5/4/17

மரணத்தில் மர்மம்- விசாரணை துவங்கியிருக்கிறது


பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த  கோலாலம்பூர் விமான நிலையத்தில்  விமானம் ஏற காத்திருப்பவர்களின் வரிசையில் நின்றுகொண்டிருந்தவர்களில் ஒருவரின் அருகில்ஹாய்”  என்று சொல்லிக்கொண்டே அந்த அழகிய இரண்டு பெண்கள்  அவர் முகத்தில் சென்ட் மாதிரி  எதையோ ஸ்பிரே செய்கிறார்கள்சில நிமிடங்களில் உதவி கேட்டு கூச்சலிட்டு அந்த மனிதர் தரையில் விழுகிறார். அழகியபெண்கள் அம்பேல்ஆம்புலன்ஸ் வந்து அந்த மனிதரை அள்ளிக்கொண்டு மருத்துமனைக்குப் பறக்கிறது. ஆனால் பாதி வழியிலேயே அவர் இறந்து போகிறார். மருத்துமனையில் கண்டுபிடிக்கப்பட்டவிஷயம்  அவர் மீது ஸ்பிரே செய்யப்பட்டிருப்பது  விஎக்ஸ் என்ற கொடிய ரசாயன விஷம்தெளிக்கப்பட்டவர் 20 நிமிடங்களுக்குள் இறப்பது நிச்சியம் என்றளவினாலான கொடுமையான விஷம். உலகின் பல நாடுகளில் தடை செய்யப் பட்டிருக்கும் ஒரு ரசயானம்.
யார், ஏன் இதை இவருக்குச் செலுத்தியிருக்கிறார்கள் என ஆராய்ந்த மலேசியப் போலீசுக்கு  ஒன்றின்பின் ஒன்றாகத் தொடர் ஆச்சரியங்கள் காத்திருந்தன.
கொலை செய்யப்பட்டிருப்பவரின் பெயர் கிம் ஜாங் நம் என்பதை அவர் பாஸ்போர்ட்டின் மூலம் அறிந்தவர்களை அடுத்துத் தாக்கிய ஆச்சரியம் அவர்  வட கொரிய அதிபரான  கிம் ஜாங் உன்   னின் ஒன்று  விட்ட சகோதரர் மற்றொரு நாட்டின் அரசியல் குடும்ப உறுப்பினர் மலேசிய மண்ணில் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது புரிந்தவுடன் அரசு இயந்திரம் மிக வேகமாக இயங்கியதுஸ்பிரே அடித்தப் பெண்கள் வளைக்கப்பட்டனர்.
 “இது ஒரு ரியாலிட்டி ஷோ, நீங்கள் அடிக்கப்போவது வாசனைத் தண்ணீர். ஆனால் அவர் பயந்து விழுவார். பின்னர் சிரித்துக்கொண்டே எழுந்துவிடுவார். நாங்கள் வீடியோபடமெடுப்பதைக் காட்டுவோம்” என்று ஒரு    டிவி சானல் சொல்லிப் பணம் கொடுத்ததினால் செய்தோம். இது விஷம் என்றோ அல்லது அவர் இறந்து போவார் என்றோ தெரியாது என்றனர் அந்த மாடல் அழகிகள். விசாரணையின் எல்லைகள் விரிந்தன. வெளியான விஷயம் கிம் ஜாங் நம் கொல்லப்பட்டதற்கு பின்னால் ஒரு சதி திட்டம் இருப்பதையும் அதைச் செய்தவர்கள் வடகொரியாவின் உளவுத்துறை என்பது.
 ஏன் இந்தப் படுகொலை? என்பதைப் புரிந்துகொள்ள  வினோதமான வடகொரிய அரசியலைக் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும். இரண்டாம் உலகப்போருக்குப் பின்  அமெரிக்காவும் சோவியத் யூனியனும் கொரியாவை ஆளுக்குப் பாதி எனப் பங்கு போட்டுக்கொண்டனர். அதில் வட பகுதி  சோவியத்தின் உதவியுடன் இயங்கிவந்த எதேச்சாதிகார நாடுநாடு வறுமையில் சிக்கி தவித்துக்கொண்டிருந்தாலும்  திடும் திடும் எனச்  சக்தி வாய்ந்த ராக்கெட்களை ஏவியும், அணுகுண்டு சோதனைகளைச்செய்தும் மிரட்டிக்கொண்டிருப்பவர்கள்  நாட்டின் பெயர் தான்  ‘மக்கள் குடியரசு”  ஆனால்  நடப்பது  அதிபரின் குடும்ப ஆட்சிதான். முதல் அதிபர் கிம் இல் சுங்-இன் ஆட்சி, 1994இல் அவர் மரணம்வரை நீடித்தது. தொடர்ந்து அவரது மகன், அவரைத்தொடர்ந்து அவரது மகன் என்று பரம்பரையாக குடியரசு ஆட்சி செய்துகொண்டிருக்கிறது அதிஅப்ரின் குடும்பம்
 இந்த முறைப்படி கொலை செய்யப்பட்டிருக்கும் கிம் ஜாங் நம் தான் வட கொரியாவின் ஆட்சி யாளராக வந்திருக்க வேண் டும். ஆனால், இவர் போலி பாஸ் போர்ட்டில் ஜப்பான் சென்று அங்கு  கைது செய்யப்பட்டது இவரது  எதிர் காலத்தை சூனியமாக்கியது. இதனால் வட கொ ரிய முன் னாள் அதிபர் கிம் ஜால் இல், தனது 3வது இளைய மகன் கிம் ஜாங் உன்னை தனது அரசி யல் வாரி சாக அறி வித் தார். ஆட்சி கட்டிலில் அமர முடியாமல் போன கிம் ஜாங் நம், வட கொரியா திரும் வில்லை. ஹாங்காங் அருகேயுள்ள சீனா வின் மகுவா பகுதியில் தான் வசித்து வந்தார். இவருக்கு வட கொரியா வின் நட்பு நாடாக இருந்த சீனா ஆதரவு அளித்து வந்தது.
 சமீப காலமாக அதிபர் கிம் ஜாங் உன் பற்றி, கிம் ஜாங் நம் வெளிப்படையாக விமர்சிக்க ஆரம்பித்தார். அவரது ஆட்சியை ஜோக் எனவும், வட கொ ரியாவை கட்டுப்படுத்தும் அளவுக்கு அவருக்கு வயது போதாது எனக் கடுமையாக விமர்சித்து வந்தார்  கிம் ஜாங் நம். இது கிங் ஜாம் உன்னுக்கு வெறுப்பை ஏற்படுத்தியதுஅன்னிய சக்திகளின் ஆதரவுடன் இவர்  தன் ஆட்சியை கவிழ்த்துவிடுவார்  எனப் பயந்து  இவரை உளவுத் துறை மூலம் தீர்த் துக் கட்ட கிம் ஜாங் உன் முடிவு செய்தார். அந்த தொடர் முயற்சிகளின் கிளைமாக்ஸ் தான் கோலாலம்பூர்  விமான நிலையத்தில் அரங்கேறியது..

