11/3/12

நம்பிக்கையின் சின்னம்



கனவு காட்சியானதைச்சொல்லுகிறது இந்த பாறை



அமெரிக்க அரசியல் சரித்திரத்தில் அழிக்கமுடியாத இடத்தைபெற்றிருப்பவர் மார்ட்டின் லூதர்கிங். ஆப்ரஹாம் லிங்கன் அறிவித்திருந்த நிற,இனபேதமில்லாத அமெரிக்கா” 100 ஆண்டுகளுக்குமேலாக கனவாகவே இருப்பதை கண்டித்து அதைச் சட்டபூர்வமாக செயலாக்க 60களில் அண்ணல் காந்தியின் வழியில் அறப்போர் செய்து வெற்றிகண்டவர். நீதிகேட்டு  வெள்ளை மாளிகை நோக்கி அவர் குழுவுடன் செய்த நீண்டபயணமும் இறுதியில் 2லட்சம்பேர் பங்கு கொண்ட பேரணியும் அமெரிக்க சரித்திரத்தில் ஒருமுக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது. ”கனவொன்று கண்டேன்என அந்த பேரணியின் இறுதியில் லிங்கலின் நினைவுசின்னத்தின் படிகளிலிருந்து அவர் நிகழ்த்திய உரை இன்றளவும் உலகின் மிக சிறந்த உரைகளில் ஒன்றாக வர்ணிக்கப்படுகிறது..”  நான் கண்ட கனவு இது  எனது நான்கு சிறு குழந்தைகளும்  ஒரு நாள்  அவர்களின் தோலின் நிறத்தால் இல்லாமல்  அவர்களது பண்பினாலும் ஆளுமையினாலும்  மதிக்கபடும் அமெரிக்காவில் வாழ்வார்கள்என்று சொன்ன மார்ட்டின்லூதரின் இன்று கனவு பலித்திருக்கிறது. கறுப்பினத்தவர் பலர் இன்று அரசியலில்,.சமூகஅமைப்புகள், கல்வி, கலை, இலக்கியம் என பலதுறைகளிலும்அரசு பணிகளிலும் உயர்ந்த இடத்திலிருக்கிறார்கள். இது சட்டம் மட்டும் செய்த விஷயமில்லை. மக்கள் மனதார ஏற்றுகொண்ட ஒருசமூக புரட்சி. 1964லில் நோபல் பரிசு பெற்ற மார்டின் 1968ல் சுட்டுகொல்லபட்டது சரித்திரத்தின் கருப்பு பக்கம்
.
கடந்த ஆண்டு அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் மார்டின் லூதர் கிங்க்கு ஒரு நினைவுசின்னம்  பிரமாண்டமான சிலையுடன் எழுப்பபட்டிருக்கிறது. முன்னாள் அதிபர்களான ஆப்ராஹாம்லிங்கனுக்கும், ஜெபர்ஸனுக்கும் மட்டுமே (ஜார்ஜ் வாஷிங்டனுக்கு கூட சிலை கிடையாது) அளிக்கபட்டிருக்கும்  மிகப் பெரிய கெளரவம். இது. அவர்களது நினைவுசின்னங்களுக்கு அருகில் நகரின் முக்கியமான இடத்தில் பொட்டாமாக் நதிகரையில் நிறுவப்பட்டிருக்கும் இதை, அமைதிபேரணியின் 48ம் ஆண்டு  நினைவு நாளான்று  அதிபர் ஒபாமாவால் நாட்டுக்கு அர்பணிக்கபட்டது. இந்த பிரமாண்ட சிலை அவரது வரலாற்றுசிறப்புமிக்க பேரணி உரையில் சொல்லபட்ட சில  வாசகங்களின் அடிப்படையில் வடிவமைக்க பட்டிருகிறது.
இந்த பேரணி  நம்பிக்கையின்மை என்ற கடினமான மலைபாறையிலிருந்து யிலிருந்து   வெட்டி எடுக்கபட்ட கல்லாக நம்பிகையளிக்கிறது.” ( "Out of the Mountain of Despair, a Stone of Hope"— for Justice,) "
என்ற அந்த வாசகங்களுக்கு ஏற்ப ஒரு பெரிய வெண்சலவைகள் மலையிலிருந்து வெட்டி எடுக்க்பட்ட பாறையில் நிற்கும் நிலையில்  சிலை வடிக்கபட்டிருகிறது. பிளவுபட்ட ஒரு மலையின் வழியாக சென்று பார்க்கும்படியாக அமைக்கபட்டிருக்கும் 30 அடி உயரசிலை. வளாகத்தின் சுற்று  கருங்கல் சுவர்களில் அவரது புகழ் பெற்ற வாசகங்கள்.. 140 மில்லியன் டாலர்களில் ஆறு ஆண்டு திட்டமாக நிறைவேற்றபட்டிருக்கும் இந்த சிலையை வடித்தவர் புகழ்பெற்ற சீன சிற்பி லீ யெக்ஸின்(Lei Yixin,)  பீகிங் நகர செஞ்சதுக்கதிலிருக்கும் பிரமாண்ட(100அடி) மாசேதுங் சிலையை வடித்தவர். அழியா சின்னங்களான சிலைகளைப்டைக்கும் சிற்பிகள் ஒவியர்களைப்போல தங்கள் படைப்புகளில் கையெழுத்திட மாட்டார்கள். ஆனால் இவர் செய்திருகிறார். சிலையின் பீடத்தில் இவரது கையெழுத்தும் கல்வெட்டாக இடம்பெற்றிருப்பது இந்த கலைஞனுக்கும் அளிக்கபட்டிருக்கும் காலத்தையும்கடந்து நிற்கும் கெளரவம்..




