அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23/4/15

இலவச இணைய சுதந்திரம் பறி போகிறதா?

இன்றைக்கு இணையம் என்பது பலரின் வாழ்வில் ஒர் அங்கமாகிவிட்டது. கட்டற்ற சுதந்திரமாக  நல்லது, அப்படி இல்லைஎனக்கருதப்படுவது எல்லாம் மிக எளிதில் வசப்படும்  இந்த வலிமையான ஆயுதம் உலகெங்கும் இலவசம். யூ டியூப்பில் படம் பார்க்கலாம், பதிவேற்றம் செய்யலாம், ஃபேஸ்புக், லிங்க்டுஇன் கணக்கு தொடங்கலாம், கூகுள், யாகூ எதில் வேண்டுமானாலும் எதையும் தேடலாம். ஃபிலிப்கார்ட், அமேசான் என எந்தவோர் இணைய வணிகர்களிடமும் பொருள் வாங்கலாம், ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்யலாம். மின் கட்டணம் செலுத்தலாம், நெட் பேங்கிங் செய்யலாம், இவை அனைத்துக்கும் தேவை நீங்கள் இணையத்துக்கான இணைப்பு (நிரந்தரமாக அல்லது தாற்காலிகமாக) பெற்றிருக்க வேண்டும். அவ்வளவுதான்
இப்போது இதில் சில வசதிகளை கட்டணசேவையாக அறிமுகபடுத்துவது குறித்து விவாதம் எழுந்திருக்கிறதுஇப்படி செய்தால் ஒருசில தொலைபேசி நிறுவனங்களுக்கு  அதிக லாபம் ஈட்டும் வழியாகவும்இணைய பயனாளிகள் சில நிறுவனங்களின் பிடியில் மட்டும் சிக்கி கொள்வார்கள் என்று எதிர்ப்பு அலை எழுந்திருக்கிறது.
சமநிலை இணைய சேவை வேண்டும் (நெட் நியூட்ராலிட்டி) என்பது உலகம் முழுவதிலும் இணையப் பயன்பாட்டில் இருப்போர் வலியுறுத்தும் கருத்து. இணையத்தைப் பயன்படுத்தும் நபர் எதை வேண்டுமானாலும் பார்க்க, எந்த இணைய சேவை நிறுவனத்தின் தகவல் களஞ்சியத்துக்குள்ளும் நுழைந்து பார்க்க, எந்தவோர் இணைய வணிக நிறுவனத்துடனும் இ-வர்த்தகம் செய்யத் தடையில்லாத நிலைமைதான் சமநிலை இணைய சேவை என்பது.
உலகில் பல நாடுகளில் இதற்காக தனி சட்டங்கள் வந்துவிட்டன. அமெரிக்காவில் சமநிலை இனைய வசதி  அரசால் உறுதி செய்யபட்டிருக்கிறது.
ஆனால் ஆனால்,இந்தியாவில் சேவைகளைக் கட்டுப்படுத்துதல், சேவைகளுக்குக் கட்டணம் விதித்தல், சேவைகளைத் தரவரிசைப்படுத்துதல், சில சேவைகளுக்கு அதிவேகம் நிர்ணயித்தல் ஆகிய உரிமைகளை தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கோருகின்றன. இதற்கு முக்கிய காரணம்  2014ஆம் ஆண்டில் வெறும் ரூ.62,162 கோடி ஏலம் போன அலைக்கற்றை, தற்போது இரட்டிப்பு கட்டணம் கொடுத்து நிறுவனங்கள்  ஏலம் எடுத்திருக்கின்றன..  அதை எப்படி சம்பாதிப்பதுஅதனால் அரசிடம் அவர்கள் இந்த கட்டண சேவைக்கு அனுமதி கேட்கிறார்கள்
.வழக்கமான தொலைபேசி சேவை, குறுந்தகவல், எம்எம்எஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல், வாட்ஸ் அப் , முகநூல், லைன், வைபர், வீசாட் போன்றவற்றின் மூலம் தகவல், விடியோ, புகைப்படம் பரிமாறிக்கொள்வதால் உலகம் முழுவதிலும் உள்ள தகவல் தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு 50 லட்சம் கோடி அமெரிக்க டாலர் இழப்பு ஏற்படுகிறது என்பது அவர்கள் வாதம். இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு ரூ.3,700 முதல் ரூ.4,000 கோடி இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்படுகிறது
இதற்காக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும்  இணைய சேவை (நெட் நியூட்ராலிட்டி) குறித்த உங்கள் கருத்துகள், இதில் நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்தீர்வுகள்  என்ன என்று கேட்டு ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்கள்
செய்தி வெளியானவுடன்  இந்தியஇணைய குடிமகன்கள்(நெட்சிட்டிசன்) கொதித்து எழுந்திருக்கின்றனர். முக நூலில், டூவிட்டர்களில் ஆதரவு திரட்டி அரசுக்கு அனுப்பிகொண்டிருக்கிறார்கள் பல லட்சகணக்கானபேர் எனது இணையம் அதில் சம நிலை  எனது உரிமைஎன மெயில்கள் அனுப்பி கொண்டிருக்கிறார்கள்  நீங்களும் உங்கள் கருத்துகளை இம்மாத இறுதிக்குள் அனுப்பலாம்.
தொலை பேசி நிறுவனங்களுக்கு  இதனால் ஒன்றும் பெரிய இழப்பு அல்ல. அவர்கள் மொத்த வருவாயில் 5% குறைவு, அவ்வளவே. மேலும் ஏர்கண்டிஷன், 62 அங்குல எல்சிடி டிவி பயன்படுத்தினாலும், 40 வாட்ஸ் குண்டு பல்பு பயன்படுத்தினாலும் மின்கட்டணம், ஒரே மாதிரியானது தானே?   இணையத்தில் மட்டும் பயன்படுத்தும் தளத்திற்கேற்ப எப்படி மாறுபட்ட கட்டணம் வசூலிக்கமுடியும் என்கிறார்கள் இணைய பாதுகாப்பு போராளிகள்.
யோசிக்க வைக்கும் கேள்வி தான்.

.

.






