7/8/11

கேளுங்கள் சொல்லப்படும் புதிய பாதையிலே......1
(ஆசிரியரின் அறிமுக குறிப்பக்காக ஒரு  draft
 வெற்றி பெற துடிக்கும் ஒவ்வொருவரின் வாழ்கையும்  அதை   நோக்கிய பயணமாகததான் இருக்கிறது. ஆனால், தீமானம் இல்லாத இலக்குடன் திட்டமிடப்படாத பயணமும் வெற்றியின் அளவுகோலை மாற்றிக்கொண்டே இருககும். அதனால் கிடைத்ததுமட்டுமே வெற்றி என எண்ணிக் கொண்டு  அந்த பயணத்தை பாதியில் விட்டுவிடுபர்கள் பலர்.
ஆனால் சிலர் யாரோ போட்டுவைத்த பாதையில் பயணம் செய்யாமல் தங்கள் பல்வீனங்களை பலமாக்கிகொண்டு,புதிய மாறுபட்ட சிந்தனைகளுடன் போராடி தங்களின் பாதைகளை  தாங்களே  புதிய பாதைகளாக்  உருவாக்கி  அதில்  வேட்கையுடன் பயணம் செய்து வெற்றி காண்கிறார்கள்.
அதிகரித்துவரும்  பல இளைய தலமுறை வாசகர்களின் விருபத்திற்கேற்ப  அப்படி புதிய பாதைகளில் பயணித்து வெற்றிபெற்ற சிரையும் அவர்களின் வெற்றிகளின் ரகசியத்தையும், வெற்றி பெற துடிக்கும் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் நம்பிக்கை விதைகளாக தர – இந்த பகுதி
                           ******
கேளுங்கள் சொல்லப்படும்


சில ஆண்டுகள் முன் வரை தேவையான ஒரு டெலிபோன் நமபரை பல நூறு பககஙகள் உள்ள டைரக்டிரியில் தேடி, பின்  தேடிய நமபர் அதில்  இல்லாத போதுதான் அது பழைய பதிப்பு என்பதை  தெரிந்து சலிப்படைவோம்.   இன்று ஒரு நம்பர் தேவையானால் ஜஸ்ட் டயலை கூப்பிட்டு கேட்டால் வினாடிகளில் கிடைக்கிறது.
டெலிபோன் நமபர்கள் மட்டுமில்லை  ஒடிகொண்டிருக்கும் சினிமா, ஆஸ்பத்ரிகள், ரிப்பேர்செய்பவர்கள், கல்யாண மண்டபங்கள் கல்லூரிகள், ரியல் எஸ்டேட், வாட்கைக்கு வீடு, செல்போன் கடைகள் இப்படி  உங்கள் எரியாவிலிருக்கு எதைப்பற்றிய விபரங்களையும் வினாடிகளில்  இலவசமாக தரும் இந்த ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் சேவைகளை இன்று 240  இந்திய நகரங்களில்இரண்டரைகோடிபேர் பயன்படுத்துகிறார்கள்.  இந்த நிறுவனம்  மாறுபட்டு சிந்தித்த ஒரு தமிழரின் கனவு.
 3000க்குமேற்பட்ட ஊழியர்களுடனும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விள்மபர வாடிக்கையாளார்களுடனும் வெற்றிகரமாக இயங்கும்  இந்த நிறுவனத்தை துவக்கியவர் விஎஸ்எஸ் மணி. ஜாம்ஷெட்பூரில் பிறந்து கல்கதாவில் வளர்ந்த இந்த  இளைஞனின் பெற்றோரின் விருப்பம் இவர் ஒரு சார்டெட் அக்கெண்டண்ட் ஆவது.  அதற்காக  டெல்லி வந்த இவர் படிப்பு செலவிற்காக பண்ம் சேர்க்க 1985ல்  ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அது யெல்லோ பேஜஸஸ் என்ற டெலிபோன் டைரக்டரி தயாரிக்கும் கம்பெனி.. முதல் முறையாக, தனியாரால் வெளிநாடுகளை போல், இந்திய தொலைபேசி துறையின் போன்டைரக்க்டிரி போல் இல்லாமல்  தொழில் வாரியாக, துறைவாரியாக நம்பர்கள் பட்டியிலிடபட்டு  புதுமாதிரியான வடிவில் வெளியிட துவங்கியிருந்த கம்பெனிஅதில்  வேலைக்கு சேர்ந்த சுப்பரமணி அதன் சார்பாக  பலரை சந்தித்த போது எழுந்த ஒரு எண்ணம், ஏன்  இது புத்தக வடிவில் மட்டும் இருக்க வேண்டும் ?  24 மணி நேரமும் கேட்டால்  போனில் சொல்லும்படி  அமைக்க முடியாதா?
மனதில் கனிந்து கொண்டிருந்த எண்ணம்  வலுவான வடிவம் பெற்ற போது வேலையையும், சிஏ படிப்பையும் விட்டுவிட்டு முழுமையாக இதில் ஈடுபட்டார். நண்பர்கள் முதலீடு செய்து உதவ முன் வந்தனர்.மிக துணிவுடன்“ஆஸ்க் மீ” ‘ என்ற் 24 மணி நேரமும் போன்எண்களைச்சொல்லும் கம்பெனியை துவக்கினார். அந்த காலகட்டத்தில் மக்களிடம் இதற்கு  எதிர்பார்த்தளவு வரவேற்பு இல்லை. ஒரு போன்காலுக்கான காசை செலவழித்து ஒரு நமபரையோ அலலது விஷயத்தையோ தெரிந்துகொள்ள வேண்டுமா எனபதுதான் மக்களின் மனோபாவமாகயிருந்த்தது. கம்பெனி நஷ்டத்தில் இயங்கியது. அதிக முதலீட ஆளில்லை. அதைவிட முக்கியமானது. வெற்றிகரமாக செயல்பட்டிருக்க வேண்டிய தனது நல்ல ஐடியாவை அதற்கேற்ற காலத்திற்கு முன்னதாகவே அறிமுகபடுத்தி கொண்டிருகிறோம் எனபதை மணி உணர்ந்த்தது தான்,  மேலும் இந்த முயற்சிகளுக்கு சிறந்த இடம் மும்பாய்தான் டெல்லி அல்ல என்பதையும் அறிந்தார்.  எந்த விஷயம் பற்றி அறிந்து கொள்வதற்கும்   நண்பர்களையோ   உறவினர்களையோ அல்லது அறிமுகமிலாதவர்களிடம் கூட தகவல் கேட்கும் இந்தியர்களிடையே தனது  கேளுங்கள் சொல்லப்படும் ஐடியா சரியான முறையில் அறிமுகபடுத்தபட்டால் நிச்சியம் வெற்றி பெறும் எனபதை திடமாக  நம்பிய சுப்ரமணி அதை சில ஆண்டுகளுக்குபின் மும்பாயில் செயலபடுத்த் முடிவு செய்தார்.  ஆனால் பணம் வேண்டுமேஅதற்காக  தோன்றிய மற்றொரு எண்ணம்.  “ வெட்டிங் பிளானர்” “ எனற திருமண விளம்பர செய்திதாள்.இது இந்துஸ்டான் டைம்ஸ், டைம்ஸ் ஆப் இந்தியாவுடன் இலவசமாக தரபட்ட  ஒரு இலவச பேப்பர்.  திருமணங்கள்  சமந்தபட்ட அத்தனை வியாபாரஙகளின் விளம்பரங்களுடன்  வரும் அதில்   மணமகன்/மகள்  விள்மபரஙள் இலவசம். இதன் வெற்றியை பார்த்த ஹிந்துஸான் டைம்ஸ் தங்கள் பேப்பரிலேயெ அந்த பகுதியை  இணைப்பாக துவக்கிவிட்டார்கள். இன்று அனேகமாக எல்லா பேபர்களும் செய்துகொண்டிருக்கும் இந்த விஷயத்தின் முன்னோடி   இந்த  எஸ்.சுப்ரமணி தான்.