வெள்ளை மாளிகையில் விளக்கேற்ரியவர் இவர்



அமெரிக்க ஐக்கியநாட்டின் வட கோடியில் இருக்கும் ஒரு சின்னஞ்சிறு மாநிலம் மேரிலாண்ட். நாட்டின் தலைநகரமான வாஷிங்டனை ஒரு எல்லையாக கொண்டிருக்கும்  இதில் லான்ஹம் என்ற சின்ன நகரில் இருக்கிறது சிவ-விஷ்ணு கோவில். வாஷிங்டனிலிருந்து பால்ட்டிமோர் நகருக்கும் செல்லும் சாலையில் 12வது மைலில் பளிரென்ற வெண்நிற ராஜகோபுரத்துடன் கம்பீரமாக நிற்கும் இந்த கோவில் அமெரிக்காவில் மிக பிரசித்திபெற்றது. 80களின் இறுதியில் மிக சிறிய அளவில் ஒரு வீட்டில் துவக்க பட்ட இது இன்று அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் அனைவரும் அறிந்திருக்கும் ஒரு முக்கிய கோவிலாக வளர்ந்திருக்கிறது. நாட்டின் தலைநகருக்கு அருகிலிருப்பதால் இந்தியாவிலிருந்து வரும்  பல அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் வருகை தந்திருக்கிறார்கள் நுழைவாயிலில் திறந்து வைக்கபட்டிருக்கும்  அந்த அழகான கதவுகளுக்கு அருகில் ஒருபுறம் கீதா உபதேசம், மறுபுறம் ஞான உபதேசம் சிற்பங்கள்.
உட்பிரகார சுவற்றில் பெருமாள் சன்னதியிருக்கும் பக்கத்தில் தஸாவதாரமும். சிவபருமான் சன்னதியிருக்கும் பக்கத்தில் நாயன்மார்களும் அலங்கரிக்கின்றனர். வினாயகர், ஆண்டாள், ஆஞ்னேயர், அய்யப்பன் என ஒவ்வோரு சன்னதியும் மிகந்த அழகோடு  நிர்மாணிக்கப்பட்டு நேர்த்தியாக பராமபரிக்கபட்டுவருகிறது படு சுத்தமான பளிங்கு தரையில், குளிர்கால மாதலால் உட்கார்ந்து பிரார்த்திக்க வசதியாக கார்பெட்கள் இடப்பட்டிருக்கிறது சன்னதிகளில் ஆப்பிளும், பாதாம் பருப்பும் தான் நைவேத்தியம். அர்ச்சனை, பூஜை கட்டணங்கள் உள்ளூர் பண மதிப்பிலியே. சற்று அதிகம் தான். ஆனால் நம்ம கோவிலுக்குதானே என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கிறது.. திட்டமிட்ட அட்டவணையுடன் எல்லா கால  அபிஷகங்களும், பூஜைகளும் நடைபெறுகிறது. இங்குள்ள ஐயப்பன் அமெரிக்க கோவில்களிலிருக்கும் ஐயப்ப ஸ்வாமிகளில் முதல்வர் என்பதால் பக்கத்து மாநிலங்களிலிருந்து இருமுடிகட்டி விரதமிருந்து வருகிறார்கள். நல்ல குளிரிலும் பல குடும்பங்கள் குழந்தைகளுடன் வந்திருப்பதும் அவர்கள் கோவிலுக்குள் நுழையும் முன் நீரில் கை கால் சுத்தம் செய்துகொள்வதும் பார்க்க சந்தோஷமாகயிருக்கிறது.
கோவிலின் தலைமை அர்ச்சகர்  நாராயணச்சார். கர்நாடக மாநிலத்திலிருந்து வந்திருக்கும் இவர் இங்கு கடந்த 30 ஆண்டுகளாகயிருக்கிறார். தமிழ் தெலுங்கு ஆங்கிலம் பேசும் இவரின் கீழ் 10 அர்ச்சகர்கள் சுழல் முறையில்  எல்லா சன்னதிகளில் பூஜை செய்கிறார்கள். நாராயணச்சார் சம்ஸ்கிருத வித்வான், சம்ஸ்கிருத்திலும் ஆங்கிலத்திலும் ஏம் ஏ பட்டம பெற்றவர். 1999ல் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் கிருஸ்தமஸ்ஸை போல தீபாவளி பண்டிகையும் கொண்டாட வேண்டும் என்றஅமெரிக்க வாழ் இந்தியர்களின் கோரிக்கையை அமெரிக்க அதிபர் ஒபாமா ஏற்ற போது அதை துவக்கிவைக்க அழைக்கபட்டஒரே இந்து அர்ச்சகர் இவர். அதிபர் ஒபாமா நாட்டின் வளர்ச்சிக்கு அமெரிக்க வாழ் இந்தியர்களின் பங்களிப்பை பாராட்டி பேசிய அந்த நிகழ்ச்சியில் இனி ஆண்டுதோறும் வெள்ளை மாளிகையில் திபாவளி கொண்டாடப்படும் என அறிவித்து அதற்கான அதிபரின் ஆணையையும் வெளியிடும்  அந்த வெள்ளை மாளிகை விழாவில்  புல் சூட்டிலிருக்கும் அத்தனைபேருக்கிடையில் வெண்பஞ்சகச்சத்தில் பளிச்சன்று நெற்றியில் திருமண்ணுடன் நாராயணச்சார் நாராயணச்சார்  தனது கணிரென்ற குரலில்   இருளுலிருந்து ஓளியை நோக்கி   எனற பொருளில் சொல்லபட்ட
அஸ்த்தோமா சத்-ஃகாம்யா
த்மஸோமா ஜோதிஃகம்யா
 असतो मा सद्गमय 
तमसो मा ज्योतिर्गमय 
मृत्योर्मा अमृतं गमय 
 शान्तिः शान्तिः शान्तिः ॥ 
ஸ்லோகத்தை சொல்ல  அதிபர்  ஐந்து முக வெள்ளி விளக்கை மெழுகுதிரியினால் ஏற்றிய பின் திபாவளி விழா துவங்குகிகிறது.. 200 வருடங்களாக கிருத்துவ பாடல்கள் மட்டுமே ஒலித்த வெள்ளை மாளிகையில் நமது உபநிஷத்தின் பொன்னான வரிகளுடன் ஒரு சரித்திர நிகழ்வை பதிவு செய்த பெருமை இவருடையது. ”என் வாழ்வின் சந்தோஷமான தருணம் அது” என்கிறார். இவருக்கு மட்டுமில்லை நமக்கும் தான். தொடர்ந்து கடந்த ஆண்டு  வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடபட்டிருகிறது. இது இனி ஆண்டு தோறும் தொடரும்.
நமது கோவில்கள் வழிபாட்டுதலங்கள் மட்டுமில்லை.கலாசார வளர்ச்சிக்கு உதவும் இடமாகவுமிருக்க வேண்டும் என்ற நமது மரபிற்கேற்ப இந்த கோவிலை நிர்வகிக்கும் SSVT டிரஸ்ட் அடுத்த தலைமுறைக்கும் இந்த ஆர்வம் தொடர பல பணிகளை செய்துவருகிறார்கள். இந்திய கலைஞர்களின் நிகழ்ச்சிகளை தவிர இசை நடன வகுப்புகளும் அதில் பயின்ற இளைஞர்களின்  நிகழ்ச்சிகளும் மட்டுமில்லாமல்,ஆன்மிக வகுப்புகள், செமினார்கள் என பல நடத்துகிறார்கள். கோவிலை இன்னும் பெரிதாக்க  வளர்ச்சி திட்டங்கள்,நிதி ஆதாரங்களை மேம்படுத்த போன்ற பல்வகை பணிகளை பெரிய நிறுவங்களில்  பதவிகளிலும்,அமெரிக்க அரசு பணிகளிலும் இருக்கும் இதன்  கெளரவ உறுப்பினர்கள் சிறப்பாக செய்கிறார்கள்.
இது போல் அமெரிக்காவின் எல்லா  மாநிலங்களிலும் பல கோவில்கள் (குறைந்த பட்சம் இரண்டு கோவில்களாவதுவது)  சிறப்பாக இயங்குகிறது. சில கால நூற்றாண்டையும்  கடந்தவை. இன்னுமும் புதிய கோவில்கள் எழும்பிக்கொண்டிருக்கின்றன.

2408 society drive
Claymont
DELWARE USA  19703 1760



US1220212

18/12/11

`செய்திகளின் விலை..


`செய்திகளின் விலை..