23/8/14

உயிர் துறக்கும் உரிமை



ஒரு மனிதனுக்கு தான் உயிரை விரும்பிய போது துறக்கும் உரிமை உண்டா? தன்னுயிரை தானே மாய்துகொள்வது என்பது  தற்கொலை அதுவும் அதற்காக முயற்சிப்பதும்  உலகின் பல நாடுகளில் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் ஸ்விஸ் நாட்டில் இது  குற்றமில்லை. சட்ட விதிகளுக்குட்பட்டு ஒருவர் தன் மரணத்தை தீர்மானித்துகொள்ள முடியும்.
ஸூரிச் நகரில் இதை செய்து கொடுப்பதற்காகவே ஒரு அமைப்பு செயல் படுகிறது. அதன் பெயர் டிகினாட்ஸ் (DIGNITAS) இவர்கள் தன் உயிரைப்போக்கிக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு, உடல் ரீதியாக எந்த பிரச்ச்னைகள் இல்லாவிட்டாலும் கூட, மரணத்தை அவர் விருப்பம்போல செய்ய திட்டமிட்டுகொடுத்து அனுமதிகள் பெற்று செய்துகொடுக்கிறது.
இதைப்போல  உலகின் 23 நாடுகளில, உயிரை விரும்பி போக்கிகொள்ளு விரும்புபவர்களின் 38 சொஸைட்டிகளின் கூட்டமைப்பு ஒன்றும் 1980லிருந்து இயங்கி வருகிறது.  1998ல்  துவக்கபட்ட டிகினாட்ஸ் அமைப்பில்  உலகின் பல பகுதிகளிலிருந்தும் பதிவு செய்துகொண்டிருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 7000 த்த தாண்டுகிறது.  உயிர் போக்கி கொள்ள விரும்புகிவர்களைத்தவிர இந்த அமைப்புக்கு உதபவர்களும் இதில்  அடக்கம். இதுவரை  உலகின் வெவேறு நாடுகளைச்சேர்ந்த 1800 பேருக்கு  அவர்கள் விரும்பியபடி உயிரை போக்கிகொள்ள உதவியிருக்கிறது.  அதிகமாக பயன் படுத்தியவர்கள் ஜெர்மானியர்கள் இதுவரை 840 பேர். குறைவாக  செய்துகொண்டிருப்பவர்கள் இஸ்ரேலியர் 19 பேர். மிக குறைவாக பயன்படுத்திய நாடுகளில் இந்தியா ஒன்று. இதுவரை இதைப்பயன்படுத்திய இந்தியர் ஒருவர் மட்டுமே. இந்த சேவைக்கு இவர்கள் வசூலிக்கும் கட்டணம்10,500 ஸ்விஸ்பிராங்க்கள் இந்திய மதிப்பில் ரூபாய் 7 லட்சம்
ஏன் இவ்வளவு கட்டணம்?  இதில் பதிவுகட்டணம். ஆலோசனை கட்டணம், உயிரைபோக்கிக்கொள்ள உதவும் சேவைக்கான கட்டணம் உதவும் டாக்டரின் பீஸ்,அரசாங்கத்துக்கு அனுப்பும் ரிப்போர்ட்,  எரிப்பது புதைப்பது மற்றும் இறுதிச்சடங்குகளுக்கான செலவு, அவசியமானால் குடும்பத்தினருக்கு பதில் கோர்ட் கேஸ்களை சந்திக்க நேரும் செலவு  எல்லாம் அடங்கும் என்கிறார்  இந்த அமைப்[பின் தலைவர்  லூட்விக் மின்லி.
 81 வயது ஆகும் இவர் ஒரு வழக்கறிஞர், மனித உரிமை ஆர்வலர்.. விரும்பும் நேரத்தில் விரும்பும்படி இறப்பது தனிமனித உரிமைகளில் ஒன்று என்பது இவர் வாதம்.  சரி இதில் டாக்டர் எங்கிருந்து வருகிறார்.? உயிரை போக்கிகொள்ள வேதனை தராத விஷ ஊசி போட்டுகொள்ள ஒரு டாக்டரின் மருந்து சீட்டு வேண்டும். அதற்காக தான் அவருக்கு பீஸ். நல்ல உடல் நிலையில் இருப்பவருக்கு அத்தகைய விஷமருந்துக்கு  டாக்டர் அனுமதி தரலாமா?. இது இன்னும் ஸ்விஸ்  சட்டம் மறுக்காத விஷயம். என்கிறார் லூட்விக்.

 ஸ்விஸ் நாட்டு சட்டங்களின் படி  தன் சொந்த நலனுக்காக ஒரு தற்கொலையை மறைத்தால் குற்றம். ஆனால் கெளரமாக இறக்க விரும்பும் ஒருவருக்கு விஷ மருந்து கொடுத்து இறக்க உதவிசெய்தால் அது குற்றமாக கருத படமாட்டாது.
 ” நாங்கள் செய்வதில் சொந்த நலனோ அல்லது நிகழந்ததை மறைப்பதோ இல்லை.  உருப்பினர் விரும்புவதைச் செய்கிறோம்  அதனால் சட்டபடி  இதில் எந்த தவறும் இல்லை” என்கிறார்.

ஆனால் இவரின் இந்த அமைப்பை கண்டனம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இந்த மனிதனினால் ஸ்விஸ் நாட்டின் பெருமை குறைகிறது. தற்கொலை செய்யதுகொள்ளவிரும்புவர்களின் சொர்க்கமாக ஸ்விஸ் மாறுவதை  நாங்கள் விரும்பவில்லை என்கிறார்கள் இவர்கள்

 தற்கொலை செய்துகொள்வது  தடைசெய்யபட்டிருக்கும் இந்தியா போன்ற நாடுகளிலிருப்போருக்கு இது நல்ல வாய்ப்பாகிடாதா? மேலும் இம்மாதிரி வசதிகள்  அதிகமான தற்கொலை முயற்சியை ஊக்குவித்துவிடாதா?
இல்லை என்கிறார் லூட்விக்.” இந்திய சட்டங்கள் பிரிட்டிஷாரால்  இந்திய வாழ்க்கைமுறைகளை  நெறிகளை பின்பற்றாமல் இயற்றபட்டவை. இந்திய வேதங்களில் ஒரு மனிதன் தன் குடும்ப பொறுப்புகளை முடித்தவுடன் உணவு நீர் இவற்றை துறந்து  நீண்ட பயணம் செய்து உயிர் துறக்கும் உரிமை தரபட்டிருக்கிறது  இந்திய ஜெயின் சமூகம் இதை அனுமதிப்பதோடு  கெளரவமாகவும் கருதுகிறதே என்கிறார்.  மேலும் இந்த அமைப்பினால் தற்கொலைகள் பெறுகாது  ஒவ்வொரு வெற்றிகரமான தற்கொலைக்கும் பின்னால் 49 தோற்ற முயற்சிகள் இருக்கிறது. மேலும் எங்களிடம் விரும்பி வருவர்களை மறுநாள் காலையில் நாங்கள் கொன்று விடிவதில்லை. 3 கட்ட ஆலோனைகள் வழங்க படுகிறது, மனம் மாற, வாழும் வழிக்கான வெளியேரும் கதவுகள் திறந்தே இருக்கும். அந்த பச்சை விளக்கு காட்டப்படும் கட்டத்தில் பலர் மனம் மாறியவர்கள் பலர். இருக்கிறார்கள்.””
 இந்தியாவில் சட்டம் என்ன சொல்லுகிறது.?
தற்கொலை மரணங்களில் பல வகைகள். உணர்ச்சி வசப்பட்டு உயிர் போக்கிக்  கொள்வது,  உடல் உபாதைகள் பொறுக்காமல் உயிரைபோக்கிகொள்வது, டாக்டரின் உதவியோடு கருணைக்கொலை செய்ய வேண்டுவது எல்லாம் இந்தியாவில் குற்றம்.  உடலில் உயிர் மட்டும் தங்கி மற்றவை செயலிழந்த கட்டத்தில் கூட கருணைக் கொலையை கூட கோர்ட் அனுமதியில்லாமல் டாக்டர்கள் செய்ய முடியாது.  1994ல்  தற்கொலை முயற்சி  என்ற குற்றவியல் சட்டமே சட்டவிரோதமானது என  உச்ச நீதி மன்றம் ஒரு அதிரடி தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால் 1996ல் மற்றொரு  தீர்ப்பில் “வாழும் உரிமைகள் என்பதில் சுய மரணத்தை வரவழைத்துகொள்வது அடங்காது” என்றும் 1994 தீர்ப்பு தவறு என்றும் சொல்லபட்டது. கருணைக்கொலைகளுக்கு அனுமதிக்க அரசின் சட்டம் தேவை என்று சொன்னது இந்த தீர்ப்பு. இதுவரை  மரணம் அடையமுடியாமல் தவித்து கொண்டிருக்கும் உடல்நிலையை காரணம் காட்டி உறவினர்கள் கருணைக்கொலைக்கு அனுமதிகோரி 15  வழக்குகள் தொடரபட்டிருக்கின்றன. எதற்கும் அனுமதி தரப்படவில்லை.  இது நாடுதழுவிய அளவில் விவாதிக்க பட வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்பதால் சமீபத்தில் உச்சநீதி மன்றம்  மாநில அரசுகளின் ஆலோசனைகளை கேட்டிருக்கிறது
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? 





