அடேஅப்படியா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அடேஅப்படியா? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29/8/12

காப்பாற்ற பட்ட கம்போடிய கலைச்செல்வம்


காப்பாற்ற பட்ட கம்போடிய கலைச்செல்வம்

கல்கி02/09/12
கம்போடியா நாட்டின்  ஆங்க்கோர்(Angkor)  பகுதி உலகின்  முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்று.  800 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டிடகலைகளுக்கு சான்றாக நிற்கும் கற்கோவில்களையும் அரண்மனையும்  பார்க்க ஆண்டுதோறும் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 5 லட்சத்திற்கும் மேல்.   இதைத்தவிர அந்த பகுதியின் அருகில் இருக்கும் அடர்ந்த்த காட்டு பகுதியில் இன்னும்  பல கற்கட்டிடங்களின் பகுதிகள்  சிதைந்து சிதறிகிடக்கின்றன.  1992ல் யூனெஸ்கோ இந்த பகுதிகளின் கோவில்கட்டிடங்களை  உலக பராம்பரிய சின்னங்களாக அறிவித்திருக்கிறது. பல சரித்திர ஆராய்ச்சிகள் நடைபெற்றுகொண்டிருக்கும் இந்த பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன் கிடைத்த கல்வெட்டில் அந்த பகுதியில் 4000 அடி நீள 1000 அடி அகல பரப்பில் ஒரு மிகப்பெரிய வளாகமும் அதில் 39 வாயில்களுடன் பெரிய ஆடல் அரங்கம் அமைக்கப்பட்டிருந்த விபரமும் தெரிவிக்க பட்டிருந்த்தது. அதை அப்படியே மீண்டும் நிர்மாணிக்க முடியமா என யூனஸ்கோவின் உதவியுடன்  முயற்சிக்க விரும்பியது கம்போடிய அரசு. உலகமெங்கிருக்கும் முக்கிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்  வந்து ஆய்ந்த தந்த அறிக்கை: சவாலான இந்த பணியை சரியான குழு தலமையேற்றால்தான் செய்ய முடியும் என்று சொன்னது. பணியை ஏற்றது  செய்திருப்பது யார் தெரியுமா? இந்திய தொல்பொருள் அகழ்வாராய்ச்சி துறை. 2004ம் ஆண்டு 5பேர் கொண்ட ஒரு குழு ஆராய்ந்து செய்யவேண்டிய பணிகளைசரியாக திட்டமிட்டு செய்ய துவங்கி இப்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டார்கள். இப்போது டூரிஸ்ட்கள் அனுமதிக்க படுவதால் காலை 9 மணிக்கே கியூவில் காத்திருந்து பார்த்து வியப்பது இந்த பாரம்பரிய சின்னத்தை மட்டுமில்லை, நிர்மாணித்த இந்திய வல்லுனர்களின் திறமையையும் தான்.
7 ஆம் ஜெயவர்மன் எனற மன்னன் தன் தாயின் நினைவாக கட்டிய இந்த ராஜவிஹார் பிரம்மதேவனுனக்காக கட்டபட்டகோவிலாக துவங்கியிருக்கிறது. தொடர்ந்து வந்த 8ம் ஜெய வர்மன் புத்தமதத்திற்கு மாறிவிட்டதால்  கட்டிட வேலைகள் முடியும்போது  அது பெளத்த விஹாராக மாறிப்போயிருகிறது. இது ஒரு பெளத்த கோவில் வளாகம் என கருதிக்கொண்டிருந்த கம்போடியர்களுக்கு இந்த தகவலைச் சொன்னது இந்திய குழுதான்.   எந்த வரை படமும், குறிப்புகளும்  இல்லாமல்முழுவதுமாக இடிபாடுகளாகி போயிருந்த இந்த வளாகத்தை புனர்நிர்மாணம் செய்தது மிகபெரிய சவால். அத்தனை கற்களையும் தூண்களையும் பிரித்து எடுத்து  அதன் அளவுகள், எடை போன்ற விபரங்களைப் பட்டியிலிட்டு  ஒவ்வொன்றுக்கும்  எண்கள் இட்டு படத்துடன்  கேட்லாக் செய்த பின்னர். தாங்கள் தயாரித்த மாதிரி  வரை படத்தைப்போலவே அவைகளைப் பொறுத்தியிருக்கிறார்கள். இதில் மிக சவாலான விஷயம் இந்த கல்கட்டிடம்  கட்டபட்டபோது கற்களை இணைக்க  சுண்ணாம்பு, மண்சாந்து போன்ற எதுவுமே பயன்படுத்தபடவில்லை. ஒவ்வொரு கல்லின்வெட்டபட்ட பகுதி  மற்றொருகல்லின் வெட்டுப்பகுதியுடன் நெருக்கமான   இணைக்கபட்டு உருவாக்கபட்டது. அதை மீண்டும் அப்படியே செய்ய 200 கம்போடிய தொழிலாளிகள் 7 ஆண்டுகள் இந்திய அணியின் தலமையில் உழைத்திருக்கிறார்கள்.   “ஒரு ஜிக்-ஜாக் பஸிலை (ZIG-ZAG PUZEL) பல முறை முயன்று இறுதியில் வென்ற மாதிரி என்று தங்கள் பணியை சொல்லுகிறார் இந்த திட்டத்தின் தலைவர்  சூட் (DR. Sood) . முனைகள் உடைந்து, சிதைந்து போயிருக்கும் சிலகற்களினால் இணைக்கமுடியாமல் போன பகுதிகளை, அவற்றின் உள்ளே துளையிட்டு ஸ்டீல் கம்பிகளை சொருகி இணைத்திருக்கிறார்கள். இப்போது 39 வாசல்களுடனும் அழகிய தெய்வச்சிலைக்ளுடனும் நிற்கும் கலைக்கூடமும்,  கோபுரங்களுடன் கூடிய நடனகூடமும்  இனி விழாமல் நிலையாக நிற்கும்  என சோதித்து சொல்லியிருப்பவர்கள் சென்னை ஐஐடியின் வல்லுனர்கள். கேட்பாரற்று இடிந்து விழுந்து கிடந்த இந்த காட்டுகோவிலின்  மிஞ்சி நின்ற சுவர்களின் வெடிப்புகளில் வளரத்துவங்கிய மரங்கள் காலப்போக்கில் மெகா சைஸ் மரங்களாகியிருந்தன. அவற்றை அகற்றினால் அதோடு இணைந்திருக்கும் பகுதிகள் வீணாகும். அழியாத கற்களுடன் மரங்களும்  இணைந்து வளர்ந்து வாழ்ந்திருக்கின்றன  எனபதையும்  மக்கள் பார்க்கட்டும்.  என்று யூனஸ்கோ சொன்னதால். நமது வல்லுனர்கள் மர்ங்களை காக்கவும்  திட்டம் தீட்டினர்.
 டேரானிலிருக்கும் வன ஆராயச்சி கழகத்தின் வல்லுனர்கள் வரவழைக்கபட்டு  வருங்காலத்தில் மரத்தின் வேர்கள் இந்த கட்டிடங்களை சாய்த்துவிடுமா என  ஆராய்ந்து ஆவன செய்து கொண்டிருக்கிறார்கள். இந்திய வல்லுனர்களின் திறமைகளையும் செயலாற்றும் திறனையும் கண்டு வியந்த யூனஸ்கோ உலகின் வேறு சில பராம்பரிய சின்னங்களை மீட்டெடுக்க துறையின் உதவியை நாடியிருப்பது  எனபது நமக்கு பெருமையான விஷயம்
-

13/8/12

ஹாத்தி மேரா ஸாத்தி

கல்கி 19/8/12

 

லாரன்ஸ்அந்தோனி ஆப்பரிக்க வனவிலங்குகளின் வாழ்க்கை முறைகளை ஆராயும் ஒரு வனவியல் ஆராயச்சியாளார். வன்விலங்குகளைப்பற்ரி புத்த்கங்கள் எழுதியிருப்பவர்.  20 வருடங்களுக்குமேல் ஆராய்ச்சிபணிகளிலிருப்பதால் ஆப்ரிக்க காடுகளின் பகுதிகளைப்பற்றிய, அதில் வாழும் மிருகங்களைப்பற்றிய அத்தனை தகவல்களும் அத்துபடி.   தனியார் வசமுள்ள தென் ஆப்பிரிக்க  காட்டுபகுதிகளில் ஒன்றான துலா-துலா என்ற இடத்திலிருக்கும் காட்டுபூங்காவின் தலமை வார்டனாக பணி புரிந்து கொண்டு தன் ஆராய்ச்சியை தொடர்ந்து கொண்டிருந்தார். இரண்டாண்டுகளுக்கு முன் காட்டு யானைகளின் நலனைப் பாதுகாக்கும் ஒரு தொண்டு நிறுவனத்திடமிருந்து   வந்த ஒரு போனினால் பதறிப்போனார். 500 மைல் தொலைவில் ஒரு தனியார் காட்டுப் பகுதியில் ரவுடித்தனம் செய்யும் ஒரு யானை கூட்டத்தை சுட்டு கொல்ல போகிறார்கள் எனபது தான் அந்த செய்தி.  அவற்றை இடம் மாற்றுங்கள் நான் திருத்த முயற்சிக்கிறேன். சுடவேண்டாம் என இவர் கேட்டு கொண்டததால் 20 ரவுடி யானைகளை இவர் தலையில் கட்டினார்கள். அந்த யானைக்கூட்டதின் தலவி சரியான ரவுடி ராணி. பாதுகாப்பிலிருந்து தப்பிப்பதில் எகஸ்பர்ட்.  தப்பித்து வெளியே வந்தால் மற்ற யானைகளை கெடுத்துவிடும் என்பதால் அந்த யானைகூட்டம் வாழும் பகுதிக்கு மின்வேலியிட்டிருந்தார்கள்.  மின்சார மெயினும் ஜெனரேட்டரும்  இருந்த ரூமை தகர்த்தெரிந்து மின்சாரத்தைத் துண்டித்து  விட்டு தப்பிக்க முயற்சி செய்த முரட்டு புத்திசாலி தலவி. அந்த யானைகூட்டத்துடனே 18 மாதம் வாழ்ந்து அவைகளுடன் பேசி, பேசி

