26/6/11

எண்ணஙகளின் வண்ணங்களை மாற்றிக்கொள்ளாத ஒரு ஓவியன்



” “மிகத்திறமையான ஒவியகலை படைப்பாளியான அவருடைய மரணம் கலையுலகில் வெற்றிடத்தை தோற்றுவித்துவிட்டது “ என குடியரசு தலைவரும்,   ”உலகில் இந்தியாவின் அடையாளாமாக அறிய பட்ட ஒரு ஒவியனை தெசம் இழந்துவிட்டது” “ என பிரதமரும் அஞ்சலி செய்தி வெளியிட்டு கெளரவிக்கபட்டவர் இந்தியாவின் பிகாசோவாக அறியபட்ட ஹூசேன். மரணத்தின் பின் இத்தகைய கெளரவம் பெறும் இவரது இறுதிகால வாழ்க்கை சோகமானது.




உலகிலேயே நவீன ஒவியத்தின் தந்தையாக கருதபட்ட பிகாசோவிற்கு பின்னா அத்தகைய பாணி ஓவியங்களினால் உலகபுகழும்,பெரும் பணமும் ஈட்டிய இவர் தனது 96ம் வய்தில் லண்டனில் மரணம்அடைந்தார். சில ஆண்டுகளுக்கும் முன் ஒரு ஒவியம் விற்கபட்ட விலை 9 கோடி ரூபாய்கள். கடந்த மாதம் விற்கபட்ட ஒரு ஒவியத்திற்கு கிடைத்தவிலை 2 கோடி. இவரது மரணம் அடைந்த தினத்தன்று கூட இவரது ஒரு ஒவியம் 87 லடச்திற்கு ஏலமிடப்ட்டிருக்கிறது. எந்த இந்திய ஒவியனும் தந்து படைப்புகளுக்கு இவ்வளவு பணம் ஈட்டியதில்லை. இவரது ஒவியங்களைப் போலவே பிரமிக்கவைக்கும் விஷயம் இவரது சுறுசுறுப்பு. மரணத்திற்கு சில நாட்கள் முன்னர் கண்ணாடிசுவரில் ஒரு புதிய ஒவியத்தை  எழுத துவங்கியிருந்தார்.
மிக சாதாரண குடுமபத்தில் பிறந்து பிழைப்புக்க்காக சினிமா பேனர்கள் வரைய துவங்கி அந்த பணத்தில் ஓவியகல்லூரியில் நவீன ஓவியத்தை முறையாக் கற்று தேர்ந்தவர். மார்டன் ஆர்ட்டில் எண்ணற்ற் படைப்புகளை உருவாக்கிய இவருக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட் குதிரைகளும், பெண்களும். மாதுரி திட்ஷித்திலிருந்து அனுஸ்கா சர்மா வரை இவர்து ஓவிய நாயகிகளாயிருந்திருகின்றனர். இவர் தனது ஓவியங்களினால் பெற்ற புகழை விட 90 களில் சர்ச்சைகளினால் பெற்ற விளம்பரங்கள் தான் அதிகம். 70களில் இவர்  ஆடைகளில்லாமல் வரைந்த இந்து கடவுள்களின் படங்களை 90ல் ஒரு பத்திரிகை பிரசுரிக்க அதில் எழுந்த சர்ச்சை  இவர் முஸ்லீம் எனபதால் அரசியல் ஆகி தேசம் முழுவதும் எதிர்ப்புஅலையை  எழுப்பியது.  தொடர்ந்து 95ல் இவர் வரைந்த இந்திய வரை படத்தில் பாரதமாத ஆடையின்றி சித்திரிக்க்பட்டதால மீண்டும் சர்ச்சை எழுந்தது. சிவசேனா, விஸ்வஇந்துபரிஷித் போரட்டங்களை துவக்கியது. இவரது படைப்புகள் இருக்கும் காலரிகள் நாசம் செய்யபட்டது.  நாட்டின் பல கோர்ட்களில் இவர் மீது வழக்குகள் குவிந்தன, சம்மன்களை  ஏற்காததால். கைதுக்கான் வாரண்ட்டும் சொத்துகளை பறிமுதல் செய்தும் ஒரு கோர்ட் ஆணையிட்டது.
நாட்டின் உயரிய கெளரவமான பத்ம விபூஷன் பெற்ற இந்த கலைஞன், வழக்ககுகளையும், அரசியல் போராட்டங்கலையும் சமாளிக்க முடியாமல் நாட்டைவிட்டு வெளியேறவேண்டியதாகிவிட்டது. .பல நாடுகளில் ஹோட்டலில் வாழ்க்கையை கழித்துகொண்டிருந்த இவரை கததார் நாட்டு அரசு தங்கள்நாட்டினகுடிமகனாக அழைத்தது.   90 வயதில் தன் இந்திய குடிஉரிமையை இழந்து கத்தார் நாட்டின் பிரஜையான இவருக்கு அங்கு நிஜமாகவே ராஜ மரியாதை. நாட்டின் மன்னர் குடும்பத்தினர்  இவரது ஒவிய ரசிகர்கள். கத்தாரின் அரண்மனை, அரசு கட்டிட வளாகங்களை இவரது படைப்புகள் அலங்கரிக்கின்றன. கடந்த பிறந்த நாளுக்கு மன்னர் குடும்பம்  அளித்த பரிசு ஒரு ஃப்ராரி பந்த்ய கார். 90 வயதிலும் அதை அனாசிய்மாக ஒட்டி ஆச்சரியபடுத்தினார்.
தனது  ஓவியங்களுக்காக இந்து அமைப்புகளிடம் மன்னிப்பு கோர மறுத்து தன் மீது உள்ள எல்லா வழக்குகளையும் சேர்த்து டெல்லியில் விசாரிக்க 2006ல் இவர் கொடுத்த மனு ஏற்கபட்டது இறுதியில்  3 ஆண்டுகளுக்கு முன் டெல்லி உயர்நீதி மன்றம் தந்த தீர்ப்பு ” “ஒவியர் யார் மனத்தையும் புண்படுத்துவதற்காக எழுதிய படங்கள்  இவை இல்லை எனபது அவரது எண்ணற்ற புகழ்பெற்ற படைப்புகளை பார்க்கும் போது புரிகிறது. இந்த 90 வயது ஒவியன் தன் இறுதிநாட்களில் தாய் நாட்டில் தங்கி ஒவியங்கள் படைக்க உரிமையை இழக்கவேண்டியஅவசியம் இல்லை.  “ ஆனாலும் அரசு இயந்திரம் அந்த தீர்ப்பை செயல் படுத்த தவறிவிட்டது. கத்தாரில் எத்தனை கெள்ரவம் அளிக்கபட்டாலும்  இறுதி நாட்களில் இந்தியாவில் வாழ்வதையே விரும்பிய ஹீசேனின் இறுதி ஆசை நிறைவேறவில்லை. இந்தியாவில் இவருக்கு மிக பிடித்த நகரங்களில் ஒன்று சென்னை. இந்து நாளிதழ் ஆசிரியர் ராம் இவரது நெருங்கிய நணபர். சென்னை வருபோது அவர் இல்லத்தில் தான் தங்குவார். அங்கு அவரது  ஒரு செட் உடைகளும் ஒவிய பொருட்களும் அவருக்கான அறையிலிருக்கும். மரணத்திற்கு இரண்டு நாள் முறை மருத்தவமனையிலிருந்து திரு ராமிடம் பேசியபொழுதுகூட தன் ஆசையைப் பற்றி பேசியிருக்கிறார்.
 “ நம் காலத்தில் வாழ்ந்த ஒரு உலக புகழ்பெற்ற  இந்தியாவில் பிறந்து கடைசிவரை மும்பாய்காரனாகவே வாழ்ந்த ஒவியன் இறுதியில் ஒரு கத்தார் நாட்டு பிரஜையாக இறந்து எங்கோ லண்டன் இடுகாட்டில் புதைக்கபடுவது மிகப்பெரிய சோகம்” “ என்கிறார் பிரித்திஷ் நந்தி.
 ” “தன் ஒவியங்களுக்காக தன் \தேசத்தையே விட்டுகொடுத்தாலும் தன் பிடிவாத்தை விட்டுகொடுக்க மறுத்த இவரின் மரணம் மார்டன ஆர்ட்டுக்கு இழப்பாக இருந்தால் இருந்து விட்டு போகட்டும்.அதற்கு இவ்வளவு ஆர்பாட்டம் ஏன்? என்கிறார் சிவசேனா தலவர் பால்தாக்ரே.

