19/9/10

யாருக்காக இந்த ஓட்டம்



கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய  அளவில் விளம்பரங்கள் அரசியல், சினிமா பிரபலங்களின் கொடிசைப்புகள்,இசைகலைஞர்களின் நிகழ்ச்சிகள்  என்ற  ஆராவாரங்களுடன்துவக்கம்  என்று நிகழ்ந்து கொண்டிருக்குகிறது மாரத்தான் ஓட்டங்கள்முழுமராத்தான், அரை மாராத்தான், நகரின் பெயரில் ஒரு சிறியமினி மாராத்தான் என பல ஒட்டங்கள்சென்னைக்கு  4 ஆண்டுகள் முன் அறிமுகமான இந்த ஓட்டங்கள் அதற்கு முன்பே மும்பபையிலும் டெல்லியிலும் ஆண்டுதோறும் நிகழ்கின்றன. பல கோடிகளில் பணம்புரளும்  இந்த ஓட்டங்களுக்கு கார்ப்ரேட்களின் ஸ்பான்ஸ்ர்ஷிப் ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது,
1981ல் புற்று நோய் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் அதற்கான நிதி ஆதாரத்தை பெருக்கவும் கனடா நாட்டில் டெரிபாக்ஸ் எனபவரால் மிக எளிமையாக துவக்கபட்டு மிக பெரிய வெற்றியை எட்டிய இந்த சமூக விழிப்புணர்வு ஒட்டம் இப்போது உலகின் பல நாடுகளில் எதாவது  ஒரு சமுக பிரச்சனை விழப்புணர்ச்சிகாக நடத்தப்பட்டு பணம் சேர்க்கபடுகிறது.
ஆனால் இங்கே இது ஒரு பெரிய விளம்பர வியாபரமாகி விட்டது. பங்கேற்பவர்களுக்கு ஓட்டதின் நோக்கம் தெரிவதில்லை. ஸ்பான்ஸ்ர்களின் விளம்பரம் ஒட்டத்தின் நோக்கத்தையும் அது மக்களிடம் ஏற்படுத்தவேண்டிய தாக்கத்தை விட அவர்களின் நிறுவனம் அல்லது விற்பனை செய்யும் சாதனங்களை பற்றிய தாக்கத்தைத்தான் அதிகம் ஏற்படுத்துகிறது.  கடந்த ஆண்டு  துபாயில் வாழும் புற்று நோயால் தாக்கபட்ட  அக்காஷ் சென்னையில் டெரிபாக்ஸ் ஒட்டத்தை அறிமுகபடுத்தினார். இதற்காக பல பள்ளிகளில் காலை பிரார்த்தனை கூட்டதில் பேசினார். சில  வாரங்களக்கு முன் சென்னை  IIT யில் நிகழந்த இரண்டாமாண்டு ஆண்டு ஒட்டத்தில் கடந்த ஆண்டைவிட அதிகம்பேர் பங்கேற்றது மகிழ்ச்சியான விஷயம். ஆனால் அதில் பலருக்கு நோக்கம் தெரியாதிருந்ததுதான் வருத்தமானது. ஏன் ஒடினீர்கள்? எனற் கேள்விக்கு என் டிரையினர்  இது ஒரு நல்ல பயிற்சிக்கான வாய்ப்பு போ என்று சொன்னார்என் பிரண்டஸ் கூப்பிட்டார்கள் போன்ற பதில்கள் தான் கிடைத்தது.