ஒரு பத்திரிகை   அது வெளியிடும் செய்திகள் எங்கிருந்து, எப்படி கிடத்தது எனபதை மிக பாதுகாப்பாக வைத்துகொள்வார்கள். அதன் ஆசிரியருக்கும் சில சமயம் உரிமையாளர்க்ளுக்கு ம்ட்டுமெ தெரிந்திருக்கும் அதை யாரிடமும் பகிர்ந்து கொள்ளுவதில்லை என்பது உலகம் முழுவதும் கடைபிடிக்கபடும் ஒரு மரபு.
ல்ண்டனிலிருந்து வெளியாகும் நீயூஸ் ஆப் தி வேர்ல்ட் என்ற வாரசெய்திதாள் அது வெளியிடும் திடுக்கிடும் செய்திகளுக்கு பெயர் பெற்றது.ள்ண்டன்குண்டுவெடிப்பு, ஆப்கானி/ஸ்தான் போரில் இறந்த இக்கிலாந்து வீரர்கள்,மேட்ச் பிக்ஸிங் சூதாட்டத்தில் சிக்கிய பாக்கிஸ்தான் கிரிகெட் வீரர்கள் என பல விஷ்யங்களை அம்பலபடுத்திய பத்திரிகையிது. இங்கிலாந்து அர்ச குடும்ப விகாரங்களை கூட அம்பலபடுத்தியிருக்கிறது. பரப்ரபபான செய்திகளினாலும் . கவ்ர்சிகரமான தலைப்புகளினாலும் பிரபலமான இந்த பத்த்ரிகையின் வார விற்பனை 75 லட்சம் பிரதிகள்.  பத்த்ரிகையின்  விற்றபனை அதிகரித்துகொண்டே போனாலும், வெளியான செய்திகளினால் பாதிக்க பட்டவர்கள்  மிக கோபமாகயிருந்தனர். பத்திரிகை செய்தி சேகரிப்பதிற்காக தனி மனித உரிமைகளை மீறும் குற்றத்தை செய்கிறது இந்த பத்திரிகை என்ற குற்றசாட்டு  எழுந்தது. லஞ்சம் கொடுக்கபடும் விஷயத்தை லஞ்சம் கொடுத்து தெரிந்து கொள்வது எப்படி பத்த்ரிகை தருமாகும் என்று எழுந்தகேள்வி  பிரிட்டிஷ் நாடளுமன்றத்தில்  எதிரொலித்தது. பிரதமர் டேவிட் கேமரூன் விசாரணைக்கு உத்தரவிட்டார்.  -தொலைபேசி ஒட்டுகேட்பதிலிருந்து, பெரிய இடஙகளின் உதவியாளருக்ளுக்கு மாதசம்பளம் கொடுப்பதுவரை பல தப்பு காரியங்களை பல ஆண்டுகளாக செய்து அதற்காக போலிசுக்கும், அதிகாரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் கொடுத்த லஞ்சமாக 7000 கோடி ரூபாய்கள் வரை செலவழித்திருக்கிறது இந்த பத்திரிகை- என்று விசாரணை அதிகாரியின் அதிர்ச்சி அறிக்கை இப்போது வெளியாகியிருக்கிறது.
பத்திரிகையின் ஆசிரியராக 2003 முதல் 2007 வரை இருந்தவர் ஆண்டிகவ்ல்ஸன். இவர் கடந்தஆண்டுவரை பிரதமரின் தகவல் தொடர்பு அதிகாரியாக பணியாற்றியவர். இவரும் ஒரு முன்னாள் நிருபரும் கைது செய்யபட்டிருகிறார்கள்.
 பிரச்னை பெரிதாகவே அதை எதிர்கொண்டு பத்திரிகையின் ரகசிய தொடர்புகள் வெளியாவதை விட எளிதான வழி பத்திரிகையை மூடுவிடுது என அதன் உரிமையளார் ரூபர்ட் முர்டோச் முடிவு செய்து உடனடியாக செயல் படுத்தியும்விட்டார்.  இவர் உலகம் முழுவதும் இருக்கும் பல பத்திரிகைகள், டிவி சானல்கள், ரேடியோ நிலையங்களின் அதிபராகயிருக்கும் மீடியா சக்ரவர்த்தி. இன்று 168 வயதாகும் இந்த பாரமபரிய பத்திரிகையை 1969ல் வாங்கி அதிலிருந்து  ஆண்டு தோறும் விற்பனையில் சாதனை படைத்தகொண்டிருந்தவர். இவரது அதிரடி முடிவு அதன் கோடிக்கண்கான வாசகர்களுக்கும், அதன் 300 உழியர்களுக்கும் பெரிய அதிர்ச்சி. வெளியான செய்திகளுகாக தன்னையே விலையாக தந்த இந்த பத்திரிகை தனது 8674 வது பதிப்பாக தனது கடைசி இதழை  தாங்க்யூ & குட்பை என்ற கொட்டை எழுத்துகளில் முழு முதல் பக்கத்துடன் உள்ளே பத்திரிகை தோன்றி வளந்த கதையை படஙகளுடன்வெளியிட்டயிருக்கிறது.


சென்னையை கலக்கிய ஹிலாரி கிளிண்டன்





சென்னையை கலக்கிய ஹிலாரி  கிளிண்டன் 

அமெரிக்க அதிபரின் வெளியுறவு கொளகைகளை வகுப்பதிலும் வழி நடத்துவதிலும் மிக முக்கிய பணியாற்றுபவர் அமெரிக்க வெளியுறவு செயலர். முன்னாள் அமெரிக்க அதிபரின் மனைவி. செனட்டர், அதிபர் வேட்பாளருக்கு  தேர்தலில் உள்கட்சி தேர்தலில் ஒமாவுடன் போட்டியயிட்ட   அரசியல்வாதி  என்று பல முகங்களை கொண்ட ஹிலாரி கிண்டன். இப்போது அந்த பதவியிலிருப்பவர்.  இந்தமுறை இந்தியபயணத்தில் அவர் வர விருபியது சென்னை.  இதுவரை இந்த பத்வியிலிருந்தவர்கள் சென்னைக்கு வந்தலில்லை. அமெரிக்க  துணை அதிபரும் அமைசர்களும்  மட்டும் பயன்படுத்தும் அமெரிக்க விமானப்படையின்  விசேஷ போயிங் விமானத்தில் ஐந்து பெண அதிகாரிகள் உள்ளிட்ட 19 பாதுகாப்பு படையினர், 2 மோப்ப நாய்கள்.  10 பத்திரிகையளார்கள், 5 அரசு அதிகாரிகளுடன்   டில்லியிலிருந்து வந்து விமான் நிலையத்தில்  வந்து இறங்கியவுடன் நேரே பங்குகொள்ள வேண்டிய நிகழச்சிகளுக்கு  சென்றார். பரபரவென்று  ௪ மணிநேரத்தில்  ௪ விழாக்களில் பங்கு கொண்டு கலக்கினார். கருநீலசூட்டில் கருப்புகண்ணாடி, கையில் சின்ன ஸ்கேனர், காலரில் மைக் என அவர் கூடவே வந்த ” “மென் இன் பிளாக்“பாதுகாப்புபடைக்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் இல்லை என்று காட்டியது  நமது சென்னை போலீசின் சிறப்பு விஐபி பாதுகாப்பு படை. 18 கார்கள் பவனி வந்தாலும் நகரில் எந்த இடத்திலும் போக்குவரத்து நிறுத்தப்படாமல் ஒரு அசாம்பவிதமும் இல்லாமல் படு திறமியாக சமாளித்தார்கள், ஹிலாரி கலந்துகொண்ட நிகழச்சிகளின் ஒரு நேரடி ரிபோர்ட்.
                         ***********