             

    





19/6/11

யோகாசன குரு விரும்பும் “ஆசனம்”


யோகாசன குரு விரும்பும்  “ஆசனம் 

இந்திய அரசியலில் இந்திராகாந்தி காலத்திலிருந்தே யாராவது ஒரு சாமியார்
தீடிரென்று பாப்புலாராகி அரசியல் பண்ணிக்கொண்டிருப்பார். இப்போது பாபா ராம்தேவ். ஊழலுக்கும் கருப்பணத்திற்கும்  எதிராக போர்க்கொடி துவக்கி உண்ணா விரதம்  துவக்கியிருக்கும் இவர் ஹரியானா மாநிலத்தில் ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்தவ்ர். பக்கத்து சிறு நகரில் 8 ம்  வகுப்புடன் படிப்பை நிறுத்தி தங்கள் யாதவகுலவழக்கதிற்கு மாறக கான்பூர் சென்று ச்மஸ்கிருதம் படித்தவர். அங்குள்ளவர்களின் தொடர்பில் அறிமுகமான யோகாவை நன்கு கற்றபின் 20 வயதில் சனியாசியாகிவிட்டார். அடித்தட்டு கிராம மக்களுக்கு யோகாவை இலவசமாக் கற்பிப்பதில் மிகுந்து ஆர்வம் கொண்டு கிராமம்கிராமாக சுற்றிகொண்டிருந்தவர் திடீரென ஒரு நாள் இம்யமலை சாரலில் தவம் செய்ய போய்விட்டார். இரண்டாண்டுகளுக்குபின் திரும்பியவர் ஆச்சாரியா பால் கிருஷ்ணா எனபவருடன் இணைந்து  “திவ்விய யோக மந்திர்” “ என்ற அறக்கட்டளையை யோகா பயிற்சிக்க்காகவும் ஆயூர்வேத சிகிச்சைக்காகவும்  2003ல் ரிஷிகேசத்தில் நிறுவினார். அப்போது  ஆஸ்தா என்ற டிவி சானிலில்கிடைத்த காலையில் யோகா  பயிற்சிகள் நிகழச்சியை வழங்கும் வாயப்பு இவரது வளர்ச்சிக்கு பெரிதும் உதவியிருக்கிறது. குறுகிய காலத்தில் நாடறிந்த முகமாகிவிட்ட இவருக்கு தனது நிறுவனத்தை வளர்ப்பது எளிதாயிருந்தது 2006ல் ரிஷிகேசத்தில்  ” ‘இந்தியா உலகின் மிகபெரிய யோகா மற்றும் ஆயூர்வேத சிகச்சை கேந்திரமாக இருக்கவேண்டும் எனற குறிக்கோளுடன்  இவர் நிறுவிய”’’’’’ “பதஞ்சலி யோக பீட டிரஸ்ட்டின்  துவக்க விழாவில் பங்குகொண்டவர் அன்றைய துணை ஜனாதிபதி ஷெகாவத்.
அந்த கட்டதிலிருந்து இன்று வரை இவரது அசுர வளர்ச்சி ஆச்சரியமானது. நிறைய பக்தர்கள்,நாட்டின் பலநகரங்களில் கிளைகள், என வளர்ந்த இவரது அமைப்பு வெளிநாடுகளிலும் வேகமாக பரவியது. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் முக்கிய நரங்களில் சொந்த கட்டிடங்களில் கேந்திரங்கள். தினசரி யோகா வகுப்புகள் பயிற்சி முகாம்கள் என பிஸியாக இருக்கின்றன. பாபா ராம்தேவ், உலகம் சுற்றும் “குரு” ஆகிவிட்டார். பெரிய ஆஸ்ரமம், ஆடமபர கார், சொந்த விமானம் என  ஒரு பெரிய கார்பெர்ரேட் அதிபர் போல இயங்கும் இவரது நிறுவனத்தின் வரவு செலவு  அவரே அறிவித்தபடி 1100 கோடிருபாய்கள். ஆனால் உண்மையில்  1500 கோடிக்கும்மேல் இருக்கும் என்கிறார்கள். இலவசமாக யோக பயிற்சியை துவக்கிய இவரது யோகா வகுப்புகளுக்கு தான் இன்று இந்தியாவிலேயே அதிக கட்டணம். குருவிற்கு எதிரே இருக்கும் வரிசை என்றால் 30000ரூபாய் அடுத்த வரிசை 20000 என பல பிரிவுகள் உண்டு. இரண்டுஆண்டுகளுக்குமுன் ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ நகரின் அருகில்  “லிட்டில் கும்பேரே’ “ என்ற யாரும் வசிக்காத ஒரு குட்டி தீவை வாங்கி இவருக்கு பரிசளித்திருக்கிறார்கள் கிளாஸ்கோவில் வாழும் ஒரு பணக்கார  இந்திய தம்பதியினர். அதை உலக தர ஆயூர்வேத சிகிச்சை கேந்திரமாகவும் ஆரோக்கிய வாஸஸதலமாகவும்  உருவாக்க போவதாக ராம்தேவ் அறிவித்திருக்கிறார்.
இவரது ஹரித்துவார் ஆயூர்வேத ஆஸ்பத்திரியில் விற்கபடும் மருந்துகளில் மிருக, மனித எலும்புகள் கலக்க பட்டிருகின்றன  இது ஆபத்தானது  என பரிசோதனை ரிபோர்ட்,மருந்துசீட்டு,பில் மருந்து ஆகியற்றுடன் மார்க்ஸிஸ்ட் தலவர் பிருந்தா கரந்த் 2006ல் எழுப்பிய புகார்  பிரச்ச்னையின் சலசலப்பு சரத் பாவர், முலயாம்சிங் போன்ற தலைவர்களின் அறிக்கைகளுக்கு பின் ஒய்ந்தது.