பையில் சேமித்த 50000 ருபாய்களுடனும் மனதில் கனவுகளுடனும் மும்பாய் வந்த மணி 1996ல் தன் கனவு கம்பெனியான  “ஜஸ்ட் டயல்”“ லை துவக்கினார். எண்ணியபடி மும்பாயில் எதுவும் எளிதாகயில்லை. தனது  தொழிலுக்கு மிக முக்கியமானது டெலிபோன். அதுவும் மக்கள்  மறக்கமுடியாத எளிதில் நினைவில் வைத்துகொள்ளும் போன் நம்பருடன் இருக்க வேண்டும் எனப்தை திட்டமிட்டிருந்தார். ஒரு போனுக்கே 3 வருடம் காத்திருக்க் வேண்டியிருந்த காலம்.  புதிய எக்சேஞ்களில் விரைவில் போன் கிடைக்கும். மும்பாயின் புறநகர் பகுதியான கண்டிவேலியில் புதிய டெலிபோன் எக்ச்சேஜ்  துவக்கபோவதாக் எனபதை  அறிந்து அங்கு ஆபிஸை துவக்கினார்.   டெலிபோன்ஜெனரல்மானேஜரை அணுகி  8ல் துவங்கும் புதிய எக்சேஞ்ஜில் தனக்கு 888-88888 எண்ணை கேட்டார். இவரது பிஸினஸ் திட்டததால் கவரப்பட்ட ஜெனரல் மானேஜர் அந்த நம்பரை விசேஷ அனுமதியின் பேரில் தந்தார். ஒசி மேஜை நாற்காலிகள், வாடகை கம்யூட்டர்களுடனும் ஜஸ்ட் டயல் தன் சேவையை  ஒரு சிறிய இடத்தில் துவக்கியது. இன்று 20000 சதுர அடி பரப்பில் மும்பாயில் சொந்த கட்டிடத்தில் தலமையகத்துடன் நாடு முழுவதும் செயல்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு நகரமாக வளர்ந்து வந்திருக்கும் இவர்களின் வெற்றியின் ரகசியம்   “இன்னும் என்ன புதிதாக செய்யலாம் எனப்தை தொடர்ந்து சிந்தித்துகொண்டே இருப்பதுதான் “.  என்கிறார் மணி. டெலிபோன் நம்பரில் துவக்கி இன்று எல்லாவிதமான தகவல்களையும் தருகிறோம். எவராது கேட்ட  ஒரு தகவல் எங்களால் தரமுடியாவிட்டால் அந்த விஷயம் தான் எங்களது பட்டியலில் சேர்க்க வேண்டிய அடுத்த இலககு என தீர்மானிக்கிறோம். நாடு முழுவதும் பரவியிருப்பதால் பலருக்கு பயனாகயிருக்கிற்து. டெல்லியிலிருக்கும் ஒருவர் மதுரையிலிருக்கும் நணப்ருக்கு அவர் வீட்டின் அருகிலிருக்கும் ஒரு கடையிலிருந்து மலர் கொத்து அனுப்ப ஆர்டா செய்ய முடியும். ஒருமுறை இந்த  சேவையை பயன்படுத்திய அவர் எஙகளை மறப்பதில்லை.  எப்படி  இவர்களால் இவ்வளவு விஷயங்களைநமபர்களை தரமுடிகிறது.?  தொடர்ந்து வளர்ந்து வரும் டெக்னாலஜி உதவியுடன் மிகப் பெரிய டேட்டா பேஸை உருவாக்கி அதை மிக கவனமாக அப்டேட் செய்துகொண்டே வருகிறோம். நவீன கணணி வசதிகளுடன் பல இனங்களில் தொகுத்து வைத்திருகிறாம். ஒரு காலர்  விபரம் கேட்ட மறு வினாடி ஆப்ரேட்டரின் முன் உள்ள ஸ்கீரினில்  மின்னல் வேகத்தில் தெரியும், அதை பார்த்து அவர் சொல்லுவார். அல்லது எஸ்எம்எஸ்.  அனுப்புவார்..  செல்போன் வந்த்திலிருந்து இவர்களிடம்   தகவல் கேட்டு எஸஎம்எஸ்சில்  பெறுபவர்கள் பலமடங்கு உயர்ந்திருகிறார்கள்.டெலிகாம் துறையில் எழுந்த புரட்சி இவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியிருகிறது.
இலவசமாக செய்யும் இந்த சேவையில் இவர்களுக்கு என்ன லாபம்.? கேட்பவர்களுக்கு  தகவல் அளிபதற்கு இவர்களிடம்  நிறுவனங்கள் பதிவு செய்ய கொள்ள வேண்டும் விளம்பரத்தைப்போல அதற்கு  அவர்கள் பணம் தரவேண்டும். அதுதான் இந்த கம்பெனியின் வ்ருமானம். கடந்த ஆண்டுமட்டும் 150 கோடி வரவு-செலவு செய்திருக்கும் இந்த நிறுவனத்தில் பதிவு செய்து கொண்டிருக்கும் சிறு வியாபார நிறுவனங்கள் லட்சத்திற்கும் மேல். டெலிபோனில் வெற்றிகரமாக் செய்து கொண்டிருக்கும் இந்த  சேவவை 2007ல் இண்டர்னெட்டிலும் துவக்கி கலக்கிகொண்டிருகிறார்கள். போனுக்காவது காசு இது ஒசி எனபதால் இவர்களது  தளத்திற்கு வருகை தருபவர்கள் ஒரு நாளைக்கு லட்சத்திற்கும் மேல்.
மிக வேகமாக வளரும் இந்த நிறுவனத்தை கூர்ந்து  கவனித்த ஹாங்காங்கிலிருக்கும் SAIF என்ற  வென்சர் காப்பிடல் நிறுவனம் லாபத்தில் பங்கு என்ற முறையில் 50 கோடி  முதலீட செய்ய முன் வந்தனர். .அந்த இனிய ஆச்சரியத்தை சரியாக பயன்படுத்திகொண்டு  சில ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்த நிறுவனத்திற்கு  இப்பொது டைகர் குளோபல் எனற  அமெரிக்க வென்சர் கேப்பிடல் நிறுவனம்  77 கோடி  முதலீடு செய்திருகிறார்கள். அந்த மூதலிட்டுடன் அமெரிக்காவில்  1-800 என்ற எண்ணுடன் காலடி எடுத்து வைத்திருகிறார்கள், இனி நியூயாகிலிருப்பவர்களும்  சுவையான் பிட்சா எங்கே கிடைக்கும் என கேட்கலாம்.  அடுத்த இலக்கு  ஜஸ்ட் டயலை சர்வ தேச பிராண்டாக்குவது.
வெற்றி பெற்ற சிறந்த பிஸினஸ் ஐடியாவாக அறியபட்ட இநத நிறுவனத்தை வாங்க முயற்சித்தவர்களில்  முக்கியமானது குகூள்.  நிறுவனம்.  மனதில் தோன்றிய ஒரு மாறுபட்ட எண்ணத்தை, செயலாக்கும் வெறியுடன் புதிய பாதையில் பயணித்து வெற்றிகோட்டை கடந்தும்      ஓடிக்கொண்டிருக்கும் வி எஸ் எஸ் மணி புதிய தொழில் துவஙக விரும்புவர்களுக்கு சொல்ல விரும்பவது ‘ “முதலில் நீங்கள் ஏன் தொழிலை துவங்கவிரும்புகிறீர்கள் எனபதை உங்களயே கேட்டு திருப்தியான் பதிலை பெறுங்கள்.
பொறுமை, தோல்விகளை சந்திக்கும் துணிவு, வெற்றிபெற வேண்டுமென்ற வெறி இருந்தால் மட்டுமே துவங்குங்கள்.