அதேபோல் சமீபத்தில்  80000 பேருக்குமேல் பங்குகொண்டதாக அறிவிக்கபட்ட. சென்னை மாராத்தானில் பங்குகொண்ட பலருக்கு அது உதவுப்போகும் நிறுவனம் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. “எங்கள் வங்கி இதை ஸ்பான்ஸர் செய்திருக்கிறது.பெரிய அதிகாரிகள் பங்கேற்கிறார்கள் அவர்கள் கண்ணில் நான் பட வேண்டும்,” “சிவமணியின் டிரம்ஸ்சை இலவசமாக கேட்கலாம்எனபது போன்றது தான் பலரின் பதில். பல கோடிகளில் இந்த நிகழ்ச்சிகளுக்கு விளம்பரம்  செய்பவர்கள்  கடந்த ஆண்டுகளில் நடந்த ஓட்டங்களினால் சேகரித்த பணத்தில் என்ன தொண்டு செய்தார்கள் என்பதை பற்றி ஒரு சின்ன விளம்பரம் கூட கொடுக்காதபோது பங்குகொள்பர்களுக்கு தெரியாமல் இருப்பதில் வியப்பு ஒன்றுமில்லை என்றார், 50 குழந்தைகளை கூட்டிவந்த ஒரு ஆசிரியை.
ஒடியவர்கள் ஒடும்போழுதே குடித்துவிட்டு தூக்கிபோட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை பொறுக்க எழைக் குழந்தகள் ஒடிவந்த காட்சி மனதை உறுத்தியது.
பதவியிலிருக்கும் அரசியல்வாதிகளின் ஆசியோடு சிலர் தங்களை முன் நிறுத்திக்கொள்ளவும் ஸ்பான்ஸ்ர்கள் அவர்கள் உதவியோடு தங்களது தேவைகளை எளிதாக நிறைவேற்றிக்கொள்ளவும் இந்த ஓட்டங்கள் ஒரு எளிதான வழியாகிவிட்டது என்கிறார் ஒரு மூத்த பத்திரிகயாளார். கார்ப்ரேட்கள்  அவர்களது சமூக கடமையாக செய்த பணிகளை வெளியிடவேண்டியது(Corporate Social Responsblity) இபோது கட்டாயமாக்கபட்டிருக்கிறது. அதனால் சில நிறுவனங்கள்  அந்த கணக்கில் புத்திசாலிதனமாக இந்த விளமபரங்களை செய்கிரார்கள். தவிர்க்கமுடியாதாது   இது என்கிறார் பங்கு பெற்ற ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரி.
1981 டெரிபாக்ஸ் கனடாவில் ஓட்டத்தை துவக்கியபொழுது தேடிவந்த ஸ்பான்ஸ்ர்களை நிராகரித்தார்.சொன்ன காரணம்விளம்பரங்கள் ஒட்டதின் நோக்கத்தை தகர்த்துவிடும்.” தொடந்து அந்த ஓட்டத்தை உலகமெங்கும் நடத்தி  பல கோடிகளை நிதியாக சேர்த்தளிக்கும்   அவரது அறக்கட்டளை  இன்றும் கார்ப்பெரட் விளம்பரங்களுக்காக ஸ்பாஸ்ர்களை ஏற்பதில்ல.