மரணத்தில் . எந்த சந்தேகமும் வராமல் தீர்த்து கட்ட அவர் கள் பயன்படுத் திய ஆயுதம் தான் ரசாயன போர் முறை யில் இது பயன்படுத்தப் படும் வி.எக்ஸ்.   . உலகம் முழுவதும் தடை செய்யப் பட்ட ரசாயனம். இந்த ரசாயனம் தோலில் பட் டால், அல்லது நுகர்ந் தால் நரம்பு மண் டலம் ஸ்தம் பித்து சில நிமிடங் ளில் மர ணம் ஏற்படும் என்பது சாதாரண நபர்களுக்குத் தெரியாது.
கிம் ஜாங் நம் மலேசியா வந்திருப்பதை அறிந்த கொலைகாரகும்பல், அவரைத் தீர்த்து கட்டும் சதியில் இறங்கியது. பிரபலம் இல்லாதவர் என்பதால், அவரை யாருக்கும் அடை யாளம் தெரியாதுஎன்பதால் விமான நிலையம்.. ஆனால் மலேசிய போலீஸ் விழித்துக் கொண்டுவிட்டது. தடயவியல் சோதனையில் கிம் ஜாங் நம் மீது  தெளிக்கப்பட்ட ரசாயனம்  வி.எக்ஸ் என உறுதி செய்யப் பட்டதும் பெரும் அதிர்ச்சியான அந்த விஷயத்தை உலக நாடுகளுக்கு அது அறிவித்தது.  பிரச்சனைகளைத் தவிர்க்க இவரது உடலை உடனடியாக ஒப்படைக்கும் படி வட கொரியா, மலேசியாவுக்கு நெருக்கடி கொடுத்தது..மலேசிய அரசு, கிம் ஜாங் நம் உடலை உறுதி செய்ய அவரது குடும் பத்தினரின் டிஎன்ஏ மாதிரியை கேட் டது. ஆனால் அவரது குடும்பத்தினர் யாரும், உடலை ஒப்படைக்கும் படி உரிமை கோரவில்லை.
மலேசியா இனி நடத்தும் விசாரணையில்  உண்மை நிலவரம் தெரியவரும். வட கொரியாவின் சதி உறுதியானால்,சர்வ தேச தடையை மீறி வி.எக்ஸ் ரசாயனத்தை பயன் படுத்தப் பட்டதை .நாவும், உலக நாடு களும் சாதாரண விஷயமாக எடுத் துக் கொள்ளாது  வடகொரியா   உலக நாடுகளின் நெருக்கடியைச் சந்திக்க நேரிடும்.