 ஆயுதங்களை கையாளாமல் ஒழுங்காக இல்லாவிட்டால் நாம் சாக வேண்டியதுதான் எனபதை அவைகளுக்கு புரிய வைத்து திருத்தி அவைகளின் ஒரிஜன்ல் இருப்பிடத்தில் கொண்டு விட்டார் லாரன்ஸ்.  இந்த முயற்சியில் தனது  போராட்டங்களைக்கு பின்  அந்த  பெண்யானை தன்னை புரிந்து கொண்டு கட்டுபட்டது பற்றியும் பின் படிப்படியாக சாதுவாகிபோனதைப்பற்றியும்  லாரன்ஸ்  எழுதிய 

 “யானை சொல்லும் ரகசியங்கள்”“ என்ற புத்தகம்  கடந்த இரண்டு ஆண்டுகளின் பெஸ்ட் செல்லர். 6 மொழிகளில் மொழி பெயர்க்கபட்டு உலகமெங்கும் இப்போது  விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.  காட்டுவாழ்க்கையைப்பற்றியும் நீர்யானைகள் பற்றியும் இவர்  எழுதிய முந்தைய இரண்டு புத்தகங்களும் பிரபலமானவை. இவர் கடந்தமாதம் எதிர்பாராதவிதமாக இறந்து போனார். உலகமறிந்த வனவியல் ஆராயச்சியாளாரான லாரன்ஸ் மறைவுச்செய்தியை கேட்டு அஞ்சலி செலுத்த வந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின ஒரு யானை கூட்டம   600 மைல் தொலைவில
 தாங்கள் வாழும் காட்டுபகுதியிலிருந்து பனிரெண்டு மணி நேரம் தொடர்ந்து ஒரே வரிசையில் அணிவகுத்து நடந்து  (கூட்டமாக வந்தால் தாக்க வரும் யானை கூட்டம் எனகருதி தாங்கள் விரட்டபட்டுவிடுவோம்  என்பதால் கட்டளையின் கீழ் இயங்கும் யானை வரிசையைப்போல வந்திருக்கின்றன) லாரன்ஸின் வீட்டிற்கு வந்தன அவரால் திருத்தபட்ட  முன்னாள் ரவுடியானைகளின்  கூட்டம். வெகு தொலைவிலிருக்கும் (600மைல்) அவைகளுக்கு இவரது மரணம் எப்படி தெரிந்தது என்பதும் எபபடி அவ்வளவு தூரம் நடுவில் வழி தவறாமல், ஓய்வெடுக்காமல்  சரியாக இவரது வீட்டிற்கு வந்தது எனபதும் மிகப் பெரிய ஆச்சரியம்.. ஆச்சரியத்திற்கு மேலும் ஒரு காரணம் லாரன்ஸ் தற்போது வசிக்கும் இடத்தை இந்த யானைகள் பார்த்தில்லை.  வந்த இடத்தில் லாரன்ஸின் வீட்டில் இரண்டு  நாட்கள் இருந்த பின் தாமாகவே தங்கள்  இருப்பிடத்திற்கு அணிவகுத்து திரும்பிய இந்த யானை கூட்டத்தை டிவி செய்தியாளார்கள் துரத்தி சென்ற போது லாரன்ஸின் மகன் “ நாட்டின் பெரிய தினசரிகள் அஞ்சலி செய்திகளை வெளியிட்டதைவிட பெரிய கெளரமாக இந்த யானை கூட்டம் வந்ததை கருதுகி
றோம். தயவு செய்து எங்கள் விருந்தினர்  கோபபடும்படி எதுவும் செய்யாதீர்கள்  என வேண்டுகோள் விடுத்து  நிறுத்தியிருக்கிறார்.
விலங்குகளில் யானை மிக புத்திசாலி எனபது ஆராய்ச்சிகளால் நிரூபிக்க பட்ட விஷயம். அவைகளுக்கு டெலிபதியும் உண்டோ என்பது இப்போது ஆராயப்படவேண்டிய ஒரு விஷயம்  
-ரமணன்      




6/8/12

கடலுக்கு அடியில் கொட்டி கிடக்கும் வெள்ளி கட்டிகள்


(கல்கி12/8/12)

ஆழ் கடலின் அடி மட்டத்தில் என்ன கிடைக்கும்? அரிய கடற் தாவரங்கள், மீன் வகைகள்,  சிப்பி சங்கு, முத்து போன்றவைகள் தானே. ஆனால் சமீபத்தில் கிடைத்திருப்பது  வெள்ளி கட்டிகள் அதுவும் அரசு முத்திரையிடப்பட்ட சுத்த வெள்ளி கட்டிகள். கடலின் கீழே மிக ஆழத்தில் கண்டெடுக்கபட்ட இதுவரை கிடைத்ததில் மிகப்பெரிய  மிக கனமான புதையாலாக வர்ணிக்கபடுகிறது இந்த கண்டுபிடிப்பு.
1941ல் கல்கத்தாதுறைமுகத்திலிருந்து இங்கிலாந்துக்கு இந்த  240  டன் வெள்ளிகட்டிகள் எஸ். எஸ் கரிஸோப்பா என்ற கப்பலில் அனுப்ப பட்டது.

29/4/12

ஓரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ஆள்



உலகிலேயே மிக மிக குறைந்த ஜனத்தொகையை கொண்ட  நகரம் அமெரிக்காவிலிருக்கிறது. வியோமிங் என்ற மலைப்பகுதி  மாநிலத்திலிருக்கும் பியூஃபோர்ட்(BUFORD)  என்ற குட்டி நகரத்தின் ஜனத்தொகை எவ்வளவு தெரியமாஓன்று.  ஆம் ஒரே ஒருவர் வாழும் இந்த சின்ன மலை நகரத்தின் ஜனத்தொகையாக  கடந்த ஆண்டு சென்ன்ஸில் பதிவு செய்ய்பட்ட எண் இது. நகர் நுழை வாயிலில் ஊரின் பெயரோடு இதையும் சொல்லும் பெயர்பலகையும்  இருக்கிறது. ஒரு பெட்ரோல் பங்க், பள்ளிக்கூடகட்டிடமும்  செல்போன் டவரும் இருக்கும் இந்த நகருக்கு.   தனி ஜிப் கோட்  (அமெரிக்காவின் பின் கோட்) எண்.  இந்த நகரம் தான் இபோதுஅமெரிக்க  மீடியாவின் ஹிலைட். காரணம் அந்த ஒரு நபரும் நகரத்தை விட்டு  விரைவில் காலி செய்யப்போகிறார்.
நியூயார்க்கிலிருந்து சான்பிரான்ஸ்கோ செல்லும் தேசிய நெடுஞ்சால 80ல் லாஸ் ஏஞ்சல் நகரின் அருகிலிருக்கும் ஒரு மலைப்பகுதியில் 8000 அடி உயரத்திலிருக்கும் இந்த நகரத்தில் ஆண்டில் 6 மாதத்திற்கு மேல் பனியும் குளிரும் பயங்கரமாகயிருக்கும் இந்த நகரத்தில் சில ஆண்டுகளுக்கு முன் 2000 பேர் வசித்திருக்கின்றனர். 1980ல் இருந்த ஒரே ரயில் வசதியும் நிறுத்தபட்டத்தால் மக்கள்  மெல்ல வேறு  நகரங்களுக்கு சென்ன்றுவிட்டார்கள். தங்கள்  ஊரைவிட்டு போக விரும்பாத டான் சாம்ன்ஸ் (DON SAMMONS)  தம்பதியினர் இங்கேயே தங்கிவிட்டனர். 15 ஆண்டுகளுக்கு முன் மனைவியும் மறைந்தபின், மகனும் வேறு ஊருக்கு பிழைக்கப் போனபின்  இவர் தனியாளாக வசிக்க ஆரம்பித்தார். இப்படி ஒரு ஆச்சரியமான மனிதரையும், அந்த ஊரையும் பார்க்க டூரிஸ்ட்கள் கோடைவிடுமுறைகளில் வரத்துவங்கினர். அவர்களுக்காக நினைவுசின்னங்கள் விற்க துவங்கபட்ட ஒரு சிறிய கடையையும், பெட்ரோல் பங்க்கையும் நிர்வகிக்கும் லான் சாம்ன்ஸ் (DON SAMMONS)  தான் ஊரிலிருக்கும் பள்ளிக்கூடம் மற்றும் ஒரு கட்டிடத்திற்கு சொந்தகாரர்.அந்த கட்டிடம் அவர்து 3 அறை வீடு.  பியூஃபோர்ட்(BUFORD)  நகரின் மேயராக  தன்னை அறிவித்துகொண்டிருக்கிறார். கடந்தமாதம்   தன் ஊரை  ஏலத்தில் விற்க விரும்புவதாக இண்டெர்நெட்டில் விளம்பரம் செய்தார்,  25 பேர் பங்குகொண்ட இந்த ஆன்லயன் ஏலம்  ஒரு லட்சம் டாலரில் துவங்கி  90000 லடசம் டாலரில் முடிந்த்திருக்கிறது. வாங்கியவர்கள் ஹோசிமின் சிட்டியிலிருக்கும் இரண்டு வியட்நாமியர்கள். எதிர்பாரத இந்த விலைகிடைத்தில் லான் சாம்ன்ஸ்க்கே ஆச்சரியம்.
தான் மட்டும் ராஜாவாக வாழும் இந்த 61 வயது காரர்  ஏன் தன் ஒரே சொத்தான் ஊரையே விற்கிறார்?  தனிமையான வாழ்க்கை போரடித்துவிட்டதாம்.  எனவே  மக்கள் சற்று குறைவாக இருக்கும் ஒரு கடற்கரை பகுதியில் தன் வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸை தொடர  விரும்புகிறாரம்.
யாருமே இல்லாத இந்த ஊரை வாங்கியவர்கள் என்ன செய்யலாம் எனபதற்கான யோசனையை தெரிவிக்க நேயர்களுக்கு போட்டி அறிவித்திருக்கிறது ஒர் டிவி சேனல்.