கோட்டுர்புரத்தில் கலைஞரின் கனவு கட்டிடங்களில் ஒன்றான அண்ணா நூலகத்தின் ஆடிட்டோரியத்தில் தூதரகத்தினரால் விசேஷமாக அழைக்கபட்ட நகரின் பிரமுகர்கள்,. பேராசியர்கள் மாணவர்கள்  என 700க்கும் மேற்பட்டவ்ர்கள் கலந்த கொண்ட கூட்டம் முதல்நிகழ்ச்சி.  பாதுகாப்பு காரணத்தினால் முன்னாதாக வரச் சொல்லியிருந்ததால் வந்து  ஒரு மணி நேரம் பொறுமையுடன் காத்திருந்த கூட்டத்தில் கண்ணில் பட்டவர்கள்.    கார்திக்சிதம்பரம், பூங்கோதை ஆலடிஅருணாஆற்காட் இளவரசர், சுதாரகுநாதன்,  கமலஹாசன் கெளதமி.  வெள்ளை பேண்ட், வெள்ளை ஷூ, நீல பூக்கள் போட்ட பட்டு புஷ்கோட்  அணிந்து ஹிலாரி மேடை ஏறி அமெரிக்க ஆக்ஸெண்ட்ட்டில் “வணக்கம்””’’’”“ என்றவுடன் அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது.
மேடைக்கு ஹிலாரியை அழைத்து வந்தவர் ஒரு நிமிடத்தில் தன் வரவேற்பை முடித்து அமர்ந்துவிட்டார்.  அவரை பலருக்கு யாரென்று தெரியவில்லை. கடந்த 18 ஆண்டுகளில் இந்தியா எப்படி சாதித்து காட்டமுடியும் என்பதற்கு  தமிழ் நாடு மிக சிறந்த முன் உதாரணமாக இருப்பது கண்டுவியந்து போன நான் இம்முறை இங்குவர விரும்பினேன் என்று துவக்கி 40 நிமிடம் ஹிலாரி பேசினார்.பேச்சின் நடுவே  இந்த நூலுகத்தின் தலமை நூலகருக்கும் அமெரிக்காவிற்கும் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பு இருபதாக குறிபிட்டுவிட்டு அவரை பார்த்து புன்கைத்தார். விழாவிற்கு பின்னர் அவரை சந்தித்ததில் தெரிந்து கொண்டவிஷயம் நூலகர் நரேஷ் 2005ல் கடலூர் மாவட்டத்தின் கல்வி அதிகாரியாக பணியாற்றிய போது  சூனாமியால் பதிக்கபட்ட பள்ளி குழந்தைகளுக்கு படிப்பை தொடர              விசேஷ ஏற்பாடுகளை வெற்றிகரமாக் செய்த அதிகாரி எனபதையும் அபோது வந்த அதிபர் கிளீண்டனால் பராட்டபட்டவர் எனபதையும்  “தூதரக அதிகாரிகள் என்னை பற்றி சொல்லியிருக்கலாம்.. அதைதிருமதி ஹிலாரி குறிப்பிட்டது சந்தோஷமாகயிருகிறது.” “ என்றார் இபோது கல்வித்துறையின் இணை டைரக்டராகவும்  நூலக தலமைக்கும் பொறுப்பேற்றிருக்கும் நரேஷ்
 கூட்டம் முடிந்ததும்  கோட்டையில் அம்மாவை சந்திக்க புறப்பட்டார் ஹில்லாரி.  வெளியே நம் காதில் விழுந்த கமெண்ட்  “ அருமையான ஸ்பீச: ” “புதிய விஷயம் ஒன்றும் இல்லை” “: போன்ற  மாணவர்களின்.  பல விதமாக கமெண்ட்களுக்கிடையே பேசப்பட்ட ஒரு விஷயம் ஏன் கேள்விகள் அனுமதிக்க் படவில்லை? ..

                .
                                                                             *************


தெனிந்தியாவின் பல  நகர்புற,கிராமபஞ்சாயத்து பெண்தலைவர்கள், சுய உதவிகுழுகளின் தலைவிகள் போன்ற ஆசிரியயைகள் போன்ற உழைக்கும் மகிளிர் அணிகளின் கூட்டமைப்பின் தலைமையக்ம் சென்ன்னையிலிருக்கிறது. கோட்டயில் அம்மாவை சந்தித்தபின் ஹிலாரிகிளிண்டன் கலந்த கொண்ட கூட்டம் இவர்களுடையது.  மேடை ஏறியவுனயே  என் நல்ல நணபரும் உங்கள் எல்லோருடைய நண்பருமான ஜெயா விற்கு இங்கு வந்தறகு நன்றி சொல்லவேண்டும். என துவக்கி 1978லிருந்து உங்கள் அமைப்பு செய்துவரும் நல்ல பணிகளையும் 700லிருந்து இன்று ப்ல லட்சமாக வளர்ந்துவருவதை நான் வியந்து பார்த்து கொண்டிருகிறேன் என்று சொல்லி  விரைவில் ஒரு பெரிய அமெரிக்க நிதி நிறுவனம் உங்களுக்கு தொடர்ந்த  பயிற்சி அளிக்க  ஏற்பாடுகளை செய்யபோகிறது என்ற தகவலையும் அறிவித்தார். நீங்கள் பின்பற்ற  உங்களது தலைவியை விட வேறு எந்த ரோல்மாடலும் வேண்டாம் என்று புகழந்து   எங்கே அவர்? ஜெயா கம். கம் ஹியர் என தன்னருகில் அழைத்து நிறுத்திகொண்டார். கலந்து கொண்டவர்களில் எத்தனைபேருக்கு ஹில்லாரியின் அமெரிக்க ஆங்கிலம் புரிந்ததோ ஆனால்  ஒவொருமுறை பர்ரட்டபடும்போது கைதட்டி மகிழந்தார்கள்.  இந்த அமைப்பின் தலவர் திரும்தி ஜெயா அருணாசலம்  2005  நாட்டின் பொருளாதார வளர்ச்சிகாக பாடுபடும் தலவர்களுக்கு வழங்கபடும் குளோபல் லீடர்ஷிப்  விருதுபெற்றவர். தனிபட்ட முறையிலும் ஹிலாரி கிளிண்டனை அறிந்தவர். விழாவில் பங்கேறகாமல் ஆபீஸில் பணியிலிருந்தவர்களையும்  அருகில் சென்று வாழ்த்திவிட்டு கலாஷேத்திராவில் அடுத்த நிகழச்சிக்கு புறபட்டார்,

                                    ********
 மேடை, நாற்காலி, மாலை, பேனர், மைக் பிகாசமான விளக்குகள் எதுவும் இல்லாமல்  மிக குறைந்த அழைப்பாளார்களுடன் கலாஷேத்திராவின்  நிகழ்ச்சிகள்.  ஹில்லாரி வரும் முன்னே வந்த பாதுகாப்பு அதிகாரிகள். இடத்தை மட்டுமில்லாமல் நடனத்திற்கு தயாராக் இருந்தவர்களையும் சோதித்தனர். கலாஷேத்திராவின் மையப்பகுதியில் பதம புஷ்கரணி என்ற அல்லி த்டாகத்தின் அருகில் பெரிய ஆலமரம். படர்ந்து வளரும் அதன் விழுதுகள்  சீராக்கபட்டு  ஒரு பந்தல் இடபட்ட கூடம் போல  அமைந்திருக்கும். அதன். தரை சிமிண்ட் தளமிடபட்டிருக்கும். பக்கத்தில் சின்ன மேடையில் வினாயகர் இந்த ஆலமரத்தின் அடியில் தான்  நடன வகுப்புகள் நடக்கும். அன்று இதமான வெளிச்சம் தரும் விளக்குகளுடன் அந்த வகுப்பறையில்   ஹிலாரிகிளிண்டனுக்கான நடன  நிகழ்ச்சிகள் நடத்தபட்டன, கலாஷேத்திரா அமைப்பின் தலைவரின் அழகான  சிறிய வரவேற்பு உரையில் ரதன சுருக்கமாக கலாஷேத்திரா பற்றியும் நிறுவனர் ருக்மணி தேவி பற்றியும் குறிபிட்டார். பின்னர்  கதக்களியும் மோகினியாட்டமும் இணைந்த ஒரு நடனம் தொடர்ந்து 10 நிமிட பரதநாட்டியம். 20 நிமிடத்தில் கச்சதிமாக முடிந்தது கலைநிகழ்ச்சி. ஹிலாரியுடன் வந்த ஒரு அமெரிக்க அதைகாரி பிர்மாதமாக் தலையாட்டி ரசித்துகொண்டிருந்தார். மிகுந்த் கவனத்துடன் நடனைத்தை ரசித்து பார்த்த ஹில்லாரி எழுந்துவந்து கலைஞர்களை ” “இனியஇசை, அற்புதமான நட்டுவாங்கம், அழகிய நடனம் “ என கைகூப்பி  பராட்டி, சற்று தள்ளி அரை இருட்டில் அமர்ந்திருந்த வாத்திய கலைஞர்களையும் கூப்பிட்டு பராட்டினார்.