 “ நான் சன்னியாசி எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை “  என்று சொல்லிக்கொண்டிருந்தவர், 2014 பாராளுமன்ற தேர்தலில் தனிகட்சி அமைத்து போட்டியிடபோவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.. அண்னாஹஸாரே யின் போராட்டதிற்கு ஆதரவுஇந்த உண்ணாவிரத  போராட்டம் எல்லாம் அதற்கு  ஒரு முன்னோட்டம். டெல்லி ராம்லீலா மைதானத்தில்  உண்ணாவிரதம் ஒரு பெரிய அரசியல் கட்சியின் மாநாடு போல பெரிய பந்தல்,700 ஃபேன்கள், 100 ஏர்கூலர்கள், தற்காலிக டாய்லெட்கள் என பிரமாண்டமாக பெரும் பொருட்செலவில் ஏற்பாடு செய்யபட்டிருந்தது..அரசியலில் இவர் ஒரு புதிய சக்தியாக வளர்ந்து விடலாம் என்ற பயத்தில்  மத்திய அமைச்சர்கள் இவருடன் பேச்சு நடத்திகொண்டிருந்தாலும் காங்கிரஸ்கட்சியின் சில தலைவர்கள் இவரது செயலை கண்டனம் செய்ய தவறவில்லை.. நடிகர் சாருக்கான் ” “ஊழல் ஒழிப்பது போராட்டம் எல்லாம்  சாமியாரின் வேலையில்லை “ என அறிவித்திருக்கிறார். வடஇந்திய பத்திரிகைகள் இவருக்கு இருக்கும் மக்கள் ஆதரவை மட்டுமில்லமல் அவரது  செய்கைகளின் ஆடம்பரத்தையும் அவருடைய  பதவி ஆசையையும் சுட்டி காட்டுகின்றன.
உண்ணாவிரதம் இருப்பது ஜன நாயக உரிமை ஆனால் அதை விளம்பரங்களோடு ஆடம்பரமாக செய்தால் அரசியல். யோகாசான குருவாக தனக்கு இருக்கும் மதிப்பையும் புகழையும், பயனபடுத்தி  “லஞ்சம் வாங்கும் அரசியல் வாதியை தூக்கில்போடவேண்டும், பிரதமரை நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டும். 500ருபாய் செல்லாதாக அறிவிக்க வேண்டும்,ஆங்கிலத்தை ஒழித்து இந்தியை பரப்பவேண்டும் “ என்று செய்ய முடியாவைகளை உடனடியாக செய்ய கேட்டு அரசை நிர்பந்த்தித்து ஒரு ஜனநாயக  அரசையே பிளாக்மெயில் செய்ததைவிட மோசமானது, நமது அமைச்சர்கள் பதறிப்போய் அவர் காலில்  விழுந்தது தான்.

29/5/11

மதராஸ பட்டிணத்தின் காதலர்




ஹிந்து நாளிதழலில்  ஒவ்வொரு திங்கட்கிழமையும் வெளிவரும் ஒரு தொடர் பகுதி  “மெட்ராஸ் மிஸ்லேனி””“ ” சென்னை நகரின் மிக பழைமையான  கட்டிடங்கள்நிகழ்வுகள், மனிதர்கள் புத்தஙகள் போன்ற பாரம்பரிய சின்னங்களைப்பற்றிய  சுவராசியமான கட்டுரைகளை நகைசுவையோடும் அரிய புகைபடங்களுடனும் எழுதிவருபவர் திரு. எஸ் முத்தையா. 1999 ஆம் ஆண்டு துவக்கிய இந்த  செய்திகட்டுரைகளின் தொடர்  இன்றும் தொடர்கிறது.   உலகில் ஒருவாரம் கூட இடைவெளியில்லாமல் 11 ஆண்டுகளாக தொடர்ந்து ஒரேவிஷயத்தை பற்றி தனிப்பகுதி எழுதிக்கொண்டிருக்கும் பத்திரிகையாளார் இவராகத்தான் இருக்க முடியும்.
இவரது 11 ஆண்டு கட்டுரைகளை தொகுத்து  “பீப்புள்-பிளேஸஸ்-பாட்பூரி என்ற பெயரில் சமீபத்தில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள்.. மேற்கு வங்க முன்னாள் கவர்னர் திரு கோபாலகிருஷ்ண காந்தி  இந்த புத்தகத்தை வெளியிடும்போது   “வாரம் தோறும் தொடர்ந்து எழுதும் சில பத்திரிகையாளார்கள் தினசரியில் இடத்தை நிரப்ப உதவுவார்கள். சில பத்திரிகயாளர்கள் தங்கள்  எழுதும் பகுதியினால் தினசரிக்கு பெருமை சேர்ப்பார்கள். முத்தியா இரண்டாவது ரகம். சென்னையையின் பெருமைமிக்க பழைய கட்டிடங்களின் மீது முத்தியா கொண்டிருக்கும் அலாதி பிரியத்தினால், அவர் தொடந்து அதுபற்றி எழுதி வந்ததால்தான் பல கட்டிடங்கள் காப்பற்றப்டட்டிருக்கின்றன. அதற்கு சென்னை நகரம் அவருக்கு கடமைப்பட்டிருக்கிறது” “. என்றார்
திரு முத்தையாவின் கட்டுரைகள் வெளியான உடனேயே  வாசக்கர்களிட்மிருந்து வரும்  அது தொடர்பான பிறசெய்திகள், சமந்தபட்டவர்களின் வாரிசுகள் இப்போது இருக்குமிடம் போன்ற பல தகவல்களையும் பின்னுட்டமாக வெளியிட்டு  எழுதிய விஷயத்தை முழுமையாக்குவதினால் இவரின் இந்த பகுதி ஹிந்து நாளிதழில் வாசகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றிருக்கும் ஒன்று. அறுபது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் இந்த எழுத்தாளார் கடந்த 50 ஆண்டுகளாக  தினசரிகளில் தொடர்பகுதிகளை தொடர்ந்து எழுதும் சாதனையை படைத்திருப்பவர். தனது 81 வது பிறந்த நாளில் இந்த புத்தகம் வெளியானதில்     “தான் சென்னையின்   வரலாற்று பதிவாளார் என்று அங்கீகரிக்கபட்டதற்காக  மகிழ்ச்சியடைகிறார்.

 “நீண்ட ஆராய்ச்சிகளுக்குபின்னர்ஆனால் அந்த ஆராயச்சியின்வாசனை சிறிதுமில்லாமல், சிக்கனமானவார்த்தைகளில், அழகான ஆங்கிலத்தில் சுவராஸ்யமான  கட்டுரைகளை ஒவ்வொரு வாரமும் சரியான நேரத்திற்கு அனுப்பிவைப்பவர் முத்தையா” “ என்று  அன்றைய விழாவில் பாரட்டியவர் ஹிந்து நாளிதழ் ஆசிரியர் ராம்.