15/4/12

மச்ச அவதாரம்




ஜேம்ஸ் கேம்ரோனின்  “ மச்ச அவதாரம்

உலக சினிமா  வரலாற்றில் அழியாத இடம் பெற்றிருக்கும் படம் டைடானிக். இன்றும் உலகின்  எந்த பகுதியில் திரையிடப்பட்டாலும் வசூலை அள்ளிக்குவிக்கும் இந்த படத்தின் டைரக்டடர் ஜேம்ஸ் கேம்ரோன்.  தொடர்ந்து தன் படங்களுக்கு ஆஸ்கார், அக்கடமி விருதுகளை வாங்கிக்கொண்டிருக்கும் இந்த டைரக்டர் இந்த ஆண்டு பெறப்போகும்  ஒரு விருது அவரது சினிமாவிற்காக இல்லை. அறிவியலில்கடல்பற்றிய ஆராய்ச்சியில் அவரது பங்களிப்புககாக..
ஆழ்கடலின் அடிப்பகுதியை முதலில் பார்த்து அதில் பயணம் செய்த முதல் மனிதன் என்ற சாதனையை சமீபத்தில் நிகழ்த்தியிருக்கிறார் கேம்ரோன். சினிமாதிரைக்கதையாசிரியர், கேமிராமேன், டைரக்டர் எனபல முகங்கள் கொண்ட இவருக்கு பிடித்த மற்றும் ஒரு விஷயம் ஆழ்கடல் ஆராய்ச்சி. ஸ்கூபா டைவராக உலகின் கடல் பகுதிகளை பார்த்திருக்கும் இவரது ஆசை கடலின் அடி மண்ணை பார்க்கவேண்டும் என்பது. பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு டிரக் டிரைவராகி, ஸ்டார்வார் பாத்த ஆர்வத்தால் நூலகங்களில் சினிமா, கேமிரா பற்றி படித்தறிந்து போராடி சினிமா உலகில் சரித்திரம் படைத்திருக்கும் கேம்ரோன்  “இது என் 7 ஆண்டு கனவு”“ என்று சொல்லுகிறார். இவர் அவதார் படத்திற்கு பின் இதில் தீவிரமாக ஈடுபட்டு அதற்காக தன்னை தயாரித்துகொள்ள ஆரம்பித்தார். உலகியே அதிக ஆழமான கடல் பகுதியாக அறியபட்டிருக்கும்  “சாலெஜ்ர் டீப்” “ என்ற  கடல் பகுதியில் செல்வதற்காகவே பல மில்லியன் டாலர் செலவில்  24 அடி நீளத்தில் ஒரு குட்டி சப்மெரீன் ” “டீப் ஸீ சாலெஜ்ர்“ தயாரிக்கபட்டது. அவருக்கு பிடித்த பச்சை வண்ணத்தில், இயந்திர கைகள், சக்திவாய்ந்தவிளக்குகள், 3டி கேமிராக்கள் என விசேஷமாக தயாரிக்கபட்ட இதில் ஒருமுறை பரிசோதனை பயணமும் செய்தபார்ததிருக்கிறார்.   ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதியான மேரினா தீவு பகுதிதான் உலகிலேயே ஆழமான கடற்பரப்பை கொண்டது. அந்த கடல் பகுதியில்தான் இந்த சாதனையைச் செய்திருக்கிறார்.  “நாங்கள் திட்டமிட்டதைவிட மிக வேகமாக ஒரு டார்பிடோ போல பாய்ந்த  டீப் ஸீ-சாலென்ஜர் கடலடியை  2 மணி நேரத்தில்  அடைந்தது.  கடலின் அடிப்பகுதியில் 4மணி நேரம் சற்று தூரம் அந்த கப்பலை ஒட்டிச்சென்று  பார்த்தேன். அடர்ந்த இருட்டில் 35 000 அடி ஆழத்தில் கப்பலின் விளக்குகளின் வெளிச்சத்தில் பார்த்த அற்புதமான காட்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.  வேறு ஒரு கிரகத்திலிருப்பதை போல உணர்ந்தேன். கப்பலின் ஹைடிராலிக் பிரேக் சரியாக இயங்காதலால் சீக்கிரமே திரும்பிவிட்டேன். “ என்று சொல்லும் கேம்ரானின் இந்த பணியில் நேஷனல் ஜியாகிராபிக் சொஸைட்டியின் ஆராய்ச்சியாளார்களுக்காக சாம்பிள் சேகரித்ததோடு 3 டி படங்களும் எடுத்திருக்கிறார். உட்காருமிடம் நாலு அடிக்கும் குறைவாக ஒரு விண்வெளிப்யணியின் சீட்போல வடிவைக்கபட்டிருந்த  இந்த சப்மெரீன் ஒரு ஒரு ஆழ்கடல் ஆராய்ச்சி கப்பலிருந்து இறக்கபட்டதலிருந்து பயணத்தை ஒவொரு நிமிடமும்   “ஆக்டோபஸ்”””“ என்ற  தனது உல்லாச  படகிலிருந்து கண்காணித்து அவருடன் வர்லெஸ் தொடர்பிலிருந்தவர் கேம்ரானின் அருமை நண்பர்  பால்ஆலன். இவர் மைக்ரோ சாப்ட் நிறுவனர்களில் ஒருவர். கேம்ரான் தரும் தகவல்களை  அங்கிருந்து டீவிட் செய்து கொண்டிருந்தார். டிவி சானல்கள் அதை அறிவித்து கொண்டிருந்தது.  கேம்ரோனின் சப்மெரின் கடல்மட்டத்திற்கு  வெளி வரும் பகுதியில் ஹெலிகாப்டர் கண்காணிப்பும் இருந்தது. கடலடியிலிருந்து   அவர் அனுப்பிய முதல் செய்தி  “எல்லாம் சரியாக இயங்குகிறது.””” “
சினிமா சாதனையாளார்களில் அவர்கள் துறையைத்தவிர மற்ற துறைகளில் பெரிய சாதனையை நிகழ்த்திய சினிமாகாரர்கள் மிகச்சிலரே. கேம்ரோன் கடலாராய்ச்சி துறையில் படைத்த வரலாற்று சாதனை காலம் முழுவதும் பேசப்படும்.
ஆழ்கடலிலிருந்து எழுந்த நீர்பிரளயதிலிருந்து உலகை காப்பாற்ற பகவான் மச்ச அவதாரம் எடுத்தாக சொல்கிறது நம் புராணம்.  ஆழ்கடலின் நிலத்தடியை  நிஜமாகவே பார்த்துவந்த இவரின் அடுத்த படம் அதுவாகவே இருக்குமோ ?



24/7/11

தயாநிதியால்தான் விற்றேன்

ஏர்செல் மொபைல் போன் நிறுவனத்தின் முன்னாள் அதிபர் தான் அமைச்சர் தயாநிதி மாறானால்  அதை ஒரு மலேசிய நிர்வனத்திற்கு விற்க நிர்பந்திக்க பட்டதாக  சொல்லியி்ருப்பதாக செய்திகள் வெளியாயிருக்கின்றன.. உண்மை நிலை ஒரு அலசல்


மர்மம் என்ன? 