ஒரு இந்திய நடனத்தை இன்ரு தான் இவ்வளவு அருகிலிருந்து பார்கிறேன். என்று சொல்லி எல்லோரும் படம் எடுத்துகொண்டார்களா என உறுதி செய்துகொண்ட பின்னரே இடத்திலிருந்து நகர்ந்தார்.  ” “இன்று ஆடிய தில்லாவின் ஜதிஸ்வரம் ருக்மணி தேவியியால் உருவாக்கபட்டதுஎங்களது 75ஆம் ஆண்டில் இதுபோன்ற முக்கிய தருணத்தில் அதை நடனமாக்கியதில் எங்களுக்கு மகிழ்ச்சி “ என்று சொன்ன லீலா ஸம்சன் .   “தொடர்ந்து மூடிய அரங்களிலும் அறைகளிலும் நடந்த கூட்டங்களிலிருந்து மாறுதலான இதை நான் மிகவும் ரசித்தேன்” “ என ஹிலாரி அவரிடம் சொன்னதை சந்தோஷத்துடன் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.. கலாஷேத்திராவில் யாரகயிருந்தாலும் வகுப்புக்குள் மட்டுமில்லை  இசை  நடன நிகழச்சிகள் பார்க்க கூட காலணியை கழட்டிய பின் தான் அமரவேண்டும்  என்பது விதி. ஆனால் ஆலமரவகுப்பில்  அவ்வளவு  ஷூககள்,  ஹைஹீல் ஷுக்கள் அணிந்தவர்களைப்  பார்த்தது சற்று நெருடலாயிருந்தது.

20/11/11

அமெரிக்காவிலிருந்து ஆன் லைனில் அம்மாவிற்குஅரைகிலோ கத்திரிக்காய்


லைப் பூஸ்டர் 12             

 வெஜ்ஜி பஸார் வெங்கடேசன்


 பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஒரு பன்னாட்டு  கம்ப்யூட்டர் நிறுவனத்தில்  நல்ல பதவியிலிருந்த வெங்கடேசனுக்கு, உலக பொருளாதார சரிவினால் அவர் பணியாற்றிய நிறுவனம் சம்பள குறைப்புபதவிகள் குறைப்பு செய்ய  துவங்கியபொழுது எழுந்த எண்ணம் தனக்கென  ஒரு சொந்தத்தொழில். பொதுவாக புதிய தொழில் செய்ய விரும்புவர்கள்  வெற்றியடைந்த மாடல்களைத்தான் பின்பற்றுவார்கள். மாறுதலாக  ஒரு தோல்வியடைந்த தொழிலை தேர்ந்தெடுத்து ஏன் அவர்கள் வெற்றி பெறமுடியவில்லை எனபதை ஆராய்ந்து கண்டுபிடித்து அதைச்சீராக்கி இவர் துவக்கிய தொழில்   “வெஜ்ஜி பஸார்” “  என்ற ஆன்லைன் காய்கறி, கனிகள் வியாபாரம். யோசனையையும் திட்டவடிவையும் சொன்னவர் மனைவி நிர்மலா. சில ஆண்டுகளுக்கு முன் இதே முயற்சியில் ஈடுபட்டு 2 கோடி நஷ்டத்துடன் கையை சுட்டுக்கொண்ட இளைஞர்களைபற்றி அறிந்திருந்தும் துணிவுடன் 2009ல் துவக்கி வெற்றிகரமாக செய்துகொண்டிருக்கிறார்.  காய்கறிகள் பழங்கள் வாங்க மார்கெட் போக வேண்டாம். கம்ப்யூட்டரில் ஆன் லயனில் பார்த்து ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் என்பது மட்டுமில்லை. அவசியமானால் அழகாக நறுக்கிய வடிவில் வந்து சேரும் எனபது  இவர் உருவாக்கியிருக்கும் பிசினஸ் மாடல்.
இவரது வெஜ்ஜிபஸார் வெப் ஸைட்டில் 54 விதமான காய்கறிகள் படங்களுடன் கேட்லாக் செய்யபட்டிருக்கிறது. படத்தை கிளிக்செய்தால் அதன் அன்றைய விலை நறுக்கியவடிவில் விலை எல்லாம் வரும் அதை பார்த்து ஆர்டர் செய்து  கிரிடிட் அல்லது டெபிட்கார்டுகள் மூலம் பணம் செலுத்தினால் காய்கறிகள் பழங்கள் வாடிக்கையாளார்கள் வீட்டிற்கு அனுப்பிவைக்கபடுகிறது. இப்போது சென்னை வாசிகளுக்கு மட்டும்தான். சாதரண உள்நாட்டு காய்கறிகளுடன், பச்சைநிறகாளான், நீல நிறமுட்டைகோஸ் போன்ற அபூர்வ காய்களும் கிடைக்கும் கடிகாரத்துடன் போட்டியிட்டு வேலைகளை செய்துவிட்டு அலுவலகத்திற்கு ஓடும் தாய்மார்களுக்கு இது வசதியாயிருக்கிறது. இன்று 5000 வாடிக்கையாளர்களிருக்கும் இவரது நிறுவனத்தை ஒவ்வொரு நாளும் 100 வாடிக்கையாளர்களுக்கும் மேல் பயன்படுத்துகின்றனர். ஆய்ந்த கீரை, நறுக்கிய சேனை, கருணைகிழங்குகளுக்கு தினமும் ஆர்டர்கள் வருகிறதாம் தினசரி தேவை காய்கறிகளைத்தவிர வாரம் முழுவதுக்குமான, கர்ப்பணி பெண்களுக்கு, குழந்தைகளுக்கு என பேக்கேஜுகளும் வைத்திருக்கி
றார்கள்.
 “பிடித்தமான பாட்டை லேப்டாப்பில் கேட்டுகொண்டே  15 நிமிடத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வேண்டிய காய்கறி ஷாப்பிங்கை செய்துவிட முடிகிறது.நேரம், பெட்ரோல் செலவு மிச்சம்” “ என்கிறார் ஜனனி. இவர் இரவு பகலாக நாளைக்கு 16 மணி நேரம் உழைக்கும் சாப்ட்வேர் என்ஜினியர்.

காய்கறிகள்  சூடான நீரிலும், குளிர்ந்த் நீரிலும்  கழுவபட்டு ஜெர்மனியிலிருந்து இறுக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களில் அழகாக   விதவித்மாக நறுக்கி பேக்செய்யபடுகிறது. சில நிமிடங்களில் ஒவ்வொரு வகை காய்கறிகளையும் அதேற்கேற்ற வடிவில் நறுக்கி குவிக்கிறது. ஆர்டர்களின் நமபர் இடப்பட்ட பைகளில் நிரப்பி அனுப்ப படுகிறது. ஆடம்பர  சுழலில் பரபரப்பாகபணி செய்தாலும் வீட்டு கடமைகளை மறக்காத  பெண்மணிகளின் சைக்காலாஜியை நன்கு அறிந்திருக்கும் வெங்கடேஸன் இப்போது நறுக்கிய காய்கறிகளை அவர்களின் அலுவலகத்திற்கே அனுப்பும் முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார். பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களில்,  தொழிற்சாலைகளில் நிருவனங்களின் அனுமதியுடன் இந்த திட்டம் செயல்படுகிறது. தங்கள் பெயருடன் காத்திருக்கும் காய்கறி கவரை வீட்டுக்குபோகும்முன்  அலுவலகத்திலிருந்தே எடுத்து செல்லலாம். இந்த புது முயற்சிக்கு நல்ல  வரவேற்பிருக்கிறது என சொல்லும் இவர்  இப்போது  அதை  பல அலுவலகஙகளில் அறிமுகபடுத்தவிருக்கிறார். மிக அதிகமான அளவிலிருக்கும்  அடுக்குமாடி குடியிருப்புகளில்   மாலைநேர கடைகளயும் நடத்த ஆரம்பித்திருக்கிறார். இரவு 10 மணி வரை  ஆன்லையனில் வந்த ஆர்டர்களை பார்த்து பிரித்து அதற்கேற்ப கோயம்பேடு, செங்கல்பட்டு திண்டிவனம் போன்ற இடங்களிலிருக்கும் இவர்களின் சப்ளையர்களுக்கு தங்களது தேவைகளை  இரவு 11.30க்குள் எஸ்எம்எஸ் செய்கிறார்பழங்களை கொடைக்கானல், ஊட்டி போன்ற தனியார் பண்ணைகளிலிருந்து பெறுகிறார். வெங்கடேஸின் இந்தப் பணியில் துணை நிற்பவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராகயிருக்கும். அவரது மனைவி நிர்மலா.  அலுவலக வேலைக்குபின் இதை செய்கிறார்.   காலயில் 6 மணிக்கு புதிதாக வந்திறங்கும் காய்கறிகளின் தரம் சோதிக்கபடுவதிலிருந்து பணி துவங்குகிறது. மாலைக்குள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்படுகிறது. அனுப்பிய விபரம் ஈ மெயில் செய்ய்படுகிறது. ஆன்லயனில் வந்த சில ஆர்டர்களில்  அமெரிக்க விலாசமிருந்ததை பார்த்து ஆச்சரியபட்ட இவர் அறிந்தகொண்ட விஷயம் அவை அமெரிக்காவிலிருக்கும் ஒரு பெண் அடையாரிலிருக்கும் தனது பெற்றோர்களுக்காக ஆர்டர் செய்தது எனபது.    “ஆன்லையனில் காய்கறிகள் பழங்கள் விற்பனை எனபது எளிதான பிஸினஸ் இல்லை. விலை, தரம் சரியான நேரத்தில் டெலிவரி எல்லாம்  எல்லா நாளும் சரியாகயிருக்கவேண்டும். நாங்கள் அதில் மிக கவனமாகயிருப்பதால் வேகமாக வளருவோம் என நம்பிக்கையோடுயிருகிறோம்”“ ஆர்வமுள்ள இளைஞர்கள் தங்கள் ஊர்களில் துவக்கலாம் என்கிறார்கள் இந்த தம்பதியினர்.