(கல்கி 19.09.2010)

12/9/10

வன்முறை நிகழ்ந்த இடத்தில் வழிபாடு


வன்முறை நிகழ்ந்த இடத்தில் வழிபாடு


10ஆண்டுகளாகிவிட்டது. ஆனாலும் உலகம் மறக்காத கறுப்பு தினங்களில் ஒன்று செப் 11. சற்றும் எதிர்பார்க்காத தருணத்தில் சிலநிமிஷங்களில்  அல் கொய்தா தீவிர வாதிகளின் தாக்குதலால் தரைமட்டமாகிப் போனது 2001 செப் 11 ல் நியுயார்க் வேர்ல்ட் டிரேட் செண்ட்டர் இரட்டை கோபுரங்கள். அணுகுண்டு விசி அழிக்கபட்ட இடம் கிரவுண்ட் ஜிரோ (ground Zero) என அழைக்கபடும். அந்த பெயரிடப்பட்ட இந்த இடத்தில்  இப்போது விசாரணையெல்லாம் முடிந்து,  அமையப் போகும்  புதிய பெரியு  பலமாடி கோபரங்களின்  பெயர் சுதந்திர கோபுரம். டிஸைன்களுக்கு போட்டி வைத்து மக்கள் ஒட்டளித்து தேர்ந்தெடுத்தது.  மறைந்தவர்களுக்கு நினைவுசின்னம், மியூசியம், அழிவில் மிஞ்சிய அடையாள சின்னங்களுடன் பார்க் என மெல்ல எழுந்து கொண்டிருக்கும் கட்டிடத்துடன் ஒரு பிரச்சனையும் எழுந்துகொண்டிருக்கிறது,
தாக்கபட்ட கட்டிடத்தின் மிக அருகிலிருந்த்த ஒரு தனியார் கட்டிடம் 100மில்லியன் டாலர் செலவில் ஒரு மசூதியாக புதுபிக்கபட்டுகொண்டிருக்கிறது.  திருமதி டெய்ஸிகான் தலமையில் இயங்கும் குழு நன்கொடை வசூலித்து செய்கிறது. இவர் அப்துல் ராஃப் என்ற இமாமின் மனைவி.ஆனால்  அல் கொய்தாவின் மறைமுக உதவி என்பது பரவலாக உலவும் வதந்தி.  இரட்டைகோபரங்கள் தாக்கபட்டதிலிருந்தே முஸ்லீம்கள் மேல் கோபமாகயிருக்கும் அமெரிக்கர்கள் இதனால் கொதிப்படைந்து போயிருக்கிறார்கள்.  வேறு இடத்தில் அமைக்கவேண்டும், அனுமதியே கூடாது என கண்டன, கூட்டங்களாக எழுந்த போராட்டம் வலுக்க ஆரம்பித்திருக்கிறது.
அமெரிக்க மக்களுக்கு அதிர்ச்சி தந்த  அடுத்த விஷயம் பல வாரங்களாக அமைதி காத்த அமெரிக்க அதிபர் இந்த மசூதி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கைவிட்டிருப்பது  “அமெரிக்காவில்.எந்த மதத்தினரும் தங்கள் மத வழிபாட்டு தலங்களை அமைத்துகொள்ள  உரிமை உள்ளது. அதை தடை செய்வது அவர்களூக்குக நம் சட்டம் வழங்கியிருக்கும் சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும்” என்கிறார் ஒபாமா. அல்-கொய்டா இஸ்லாம் இல்லை. அவர்களது செயலுக்காக ஒட்டுமொத்த முஸ்லீம்களை வெறுப்பது கண்ணியமற்ற செயல் எனபது அவர் கட்சியின் நிலை.
ஒமமா  ஒரு கிருத்துவராகயிருந்தாலும் இன்னும்  பெயரில் ஒட்டிக்கொண்டிருக்கும் தனது தந்தை பெயரான ஹூஸைணை நீக்கவில்லை.எந்த அமெரிக்க அதிபரும் செய்யாத இப்தார் விருந்தை வெள்ளை மாளிகையில் அளித்திருக்கிறார் அதனால் அவர் முஸ்லீம்களின் செயல்களைகளை நியாப்படுத்துவதில் ஆச்சரியமில்லை என அதிபருக்கு மதச்சாயம் பூசுகிறார்கள்  மசூதிக்கு எதிராக போராடுவோர்.