______________________________________________________
கருணைக்கொலை தவறில்லை: சிவசங்கரி
கருணைக்கொலை என்ற வார்த்தையே புதிதாக இருந்த 1980-களில் கருணைக்கொலைஎன்ற நாவலை எழுதியவர் எழுத்தாளர் சிவசங்கரி. நாவல் வெளிவந்து 30 ஆண்டுகள் ஆகியும் கருணைக்கொலை குறித்த விவாதங்கள் தொடர்கதையாகவே இருக்கின்றன . “கருணைக்கொலை என்பது சட்டத்தால் மட்டும் முடிவு செய்யப்படக்கூடியது அல்ல. அது உணர்வுப்பூர்வமானது. அது தற்கொலையின் இன்னொரு வடிவம் என்று மத்திய அரசு சொல்வதும் ஏற்றுக் கொள்ளத்தக்கது. அதே சமயம், நோயின் இறுதி நிலையில் இருக்கிற ஒருவர், அதன் வலியை தாங்க முடியாமல் கருணைக்கொலை முடிவை எடுப்பதில் தவறில்லை.
நான் வாழ்ந்தது போதும், என்னால் இந்த வேதனைப் பொருத்துக்கொள்ள முடியவில்லை என்று கதறுகிறவரை, ‘நீ வாழ்ந்துதான் ஆக வேண்டும்என்று நிர்பந்திப்பது நியாயமில்லை. எனவே இதுபோன்ற வழக்குகளில் நான் கருணைக்கொலையை ஆமோதிக்கிறேன்என்கிறார் சிவசங்கரி.
 _______________________________________________________________________________

7 கருணைக் கொலையை அரங்கேற்றிய மருத்துவர்


பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மருத்துவர் ஒருவர் 7 நபர்களை கருணைக் கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
கருணைக் கொலை என்பது பிரான்ஸ் நாட்டில் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாகும், இதற்கு அந்நாட்டு ஜனாதிபதி பிரான்சிஸ்கோ ஹோலண்டேவும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இருப்பினும், மிகவும் தீவிரமான கட்டத்தில் நடைபிணமாய் வாழும் ஒரு சிலரை, மருத்துவர்கள் சேர்ந்து ஆலோசித்து கருணைக்கொலை செய்யலாம்.
இந்நிலையில், மருத்துவர் நிக்கோலஸ் என்பவர், தன்னுடைய நோயாளிகளில் 7 பேரை கருணைக்கொலை செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில், கருணைக்கொலை செய்யப்பட்ட குடும்ப நபர்கள், இந்த மருத்துவர் செய்தது எங்களுக்கு பெரிய உதவி என்றும் அவரை கைது செய்து சிறையில் அடைக்க கூடாது எனவும் சாட்சி கூறியுள்ளனர்.
இதனால் டாக்டரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது







14/8/14

சத்தமில்லாமல் ஒரு சாதனை



இமயமலையின் மடியில் திரிகூட மலைச்சரிவிவில் 5200 அடி உயரத்தில் ஜம்முவிலிருந்து 50 கீமீ தொலைவில் இருக்கிறது வைஷ்ணோதேவி கோவில். ஆண்டுக்கு  50 லட்சம் பக்கதர்களை ஈர்க்கும் இந்த கோவிலுக்கு   செல்ல ரயில் வசதி கடந்த மாதம் தான் துவக்க பட்டிருக்கிறது.  அருகில் இருக்கும் கத்ரா  என்ற நகரத்தின் ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். பிரதமர் திறந்துவைக்கும் அளவுக்கு இந்த கிராம ஸ்டேஷனுக்கு என்ன முக்கியத்துவம்.?

 ஜம்மூ காஷமீர பகுதிகளில் ரயில் பாதைகள் என்பது நாட்டின் விடுதலைக்கு முன்பிருந்தே பேசபட்டக்கொண்டிருக்கும் ஒரு விஷயம். ஆனால் நிதி நிலைமை,அரசியல், தீவரவாதிகள் அதீதமானபனி, குளிர் போன்ற பல பிரச்னைகளினால் எந்த முன்னேற்றமும் காணமலிருந்தது.   கடந்த சில ஆண்டுகளாக மிக அமைதியாக  கடும் சவாலான இந்த பணிகளை, உலக சாதனைகளை படைக்கும்  அளவில் செய்து கொண்டிருக்கிறது இந்திய ரயில்வேயின் பொறியியல் துறை. ஜம்முவிலிருந்து கத்ராவின் அருகிலுள்ள  ராணுவ கேந்திர
மான உதம்பூர் என்ற நகர் வரை சில ஆண்டுகளுக்கு முன்னரே ரயில் பாதைகள் அமைக்கபட்டுவிட்டாலும் அங்கிருந்து கத்ரா வரையான் 26 கீமி  தூர பாதை போட 4 ஆண்டுகளாகின.  காரணம் இந்த இடைப்பட்ட தூரத்திலிருக்கும் மலைகளும் கணவாய்களும்.  7 பெரிய, 29 சிறிய பாலங்கள் ஒரு 11 கீமி தூரத்திற்கு ஒரேகுகைப்பாதை (டனல்) 22 வளைவுகள், மலைகளுக்கிடையே குறுகிய இடைவெளி (ஒரு இடத்தில் 25 அடிகள் மட்டுமே)  என சவால்கள் நிறைந்த பணி இது. நிச்சியம் முடியாது என வெளிநாட்டு நிற்வனங்கள் கூட ஏற்க தயங்கிய பணி இது.  மொத்த செலவு இந்த 26 கீமிக்கு 1130 கோடி ரூபாய்கள்.

 இந்திய ரயிவேயின் சவாலான பணி இதோடு நிற்கவில்லை. பாராமுல்லா என்ற ஜம்மூவின் மற்றொரு எல்லை வரை  தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.  இந்த பாதையில்   இரண்டு உயர்ந்த மலைகளுக்கு இடையே சென்னாப் என்ற நதி ஒடுகிறது 4000 அடி அகலத்தில் இருக்கும் இந்த நதியின் இருப்புறமும் இருக்கும் இரண்டு மலைகளை இணைத்து ஒரு பாலம் அமைக்கிறார்கள். நதியின் நீர் மட்டத்திலிருந்து  1200 அடி உயரத்தில் நிறுவபட்டுக்கொண்டிருக்கும் இந்த பாலம் இரண்டு மலைகளையும்  இணைக்கும் ஒரு பிரமாண்டமான வில் போன்ற அமைப்பின் மீது  ரயில் பாதை அமையப்போகிறது. முடிந்த பின் இதுதான் உலகின் மிக உயரமான இடத்தில் இருக்கும் ரயில் பாதையாக இருக்கும். பாலம் துவங்கும் இடத்திலும் முடியும் இடத்திலும் மலையை குடைந்த குகை பாதைகள்.

 குதுப்மினாரை விட 5 மடங்கும், பாரிஸ் ஈஃபில் டவரைவிடவும் அதிக உயரத்தில் இருக்கும். இந்த இடத்தில் பாலமும் அதில் ரயில் பயணமும் பாதுகாப்பாக இருக்குமா என்பது குறித்து  ஐஐடி, ராணுவ ஆராய்ச்சிமையங்கள், தனியார் நிறுவனங்கள் 6 ஆண்டுகள் ஆராய்ந்திருக்கிறார்கள். அந்த கணவாயில் காற்றுகாலங்களில் பயங்கரமான காற்று வீசும். அதனால் காற்றின் வேகத்தை கண்காணிக்கும் கம்யூட்டர்கள் கருவிகள் பொருத்தபட்டிருக்கும் இந்த பாலம் அம்மாதிரி சமயங்களில் ரயிலை செல்ல அனுமதிக்காது.  26000 டன் ஸ்டீல் பயன்படுத்தி கட்டபடும் இந்த பாலத்திற்கு எளிதில் பெயிண்ட் அடிக்கமுடியாதால் 35 வருடத்திற்கு நிற்கும் ஒரு புதுவகை பெயிண்டை பயன்படுத்தபோகிறார்கள்.
உலக பொறியிற்சாதனைகளைல் ஒன்றாக நிறக் போகிற இந்த பாலம் முழுக்கமுழுக்க இந்திய தொழிநுட்பத்தினால் ஆனது.  ஆலோசனைகள் அன்னிய நிறுவனங்களிடமிருந்து பெறபட்டாலும் கட்டுமானம், நிர்வாகம் கொங்கன் ரெயில்வேயினுடையது. பல மலைகள குடைந்து ரயில் பாதைகள் அமைத்த அனுபவம் மிக்கவர்கள்.
பல ஆயிரம்கோடிகள் செலவில் உருவாகும் இந்த பாலம் எல்லைபகுதியில், தீவரவாதிஅளின் அச்சுறுத்தல்கள் நிறைந்த பகுதியில் இருப்பாதால் தொடர்ந்து  இந்திய ராணுவத்தின் கண்காணிப்பில் இருக்கும்.