அதிபரை விமர்சிக்காதீர்கள் ஆபத்து !- அமெரிக்காவின் புதிய சமூக நீதி



அதிபரை விமர்சிக்காதீர்கள் ஆபத்து !- அமெரிக்காவின் புதிய சமூக நீதி


அமெரிக்காவின் லாஸ் ஏஜென்ஸ்ல் நகரிலிருந்து நியூயார்க்குச் செல்லும் அந்த விமானம் புறப்படத்தயாராகிக்கொண்டிருக்கிறது. அனேகமாக எல்லா சீட்களும் நிறைந்து விட்டன.விமானப் பணிப்பெண்களும் பைலட்களும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றனர்.
ஆறு அல்லது 7 வயதிருக்கும் ஒரு சிறுவன் இங்கும் அங்கும் அழுதுகொண்டே ஓடிக்கொண்டிருக்கிறான். பயணி ஒருவர் அவனை அழைத்து தன் அருகிலிருக்கும் ஜன்னல் ஓர சீட்டில் உட்காரவைக்கிறார். பேசி சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். பையன் ஸ்பானிஷ் மொழியில் ஏதோ சொல்லுகிறான். இவருக்குப் புரியவில்லை. பையன் அழுகையை நிறுத்தவில்லை.
அருகில் வந்த விமானப் பணிப்பெண், பையன் ஏன் அழுகிறான்? என்று கேட்கிறார்.
தெரியவில்லை. அதிபர் டிரம்ப் தேதசத்தை விட்டு வெளியேறச் சொல்லும் அறிக்கையைக் கேட்டிருப்பானோ என்கிறார். அந்தப் பயணி சிரித்தபடி.
அப்படிச்சொல்லாதீர்கள் . அதிபர் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. என்கிறார் கோபமாக என்கிறார் அந்தப் பணிப்பெண்
நீங்கள் டிரம்ப் ஆதரவாளரா? என் கோபப்படுகிறீர்கள்? நான் சொன்னதை ஒரு ஜோக்காக எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறார் அந்தப்பயணி
. ஏன் இந்தப்பையன் ஜன்னல் அருகே உட்காருகிறான்?. இம்மாதிரி தனியாக பயணம் செய்யும் சிறுவர்கள் அங்கே உட்காரக்கூடாது.
எனக்கு எப்படித்தெரியும். அது உங்கள் வேலையில்லையா? என்கிறார் பயணி.
அவ்வளவுதான். அந்தப்பணிப்பெண் பைலட்டின் காபினுக்குள் செல்லுகிறார். ஸ்டார்ட் செய்யப்பட்ட எஞ்சின் நிறுத்தப் படுகிறது. கண்ட்ரோலுக்குச் செய்தி பறக்கிறது.. பாதுகாப்பு அதிகாரிகள் விமானம் உள்ளே வந்து அந்தப் பயணியை வெளியே அழைத்துச் செல்லுகிறார்கள்.
“விமான ஊழியர்கள் சொல்லும் பாதுகாப்பு விதிகளை நீங்கள் பின் பற்றமறுப்பதால் உங்களை விமானத்திலிருந்து இறக்குகிறோம்” என்று அவரிடம் சொல்லுகிறார்கள்.
வெளியேற்றப்பட்ட அந்தப் பயணி அமெரிக்காவில் மிகப்புகழ்பெற்ற பல்மருத்துவர். வெறும் மருத்துவர் மட்டுமில்லை பல் அழகுக்கலை நிபுணர். ஹாலிவுட் நட்சத்திரங்கள்:, அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் போன்ற பணக்காரர்களின் டாக்டர். லட்சக்கணக்கில் பீஸ் வாங்குபவர். நாட்டின் நான்கு நகரங்களில் கிளினிக் வைத்திருப்பவர். பெயர் ஷவான் சத்திரி( Shawn Sadri) ஈரான் நாட்டுக்காரர். அடுத்த வாரம் நடைபெறப்போகும் ஆஸ்கார் விருதுவிழாவில் பங்குகொள்ளும் நட்சத்திரங்களில் சிலரின் பற்களை அழகாக்க வந்தவர்.