எஸ் முத்தையா.   BOX MATTER
செட்டிநாட்டின் பள்ளத்தூர் கிராமத்தில் பிறந்த முத்தையா மிக சிறுவயதிலியே இலங்கை சென்று அங்கு வளர்ந்தவர். அங்கு பத்திரிகையாளாராக வாழ்க்கையை துவக்கி டைம்ஸ் ஆப் சிலோன் என்ற நாளிதழில் முதல் நிலை ஆசிரியராக தன் 38 வயதில் உயந்தவர். பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராக ஒரு சிங்களரே இருக்க முடியும் என்பது விதியாகையால் ஆசிரியராக்குமுன்  இவருக்கு கெளரவ குடிமகன் உரிமைக்கு சிபார்சு செய்யபட்டிருந்த்து. ஆனால் அப்போது நிகழந்த ஆட்சி மாற்றத்தால் அது கிடைக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் இரண்டாம் நிலை ஆசிரியராக இருக்க விரும்பாத முத்தையா மனம் வெறுத்து போய் சென்னை திரும்பி  பிரபல ஆங்கில பத்திரிகைகளில்  வேலைக்காக முயற்சித்துகொண்டிருந்தார். கிடைத்தது டி டி கே குழுமத்தின் மேப்புகள் அச்சிடும் புதிய நிறுவனத்தின் பொறுப்பு. அதன் ஒரு பதிப்பாக  சென்னையை பற்றிய புத்தகம் தயாரிக்க துவங்கியதில் ஏற்பட்ட ஆர்வத்தில்  இவருக்கு இந்த நகரத்தின் மீது பிறந்த காதல் இன்றும் தொடர்கிறது.நகரின் பராம்பரிய கட்டிடங்கள் படங்கள் புத்தகங்கள் பற்றிய பல விபரங்களை தொடர்ந்து சேகரித்துவரும் இவரது முயற்சியினால் தான் சென்னை நகரின் பிறந்த


தினம் கண்டுபிடிக்க்பட்டு இப்போது ஆண்டுதோறும் ஆகஸ்ட்மாதத்தில்
விழாவாக கொண்டாடபடுகிறது. சமீபத்தில் தனது 81 பிறந்தநாளை கொண்டாடிய இவரின் சுறுசுறுப்பு பிரமிக்க வைக்கிறது. தினமும 8 மணிநேரம் அலுவலகதில் பணிபுரிந்தபின் எழுதுகிறார்.
இதுவரை 30 புத்தகங்கள் எழுதியிருக்கும் இவர் மெட்ராஸ் மியூஸிங்ஸ் என்ற மாத சஞ்சிகையயையின் பதிப்பாசிரியரும்கூட... இன்றைய கம்யூட்டர், ஈமெயில் யுகத்தில், டைப் செய்து கட்டுரையை அனுப்பும் ஆங்கிலத்தில் எழுதும் ஒரே எழுத்தாளார் இவர் தான்.  ” “தொடர்ந்து  வேலைகள் செய்துகொண்டிருப்பதால்  வாழக்கை இனிமையாக இருக்கிறது”” “  என்று சொல்லும் முத்தையா விற்கு  அவரது  பாரம்பரிய சின்னங்களின் பாதுகாப்பு பணிக்காக  இங்கிலாந்து  அரசு  அரசியின்MBEவிருது அளித்து கெள்ரவித்திருக்கிறது

.





22/5/11

இந்த தேர்தலில் திமுக ஏன் மோசமாக தோற்றது ? 1





கணக்கினால் பெயில்;;;; கெமிஸ்ட்ரியினால் பாஸ்

தமிழக தேர்தலில் எப்போதுமே  கூட்டணியின் சில கணக்குகள் தான் முடிவை தீர்மானிக்கும். கணக்கை சரியாக போட்ட அணி ஜெயிக்கும் என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால் இம்முறை கலைஞர் போட்ட கணக்குகள் அத்த்னையும் தப்பாக போயிற்று.  முந்தைய தேர்தலில் கிடைத்த வோட்டுகளீன் சதவீத கணக்கு, சாதி ஓட்டுகளின் கணக்கு,  34 சீட் ஜெயித்த  காங்கிரஸுக்கு 63ஐ கொடுத்தது , 2ஜீ விஷயம்  கிராம மக்களுக்கு புரியாது என்ற கணக்கு, தன் குடும்ப வாரிசுகளைப்போலவே மாவட்டங்களின் வாரிசுகள் ஜெயித்துவிடும் என்ற் கணக்கு,இலவச டிவி, காஸக்கும் மக்கள்  நன்றி செலுத்துவார்கள் என்று எல்லா கணக்குகளையும் தப்பு தப்பாக போட்டதினால் மக்கள் மார்க போடவில்லை.,
 தொகுதி அறிவிப்பு என்ற் முதல் கேள்விக்கு அளித்த தவறான விடையை உடனே மாற்றி  கூட்டணி கட்சி தலைவர்களுடன் நல்ல கெமிஸ்ட்ரியை   ஏற்படுத்தி அதை  தொண்டர்கள் மட்டத்திலும்  உருவாக்கியதனால் தான் அம்மாவிற்கு மக்கள் நல்ல மார்க் கொடுத்திருக்கிறார்கள்.
பல இடங்களில் காங்கிராஸுக்காக வேலை செயாத திமுக  தொண்டர்கள், செய்தவர்களை அவர்கள் கட்சிகாரகள் தடுத்ததையும்தேதிமுக தலைவரை பற்றிய விமர்சனங்கள் கடுமையாக இருந்த போதிலும் அதிமுக தொண்டன் அது பற்றிய கவல்யில்லாமல் அம்மாவின் கட்டளைப்படி வேலை செய்ததை பல இடங்களில் பார்க்க முடிந்தது.
ரமணன். 

24/4/11

அன்னா ஹஸாரே


அன்னா ஹஸாரே (ANNA HAZARE)