24/7/11

தயாநிதியால்தான் விற்றேன்

ஏர்செல் மொபைல் போன் நிறுவனத்தின் முன்னாள் அதிபர் தான் அமைச்சர் தயாநிதி மாறானால்  அதை ஒரு மலேசிய நிர்வனத்திற்கு விற்க நிர்பந்திக்க பட்டதாக  சொல்லியி்ருப்பதாக செய்திகள் வெளியாயிருக்கின்றன.. உண்மை நிலை ஒரு அலசல்


மர்மம் என்ன? 


துல்லியமான தொலைநோக்குடன் வரும் சில ஆண்டுகளில் இந்த துறை  எங்கே போகும், என்பதை  சரியாக கணிக்கவும், உருவாக்கிய பிராண்டை சரியான நேரத்தில் விற்கும் சாமர்த்தியமும் இருக்கும்  தொழிலதிபர்கள் தோற்பதில்லை என்பதறகு மிக சரியான உதாரணம் சிவா குரூப்பின் நிறுவனர். திரு சி.சிவசங்கரன். சென்னை எண்ணை சுத்திகரிப்பு ஆலையில்  கட்டுமான பிரிவில்  சிறிய அளவில் உபகரணங்கள் செய்து கொடுக்கும்  ஒரு காண்டிடிராக்டராக இருந்தவர்.  .1985ம் ஆண்டு  அமிர்தராஜ் சகோதரர்களின் தந்தை ராபர்ட் அமிர்தராஜின் ஸ்ட்ர்லிங் கம்பியூட்டர் நிறுவனத்தை வாங்கி கம்பூட்டர்கள் செய்து விற்கும் பிஸினஸை துவக்கினார். அப்போது  ரூ80000 விலியிலிருந்த கம்பியூட்டர்களை ரூ33000க்கு அறிமுகபடுத்தி மார்க்கெட்டை கலக்கினார். எதிர்பார்த்த லாபம் இல்லாததால் கம்பியூட்டர் தயாரிப்பை நிறுத்திவிட்டு மற்ற துறைகளில் தடம்பதிக்க துவக்கினார். “லாபம் இல்லாமல் பிஸினஸ் செய்வது பாவம், நாம் துவக்கிய முதல் தொழில் என்று உணர்ச்சி வசப்பட்டு அதை  மேலும் நடத்துவது முட்டாளதனம் “ என்று சொல்லும் இவர் தொடர்ந்து செய்த எந்த பிசினஸும் நஷ்டமடையவில்லை.  இன்று. உலகின் பலபகுதிகளில் வெவ்வேறு துறைகளில் இயங்கும் 33 கம்பெனிகளின் மொத்த மதிப்பு   3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.( சுமார்12000 கோடி ருபாய்)  90களில்  தாய்லாந்து, ம்லேசியாவில் நலிந்த கம்பெனிகளை வாங்கி லாபம் தரும் கம்பெனிகளாக மாற்றி நல்ல லாப்த்தில் விற்றுவிடுவதுதான் முக்கிய பிஸினஸ். இதுவரை இப்படி 17 கம்பெனிகளை விற்றிருக்கிறார்கள். சிங்கபூர்,ஹாங்காங் நகரங்களில் நட்சத்திர ஹோட்டல்களில் நீண்ட நாட்கள் தனது அலுவலகத்தை நடத்தி வந்தவர் 1996 அமெரிக்காவில் கலிபோரின்யாவில் ஒரு ஆடம்பர வீட்டை வாங்கி தனது தலமையகத்தை அமைத்தலிருந்து அங்கு வாழும் ஒரு என்.ஆர்ஐ. இந்தியாவில் புதிய தொலைதொடர்பு கொள்கை அறிவிக்கபட்ட அதே ஆண்டு  சென்னையிலிருந்து  ஏர்செல் மொபைல் போன் கம்பெனியை துவக்கினார். அடுத்த ஆண்டே மற்றொரு மொபைல்கம்பெனியை(RPG) வாங்கி ஏர்செல்லின் சாம்ராஜ்யத்தை விரிவாக்கினார். பல மாநிலங்களுக்கு பரவலாக்க அனுமதி கோறி விண்ணபத்திருந்தார். இந்தியாவின் முதல் தனியார்  இண்ட்ர்நெட் வசதி அளிக்கும் கம்பெனியான DSL இவரால்தான் துவக்கப்ட்டது. இந்த நிறுவனம் சில ஆண்டுகளில் டாடாவின்  குழுமத்திஎன் வி‌எஸ்‌என்‌எல் க்கு  270 கோடிக்கு விற்கபட்டது. இது போல ரியல் எஸ்டேட், கப்பல்துறை  பதபடுத்தபட்ட உணவு என பல்வேறு நிறுவங்கள் இவரால் வாங்கி விற்கபட்டது.  வெவ்வேறு துறைகளில்  நிறுவனங்களை வாங்கி அவற்றை  பெரிய அளவில்  லாபத்திற்கு விற்றுவிடும் குழுமம் என்று உலகளவில் அறியபட்டது இவரது சிவா குருப்.  இந்த குருப்பின் முதலீடுகளை க்வனிக்கும் சிவா வென்ச்சர்ஸ் என்ற பிரிவின் கடந்த ஆண்டு மொத்த வரவுசெலவு மட்டும் 3900 கோடிகள்.  அதில் லாபம் எவ்வளவு என்பது அறிவிக்க படவில்லை
இவரது  ஏர்செல்  மொபைல்  கம்பெனியை மாக்ஸிஸ் கம்னியூக்கேஷன் எனற  மலேசிய கம்பெனிக்கு விற்க  அமைச்சர் தயாநிதி மாறனால் நிர்பந்திக்க பட்டதாக கடந்த வாரம் எழுந்திருக்கும் குற்றசாட்டை சிபிஐ விசாரிக்க துவங்கியிருக்கிறது. ஆனால உணமையில் சிவா குழுமம் 2002ம் ஆண்டு முதலே தனது ஏர்செல் நிறுவனத்தை நல்ல விலைக்கு விற்க  முயற்சித்து கொண்டிருந்தது. புதிய 71% அன்னிய முதலீடு கொள்கையினால் உலகின் முக்கிய டெலிகாம் கம்பெனிகள் இந்தியாவின் மீது கண் வைத்திருந்த நேரம் அது. 2004 ம் ஆண்டு ஏர்செல்லை  1600 கோடிக்கு ஹட்ச்போன் நிறுவனம் வாங்கபோவதாக சிவா குழுமம் அறிவித்திருந்தது. பின்னர் 2005 பிப்ரவரியில் அதை ரத்து செய்து  ஒரு ரஷ்ய நிறுவனத்துடன் 2025 கோடிக்கு விற்பனை ஒப்பந்தம் செய்து  இருப்பதாக அறிவித்தது. ஆனால் அந்த ஒப்பந்த்தையும் ரத்து செய்து அதேஆண்டு டிசமபர் 30ம்தேதி மலேசிய கம்பெனிக்கு  4860 கோடி ருபாய்களுக்கு விற்க பட்டிருக்கிறது.  அதாவது சிவா குழுமம் முதலில் எதிர்பார்த்தைவிட 3000 கோடிக்குமேல் லாபத்தில் வியாபாரம் முடிந்திருக்கிறது.  மலேசிய கம்பெனி மாக்ஸிஸ் ஓப்புகொண்ட  விலையை பற்றி  பெரிய பன்னாட்டு டெலிகாம் கம்பெனிகள் அடைந்த ஆச்சரியம் பற்றி 2006 ஜனவரி 6ம்தேதி ஃபினாஷியல் எக்ஸ்பிரஸ் ஒரு கட்டுரையே  வெளியிட்டிருக்கிறது.  கிடைத்திருக்கும் பணத்தில் எந்த கம்பெனியை வாங்கப்போகிறார் சிவசங்கரன்? எனறு ஃபினான்ஷ்யல் நாளிதழழ்கள் கேட்டன கம்பெனிகளை உருவாக்கி  லாபத்திற்கு விற்பதையே முக்கிய பிஸினாக செய்யும் சிவா குழுமம் நல்ல லாபம்  அடைந்திருக்கும் இந்த பிஸினஸை இப்போது தாங்கள் அமைச்சரின் மிரட்டலுக்கு அடிபணிந்து செய்திருப்பதாக சொல்லுவதின் மர்மத்தைவிட பெரிய மர்மம்- வழக்கு பிரச்சனைகள்மீடியாக்களை  அறவே தவிர்க்கும் திரு சிவசங்கரனே சிபிஐக்கு நேரில் சென்று சிபிஐயிடம்  இது பற்றி சொல்லியிருப்பதாக சொல்லப்படுவதுதான்.ராயல் சல்யூட்எனக்கு வேண்டாம் அந்த புதையல்