துல்லியமான தொலைநோக்குடன் வரும் சில ஆண்டுகளில் இந்த துறை  எங்கே போகும், என்பதை  சரியாக கணிக்கவும், உருவாக்கிய பிராண்டை சரியான நேரத்தில் விற்கும் சாமர்த்தியமும் இருக்கும்  தொழிலதிபர்கள் தோற்பதில்லை என்பதறகு மிக சரியான உதாரணம் சிவா குரூப்பின் நிறுவனர். திரு சி.சிவசங்கரன். சென்னை எண்ணை சுத்திகரிப்பு ஆலையில்  கட்டுமான பிரிவில்  சிறிய அளவில் உபகரணங்கள் செய்து கொடுக்கும்  ஒரு காண்டிடிராக்டராக இருந்தவர்.  .1985ம் ஆண்டு  அமிர்தராஜ் சகோதரர்களின் தந்தை ராபர்ட் அமிர்தராஜின் ஸ்ட்ர்லிங் கம்பியூட்டர் நிறுவனத்தை வாங்கி கம்பூட்டர்கள் செய்து விற்கும் பிஸினஸை துவக்கினார். அப்போது  ரூ80000 விலியிலிருந்த கம்பியூட்டர்களை ரூ33000க்கு அறிமுகபடுத்தி மார்க்கெட்டை கலக்கினார். எதிர்பார்த்த லாபம் இல்லாததால் கம்பியூட்டர் தயாரிப்பை நிறுத்திவிட்டு மற்ற துறைகளில் தடம்பதிக்க துவக்கினார். “லாபம் இல்லாமல் பிஸினஸ் செய்வது பாவம், நாம் துவக்கிய முதல் தொழில் என்று உணர்ச்சி வசப்பட்டு அதை  மேலும் நடத்துவது முட்டாளதனம் “ என்று சொல்லும் இவர் தொடர்ந்து செய்த எந்த பிசினஸும் நஷ்டமடையவில்லை.  இன்று. உலகின் பலபகுதிகளில் வெவ்வேறு துறைகளில் இயங்கும் 33 கம்பெனிகளின் மொத்த மதிப்பு   3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.( சுமார்12000 கோடி ருபாய்)  90களில்  தாய்லாந்து, ம்லேசியாவில் நலிந்த கம்பெனிகளை வாங்கி லாபம் தரும் கம்பெனிகளாக மாற்றி நல்ல லாப்த்தில் விற்றுவிடுவதுதான் முக்கிய பிஸினஸ். இதுவரை இப்படி 17 கம்பெனிகளை விற்றிருக்கிறார்கள். சிங்கபூர்,ஹாங்காங் நகரங்களில் நட்சத்திர ஹோட்டல்களில் நீண்ட நாட்கள் தனது அலுவலகத்தை நடத்தி வந்தவர் 1996 அமெரிக்காவில் கலிபோரின்யாவில் ஒரு ஆடம்பர வீட்டை வாங்கி தனது தலமையகத்தை அமைத்தலிருந்து அங்கு வாழும் ஒரு என்.ஆர்ஐ. இந்தியாவில் புதிய தொலைதொடர்பு கொள்கை அறிவிக்கபட்ட அதே ஆண்டு  சென்னையிலிருந்து  ஏர்செல் மொபைல் போன் கம்பெனியை துவக்கினார். அடுத்த ஆண்டே மற்றொரு மொபைல்கம்பெனியை(RPG) வாங்கி ஏர்செல்லின் சாம்ராஜ்யத்தை விரிவாக்கினார். பல மாநிலங்களுக்கு பரவலாக்க அனுமதி கோறி விண்ணபத்திருந்தார். இந்தியாவின் முதல் தனியார்  இண்ட்ர்நெட் வசதி அளிக்கும் கம்பெனியான DSL இவரால்தான் துவக்கப்ட்டது. இந்த நிறுவனம் சில ஆண்டுகளில் டாடாவின்  குழுமத்திஎன் வி‌எஸ்‌என்‌எல் க்கு  270 கோடிக்கு விற்கபட்டது. இது போல ரியல் எஸ்டேட், கப்பல்துறை  பதபடுத்தபட்ட உணவு என பல்வேறு நிறுவங்கள் இவரால் வாங்கி விற்கபட்டது.  வெவ்வேறு துறைகளில்  நிறுவனங்களை வாங்கி அவற்றை  பெரிய அளவில்  லாபத்திற்கு விற்றுவிடும் குழுமம் என்று உலகளவில் அறியபட்டது இவரது சிவா குருப்.  இந்த குருப்பின் முதலீடுகளை க்வனிக்கும் சிவா வென்ச்சர்ஸ் என்ற பிரிவின் கடந்த ஆண்டு மொத்த வரவுசெலவு மட்டும் 3900 கோடிகள்.  அதில் லாபம் எவ்வளவு என்பது அறிவிக்க படவில்லை
இவரது  ஏர்செல்  மொபைல்  கம்பெனியை மாக்ஸிஸ் கம்னியூக்கேஷன் எனற  மலேசிய கம்பெனிக்கு விற்க  அமைச்சர் தயாநிதி மாறனால் நிர்பந்திக்க பட்டதாக கடந்த வாரம் எழுந்திருக்கும் குற்றசாட்டை சிபிஐ விசாரிக்க துவங்கியிருக்கிறது. ஆனால உணமையில் சிவா குழுமம் 2002ம் ஆண்டு முதலே தனது ஏர்செல் நிறுவனத்தை நல்ல விலைக்கு விற்க  முயற்சித்து கொண்டிருந்தது. புதிய 71% அன்னிய முதலீடு கொள்கையினால் உலகின் முக்கிய டெலிகாம் கம்பெனிகள் இந்தியாவின் மீது கண் வைத்திருந்த நேரம் அது. 2004 ம் ஆண்டு ஏர்செல்லை  1600 கோடிக்கு ஹட்ச்போன் நிறுவனம் வாங்கபோவதாக சிவா குழுமம் அறிவித்திருந்தது. பின்னர் 2005 பிப்ரவரியில் அதை ரத்து செய்து  ஒரு ரஷ்ய நிறுவனத்துடன் 2025 கோடிக்கு விற்பனை ஒப்பந்தம் செய்து  இருப்பதாக அறிவித்தது. ஆனால் அந்த ஒப்பந்த்தையும் ரத்து செய்து அதேஆண்டு டிசமபர் 30ம்தேதி மலேசிய கம்பெனிக்கு  4860 கோடி ருபாய்களுக்கு விற்க பட்டிருக்கிறது.  அதாவது சிவா குழுமம் முதலில் எதிர்பார்த்தைவிட 3000 கோடிக்குமேல் லாபத்தில் வியாபாரம் முடிந்திருக்கிறது.  மலேசிய கம்பெனி மாக்ஸிஸ் ஓப்புகொண்ட  விலையை பற்றி  பெரிய பன்னாட்டு டெலிகாம் கம்பெனிகள் அடைந்த ஆச்சரியம் பற்றி 2006 ஜனவரி 6ம்தேதி ஃபினாஷியல் எக்ஸ்பிரஸ் ஒரு கட்டுரையே  வெளியிட்டிருக்கிறது.  கிடைத்திருக்கும் பணத்தில் எந்த கம்பெனியை வாங்கப்போகிறார் சிவசங்கரன்? எனறு ஃபினான்ஷ்யல் நாளிதழழ்கள் கேட்டன கம்பெனிகளை உருவாக்கி  லாபத்திற்கு விற்பதையே முக்கிய பிஸினாக செய்யும் சிவா குழுமம் நல்ல லாபம்  அடைந்திருக்கும் இந்த பிஸினஸை இப்போது தாங்கள் அமைச்சரின் மிரட்டலுக்கு அடிபணிந்து செய்திருப்பதாக சொல்லுவதின் மர்மத்தைவிட பெரிய மர்மம்- வழக்கு பிரச்சனைகள்மீடியாக்களை  அறவே தவிர்க்கும் திரு சிவசங்கரனே சிபிஐக்கு நேரில் சென்று சிபிஐயிடம்  இது பற்றி சொல்லியிருப்பதாக சொல்லப்படுவதுதான்.



17/7/11

இந்தா 50 கோடி!