)

11/11/11

11 11 11

 

             11 11 11

 

இந்த தேதியை ம்றுபடி எழுத இன்னும் 1000 ஆண்டுகள் ஆகும். வங்கிப்பணியில் இம்ம்மாதிரி  விநோத தேதிகளில் எதாவது   ஒரு முக்கிய   விஷயத்தை (கிளைதிறப்பு  ஒப்பந்தங்கள் முக்கியஅறிக்கைகள் வெளியிடுவது போன்றவற்றை) செய்வதை வழக்கமாக்கியிருந்தேன். ஒரு கட்டத்தில் இம்மாதிரி நாட்கள் நெருங்கும்போது என்ன செய்ய்ப்போகிறீர்கள் என நணப்ர்கள்  கேட்க துவங்கிவிட்டனர்.
கடந்த ஒருவருடமாக அசைபோட்டுக்கொண்டிருந்த  ஒரு எண்ணமான இந்த  Blog ஐ பதிவு செய்யும் எண்ணம் எழுந்த்து.    
பெயர் ? ....சுவடுகள்     ஏன்  “சுவடுகள்“?

 என் அனுபவச் சிதறல்கள், படித்தவைகள்,  பார்த்தவைகள் கேட்டவைகள்  சந்த்தித்தவைகள், பயணங்கள்  எழுதியவைகள் எல்லாமே என் மனதில் பதிந்த சுவடுகள். சில கடல் அலையருகின் மணலில் பதிந்தவை. சில ஈர சிமிண்ட்டில் பதிந்ததடங்களாக வாழ்ந்துகொண்டிருப்பவை. . அவைகளை, உங்களுடன் பகிர்ந்துகொள்ள, என்னை வசீகரித்த மனிதர்களைப்பற்றிசொல்ல, என் வாழ்வின் வேறு சில நினைவலைகளைப்பதியவும்  இந்த சுவடுகள் உதவும்.   என் எண்ணங்களுக்கு சங்கிலிப் போடாத  என் குடுமப்த்தினருக்கும், எனக்கு தமிழ அறிவித்த ஆசான்களுக்கும்  நன்றியுடன்  இன்று இதைத் துவங்கிறேன். 
படைப்பின்சந்தோஷத்திற்காகவும் படிக்கிறவர்களுக்காகவும்  எழுதுவதை  நிரந்தரமாக பாதுகாக்க இந்த தொழில் நுட்பம் கைகொடுபதும் ஒரு காரணம். சரி நமக்கு பின் இதை பாதுகாத்து பராமரித்து  எழுதப்போவது யார்?  என்ற் கேள்வி மனத்தில் எழுகிறது. சமீபத்த (dec 2011) அமெரிக்க பயணத்திலிருந்தபோது படித்த ஒரு செய்தி. சமயல் குறிப்புகளை வலைப்பூவில் எழுதி வந்த ஒருவரின் மரணத்திற்கு பின் அந்த வலைப்பூவை உரிமை கொண்டாடி அவரின் வாரிசுகள் கோர்ட்டில் நின்றனர். எழுதபட்டிருந்த உயிலில் எதுவும் சொல்லப்ப்டாதால் வழக்கு. பல நூற்றுகணக்கான கட்டுரைகளில்  ஒரே ஒரு கடுரையில்  என வாழநாளுக்கு பின் இதை என் மகள் தொடர்வாள் என் நம்புகிறேன் என்று சொன்னதை சுட்டி அந்த வலைப்பூ எனக்குதான் சொந்தம் எனறாள்  மகள். நான் இந்தியா திரும்பும்  வரை வழக்கின் தீர்ப்பு வரவில்லை.
இதனால் வருங்காலத்தில் வலைப்பூக்களூம் சொத்தாக மதிக்கபடபோவது புரிகிறது.   எனவே இந்த வலைப்பூவின் வாரிசாக எனது பெயர்த்தி பார்கவியை நியமிக்கிறேன். பேச துவங்கிய சில நாட்களிலேயே  மீரா பாட்டி சொல்லிக்கொடுத்த “அகர முதல“” குறளை மனனம் செய்து சொன்ன இந்தப்பெண் தமிழ் நன்கு படித்து மாலனைபோல் தமிழ்எழுத வேண்டும் என  இறைவனை வேண்டுகிறேன்.
பிறப்பின் சரித்திரம் போதுமே. சுவடுகளின் பதிவுகளை பார்த்துவிட்டு எனக்கு எழுதுங்களேன்.
அன்புடன்
Ramanan