அந்த பென்ஸ் கார் திருவனந்தபுரம்  கோவிலின் வடபுறமிருக்கும் நுழைவாயிலின் முன்னே நிற்கிறது.  நாலுமுழ வேஷ்ட்டியில்   மேலே சட்டையில்லாமல் காலில் செருப்புமில்லாமல் இறங்கும் அந்த மெலிந்த  அதிக உயரமில்லாத  மனிதர் நான்கு பேர்களுடன் உள்ளே நுழைகிறார், மெல்ல நடந்து  அவர் சன்னதியை   அடைந்ததும் அந்த சனனதியில் அனந்தசயனத்திலிருக்கும்  பெருமாள் பத்மாநாபருக்கு தீபாராதனை காட்டிய பின் தலமை அர்ச்சகருடன் சன்னதியிலிருக்கும் அனைவரும் வெளியேறுகிறார்கள். சன்னதியில் அவரும் பெருமாளும் மட்டுமே 10 நிமிடங்கள்  தனியே.  பின்னர்  வெளியே வரும் அவர் வந்த வாயில் வழியே திரும்புகிறார். வாயிலின் கதவு மூடப்படுகிறது.  காரில் ஏறுமுன் கால்களிலிருக்கும் மணலை தட்டிவிட்டு    செருப்பை அணிந்து கொள்கிறார்.  அவர் தான் உலகிலியே பணக்கார கோவிலாக  இப்போது ஆகிவிட்ட  திருவனந்தபுரம் கோவிலுக்கு சொந்தகாரான  திருவனந்தபுர மஹாராஜா .உத்திராடம் திருநாள் மார்தாண்ட வர்மா. பல  ஆண்டுகளாக  அந்த சம்ஸ்தான மன்னர்கள் கடைபிடிக்கும் மரபு இது. தினசரி மன்னர் வந்து பத்மநாபஸவாமியிடம் தனியாக பிரார்த்னை செய்து பேசி அவரது ஆணைகளை பெறுகிறார். கோவிலின் மண் கூட காலில் ஒட்டி அரணமணைக்கு வந்து விடக்கூடாது என்று மன்னர் பரம்பரை சாரட்டில் ஏறும் முன் செய்ததை இன்றைய மன்னரும் பின்பற்றுகிறார்.
இன்றைய திருவன்ந்தபுர ம்ஹாராஜ  மிக எளிமையான மனிதர்.  வயது 90. மிக ஆரோக்கிய்மாக இருக்கிறார். வாக்கிங்ஸிடிக் இல்லாமல் நடக்கிறார் காலையில் 4 மணிக்கு எழுந்து யோகா செய்துவிட்டு வேதம் படித்தபின் கோவிலுக்கு செல்லுகிறார்.. சுத்த வெஜிட்டேரியன். பால் தவிர வேறு பானகம் எதுவும்  அருந்துவதில்லை. நிறைய படிக்கும் இந்த மன்னர்  செய்திதாளில் வரும் முக்கிய செய்திகளை தானே கத்தரித்து ஒட்டிவைகிறார்.  30 ஆண்டு கலக்‌ஷன் வைத்திருக்கிறார்.. வெளிநாட்டு பயணம் அல்லது தவிர்க்க முடியாத காரணத்த்தால் கோவிலுக்கு வர முடியாத போனால் பதமாநாபர் கட்டளயிட்டிருப்பது போல மன்னர் கோவிலுக்கு 166ரூபாய் 35 பைசாஅபராதம் கட்ட வேண்டும். 
 தென்தமிழ் நாட்டை ஆண்ட சேரமன்னர்களின் பரம்மபரையில் வந்தவர்கள் மார்தாண்டவர்மாக்கள், 1750 ஆண்டுதிருவீதாங்கூர் சம்ஸ்தாணத்தை ஆண்ட மன்னர் தனது தேசத்தையும் சொத்துக்ளையும் பெருமாளிடம் ஒப்படைத்துவிட்டு அவருடையா தாஸனாக நாட்டை ஆண்டுவந்தார். அன்றுமுதல் மன்னர்கள் பத்மாநாபரின் தாஸர்கள். பணியாட்கள் என்றால் பதவி விலகலாம், ஓய்வுபெறலாம், தாஸர்கள் இறக்கும்வரை அந்த பணியை செய்யவேண்டும்.இந்தியாவின் மற்ற ராஜ குடுமபங்கள் போல ஆடம்பரமாக் இல்லாமல் மிக எளிமையாக சிக்கனமாக வாழும் ராஜகுடும்பம் இது. அன்னிய ஆக்கிரமிப்பை எதிர்த்து 1741 லேயே டச்சுகாரகளுடன் போரிட்டு  வென்றதையும் தொடர்ந்து வந்த ஆங்கிலேயர்களுக்கும் எளிதில் அடிபணிய மறுத்தையும் சமஸ்தானத்தின் சரித்திரம் சொல்லுகிறது.  மன்னர் பரமபரையில் ஸ்வாதி திருநாள் போல  பல இசை, நடன கலைஞ்ர்கள் இருந்திருக்கிறார்கள். சென்னையில் வசிக்கும் இந்த  அரச குடுமபத்தை சேர்ந்த இன்றைய தலைமுறையான கோபிகா வர்மா சிறந்த மோகினி ஆட்டகஞ்ர்
. கல்விக்கும்,கலைகளுக்கும் நிறைய ந்னகொடைகள் வழங்கியிருக்கும் இந்த அரச குடும்பத்திற்கு இன்றைய வருமானம் அவர்கள் செய்துவரும் டிராவல்எஜன்சி, ஏற்றுமதி/ இற்க்குமதி  ஹோட்டல் ஓன்ர பிஸினஸ்க்ளிலிருந்து.  இன்றும் ஒரு பிரிட்டிஷ் கம்பெனியின் சேர்மனாக்யிருக்கும் மன்னர், மீடியா வெளிச்சத்தை விருமபாதவர். அவர் படங்களை செய்திதாட்களில் பார்பது அபூர்வம். வேஷ்டி சட்டை அல்லது ஜிப்பாவில்தான் எப்போதும். பார்பவர்கள் இவர்தான் திருவன்ந்தபுர மஹாரஜா என்றால் யாரும் நமப மாட்டார்கள். திருவனந்தபுரத்தில் கெளடியார் எனபது மன்னரின் அரண்மனைஒணம், அரச குடுபத்தவர்களின் பிறந்த நாள் போன்ற நாட்க்ளில் தான் . மன்னர். மக்களை சந்திப்பார். மற்ற சந்திப்புகள் அபூர்வமாக அவரது அழைப்பின் பேரில்மட்டுமே. இரண்டு ஆண்டுகளுக்கு முன் மன்னரை மரியாதை நிமித்தம் காணவந்தவர் லெப்டினட் க்ர்னல் மோகன்லால். தன் படங்களின் மூலம் இந்திய ராணுவத்தின் பெருமையை இளைஞர்கள் உணர செய்த மோகன்லாலுக்கு  மெடராஸ் ரெஜிமெண்ட் டெரிடோரியல் ஆர்மி கெளரவ லெப்படினெட் கர்னல் பதவி கொடுத்திருக்கிறது.  1870ல் அந்த ரெஜிமெண்ட் அன்றைய திருவனந்தபுரம் மன்னரால்  துவக்கப்பட்டது அதனால்  திருவன்ந்தபுர மன்னர்கள்   அதன் கெளரவ தளபதி.  தன் உயர் அதிகாரியை பார்த்து ஒரு ராயல் சல்யூட் கொடுக்க தன் அம்மாவுடன் சாந்த குமாரியுடன் வந்தார். மகிழந்தது மன்னர் மட்டுமில்லை அவரது முழு குடும்பமும்தான். நேருவிலிருந்து ராஜிவ் வரை வந்திருக்கும் அந்த  அரண்மணைக்கு வந்த  முதல் நடிகர் மோகன்லால். தங்கள் கோவிலில் திடுமென புதையல் போல கிடைத்திருக்கும் கோடிக்கணக்கான் செல்வம் யாருக்கும் சொந்தமானததில்லை. நிச்சியமாக  எங்கள்  குடுமபத்தினுடையதில்லை. அது ஆண்டவனுடையது எனபதினால் ஒரு பைசா கூட எங்கள் குடுமபத்திற்கு வேண்டாம். அரிய பொருட்களை மீயுசியத்திலும், மற்றவைகளை கோவில் மூலமாக அறப்பணிகளுக்கு செலவிடலாம் அற்வித்திருகிறார் இந்த் மன்னர்.  பத்தமநாபா ஸ்வாமி இவருக்கு பெரிய செல்வத்தை மட்டுமில்லை பெரிய மனதையும் கொடுத்திருக்கிறார். மோகன்லாலைப்ப்பொல நாமும் வைப்போம் ஒரு சல்யூட்.
17/7/11

இந்தா 50 கோடி!