அடுத்த முறை ரயில் பயணத்தின் போது வசதி குறைவுகள் பிரச்சனைகளை பற்றி விமர்சிக்கும் முன் ஒரு கணம்  நமது ரயில்வேயின் இந்த சாதனையையும், கடுமையாக உழைக்கும் பொரியிலாளர்களையும்  நினைத்து பாருங்கள்  நன்றி   சொல்லுங்கள்.

10/08/14 கல்கியிலிருந்து...


1/7/14

ஆச்சரியமான தாத்தா தான் !



அடுத்த மாதம் உங்களுடைய 90வது பிறந்தநாளுக்கு என்ன பரிசு வேண்டும்?. சொல்லுங்கள் என  கிழவரின் மகன், மகள், பேரக்குழந்தைகள் கொண்ட அந்த சந்தோஷமான பெரிய குடும்பத்தினர் கேட்டனர். ”பரிசெல்லாம் வேண்டாம். அன்று எல்லோரும் வந்துவிடுங்கள் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது” என்றார் தாத்தா.

அவர் 1989லிருந்து 93 வரை  அமெரிக்காவின் 41வது ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் புஷ். பின்னாளில்இவரது மகன் புஷ்ஷும் ஜனாதிபதியாக இருந்த்தால்  இவரை சீனியர் புஷ் என பத்திரிகைகள் அழைக்கின்றன.  குடும்பத்தினர் சென்ற பின் புஷ் தன் மனைவியிடம் சொன்னது “ அன்று  நான் பாரசூட்டின் மூலம் குதிக்க விரும்புகிறேன். நண்பர்களிடம் சொல்லி ஏற்பாடுகள் செய்  விஷயம் ரகசியமாக இருக்கட்டும் என்றார். .
அவருக்கு  உயர் ரத்த அழுத்தம், நெஞ்சில் சளிகட்டுதல்,சர்க்கரை போன்ற  தொல்லைகள் இருப்பதால் இது ஆபத்தான முயற்சி வேண்டாம் என்றார்கள் டாக்டர்கள். முன்னாள் ஜனாதிபதி இத்தகைய செயல்களில் ஈடுபடுவது  அவரது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பிரச்சனைகளை எழுப்பும் என ராணுவ அதிகாரிகள் சொன்னார்கள். இம்மாதிரி சாகஸ செயல்களுக்கு அவருக்கு இன்ஷ்யூரன்ஸ் இல்லை என்றார்கள் அவரது இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகாரர்கள்.
புஷ் தாத்தா எதைப்பற்றியும் கவலைப்படாமல் நண்பர்களின் உதவியுடன் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்., அவரின் உடல் நிலை, வானிலை  போன்றவற்றால் எந்த நிமிடத்திலும் திட்டம் கைவிடப்படலாம் என்பதால். நிகழ்ச்சி பொதுமக்களுக்கு அறிவிக்க படவில்லை.  ஆனாலும் ஒரு சிலருக்கே தெரிந்த விஷயம் மெல்ல கசிந்துவிட்டது. புஷ் வேறு தனது டிவிட்டரில் இங்கு  பருவ நிலை இதமாக இருக்கிறது. பாராசூட்டில் குதிக்கலாம் போலிருக்கிறது என  கோடிகாட்டியிருந்தார்.
 பிறந்த நாள் அன்று காலை  அவரது விடுமுறைகால வீட்டு தோட்டத்தில் 6 மகன், மகள், 14 பேர குழந்தைகள் அவர்களின் குழந்தைகள் ,உறவினர்கள், நண்பர்கள், என 200பேர்  கேக் வெட்டி ஹாப்பி பெர்த்டே பாடிய பின்னர். காத்திருந்த ஹெலிகாப்டரில்  அவரது சக்கர நாற்காலியிலிருந்து ஏற்றபட்டார்.  ஆம்!. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் நடமாடுவது சக்கர நாற்காலியில் தான்.  தக்க உடைய அணிந்து கொண்டு ஹெலிகாப்டர் 6000 அடி உயரத்தை தாண்டியதும் பாராசூட்டுடன் குதிக்க தயாராக இருந்தார் புஷ்

  செய்தி பேஸ்புக், டிவிட்டர் மூலம்  பரவியிருந்ததால், திட்டமிட்டபடி இறங்க வேண்டிய இடமான உள்ளூர் சர்ச்சின் பின்னாலுள்ள புல் வெளியில்   ஆவலுடன் மக்கள் கூட்டம்.  வெள்ளை ஆரஞ்சு நிற பாரசூட் வானில் விரிய  ஆரம்பித்ததிலுருந்து இறங்கும் வரை  நகர மக்களின் ஆராவாரமும் கைதட்டலும் தொடர்ந்தது. 
பத்திரமாக தரையிறங்கினார் புஷ். அவரது முழங்காலுக்கு கீழே கால்கள் செயல்படுவதில்லை இல்லையாதாலால், அவரால் தறையிறாங்கியவுடன் பாரசூட்டுடன் ஓடவோ அல்லது நடக்கவோ முடியாமல் முன் புறமாக விழுந்து பாராசூட்டால் சில நிமிடங்கள் இழுத்து செல்லபட்டார்.  இந்த பயணத்தை ஏற்பாடு செய்திருந்த அமெரிக்க விமான படையினர் பாதுகாப்புகாக உடன் பாராசூட்டில் பறந்து வந்தவர்கள் உடனே பாய்ந்து உதவிசெய்து அவரை சக்கர நாற்காலியில் உட்கார வைத்துவிட்டனர்.  ”ஆச்சரியமான தாத்தாதான். ஆனால் எனக்கு  பயமாக இருந்ததால் கண்களை மூடி.க்கொண்டுவிட்டேன்” என்றார் சிறுவயது கொள்ளு பேத்திகளில் ஒருவர்.
”அப்பா உங்கள் சாதனைகளில் இது முக்கியமானது. நான் கூட இதுபோல செய்யப்போகிறேன்” என்றார். மகன் புஷ். (இதை கிண்டலடித்து அமெரிக்காவில் நிறைய ஜோக்குகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன)   எல்லாவற்றையும் ஒரு யூகேஜி குழந்தையின் சிரிப்போடு ஏற்றுகொண்ட புஷ் பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்துவிட்டார்.
பிறந்த நாளுக்கு ஏன் இந்த பாரச்சூட் குதிப்பு?.  ஜார்ஜ் புஷ் இரண்டாவது உலகப்போரில் பணியாற்றிய அதிகாரி. ஒரு கட்டத்தில்  சுட்டுவிழ்த்தபட்ட விமானத்திலிருந்து பாராசூட்டின் மூலம் குதித்து  வினாடி நேரத்தில் உயிர்தப்பியவர்.  டென்னிஸ் கோல்ப், பேஸ்கட்பால் என எல்லாவிளையாட்டிலும் ஆர்வம் கொண்டவர். வெள்ளை மாளிகையில் வசித்தபோது ஜனாதிபதி ஜாகிங்க்காக தனி பாதை அமைத்தவர்,தனது 80 பிறந்தாநாளின் போதும் விமானத்திலிருந்து குதித்தவர். மனத்தளவில் நான் ஃபிட்டாக இருக்கிறேன் என்பதை சோதித்துகொள்ளவும், காட்ட விரும்பினேன் என்கிறார்.