50 கோடியை நன்கொடையாக கொடுத்தவர் 

கடந்த சில ஆண்டுகளாக  இந்தியாவின் மிக பெரிய கார்பெரேட்கள் கல்விக்காகவும்,  பொது நல தொண்டுகளுக்க்காகவும் தனி அறக்கட்டளைகளை நிறுவி பெரிய அளவில் நன்கொடைகளை அளித்துவருகின்றன. வருமான வரிவிலக்கு இருப்பதும் இதற்கு ஒரு காரணம்.
கடந்த வாரம் ஒரு தனிமனிதரும் அவர்து மனைவியும் தங்கள்  சேமிப்பிலிருந்து 50 கோடிருபாய்களை நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.  இதுவரை தனி மனிதர் எவரும்  தராத அளவில் பெரிய நன்கொடையை தந்த சாதனையை செய்திருக்கும் . இவர் தொழில் அதிபரோ சினிமா நட்சத்திரமோ இல்லை. இந்தியாவிலேயே அதிகமான மாத சம்பளம் பெற்றுகொண்டிருந்த ஒரு கம்பெனி நிர்வாக அதிகாரியாக இருந்தவர்.   தனது நிறுவன தலைவர் கேட்டுகொண்டதற்காக தன் பணியை ராஜினாமா செய்து இந்திய அரசின் ஒரு முக்கிய திட்டத்தை வழி நடத்த பொறுப்பேற்றிருக்கும் நந்தன் நீலேகெனி. தான் அந்த ஆச்சரியமான் நபர்.  (NANADAN NILEKANI). இன்போஸிஸ் நிறுவனர்களில்  ஒருவரான இவர் அந்த நிறுவனத்தின் பிரம்மாண்னட வளர்ச்சிக்கு பெறும் பங்களித்தவர்.  திரு நாரயாணமூர்த்தியை தொடர்ந்து அதன் முதல் செயல் அதிகாரியாக2002ல் உயர்ந்தவர். 2009ல்  இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அடையாளா அட்டை வழங்கும் பிரதமரின் கனவு திட்டத்தை செயலாக்க பிரதமர் நாரயாணமூர்த்தியிடம் ஆலோசனை கேட்டபொழுது,  அரசின் அந்த பணிக்கு  தலைமையேற்க அவரால் பரிந்ததுரைக்கபட்டவர். பல லட்சஙகள் சம்பளமாகவும் போனஸை கோடிகளிலும் பெற்றுகொண்டிருந்தவர் தன்பதவியை ராஜினாமா செய்து விட்டு காபினெட் அமைச்சரின அந்ததுஸ்த்துள்ள அந்த பதவியை ஏற்றுகொண்டிருபவர்.
” “இண்டியன் இன்ஸ்டியூட் ஃபார் ஹுமன் செட்டில்மெண்ட் என்ற அறகட்டளை  தென்கிழக்கு ஆசியாவிலேயே  மிகப்பரிய டிஜிட்டல் நூலுகம், பலதுறைகளை ஒருங்கிணைத்த ஒரு கல்விநிறுவனத்தை துவக்க 300கோடியில் திட்டமிட்டிருக்கிறது. அந்த நிறுவனத்திற்கு தான் இந்த  50 கோடி ரூபாய் நன்கொடை.  ” “தனிநபர் நன்கொடைகளின் சரித்திரத்தில் சாதனை படைத்திருக்கும் இந்த நன்கொடை எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்தது மிகப்பெரிய கெளரவம் “ என்று இதன் இயக்குனர் அறிவித்த பின்னர்தான் இந்த  நன்கொடை பற்றிய விபரம் வெளியே தெரிந்தது. 2009ம் ஆண்டு டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட  உலகின்  செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியைலில் இடம்  பெற்றவர்.
 இவரது மனைவி ரோஹிணி  சமூகநல சேவைகளில் அதிக ஆர்வம் கொண்டவர். மும்பாய் ஐஐடியில் படிக்கும்போது சந்தித்து காதல் திருமணம் செய்துகொண்டிருக்கும் இந்த தம்பதியினரின் மகனும், மகளும் அமெரிக்க யேல் பல்கலைகழகத்தில் படிக்கின்றனர்.  



10/7/11


சீனாவின்  குரு காணிக்கை

சீனாவில் இந்திய அரசின்  உதவியுடன் முதல் முறையாக ஒரு யோகா உச்சி மாநாடு  தென் சீனாவில்  குன்ஸாஹு(GUNGZHOU)  என்ற ஒரு பெரிய தொழில் நகரில்  சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது. தலைமை விருந்தினாராக் அழைக்கபட்டிருந்தவர் யோகா குரு பி கே எஸ் அயங்கார். அவர் உலகின் பல நாடுகளுக்கு பயணம் செய்திருந்தாலும் சீனாவிற்கு இதுதான் முதல் முறை.  புனாவில் யோகா பள்ளியை   நடத்திவரும்  இந்த குருவிற்கு  அங்கே எதிர்பாராத ஆச்சரியங்கள் பல்  காத்திருந்தன. 200டாலர் கட்டணம் கட்டி மாநாட்டிற்கு வந்திருந்த 1300 பேர் களில்  சில மாணவர்கள் ஒருங்கிணைந்து அவருடைய அய்யங்கார் பாணி யோகசனங்களை  தவறில்லாமல் செய்துகாட்டினார்கள். . அதைவிட ஆச்சரியபடுத்திய விஷயம் அவரது அய்யங்கார் ஆசனங்கள் சீனாவில் மிகவும் பாப்புலர் என்பதும், அந்த நாட்டில்  17 மாநிலங்களில், 57  நகரங்களில்  அவரது பாணி யோகவை கற்பிக்க பல பள்ளிகள் இருப்பதும் 30, 000க்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றிருக்கிறார்கள் எனபதும் தான். பல பள்ளிகளில் ஆசிரியர்கள் ரிஷிகேஸ் வந்து  இவரது சீடர்களிடம் பயிற்சி பெற்றவர்கள்.  சீனர்கள் தங்களது குருவிற்கு மிகுந்த மரியாதை அளிப்பவர்கள். தாங்கள் பயிலும் யோக கலையின் பாணியை உலகிற்கு அறிமுகபடுத்திய குருவை சந்திப்பதை வாழ்வின் பெரிய வாய்ப்பாக கருதிய சீன இளைஞ்ர்கள் அவரை  பல நகரங்களில் வரவேற்றனர்.  “சீனர்களுக்கு யோகா பற்றி ஓரளவு தெரியும் என்பதை மட்டுமே அறிந்திருந்த எனக்கு  யோகா அங்கு இவ்வளவு பிரபலமாக் இருப்பதை பார்க்கும்போது  மிகவு சந்தோஷமாக இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் சீனா யோகாவில் இந்தியாவை முந்தி விட்டால் கூட நான் ஆச்சரியபட்மாட்டேன் “  என்று சொல்லும் அய்யங்கார் கர்நாடக மாநிலத்தில்  பெல்லூர் என்ற சிறிய கிராமத்தில் மிக ஏழைக்குடும்த்தில் பிறந்தவர். சிறுவயதிலியே பெற்றோர்களை இழந்து மைசூரிலிருக்கும் புகழ்பெற்ற யோகாசன ஆசிரியாரான தன் மாமா கிருஷ்ணமாச்சாரியாரின்  வீட்டில் தங்கி அவருடைய உதவியாளாரக பணிசெய்து யோக கலையை கற்றவர். 15 ஆண்டு ப்யிற்சிக்குபின்னர்   மராஷ்ட்டிர மாநிலத்தில் புனா நகருக்கு வந்து யோகா பயிற்சி பள்ளியை  துவக்கி  அதை வளர்த்தவர். தானே கற்று உணர்ந்த சில பழைய யோகயாசன முறைகளை செம்மைப்படுத்தி கற்பித்துவந்தார். எளிதான  இந்த யோகா பாணி அய்ங்கார் ஆசனங்கள் என்று பிரபலமாகி இன்று இந்தியாவில் பல இடங்களிலும், உலகின் பல நகரங்களிலும் பரவியிருக்கிறது.  ’ ‘யோகா லைட் ஆப் லைஃப்’ ‘ என்ற இவரது புத்தகம் உலகம் முழுவதும் அதிக அளவில் விற்கும்  யோகா புத்தங்களில் ஒன்று
இந்த பயணத்தில்  பல  சீன நகரங்களில் யோகானசஙகள்  செய்து காட்டியும் அது குறித்து விளக்க உரையையும் நிகழ்த்தியிருக்கும் இந்த குருவின் படத்துடன் சீனா நாட்டின் அஞ்சல்துறை  ஒரு விசேஷ  தபால் தலை வெளியிட்டு கெளரவித்திருக்கிறது. இத்தகைய கெளரவம் பெறும்  முதல் இந்தியர் இவர்தான். சீன அரசுக்கு  தெரிவித்த நன்றி உரையில்” என் வாழ் நாள் முழுவதும் சந்தோஷப்படும்  வகையில் என்னை சீனாவின் ஒரு அடையாளமாக  கருதி  இந்த மகத்தான கெளரவத்தை அளித்தற்கு  மிக்க நன்றி  என குறிப்பிட்டிருக்கிறார். இனி ஆண்டுக்கு ஒருமுறை சில்மாதங்களாவது சீனாவில் யோகா வகுப்புகள் நடத்தபோவதாக் அறிவித்திருக்கும் இவருக்கு வயது- ஒன்றும் அதிகமில்லை 93 தான்.