50 கோடியை நன்கொடையாக கொடுத்தவர் 

கடந்த சில ஆண்டுகளாக  இந்தியாவின் மிக பெரிய கார்பெரேட்கள் கல்விக்காகவும்,  பொது நல தொண்டுகளுக்க்காகவும் தனி அறக்கட்டளைகளை நிறுவி பெரிய அளவில் நன்கொடைகளை அளித்துவருகின்றன. வருமான வரிவிலக்கு இருப்பதும் இதற்கு ஒரு காரணம்.
கடந்த வாரம் ஒரு தனிமனிதரும் அவர்து மனைவியும் தங்கள்  சேமிப்பிலிருந்து 50 கோடிருபாய்களை நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.  இதுவரை தனி மனிதர் எவரும்  தராத அளவில் பெரிய நன்கொடையை தந்த சாதனையை செய்திருக்கும் . இவர் தொழில் அதிபரோ சினிமா நட்சத்திரமோ இல்லை. இந்தியாவிலேயே அதிகமான மாத சம்பளம் பெற்றுகொண்டிருந்த ஒரு கம்பெனி நிர்வாக அதிகாரியாக இருந்தவர்.   தனது நிறுவன தலைவர் கேட்டுகொண்டதற்காக தன் பணியை ராஜினாமா செய்து இந்திய அரசின் ஒரு முக்கிய திட்டத்தை வழி நடத்த பொறுப்பேற்றிருக்கும் நந்தன் நீலேகெனி. தான் அந்த ஆச்சரியமான் நபர்.  (NANADAN NILEKANI). இன்போஸிஸ் நிறுவனர்களில்  ஒருவரான இவர் அந்த நிறுவனத்தின் பிரம்மாண்னட வளர்ச்சிக்கு பெறும் பங்களித்தவர்.  திரு நாரயாணமூர்த்தியை தொடர்ந்து அதன் முதல் செயல் அதிகாரியாக2002ல் உயர்ந்தவர். 2009ல்  இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அடையாளா அட்டை வழங்கும் பிரதமரின் கனவு திட்டத்தை செயலாக்க பிரதமர் நாரயாணமூர்த்தியிடம் ஆலோசனை கேட்டபொழுது,  அரசின் அந்த பணிக்கு  தலைமையேற்க அவரால் பரிந்ததுரைக்கபட்டவர். பல லட்சஙகள் சம்பளமாகவும் போனஸை கோடிகளிலும் பெற்றுகொண்டிருந்தவர் தன்பதவியை ராஜினாமா செய்து விட்டு காபினெட் அமைச்சரின அந்ததுஸ்த்துள்ள அந்த பதவியை ஏற்றுகொண்டிருபவர்.
” “இண்டியன் இன்ஸ்டியூட் ஃபார் ஹுமன் செட்டில்மெண்ட் என்ற அறகட்டளை  தென்கிழக்கு ஆசியாவிலேயே  மிகப்பரிய டிஜிட்டல் நூலுகம், பலதுறைகளை ஒருங்கிணைத்த ஒரு கல்விநிறுவனத்தை துவக்க 300கோடியில் திட்டமிட்டிருக்கிறது. அந்த நிறுவனத்திற்கு தான் இந்த  50 கோடி ரூபாய் நன்கொடை.  ” “தனிநபர் நன்கொடைகளின் சரித்திரத்தில் சாதனை படைத்திருக்கும் இந்த நன்கொடை எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்தது மிகப்பெரிய கெளரவம் “ என்று இதன் இயக்குனர் அறிவித்த பின்னர்தான் இந்த  நன்கொடை பற்றிய விபரம் வெளியே தெரிந்தது. 2009ம் ஆண்டு டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட  உலகின்  செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியைலில் இடம்  பெற்றவர்.
 இவரது மனைவி ரோஹிணி  சமூகநல சேவைகளில் அதிக ஆர்வம் கொண்டவர். மும்பாய் ஐஐடியில் படிக்கும்போது சந்தித்து காதல் திருமணம் செய்துகொண்டிருக்கும் இந்த தம்பதியினரின் மகனும், மகளும் அமெரிக்க யேல் பல்கலைகழகத்தில் படிக்கின்றனர்.  10/7/11


சீனாவின்  குரு காணிக்கை

சீனாவில் இந்திய அரசின்  உதவியுடன் முதல் முறையாக ஒரு யோகா உச்சி மாநாடு  தென் சீனாவில்  குன்ஸாஹு(GUNGZHOU)  என்ற ஒரு பெரிய தொழில் நகரில்  சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது. தலைமை விருந்தினாராக் அழைக்கபட்டிருந்தவர் யோகா குரு பி கே எஸ் அயங்கார். அவர் உலகின் பல நாடுகளுக்கு பயணம் செய்திருந்தாலும் சீனாவிற்கு இதுதான் முதல் முறை.  புனாவில் யோகா பள்ளியை   நடத்திவரும்  இந்த குருவிற்கு  அங்கே எதிர்பாராத ஆச்சரியங்கள் பல்  காத்திருந்தன. 200டாலர் கட்டணம் கட்டி மாநாட்டிற்கு வந்திருந்த 1300 பேர் களில்  சில மாணவர்கள் ஒருங்கிணைந்து அவருடைய அய்யங்கார் பாணி யோகசனங்களை  தவறில்லாமல் செய்துகாட்டினார்கள். . அதைவிட ஆச்சரியபடுத்திய விஷயம் அவரது அய்யங்கார் ஆசனங்கள் சீனாவில் மிகவும் பாப்புலர் என்பதும், அந்த நாட்டில்  17 மாநிலங்களில், 57  நகரங்களில்  அவரது பாணி யோகவை கற்பிக்க பல பள்ளிகள் இருப்பதும் 30, 000க்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றிருக்கிறார்கள் எனபதும் தான். பல பள்ளிகளில் ஆசிரியர்கள் ரிஷிகேஸ் வந்து  இவரது சீடர்களிடம் பயிற்சி பெற்றவர்கள்.  சீனர்கள் தங்களது குருவிற்கு மிகுந்த மரியாதை அளிப்பவர்கள். தாங்கள் பயிலும் யோக கலையின் பாணியை உலகிற்கு அறிமுகபடுத்திய குருவை சந்திப்பதை வாழ்வின் பெரிய வாய்ப்பாக கருதிய சீன இளைஞ்ர்கள் அவரை  பல நகரங்களில் வரவேற்றனர்.  “சீனர்களுக்கு யோகா பற்றி ஓரளவு தெரியும் என்பதை மட்டுமே அறிந்திருந்த எனக்கு  யோகா அங்கு இவ்வளவு பிரபலமாக் இருப்பதை பார்க்கும்போது  மிகவு சந்தோஷமாக இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் சீனா யோகாவில் இந்தியாவை முந்தி விட்டால் கூட நான் ஆச்சரியபட்மாட்டேன் “  என்று சொல்லும் அய்யங்கார் கர்நாடக மாநிலத்தில்  பெல்லூர் என்ற சிறிய கிராமத்தில் மிக ஏழைக்குடும்த்தில் பிறந்தவர். சிறுவயதிலியே பெற்றோர்களை இழந்து மைசூரிலிருக்கும் புகழ்பெற்ற யோகாசன ஆசிரியாரான தன் மாமா கிருஷ்ணமாச்சாரியாரின்  வீட்டில் தங்கி அவருடைய உதவியாளாரக பணிசெய்து யோக கலையை கற்றவர். 15 ஆண்டு ப்யிற்சிக்குபின்னர்   மராஷ்ட்டிர மாநிலத்தில் புனா நகருக்கு வந்து யோகா பயிற்சி பள்ளியை  துவக்கி  அதை வளர்த்தவர். தானே கற்று உணர்ந்த சில பழைய யோகயாசன முறைகளை செம்மைப்படுத்தி கற்பித்துவந்தார். எளிதான  இந்த யோகா பாணி அய்ங்கார் ஆசனங்கள் என்று பிரபலமாகி இன்று இந்தியாவில் பல இடங்களிலும், உலகின் பல நகரங்களிலும் பரவியிருக்கிறது.  ’ ‘யோகா லைட் ஆப் லைஃப்’ ‘ என்ற இவரது புத்தகம் உலகம் முழுவதும் அதிக அளவில் விற்கும்  யோகா புத்தங்களில் ஒன்று
இந்த பயணத்தில்  பல  சீன நகரங்களில் யோகானசஙகள்  செய்து காட்டியும் அது குறித்து விளக்க உரையையும் நிகழ்த்தியிருக்கும் இந்த குருவின் படத்துடன் சீனா நாட்டின் அஞ்சல்துறை  ஒரு விசேஷ  தபால் தலை வெளியிட்டு கெளரவித்திருக்கிறது. இத்தகைய கெளரவம் பெறும்  முதல் இந்தியர் இவர்தான். சீன அரசுக்கு  தெரிவித்த நன்றி உரையில்” என் வாழ் நாள் முழுவதும் சந்தோஷப்படும்  வகையில் என்னை சீனாவின் ஒரு அடையாளமாக  கருதி  இந்த மகத்தான கெளரவத்தை அளித்தற்கு  மிக்க நன்றி  என குறிப்பிட்டிருக்கிறார். இனி ஆண்டுக்கு ஒருமுறை சில்மாதங்களாவது சீனாவில் யோகா வகுப்புகள் நடத்தபோவதாக் அறிவித்திருக்கும் இவருக்கு வயது- ஒன்றும் அதிகமில்லை 93 தான்.