 ”இதை உங்கள் வாழ்நாள் சாதனையாக பதிவு செய்திருக்கிறீர்கள்” என சொன்ன ஒரு நண்பரிடம், “ வாழ்க்கையை அதற்குள் முடித்துவிடாதீர்கள்.   95 வது பிறந்தநாளுக்கு 7000 அடியிலிருந்து குதிக்க போகிறார்” என்று சொன்னவர்  புஷ்ஷின் மனைவி பார்பாரா புஷ்
ரமணன்
(கல்கி 6/7/14)





27/6/14

உயர்ந்த மனிதன்



நாஸாவால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப பட்ட விண்கலம் “க்யூராஸிட்டி” 2012 தரையிறங்கியிருந்தாலும் செவ்வாயில் 687பூமி நாட்கள் தான் செவ்வாயில் ஒரு வருடம் என்பதால்  இப்போதுதான்   அது இறங்கிய  முதலாண்டு கொண்டாடபட்டது.  செல்போன்களில் தன்னைத்தானே படமெடுத்துக்கொண்டு பேஸ்புக்கில் போட்டுகொள்ளும்  செல்பிக்கள் போல க்யூராஸிட்டியும்   அந்த ஆண்டுவிழா  நாளில் தன்னை படமெடுத்து  நாசாவிற்கு அனுப்பியிருக்கும் செய்தியைப் படித்த போது 2012ல் அது செவ்வாயில் தரையிறங்கிய நாளில்  நிகழந்தது நினைவில் நிழலாடியது. அன்று எனது சுவடுகளில் பதிந்தது இது







உயர்ந்த மனிதன்
இன்று(11/08/12) மதியம் 1.மணிக்கு ஒரு போன் வந்தது. இஸ் மிஸ்டர் ரமணன் தேர்?
என்பதை தொடர்ந்து  ஐ ஆம் சிங் காலிங் ஃபிரம் யூ எஸ் என சொன்னதை கேட்ட என் மனைவி மீரா  போனை கொடுக்க    சிங்? ஃபரம் வேர் என ? கேட்டு குழம்பிய நான்  அவர் தன்பெயரைச்சொன்னவுடன் நேற்றிரவு (10/11/12) அனுப்பிய ஈ மெயில்  பளிச்சென்று நினைவுக்கு வர மகிழ்ச்சியில் பதறிப் போனேன் பல ஆண்டுகள் ஆராய்ச்சிகளுக்கு பின்னர் பல ஆயிரம் கோடி  செலவில் செவ்வாய் கிரகத்திற்கு   அனுப்பட்ட க்யூராரிஸிட்டி  விண்வெளிகலம் 8 மாத பயணத்திற்கு (57 கோடி கீமீ) பின்னர் பத்திரமா  செவ்வாய் கிரகத்தில் தரையிறங்க ஒரு டிசைனை வடிவமைத்து செய்லாக்கிய ஸ்பேஸ் ஸைண்டிஸ்ட் டாகடர் குருகிருபால் சிங் தான் அவர். 

செவ்வாய் கிரக விண்கல செய்திகளை கவனித்து வந்த போது ஒரேஒரு வரியில் இவரது பெயரை பார்த்தேன். இந்தியப் பெயராக இருக்கிறதே இவரைப்பற்றி எழுதலாமே (பத்திரிகையாளன் புத்தி) என விபரங்கள் தேட ஆரம்பித்தேன், கூகுள், யாகூ, ஃபேஸ்புக் எதிலும் சிக்கவில்லை.நாஸா வெப் ஸைட்டிலும் மேய்ந்து பார்த்தேன். ஒன்றும் தேறாததால் நாஸா பிரஸ் யூனிட்டுக்கு ஒரு மெயில் அனுப்பினேன்.. அவர்களும் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. மீண்டும் அலசி நாஸாவின் தலமை விஞ்ஞானிகளிண் டைரக்டரியில் இருந்த் சிங் பெயர்களை வடிகட்டி ஒருவருக்கு  நேற்றிரவு  ஒரு மெயில் அனுப்பினேன். அதற்கு தான் இன்று அவருடைய போன். நான் அனுப்பிய ஈ மெயில் உண்மையானதுதான?- ஸ்பாம் இல்லையே?  ன்பதை உறுதி செய்துகொள்வதற்காக போன்செய்ததாக சொன்னவர் மிக அன்புடன் பேசி கொண்டிருந்தார். எப்படி என்னால் அந்த ஈ மெயில் ஐடி  தொடர்பு கொள் முடிந்தது (அது கிடைத்தது தனிக்கதை) என ஆச்சரியபட்டார். அவர் பெயர் வந்திருக்கும் செய்தியை இந்துவிலிருந்து  படித்து காட்டியபோது சந்தோஷப்பட்டார். 23 வருடங்கள் நாஸாவில் வேலை செய்வதையும், பெற்றோர்கள் டெல்லியில் இருப்பதையும் சொன்னார்.  நான் கேட்ட விபரங்களையும் அவர் படத்தையும்  உடனே மெயிலில் அனுப்பியும் வைத்தார். இதன் கிழே அந்த மெயிலையும் பதிவு செய்திருக்கிறேன்.
இவரது படத்தையும், விபரங்களையும் நேரடியாக  முதலில் பெறறிருக்கும்  ஒரே இந்திய் பத்திரிகையாளர் நான்தான். எனபதைவிட  மிக சந்தோஷமான விஷயம்  மிகப்பெரிய பொறுப்பிலிருக்கும்  இந்த மனிதரை ஒரு சக இந்தியனின், பத்திரிகையாளானை மதித்து மிக எளிமையாக அன்புடன் பேசி உதவிய ஒரு உயர்ந்த மனிதனை இன்று தெரிந்து  கொண்டது தான்.  
ரமணன்
 ------------------------------------------------------------------------------------------------------------
Inbox
gurkirpal singh  brensim@prodigy.net
14:14 (8 hours ago) to me
Dear Ramanan:
I had the pleasure of speaking with you a few minutes ago. Thank you for the very kind words. I am sending the material that you had requested - brief bio, a picture (attached JPEG), and a brief description of my contributions to the Curiosity mission. I am hoping that this will serve your purpose. Let me know if I missed anything. Please note that additional information regarding the mission may be obtained from the Landing Press Kit at http://mars.jpl.nasa.gov/msl/news/newsroom.  I would be grateful if you could acknowledge this e-mail.
Best regards,
Gurkirpal
 Bio
========================================================================

Singh, Gurkirpal (3443) 




Dear Ramanan:

Thank you for your acknowledgement, and diligence in putting the substance on paper. You can't imagine the satisfaction I received by noting the appeal the magazine has among the youth. I hope that the news of this achievement would inspire someone somewhere just as it inspired me several years go when I was a youth of impressionable age. This has been my aim all along when I first decided to respond to your request. I very sincerely appreciate your efforts in doing the necessary legwork to probe the connection further . As you might surmise, I know not a word of Tamil, but I would be sure to have my Tamil friends here help me digest the attachments you were kind enough to send. Thanks again.

Regards,
Gurkirpal 


 புதிய தலைமுறையில் வெளியான “அந்த 7 நிமிடங்கள்” கட்டுரையை இங்கே கிளிக் செய்தால் பார்க்கலாம்
http://ramananvsv.blogspot.in/2012/08/7.html


13/10/13

ரோபோக்கள் புத்திசாலிகள்

நிஜமாகவே  ஒரு சிட்டியை சிருஷ்டிக்கிறார் இவர் 

எந்திரன் படத்தில் வந்த “சிட்டி”யை நினைவிருக்கிறதா?  எழுத்தாளார் சுஜாதாவின் கற்பனையில் பிறந்த, இயக்குனர் சங்கரின் கைவண்ணத்தில் எழுந்த அந்த சிந்திக்கும் எந்திரனை நிஜமாகவே உருவாக்கியிருக்கிறார்  ஒரு விஞ்ஞானி.   திரு. ஜெகன் நாதன் சாரங்கபாணி.  தமிழ் நாட்டுகாரர். அமெரிக்க மிஸ்சோரி பல்கலை கழகத்தில்  நீண்ட நாட்களாக ஆராய்ச்சி பணியிலிருப்பவர்.  ரோபோட்க்களை வடிவமைப்பதிலும், அதை மேம்படுத்துவதிலும் உலகின் பல இடங்களில் ஆராய்ச்சிகள் நடைபெற்றுகொண்டிருந்தாலும்  முன்னணியில் இருப்பது இவருடையது தான்.  சொன்னதை செய்வது ரோபோட். சொல்லாமலேயே மனிதனை போல  பணியிலிருக்கும்  போதே தன்னிச்சையாக சிந்தித்து  ரோபோக்களை செயல்பட வைக்க முடியமா? என்பது தான் இவரது  ஆராய்ச்சி.  நீண்ட கால தொடர் முயற்சிகளுக்கு பின்னர் இவரது தலமையில் குழுவினர் உருவாக்கியிருப்பது ரோபோக்களுக்கான மூளை.. மனித மூளையில் இருக்கும் கட்டுபாட்டுகேந்திரத்தைபோல வடிவமைக்கப்பட்ட ஒரு குட்டி கம்யூட்டர்முளை பொருத்த பட்ட  ரோபோட் மனிதனைபோலவே சிந்தித்து, தேவையானதை புரிந்து  கொண்டு வேலைகளை செய்யும். இவரது  தலமையில் இயங்கும் ஒரு 14 ரோபோடிக்ஸ் விஞ்ஞானிகளின் குழு இதை சாதித்திருக்கிறது. இந்த வகை ரோபோட்க்களுக்கு  செய்ய வேண்டிய பணிகளையும் இலக்குகளையும் சொல்லிவிட்டால் அதைபுரிந்து  கொண்டு தேவையானதை செய்துகொள்ளும். ஒரு பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும்    பத்து புல்டோசர்களை   கட்டளைகளின் படி இயக்கி கட்டுபடுத்துகின்ற தலைவன் ரோபோட் அவைகளில் ஒன்று சரியாக இயங்கவில்லை என்றால்  உடனே அதை பழுது பார்க்கும் பணியிலும் ஈடுபடும். அல்லது மாற்று ஏற்பாடுகளுக்கு கட்டளைகள் கொடுக்கும். தலமைரோட்டுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் உடனே அடுத்த ரோபோ தலமைப்பொறுப்பை ஏற்கும்.  