1965ல் இந்திய பாகிஸ்தான் போரில் பாக்கிஸ்தானின் கடுமையான விமானதாக்குதலுக்கு ஆளான அந்த ராணுவ யூனிட்டில் மயிரிழையில் உயிர்தப்பிய அந்த இளைஞனைத்தவிர மற்ற அத்தனை பேரும் சந்த்தித்தது மரணம். கனத்த மனத்துடன் தானும் தற்கொலைசெய்து கொள்ள முயற்சித்த  அந்த 25வயது இளைஞனை விடுமுறையில் வீட்டிற்கு அனுப்பினர் அதிகாரிகள். தன் கிராமத்திற்கு பயணம் சென்றுகொண்டிருந்த அந்த இளைஞனின் வாழ்க்கையை திசைதிருப்பியது அன்று  அவன் ரெயிவேஸ்டேஷனில் வாங்கிய விவேகானந்தரின் புத்தகம். படித்து முடித்த பின் தான் மற்றவர்களுக்காக உதவுவதற்காக  வாழவேண்டிய வேண்டிய அவசியத்தை கடமையாக உணர்ந்த ஹாஸாரே தன் ராணுவ வாழக்கையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று கொண்டு 1975 ல் தன் கிராமத்தில் மக்களுக்காக உழைக்க துவங்கினார். ராலிகென் சித்தி ( Ralegan Siddhi) என்ற அந்த  சொட்டு தண்ணீர் கூட இல்லாத சின்னஞ்சிறிய கிராமத்தில் குடிப்பழக்கதிற்கு அடிமையான மக்களுடன் போராடி அவர்களுக்கு உழைப்புதானத்தின் அருமையை புரியவைத்து அருகிலிருந்து மலைகளின் இடையே சிறிய அணைகளையும், சின்ன ஏரிகளையும் கிராமமக்களின் உழைப்பை தானமாக தரச்செய்து  நீராதாரத்தை  ஏற்படுத்தி கொடுத்து  விவசாயத்தை செய்ய வைதார். வெற்றியை சுவைத்த மக்களின் பஙக்ளிப்புடன் பக்கத்து கிராமங்களும் பயன்பெற அது ஒரு இயக்க்மாகவே வளர்ந்தது. 1991ல் அரசின் உதவிகளைப்பெற செய்த முயற்சிகளில் அரசின் 42 வனத்துறை அதிகாரிகள் அரசை எமாற்றி பணம் சுருட்டுவதை கண்டு வெகுண்டு எழுந்து தொடர்ந்து போராடி கவர்னரிடம் ஆதாரஙகளை சமர்பித்து ஆறு அமைச்சர்களும் 400 அதிகாரிகளையும் பதவியிழக்கவைத்திருக்கிறார். அன்று முதல் தொடர்ந்து ஊழலை ஒழிக்கும் போரில் ஈடுபட்டிருகிறார் இந்த முன்னாள் படைவீரர். ஊழலுக்கு முக்கிய காரணம் நம்து நடைமுறைகளிலிருக்கும் வெளிப்படையில்லாத அணுகுமுறைதான் எனபதை உணர்ந்து  “தகவல் அறியும் உரிமையை “ சட்டமாக்க போராட ஆரம்பித்தார்.1997லிருந்து 2003 வரை போராடியும் மாநில அரசு அறிவிப்புகள் தந்து கொண்டிருந்த்தே தவிர சட்டமாக்கவில்ல. 2003 ஜுலையில் மும்பாய் ஆஸாத் மைதானத்தில் இவரது 12 நாள் உண்ணாவிரதபோராட்டதிற்கு பின் சட்டமாக்க முன்வந்தது மஹாரஷ்டிரஅரசு. இந்த சட்டம்தான் மத்திய அரசின் தகவல் அறியும் சட்டத்திற்கு அடிப்படை.
மஹாராஷ்டிர கிராம கூட்டுறவு சங்கங்களில் பெரிய அளவில் நடந்த மோசடியில் ஏமாற்றபட்ட மக்களுக்காக உண்ணாவிரதமிருந்து போராடி மீட்டுகொடுத்த பணம் 125 கோடி. பிரம்மச்சாரியான இவருக்கு சொத்து ஏதுமில்லை, வங்கிகணக்கில்லை. தனது முயற்சிகளினால் பலனடைந்த தன் கிராமதிலிருக்கும் சொந்த வீட்டில் கூட வசிக்க்காமல் ஒரு கோவிலில் வசிக்கும் இந்த எளிய மனிதரை பல நிருவனங்கள் கெளரவித்திருக்கின்றன. பல லட்சங்களை பரிசாக வழங்கியிருகின்றன. அனைத்தையும் அறக்கட்டளைக்களுக்கு நன்கொடைகளாக தந்திருக்கும் இவர்  1992ல் ல் தனக்கு தரப்பட்ட பதமபூஷன் விருதை  அரசின் போக்கில் அதிருப்தி அடைந்து திருப்பி தந்திருகிறார்.
இப்போது  தனது 71வது வயதில்  40 ஆண்டுகளாக தூங்கிகொண்டிருக்கும் லஞ்ச ஒழிப்பு சட்டமாக வேண்டிய லோக்பால் மசோதாவை உடனடியாக சட்டமாக்க மதிய அரசுடன் போரை  தனது  “சாகும் வரை அல்லது சட்டமாகும் வரை “ உண்ணாவிரதத்துடன் கடந்த வாரம் துவக்கினார்,   நாடுமுழுவதும் காட்டுதீயாக பரவிய ஆதரவு அலையினால் அரண்டுபோன மத்திய அரசு அன்னா ஹஸாரே விரும்பிய படி மக்கள் பிரதிநிதிகளூம் அமைசர்களும் அடங்கிய குழு தயாரிக்கும் ம்சோதாவை நாடளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஒப்புகொண்டதால் உண்ணாவிரதத்தை முடித்துகொண்டார்.