(கல்கி 120910)





,

22/8/10

சென்னைக்கு ஹேப்பி பெர்த்டே.. . . .


சென்னைக்கு  ஹேப்பி பெர்த்டே.. . . .


சென்னை நகர்  1639  ஆகஸ்ட் 22ல் பிறந்தது என கண்டுபிடிக்கபட்டு, 2004 ஆண்டுலிருந்து அந்த நாளில்  “சென்னை டே” கொண்டாடப்படுகிறது. முதல் ஆண்டு மூன்று  நிகழ்சிகளுடன் துவங்கிய இது “சென்னை வாரமாகி”  இந்த ஆண்டு, புகைப்பட, ஒவிய கண்காட்சிகள்,இசை நடனவிழாக்கள், கருத்தரங்கு  கூட்டங்கள் குறும்படங்கள் என நகரின் பல இடங்களில் 60 நிகழ்ச்சிகளுடன் நகரின் பல அமைப்புகள் கொண்டாடினார்கள். ரோஜா முத்தையா நூலகமும்  சிறப்பு கூட்டங்களை நடத்தியது.. அதில் “இருளில் கனவு உலகம்- சென்னையின் சினிமா அரங்குகள்” தலைப்பில் தமிழ் சினிமா வரலாற்று ஆராய்சியாளரான திரு தியோடர் பாஸ்கர் பேசியதிலிருந்து.. ..
v  சென்னையில் முதல் சினிமா 10 நிமிட பேசா படம். எக்மோர் அருகே ஒரு டெண்ட்டில் வெள்ளகாரகளால் காட்டபட்டது. மின்சாரமில்லாமல்  எரியும் மக்னீஷ்ய நாடாக்கள் ஒளியில் காட்டபட்டது.தெரு ஒரங்களில் துவங்கி, பின்னர் மத்தியான நேரங்களில் காலியாகயிருக்கும் நாடக அரங்ககளில் காட்டபட்டது.
v  வெள்ளையர்களிடமிருந்து இதை கற்ற  வின்ஸென்ட் சாமிகண்ணு என்பவர்1905ல் இந்த முறையில் நாட்டின் பல பகுதிகளிக்கு டெண்ட்டுடன் பயணம்செய்து படங்கள் காட்டியிருக்கிறார். வடஇந்தியாவில் பெஷாவர் வரை பயணித்து படம் காட்டி ஈட்டிய பணத்தில்தான் கோய,ம்புத்தூரில் ‘வெரைட்டி ஹால்’ என்ற அரங்கை கட்டியிருக்கிறார்.
v  சென்னையின் முதல் மூன்று அரங்கங்கங்களும்  ஒரே ஆங்கிலேயரால் முழுக்க முழுக்க வியாபர நோக்கில் கட்டபட்டிருந்தது. தீண்டாமை மிக பரவலாக இருந்த அந்த காலகட்டத்தில்  திரைப்பட அரங்குகள் தான்  சம உரிமை நிலவியிருந்திருந்த முதல் பொது இடம். ஜாதிமத பேதமில்லால் ஆங்கிளேயர்களும் எல்லா ஜாதி இந்தியர்களூம் ஒன்றாக படம் பார்த்திருக்கின்றனர்.
v  சினிமா அரங்கங்கள் தான்  கம்பெனி நாடகங்களுக்கு மாற்றான ஒரு பொழுதுபோக்கு சாதமாக வளர்ந்ததால் அது நாடககம்பெனி  பழக்கங்களை அடியொற்றி துவக்கதில் மணி அடிப்பது,இடைவேளைவிடுவது எல்லாம் கடைபிடிக்கபட்டது. இன்று உலகளவில் கடைப்பிடிக்கும் சினிமாவில் இடைவேளை என்பது சென்னையில்தான் துவங்கியிருக்கிறது. இடைவேளயில் தின்பண்டங்களை இருந்த இடத்திற்கே வந்து விற்பனை செய்யும் வழக்கமிருந்ததால் அது ஒரு தனி தொழிலாகவே வளர்ந்திருக்கிறது.
v  துவக்கத்தில் சினிமாவை மக்களை தூண்டும் பெரிய சக்திவாய்ந்த  ஒரு ஊடகமாக பிரிட்டிஷ் அரசு நினைக்கவில்லை. அதனால்  சினினா குறித்து எந்த சட்டமுமில்லை. மாக்னீஷ்ய நாடாக்கள் பயன் படுத்துவதால் அரங்கங்களில் தீ விபத்து அபாயம் கருதி பாதுகாப்பு விதிகள் மட்டும்  உருவாயின. சினிமாவில் புராண சரித்திர பாத்திரங்கள் கூட கதர் தொப்பி அணிந்து மறைமுகமாக தேசிய விடுதலை விஷயங்களைப் பேச ஆராம்பித்த பின்னர், சினிமா வந்து 20 ஆண்டுகளான் பின்னர்தான் சென்சார் முறை அறிமுகபடுத்தபட்டது. போலீஸ் கமிஷனர் தான் சென்சார் அதிகாரி.


v  அண்ணல் தன் வாழ்நாளில்  சினிமா அரங்கிற்கு சென்றதில்லை.. அவர் வந்த ஒரே சினிமா அரங்கம் சென்னையிலுள்ள   மிட்லாண்ட் அரங்கம். . அன்றைய சென்னை பல்ககைலலகழக மானவர்கள் அவருக்கு ஒருவரவேற்பு கொடுத்த இடம் அந்த சினிமா தியட்டர். அரங்கத்திலேயே  அந்த வரவேற்புரை பத்திரத்தை  ஏலமிட்டபொழுது அதை வாங்கியவர் சுதந்ததிர போரட்ட வீரர் திருமதி  லஷ்மி சாமிநாதன்.அந்த சமயத்தில் முழு ஏலத்தொகைக்கும் அவரிடம் பணமில்லாதால் தன் தங்க கைவளையல்களை கழட்டிகொடுத்தார்.