10/4/11

கலியுக கர்ணன்


கலியுக கர்ணன்


வாரன்பஃபெட் 2008ல் உலக கோடீஸ்வர்களில் முதல் இடத்திலிருந்தவர். பில்கேட்டினால் பின் தள்ளபட்டு இன்று 3 வது இடத்திலிருக்கிறார். அமெரிகாவிலுள்ள ஒம்கா நரில் 1930ல்  சாதரணகுடும்பத்தில் பிறந்த பஃபெட் தன் வயது சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்த போது வியாபாரம் செய்து 11வயதிலியே பங்கு சந்தைக்கு அறிமுகமாகி 17 வயதில் 5 ஆயிரம் டாலர் சம்பதித்தவர்.பென்கிராம் என்ற பங்குசந்தை நிபுணரை குருவாக ஏற்ற ஏகலைவன். 1965ல் பெர்க்‌ஷ்யர் ஹாத்வே என்ற டெக்ஸ்டையில் கம்பெனியை வாங்கி அதன் தலையெழுத்தோடு அமெரிக்க பங்கு சந்தையின் பிமப்த்தையும்  மாற்றியவர்.அவரது நிறுவனம் பல துறையில் முதலீடு செய்யது அள்ள அள்ள பணம் என்ற ரீதியில் சம்பாதிக்க துவங்கி 2008ல் உலகின் முதல் பணக்காரானவர். இவரது நிறுவனத்தின் பங்குகளின் விலை ஏற்ற இறக்கம் அமெரிக்க பங்குசந்தையின் குறியீட்டு எண்ணைவிட ஒவ்வொரு நிமிடமும் கவனிக்கபடுமளவிற்கு பிரபலமானது. இவர் தன் நிறுவன முதலீட்டாளாருக்கு எழுதும் கடிதத்தினால்  அமெரிக்க பங்குச் சந்தையின் போக்கு மாறுவதால் உலகமே உற்று கவனிக்கும் இந்த மனிதர் கடந்த வாரம் இந்தியாவிற்கு வந்திருந்தார். அதிபர் ஒபாமாவின் வருகையை காட்டிலும் அதிக ஆர்வத்தை உண்டாக்கியிருந்தது இந்த 80 வயது இளைஞரின் முதல் இந்திய வருகை.
வருகையின் காரணம் பங்களூரில் அவரது  நிறுவன முதலீட்டில் டேக்டெக் என்ற நிறுவனத்தின் துவக்க விழா என்று சொல்லபட்டாலும் இப்போது இந்தியாவில் சூடுபிடித்துவரும் இன்ஷ்யூரன்ஸ்  தொழிலில் அனுமதிக்கபட்ட அன்னிய முதலீடான 26% த்தை 50 % ஆக அரசை உயர்த்த செய்து அதில் நுழைந்துவிடவேண்டுமென்பத்தான்.. கர்நாடக அரசின் விருந்தினராக் கவுரவிக்கபட்ட பஃபெட் பங்களூரில் சிறப்பு அழைப்பாளாக அழைக்கபட்டவர்களின் கூட்டத்தில், நெற்றியில் பளீரென்ற குங்குமப்பொட்டுடன் போட்ட ஒற்றை சர மல்லிகை மாலையை கழட்டாமல்  பேசியதில் கேட்டவை.
Ø  இந்தியாவிற்கு மிக தமாதமாக வந்ததிருப்பதை உணர்கிறேன். வரும் ஆண்டுமுதல் ஆண்டு தோறும் எனது நிறுவனம் இந்தியாவில் பெருமளவில் மூதலீடு செய்யும்.
Ø  ஷேர் மார்கெட்டில் அடுத்தவர்கள் பேராசைப்படும்போது நீங்கள் பயப்படுங்கள். மற்றவர்கள் பயப்படும்போது நீங்கள் பேராசைப்படுங்கள்.
Ø  உங்கள் ஷேர்களின் மதிப்பு  50% விழுந்தால்  பீதி யடையபவரா நீங்கள்? அப்படியானால்  நீங்கள் ஸ்டாக்மார்கெட்டிலிருக்க லாயக்கில்லாதவர்.
Ø  உங்களால் புரிந்துகொள்ள முடியாத பிஸினஸில் முதலீடு செய்யாதீர்கள்
Ø  நானும் இப்போது இந்தியாவிலிருக்கும் நணபர் பில்கேட்டும் இந்திய கோடீஸ்ரர்களை சந்தித்து சம்பாதித்ததில் பெரும்பஙகை சமுதாயத்திற்கே திருப்பி கொடுக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தபோகிறோம்.
Ø  என் சொத்தில்(50பில்லியன் டாலர்கள்- )  99%த்தை என் வாழ்நாளுக்குள் நனகொடைகளாக வழங்க தீர்மானிருக்கிறேன். மீதி என குடுபத்தினருக்கு போதும். அவர்களின் தேவைக்குமேல் விட்டு செல்வது அவர்களுக்கு தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும்.  நான் இவவளவு பணத்தை அறககட்டளைக்கு கொடுத்தாலும் என் சந்தோஷமான வாழ்க்கையையோ எனக்கு பிடிததவவைகளையோ ,என் விடுமுறையையோ  இழக்க போவதில்லை. எனக்கு அதிகமாகயிருக்கும் இந்த பணம் பலருக்கு அவசியமாயிருக்கிறது.
Ø  நணபர் பில்கேட் இதை ஏறகனவே துவக்கி உலகளவில் 25 பில்லியன் டாலர்கள்  கல்வி, மருத்துவம் போன்றவற்றிருக்கு செலவிட்டிற்கிறார்.. நானும் அந்த வழியில் செல்ல விரும்புகிறேன்.
1985-ல்  ஹாத்வே நிறுவனத்தில் சேர்ந்த அஜித் ஜெயின் என்ற இந்தியர். இன்று இவரது நம்பிக்கைக்கு பாத்திரமான இவருக்கு அடுத்த நிலை அதிகாரி.  அஜித்தின் கடின உழைப்பால், திறமையான நிர்வாகத்தால்  பஃபெட்டின் ஹாத்வே நிறுவனக்கு பல மடங்கு பணம் மழையாக் கொட்டியது.பஃபெட்டின் வாரிசாக போகிறவர் என்பது அமெரிக்க பங்குசந்தையின் கணிப்பு. அவரைப்பற்றி பேசும்போது
Ø  அஜித் என்னைவிட மிகததிறமைசாலி. ஹாத்வேக்கு  என்னைவிட அதிகம் சம்பாதித்து கொடுத்தவர். கடுமையான திறமையான, நாணயமான உழைப்பாளி. அவரை எனக்கு தந்ததற்கு இந்தியாவிற்கு நன்றி சொல்லுகிறேன். அவரைபோல இன்னும் ஒருவர் இருந்தால் உடனே என்னிடம் அனுப்புங்கள்.

  

21/11/10


இரண்டு கார்கள்

கார் 1

80 கிலோ தங்கம், 15 கிலோ வெள்ளி, 10 ஆயிரம் ஆபரணகற்கள் பயன் படுத்தி 15 பேரின் உழைப்பில் ஒரு தங்க நானோ காரை டாடா குழுமம உருவாக்கியிருக்கிறது.  இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் பாரம்பரிய பாணிநகைவடிவங்களுடன் இடம்பெற்றிருக்கும் இந்த கார் முகப்பில் தோகை விரித்தாடும் வண்ண மயிலுடன் ஜொலிக்கிறது. காரின் வெளியே மட்டுமில்லாது  உள் கைப்பிடிகள் ஸ்டீரியங், கியர், டாஷ்போர்ட் எல்லாம் தங்கம். வந்த 20 டிசைன்களில் 3 தேர்ந்தெடுக்கபட்டு அதை மக்களிடம் ஓட்டுக்குவிட்டு இறுதியில் தேர்வான இதை வடிவமைத்த 5வர் குழுவில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். டாடா குழுமத்தின் ஒரு அங்கமான கோல்ட் பிளஸ் என்ற தங்க நகைப்பிரிவிற்காக தயாரிக்கபட்டிருக்கும் இதன் மதிப்பு 22 கோடிருபாய்கள்.  இந்தியாவின் மிக குறைந்த விலை கார் நானோ.அந்த 2 லட்சரூபாய் காரை விலையுர்ந்த காராக்கி விற்பனைக்கு அல்ல விளமபரத்திற்கு மட்டும் என்றும் யாரும் பயன்படுத்தபோதில்லை எனறும் அறிவித்திருக்கிறார்கள்.

கார் 2


ஒரே ஒருவரின்  பயன்பாட்டிற்காக ஒரு புதிய கார்  பலகோடி மதிப்பில் வாங்கபட்டிருக்கிறது.  முன்னாள் மன்னர்கள் பாரம்பரியப்படி 4 குதிரைகள் இழுக்கும் சாராட்டில் இன்றும் முக்கிய விழா நாட்களில் வரும் இந்திய குடியரசு தலைவர்கள் நீண்ட நாட்களாக ப்யன்படுத்திவந்தது தேசிய காரான அம்பாஸிடர். 8 ஆண்டுகளுக்கு முன் அது வெளிநாட்டு காராயிற்று. அது இப்போது மாற்றபடுகிறது.
உலகின் மிகபாதுகாப்பான காராக கருதப்படும் மெர்சிடீஸ் பென்ஸ் கார் S600L   ஜெர்மனியிலிருந்து நமது குடியரசுதலைவரின் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.  துப்பாக்கி குண்டுகள் துளைக்க முடியாத டயர்கள் வெடித்தாலும் நிற்காமல் ஓடக்கூடிய, விஷவாயு பரவினால் உடனே ஆக்சிஜன் நிரம்ப இப்படி பல வசதிகள்.  கார் தேர்ந்தெடுத்தபின் ஒராண்டாக பாதுகாப்பு அதிகாரிகளினால் பலகட்டங்களில் பாதுகாப்பு அமைப்புகள் சோதித்து பொருத்தபட்ட  இந்த காரை குடியரசு தலைவர் மட்டுமே உபயோகிக்க முடியும். விலையைம் மொத்த செலவையும்  ராணுவம் செய்திருப்பதால் தகவல் அறியும் சட்டத்தில் கூட அதை அறிய முடியாது. 6 கோடியிலிருந்து 8 கோடிக்குள் இருக்கும் என வல்லுனர்கள் மதிப்பிடுகிறார்கள்.  உள்ளே குடியரசுதலைவர் உடன் வரும் விருந்தினருடன் முகம் பார்த்து பேச வசதியாக சீட்டுகளை திருப்பிகொள்ளும் வசதிகளுடனும், வீடியோகான்பிரன்ஸிங் வசதியுடனும்  அமைக்கபட்டிருக்கும் இந்த காரில் வெளியே இருப்பவைகளை பார்கக தனி வீடியோ வசதிகள். பேசப்படுவது  ஓட்டுபவருக்கு கேட்க முடியாத வசதிகள் எல்லாம்.