இந்தியாஜெயித்தது



ஜெயித்தது கிரிக்கெட்டில் 28 ஆண்டுகளுக்குபின் உலக கோப்பையை மட்டுமில்லை. 43 ஆண்டுகளாக  ஆட்சிகட்டிலில் அமரந்த  அரசுகள் செய்யமல் தட்டி கழித்துகொண்டு வந்த ஒரு விஷயத்தை ஆறே நாட்களில்  எந்த அரசியல் கட்சியின் தயவும் இல்லாமல் “மக்கள் சக்தி” “ யினால் மட்டுமே இந்த அரசை செய்ய வைத்து வெற்றிபெற்றிருகிறார்கள் இந்திய மக்கள். எல்லா கட்சிகளும் தவறாமல் சொல்லிவரும் ஆனால் அதற்காக எதுவும் செய்யாமல் இருக்கும் ஒரு விஷயம் ” “லஞ்ச ஊழல் ஒழிப்பு.” “1968ல் லஞ்சத்தை சட்டபூர்வமாக ஒழிக்க கொண்டுவரபட்ட மசோதா  “லோக்பால்” “ இதன்படி  இது ஒரு தண்டிக்கும் அதிகாரமில்லாத ஆலோசனை வழங்கும் அமைப்பாகயிருக்கும். பிரதமர் உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் மீது மட்டுமே சொல்லப்பட்ட புகார்களை, அவைத் தலைவ்ர் அனுப்பினால் விசாரிக்கும். பொய்புகார் கொடுத்தால் கொடுத்தவர் தண்டிக்க படுவார். இதன் 3 முன்னாள் நிதிபதிகள் கொண்ட உறுப்பினர் குழுவை அரசே  நியமிக்கும்.பிரதமருக்கு எதிராக எழுப்பபடும் புகார் தேசபாதுகாப்பு, வெளிநாட்டு, உள்நாடு பாதுகாப்பு சம்பந்தபட்டதாக இருந்தால் அதைஇந்த  அமைப்பு விசாரிக்கமுடியாது. இப்படி இந்த பல் இல்லாத பாம்பு அமைப்பை கூட சட்டமாக்க தொடர்ந்து  ஆட்சிக்கு வந்த எந்த அரசுக்கும் துணிவில்லை. நடைபெறும் கூட்டதொடரில் நேரமில்லை, எதிர்கட்சிகள் ஒத்துழைக்கவில்லை, சட்ட துறை வல்லுனர்களின் அறிக்கை வரவில்லை என பல நொண்டிசாக்குகள் சொல்ல்லபட்டுவந்தன. ஆனல் இந்த அமைப்பை உருவாக்குவோம் என ஓவொரு தேர்தலிலும் எல்லா கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் முழங்கின.
அன்னாஹஸாரே,  கடந்த ஆண்டு, முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே வழக்கறிஞர் பிராசாந்த் பூஷன்,அரவிந்கெஜிரிவால்(இவர் தகவல் உரிமைக்காக போரடியவர்களில் ஒருவர்) போன்றவர்களின் உதவியுடன் இந்த லோக்பால் மசோதாவை புதிய வடிவில்  ” “ஜன லோக்பால் “ என தயாரித்து பிரதமர் மற்றும் அத்துனை மாநில முதல்வர்களுக்கும் அனுப்பியிருந்தார்.
அந்த வரைவு திட்டத்தின்படி ””” ‘ “லோக்பால்“  சுப்ரீம் கோர்ட், தேர்த்ல் ஆணையம், போல தன்னாட்சி பெற்ற அமைப்பாகஇருக்கவேண்டும். அரசியல் வாதி மட்டுமில்லை, அதிகாரிகள் நிதிபதிகள் எவர்மீது ஊழல் புகார்  இருந்தாலும் விசாரிக்க,புலனாய்வு செய்ய, தண்டனை அளிக்க, ஊழலில் சேர்த்த சொத்துகளை  திருப்பி எடுத்து கொள்ள  என சகல அதிகாரம் கொண்ட ஒரு வலுவான அமைப்பாக இருக்கும். சிபிஐயின் ஊழல் தடுக்கும் பிரிவும் மத்திய கண்காணிப்பு கமிஷனரும் இந்த அமைப்பின் கட்டளைப்படி பணியாற்றுவார்கள்.- என்ற ரதியில் அமைந்திருந்த்து. புதிய மசோதாவை அனுப்பியபின்னர் ”’ பிரதமரிடம் இது குறித்து பேச நேரமும் கேட்டிருந்தனர். இந்த குழுவினர். அரசும் பிரதமர் அலுவலகமும்  இதை பெரிதாக எடுத்துகொள்ளவில்லை.
இந்த நிலையில் பத்திரிகைகளுக்கு அறிக்கைகள், பத்திரிகையாளார் கூட்டம், என்ற  விளமபரம் எதுவுமில்லாமல்  “ஏபரல் 5ல் இதற்காக உண்ணவிரதம் இருக்க போகிறேன், முடிந்தவர்கள் முடிந்த நாட்கள் வரை இணைந்து கொள்ளுங்கள்.உண்ணாவிரத்தோடு  ஊழல் இல்லாத  இந்தியா உருவாக பிராத்தனையும் செய்யுங்கள். பிரதமருக்கு கடிதம் எழுதுங்கள்.அமைதியுடன் போராடுங்கள் அவசியமானால் ஜெயிலுக்கு போகவும் தயாராக இருங்கள். இது நமது இரண்டாவது சுதந்திரபோர். “ என்ற அறிவிப்போடு டெல்லி ஜந்தமந்திர் வளாகத்தில் தன் உண்ணா விரத்தை துவக்கினார் அன்னா ஹஸாரே.
யாருமே எதிர்பாராமல் திடிரென எழுந்த சுனாமியைபோல்   தேசம்முழுவதும் எழுந்தது அன்னாஹாசாரே அலை. முதல் நாள் வெறும் 200 பேருடன் துவங்கிய போரட்டத்திற்கு 3 நாட்களில் டெல்லி மட்டுமிலாமல் நாடு முழுவதும் பல நகரங்களில் உள்ளூர் சமுக ஆர்வலர்கள் உண்ணாவிரத்தை துவங்கிவிட்டனர். போரட்டத்தை வாழ்த்தி தங்கள் ஆதரவை தெரிவிக்க ஊர்வலங்களும், பேரணிகளும் மெழுகுவர்த்திகளுடன் பிராத்தனை கூட்டஙகளும் பல நகரங்களில் எழந்தன. பேஸ்புக் பக்கத்தில் இரண்டுநாளில் 27000 பேருக்குமேல் தங்கள் ஆதரவை பதிவுசெய்தனர். சானல்கள் நேரடி ஓளிபரப்பின. கிரிகெட்டில் உலககோப்பை வெற்றி,  மாநில தேர்தல்கள், எல்லாவற்றையும் ஒதுக்கி தேச்த்தின் எல்லா நாளிதழ்களிலும்  தலைப்பு செய்தியானது இவரது போராட்டம். விஷயம் வேகமாக வீபரிதமான அளவிற்கு வளர்ந்து கொண்டிருக்கிறது எனபதை உணர்ந்த அரசு  உடனடியாக செயலில் இறங்கியது. பிரதமர் அலுவகத்திலிருந்து உண்ணா விரத்தை கைவிட கடிதம் வந்தது. பிரதமர் என்ன எழுதியிருந்தார் எனபது வெளியிட்ப்படவில்லை. ஆனால் அன்னா ஹாஸ்ரேயின் பதிலில் இருந்த வெப்பம் அது என்னவாகயிருந்திருக்கும் என்பதை புரியவைத்தது.  “என்னை வைத்து சதிகாரர்கள் விளையாட நான் என்ன ஒன்றும் தெரியாத குழந்தையாஅப்படியே அது உண்மையானல்லகூட அது ஊழலை ஒழிக்க நீஙக்ள் எந்த முயற்சியையும் எடுக்காமலிருக்க காரணமாகிவிடாது.புதிய வடிவில் இந்த மசோதாவை உருவாக்குவதற்கான் கமிட்டியில்  சமூக ஆர்வலர்கள் அரசியல் வாதிகள் சம அளவில் உறுப்பினார்களாக இருக்க வேண்டும். மசோதா அடுத்த கூட்ட தொடரில் தாக்கல் செய்யபடவேண்டும் அதை நீங்கள் அறிவிக்கும் வரை  நான் உண்ணாவிரத்தை முடிக்க மாட்டேன் என தெளிவாக தெரிவித்தார். சில மணி  நேரங்களில் அமைச்ச்ர் கபில் சிபில் கமிட்டியில் சமபங்களிப்பதில் பிரச்சனையில்லை ஆனால் உண்ணாவிரதபோரட்டம் என்ற பெயரில் கோடிட்ட இடத்தில் அரசங்கம் கையெழுத்திட்ட வேண்டும் என்று கட்டயாப்படுத்துவது நியாமில்லை. லஞ்ச ஊழலை ஒழிக்க அரசு அமைத்திருக்கும் காபினட் அமைச்சர்களின் குழு,  இந்த பிரச்சனையை கவனிக்கும் என்றார். சட்ட அமைச்சர் வீரப்பமொயிலி ” “எங்கள் அலுவலகத்தில் நீங்கள் அனுப்பிய ம்சோதாவை தொலைத்துவிட்டார்கள்“ என்று சொன்னது அன்னாஹஸாரேக்கு மட்டுமில்லை பலருக்கு கோபத்தை உண்டாக்கியது.  “ பல ஆயிரகணக்கான ஏக்கரில் நிலம் வைத்திருக்கும், பெரிய மாபஃபியாகளாக வர்ணிக்கபடுவர்களுடன் தொடர்பிருக்கும், ஐபிஎல், 2ஜி ஊழல்களில் சம்பந்தபட்டவராக சந்தேகபடும் நபர் சரத்பாவர். அவரைப் போன்ற அமைச்சர்களா இந்த ஊழல் ஒழிப்பு மசோதவை தயாரிக்க உதவப்போகிரார்கள் ? என சீறினார் அன்னாஹஸாரே. விளவு மறு நாள் சரத் பாவர்  காபினட் அமைச்சர்களின் குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.  மஹராஷ்டிராவில் நன்கு அறியபட்ட இந்த நேர்மையான மனிதரின்  வார்த்தைகளின் பலம் அவருக்கு தெரியும்.  நமது அரசியல் வாதிகளை நன்றாக அறிந்திருக்கும் இந்த மனிதர்  வாழ்த்து சொல்ல வந்த எந்த அரசியல் வாதியையும் மேடை ஏறவிடவில்லை..ஆதரவை அறிவித்துவிட்டு ஆதரவு தராத கட்சிகளை ஊழலை ஊக்குவிப்பர்கள் என சொல்லி அரசியல் ஆதாயம் தேட முற்படுவார்கள் என்பதால்   முன்னாள் உபி முதலமைச்சர் உமா பாரதி போன்றவர்கள் திருப்பியனபட்டனர். மேதாபட்னாகர், கிரண்பேடி போன்ற அர்சியல் சாயம் இல்லாதவர்க்ளே பேச அனுமதிக்கபட்டனர்.
மறுநாள் காலை சோனியாகாந்தியின் “அன்னாஹஸாரேயின் திட்டஙகளை நான் ஆதரிக்கிறேன். என்ற அறிக்கை அரசின் தரப்பிலிருந்து வந்த முதல் சமாதான அம்பு. இந்த அரசு புதிய ம்சோதாவை உருவாகக  உடனடியாக ஆவன செய்யும் என அறிவித்தார். தொடர்ந்து பரபரவென்று பல சுற்று பேச்சு வார்த்தைகள். சந்திப்புக்கள். இறுதியில் உண்ணாவிரத்தின் 5 வது நாளின் இரவில்  அரசு அவரது அத்தனை கோரிக்கைகளையும் ஏற்று அமைச்சர்கள் பிராணப் முகர்ஜிவீரப்பமொய்லி, அந்தோனி ஆகியோர் அர்சுசார்பில் குழுவில் பங்கேற்பார்கள் என  அதிகார்பூர்வ்மாக் அறிவித்தது. இந்த குழு அன்னாஹஸாரே அறிவிக்கும் மக்கள பிரநிதிகளுடன் இணைந்து ம்சோதா வடிவை ஜுன் மாதத்திற்குள் உருவாக்கி அடுத்தவரும் பாராளுமன்ற கூட்டதொடரில் மசோதாவாக சமர்பிக்கும்.
 பாரளமன்றத்தில் எதிர்கட்சிகளின் சவால்களை, கூட்டணிகட்சிகள் தரும் அழுத்தங்களை, உட்கட்சி பூசல்கலையெல்லாம் சாமர்த்தியமாக சமாளித்த  வல்லமை படைத்த அரசு,  எந்த  அரசியல் கட்சியின் பின்னணியும் இல்லாமல் மக்களை மட்டுமே நம்பி  களத்தில் இறங்கிய ஒரு சத்தியாகிரகியின்  போரட்டத்தில்  தோற்றிருக்கிறது. ஜெயித்த்து  ” “இந்தியா. “சகதிவாயந்தவர்களையும்  வெட்கபடவைக்கும் சக்தி  சத்தியாகிரகதிற்கு உண்டு “(Satyagraha has the power to shame the powerful) என பல ஆண்டுகளுக்கு முன் அண்ணல் காந்தி எழுதியிருப்பது  இன்று   மீ்ண்டும் உண்மையாயிருக்கிறது.