அழைத்துப்போன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவர் யார் என்று தெரிந்தவுடன் அவசரஅவசரமாக அடுத்த விமானத்தில் நியூயார்க் அனுப்பிவைக்கிறார்கள். இந்தச் செய்தி வாட்ஸப்பில் வந்திருந்தால் ஒதுக்கிவிடலாம். வந்திருப்பது வாஷிங்டன் போஸ்டில் அதுவும் அந்த டாக்டரின் பேட்டியுடன்.
டிரம்ப் ஆதரவாளர், நாட்டைவிட்டு வெளியேற்றம் என்ற என் வார்த்தைகள் அந்தப் பெண்ணை ஆத்திரமடைச் செய்ததற்கு காரணம் நான் ஈரானியன் என்பதே. விமானப்பைலட்டும் ஒரு வார்த்தை கூட என்னிடம் கேட்காமல் கன்ட்ரோலுக்கு புகார் செய்தது தான் ஆச்சரியம் என்று சொல்லுகிறார் டாக்டர் ஷவான் சத்திரி. இவர் பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பு மருத்தப்படிப்பு எல்லாம் அமெரிக்காவிலேயே படித்தவர் 22 ஆண்டுகளுக்கும்மேலாக இஸ்லாமியக் கொள்கைகளை பின்பற்றாமல் வாழ்பவர்.
இந்தச் செய்தி வெளியானதும் அந்த டாக்டருக்கு கொலைமிரட்டல் உட்பட வெறுப்பை ஊமிழும் செய்திகளுடன் பல ஈ மெயில்கள் வருகின்றனவாம்.
பதவியேற்றவுடன் அதிபர் டிரம்ப் விசாகொள்கையில் செய்த அதிரடி அறிவிப்பினால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமானநிலையங்களில் தவித்ததும் பின்னர் நீதிமன்ற ஆணைகளினால் அவர்களால் அமெரிக்காவில் காலடி எடுத்துவைக்கமுடிந்ததும் உலகமே பார்த்து அதிர்ந்த விஷயம். இரண்டு இந்தியர்கள் சுட்டுக்கொல்லபட்டது நமது நாட்டில் தலைப்புச் செய்தியான விஷயம். நமது வெளியுறவு அமைச்சர் சுஷ்மா அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறும் இந்தச் செயல்களை .பெரிதுபடுத்த வேண்டாம். நமது அரசு அமெரிக்க நிர்வாகத்துடன் பேசிக்கொண்டிருக்கிறது என்றார்.
தீவிரவாதிகள் அமெரிக்காவிற்குள் ஊடுவுறுவதைத் தடுக்க, நாட்டின் பாதுகாப்பிற்காகத்தான் இந்த விசா நிறுத்தம் போன்ற கெடுபிடிகள் என்று டிரம்ப் சொன்னாலும் அவரது ஆதரவாளர்கள் முஸ்லிம் நாட்டிலிருந்து வந்து குடியேறி அமெரிக்கர்களாகவே வாழும் மக்கள் மீது தங்கள் வெறுப்பை வெளிப்படையாக பொதுஇடங்களில் துணிவுடன் காட்டத்துவங்கியிருக்கிறார்கள் என்பது தான் உண்மை. சாதாரணமாகஅமெரிக்க அதிபர், அரசியல் பற்றி ஜோக் அடித்துக்கொண்டிருக்கும் அமெரிக்காவாழ் வெளிநாட்டவர்கள் மட்டுமில்லை பெரும்பான்மையான அமெரிக்கர்களே இப்போது அச்சத்தால் அமைதியாகி பொது இடங்களில் அதிகம் பேசாமலிருக்கிறார்கள்.
V,Ramanan
9444902215