இதன் இந்த அலசும், சிந்திக்கும் திறனைகள படிப்படியாக உயர்த்துவதற்கான ஆராய்சிகளை தொடர்ந்து கொண்டிருக்கும்  ஜகன்நாதன் வரும்காலங்களில் ரோபோட்டால் மனிதனைப்போல சிரிக்க முடியும், கோப பட முடியும்,செயற்கையாக அமைக்கபட்ட பைபர் முகத்தில்  உணர்வுகளைகூட காட்ட முடியும் என்கிறார். சொல்லாதைவைகளையும் புரிந்து கொண்டு செயலாற்றும் ரோபோட்களை உருவாக்குவதுதான் எங்கள் ஆராய்ச்சியின் இலக்கு என்று சொல்லும் ஜெகன்நாதன் சாரங்கபாணி அமெரிக்கா வாழ் தமிழர். படிப்பில் புலி. பள்ளிக்காலத்திலிருந்தே எல்லா  வகுப்புகளிலும் முதல் மாணவர். தொடர்ந்து மெடல்களும் பரிசுகளும் பெற்ற இவர் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் 3  தங்க மெடல்களூடன்  பி.ஈ படிப்பு முடித்த பின் அமெரிக்காவிற்கு படிக்க சென்றார்.  அங்கும் படிப்பில் பல வெற்றிசாதனைகளை படைத்தவர். முதல் டாக்டரேட் பெற்றவுடேனேயே முழுநேர ஆராய்ச்சி பணிகளை விரும்பி ஏற்ற இவர்  கம்ப்யூட்டர் சயின்சை தொடர்ந்து ரோபோட்டிக்ஸ்ஸில் ஆர்வம் அதிகமாகி புதிய படைப்புகளை உருவாக்கி  அதற்கான காப்புரிமைகள் பெற ஆரம்பித்தார்.
இப்படி இதுவரை பெற்றிருப்பது 20 உரிமைகள். போயிங் போன்ற பல பெரிய நிறுவனங்களிலும், அமெரிக்க ராணுவ துறையில் அவைகள் பயன்படுத்தபடுகின்றன. 109 ஆராய்சிகட்டுரைகளயும், பல புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.  அமெரிக்க பல்கலைகழங்களில் ஆராய்ச்சி பணிகளை தொடரும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேவையான நிதி ஆதாரத்தை அதன் துறை தலைவர்களுக்குதான் அரசாங்கமும், தனியார் நிறுவனங்களும் வழங்கும்.  அந்த வகையில் இவர் பொறுப்பிலிருக்கும் நிதி 13 மில்லியன் டாலர்கள். இவரிடம் ஆராய்ச்சி மாணவராக இருப்பதே மிகப் பெரிய கெளவரமாக கருதப்படுவதால் உலகின் பலநாடுகளின் ஆராய்ச்சி மாணவர்கள் சேர காத்திருக்கின்றனர்.  இந்த துறையில் சாதிக்க இன்னும் பல வாய்ப்புகள் இருக்கின்றன வாருங்கள் என ஆர்வமுள்ளவர்களை அழைக்கிறார்.


சிந்திக்கும், சிரிக்கும், கோப்படும் ரோபோட்க்கள் காதலிக்குமா?  ”நாங்கள் படைக்கும் ரோபோக்கள் புத்திசாலிகள்” என்கிறார் ஜகன்நாதன்.


கல்கி 30/10/13

26/9/13

செவ்வாயில் ஒரு சின்ன வீடு


”உங்கள் ஊரில் வீட்டுமனைகளின் விலை ஏறிவிட்தா?  வாங்க முடியாமல் போய்விட்டதே என வருந்துகிறீர்களா? கவலையை விடுங்கள்  செவ்வாய் கிரகத்தில் ஒரு 10 ஏக்கர் வாங்கிப்போடுங்கள். ஒரு ஏக்கர் 69 டாலர்கள் தான் இன்றே  பதிவு செய்யுங்கள்”  என்று அமெரிக்காவின் பல  பத்திரிகைகளிலும், இணைய தளங்களிலும் விளம்பரங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே இத்தகைய விளம்பரங்கள் பற்றி பேசபட்டாலும் இப்போது அமெரிக்கா தனது செவ்வாய் கிரக பயண ஆராய்ச்சியில் வெற்றி பெற்று ”க்யூராஸிட்டி” கலத்தை அங்கு வெற்றிகரமாக தரையிறக்கியபின்னர் இந்த  மாதிரி விளம்பரங்கள் அதிகரித்துவிட்டன.
வேற்று கிரகங்களின் நிலம் யாருக்கு சொந்தம்? முயற்சி செய்து முதலில் இறங்கிய நாட்டிற்கா? அல்லது ஆராயச்சி செய்து கொண்டிருந்த அத்தனை நாடுகளுக்குமா?  1967 லியே ஐக்கிய நாடுகள் சபை இதற்காக ஒருஒப்பந்தத்தை தயாரித்திருக்கிறது. 102 நாடுகள் கையெழுத்திடிருக்கும் இந்த சாஸனத்தின் படி வேற்று கிரகங்களின் நிலங்கள் உலக மனித குலத்திற்கே சொந்தம் எந்த ஒரு தனி நாடும் அது அந்த கிரக ஆராயச்சியில் வெற்றிகண்டு முன்னணியில் இருந்தாலும் கூட உரிமை கொண்டாட முடியாது. அப்படியானால் எப்படி இவர்கள் விற்கிறார்கள்?  இந்த வியாபாரத்தை அட்டகாசமான விளமபரங்களுடன் செய்யும்  பை மார்ஸ். காம்(buy mars.com) இந்த ஒப்பந்தம் நாடுகளை தான் கட்டுபடுத்தும், எங்களைபோன்ற நிறுவனங்களை இல்லை என்கிறது. இது தான் எங்கள் தொழில் என்று அமெரிக்க சட்டங்களின் பதிவு செய்திருக்கிறோம். இதுவரை எவரும் எங்களை தடுக்க வில்லை என்று சொல்லிக்கொள்கிறது. இவர்கள்  செவ்வாய் கிரகத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை விற்று அதை   இந்த மாதிரி விற்பனைகளை பதிவு செய்வதற்காகவே நிறுவியிருக்கும் இன்னொரு நிறுவனத்தில் பதிவு செய்து பத்திரத்தை பிரேம் போட்டு  தருகிறார்கள்  ஸ்டாண்டர்ட், பிரிமியம், டிலெக்ஸ் என்று பேக்கேஜ் கள் வேறு.