30/10/11


ராஜாவுக்கு கல்யாணம்

நமது பக்கத்துவீடான பூடான  உலகிலில் மன்னா ஆட்சியிலிருக்கும் சில  குட்டிநாடுகளில் ஒன்று. . ஒரு அரச குடும்ப திருமணத்திற்கான எந்தவித ஆடம்பரபமும் இல்லாமல் மிக எளிமையாக நடந்தது அதன்  31 வயது மன்னரான ஜிக்மி கேஸர் நாம்ஜியால் வாங்சக். (Jigme Khesar Namgyel Wangchuck, ) திருமணம்.  திருமணத்திற்கு பிற நாட்டுதலைவர்கள், மனன்ர்கள் அழைக்கபடவில்லை. நண்பர்களாக பங்குகொண்டவர்கள் ராகுல் காந்தியும் அமைச்சர் ஜோதிராத்தியா சிந்தியாவும் மட்டுமே. பூடானின் தலைநகர் திம்புவானாலும் திருமணம் நாட்டின் பழைய தலைநகரான  புனாகா லிருக்கும் பரம்பரை புத்தர் கோவிலில் தான் நடந்தது.  மணப்பெண்  21 வயதான ஜெட்சன் பெமா  (Jetsun Pema,)
இந்தியாவில் படித்தபின் லணடனில் கல்லூரியில் படிக்கும் மாணவி.  இவர் ஆக்ஸ்போர்டிலும்  பின்னர் அமெரிக்காவிலும் படித்த மன்னரின் காதலி எனபது ஐரோப்பிய மீடியாக்கள் தரும் தகவல்.   நாலு மணிநேர பிராத்தனைக்கு பின் மன்னரிடம் தரப்பட்ட சிவப்பு துணித்தொப்பியை மணமகளுக்கு அணிவித்து அழைத்துச்செனறு தன் தங்கசிம்மாஸனத்திற்கு  அருகில் அமைக்கபட்டிருந்த தனியாசனத்தில் அமர வைத்தார். அவ்வளவுதான் திருமணம் முடிந்தது. க்ஷ்க்ஷ்க்ஷ் பூடான் மன்னரின் மனைவியாகவும் ராணியாகவும் ஆகிவிட்டார்.
.7 லட்சமே மக்கள்தொகை கொண்ட, எளிமையான வாழ்க்கையில்  மிக சந்தோஷமாகயிருக்கும் இந்த நாட்டிற்கு மக்கள் கேட்காமலேயே  ஜனநாய அரசை மக்க்ளிடம் திணித்திருப்பவர் இவரது தந்தை.இதனால் இப்போது 47 உறுப்பினர் கொண்ட பார்லிமெண்ட்டும் இருக்கிறது. இதில் தன் திருமணத்தை அறிவித்த போது  ” “நாட்டின் ராணியாக வரப்போகிறவர் நல்ல மனுஷியாகவும்  மக்கள் விரும்பவராக, அவர்களின் நலம் பேணுவராக இருப்பார் “ என சொல்லியிருந்தார். அந்த நாளிலிருந்து மக்கள் ஆவலுடன்  அந்த அதிர்ஷ்டசாலியையை காண காத்திருந்தனர். திருமணத்தை தேசமுழுவதும் மக்கள்  தங்கள் வீட்டுதிருமணமாக கருதிகொண்டாடினர். பேபர் போஸ்டர்கள் கூட அனுமதியில்லாதா பூட்டனில் முதல் முறையாக டிஜிடல் பேனர்களில்  மன்னர் தம்பதியினரின் படம்.   குடும்ப விழாவாக நடைபெற்ற திருமணத்தை தொடர்ந்து   மக்கள் கூடியிருந்த ஸ்டேடித்தில் மக்களின் வாழ்த்தைபெற்ற இந்த மன்னரும் ராணியும அவர்கள் முன் முத்தமிட்டகொண்டது ஒரு  எதிர்பாராத  இனிய ஆச்சரியம்.. பொது இடத்தில் பெண்களை தொடுவது கூட தவறு எனறு கருதப்படும் நாட்டில் மன்னரின் இந்த செய்கை மன்னரைஒரு ஹீரோவாக பார்க்கும்  இளைஞர்களுக்கும் மாணவிகளுக்கும்  மகிழ்ச்சியை தந்தது என்பது எழுந்த ஆராவரத்தில் தெரிந்தது.

GDP   என்ற வளர்ச்சி குறியீடு போல GHP  எனபது ஒரு நாட்டு மககளின் சந்தோஷத்தை குறிக்கும் குறியீடு.  அதில் 148 உலக நாடுகளில்  7 வது இடத்தியும் ஆசியாவில் முதலிடத்தையும் பெற்றிருக்கும் பூட்டானில்  மக்கள் ஆட்சி மலர்ந்திருந்தாலும் மன்னரின் திருமணத்தில் தேசமே சந்தோஷப்படுவதில் ஆச்சரியமில்லையே


"

16/10/11

கலாம் சொன்னதைச் செய்தவர்


லைப் பூஸ்டர் 11             

 ராகவேந்திர ராவ்

  