26/6/11

எண்ணஙகளின் வண்ணங்களை மாற்றிக்கொள்ளாத ஒரு ஓவியன்” “மிகத்திறமையான ஒவியகலை படைப்பாளியான அவருடைய மரணம் கலையுலகில் வெற்றிடத்தை தோற்றுவித்துவிட்டது “ என குடியரசு தலைவரும்,   ”உலகில் இந்தியாவின் அடையாளாமாக அறிய பட்ட ஒரு ஒவியனை தெசம் இழந்துவிட்டது” “ என பிரதமரும் அஞ்சலி செய்தி வெளியிட்டு கெளரவிக்கபட்டவர் இந்தியாவின் பிகாசோவாக அறியபட்ட ஹூசேன். மரணத்தின் பின் இத்தகைய கெளரவம் பெறும் இவரது இறுதிகால வாழ்க்கை சோகமானது.
உலகிலேயே நவீன ஒவியத்தின் தந்தையாக கருதபட்ட பிகாசோவிற்கு பின்னா அத்தகைய பாணி ஓவியங்களினால் உலகபுகழும்,பெரும் பணமும் ஈட்டிய இவர் தனது 96ம் வய்தில் லண்டனில் மரணம்அடைந்தார். சில ஆண்டுகளுக்கும் முன் ஒரு ஒவியம் விற்கபட்ட விலை 9 கோடி ரூபாய்கள். கடந்த மாதம் விற்கபட்ட ஒரு ஒவியத்திற்கு கிடைத்தவிலை 2 கோடி. இவரது மரணம் அடைந்த தினத்தன்று கூட இவரது ஒரு ஒவியம் 87 லடச்திற்கு ஏலமிடப்ட்டிருக்கிறது. எந்த இந்திய ஒவியனும் தந்து படைப்புகளுக்கு இவ்வளவு பணம் ஈட்டியதில்லை. இவரது ஒவியங்களைப் போலவே பிரமிக்கவைக்கும் விஷயம் இவரது சுறுசுறுப்பு. மரணத்திற்கு சில நாட்கள் முன்னர் கண்ணாடிசுவரில் ஒரு புதிய ஒவியத்தை  எழுத துவங்கியிருந்தார்.
மிக சாதாரண குடுமபத்தில் பிறந்து பிழைப்புக்க்காக சினிமா பேனர்கள் வரைய துவங்கி அந்த பணத்தில் ஓவியகல்லூரியில் நவீன ஓவியத்தை முறையாக் கற்று தேர்ந்தவர். மார்டன் ஆர்ட்டில் எண்ணற்ற் படைப்புகளை உருவாக்கிய இவருக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட் குதிரைகளும், பெண்களும். மாதுரி திட்ஷித்திலிருந்து அனுஸ்கா சர்மா வரை இவர்து ஓவிய நாயகிகளாயிருந்திருகின்றனர். இவர் தனது ஓவியங்களினால் பெற்ற புகழை விட 90 களில் சர்ச்சைகளினால் பெற்ற விளம்பரங்கள் தான் அதிகம். 70களில் இவர்  ஆடைகளில்லாமல் வரைந்த இந்து கடவுள்களின் படங்களை 90ல் ஒரு பத்திரிகை பிரசுரிக்க அதில் எழுந்த சர்ச்சை  இவர் முஸ்லீம் எனபதால் அரசியல் ஆகி தேசம் முழுவதும் எதிர்ப்புஅலையை  எழுப்பியது.  தொடர்ந்து 95ல் இவர் வரைந்த இந்திய வரை படத்தில் பாரதமாத ஆடையின்றி சித்திரிக்க்பட்டதால மீண்டும் சர்ச்சை எழுந்தது. சிவசேனா, விஸ்வஇந்துபரிஷித் போரட்டங்களை துவக்கியது. இவரது படைப்புகள் இருக்கும் காலரிகள் நாசம் செய்யபட்டது.  நாட்டின் பல கோர்ட்களில் இவர் மீது வழக்குகள் குவிந்தன, சம்மன்களை  ஏற்காததால். கைதுக்கான் வாரண்ட்டும் சொத்துகளை பறிமுதல் செய்தும் ஒரு கோர்ட் ஆணையிட்டது.
நாட்டின் உயரிய கெளரவமான பத்ம விபூஷன் பெற்ற இந்த கலைஞன், வழக்ககுகளையும், அரசியல் போராட்டங்கலையும் சமாளிக்க முடியாமல் நாட்டைவிட்டு வெளியேறவேண்டியதாகிவிட்டது. .பல நாடுகளில் ஹோட்டலில் வாழ்க்கையை கழித்துகொண்டிருந்த இவரை கததார் நாட்டு அரசு தங்கள்நாட்டினகுடிமகனாக அழைத்தது.   90 வயதில் தன் இந்திய குடிஉரிமையை இழந்து கத்தார் நாட்டின் பிரஜையான இவருக்கு அங்கு நிஜமாகவே ராஜ மரியாதை. நாட்டின் மன்னர் குடும்பத்தினர்  இவரது ஒவிய ரசிகர்கள். கத்தாரின் அரண்மனை, அரசு கட்டிட வளாகங்களை இவரது படைப்புகள் அலங்கரிக்கின்றன. கடந்த பிறந்த நாளுக்கு மன்னர் குடும்பம்  அளித்த பரிசு ஒரு ஃப்ராரி பந்த்ய கார். 90 வயதிலும் அதை அனாசிய்மாக ஒட்டி ஆச்சரியபடுத்தினார்.
தனது  ஓவியங்களுக்காக இந்து அமைப்புகளிடம் மன்னிப்பு கோர மறுத்து தன் மீது உள்ள எல்லா வழக்குகளையும் சேர்த்து டெல்லியில் விசாரிக்க 2006ல் இவர் கொடுத்த மனு ஏற்கபட்டது இறுதியில்  3 ஆண்டுகளுக்கு முன் டெல்லி உயர்நீதி மன்றம் தந்த தீர்ப்பு ” “ஒவியர் யார் மனத்தையும் புண்படுத்துவதற்காக எழுதிய படங்கள்  இவை இல்லை எனபது அவரது எண்ணற்ற புகழ்பெற்ற படைப்புகளை பார்க்கும் போது புரிகிறது. இந்த 90 வயது ஒவியன் தன் இறுதிநாட்களில் தாய் நாட்டில் தங்கி ஒவியங்கள் படைக்க உரிமையை இழக்கவேண்டியஅவசியம் இல்லை.  “ ஆனாலும் அரசு இயந்திரம் அந்த தீர்ப்பை செயல் படுத்த தவறிவிட்டது. கத்தாரில் எத்தனை கெள்ரவம் அளிக்கபட்டாலும்  இறுதி நாட்களில் இந்தியாவில் வாழ்வதையே விரும்பிய ஹீசேனின் இறுதி ஆசை நிறைவேறவில்லை. இந்தியாவில் இவருக்கு மிக பிடித்த நகரங்களில் ஒன்று சென்னை. இந்து நாளிதழ் ஆசிரியர் ராம் இவரது நெருங்கிய நணபர். சென்னை வருபோது அவர் இல்லத்தில் தான் தங்குவார். அங்கு அவரது  ஒரு செட் உடைகளும் ஒவிய பொருட்களும் அவருக்கான அறையிலிருக்கும். மரணத்திற்கு இரண்டு நாள் முறை மருத்தவமனையிலிருந்து திரு ராமிடம் பேசியபொழுதுகூட தன் ஆசையைப் பற்றி பேசியிருக்கிறார்.
 “ நம் காலத்தில் வாழ்ந்த ஒரு உலக புகழ்பெற்ற  இந்தியாவில் பிறந்து கடைசிவரை மும்பாய்காரனாகவே வாழ்ந்த ஒவியன் இறுதியில் ஒரு கத்தார் நாட்டு பிரஜையாக இறந்து எங்கோ லண்டன் இடுகாட்டில் புதைக்கபடுவது மிகப்பெரிய சோகம்” “ என்கிறார் பிரித்திஷ் நந்தி.
 ” “தன் ஒவியங்களுக்காக தன் \தேசத்தையே விட்டுகொடுத்தாலும் தன் பிடிவாத்தை விட்டுகொடுக்க மறுத்த இவரின் மரணம் மார்டன ஆர்ட்டுக்கு இழப்பாக இருந்தால் இருந்து விட்டு போகட்டும்.அதற்கு இவ்வளவு ஆர்பாட்டம் ஏன்? என்கிறார் சிவசேனா தலவர் பால்தாக்ரே.