திரு நாராயணமூர்த்தி
 வருடத்திற்கு 20 அல்லது 25 முறை வெளி நாடுகளுக்கு பயணம் செய்யும் இன்போஸிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி  இவர் உலகின் மிக பெரிய நிறுவனங்களின் தலைவர்களை சந்திப்பவர். “ ” ‘கடந்த சில மாதங்களில் நான் வெளிநாட்டில் சந்திக்கும் பெரிய நிறுவன தலைவர்கள் இந்தியாவில் பெருகி வரும் ஊழலைபற்றிதான் அதிகம் பேசுகிறார்கள். நமது  GDP 10% ஆக 150 பில்லியன் அன்னிய முதலீடு நிச்சியம் தேவை. உலகின் பார்வையில் நமது நாணயத்தையும் நிர்வாக்த்திறமையையும் சந்தேககிக்கும் அளவில் நடைபெறும் பெரிய அளவு ஊழல்களினால் அந்த அன்னிய  மூதலீடுகளின் வருகை குறையும். மற்ற நாடுகளைபோல இந்கு ஊழலை தடுப்பதற்கோ கண்காணீப்பதற்கோ ஒரு  நடுநிலையான அமைப்பு கூட இல்லைஎன்பது வருந்த  வேண்டிய விஷயம்’” “  என்று சொல்லும் திரு நாராயணமூர்த்தி இவரது   போராட்த்தை ஆதரித்து இன்றைய சூழ்நிலைக்கு லோக்பால் மிக அவசியம் என அறிவித்திருகிறார்

திரு வினோத் ராய்“.இப்போது அரசாங்கத்தை சுத்தபடுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது அரசு அதுவாகவே ஊழலை ஒழித்துவிடும் என எதிர்பார்ப்பது தவறு அது தன்  பணியை செய்யமுடியாமல் தோற்றுவிட்டது.. அதை திறமையாக பணி செய்யவைக்க வேண்டியவர்கள் மக்கள். நல்ல கருத்துகளை உருவாக்கும்  நாணயமான தலைவர்களால் மக்களிடம் அதை துணிவுடன் சொல்லி பொது கருத்தை உருவாக்கினால் என் போன்ற அதிகாரிகளினால் செம்மையாக பணியாற்ற முடியும். “ என்று பேசியிருப்பவர் மத்திய தணிக்கை குழு தலைவர் வினோத் ராய். இவர் தான் 2ஜி ஊழலினால் நாட்டுக்கு ஏற்பட்ட நஷடத்தை அறிவித்தவர். முன்னாள் ஐ‌ஏ‌எஸ்  அதிகாரிபேசியது CII யின் ஆண்டு கூட்டதில் என்றாலும் இது அன்னா ஹஸாரேயின் அற்போராட்டத்திற்கான ஆதரவு எனபதை எல்லோரும் எளிதில் புரிந்து கொண்டார்கள்.
 அன்னா ஹஸாரேவின் விருப்பபடி  பிரதமர் உள்ளிட்ட அரசியல்வாதி அதிகாரிகள், நீதிபதிகள் மீது வந்த ஊழல் புகார்களை அல்லது கிடைத்த செய்திகளைவைத்து நேரடியாகவே விசாரிக்க, எஃப்‌ஐ‌ஆர் போட தண்டிக்க, ஊழல்செய்த பணத்தை வசூலிக்க  என்று  சர்வ அதிகாரங்களும் மிகுந்த ஒரு அமைப்பாக ஜன்லோக்பால் அமைப்பை  உருவாக்கினால் அது ஜனநாயக அரசாங்கத்திற்கு இணையான மற்றொரு அரசாங்கமாக கூட இல்லை,-ஒரு சூப்பர் அரசாங்கமாவே உருவாகிவிடும் ஆபத்து இருக்கிறது. இது பராளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது. என்று சிலர் காங்கிரஸார் உள்பட பேச துவங்கியிருகிறார்கள். மேலும் 10 பேர் கொண்ட குழுவில் பாதியாக இடம்பெறப்போகும் மக்கள் பிரதிநிதிகளை எப்படி யார் அடையாளம் காட்டபோகிறார்கள். இன்று போராட்டம் செய்ததினால் குழுவில் அவர்களுடைய இடம் ஏகாபத்திய உரிமையாகிவிடாதே? என்கிறார்கள். அரசியல் அமைப்பில் அரசு இயங்கும் முறை பற்றி அதிக அறியாத, அரசியல்  முதிர்ச்சியில்லாத சிலரால் இன்றைய அரசை மிரட்டுவதற்காக எழுப்பபட்ட விஷயமிது என்ற ஒரு கருத்தும் இணையதளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது

