம்ம ஆளுங்க கலக்கறாங்க !

 

ஓபாமாவை கவர்ந்த ஸ்ரீகாந்த்



 !

அமெரிக்கவாழ் இந்தியர்களின் இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் இப்போது மெல்ல அமெரிக்க  சமூக,அரசியல், கலாசார வாழ்க்கையில் நன்கு பின்னி பிணைந்து கலக்கி கொண்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன் வந்து வாழ்க்கையை துவக்கியவர்களில் பலர் அவர்களின் துறைகளில் உயர்ந்து  தங்கள் அடையாளங்களை பதித்துகொண்டிருக்கிறார்கள். அமெரிக்க இந்தியர்களாக அறியப்படும் இவர்கள்  பெரிய கார்ப்ரேட்களில், அரசியல் கட்சி,  பொறுப்புகளில், மாநில அரசுகளின் உயர்ந்த பதவிகளில், மாநில கவர்னராக கூட இருக்கிறார்கள். இந்த வரிசையில் சமீபத்தில் இடம்பெற்றிருப்பவர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்.அமெரிக்காவின் இரண்டாவது பெரியஉயர் நீதிமன்ற நீதிபதியாக அதிபர் ஒபாமாவால் நியமிக்கபட்டிருக்கிறார். அமெரிக்க நீதிமன்ற முறை நம்முடையதிலிருந்து சற்று மாறுபட்டது.. தேசம் 13 நீதி மண்டலங்கள் அதன் கீழ் பல நீதி மாவட்டங்கள்.என பிரிக்கபட்டிருகின்றன.. இங்குள்ள வழக்குகளை மேல்முறையீடு செய்ய 13 அப்பீல் கோர்ட்டுகள். அமெரிக்க உச்சநீதிமன்றம் ஒர் ஆண்டுக்கு 100 வழக்குகளுக்கு மேல் எடுத்துகொள்வதில்லை என்பதால் இந்த அப்பீல் கோர்ட்டுகள் நமது உயர்நீதி மன்றங்களைவிட வலிமையானது. மாநில. பெடரல் சட்டபிரச்சனைகளைகூடவிசாரிக்கிறது.அத்தகைய கோர்ட்களில் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய கோர்ட். வாஷிங்டனிலிருக்கிறது.  அதில் தான் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன். நீதிபதியாக நியமிக்கபட்டிருக்கிறார். மாவட்ட நீதிமன்றங்கள் இரண்டில்  இந்தியர்கள் நீதிபதிகளாக இருந்தாலும் ஒரு உயர் நீதி மன்றத்தின் நீதிபதியாக அமெரிக்க அதிபரால் நியமிக்க படும் முதல் இந்தியர் மற்றும் ஆசியரும் இவரே.

At a reception in honor of Sri Srinivasan, the first South Asian American judge in the US Court of Appeals for the DC Circuit, at the Embassy Residence, are seen (from left to right): Sri Srinivasan; Mrs. Saroja Srinivasan; Indian Ambassador Mrs. Nirupama Rao; and Srinija Srinivasan. Photo credit: Embassy of India, Washington


சண்டிகரில் பிறந்த ஸ்ரீகாந்த்தின் தந்தை ஸ்ரீனிவாசனும் அம்மாவும்   படிக்க அமெரிக்கா சென்னறவர்கள். பின்னால இருவருக்கும் கன்ஸாஸ் பலகலகழகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததாதால் அங்கேயே தங்கிவிட்டனர். அதனால் உயர்நிலைப் பள்ளிபடிப்பை அமெரிக்காவில் தொடர்ந்து அங்கேயே வளர்ந்தவர். பள்ளியிலும் கல்லூரியிலும் பேஸ்கட்பால் வீரர். இவருடைய லாரன்ஸ் பள்ளி டிம் மேட்கள் இன்று தேசிய சாம்பியன்கள். இன்றும் வாரம் ஒருமுறை பேஸ்பால்  விளையாடுகிறார்.புகழ் பெற்ற ஸ்டன்ஃபோர்ட் பல்கலைகழத்தில் எம்பிஏ வும் சட்டமும் படித்தவர்  சட்டம் முதுகலைப் படிப்பில் சிறப்பு தேர்ச்சி பெற்றவர். சில காலம் ஹார்வர்ட் பல்கலகழகத்தில் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.
இவரது ஓரே சகோதரி ஸ்ரீநிஜா யாஹூ நிறுவனம் துவங்கபாடபோது சேர்ந்த முதல் ஐவரில் ஒருவர். 15 ஆண்டுகள் அதனுடன் வளர்ந்து பல உயரங்களைத் தொட்ட பின் இப்போது தனி நிறுவனம் துவக்கியிருக்கிறார். நாட்டின் சிறநத அறிஞர்களை... தேர்ந்தெடுக்கும் வெள்ளை மாளிகையின் குழுவில் ஒருவராக நியமித்திருக்கிறார்


அமெரிக்கஅரசுக்காகவும்  அதற்குஎதிராக தனியார் நிறுவனங்களுக்காகவும் \ வாதாடியவர் ஸ்ரீநிவாஸ் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் 20 வழக்குகளூக்கு மேல் வென்று புகழ் பெற்றவர்எதிர்கட்சியை சேர்ந்த அதிபர் புஷ் அவர் காலத்தில் அரசின் உதவி ஸொலிட்டராக அமர்த்தபட்டஒருவரை. ஒபாமா நீதிபதியாக அறிவித்தபோது அவரது கட்சியில் சின்ன சலசலப்பு.நான் ஒரு வழக்கறிஞரென்ற முறையில். ஸ்ரீகாந்த்தின் திறமமையை  நன்கு அறிவேன். அவரைப்போன்ற திறமைசாலிகள் அமெரிக்க நீதித்துறையில் இருப்பது நாட்டுக்கு கெளரவம்  என சொல்லியிருக்கிறார். 43 வயதாகும் ஸ்ரீகாந்த்துக்கு இது ஆயூட்கால பதவி. எட்டே நீதிபதிகள் கொண்ட அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வருங்காலத்தில் அமரக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.
“ஸ்ரீ“ என நண்பர்களால் அழைக்கபடும் ஸ்ரீகாந்த் சட்டபடிப்பு முடிந்தபின் அமெரிக்க முறைப்படி ஒரு வழக்கறிஞர்கள் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றி அந்த நிறுவனத்தின் பங்குதாரராகவும் பினஅதன் தலைவருமாக வளர்ந்தவர்