கார்கள் உற்பத்தியிலும் ஏற்றுமதியில்   முதலிடத்திலிருந்தாலும்    நாட்டின் தலவருக்காக கார் இறக்குமதி செய்யும்,   விளமபரத்திற்காக மட்டுமே ஆடம்பரமாக தஙகத்தில் கார் தயாரிக்கும்  நாடு இந்தியாவாகதானிருக்கும். இந்த நாட்டில் தான் , கடனில்  கார் வாங்கிய சாமனியன்  தொடர்ந்து உயரும் பெட்ரோல்விலை, பராமரிப்புசெலவு, வங்கிகடனின்வட்டிவீதம் போன்றவைகளை சமாளிக்க திணறிக்கொண்டிருக்கிறான்.

1/8/10

30 கோடி முகங்களுடன் ஒரு புத்தகம்




காதலில் தோல்வியுற்ற ஒரு இளைஞன் என்ன செய்வான்? விரக்தியில் தாடி வளர்ப்பது, சோகத்தில் கவிதை எழுதுவது, என்பதலிருந்து மாறுபட்டு செயல்பட்ட ஒரு இளைஞனின் முயற்சியில் எழுந்ததுதான் இன்று உலகத்தையே கலக்கிகொண்டிருக்கும் ஃபேஸ் புக் என்ற சோஷியல் நெட்வொர்க்கிங்’ இணையதளம். 2004ம் ஆண்டு அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைகழக மாணவர் மார்க் ஸூக்கர்பெர்க்  (Mark Zuckerberg) தன் காதலை எற்காமல் போன காதலியின் நினைவுகளை மறக்க எதாவது சீரியஸாக செய்ய வேண்டும் என்று ஒரு இரவு முழுவதும் யோசித்ததில் பிறந்தது இது.. அமெரிக்க பல்கலைகழகங்களில் சேரும் மாணவர்கள், ஆசிரியர்கள் பற்றிய விபரங்களை ஒரு  முக அளவு போட்டோவுடன் ஒரு “ஃபேஸ்புக்காக” அச்சிட்டு வெளியிடுவார்கள். மார்க்ஸூக்கர்பெர்க்கு    அந்த காலகட்டதில் பிரபலமாகிக்கொண்டிருந்த    இணைய தள அமைப்பில் இதைச் செய்தால் என்ன என்று எழுந்த எண்ணத்தில் அறை நண்பர்களின் உதவியுடன் ஃபேஸ் ப்க் இணய தளமாக மலர்ந்த காதலி இவள்.. ஹார்வர்ட் பல்கலை மாணவர்களுக்கு மட்டும், என முதலில் துவங்கபட்ட இது பக்கத்து பல்கலைகழகம்,பக்கத்து மாநிலம், அமெரிக்கா முழுவதும் உள்ள மாணவர்களுக்கு மட்டும்,பின்னர் உலக மாணவர்களுக்கு எல்லாம்,என்று பல நிலைகளை கடந்து இன்று 13 வயதிற்கு மேற்பட்ட எவர் வேண்டுமானாலும் ஒரு இ மெயில் ஐடி இருந்தால் போதும் இலவசமாக உறுப்பினாராக முடியும் என்ற  பிரமாண்ட எல்லையை  தொட்டிருக்கிறது.  தொடர்ந்து வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் இதன் மதிப்பு 300மில்லியன் டாலர்கள்(135 கோடி ரூபாய்கள்)   இதே போல் மைஸ்பேஸ், ஆர்குட் போன்ற தளங்கள் இருந்தாலும் இதுதான் உறுப்பினர் எண்ணிக்கையிலும், அதிக முறை அடிக்கடி பார்க்கப்படும் தளங்களிலும் முதலிடத்திலிருக்கிறது. உலகம் முழுவதும் 30 கோடி பேர் இதை பயன்படுத்துகிறார்கள். ஓரளவு முதலீடு செய்திருக்கும் மைக்ரோசாப்ட் உள்பட பல பெரிய நிறுவனங்களுக்கு இதன் மேல் ஒரு கண். வளைத்துபோட்டு இணைத்துகொள்ள தயாராகயிருக்கிறார்கள்.
அப்படி என்னதான் இந்த இணையதளத்திலிருக்கிறது?
 ஒரே வார்த்தையில் சொல்வதானால்-எல்லாமே. உறுப்பினர்கள் தங்களைப்பற்றிய விபரங்கள், படங்கள், சொந்த, சமுக பிரச்சனைகள், யோசனைகள்,விமர்சனங்கள்,பராட்டுகள், கவலைகள் படித்தவை,அதில் பிடித்தவை பார்த்த சினிமா அரட்டை,கோபம்  இப்படி எல்லாவற்றையும்  பதிவு செய்யலாம். பார்க்கும் உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளையும் பதிவு செய்வார்கள், இதனால் புதிய நட்புகள் அரும்புகின்றன. தொடர்பில்லில்லாத  பழைய நண்பர்களையும் இதன் வழியாக அடையாளம் காணமுடிகிறது. ஒரே துறையை சார்ந்தவர்கள், ஒருமித்த கருத்துடையவர்கள் குழுவாக இணந்து தகவல்களை பரிமாறிக்கொள்கிறார்கள், சில இடங்களில் நேரில் சந்தித்து விவாத கூட்டங்கள் கூட நடத்திக்கொள்கிறார்கள். இளைஞர்களை அதிகமாகவே ஈர்த்திருக்கும் இன்னும் அவர்களை கவர தொடர்ந்து பல புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தி கொண்டேயிருக்கிறார்கள். புறநகர் இளைஞர்கள் இப்போது தாங்கள் பேஸ்புக்கிலிருப்பதையும் அதை மற்றவருக்கு சொல்லுவதையும் கெளரவமாக கருதுகிறார்கள்.  உலகம் முழுவதும் 30 கோடிபேர் பயன்படுத்தும் இதில் ஒருகோடிபேர் இந்தியர்கள்.இந்தியாவில் செல்போன் பயன் படுத்துவர்களில் 20%க்கும்மேல்  ஃபேஸ்புக் உறுப்பினர்கள்.  உலகிலேயே செல்போன் உபயோகிப்போரின் எண்ணிக்கையில் முதலிடத்தை இந்தியா விரைவில் பிடிக்கும் என்பதால் இந்த நிறுவனம் இந்தியாவை தனது முக்கிய இலக்காக கொண்டிருக்கிறது. இப்போது ஹிந்தி, பஞ்சாபி, பெங்காலி, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய ஆறு மொழிகளில் ஃபேஸ்புக்கில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். விரைவில் இன்னும் பல இந்திய மொழிகளில் இந்த வசதியை வழங்க ஹைதராபாத்தில் அலுவலகத்தை திறக்கவிருக்கிறார்கள். ஆசிய நாடுகளிலேயே ஃபேஸ்புக்கின் அலுவலகம் திறக்கப்படுவது ஹைதராபாத்தில்தான்.
“என் நாய்குட்டி ஜிம்மிக்கு உடம்பு சரியில்லை.இரண்டுநாட்களாக சரியாக சாப்பிடவில்லை”என்ற செய்தியை நீங்கள் ஃபேஸ்புக்கில் போட்டால், உடனே ஆறுதல். ஆலோசனை, மருந்து,தொடர்புகொள்ளவேண்டியடாக்டர், தங்களின் நாய்க்கு நேர்ந்தது போன்ற செய்திகள் ஒரு 10 நண்பர்களிடமிருந்தாவது பறந்து வரும். மனித உறவுகள் பலவீனம் அடைந்து  சிறுகுடும்பத்தீவுகளாகிப்போன இன்றய சூழ்நிலையில் இத்தகைய நேசக்கரங்களை நிபந்தனையில்லமல் நீட்டும்  இதன் வசதி மக்களுக்கு பிடித்திருப்பதும் இதன் வெற்றிக்கு ஒரு காரணம்.
பிரபலமான விஷயங்களில் எதாவது பிரச்சனையிருக்கும் என்பதற்கு இது விதிவிலக்கில்லை.நம் சொந்த விஷயங்கள் எளிதாக எல்லோருக்கும் கிடைப்பதினால் பிரச்சனைகள் எற்பட வாய்ப்புகளும் உண்டு. இன்றைய இளைஞர்கள் இந்த தளங்களை பாதுகாப்புடன் கையாளுவது பற்றியும் அறிந்திருக்கிரார்கள்.இப்போது உறுப்பினர்களின் தகவல்களை யார் பார்க்கலாம் என்பதை அவர்களே முடிவுசெய்யலாம்.
உங்கள் வீட்டில்  இண்டர்நெட்டும்,15 வயதுக்கு மேல் குழந்தைகளும் இருந்தால் அவர்கள் ஃபேஸ்புக்கிலிருப்பார்கள் என்ற நிலையை தாண்டி வேலையிருந்துஓய்வு பெற்றவிட்ட  உங்கள் 65 வயது அப்பாவும் அம்மாவும் ஃபபேஸ்புக்கில் மெம்பர் என்ற நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது. ஆமாம். இப்போது வயதானவர்களுக்கு போரடிக்காமலிருக்க கிடைத்த வரப்பிரசாதங்களில் இதுவும் ஒன்று.
K(கல்கி01.08.10)