25/3/17

இந்த வார குங்குமம் இதழில் காற்றினிலே வரும் கீதம் அறிமுகம். ஆசிரியருக்கும் காஃபிடேபிள் டீமுக்கும் அன்பான நன்றிகள் 


16/2/17

பாம்பு பிடிக்க 50 லட்சம் சம்பளம்



அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் தென்பகுதி அடர்ந்த காடுகள் நிறைந்தது.  மிக அறிய வனவிலங்குகள் வாழும் அந்தப் பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வேட்டையாடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. அங்கு  கடந்த சில ஆண்டுகளாக எழுந்திருக்கும்  ஒரு பிரச்னை அதிகரித்துக்கொண்டிருக்கும் பெரிய மலைப்பாம்புகள். தாய்லாந்து வகையைச்சேர்ந்த இந்த மலைப்பாம்புகள் அமரிக்க வனங்களில் வாழும் வகையில்லை. எப்போதோ யாரோ கொண்டுவந்த விட்டுப்போன  இந்த பாம்பு இனம் இப்போது பல்கி பெருகிவிட்டது.

மிக அறிய வெள்ளைநிற வால்கள் கொண்ட மான்கள்  நீண்ட கொம்புகள் கொண்ட ஆடுகள் போன்றவற்றை தினமும்  சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றன என்பதால்  புளோரிடா வன விலங்குகள் பாதுகாப்பு கமிஷன் அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது..   அதிக நீளம் கொண்ட மலைப்பாம்புகளைப் பிடிப்பவர்களுக்கு. அதிக எண்ணிக்கைகளில் பாம்புகளை பிடிக்கும் அணிக்குப்  பரிசு எனப் போட்டிகளை அறிவித்தது. பெருமளவில் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். இதைத்தவிரப்  பாம்பு பிடிப்பதற்கு  ஸ்பெஷலிஸ்ட்களின் தனிப்டையெல்லாம் அமைத்தது.
ஆனாலும்  பிரச்னையை சமாளிக்க முடியவில்லை. மலைப் பாம்புகள் அதிகரித்துக்கொண்டிருந்தது  அந்த மாநிலத்திலுள்ள புளோரிட பல்கலைகழகத்திலிருக்கும்  விலங்கியல் பேராசியர் ஃபிராங்க் மஸோட்டி ( Frank Mazzotti). இந்தியப் பாம்புகள் பற்றி ஆராய்ந்தவர்.  அவர் சொன்ன யோசனை; இதைப் பிடிக்க சரியான ஆட்கள் தென்னிந்தியாவில் நீலகிரி காடுகளிலிருக்கும் இருளர்கள் என்ற இனத்தவர்கள் தான். அவர்களை  அழைத்துவந்து நம் ஆட்களுக்குப் பயிற்சி கொடுங்கள் என்பது. பல் மட்டங்களில் விவாதிக்கப்பட்ட பின் இந்த  யோசனை ஏற்கப்பட்டது. ஆனால்  எழுந்த  சிக்கல் இவர்களுக்கு விசா.  .  அதிகம் படிக்காத அந்த இனத்தவருக்கு பாம்புகளின் பாஷை தெரியுமே தவிர  ஆங்கிலம்  தெரியாது. மேலும்  அமெரிக்கா விசா வழங்க அனுமதிக்கப்பட்டிருக்கும்  அமெரிக்காவில் இல்லாத  தொழில் விற்பன்னர்கள் பட்டியலில் பாம்பு பிடிப்பவர்கள் இல்லதால்  விசா கிடைக்காது,  இதற்காக புளோரிடா மாநில  அரசு விசேஷ அனுமதி அளித்து மொழிபெயர்ப்பாளர்களுடன் மாசி சடையன் மற்றும் வடி வேல் கோபால்  என்ற  இரண்டு  இருளர்கள்  இந்தப் பணிக்காக  அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டனர்.  இவர்கள் புளோரிடா பல்கலைக்கழக வனவிலங்கு உயிரின ஆய்வாளர் பிராங்க் மஸோட்டி தலை மை யிலான குழுவினருக்கு மலைப் பாம்புகளை பிடிக்கும் பயிற்சி அளித்து வருகின்றனர்.