ராகவேந்தர்  சென்னையில் பிறந்து  தெனாலியில் படித்து வளர்ந்தவர். தந்தை ஒரு ரெயில்வே அதிகாரி. குடும்பத்தில் யாரும்பிஸினஸோ தொழிலோ செய்பர்கள் இல்லை. ஆனால்  பிகாம் பட்டபடிப்பில் பல்கலைகழகதங்க மெடல் பெற்று, அகில இந்திய தகுதித்தேர்வில் பெற்ற முன்ணணி ரேங்க்கினால் அஹதாபாத் ஐஐஎம் ல் இடம் பெறறு எம்பிஏ படித்த இவரின் கனவு சொந்த தொழில். அதவும் சாதாரண கனவில்லை.  பிரமாண்டமான பலநூறு கோடிகளில் ஒரு பெரிய தொழிற்சாலை கனவு. அதுதான் இன்றைய உலகமறிந்த 300மில்லியன் டாலர் கம்பெனியான ஆர்ச்சிட் பார்மா (ORCHID PHARMA ) நிறுவனம்
கிடைத்த முதல் வேலை மும்பாயில் குவாலிட்டி ஐஸ்கீரிம் நிறுவனத்தில். நஷட்த்தில் இயங்கிகொண்டிருந்த அதன் அஹமதாபாத் கிளையை சீராக்கி சிறப்பான நிலைக்கு கொண்டுவந்த ராகவேந்தரின் சாதனை தாகத்திற்கு அது போதுமானதாக இல்லை.  சென்னை அசோக்லேண்ட் பணியில் ஒரு தொழிற்சாலையின் பன்முகங்களை அறிய வாய்ப்பு கிடைத்தாலும்,  பெரிய அளவில் சாதிக்க துடிக்க காத்திருந்தவருக்கு 1986ல் ஹைதிராபாத்தில் கெமிகல் ஆலையை துவக்க திட்டமிட்டகொண்டிருந்த  ஒரு குழுமத்தினரின் அழைப்பு சவாலாக இருந்தது. அந்த நிறுவனத்தை முதல் செங்கலிருந்து உருவாக்கிய அந்த நிறுவனம் 2 ஆண்டுகளில்  5 மடங்கு வளர்ந்திருந்த்து. அவரது  சொந்த கம்பெனியின் கனவைப்போலவே. சொந்த தொழில் துவக்க வேண்டிய மூலதனத்திற்கான் பணத்தை இந்த வேலையில் சம்பாதிக்க முடியாதென்பதால் வெளிநாடுபோய் வேலைசெய்து சம்பாதிக்க திட்டமிட்டதின் விளைவு நல்ல சம்பளத்திலிருந்த வேலையை ராஜினாமா செய்தது. இதற்கிடையில் திருமணமாகி ஒரு குழந்தையும் குடுமப உறுப்பினராகியிருந்த்து. மனைவி இல்லத்தரசிஇத்தனை நாள் உழைப்பில் வங்கிகணக்கில் இருந்த் சேமிப்பு  11000ரூ மட்டுமே இந்த நிலையில் ஒமன் நாட்டில் ஒரு ஹோட்டலின் அக்கெண்டிங் மேனஜர் வேலைக்கு தேர்வாகி தனியே அங்கு போனபோது இவர் அடைந்தது மிகப்பெரிய ஏமாற்றம். அது ஒரு 30  ஊழியர்களுடன் 16 அறைகளை  கொண்ட சின்னஞ்சிறு ஹோட்டல். அதில் அதிகம் படித்த ஊழியர் 12 வகுப்பு பாஸ் செய்திருந்தவர் நிறைய நிலமும், பெரியஆசைகளுடனும் கொண்டவர்கள் அதன் முதலாளிகள்.  முதலில் தயங்கிய ராகவேந்தர் இதை சவாலாக ஏற்று சாதிக்க  வேண்டும் என்று முடிவு செய்தார், எல்லா பொறுப்புகளையும் நேரடியாக கவனித்து அந்த ஹோட்டலை பெறும்லாபத்தை ஈட்டி தரும் நிறுவனமாக்கினார். அதன் உரிமையாளர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி அவர்கள் ஒரு ரெடிமேட் ஆடைதயாரிக்கு நிறுவனம், சின்ன உருக்காலை, ஒரு கெமிகல் ஆலை போன்றவைகளை உருவாக்க உதவினார். 4 ஆண்டுகளில் ஒரு சின்னஹோட்டலை நடதிக்கொண்டிருந்த குடுமபம் ஆண்டுக்கு 80 மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கும் குழுமம் ஆகியிருந்தது. அரபு நாடுகளில் நிறுவனத்தின் பங்குகள்ஊழியர்களுக்கு வழங்கபடமுடியாது என்பதால் 10000 டாலர் சம்பளம், பலவசதிகளை அந்த நிறுவனம் ராகவேந்தருக்கு தந்திருந்தாலும்  தன் கனவை மறக்காமல் இன்னும் பல புதியபரிமானங்களுடன் கண்டுகொண்டேயிருந்தார்.நிறுவனத்தின் வளர்ச்சசியில் கட்டுமான பணி, இயந்திர இறக்குமதி,  பணியாட்கள் எல்லாம் இந்தியாவிலிருந்தே ஏற்பாடுசெய்து பலருக்கு வாய்ப்பளிதிருக்கிறார்.  சேமித்த பணத்துடன் இந்தியா திரும்பிய ராகவேந்தர் திட்டமிட்டது  மருந்துகள் தயாரிக்கும்  தொழிலுக்கு தேவையான் அடிப்படை கெமிகல்கள் உற்பத்திசெய்யும் ஒரு ஆலை. மருந்து தயாரிக்கும் தொழில் மனித சமுதயாமிருக்கும் வரை வளர்ந்துகொண்டிருக்கும் ஒரு தொழில் அதில் ஈடுபடுவது மற்றதை விட லாபகரமானது  எனபதை கணித்த ராகவேந்தர் அதை  ஒரு சிறுதொழிலாக துவக்கவதை விரும்பவில்லை. தன்னுடையது ஒரு பெரிய நிறுவனமாக இந்தியா அறிந்த, உலகம் அறிந்த நிறுவனமாக இருக்கவேண்டும் என்பதை விரும்பினார். அதற்காக  12 கோடியில் தனக்கிருந்த தயாரிப்பு, நிர்வாக அனுபவம் எல்லாவற்றுடன் அழகான ஒரு பெரிய திட்டத்தை தயாரித்தார். தனது சேமிப்பு மட்டும் போதாது எனபதால் வங்கிகளை கடன் வசதிக்காக அணுகினார். ஐடிபிஐ வங்கி கடன்  5 கோடி கடன் தரமுன் வந்தது. ஆனால் சொன்ன நிபந்தனை  “ உங்கள் மூலதனத்தை 6 கோடிகளாக்க வேண்டும் “ அதற்காக பங்குசந்தையில் நுழையும்படி ஆலோசனையைவழங்கி  அதை நிர்வகிக்கவும் முன்வந்தது. தொடர்ந்து நேரடி மூதலீட்டுக்கு சில தனியார் நிறுவனங்களையும் அணுகினார். தன் திறமையின் மீது கொண்ட அசாத்திய நமபிக்கையினால்  நனபர்கள், நண்பர்களின் நண்பர்கள்,  அப்பலோ மருத்துமனையில் டாக்டராக இருந்த அண்ணனின் நணபர்களை என பலரை அணுகி திட்டத்தை விவரித்து  மூதலிட்டை பெற்றார். தனிமனிதராக இதைச்செய்ததைவிட  பெரியசாதனை,இறுதியில் குறைந்த 50 லட்சத்தை ஐடிபிஐ வங்கி முதலீடு செய்ய முன்வந்ததுதான். கடன் கொடுக்கும் வங்கியே அந்த தொழிலில் முதலிடு செய்வது எனபது இந்தியாவில் அது தான் முதல் முறை.   1992ல் துவங்கிய முயற்சி மொட்டுக்கள் ஒரே ஆண்டில் தொழிற்சாலையாக மலர்ந்தது.   எல்லா கட்டஙகளிலும் திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே பணிகள் முடிக்கபட்டன. முதல் இரண்டு மாதத்தில் தயாரிப்பும் பிஸினஸும் 5 கோடி லாபம் 43 லட்சம். அன்று முதல் இன்று வரை இந்த நிறுவனத்திற்கு தொடர்ந்தது வெற்றிகள் மட்டுமே. 94-95 ஆண்டுகளில் நிறுவனத்தின் பிசினஸ் 192 கோடிகள். திட்ட அறிக்கையில் எதிர்பார்ப்பாக சொல்லபட்டிருந்தது 37 கோடிகள்.
இந்த  மகத்தான வெற்றிக்ககான காரணமாக 3 விஷயங்களை  சொல்லுகிறார்  பத்மஸ்ரீ ராகவேந்திரா ராவ். முதலில்  ” “என்னுடைய டீம். என்னுடன் ஹைதிராபாத்திலும்,ஓமனிலும் என்னுடன் இணைந்தது உழைத்த அருமையான நண்பர்கள். . இன்று எல்லோருக்கும் கணிசமான பங்குகள் இருந்தாலும் கம்பெனி துவங்கிய காலங்களில் சமபளம் எடுத்துகொளாமல் நம்பிக்கையோடு உழைத்தவர்கள். இரண்டாவது தேர்ந்தெடுத்த தொழிலில்  எதைத்யாரிக்கவேண்டும் எனற  தீர்மானமான குறிக்கோள். நிறைய கம்பெனிகள் இந்த தொழிலில் இருந்தாலும் போட்டியில்லாத, மிகஅதிக அளவில்மருந்துகளின் தயாரிப்புக்கு தேவைப்படும்  ஒரு  முக்கிய ஆண்டிப்யாட்டிக் மூலப்பொருளை தயாரிக்க முடிவு செய்தது. “ (இன்று உலகில் 5 கம்பெனிகள்  மட்டுமே தயரிக்கும் ஒரு பொருளை இவர்கள் உற்பத்தி செய்கிறார்கள்.)  மூன்றாவது உலக மார்கெட்டில் கண்வைத்து முழுதயாரிப்பையும் 100% ஏறுமதிக்காக உற்பத்திசெய்யும் நிறுவனமாக துவங்கியது. உலகளவில்.  அடிப்படை மருந்துகளின் தேவையில் இந்தியா 1%  ஏறுமதி தான் செய்துவருகிறது அதில் இறங்குவதிலிருக்கும் ஆபத்துகளைப்பற்றி மற்றவர்கள் பேசிக்கொண்டிருந்த்காலத்தில் மீதி 99 % தயாரிப்பில் பெரிய இடத்தை பிடிக்க நாங்கள் நம்பிக்கையுடன் திட்டமிட்டதுதான் எனகிறார்..முதல்ஆண்டு 3 நாடுகளுக்கும், இரண்டாம் ஆண்டு 12 நாடுகளுக்கும் ஏற்றுமதிசெய்துகொண்டிருந்த ஆர்ச்சிட் நிறுவனம் இன்று 90 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. மிக அதிக அளவில் அமெரிக்காவிற்கு.  இன்று அமெரிக்க ஆஸ்பத்திரிகளில் வழங்கபடும் மருந்துகளிலும் மாத்திரைகளிலும் இருக்கும் அடிப்படை வேதியப்பொருள் இந்தியாவில் தயாரிக்கபட்டது என்ற பெருமையான விஷயத்தை செய்தவர்கள் இவர்கள்.
இவர்களின் வெற்றிக்கு மற்றொரு பெரிய காரணம் இவர்களது  3700 ஊழியர்கள். பலர் நிறுவனத்துடன் வளர்ந்தவர்கள். டீ கொடுக்கும் பையனிலிருந்து ஜெனரல் மானேஜர்கள் வரை பலருக்கு நிறுவனத்தின் ஷேர்கள்  வழங்கப்பட்டிருக்கிறது. சாப்ட்வேர் கம்பெனிகளில் மட்டுமேஇருந்த இந்த திட்டதை 199லியே தன் நிறுவனத்தில் அறிமுகபடுத்தியிருக்கிறார்.
உலகப்பொருளாதாரநெருக்கடி. பன்னாட்டுகம்பெனிகளின்போட்டி அன்னிய முதலீட்டு கொள்கைகளினால் வெளிநாட்டுகம்பெனிகளின்போட்டி, கமபெனியையே முழுங்க முயறசிக்கும் உள்நாட்டு போட்டியாளர்கள் எல்லாவற்றையும் திறமையாக சமாளித்து பிரமாண்டமாக நிற்கும்  இந்த நிறுவனம்  ஒரு  இந்திய இளைஞனின் “ நம்பிக்கையின் அடையாளம்
 096