முப்பது கோடி முகமுடையா ளுயிர்
மொய்ம்புற வொன்று டையாள் - இவள்
செப்பு மொழி பதினெட்டு டையாள், எனிற்
சிந்தனை யொன்று டையாள்"
-பாரதியார்

13/6/10

புரியவைக்கிறார்கள்



“இனி எந்த ஒரு ஒவியனாலும் இப்படி ஒரு படைப்பை உருவாக்கமுடியாது.அந்த கண்களும் புன்சிரிப்பும் ஆயிரம் கதைகள் பேசுகின்றன.”                                                                    
“எனக்கென்னவோ அந்த சிரிப்பில் ஒரு சோகம் தான் தெரிகிறது.”
மாடல் - படம் எழுதும்போது கஷ்டத்துடன் உட்கார்ந்திருப்பது அந்த இறுகிய முகத்தைப்பார்த்தால் தெரியவில்லை?”
“அந்த கைகளை அப்படி வைத்துக்கொண்டு சிரிப்பவர்கள் எதையோ மறைக்கிறார்கள் என்று அர்த்தம்”
“அவர் சிரிக்கவேஇல்லை முகத்தில் கோபம் தெரிகிறது”
பாரீஸ் நகரின் லூவர்(LOUVRE Palace)------ அரண்மனையின் அருங்காட்சியகத்தில் ஆண்டுக்கு 50 லட்சம்பேருக்குமேல் பார்க்கும் மானோலீஸாவின் படத்தை பார்த்தவர்களில் சிலரின் விமரிசனம் இவை.ஓவியன் லியோனா டார்வென்ஸியின் இறுதிப்படைப்பான இதன் வரலாறு சுவையானது. கடவுள், மதத்தலைவர்,மன்னர் போன்றவர்கள் மட்டுமே படமாக எழுதப்பட்ட காலத்தில்  500 ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்டு இன்று வரைப்பேசப்படும் ஒரு தனி நபரின் ஓவியம் இது ஒன்று தான். தொங்கவிடப்படும் ஆணியிலிருந்து படத்தின் பிரேம்சட்டம் வரை சிறந்த வல்லுனர்களால் அவ்வப்போது புதுப்பிக்கபட்டு பாதுகாக்கபடும் இந்த ஓவியம் உலகின் சிறந்த கலைப்பொக்கிஷமாக பாதுகாக்கபட வேண்டுமென்று அகில உலக ஒவியர் சம்மேளனத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்றைக்கு  குண்டு துளைக்கமுடியாத கண்ணாடி கூண்டு, 24மண நேர cctகாமிரா கண்காணிப்பு, பல மில்லியன் டாலர்களுக்கு இன்ஷ்யரன்ஸ் என்று பாதுகாப்பாக இருக்கும் இந்த ஒவியம்          1911ம்ஆண்டு காணமல் போயிருக்கிறது. திருடியவர் ஒரு இத்தாலி நாட்டு  சாதாரண ஒவியர். படத்தை பிரதி எடுத்து விற்றுக்கொண்டிருந்தார்.  2 ஆண்டு கழித்து மாட்டிக்கொண்டபோது ‘ஓவியனும், மாடலும் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போது இது பிராண்ஸில் இருப்பது தவறு என்பதால் நம் நாட்டிற்கு கொண்டுவந்துவிட்டேன்’ என்று சொன்னதால் அவரின் தேச பக்தியை பாராட்டி விடுதலை செய்துவிட்டார்கள்.!
படத்தின் இந்த சுவாரஸ்யமான கதைகளைவிட, மானோலீஸாவின் மர்ம புன்னகையைப்ற்றி நடந்த ஆராய்ச்சிகளும், தகவல்களும்  தான் மிக சுவாரஸ்சியமானவை.
 2005ஆம் ஆண்டின் இறுதியில் ஆம்ஸ்ட்டர்டாம் பல்கலைகழகம்(நெதெர்லண்ட்) புகைப்படங்களிலிருந்து அதில் இருப்பவரின் உனர்ச்சிகளை புரிந்துகொள்ள ஒரு மென்பொருளைத்தயாரித்திருந்தது. போட்டோக்களில் பயன் படுத்தி வெற்றிபெற்ற அதை இந்த ஒவியத்தில் பயன் படுத்தி பல நாட்கள் ஆராய்ச்சிக்கு பின்னர் அறிவித்த முடிவு. “மோனாலீஸா புன்னகை சந்தோஷமான புன்னகைதான். அந்த முகம், 83% சந்தோஷம்,9%வெறுப்பு,6%பயம்,2%கோபம் என்ற கலவையில் இருக்கிறது. கண்களின் ஒரத்தில் தெரியும் சிறிய சுருக்கம்,உதடுகளின் மெல்லிய வளைவு எல்லாம்  ஒரு சாராசரிப் பெண் சந்தோஷத்தில் இயல்பாக சிரிக்கும்போது எற்படுபவைதான்”

அறிவிக்கப்பட்ட முடிவு ஒவிய கலைஞர்களிடமும், கலைவிமர்சகர்களிடம் சர்ச்சயை அதிகரிகச்செய்ததே தவிர  இறுதி விடையாக எற்றுகொள்ளபடவில்லை. கடந்த ஆண்டு(2009) அக்டோபர் மாதம் ஸ்பெயின் நாட்டின் நரம்புமண்டல ஆராயச்சியாளார்களின் பயிற்சிக்கூடம் தங்களது ஆராய்ச்சியின்  பல கட்ட சோதனைகளின் முடிவில் மோனாலீஸாவின் புன்னகையின் மர்மத்தைக்கண்டு பிடித்துவிட்டோம். என அறிவித்தது.  “மோனலீஸா புன்னகைக்கிறாரா,இல்லையா என்பது பார்ப்பவரின் கண்களிலுள்ள ரெட்டினா செல்களில் பதியும் பிம்பத்தையும்,அது மூளையைச் சென்று அடையும் பாதயையும் பொறுத்தது.சில சமயங்களில் ஒரு பாதைவழியாகச் செல்லும்போது சிரிப்பதுபோலவும் மற்றொரு சமயம் வேறு பாதைவழியாக பிம்பம் மூளையை அடையும்போது சிரிக்காத மாதிரியும் தெரிகிறது.ஒருவினாடியில் 100ல் ஒரு பங்கு நேரத்தில் இது நடைபெறுகிறது. ஓவ்வொரு மனிதனுக்கும் இது,மாறும்- சில சமயம் ஒரே மனிதருக்கே கூட இரண்டு பாதைகளும் மாறி வேலை செய்யும். அதன் விளவு தான் இந்த தோற்றம்’ என்று சொல்லுகிறார் இந்த ஆராய்சிக்கு தலமையேற்ற லூயிஸ் மார்டின்ஸ் ஓட்டீரோ என்ற நரம்பியல் விஞ்ஞானி. மோனாலீஸாவின் படத்தை பல மாறுபட்ட பெரிய சிறிய வடிவங்களில் வெவ்வேறு தூரங்களிலிருந்து பங்கேற்பவர்களைப் பார்க்கச்செய்து இதை நிருபிக்கிறார்  “ஒரு படத்தின் மிகச்சரியான நடுப்புள்ளியிலஇருந்துதான் பிம்பம் ரெட்டினாவில் பதிய ஆரம்பிக்கிறது.மின்னலைவிட வேகமாக நமது மூளையில் பதிவதற்குள் பாதை மாறினாலோ அல்லது ரெட்டினா சற்றே நகர்ந்தாலோ படத்தின் நடுப்புள்ளி நம்  மூளையில் பதியாது. ஓவியத்தின் சரியான நடுப்புள்ளியில் புன்னகையை எழுதியிருப்பது தான் ஒவியனின் திறமை” என்கிறார். இவர்.
லியானோடார்வென்ஸீ திட்டமிட்டு இதைச் செய்திருப்பாரா? வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் இந்த ஒவியனைப்பற்றி ஆராய்ந்தவர்கள். “ஓவியம்,கட்டிக்டகலை,பொறியில்துறை, வானசாஸ்த்திரம், பூவியல் இப்படி பல துறைகளில் பிறவி மேதையாக, நிபுணராகயிருந்தவருக்கு இது ஒரு பெரிய விஷயமாகயிருந்திருக்காது., இன்றைய முப்பரிமாண(3 –D) படங்கள் பற்றிய அவரது கையெழுத்தில்  எழுதிய குறிப்புகள் கூட  சமீபத்தில் கிடைத்திருக்கிறது”



 
இந்த முடிவிற்கு ஒவிய உலக ஜாம்பவான்கள் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. இந்த விஷயங்களை அறிந்த பின்  மீண்டும் மோனாலீஸா ஒவியத்தைப் பார்க்கும்போது “ஏன் இந்த ஆராய்ச்சியெல்லாம்?” என்ற தொனியில் அவர்  சிரிப்பது போலத்தானிருக்கிறத
(கல்கி13.06.10)
Ka(க்