கதையெழுதும் கண் டாக்டர்




சென்னயின் அந்த பிரபல கண்மருத்துவ மனையின்  சிறிய ஹால் நிரம்பிவழிகிறது.டாக்டர்களின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்.. சிகிச்சைக்காக அல்லஅந்த மருத்துமனையின் டாக்டரின் காபி வித் வக்கீல் வரது   புத்தக வெளியிட்டுவிழாவின் துவக்கத்திற்காகபுத்தகத்தின் பெயரில் காபி இருப்பதலோ என்னவோ வந்தவர்களுக்கு கொதிக்கொதிக்க காபி பித்தளை டபரா செட்டில் தந்தார்கள்
பார்க்க காத்திருக்கும் பல பேஷண்ட்கள்அடுத்த சிலமணிநேரத்தில் செய்ய வேண்டிய  கண்  மாற்ற ஆப்ரேஷனுக்கான ஆயுத்தங்கள்ரோட்டரிகிளப்  கண் வங்கியின் டைரக்டர்பணி,தமிழ்நாடு கண் மருத்துவர்களுக்கான பத்திரிகையின் ஆசிரியர் என தினமும் பரபப்பாகயிருக்கும் டாக்டர் சுஜாதா மோகன் அதற்கிடையிலும் ஒருசிறுகதைகள் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்இவர்   டாக்டர் ராஜன் கண்மருத்தவ மனையை நிர்வகிக்கும்  கண் டாக்டர் மோகனின் மனைவிஇந்த டாக்டர் தம்பதியினர் 90களிலியே கண்அறுவைசிகிச்சையில் உலகத்தரத்தில் புதிய நுட்பங்களை கொண்டுவந்து இன்றும் தொடர்ந்துகொண்டிருப்பவர்கள்.
 இவரது புத்தகத்தில் சிதம்பரத்தில் வாழ்ந்த ஒரு ஆச்சாரமான ஐங்கார் வரதாச்சாரி என்ற வக்கில் குடும்பத்தின் சொந்தகாரர்களை பாத்திங்களாக்கி 12 சிறுகதைகளாக உருவாக்கி ஒரு மெல்லிய இழையில் அவைகளை இணைத்து நாவலாக தொடுத்திருக்கிறார்எளிய அழகான நடைபாத்திரங்களின் சின்னசின்ன செயல்களில் கடந்த தலமுறை குடும்ப வழக்கங்கள்மதிப்பீடுகள்  போன்றவற்றை மெல்லிய நகைச்சுவையடன் சொல்லுகிறார்சீதாப்பாட்டி அப்புசாமியைப்படைத்த ஜெயராஜ் கதாபாத்திரங்களுக்கு உயிர்கொடுத்திருக்கிறார்படிக்கும் நடுத்திரவயதினருக்கு நிச்சியம் தங்கள் இளமைகாலம் நினைவில் நிழலாடும்.

இரண்டு பெண்களுக்கு தாயான  இவரின் முதல் புத்தகம் இதுபத்திரமான தலைப்பிரசவம் என  சொல்லும் இவர் ஒரு மருத்தவ குடும்பதின் மூன்றாவதுதலைமுறை டாக்டர். (இவது மகளும்  அரசு மருத்துவகல்லூரியில்  முதலாண்டு படிக்கிறார் !) இவர் எப்படி கதை எழுதத்துவங்கினார்எனக்கே ஆச்சரியமான விஷயம் இது என்று சொல்லும் இவர்  பள்ளியில் தன்னை எழுதத்தூண்டிய ஆசிரியர்களை நன்றியுடன் நினைவு கூறுகிறார் . தனது கணவரும் குடும்பத்தினரும் நண்பர்களும் தான் இது புத்தகமாக வந்ததற்கு காரணம் என்கிறார்.

தமிழ் தாய்மொழியாக இருந்தும்தமிழிலேயே பள்ளிப்படிப்பை முடித்திருந்தும் இதை ஆங்கிலத்தில் எழுதியிருப்பதற்கு காரணம் ஆங்கிலத்தில் பல ஆண்டுகள் தொடர்ந்த மருத்துவ படிப்பும் ஆங்கிலத்தில்  தொடர்ந்து மருத்தவ கட்டுரைகள் எழுதி ஆங்கிலம் சரளமாகிவிட்டதுதான்  என்கிறார்

பொதுவாக மருத்துவ துறை சம்பந்தப்பட்ட விழாக்களில் மட்டுமே பங்கேற்கும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைகழக துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன் இந்த புத்தகத்தை வெளியிட்டது   ஒரு ஆச்சரியமான மகிழ்ச்சிஅதைவிட மகிழ்ச்சியான விஷயம் மருத்துவர்கள்  தங்கள் பணி¢யைதாண்டி இப்படி இலக்கிய பணிகள் செய்வது மிகவும் வரவேற்கவேண்டிய ஒன்றுமருத்தவ பல்கலைகழகமே தமிழில் டாக்டர்களின் இப்படிபட்ட இலக்கியபணிகளுக்கு பரிசு கொடுத்து கெளரவிப்பது பற்றி ஆலோசித்துகொண்டிருக்கிறதுஎன்ற அவரது அறிவிப்பு..


கண் மாற்று அறுவை சிகிச்சையில்  உலகின் சிறந்த முதல் 27 பேர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இந்த கண் டாக்டர்தன்னிடம் வருபவர்களின் கண்களை கவனமாக பார்ப்பதுபோலதன் கண்களால் தன்னை சுற்றியிருப்பவர்க¨யும் அவர்களின் உலகத்தையும் கவனமாக பார்த்து கொண்டிருப்பவர் என்பது இந்த புத்தகதிலிருந்து புரிகிறது.
சந்திப்பு ; ரமணன்