             

    

19/6/11

யோகாசன குரு விரும்பும் “ஆசனம்”


யோகாசன குரு விரும்பும்  “ஆசனம் 

இந்திய அரசியலில் இந்திராகாந்தி காலத்திலிருந்தே யாராவது ஒரு சாமியார்
தீடிரென்று பாப்புலாராகி அரசியல் பண்ணிக்கொண்டிருப்பார். இப்போது பாபா ராம்தேவ். ஊழலுக்கும் கருப்பணத்திற்கும்  எதிராக போர்க்கொடி துவக்கி உண்ணா விரதம்  துவக்கியிருக்கும் இவர் ஹரியானா மாநிலத்தில் ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்தவ்ர். பக்கத்து சிறு நகரில் 8 ம்  வகுப்புடன் படிப்பை நிறுத்தி தங்கள் யாதவகுலவழக்கதிற்கு மாறக கான்பூர் சென்று ச்மஸ்கிருதம் படித்தவர். அங்குள்ளவர்களின் தொடர்பில் அறிமுகமான யோகாவை நன்கு கற்றபின் 20 வயதில் சனியாசியாகிவிட்டார். அடித்தட்டு கிராம மக்களுக்கு யோகாவை இலவசமாக் கற்பிப்பதில் மிகுந்து ஆர்வம் கொண்டு கிராமம்கிராமாக சுற்றிகொண்டிருந்தவர் திடீரென ஒரு நாள் இம்யமலை சாரலில் தவம் செய்ய போய்விட்டார். இரண்டாண்டுகளுக்குபின் திரும்பியவர் ஆச்சாரியா பால் கிருஷ்ணா எனபவருடன் இணைந்து  “திவ்விய யோக மந்திர்” “ என்ற அறக்கட்டளையை யோகா பயிற்சிக்க்காகவும் ஆயூர்வேத சிகிச்சைக்காகவும்  2003ல் ரிஷிகேசத்தில் நிறுவினார். அப்போது  ஆஸ்தா என்ற டிவி சானிலில்கிடைத்த காலையில் யோகா  பயிற்சிகள் நிகழச்சியை வழங்கும் வாயப்பு இவரது வளர்ச்சிக்கு பெரிதும் உதவியிருக்கிறது. குறுகிய காலத்தில் நாடறிந்த முகமாகிவிட்ட இவருக்கு தனது நிறுவனத்தை வளர்ப்பது எளிதாயிருந்தது 2006ல் ரிஷிகேசத்தில்  ” ‘இந்தியா உலகின் மிகபெரிய யோகா மற்றும் ஆயூர்வேத சிகச்சை கேந்திரமாக இருக்கவேண்டும் எனற குறிக்கோளுடன்  இவர் நிறுவிய”’’’’’ “பதஞ்சலி யோக பீட டிரஸ்ட்டின்  துவக்க விழாவில் பங்குகொண்டவர் அன்றைய துணை ஜனாதிபதி ஷெகாவத்.
அந்த கட்டதிலிருந்து இன்று வரை இவரது அசுர வளர்ச்சி ஆச்சரியமானது. நிறைய பக்தர்கள்,நாட்டின் பலநகரங்களில் கிளைகள், என வளர்ந்த இவரது அமைப்பு வெளிநாடுகளிலும் வேகமாக பரவியது. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் முக்கிய நரங்களில் சொந்த கட்டிடங்களில் கேந்திரங்கள். தினசரி யோகா வகுப்புகள் பயிற்சி முகாம்கள் என பிஸியாக இருக்கின்றன. பாபா ராம்தேவ், உலகம் சுற்றும் “குரு” ஆகிவிட்டார். பெரிய ஆஸ்ரமம், ஆடமபர கார், சொந்த விமானம் என  ஒரு பெரிய கார்பெர்ரேட் அதிபர் போல இயங்கும் இவரது நிறுவனத்தின் வரவு செலவு  அவரே அறிவித்தபடி 1100 கோடிருபாய்கள். ஆனால் உண்மையில்  1500 கோடிக்கும்மேல் இருக்கும் என்கிறார்கள். இலவசமாக யோக பயிற்சியை துவக்கிய இவரது யோகா வகுப்புகளுக்கு தான் இன்று இந்தியாவிலேயே அதிக கட்டணம். குருவிற்கு எதிரே இருக்கும் வரிசை என்றால் 30000ரூபாய் அடுத்த வரிசை 20000 என பல பிரிவுகள் உண்டு. இரண்டுஆண்டுகளுக்குமுன் ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ நகரின் அருகில்  “லிட்டில் கும்பேரே’ “ என்ற யாரும் வசிக்காத ஒரு குட்டி தீவை வாங்கி இவருக்கு பரிசளித்திருக்கிறார்கள் கிளாஸ்கோவில் வாழும் ஒரு பணக்கார  இந்திய தம்பதியினர். அதை உலக தர ஆயூர்வேத சிகிச்சை கேந்திரமாகவும் ஆரோக்கிய வாஸஸதலமாகவும்  உருவாக்க போவதாக ராம்தேவ் அறிவித்திருக்கிறார்.
இவரது ஹரித்துவார் ஆயூர்வேத ஆஸ்பத்திரியில் விற்கபடும் மருந்துகளில் மிருக, மனித எலும்புகள் கலக்க பட்டிருகின்றன  இது ஆபத்தானது  என பரிசோதனை ரிபோர்ட்,மருந்துசீட்டு,பில் மருந்து ஆகியற்றுடன் மார்க்ஸிஸ்ட் தலவர் பிருந்தா கரந்த் 2006ல் எழுப்பிய புகார்  பிரச்ச்னையின் சலசலப்பு சரத் பாவர், முலயாம்சிங் போன்ற தலைவர்களின் அறிக்கைகளுக்கு பின் ஒய்ந்தது.

 “ நான் சன்னியாசி எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை “  என்று சொல்லிக்கொண்டிருந்தவர், 2014 பாராளுமன்ற தேர்தலில் தனிகட்சி அமைத்து போட்டியிடபோவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.. அண்னாஹஸாரே யின் போராட்டதிற்கு ஆதரவுஇந்த உண்ணாவிரத  போராட்டம் எல்லாம் அதற்கு  ஒரு முன்னோட்டம். டெல்லி ராம்லீலா மைதானத்தில்  உண்ணாவிரதம் ஒரு பெரிய அரசியல் கட்சியின் மாநாடு போல பெரிய பந்தல்,700 ஃபேன்கள், 100 ஏர்கூலர்கள், தற்காலிக டாய்லெட்கள் என பிரமாண்டமாக பெரும் பொருட்செலவில் ஏற்பாடு செய்யபட்டிருந்தது..அரசியலில் இவர் ஒரு புதிய சக்தியாக வளர்ந்து விடலாம் என்ற பயத்தில்  மத்திய அமைச்சர்கள் இவருடன் பேச்சு நடத்திகொண்டிருந்தாலும் காங்கிரஸ்கட்சியின் சில தலைவர்கள் இவரது செயலை கண்டனம் செய்ய தவறவில்லை.. நடிகர் சாருக்கான் ” “ஊழல் ஒழிப்பது போராட்டம் எல்லாம்  சாமியாரின் வேலையில்லை “ என அறிவித்திருக்கிறார். வடஇந்திய பத்திரிகைகள் இவருக்கு இருக்கும் மக்கள் ஆதரவை மட்டுமில்லமல் அவரது  செய்கைகளின் ஆடம்பரத்தையும் அவருடைய  பதவி ஆசையையும் சுட்டி காட்டுகின்றன.
உண்ணாவிரதம் இருப்பது ஜன நாயக உரிமை ஆனால் அதை விளம்பரங்களோடு ஆடம்பரமாக செய்தால் அரசியல். யோகாசான குருவாக தனக்கு இருக்கும் மதிப்பையும் புகழையும், பயனபடுத்தி  “லஞ்சம் வாங்கும் அரசியல் வாதியை தூக்கில்போடவேண்டும், பிரதமரை நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டும். 500ருபாய் செல்லாதாக அறிவிக்க வேண்டும்,ஆங்கிலத்தை ஒழித்து இந்தியை பரப்பவேண்டும் “ என்று செய்ய முடியாவைகளை உடனடியாக செய்ய கேட்டு அரசை நிர்பந்த்தித்து ஒரு ஜனநாயக  அரசையே பிளாக்மெயில் செய்ததைவிட மோசமானது, நமது அமைச்சர்கள் பதறிப்போய் அவர் காலில்  விழுந்தது தான்.