ஏற்கனவே இது மாதிரி நிலவில் நிலம் விற்று கொண்டிருந்தவர்கள் இப்போது மீண்டும் மார்கெட்டில் குதித்திருக்கிறார்கள். போலி கம்பெனிகளிடம் ஏமாந்துவிடாதீர்கள் என்று அறிவிப்புகள் வேறு.  இவைகள் சட்டபூர்வமானதில்லை என தெரிந்தும் எப்படியும் எதாவது பலன் பின்னால் இருக்கும் என நம்பும் பல அமெரிக்கர்கள் பணம் கட்டிகொண்டிருக்கிறார்கள்.
இந்த விளம்பரங்களை தொடர்ந்து எழுந்திருக்கும் இன்னொரு பிசினஸ் அலை செவ்வாய்கிரகத்திற்கு பயணம். இன்னும்  அங்கு மனிதனை அனுப்புவதில் முதல் நிலையை கூட எட்டாத இந்த கட்டத்திலேயே  முன் பதிவுகளை துவக்கியிருக்கிறது ஒரு டென்மார்க் நாட்டு  நிறுவனம்  பயணமே இரண்டாண்டு காலம் இருக்கும் இந்த பயணத்தில் முதலில் 4 பேர் அனுப்படுவார்களாம். தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் நான்குபேர் அணிகளாக (இரண்டு பெண் இரண்டு ஆண்) அனுப்புவார்களாம். அங்குபோய் இவர்கள் ஒரு புது உலகத்தை உருவாக்குவார்களாம். அங்கேயே வாழப்போவதால் ஒரு வழி டிக்கெட் தான் வழங்கபோகிறார்களாம். முதல் பயணம் 2023ல் இருக்கும் அதற்கு இப்போதே  முன்பதிவு அடுத்த சில ஆண்டுகளில் தேர்வு செய்யபோகிறார்களாம். இந்த கதைகளை கேட்டு புக் செய்திருப்பவர்களில் இந்தியர்களும் இருக்கிறார்கள்.  நமது ஐஎஸ்ஆர்வோ வின் செவ்வாய் ஆராய்ச்சிகளும் அறிவிப்புகளும் ஒரு காரணம்.
கண்ணில் தெரியும் எவருக்கோ சொந்தமான நிலத்தை மற்றொருவருக்கு விற்கும் நம்மூர் கில்லாடிகளைப்போல கண்ணுக்கே தெரியாத வெற்றுகிரகத்தின் நிலத்தை விற்று கொண்டிருக்கிறார்கள் இந்த சூப்பர் கில்லாடிகள். விரைவில் இவர்களின் எஜெண்ட்கள்  உங்கள் ஊரில் கடைபோட்டாலும் ஆச்சரியமில்லை. ஜாக்கிரதையாக இருங்கள்

ஆதித்தியா (ரமணன்)
கல்கி8/9/13

24/8/12


Singh, Gurkirpal (3443) 
21 Aug (3 days ago)
to me
Dear Ramanan:

Thank you for your acknowledgement, and diligence in putting the substance on paper. You can't imagine the satisfaction I received by noting the appeal the magazine has among the youth. I hope that the news of this achievement would inspire someone somewhere just as it inspired me several years go when I was a youth of impressionable age. This has been my aim all along when I first decided to respond to your request. I very sincerely appreciate your efforts in doing the necessary legwork to probe the connection further . As you might surmise, I know not a word of Tamil, but I would be sure to have my Tamil friends here help me digest the attachments you were kind enough to send. Thanks again.

Regards,
Gurkirpal 

19/8/12


அந்த 7 நிமிடங்கள்..

23/08/12 புதிய தலைமுறை இதழில் எழுதியது


அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் லாஸேஏஞ்சல்நகருக்கு அருகிலிருக்கும்  பாஸடினா(Pasadena) பகுதியிலிருக்கிறது நாஸா (NASA)வின்  செவாய் கிரக ஆராய்ச்சி நிலையம். பூமியிலிருந்து பூமியிலிருந்து 57 கோடி கீமீ தொலைவிலிருக்கும் செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ தேவையான ஆக்ஸிஜன்.தண்ணீர் இருக்கிறதா என்பதை அறிவதற்கான மிகப்பெரிய கனவு திட்டத்துடன் இயங்குகிறது இது. 14000க்கு மேற்பட்டவர்கள் பணியாற்றும் இந்த கூடத்தில் பல இந்தியர்கள் பணியிலிருக்கின்றனர்.. கடந்த 7 ஆண்டுகள் இதற்காக தொடர்ந்து முயற்சிகள், பரிசோதனைகள் செய்யபட்டுவந்தன, முதல் கட்டமாக செவ்வாய் கிரகத்தின் அருகில்  சென்று சுற்றி வந்து தகவல்கள் பெற  விண்வெளிகலங்கள் அனுப்பட்டன. அதன் மூலம் கிடைத்த அடிப்படை தகவல்களின் அடிப்படையில் நேரிடியாக செவ்வாய் கிரகத்தில் ஒரு விண்கலத்தை இறக்கி சோதனைகள் செய்ய முடிவு செய்து அதற்காகவே உருவாக்கபட்டது “கியூரியாஸிட்டி”“ எனற விண்கலம்.   மேற்கூறையில்லாத காரைப்போல் ஒருடன் எடையில் அமைக்கபட்டிருக்கும் இது அதி நவீன வசதிகள் கொண்ட ஒரு குட்டி  நடமாடும் லாபரட்டிரி. செய்வாயின் நில பரப்பில் கிடைக்கும் சாம்பிள்களை அதன் உள்ளேயே சோதனையிட்டு முடிவுகளை பூமியிலுள்ள மிஷின் கண்ட்ரோலுக்கு  உடனுக்கு உடன் அனுப்பும் வசதிகளை கொண்டது. 13 கேமிராக்களுடன் 6 சக்கரங்களுடன் இருக்கும் இது தரையிலிருக்கும் கட்டுபாட்டில் இயங்கும்.  8000 விஞ்ஞானிகள், பொறியாளார்களின் 7 ஆண்டு கடின உழைப்பில் உருவான இதற்கான செலவு 13000கோடி ரூபாய்கள். 2009ம் ஆண்டு இதில் ஒரு சின்ன சிப்பில் (சிம்கார்டுபோன்றது)  விரும்புகிறவர்கள் பெயர்களை அனுப்பினால் பதிவு செய்து அனுப்ப போகிறோம் என்ற இவர்களது அறிவிப்புக்கு வந்தகுவிந்த பெயர்கள் ஒரு கோடிக்கும் மேல்.   செவ்வாய்கிரகம்  சந்திரனைவிட மிக தொலைவிலிருப்பதால் அந்த நீண்ட பயணத்தை தாங்கதேவையான பல வசதிகளுடன் அமைக்கபட்டிருந்த இது கடந்த ஆண்டு இறுதியில் விண்ணில் செலுத்தபட்டது. அதன் 8 மாத பயணத்தை மிக கவனமாக தினசரி கண்காணித்துவந்தனர் கண்ட்ரோல் ரூமிலிருந்த ஸ்பெஷலிஸ்ட்கள். மிக கடுமையாக உழைக்கும் இவர்கள் மீடியாவை கவனமாக தவிர்ப்பவர்கள். பயணம் திட்டமிட்டபடி போய்கொண்டிருப்பதில் சந்தோஷமாகயிருந்தாலும்  அதன்  கடைசி கிளைமாக்ஸான   ஆகஸ்ட் 5 தேதிக்காக காத்திருந்தார்கள். அன்று செவ்வாய் கிரகத்தில் இறங்கி விடும் என்பது கணிக்கபட்டிருந்தாலும், காலையிலிருந்தே அனைவருக்கும் பரபரப்பு.. ஆகஸ்ட் 5 என அச்சிடபட்டிருந்த நீலவண்ண டி ஷர்ட் அணிந்தவர்கள் நிரம்பியிருந்த அந்த அறை   டென்ஷனலில் உறைந்திருந்தது. கியூரியாஸிட்டி செவாய்கிரகத்தை மெல்ல நெருங்கியதை ஸ்கிரினில் பார்த்த்தும்  கைதட்டியவர்களை மிஷின் டைரக்டர் கையை உயர்த்தி அமைதிபடுத்தினார்.   அடுத்து சில நிமிடங்களில்  41 அடி விட்ட பெரிய பாரச்சூட் மெல்ல விரிய அதிலிருக்கும் கியூராஸிட்டி  மிதந்து செவ்வாயின் மண்ணை  தொட்டதும். அந்த அறை சந்தோஷத்தின் உச்சத்தில் அதிர்ந்தது. வாழ்த்துக்கள்  அணைப்புகள் முத்தங்கள் என ஒரே ஆரவாரம். இந்த  இறுதிதரையிரங்கல்தான் திட்டத்தின் முக்கிய கட்டம். ஈர்ப்பு சகதி இல்லாத நிலையில் அது கடினமான ஒரு பாறையில் மோதி நொறுங்கிவிட்டால் இத்தனைபேருடைய கடின உழைப்பும் வினாடியில் விணாகிவிடும் தரையில் உட்கார வைத்திருக்கிறார்கள்.   திட்டமிட்டபடி வெற்றிகரமாக  கலம் தரையிறங்கியதை திரையில் பார்த்ததும் நீர் நிறைந்த கண்களுடன்   “  ” “இப்போது நிம்மதியாகயிருக்கிறது. அந்த கடைசி 7 நிமிடங்கள் பயங்கரமானது’’”  வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாதது. “  என்று சொன்னவர் இந்த தரையிறங்கலை மிக கவனமாக  திட்டமிட்டு தந்த வல்லுனர் குர்கிர்பால்சிங்.(Dr.Gurkirpal Singh)   இவர் ஒரு இந்தியர், என்பதை அறிந்து  நாசாவின் உதவியுடன்  உடனடியாக புதிய தலைமுறைக்காக போனில்  தொடர்பு கொண்ட   பேசிய போது...