 வந்து இறங்கிய முதல் வாரத்திலேயே  இவர்கள் பிடித்த  பாம்புகள் 13.  அருகிலுள்ள  முதலை ஏரி தேசிய வன விலங்கு சரணாலயத்தில் 4 மலைப் பாம்புகளை ஒரே நாளில் பிடித்துவிட்டனர்.  . அவற்றில் ஒன்று 16 அடி நீளப் பெண் மலைப் பாம்பு  இதனால் உள்ளூர்  சானல்கள் போட்டிபோட்டுக்கொண்டு இவர்களைப் பேட்டி காண்கின்றனர்.  இவர்கள் பிடித்து மயக்கமான நிலையிலிருக்கும் பாம்புடன்  பல்கலைக்கழக மாணவர்கள் போட்டோக்கள் எடுத்துக் கொள்கின்றனர்.

மோப்ப நாய்களின் மூலம் பாம்புகள் இருக்குமிட கண்டறியப்பட்டவுடன். மிகசாதரணமான Y  வடிவ கம்புகளின் உதவியால்  அதை மடக்கி பிடிப்பதை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள் அமெரிக்க பாம்பு பிடிக்கும் ஸ்பெஷலிஸ்ட்கள்  அவர்களுக்குத் தான் மாசியும்  வடிவேலும் பயிற்சி அளிக்கப்போகிறார்கள்.  இவர்களது  ஒன்றை மாதப் பணிக்கு   சம்பளம் 50 லட்சம்  என ஒப்பந்தம்.  விமானகட்டணம் தங்கும் செலவுகள் அமெரிக்க அரசினுடையது.  இதே பிரச்னையை சந்திக்கும் வேறு சில மாநிலங்களும் இவர்களின் உதவியை நாடியிருக்கின்றனர்.  இவர்கள் திறமையை கண்டு வியக்கும் அமெரிக்க வனவிலங்கு பாதுகாப்பு கமிஷன் நிரந்த வேலைக் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கல்கி 19/02/17 

6/2/17

சாதனைத் தமிழன் சந்திரசேகரகன்


10 ஆயிரம் கோடி நிகர மதிப்பு, ஆறு லட்சம் ஊழியர்கள், மென்பொருள்  இரும்பு, கார்,விமானம், தொலைத்தொடர்பு என பலத்துறைகளில் பெரிய மூதலீடுகளைச்செய்திருக்கும் டாடா குழுமத்தின் தலைவராக பதவியேற்றிருக்கிறார்  ஒரு தமிழர்.
திரு சந்திரசேகரகன்  நாமக்கல்லுக்கு அருகிலிருக்கும் மோஹனூர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர்.  6 ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை தினமும் 3 கீமி நடந்துசென்று அருகிலுள்ள அரசுப்பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்தவர்இரண்டு சகோதரர்கள், 2 சகோதரிகள் என்று பெரிய குடும்பம். தந்தை  நடராஜன் வழக்கறிஞராக இருந்தாலும், குடும்பச்சொத்தாக நிறைய நிலங்கள் இருந்ததால்  கிராமத்தில் விவசாயம் செய்துகொண்டிருப்பவர்.. தன் மகன்கள் நிறையப் படித்து பெரிய அதிகாரிகளாக வரவேண்டும் என விரும்பியவர், ஆனால் சந்திர சேகருக்கு புதிய முறைகளைப் புகுத்தி விவசாயம் செய்யவே விருப்பம்.
ஆனால் அதைத் தந்தையின் விருப்பத்திற்கேற்ப  கோவை இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலாஜி (CIT)யில்பி.எஸ்சி முடித்தவுடன் செய்யவிருந்தவரின் மனதை அன்று  அதன் முதல்வர்  மாற்றாதிருந்தால்  இந்திய கார்ப்பெரேட் உலகம் இந்தச்  சாதனை மனிதரை இழந்திருக்கும்.  “சவாலான படிப்புகளை ஏற்று அதில் சிறக்கும் திறன் உனக்கு இருக்கிறதுமேலே படிக்க வேண்டும் என்று ஊக்குவித்த அவர் அந்த ஆண்டுதான்(1983)  கணினி துறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் MCA வில் சேரச்சொன்னார்அதற்கான நுழைவுத்தேர்வில் முதலிடம் பெற்று திருச்சி REC((இப்போது (NIT-T)யில் படித்துக்கொண்டிருக்கும் போது டாடா நிறுவனத்துக்குச் செய்த இரண்டு பிராஜக்கெட்கள் நிறுவனத்தின் கவனத்தை கவர, அது இவரை கல்லூரிக்காலம் முடியும்  முன்னரே  TCS நிறுனத்தில் பணிக்காகத் தேர்வு செய்யவைத்தது. . 1987ல் அதில் புரோகிரமராக பணியில் சேர்ந்த சந்திரசேகர்  தனது தொடர்ந்த சாதனைகளால் TCSஸ் நிறுவனத்தின் இயக்குநராக 2007லும்  2009ல் அதன் தலைவராகவும் உயர்கிறார்.
வசதியான குடும்பப்பின்னணியிருந்தாலும் மிக எளிமையான வாழ்க்கையை விரும்புபவர்கள் சந்திரசேகரும் அவரது சகோதர   ர்களும். சென்னையில்தொழில் வாழ்க்கைத்தொடங்கியபோது ஒரே ஸ்கூட்ரை பகிர்ந்து கொண்டவர்கள். இன்று ஒவ்வொருவரும் தத்தம் துறையில் சிறந்த இடத்திலிருக்கிறார்கள்