29/5/11

மதராஸ பட்டிணத்தின் காதலர்
ஹிந்து நாளிதழலில்  ஒவ்வொரு திங்கட்கிழமையும் வெளிவரும் ஒரு தொடர் பகுதி  “மெட்ராஸ் மிஸ்லேனி””“ ” சென்னை நகரின் மிக பழைமையான  கட்டிடங்கள்நிகழ்வுகள், மனிதர்கள் புத்தஙகள் போன்ற பாரம்பரிய சின்னங்களைப்பற்றிய  சுவராசியமான கட்டுரைகளை நகைசுவையோடும் அரிய புகைபடங்களுடனும் எழுதிவருபவர் திரு. எஸ் முத்தையா. 1999 ஆம் ஆண்டு துவக்கிய இந்த  செய்திகட்டுரைகளின் தொடர்  இன்றும் தொடர்கிறது.   உலகில் ஒருவாரம் கூட இடைவெளியில்லாமல் 11 ஆண்டுகளாக தொடர்ந்து ஒரேவிஷயத்தை பற்றி தனிப்பகுதி எழுதிக்கொண்டிருக்கும் பத்திரிகையாளார் இவராகத்தான் இருக்க முடியும்.
இவரது 11 ஆண்டு கட்டுரைகளை தொகுத்து  “பீப்புள்-பிளேஸஸ்-பாட்பூரி என்ற பெயரில் சமீபத்தில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள்.. மேற்கு வங்க முன்னாள் கவர்னர் திரு கோபாலகிருஷ்ண காந்தி  இந்த புத்தகத்தை வெளியிடும்போது   “வாரம் தோறும் தொடர்ந்து எழுதும் சில பத்திரிகையாளார்கள் தினசரியில் இடத்தை நிரப்ப உதவுவார்கள். சில பத்திரிகயாளர்கள் தங்கள்  எழுதும் பகுதியினால் தினசரிக்கு பெருமை சேர்ப்பார்கள். முத்தியா இரண்டாவது ரகம். சென்னையையின் பெருமைமிக்க பழைய கட்டிடங்களின் மீது முத்தியா கொண்டிருக்கும் அலாதி பிரியத்தினால், அவர் தொடந்து அதுபற்றி எழுதி வந்ததால்தான் பல கட்டிடங்கள் காப்பற்றப்டட்டிருக்கின்றன. அதற்கு சென்னை நகரம் அவருக்கு கடமைப்பட்டிருக்கிறது” “. என்றார்
திரு முத்தையாவின் கட்டுரைகள் வெளியான உடனேயே  வாசக்கர்களிட்மிருந்து வரும்  அது தொடர்பான பிறசெய்திகள், சமந்தபட்டவர்களின் வாரிசுகள் இப்போது இருக்குமிடம் போன்ற பல தகவல்களையும் பின்னுட்டமாக வெளியிட்டு  எழுதிய விஷயத்தை முழுமையாக்குவதினால் இவரின் இந்த பகுதி ஹிந்து நாளிதழில் வாசகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றிருக்கும் ஒன்று. அறுபது ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கும் இந்த எழுத்தாளார் கடந்த 50 ஆண்டுகளாக  தினசரிகளில் தொடர்பகுதிகளை தொடர்ந்து எழுதும் சாதனையை படைத்திருப்பவர். தனது 81 வது பிறந்த நாளில் இந்த புத்தகம் வெளியானதில்     “தான் சென்னையின்   வரலாற்று பதிவாளார் என்று அங்கீகரிக்கபட்டதற்காக  மகிழ்ச்சியடைகிறார்.

 “நீண்ட ஆராய்ச்சிகளுக்குபின்னர்ஆனால் அந்த ஆராயச்சியின்வாசனை சிறிதுமில்லாமல், சிக்கனமானவார்த்தைகளில், அழகான ஆங்கிலத்தில் சுவராஸ்யமான  கட்டுரைகளை ஒவ்வொரு வாரமும் சரியான நேரத்திற்கு அனுப்பிவைப்பவர் முத்தையா” “ என்று  அன்றைய விழாவில் பாரட்டியவர் ஹிந்து நாளிதழ் ஆசிரியர் ராம்.

எஸ் முத்தையா.   BOX MATTER
செட்டிநாட்டின் பள்ளத்தூர் கிராமத்தில் பிறந்த முத்தையா மிக சிறுவயதிலியே இலங்கை சென்று அங்கு வளர்ந்தவர். அங்கு பத்திரிகையாளாராக வாழ்க்கையை துவக்கி டைம்ஸ் ஆப் சிலோன் என்ற நாளிதழில் முதல் நிலை ஆசிரியராக தன் 38 வயதில் உயந்தவர். பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராக ஒரு சிங்களரே இருக்க முடியும் என்பது விதியாகையால் ஆசிரியராக்குமுன்  இவருக்கு கெளரவ குடிமகன் உரிமைக்கு சிபார்சு செய்யபட்டிருந்த்து. ஆனால் அப்போது நிகழந்த ஆட்சி மாற்றத்தால் அது கிடைக்கவில்லை. வாழ்நாள் முழுவதும் இரண்டாம் நிலை ஆசிரியராக இருக்க விரும்பாத முத்தையா மனம் வெறுத்து போய் சென்னை திரும்பி  பிரபல ஆங்கில பத்திரிகைகளில்  வேலைக்காக முயற்சித்துகொண்டிருந்தார். கிடைத்தது டி டி கே குழுமத்தின் மேப்புகள் அச்சிடும் புதிய நிறுவனத்தின் பொறுப்பு. அதன் ஒரு பதிப்பாக  சென்னையை பற்றிய புத்தகம் தயாரிக்க துவங்கியதில் ஏற்பட்ட ஆர்வத்தில்  இவருக்கு இந்த நகரத்தின் மீது பிறந்த காதல் இன்றும் தொடர்கிறது.நகரின் பராம்பரிய கட்டிடங்கள் படங்கள் புத்தகங்கள் பற்றிய பல விபரங்களை தொடர்ந்து சேகரித்துவரும் இவரது முயற்சியினால் தான் சென்னை நகரின் பிறந்த


தினம் கண்டுபிடிக்க்பட்டு இப்போது ஆண்டுதோறும் ஆகஸ்ட்மாதத்தில்
விழாவாக கொண்டாடபடுகிறது. சமீபத்தில் தனது 81 பிறந்தநாளை கொண்டாடிய இவரின் சுறுசுறுப்பு பிரமிக்க வைக்கிறது. தினமும 8 மணிநேரம் அலுவலகதில் பணிபுரிந்தபின் எழுதுகிறார்.
இதுவரை 30 புத்தகங்கள் எழுதியிருக்கும் இவர் மெட்ராஸ் மியூஸிங்ஸ் என்ற மாத சஞ்சிகையயையின் பதிப்பாசிரியரும்கூட... இன்றைய கம்யூட்டர், ஈமெயில் யுகத்தில், டைப் செய்து கட்டுரையை அனுப்பும் ஆங்கிலத்தில் எழுதும் ஒரே எழுத்தாளார் இவர் தான்.  ” “தொடர்ந்து  வேலைகள் செய்துகொண்டிருப்பதால்  வாழக்கை இனிமையாக இருக்கிறது”” “  என்று சொல்லும் முத்தையா விற்கு  அவரது  பாரம்பரிய சின்னங்களின் பாதுகாப்பு பணிக்காக  இங்கிலாந்து  அரசு  அரசியின்MBEவிருது அளித்து கெள்ரவித்திருக்கிறது

.

22/5/11

இந்த தேர்தலில் திமுக ஏன் மோசமாக தோற்றது ? 1

கணக்கினால் பெயில்;;;; கெமிஸ்ட்ரியினால் பாஸ்

தமிழக தேர்தலில் எப்போதுமே  கூட்டணியின் சில கணக்குகள் தான் முடிவை தீர்மானிக்கும். கணக்கை சரியாக போட்ட அணி ஜெயிக்கும் என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால் இம்முறை கலைஞர் போட்ட கணக்குகள் அத்த்னையும் தப்பாக போயிற்று.  முந்தைய தேர்தலில் கிடைத்த வோட்டுகளீன் சதவீத கணக்கு, சாதி ஓட்டுகளின் கணக்கு,  34 சீட் ஜெயித்த  காங்கிரஸுக்கு 63ஐ கொடுத்தது , 2ஜீ விஷயம்  கிராம மக்களுக்கு புரியாது என்ற கணக்கு, தன் குடும்ப வாரிசுகளைப்போலவே மாவட்டங்களின் வாரிசுகள் ஜெயித்துவிடும் என்ற் கணக்கு,இலவச டிவி, காஸக்கும் மக்கள்  நன்றி செலுத்துவார்கள் என்று எல்லா கணக்குகளையும் தப்பு தப்பாக போட்டதினால் மக்கள் மார்க போடவில்லை.,
 தொகுதி அறிவிப்பு என்ற் முதல் கேள்விக்கு அளித்த தவறான விடையை உடனே மாற்றி  கூட்டணி கட்சி தலைவர்களுடன் நல்ல கெமிஸ்ட்ரியை   ஏற்படுத்தி அதை  தொண்டர்கள் மட்டத்திலும்  உருவாக்கியதனால் தான் அம்மாவிற்கு மக்கள் நல்ல மார்க் கொடுத்திருக்கிறார்கள்.
பல இடங்களில் காங்கிராஸுக்காக வேலை செயாத திமுக  தொண்டர்கள், செய்தவர்களை அவர்கள் கட்சிகாரகள் தடுத்ததையும்தேதிமுக தலைவரை பற்றிய விமர்சனங்கள் கடுமையாக இருந்த போதிலும் அதிமுக தொண்டன் அது பற்றிய கவல்யில்லாமல் அம்மாவின் கட்டளைப்படி வேலை செய்ததை பல இடங்களில் பார்க்க முடிந்தது.
ரமணன்.