இது பற்றி. இவர்களின் கருத்துகளை கேட்டபோது
மக்கள் உரிமை ஆர்வலுரும் வழக்கறிருமான திருமதி சுதா ராமலிங்கம்
“ எந்த புதிய ஒன்றும் -அதுவும் அதனால் சிலருடைய அதிகாரம் பறிக்கபடும் என்ற அச்சம் வரும்போதெல்லாம் இதுபோல பிரசாரம் செய்யப்படுவதும் அதை  பணம், அதிகார பலம் கொண்ட அந்த அதிகாரஙகளினால் சுய லாபம அடைந்த  குழுக்கள் நியாபடுத்துவதும் வாடிக்கையாக போய்விட்டது. குடும்ப வன்முறை தடுப்பு சட்டம் வந்த போது இது நமது குடுமப அமைப்பையே சீர்குலைத்துவிடும் எனறு பேசினார்கள். வரதட்சணை தடுப்பு சட்டதிற்கு ஆட்சேபணை சொல்லவில்லையா.? பல ஆண்டுகாலமாக செய்யமுடியாத காரியத்தை ஒருவர் அல்லது ஒருகுழு செய்யும் போது ஆதரித்து வரவேற்கவேண்டும்.
எந்த ஒருகுழுவும் துவக்க்தில் நியமனம் செய்யபட்டவர்களுடன் தான் துவங்க முடியும். கறைபடாதவர்களாக அறியபட்டிருக்கும் அவர்கள் மீது சந்தேக நிழல் விழுந்தால் ம்க்கள் மாற்றிவிடுவார்கள்.  இது மக்கள் சக்தியால் எழுந்தது என்பதால் பெருமிதத்தோடு வரவேற்கிறேன்.” “
-------------------------------------------------------------------------
இப்படி சர்வ சக்தி வாய்ந்த அமைப்பை உருவாக்க்குவதில் சட்ட ரீதியான சிக்கல் எதாவது இருக்கிறதா ? அமைந்தாலும்  அது வெற்றி பெறுமா?
 சட்ட வல்லுனரும், மூத்த வழக்கறிஞருமான திருவிஜயன்
 “சட்டரீதியான் சிக்கல் எதுவுமில்லை. பராளூமன்ற ஜனநாயகத்தில் காலத்தின் தேவைக்கு ஏற்ப  பல டிரிபூனல்கள்,  CAT போன்ற பல அமைப்புகள் உருவாயிருக்கின்றன. சட்ட பிரச்சனையை விடுங்கள். ஏன் இன்று லோக்பால் உருவாகிறது?.  பராளுமன்ற ஜனநாயகம் என்ற  சித்தாந்தத்தில் பாராளுமன்றம் மிக சக்திவாய்ந்த அமைப்பு. அமைச்சர்கள் அதன் முடிவுக்கும் கட்டளைக்கும்  கட்டுபட்டவர்கள். அமெரிக்க காங்கிரஸில் ஆளும் கட்சியின் உறுப்பினர் தன்னிச்சையாக  எந்த ஒரு பிரச்சனையிலும் வாக்களிக்க முடியும். இங்கு கட்சிகட்டுபாடு என்ற பெயரில் ஆளும்கட்சியின் விருப்பமே செயலாகிறது. மெஜாரிட்டி பலத்தினால்   எதிர்கட்சிகளின் முயற்சிகள் முடக்கபடுகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு சிபிஐ போன்ற அமைப்புகள் இயஙக முடியவிலலை. பாராளுமன்ற சித்தாந்தந்தகள் நடைமுறைப்படுத்த்முடியாமல் தோற்றதின் விளைவுகள் தான் மாற்றாக இம்மாதிரி  வலிமையான அமைப்புகள் உருவாக வேண்டியதின் அவசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காரணங்கள் தான் விளைவுகளை உண்டாக்கும். இது ஒரு விளைவு. இது ஒரு இணை அரசாங்கம் ஆகிவிடும்,ஜனநாயகத்தை அழித்துவிடும் என்று சொல்லுவது  எல்லாம் அயோக்கியதனம். சொல்பவர்களீன் சொந்தநலம் பாதிக்கபடுவிடுமோ எனற பயம். லோக்பால் முடிவுகளை செயல் படுத்த தனிபோலீஸ் படை இருந்தால் கூட தவறில்லை.
இந்த அமைப்பு வெற்றிபெறுமா எனபது அதன் தலமையை பொறுத்தவிஷயம். நல்ல ஹெட்மாஸ்ட்டர் இருந்தால் நல்ல ரிஸல்ட் என்பது போல.  ஆனால் இந்தியாவில் அதிகாரவர்க்கம் எப்போது தன்னை காபாற்றிகொண்டுவிடும் சக்க்திபடைத்தது. ஐஏஸ் அதிகாரிகள்,நீதிபதிகள்,அரசியல் வாதிகள் என வர்க்க ரீதியாக அவர்களை காப்பற்றிக்கொள்ளம்படி  நிர்வாகத்தை வளைத்துவிடுவார்கள். இப்படிபட்ட சூழ்நிலையில் இந்த அமைபபு எப்படி இயங்கபோகிறது எனபதை பொறுத்திருந்து தான்  பார்க்கவேண்டும்.  நம் ஜனநாயகத்தில் கட்சி சாராத மக்கள் மிகவும் பாதிக்கபட்டவர்கள். அவர்கள்  என்றாவது எங்கேயாவது  ஒரு விடிவெள்ளி தோன்ற வேண்டும். என விருபினார்கள். அது இப்போது தோன்றியிருக்கிறது. மக்கள் எழுச்சியுடன் வரவேற்கிறார்கள். அந்தவகையில் நானும் வரவேற்கிறேன்.. இந்த அமைப்பிற்கான சட்ட வடிவு வெளியாகும்போது தான் அது குறித்த என் கருத்துகளையோ அல்லது அதன் பிரிவுகளில் மாற்றஙக்ளுக்கான யோசனைகளையோ  சொல்லமுடியும். “
 --------------------------------------------------------------------------------------------------------------------------
நூலாசிரியரும்,தமிழகஅரசியல்கட்சிகளைப்பற்றி ஆராய்ந்துகொண்டிருப்பவருமான  திரு சுப்பு
 தன்னாட்சி அமைப்பாக இயங்கி ஊழலை கண்காணிக்க வேண்டிய   சிபிஐ. சிவிசி போன்ற  அமைப்புகள் ஆட்சியிலிருப்போரின் ஆணைகளுக்கு இயஙக வேண்டிய  இன்றைய  சுழலில் இம்மாதிரி ஒரு  வலிமையான அமைப்பு ஏற்படுத்த வேண்டிய  அவசியத்தில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால் அன்னா ஹஸாரே குழுவின் சில கோரிக்கைகளை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை. சட்ட வ்டிவை தயாரிக்கும் குழுவில் அரசு தரப்பு உறுப்பினர்கள் அதிகாரவர்கதிலிருந்து இருக்ககூடாது, மூத்த அமைச்சர்களாக இருக்கவேண்டும், சோனியா பங்கேற்தைகூட வரவேற்கிறோம் என்றார்கள். இந்திய அரசியலில் அதிக சர்ச்சையில் சிக்கிய வர் சோனியா. காலையில் ஊழலை ஒழிக்க அன்னா ஹன்ஸாரேவுக்கு ஆதரவு என அறிவித்துவிட்டு மாலையில் கலைஞருடன் சென்னையில் திமுக அணிக்கு ஓட்டுகேட்டவ்ர்.   மேலும் லோக்பால் குழுவில் நோபல் பரிசு பெற்ற இந்தியர், மாகஸே விருது பெற்றவர்கள இருப்பார்கள் என்கிறார்கள். தன் துறையில் விற்பன்னர்களாக இருப்பதினாலேயே அவர்களுக்கு ஊழல் புகார்களை விசாரித்து தீர்ப்பு சொல்லும் திறன் வந்துவிடுமா?. இப்படி சில நெருடலான விஷயங்களை சட்டம் தயாரிக்கும் குழு ஆராய்ந்து சரி செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் நமது அரசியல்வாதிகள் இதையும் ஹைஜாக் செய்து இயங்காமல் செய்துவிடுவார்கள்.
  ==============================================