டாடாகுழுமத்திற்கு தலைவராக தேர்ந்த்டுக்கப்பட்டிருந்த  திரு ஸரஸ்மிஸ்திரி  இயக்குநர் குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகாரணமாக பதவி விலகினார். அப்போது டாடா குழுமத்தின்  தலைவர் ரத்தன் டாடா விரைவில்  “உலகத்தரம் வாய்ந்த ஒரு தலைவரை  எங்களது குழும நிறுவனங்களிலிருந்தே  தேர்ந்தெடுப்போம்என அறிவித்திருந்தார்அது யார் என இந்திய கார்பேர்ட் உலகம் மட்டுமில்லை பல பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த போது அறிவிக்கப்பட்ட பெயர் சந்திரா எனப் பிரபலமாக அறியப்பட்டிருந்த சந்திரசேகரன்.
இவரது தேர்வுக்கு முக்கிய காரணம் இவர் TCSஸ் நிறுவனத்தில்  நிகழ்த்திய ஆச்சரியங்கள். மென்பொருள் துறை உலகளவில் சரிவுகளை சந்தித்துக்கொண்டிருந்த  சமயங்களிலும் கூட  TCS தொடர்ந்து வளர்ச்சி வீதம், லாபம். புதிய வாடிக்கையாளர்கள் என கலக்கிக்கொண்டிருந்தது தான். மிகப் பெரிய யானையைக் கூட வேகமாக ஓடவைப்பவர், அதை தன்விருப்பபடி  நடனமாடவைப்பவர் என்று மென்பொருள் துறையினரால் வர்ணிக்கப்படுபவர் சந்திரா.


ஒட்டபந்தியங்களில் பங்கு கொள்ளவதில்  மிக விரும்பும் கொண்ட சந்திர சேகர்  மாராத்தான்களில் பங்குகொள்ளும்  தொலை தூர ஓட்டக்காரர். தொலை தூரஓட்டங்களில் வெற்றி பெற, கடக்கவேண்டிய தூரத்தையும் நேரத்தையும் சரியாக கணக்கிட்டு அடிகளை வைக்கவேண்டும்இடையில் வரும் இடையூறுகளையும், போட்டியாளர்களைச் சமாளிக்கும் திறனையும் கொண்டிருக்க வேண்டும்  மாரத்தான்களில் நான் பெற்றிருக்கும் இந்தப் பயிற்சிகள் என்னுடைய இன்றைய பணிக்கு உதவும் என நம்புகிறேன் என்கிறார் சந்திரசேகர்
பெரிய நிறுவனங்களில் வெற்றி என்பது மிகச் சவாலானதுஇருக்கும் இடத்தை தக்கவைத்துக்கொள்ளக்கூடநிற்காமல் ஓடிக்கொண்டிருக்கவேண்டிய  இன்றைய சூழலில், இந்த சாதனைத் தமிழர் அதைச்செய்து  டாடா நிறுவனத்தை புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்வார் என இந்திய கார்பேர்ட் உலகம் நம்புகிறது.  .