.  

இந்த வரலாற்று சாதனை வெற்றியில் உஙகள் பணியும் முக்கியமானது என்று அறிகிறோம். மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.  உங்களது பூர்வீகம்,  இளமைக்கால  இந்திய வாழ்க்கை பற்றி சொல்லுங்கள்.
 லூதியானவில் பிறந்தவன் நான். 1976லில் நான் பள்ளி இறுதியாண்டிலிருந்தபோது முதன் முதலில் நாசா செவ்வாய் கிரக ஆராய்ச்சி  பணிகளை துவக்கியிருந்தது.வைகிங் என்ற குட்டி விண்கலம் ஏவப்பட்டிருந்தது. அந்த செய்திகளால் பிரமித்துபோயிருந்தேன். தொடர்ந்து படித்த, சேகரித்த தவல்களால் ஆர்வம் அதிகரித்து ஏரோநாட்டிகல் என்ஞ்னியராகி எதிர்காலத்தில் நாசாவில் வேலைக்கு சேர்ந்து செவ்வாய்க்கு போக ஒரு விண்வெளிகலம் டிஸைன் செய்ய வேண்டும் என கனவு காண ஆரம்பித்துவிட்டேன். விரும்பியபடி  சண்டிகர் என்ஞ்னியரிங்கல்லூர்யில் ஏரோநாட்டிக்கில் சீட் கிடைத்தது என் அதிர்ஷ்டம். தொடர்ந்து அமெரிக்காவில் மிக்சிகன் பல்கலைகழகத்தில் 1984லில் எம்.எஸும், 1988ல் பிஹெச்டியும் முடித்தேன். என் வாழ்க்கைகனவான நாசாவில் 1989ல் பணிசெய்யும் வாய்ப்பும் கிடைத்தது. கடந்த 23 ஆண்டுகளாக தொடர்ந்து அங்கே பணியிலிருக்கிறேன்.
எந்த மாதிரியானது உங்கள் பணி.?
கலிபோர்னிய மாநிலத்தில் பஸாடினா எனற இடத்தில் செவ்வாய் கிரக் ஆராய்ச்சிகளுக்கென்றே  நாசாவால் துவக்கபட்டது மார்ஸ் சைன்ஸ் லேபரட்டரி (NASA’s Mars Science Laboratory MSL)  அதன் ஒரு அங்கம் நான் பணி செய்யும் ஜெட் ப்ரொப்புல்ஷன் லேபரட்டரி   (Jet Propulsion Laboratory ) ஒரு விண்கலத்தை செலுத்தி அதை அதன் பாதையில் போக செய்ய  கம்ப்யூட்டர்களுகு கட்டளைகளைத் தயாரித்து டிசைன் செய்வது தான் எங்கள் அணியின்முக்கியபணிகலீலியோ,மார்ஸ் பாத்பைண்டர்  காஸினி போன்ற பல பிராஜகெட்களில்  தொடர்ந்து பணியாற்றி இப்போது நாசா நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானிகளில் ஒருவராக இருக்கிறேன். என் மாணவ பருவ கனவை நனவாக்கும் வாய்ப்பு  இந்த கியூரிஸிட்டி பிராஜக்கெட்டில்  கிடைத்திருப்பதால்  இதில் பணியாற்றிகொண்டிருப்பதை எனக்கு கிடைத்தை மிகப்பெரிய  அதிர்ஷ்ட்மாகவே கருதுகிறேன்.
கியூரிஸிட்டி பிராஜக்கெட்டில்   உங்கள் பஙக்ளிப்பு என்ன எனபதை சுருக்கமாக சொல்ல முடியமா?
ஆகஸ்ட் 5 அது செவாய்யில் தரையிறங்கியதை உலகமே பார்த்தது. மிக சவாலான அந்த விஷ்யத்தை மட்டும்  6 ஆண்டு உழைப்பில் டிசைன் செய்தோம்.  E D L (ENTRY – DESENT- LANDING )  என்று அழைக்கபட்ட இந்த முறையில் தான் கலம் செவ்வாயில் இறங்கியது. இதுவரை முயற்சிக்காத புதிய முறையில் ஒரு பாராசூட்டை பயன்படுத்தி  மிக வேகமாக இறங்கும் கியூரியாஸிட்டி கலத்தின் வேகத்தை கட்டுபடுத்தி அதன் கடைசிகட்டதில் பாராசூட்டிலிருக்கும் ஒரு கிரேன் மூலம்  கலத்தை இறக்கும் முயற்சி அது. இதில் முக முக்கிய சவால்  செவ்வாய் கிரகத்தின் மேல்  ஒரு மைல் உயரத்தில் மணிக்கு 180 மையில் வேகத்தில் இறங்கிகொண்டிருக்கும் விண்கலத்தின் வேகத்தை மணிக்கு 1.7 கீமி வேகத்திற்கு குறைக்க வேண்டும். அதற்கு பாரசூட்டிலிருக்கும் ஒரு குட்டி ராக்கெட்டின் வேகத்தை எதிர்ப்பு விசையில் கட்டுபடுத்தபட வேண்டும். இவை அனைத்தும்  7 நிமிடங்களுக்குள் நடைபெறவேண்டும்.(இதுதான் அந்த 7 நிமிடம்)   எங்களது ஜெ‌பி‌எல் லேப்  தயாரித்து  பல முறை பரிசோதித்துபார்த்த  டிசைனைதான் நாசாவின் மார்ஸ் ஸைன்ஸ் லேபரட்டரி பயன்  இறுதிகட்டத்தில் பயன் படுத்தியிருக்கிறது.
இந்திய விண்வெளிபயண திட்டங்களில் செவாய்க்கு கலம் அனுப்பும் திட்டம் பற்றி அறிந்திருப்பீர்கள்.  அதில் நீங்கள்  பணியாற்றும் வாய்ப்பு உண்டா?
இத்தனை ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்தாலும் வேர்கள் இந்தியாவிலிருப்பதை மறக்க முடியாது. என் நெருங்கிய சொந்த்தங்கள் டெல்லியிலும் சண்டிகரிலும் வாழ்கிறார்கள். வாய்ப்புகிடைக்கும் போதெல்லாம் இந்தியா வருகிறேன். இந்திய விண்வெளி திட்டம் நாசாவுடன் இணைந்த திட்டமாகயிருந்தால் ஒரு வாய்ப்பு கிட்டலாம். கிடைத்தால் மிகுந்த மகிழச்சியுடன் செய்வேன்.
ரமணன்